செவ்வாய், 20 மே, 2025

வரலாற்று சிறப்பு மிக்க அயுத்தயா (Ayutthaya) நகரம்




வரலாற்று சிறப்பு மிக்க அயுத்தயா நகரம் .

அயுதயா" (Ayutthaya) என்று அழைக்கப்படும் 


யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது .



​​இந்த நகரம்  Phra Nakhon Si Ayutthaya மாகாணத்தின் Phra Nakhon Si Ayutthaya மாவட்டத்தில் அமைந்துள்ளது. உலக பாரம்பரிய சொத்தின் மொத்த பரப்பளவு 289 ஹெக்டேர் ஆகும்.

சுமார் 1350 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அயுத்தாயா. சுகோதாய்க்குப்பிறகு இரண்டாவது சியாமி தலைநகராக  மாறியது. இந்த நகரம் 18 ம் நூற்றாண்டில் பர்மியர்களால் அழிக்கப்ப்பட்டது.

"பிராங் "எனும் புதைகுழி கோபுரங்கள் மற்றும் பிராம்மாண்டமான மடாலயங்களால்  நிறைந்த ஊர்  இடிபாடுகளை அப்படியே வைத்து இருக்கிறார்கள் . கடந்த  காலத்தின்   பெருமையை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது.  நமக்கு இடிபாடுகள் இல்லாமல் முன்பு போல் இருந்தால் பார்க்க எப்படி இருக்கும் என்ற எண்ணம் எழுகிறது.

இந்த நகரம் முழுவதும் இந்த மாதிரி இடிபாடுகளுடன் உள்ள புத்த மடாலயங்கள் தான்.

நாங்கள் பார்த்தவற்றின் படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.


பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் வந்தார்கள்.

எல்லோரும் வரிசையாக நின்று படம் எடுத்து கொண்டு இருந்தார்கள்.

தன்னை தானே எடுத்துக் கொள்ளும் அழகு தேவதை

ஆண்மகன்களும் அழகாய் உடை அணிந்து வந்தார்கள்.


படம் எடுத்து தருபவர்களும் இருந்தார்கள்

வயதானவர்களும் பாரம்பரிய   உடையில்

  


வரலாற்று புகழ் பெற்ற கட்டிடம் ஒருப்பக்கம், இப்படி உடை அணிந்து வந்தவர்கள் ஒரு பக்கம்  என்று    நம்மை கவர்ந்தார்கள்


ட்ரோன் காமிரா பயன்படுத்தக் கூடாது



மாலை சூரியனை கரு மேகங்கள் மறைத்து விளையாடிக் கொண்டு இருந்தது.


நடைபாதை நன்றாக இருந்தது நடக்க மழை சிறு தூறல் போட்டுக் கொண்டு இருந்தது


குடை வைத்து இருந்தார்கள் சுற்றிப்பார்க்க போகும் போது மழை பெய்தால் எடுத்து செல்லாம்.




இரவு பார்க்க போக்கஸ் விளக்குகள் இருக்கிறது




1767 ஆம் ஆண்டு பர்மிய இராணுவத்தால் இந்த நகரம் தாக்கப்பட்டு இடிக்கப்பட்டது. நகரத்தை எரித்து இடித்து தரைமட்டம் ஆக்கினர்.  நகரத்தில் இருந்த மக்களை வெளியேற்றினர் . மீண்டும் இந்த நகரம் கட்டப்படவில்லை. இப்போது தொல்பொருள் தளமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.



மழை நீர் பூமிக்கு போக  வசதி செய்து இருக்கிறார்கள்


உள் வாசல் அடைக்கப்பட்டு இருக்கிறது உள்ளே புத்தர் சிலை இருக்கும் என நினைக்கிறேன்


படி பக்கத்தில் போகக் கூடாது, படிகளில் அமர கூடாது


உலக பாரம்பரிய இந்த  சொத்தின் மொத்த பரப்பளவு 289 ஹெக்டேர் ஆகும்.





மேலே இருக்கும் ஸ்தூபி போன்று வரிசையாக இருந்து இருக்கிறது, இப்போது அடிபாகம் மட்டும் இருக்கிறது

புத்தர் கை ஒடிந்து இருக்கிறது, புத்தர் தலையில் அமர்ந்து  வந்த மக்களை வேடிக்கைப்பார்த்த புறா


இன்னும் அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
நிறைய இருக்கிறது.

