வெளிபக்கம் இருந்து எடுத்த படம்.
வரலாற்று சிறப்பு மிக்க அயுத்தயா நகரம் .முந்தின பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
கோட்டை மாதிரி வெளிபக்கம் மதில்கள் இருக்கிறது.
ஒரு காலத்தில் உலகளாவிய ராஜதந்திரம் மற்றும் வர்த்தகத்தின் முக்கிய மையமாக இருந்த Ayutthaya, இப்போது ஒரு தொல்பொருள் இடிபாடுகளாக உள்ளது, உயரமான பிராங் (புதைகுழி கோபுரங்கள்) மற்றும் நினைவுச்சின்ன விகிதாச்சாரத்தில் உள்ள புத்த மடாலயங்களின் எச்சங்களால் வகைப்படுத்தப்படுகிறது, இது நகரத்தின் கடந்த கால அளவு மற்றும் அதன் கட்டிடக்கலையின் சிறப்பைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறது.
வெளிபக்கம் அழகான பூங்கா
அகழிகள், அதன் பக்கத்தில் அழகான கட்டிடங்கள் இருந்தன
இந்த மாதிரி வீடு முன்பு எப்படி இருந்தது என்று மாடல் வைத்து இருந்தார்கள்.
படகு வீடுகள் இருந்தது அகழியை சுற்றி வரலாம் போல
சமகால ஆதாரங்கள் மற்றும் வரைபடங்களிலிருந்து நன்கு அறியப்பட்ட Ayutthaya, அனைத்து முக்கிய கட்டமைப்புகளையும் சுற்றியுள்ள சாலைகள், கால்வாய்கள் மற்றும் அகழிகளைக் கொண்ட ஒரு முறையான மற்றும் உறுதியான நகர திட்டமிடல் கட்டத்தின்படி அமைக்கப்பட்டது. மூன்று ஆறுகளுக்கு நடுவில் நகரத்தின் நிலையை இந்த திட்டம் அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொண்டது, மேலும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்டதாகவும் உலகிலேயே தனித்துவமானதாகவும் இருந்த நீர் மேலாண்மைக்கான ஒரு ஹைட்ராலிக் அமைப்பைக் கொண்டிருந்தது.
இணையத்தில் இந்த நகரத்தைபற்றிய செய்திகளை சேகரித்தேன்.- நன்றி கூகுள்.
மழை நீர் பூமிக்குள் போக எல்லா இடங்களிலும் வடிகால் வசதி செய்து இருக்கிறார்கள்.
சக்கர நாற்காலியில் சுற்றிப்பார்ப்பவர்களுக்கு வசதி.
புத்தர் சிலைகள் இப்படி பழுது பட்டு இருப்பதை பார்க்கும் போது மனம் கனமாகி விட்டது.
புத்த துறவிகள் மகிழ்ச்சிக்கும் மன அமைதிக்கும் பின்பற்றும் 7 பழக்க வழக்கங்களில் எனக்கு மிகவும் பிடித்தது படித்தது.
உங்களுக்கும் பிடிக்கும் என்பதால் இந்த பகிர்வு.
//6.இயற்கையுடன் இணைதல்:
இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது, நமது மனநிலையை மேம்படுத்த உதவும். அது மட்டுமன்றி, நம் மனதை மற்றும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும். பூங்காவில் உட்காருவது, மழையில் நனைவது, வெறும் காலில் புல் தரையில் நடப்பது, அருவியில் குளிப்பது போன்ற நடவடிக்கைகள் உங்களை ஹீல் செய்ய உதவும்.//
இன்னும் இருக்கிறது அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------
முதல் சில பாராக்களின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பார்த்து 'என்னடா.. அக்கா இப்படி கடாமுடா என்று எழுத மாட்டார்களே' என்று பார்த்தேன். இணையத்திலிருந்து என்று அறிந்ததும் தெளிந்தேன்!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//முதல் சில பாராக்களின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பார்த்து 'என்னடா.. அக்கா இப்படி கடாமுடா என்று எழுத மாட்டார்களே' என்று பார்த்தேன். இணையத்திலிருந்து என்று அறிந்ததும் தெளிந்தேன்!//
அக்காவின் எழுத்தை நங்கு தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்
நேற்று என் எழுத்து முறைக்கு மாற்றி எழுத சோம்பல். இரவு நேரம் ஆகி விட்டது, நிறைய நேரம் அமர்ந்து காலை தொங்க விட்டுக் கொண்டும் இப்போது முடிவது இல்லை. அதனால் தான் ஒவ்வொரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் நேரம் எடுத்து கொள்கிறேன்.