தொடர்ந்து வாருங்கள். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

36 கருத்துகள்:

  1. அழகான படங்கள்.  பார்க்கப் பார்க்க கண்களின் தாகம் தீராமல் நிறைய  எடுத்திருக்கிறீர்கள்.  இது மாதிரி வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பது பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அழகான படங்கள். பார்க்கப் பார்க்க கண்களின் தாகம் தீராமல் நிறைய எடுத்திருக்கிறீர்கள். இது மாதிரி வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பது பாராட்டத்தக்கது.//

      அழகான இடம், நீங்கள் சொன்னது போல நம் கண்களின் தாகம் தீரவில்லை தான். ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு அழகு அந்த இடம். காமிராவில் எடுத்தால் அதன் வண்ணம் அவ்வளவு சரியாக வரவில்லை, அதனால் அலைபேசியில்தான் பெரும்பாலும் எடுத்தேன்.

      வரலாற்று சின்னங்களை பாதுகாப்பது பாரட்ட தக்கதுதான்.
      இன்று "தீவிரவாத எதிர்ப்பு தினம் "

      போரில் எத்தனை உயிர்கள் எத்தனை இடங்கள் அழிக்கப்படுகிறது என்ற கவலையும் வருகிறது. அமைதியான சூழ்நிலை எங்கும் வேண்டும். என்று பிரார்த்தனையும் மனதில் எழுகிறது.

      நீக்கு
  2. வெளிச்சுற்றுத்தானா?   உள்ளே போகமுடியாதா?  ஏமாற்றமாக இருக்கிறதே...  படிகளில்  அமரக்கூட கூடாதா?  அகழி மாதிரி இருக்கும் இடத்தில் கூட இறங்கி நடக்க அனுமதி இருக்காது போலிருக்கிறதே... 

    ஒருவேளை அடுத்த பதிவில் உள்படங்கள் வருமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வெளிச்சுற்றுத்தானா? உள்ளே போகமுடியாதா? ஏமாற்றமாக இருக்கிறதே... படிகளில் அமரக்கூட கூடாதா? அகழி மாதிரி இருக்கும் இடத்தில் கூட இறங்கி நடக்க அனுமதி இருக்காது போலிருக்கிறதே...

      ஒருவேளை அடுத்த பதிவில் உள்படங்கள் வருமோ!//

      உயரமான ஸ்தூபிகளில் ஏறிபார்க்க முடியாது, வேறு இடங்களுக்கு போகலாம். உள்சுற்று இனி வரும் பதிவில் பார்க்கலாம்.
      அங்கும் முழுமையான உருவங்கள் இல்லை, எல்லாம் உடைத்து வைத்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  3. தேவலோகத்திலிருந்து இறங்கி வந்த ரம்பா ஊர்வசி போலவும் கின்னர கிம்புருடர்கள் போலவும் உடை அணிந்திருக்கிறார்கள். இப்படி அணிந்து பொது வெளியில் நடமாட நமக்கு ஒரு மாதிரி இருக்கும். அவர்களுக்கு பாரம்பரிய உடை போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய உடை சட் தாய் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதிரி பாரம்பரிய இடத்தை சுற்றி பார்க்கும் இடத்தில் எல்லாம் இது போன்று உடை அணிந்தவர்களை பார்க்க முடிந்தது. அவர்களுடன் படம் எடுத்து கொண்டேன்.
      அவர்களும் என்னுடன் எடுத்து கொண்டார்கள் புடவை நன்றாக இருப்பதாக சொன்னார்கள்.

      உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்" பச்சைக்கிளி முத்துசரம்" படத்தில் பார்த்து இருக்கிறேன்

      நீக்கு
  4. குடைகளை இப்படி பொதுவில் நம்மூரில் வைத்தால் கொஞ்ச நேரத்தில் அங்கு வெறும் கூடைதான் இருக்கும்!!  ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டு ஜூட் விட்டிருப்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குடைகளை இப்படி பொதுவில் நம்மூரில் வைத்தால் கொஞ்ச நேரத்தில் அங்கு வெறும் கூடைதான் இருக்கும்!! ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டு ஜூட் விட்டிருப்பார்கள்!//

      நம் ஊர் கூட்டத்திற்கு குடை கொடுக்கவும் முடியாது ஸ்ரீராம்.
      வாசலில் கொடுத்து பொறுப்பாய் வாங்கி வைக்க ஆள் போட வேண்டும், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் நிறைய இருக்கிறது இப்படி.

      நீக்கு
  5. கொஞ்சம் கொஞ்சம் கோனாரக் கட்டிடக்கலை போலிருக்கிறதோ....

    பதிலளிநீக்கு
  6. //கொஞ்சம் கொஞ்சம் கோனாரக் கட்டிடக்கலை போலிருக்கிறதோ//

    ஆமாம், சிவப்பு கற்களால் ஆனது இரண்டும் அதனால் உங்களுக்கு தெரிகிறது என்று நினைக்கிறேன்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. அக்கா பார்த்தவுடன் கோனார்க் போன்று தோன்றியது.

    பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் அங்கு சுற்றுலா வழிகாட்டிகளா? அக்கா? சுற்றிக் காட்டி விளக்கம் சொல்ல? அல்லது வந்திருந்தவர்களா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //அக்கா பார்த்தவுடன் கோனார்க் போன்று தோன்றியது.//

      ஓ! உங்களுக்கும் தோன்றியதா?


      //பாரம்பரிய உடை அணிந்த பெண்கள் அங்கு சுற்றுலா வழிகாட்டிகளா? அக்கா? சுற்றிக் காட்டி விளக்கம் சொல்ல? அல்லது வந்திருந்தவர்களா?//

      இல்லை இந்த மாதிரி இடங்களுக்கு அவர்கள் இப்படி போவார்கள் போல கீதா. நாங்கள் சுற்றிப்பார்க்க போன இடங்களில் எல்லாம் சிலர் இப்படி வந்து இருந்தார்கள்.
      அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து போட்டோ எடுத்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்கள். குழந்தைகளும் சில இடங்களில் இப்படி வந்து இருந்தார்கள்.

      நீக்கு
  8. ஓ வந்திருந்த பெண்களா? நாம் படம் எடுக்க அனுமதித்தாங்களஆ?

    பாரம்பரிய உடைகள் அழகா இருக்கு

    ஒரு வயதான பெண்மணியின் உடை, கிட்டத்தட்ட நம் ஊரில் ஆச்சிகள் இப்படி ரவிக்கை இல்லாமல் அணிவது போன்றுதான் அங்கும் இல்லையா? ஆமா ஒரு காலத்தில் நாகரீகம் வளரும் முன் இப்படித்தானே எல்லோருமே உடை அணிந்தாங்க இல்லையா?

    புத்த ஆலயங்கள் ரொம்பவே இடிபாடுகளாகி இருக்கின்றன. நாம நம்ம ஊரில் சொல்கிறோமே பாரம்பரிய இடங்களை சீரமைத்துப் பராமரிப்பதில்லைனு அங்கும் அப்படித்தான் போலும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓ வந்திருந்த பெண்களா? நாம் படம் எடுக்க அனுமதித்தாங்களஆ?

      பாரம்பரிய உடைகள் அழகா இருக்கு//

      ஆமாம், அவர்கள் சுற்றிப்பார்க்க வந்தவர்கள், நான் அவர்களிடம் அனுமதி பெறவில்லை தூரத்தில்லிருந்து எடுத்தேன்.

      பாரம்பரிய உடை பட்டு துணி அவர்கள் ஊரில் மிகவும் அழகாய் நெய்யபடுமாம்.

      //ஒரு வயதான பெண்மணியின் உடை, கிட்டத்தட்ட நம் ஊரில் ஆச்சிகள் இப்படி ரவிக்கை இல்லாமல் அணிவது போன்றுதான் அங்கும் இல்லையா? ஆமா ஒரு காலத்தில் நாகரீகம் வளரும் முன் இப்படித்தானே எல்லோருமே உடை அணிந்தாங்க இல்லையா?//

      வயதானவர்கள் என்று இல்லை எல்லோருமே கையில்லா ரவிக்கை தான் அணிந்து இருக்கிறார்கள் பாருங்கள் நீண்ட முந்தி மாதிரி தனியாக சுற்றிப்போட்டு கொள்கிறார்கள். கீழே நீண்ட குட்டை பாவாடைகள் ஒவ்வொருவரும் வேறு வேறு மாதிரி அணிந்து இருந்தார்கள்.

      //புத்த ஆலயங்கள் ரொம்பவே இடிபாடுகளாகி இருக்கின்றன. நாம நம்ம ஊரில் சொல்கிறோமே பாரம்பரிய இடங்களை சீரமைத்துப் பராமரிப்பதில்லைனு அங்கும் அப்படித்தான் போலும்//

      நினைவு சின்னமாக யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது . அப்படி இருக்கும் போது ஒன்றும் மாற்றம் செய்யக்கூடாது இல்லையா?