தொடர் பதிவை விரைவில் போடலாம் என்று பார்த்தேன்.
அதனால் அப்படியே கொடுத்தேன் சில வரிகளை மாற்றிதான் எழுதி இருக்கிறேன்.
வெளிப்பக்க படங்களும் மற்ற எல்லா படங்களும் கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளுகின்றன. நமது தாராசுரம், பழையாறை போன்ற கோவில்களும் நினைவுக்கு வருகின்றன.
பதிலளிநீக்கு//வெளிப்பக்க படங்களும் மற்ற எல்லா படங்களும் கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளுகின்றன. நமது தாராசுரம், பழையாறை போன்ற கோவில்களும் நினைவுக்கு வருகின்றன.//
நீக்குவெளிப்பக்கம் மதிலில் தான் அணில்களுக்கு இளநீர் வைத்தார்கள் , மரங்களில் இளநீரை மாட்டி வைத்தார்கள். உள்ளே பார்ப்பதை விட கூட்டம் அணில் இளநீர் குடிப்பதை வேடிக்கைப்பார்க்க அதிகம் இருந்தது.
மனம் இல்லாமல் நகர்ந்து உள்ளே பார்க்க போனோம்.
ஆனால் உள்ளே போனதும் நீங்கள் சொன்னது போல மனம் கவர்ந்தது.
இப்படிப்பட்ட சிதிலமான சிலைகளை நாம் கங்கை கொண்ட சோழபுரத்தில், மற்றும் தாராசுரத்திலும் கூட காணலாம். படை எடுத்து வரும் அந்நிய நாட்டவர் அவர்களது கலாச்சாரத்தை அழிப்பது எவ்வளவு கொடுமை..
பதிலளிநீக்கு//இப்படிப்பட்ட சிதிலமான சிலைகளை நாம் கங்கை கொண்ட சோழபுரத்தில், மற்றும் தாராசுரத்திலும் கூட காணலாம். படை எடுத்து வரும் அந்நிய நாட்டவர் அவர்களது கலாச்சாரத்தை அழிப்பது எவ்வளவு கொடுமை..//
நீக்குஆமாம் , கொடுமையான விஷயம் தான். கற்சிலைகள் உடைபட்டு வேலைப்பாடுகள் நிறைந்த கலைநயத்தோடு உள்ளவற்றையும்
அழிப்பது என்றால் மனம் கல்லாகி விட்டது. அதில் ஈவு, இரக்கம் , கருணை இல்லை.
உள்ளூர் மக்கள் சைக்கிளில் வந்து அழகாய் நேரம் செலவழித்துச் செல்கிறார்கள் போல.. நீரூற்று, பூங்காக்கள், படகு வீடு போன்றவையும் அங்கு இருப்பது விசேஷம்.
பதிலளிநீக்கு//உள்ளூர் மக்கள் சைக்கிளில் வந்து அழகாய் நேரம் செலவழித்துச் செல்கிறார்கள் போல.. நீரூற்று, பூங்காக்கள், படகு வீடு போன்றவையும் அங்கு இருப்பது விசேஷம்.//
நீக்குநாங்கள் போன்ற அன்று விடுமுறை தினம், பரந்து விரிந்து இப்பதால் கூட்டம் அவவளவாக தெரியவில்லை. மினி வேங்கள், பெரிய ஆட்டொக்கள், சொகுசு பஸ்களில் இந்த மாதிரி சைக்கிளில் வந்தார்கள். எல்லா தரப்பினரையும் மகிழ்விக்க நல்ல ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.
இயற்கையுடன் இணையும் குறிப்பு அருமை. மனதை உவகைக்கொள்ள வைக்கும், பரவசப்படுத்தும் செயல்கள் அவை.
பதிலளிநீக்கு//இயற்கையுடன் இணையும் குறிப்பு அருமை. மனதை உவகைக்கொள்ள வைக்கும், பரவசப்படுத்தும் செயல்கள் அவை.//
நீக்குபுத்தரை பற்றி படிக்கும் போது இந்த கருத்து பிடித்தது , எல்லோருக்கும் பிடிக்கும் என்பாதால் இந்த பகிர்வு.
உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.
படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குசில படங்கள் சென்ற பதிவில் கண்டேன். இங்கு க்ளோசப்பில் கொடுத்துள்ளீர்கள்.
எப்படித்தான் சிலைகளின் தலையை வெட்ட, கை கால்களை உடைக்க மனம் வருமோ!
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.//
நன்றி
//சில படங்கள் சென்ற பதிவில் கண்டேன். இங்கு க்ளோசப்பில் கொடுத்துள்ளீர்கள்.//
ஆமாம்.
//எப்படித்தான் சிலைகளின் தலையை வெட்ட, கை கால்களை உடைக்க மனம் வருமோ!//
நாட்டை பிடிக்கும் வேட்கையில் மனம் கல்லாகி விடுகிறது.
செங்கற்கள் மற்றும் சுதையில் சிலைகளை வடித்திருப்பதால் சிலைகள் ரொம்ப அழகாகத் தோன்றவில்லை.
பதிலளிநீக்குஇடத்தின் மாடலை, அந்தக் காலத்தில் இப்படி இருந்திருக்கும் என வைத்திருப்பது நன்று.
அகழியில் படகுப் போக்குவரத்தா? என நினைத்தேன். பிறகு புரிந்தது.
//செங்கற்கள் மற்றும் சுதையில் சிலைகளை வடித்திருப்பதால் சிலைகள் ரொம்ப அழகாகத் தோன்றவில்லை.//
நீக்குசிலைகள் எல்லாம் கற்சிலைகள் தான், கட்டிடம் மட்டும் செங்கற்கள்.
//இடத்தின் மாடலை, அந்தக் காலத்தில் இப்படி இருந்திருக்கும் என வைத்திருப்பது நன்று.//
மிகவும் பெரிதாக வைத்து இருந்தார்கள் தூரத்திலிருந்து எடுத்தால் முழுமையாக வரும், ஆனால் தெரியாது.
//அகழியில் படகுப் போக்குவரத்தா? என நினைத்தேன். பிறகு புரிந்தது.//
படகில் மேலே ஏஸி எல்லாம் பொருத்தி இருக்கிறார்கள் பயன்பாட்டில் இருக்கிறது என்று தான் தெரிகிறது. அகழி நல்ல ஆழமாக அகலமாக இருக்கிறது. நான் கால்வலியால் பக்கத்தில் நடந்து போய் எடுக்க வில்லை தூரத்திலிருந்து ஒரு கிளிக் அவ்வளவுதான்.
விக்கி, ஆங்கில மூலத்தைத் தமிழில் படுத்தி இருப்பதால், அந்தத் தமிழ் விநோதமாக இருக்கிறது. நீங்களே கொஞ்சம் எளிமையாக்க் கொடுத்திருக்கலாம்.
பதிலளிநீக்குஇயற்கையுடன் நேரத்தைச் செலவிடுவது, நம் எல்லோருக்குமே மனதில் புத்துணர்ச்சி உண்டாக்கும். காடுகளோ, புல்வெளிகளோ, கடற்கரையோ மலைகளோ நம் மனதுக்கு இதமாக இருப்பது இதனால்தான்.
//விக்கி, ஆங்கில மூலத்தைத் தமிழில் படுத்தி இருப்பதால், அந்தத் தமிழ் விநோதமாக இருக்கிறது. நீங்களே கொஞ்சம் எளிமையாக்க் கொடுத்திருக்கலாம்.//
நீக்குஇனி கவனமாக இருக்கிறேன், ஸ்ரீராமுக்கு காரணம் சொல்லி இருக்கிறேன்,ஏன் அப்படியே பகிர நேர்ந்தது என்று.
நீங்கள் அடுத்த பயணம் ஆரம்பிக்கும் முன் போட நினைத்தேன் நெல்லை.
நான் பார்த்தது நிறைய இருக்கிரது உடனே உடனே பகிர தான் உடல் நிலை ஒத்துக் கொள்ளவில்லை. சிங்கப்பூர், மலேஷியா பதிவு பாதியில் நிற்கிறது.
//இயற்கையுடன் நேரத்தைச் செலவிடுவது, நம் எல்லோருக்குமே மனதில் புத்துணர்ச்சி உண்டாக்கும்.//
ஆமாம் நெல்லை. மருத்துவர்களும் , நம் முன்னோர்களும் அப்படித்தான் சொன்னார்கள்.
//காடுகளோ, புல்வெளிகளோ, கடற்கரையோ மலைகளோ நம் மனதுக்கு இதமாக இருப்பது இதனால்தான்.//
ஆமாம் மனதுக்கு இதம் தான்.
காடுகள் நல்ல காற்று தருகிறது, புல்வெளியில் காலை நேரம் வெறும் காலுடன் நடந்தால் பார்வை கோளாறு வராது என்பார்கள்., மலைகளோ இதயத்திற்கு பலம் சேர்க்கும் எனிகிறார்கள்.