      நம் நாட்டிலும் தொல்பொருள்துறையிடம் போய் விட்டால் எந்த மாற்றமும் செய்ய மாட்டார்களே கீதா.
      போரில் ஏற்பட்ட அழிவு அதை அப்படியே நினைவாய் வைத்து பாதுக்காக்கிறார்கள். மீண்டும் பழைய மாதிரி கொண்டு வருவது முடியாத காரியம்.
      சுத்தமாக பாராமரிப்பு மட்டும் தான் இருக்கும்.

      நீக்கு
  9. இப்படி உடை அணிந்து வருவது அவர்களுக்குப் பணியோ? சுற்றுலா இடங்களில் இப்படி அவர்கள் ஊர் பாரம்பரிய உடையில் வந்தால் பயணிகளைக் கவரலாம் என்ற அரசின் ஏற்பாடாக இருக்குமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படி உடை அணிந்து வருவது அவர்களுக்குப் பணியோ? சுற்றுலா இடங்களில் இப்படி அவர்கள் ஊர் பாரம்பரிய உடையில் வந்தால் பயணிகளைக் கவரலாம் என்ற அரசின் ஏற்பாடாக இருக்குமோ?//

      தனி பட்டவர்கள் விருப்பம் போல தான் இருக்கிறது, அரசு ஏற்பாடு போல தெரியவில்லை. தனி தனியாக வந்தார்கள் போட்டோ எடுத்து கொண்டார்கள் போகிறார்கள்.
      அமெரிக்காவில் டிஸ்னிலேண்ட் போன போது இப்படி பழைய கால உடை அணிந்தவர்களை பார்த்தேன். அவர் அவர் சொந்த விருப்பம் போல தெரிகிறது.

      நீக்கு
  10. தூறல் போடும் அந்தப் புகைப்படம் நடை பாதை ரொம்ப அழகா இருக்கு. சுத்தமாக இருக்கிறது எல்லா இடமும்.

    பொதுவாகவே வெளி நாடுகளில் மக்கள் நாணயமாக, தேசத்தின் மீது அன்பும் கொண்டிருக்காங்க. அதனால இப்படிக் குடை வைத்தாலும் யாரும் லவட்ட மாட்டாங்க. அழகா கொண்டு போய்ட்டு ஒப்படைக்க வேண்டிய இடத்தில் ஒப்படைச்சிடுவாங்க. நம்ம ஊரை நினைத்துப் பார்க்கிறேன்.

    இரட்டைக் கோபுரம் போன்று வடிவங்கள் அழகா இருக்கு

    ஓ இந்த இடம் நகரமாக இருந்ததா?

    மழைனீர் வடிய வைத்திருப்பது நல்ல சிந்தனை. அந்தப் படத்தில் தூரத்தில் இடிந்து விழுந்த கட்டிடம் முழுவதும் கீழே விழாமல் சாய்ந்து கிடக்கிறதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தூறல் போடும் அந்தப் புகைப்படம் நடை பாதை ரொம்ப அழகா இருக்கு. சுத்தமாக இருக்கிறது எல்லா இடமும்.//

      ஆமாம், சுத்தமாக அழகாய் இருக்கிறது நடைபாதை.

      //பொதுவாகவே வெளி நாடுகளில் மக்கள் நாணயமாக, தேசத்தின் மீது அன்பும் கொண்டிருக்காங்க. அதனால இப்படிக் குடை வைத்தாலும் யாரும் லவட்ட மாட்டாங்க. அழகா கொண்டு போய்ட்டு ஒப்படைக்க வேண்டிய இடத்தில் ஒப்படைச்சிடுவாங்க. நம்ம ஊரை நினைத்துப் பார்க்கிறேன்.//

      கீதா, நம் ஊர் மக்கள் தொகைக்கு வரும் கூட்டத்திற்கு இப்படி எல்லாம் செய்ய முடியாது.

      ஸ்ரீராம்க்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்.