இப்போது காட்டை அழித்து, புல்வெளியை அழித்து சிமெண்ட தரை செய்து விடுகிரார்கள். மலையை உடைத்து கொண்டே இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லை.
ஆமாம் கோமதிக்கா கோட்டை மாதிரிதான் இருக்கிறது. குச்சி குச்சியாகக் கோபுரங்கள்.
பதிலளிநீக்குசெங்கற்களால் அப்படினா முன்னாடி வெளியில் பூசியிருந்திருப்பாங்களோ? அழிஞ்சதுனால இப்படி செங்கற்கள் தெரிகின்றனவோ?
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்கு//ஆமாம் கோமதிக்கா கோட்டை மாதிரிதான் இருக்கிறது. குச்சி குச்சியாகக் கோபுரங்கள்.//
ஆமாம்.
//செங்கற்களால் அப்படினா முன்னாடி வெளியில் பூசியிருந்திருப்பாங்களோ? அழிஞ்சதுனால இப்படி செங்கற்கள் தெரிகின்றனவோ?//
இடிந்து இருப்பதால் பூச்சுகள் போய் இருக்கும்
அந்த மூன்று கூம்புகள் ரொம்ப அழகு!!!!
பதிலளிநீக்குஓ ஒரு காலத்தில் வர்த்தகமையமாக இருந்ததா? அதான் இப்ப உள்ள வர்த்தக மையங்கள் ட்வின் டவர்ஸ் என்ற கட்டுமானங்கள் எல்லாம் இப்படி இது போன்று கூம்பு வடிவில்தானே கட்டுகிறார்கள் இல்லையா?
கீழே உள்ள இரட்டைக் கோபுரங்களும் செம அழகு. சைக்கிள்களுக்கு முந்தைய படம்...
வெளிநாடுகளில் சைக்கிள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்து கொண்டு தண்ணீரும் வைத்துக் கொண்டுதான் ஓட்டுகிறார்கள்.
இப்ப இங்கும்பெங்களூரிலும் இப்படி ஞாயிறுகளில் ஓட்டுபவர்களைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலும் அயல்நாட்டவர்கள்...ஒரு சிலர் நம்மூர்க்காரர்கள்
கீதா
//அந்த மூன்று கூம்புகள் ரொம்ப அழகு!!!!
நீக்குஓ ஒரு காலத்தில் வர்த்தகமையமாக இருந்ததா? அதான் இப்ப உள்ள வர்த்தக மையங்கள் ட்வின் டவர்ஸ் என்ற கட்டுமானங்கள் எல்லாம் இப்படி இது போன்று கூம்பு வடிவில்தானே கட்டுகிறார்கள் இல்லையா?//
ட்வின் டவர்ஸ் மலேஷியாவில் பார்த்தோம் நீங்கள் சொல்வது போல கூம்பு வடிவங்கள் தான்.
//கீழே உள்ள இரட்டைக் கோபுரங்களும் செம அழகு. சைக்கிள்களுக்கு முந்தைய படம்...//
ஆமாம், இரண்டு கோபுரங்களுக்கு நடுவில் இருப்பது போல பெரிதாக சாரநாத்தில் இருக்கும்
//வெளிநாடுகளில் சைக்கிள் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிந்து கொண்டு தண்ணீரும் வைத்துக் கொண்டுதான் ஓட்டுகிறார்கள்.
இப்ப இங்கும்பெங்களூரிலும் இப்படி ஞாயிறுகளில் ஓட்டுபவர்களைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலும் அயல்நாட்டவர்கள்...ஒரு சிலர் நம்மூர்க்காரர்கள்//
ஆமாம் , பாதுகாப்பு கவசம் தான் தலைக்கவசம். அவர்கள் ரேஸ் போவது போல போகிறார்கள் சைக்கிளில் அதற்கு கவசம் நல்லது.
பூங்கா, அகழிகளும் அதன் கரையில் இருக்கும் கட்டிடங்களும் செம ...கட்டிடங்கள் வித்தியாசமாக இருக்கின்றன. நுனியில் ஏதோ கொக்குகள் குறிப்பாகப் பாம்புத்தாரா போன்ற உருவங்கள் உட்கார்ந்திருப்பது போல உள்ளது போன்று!!!! அல்லது பெரிய அறுவா போல...