      //இரட்டைக் கோபுரம் போன்று வடிவங்கள் அழகா இருக்கு

      ஓ இந்த இடம் நகரமாக இருந்ததா?//

      ஆமாம், இரட்டை கோபுரம் அழகுதான், அப்போதும், இப்போதும் நகரம் தான். இந்த ஊர் முழுவதும் இந்த மாதிரி அழகான பழைய கட்டிடங்கள், அரண்மனைகள் இருக்கிறது.
      அடுத்து அடுத்து பதிவு போடுகிறேன்.
      இப்போது நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அழிவு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.

      //மழைனீர் வடிய வைத்திருப்பது நல்ல சிந்தனை. அந்தப் படத்தில் தூரத்தில் இடிந்து விழுந்த கட்டிடம் முழுவதும் கீழே விழாமல் சாய்ந்து கிடக்கிறதோ?//

      ஆமாம், தண்ணீர் தேங்காமல் வடிந்துவிட நல்ல ஏற்பாடு.
      இடிந்து விழுந்து கட்டிடம் சாய்ந்து ஒன்றுக்கு ஒன்று முட்டு கொடுத்தது போல நிற்கிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.



      நீக்கு
  11. மிக அருமையான படங்கள்.

    சிதைந்த கோயில், நகரம் நன்கு தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //மிக அருமையான படங்கள்.//

      நன்றி.

      //சிதைந்த கோயில், நகரம் நன்கு தெரிகிறது//

      ஆமாம். நகரம் தான். "நாகரேசு காஞ்சி" என்று சொல்வது போல இந்த நகரம் முழுவதும் புத்தர் மடாலயங்கள் தான். பழமையான இடிபாடுகளுடன் உள்ள ஆலயங்கள் தான். தங்க புதர்களும் எங்கும் இருக்கிறார்கள். நகரம் முழுவதும் புத்தர்தான்.

      நீக்கு
  12. இந்த மாதிரி பாரம்பர்யமான உடையில் இருந்த பெண்களை தாய்லாந்தில் பார்த்திருக்கிறேன். (இந்தோநேஷியாவிலும்). அங்கு அவர்கள் எங்களுக்காக ஆடினார்கள். அவர்களுடன் நான் படம் எடுத்துக்கொண்டேன். ஒரு நாள் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த மாதிரி பாரம்பர்யமான உடையில் இருந்த பெண்களை தாய்லாந்தில் பார்த்திருக்கிறேன். (இந்தோநேஷியாவிலும்). அங்கு அவர்கள் எங்களுக்காக ஆடினார்கள். அவர்களுடன் நான் படம் எடுத்துக்கொண்டேன். ஒரு நாள் பகிர்கிறேன்.//

      ஆமாம், தாய்லாந்தில் , பாங்க்காங்கில் எல்லாம் போகும் இடம் எல்லாம் இது போன்ற பாரம்பர்ய உடை அணிந்தவர்களை பார்க்க முடிந்தது. ஒருவரை எடுக்க விரும்பி கேட்டேன், அவர்களை எடுத்தேன், அவர்கள் என்னுடன் அவர்கள் போனில் எடுத்து கொண்டார்கள்.

      நீங்கள் எடுத்து கொண்ட படங்களை பகிருங்கள்.

      நீக்கு
  13. இவர்களிடம் இராமாயணக் கதையின் தாக்கம் இருக்கும்.

    இந்த இடத்தின் சிதைந்த கோயில்போலவே நான் சாரநாத்தில் பார்த்திருக்கிறேன். என்ன என்ன கட்டிடங்கள் அங்கு இருந்திருக்கும் என்பதுவே நமக்குத் தெரியாது.

    இவை கட்டி முடிக்கப்பட்டபோது எவ்வளவு அழகாக இருந்திருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவர்களிடம் இராமாயணக் கதையின் தாக்கம் இருக்கும்.//

      ஆமாம், ராமர் , சீதை என்று பெயர்களை கட்டிடங்களுக்கு வைத்து இருந்தார்கள்.

      //இந்த இடத்தின் சிதைந்த கோயில்போலவே நான் சாரநாத்தில் பார்த்திருக்கிறேன். என்ன என்ன கட்டிடங்கள் அங்கு இருந்திருக்கும் என்பதுவே நமக்குத் தெரியாது.//

      ஆமாம், சாரநாத்தில் உள்ளது இது போன்ற கோயில். நானும் படம் எடுத்து இருக்கிறேன்.

      //இவை கட்டி முடிக்கப்பட்டபோது எவ்வளவு அழகாக இருந்திருக்கும்?//
      கட்டி முடிக்கப்பட்ட போது மிக அழகாய் இருந்து இருக்கும். பல வித விழாக்கள் நடந்து இருக்கும்.

      நீக்கு
  14. வெளிநாடுகளிலும் இந்த மாதிரி குடைகள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

    மக்கள் பொறுப்புடையவர்களாக இருந்தால்தான் இந்த மாதிரி உதவிகள் செய்ய முடியும். நம்ம மக்களோ, அரசியல் கூட்டத்திற்கு வந்தால் தண்ணீர் பாட்டில், சேர் போன்றவற்றையே தூக்கிச் செல்கிறார்கள். அப்புறம் இந்தியாவில் இந்த மாதிரி எப்படி வர இயலும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வெளிநாடுகளிலும் இந்த மாதிரி குடைகள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.//
      நானும் பார்த்து இருக்கிறேன் முன்பு போட்ட எரிமலை பதிவில் அங்கு அலுவல்க வாசலில் இருந்த குடைகளை பற்றி பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்.

      //மக்கள் பொறுப்புடையவர்களாக இருந்தால்தான் இந்த மாதிரி உதவிகள் செய்ய முடியும்.//

      ஆமாம்.

      //நம்ம மக்களோ, அரசியல் கூட்டத்திற்கு வந்தால் தண்ணீர் பாட்டில், சேர் போன்றவற்றையே தூக்கிச் செல்கிறார்கள். அப்புறம் இந்தியாவில் இந்த மாதிரி எப்படி வர இயலும்?//

      ஆமாம் செய்ய இயலாது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
  15. ஸ்தூபிகள் போன்றிருந்தவை எல்லாம் அழிக்கப்பட்டு இருக்கு பார்க்கும் போது ஏன் இப்படி மனுஷங்கன்னு தோன்றுகிறது. இத்தனைக்கும் பர்மாவிலும் பௌத்தம்தான். அப்படி இருந்தும் ஏன் இப்படி இதை அழிச்சாங்களோ?

    புத்தரின் கை இல்லை...தலியில் புறா தெரிதிறது படத்தில்

    இப்பவே கவின் அப்பா உயரம் வந்துவிட்டாரே!!

    நிறைய வளைச்சு வளைச்சு எடுத்திருக்கீங்க. அழகா இருக்கு எல்லாமும். எவ்வளவு படங்கள் எடுத்தாலும் நமக்குத் தீராது இன்னும் எடுக்கலாம் என்றே தோன்றும்

    எல்லாமே ரசித்துப் பார்த்தேன் அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  16. //ஸ்தூபிகள் போன்றிருந்தவை எல்லாம் அழிக்கப்பட்டு இருக்கு பார்க்கும் போது ஏன் இப்படி மனுஷங்கன்னு தோன்றுகிறது. இத்தனைக்கும் பர்மாவிலும் பௌத்தம்தான். அப்படி இருந்தும் ஏன் இப்படி இதை அழிச்சாங்களோ?//

    உங்கள் கேள்வி ஒரு பாடலை எனக்கு நினைவு படுத்துகிறது
    ''புத்தர் வந்த திசையிலே போர் புனித காந்தி வந்த மண்ணிலே போர்''
    என்ற இரத்த திலக பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

    போர் சமயம் பொருளாதார இழப்புசெய்வது பொக்கிஷங்களை கொள்ளையடிப்பதுதானே வழக்கம். அன்பு , அகிஷ்மை என்று நினைக்க மாட்டார்கள் கீதா.


    //புத்தரின் கை இல்லை...தலியில் புறா தெரிதிறது படத்தில்//

    ஆமாம், தூரத்திலிருந்து செல்லில் எடுத்தேன்.

    //இப்பவே கவின் அப்பா உயரம் வந்துவிட்டாரே!!//

    ஆமாம், வளர்ந்து விட்டான்.

    //நிறைய வளைச்சு வளைச்சு எடுத்திருக்கீங்க. அழகா இருக்கு எல்லாமும். எவ்வளவு படங்கள் எடுத்தாலும் நமக்குத் தீராது இன்னும் எடுக்கலாம் என்றே தோன்றும்//

    ஆமாம், நிறைய இருந்தது எடுக்க.

    //எல்லாமே ரசித்துப் பார்த்தேன் அக்கா//
    அனைத்தையும் ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. வரலாற்று சிறப்பு மிக்க அயுத்தயா நகரத்தைப் பற்றிய வரலாறு அறிந்து கொண்டேன்.

    தாங்கள் எடுத்துப் பகிர்ந்த படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. தாய்லாந்து பெண்கள் அவர்களின் பாரம்பரிய உடைகளுடன் அழகாக உள்ளனர். ஆண்களும் அவர்களின் அழகான, புதுமையான உடையுடன் அவர்களுடன் வலம் வருவது சிறப்பு.

    தாய்லாந்து பெண்களை இப்படி புகைப்படங்கள் எடுக்க அவர்கள் மனப்பூர்வமாக சம்மதித்திருப்பது மகிழ்ச்சி. சிலர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.நமக்கும் அப்போது ஒரு தயக்கமாக இருக்கும்.

    புத்த கோவில் அழகாக இருக்கிறது. கூர்மையான கூம்பு போல அமைந்திருக்கும் பல கோவில்களை கண்டேன். அவைகளில் சில சிதைந்த வடிவில் இருப்பதை காணும் போதும், உடைந்த புத்தர் சிலைகளை பார்க்க மனது கஸ்டமாக உள்ளது. அவர் தலை மேல் அமர்ந்து கொண்டு வரும் மக்களை வரவேற்கும் புறா படம் அருமை. நீங்கள் ஒவ்வொரு படங்களுக்கும் தந்திருக்கும் விளக்கமான வரிகளையும் படித்து ரசித்தேன்.

    அங்கு எடுத்த தங்களின் குடும்ப போட்டோவும் அழகாக வந்துள்ளது. நீலநிற வானத்துடன் இணைந்து எடுக்கப்பட்ட புத்த கோவில்கள் புகைப்படங்களும் நன்றாக உள்ளது. பொது வெளியில் வைக்கப்பட்டிருக்கும் குடைகளின் பயன்பாடுகள் விஷயம் ஆச்சரியமளிக்கிறது. இங்கு சமயங்களில் பொதுவெளியில் கழற்றி வைக்கும் நம்முடைய செருப்புக்களே காணாமல் போகிறது. அங்குள்ளவர்கள் நல்ல மக்கள். என பாராட்டத் தோன்றுகிறது. பதிவு டன் தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. வரலாற்று சிறப்பு மிக்க அயுத்தயா நகரத்தைப் பற்றிய வரலாறு அறிந்து கொண்டேன்.//

      நன்றி.

      //தாங்கள் எடுத்துப் பகிர்ந்த படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது.//

      நன்றி.

      //தாய்லாந்து பெண்கள் அவர்களின் பாரம்பரிய உடைகளுடன் அழகாக உள்ளனர். ஆண்களும் அவர்களின் அழகான, புதுமையான உடையுடன் அவர்களுடன் வலம் வருவது சிறப்பு.//

      ஆமாம் .

      //தாய்லாந்து பெண்களை இப்படி புகைப்படங்கள் எடுக்க அவர்கள் மனப்பூர்வமாக சம்மதித்திருப்பது மகிழ்ச்சி. சிலர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.நமக்கும் அப்போது ஒரு தயக்கமாக இருக்கும்.//

      இந்த பதிவில் எடுத்த பெண்கள் படம் அவர்களை கேட்காமல் எடுத்த படம். இன்னொரு புத்தர் கோயிலில் அனுமதி பெற்று எடுத்தேன்.அது இனிமேல்தான் வரும்.

      //புத்த கோவில் அழகாக இருக்கிறது. கூர்மையான கூம்பு போல அமைந்திருக்கும் பல கோவில்களை கண்டேன். அவைகளில் சில சிதைந்த வடிவில் இருப்பதை காணும் போதும், உடைந்த புத்தர் சிலைகளை பார்க்க மனது கஸ்டமாக உள்ளது. அவர் தலை மேல் அமர்ந்து கொண்டு வரும் மக்களை வரவேற்கும் புறா படம் அருமை. நீங்கள் ஒவ்வொரு படங்களுக்கும் தந்திருக்கும் விளக்கமான வரிகளையும் படித்து ரசித்தேன்.//

      ஒவ்வொன்றையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //அங்கு எடுத்த தங்களின் குடும்ப போட்டோவும் அழகாக வந்துள்ளது. நீலநிற வானத்துடன் இணைந்து எடுக்கப்பட்ட புத்த கோவில்கள் புகைப்படங்களும் நன்றாக உள்ளது. //

      நன்றி.

      //பொது வெளியில் வைக்கப்பட்டிருக்கும் குடைகளின் பயன்பாடுகள் விஷயம் ஆச்சரியமளிக்கிறது. இங்கு சமயங்களில் பொதுவெளியில் கழற்றி வைக்கும் நம்முடைய செருப்புக்களே காணாமல் போகிறது. அங்குள்ளவர்கள் நல்ல மக்கள். என பாராட்டத் தோன்றுகிறது.//

      ஒரு ஒழுங்கை கடைபிடிப்பவர்களை பாராட்ட வேண்டும் தான்.

      //பதிவு டன் தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      உங்கள் கருத்துக்கும் தொடர்ந்து வருவதாக சொன்னதற்கும் நன்றி.




      நீக்கு

  18. ​விவரங்களும் படங்களும் அழகாக உள்ளன. கிரீடம் வைத்து இருப்பவர்கள் ஏதோ விளம்பரத்திற்காக வந்தவர்கள் போல் தோன்றுகிறது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //விவரங்களும் படங்களும் அழகாக உள்ளன. கிரீடம் வைத்து இருப்பவர்கள் ஏதோ விளம்பரத்திற்காக வந்தவர்கள் போல் தோன்றுகிறது.//

      அவர்கள் அப்படி எதுவும் விளம்பரம் செய்வது போல படம் எடுக்கவில்லை. இந்த மாதிரி இடத்தில் ராணிகள் போல தோழிகளுடன் சிரித்து பேசி படம் எடுத்து கொண்டார்கள்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  19. தகவல்களுடன் படங்களும் பகிர்வும் மிக அருமை. பாரம்பரிய உடையில் வந்த மக்கள் கவனம் பெறுகிறார்கள். கீரீடம், அணிகலன்களோடு அன்றாட உடையாக இப்படி அணிகிறார்களா? ஆம், பாழடையாமல் இருப்பின் மிக அழகான இடமாக இருந்திருக்கும். உள்வாசல் அடைக்கப்பட்ட கோபுரத்தின் கட்டுமான அமைப்பு சிறப்பு. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //தகவல்களுடன் படங்களும் பகிர்வும் மிக அருமை. //

      நன்றி.

      //பாரம்பரிய உடையில் வந்த மக்கள் கவனம் பெறுகிறார்கள்.//

      ஆமாம் எல்லோர் கவனத்தையும் கவர்ந்தார்கள்.

      //கீரீடம், அணிகலன்களோடு அன்றாட உடையாக இப்படி அணிகிறார்களா?//

      அன்றாட உடையாக இதை அணிவது போல தெரியவில்லை, ஒரு வாரம் அங்கு இருந்தோம் அப்படி பார்க்கவில்லை, சுற்றுலா வந்த இடங்களில் மட்டும் அணிந்து வந்தார்கள்.

      //ஆம், பாழடையாமல் இருப்பின் மிக அழகான இடமாக இருந்திருக்கும். உள்வாசல் அடைக்கப்பட்ட கோபுரத்தின் கட்டுமான அமைப்பு சிறப்பு. //

      ஆமாம், பாழடையாமல் இருப்பின் மிக அழகான இடமாக இருந்திருக்கும் என்பது உண்மை.

      கலைநயத்தோடு செய்து இருக்கிறார்கள். புத்தர் தலை இல்லாமல் இருந்தது. அதை எல்லாம் பார்த்து மனது கஷ்டமாக போய் விட்டது.


      //அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம். நன்றி.//

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி, அடுத்த பதிவு விரைவில் போட வேண்டும்.

      நீக்கு
  20. அயுதயா வரலாற்று முக்கியமான பெற்றுத்தந்தது.

    பாரம்பரிய இடங்களை பேணிப்பாதுகாத்து வருவது போற்றத்தக்கது.

    பாரம்பரிய உடையில் மக்கள் அழகு.

    உங்கள் குடும்பப்படம் நல்ல அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //பாரம்பரிய இடங்களை பேணிப்பாதுகாத்து வருவது போற்றத்தக்கது.//

      போற்றி பாதுகாத்து வைத்து இருப்பதால் இப்போதும் நமக்கு வரலாறு தெரிகிறது.

      //பாரம்பரிய உடையில் மக்கள் அழகு.//

      முக்கியமான இடங்களுக்கு இப்படி பாரம்பரிய உடையில் வந்து மற்றவர்களை கவர்கிறார்கள்.

      //உங்கள் குடும்பப்படம் நல்ல அழகாக இருக்கிறது.//

      நன்றி.

      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.


      நீக்கு