பதிலளிநீக்குகீதா
//பூங்கா, அகழிகளும் அதன் கரையில் இருக்கும் கட்டிடங்களும் செம ...கட்டிடங்கள் வித்தியாசமாக இருக்கின்றன. நுனியில் ஏதோ கொக்குகள் குறிப்பாகப் பாம்புத்தாரா போன்ற உருவங்கள் உட்கார்ந்திருப்பது போல உள்ளது போன்று!!!! அல்லது பெரிய அறுவா போல...//
நீக்குஆமாம், நீங்கள் சொல்வது போல தான் இருக்கிறது. அங்கு இருக்கும் பழமையான கட்டிடங்கள் அனைத்தும் இப்படித்தான் இருக்கிறது.
வீடு மாடல்கள், அடுத்தாப்ல இருக்கற அகழியில் படகு வீடுகள், அதுக்கு படகுத் துறை போன்று இருக்கிறதே எதிர்ப்புறத்தில் அந்த இடத்தில் அதற்கான இடம் இருப்பது போன்று தெரிகிறது.
பதிலளிநீக்குமூன்று ஆறுகள் உள்ளடக்கிய அதைச் சுற்றி எழுப்பப்பட்ட நகரமா! ஹப்பா அப்ப முன்ன எப்படி இருந்திருக்கும் இல்லையா? எல்லாமே கவர்கின்றன
கீதா
//வீடு மாடல்கள், அடுத்தாப்ல இருக்கற அகழியில் படகு வீடுகள், அதுக்கு படகுத் துறை போன்று இருக்கிறதே எதிர்ப்புறத்தில் அந்த இடத்தில் அதற்கான இடம் இருப்பது போன்று தெரிகிறது.//
நீக்குஆமாம், எதிர்புறத்தில் இடம் இருக்கிறது.
//மூன்று ஆறுகள் உள்ளடக்கிய அதைச் சுற்றி எழுப்பப்பட்ட நகரமா! ஹப்பா அப்ப முன்ன எப்படி இருந்திருக்கும் இல்லையா? எல்லாமே கவர்கின்றன//
இப்போழுதும் நன்றாக இருக்கிறது சொர்ணபுரிதான்.
கூம்பு கூம்பாகக் கோபுரங்கள் ஒல்லியா....அது கவர்ச்சி!!
பதிலளிநீக்குசுற்றிச் சுற்றி அந்தப் புத்தர் சிலை அருகில் வந்தாச்சோ? கை ஒடிந்த புத்தா...
பாருங்க அமைதியை போதித்த புத்தரின் சிரஸில் அமைதிப் புறா!!!! சிம்பாலிக்!!
அக்கா ஹைஃபைவ்...கைய கொடுங்க....படத்தின் கீழ் வரை பார்க்கும் முன் நான் இந்த வரியை எழுதிவிட்டு படத்தின் கீழ் பார்த்தால் நீங்களும் அதையே சொல்லியிருக்கீங்க!!!!!!
ஆமாம் காந்தாரக் கலை போல....காது நீட்டமாக நல்ல வடிவமைப்பு...
இதற்கு அடுத்த படம் அட்டகாசமாக இருக்கு கோமதிக்கா. அருமையான ஷாட். தூரத்தில் அத்தனை கோபுரங்களும் ஒருமித்து!!!! அதன் பின் சைட் வியூ....
வடிகால் வசதி மற்றும் சக்கரநாற்காலியில் செல்வதற்கான வசதி என்று சூப்பர்.
சுற்றி சுற்றி நிறைய இருக்கு போல பார்ப்பதற்கும் படங்கள் எடுப்பதற்கும். அரை நாள் ஆனதா அக்கா? நீங்க எப்படி நடந்தீங்க இத்தனை தூரமும்?
சக்கரநாற்காலி - படத்துக்குக் கீழ செம ஷாட். அந்தப் படம் வித்தியாசமாக கலரில் இருக்கிறதே...ஓஹோ அந்தப் பூச்சு அழியாம இருக்கு போல...இப்படித்தான் மற்ற கோபுரங்களும் இருந்திருக்க வேண்டும்..
பர்மாகாரங்க அழித்த போது தலையை கொய்திட்டாங்க போல, என்ன குணமோ?
உடைந்தவற்றை சீர்ப்படுத்தியிருக்கலாம் அரசு. ஏன் செய்யவில்லையோ? பார்க்கவே மனசு ஒரு மாதிரி ஆகுது.
//இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது, நமது மனநிலையை மேம்படுத்த உதவும். அது மட்டுமன்றி, நம் மனதை மற்றும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும். பூங்காவில் உட்காருவது, மழையில் நனைவது, வெறும் காலில் புல் தரையில் நடப்பது, அருவியில் குளிப்பது போன்ற நடவடிக்கைகள் உங்களை ஹீல் செய்ய உதவும்.//
டிட்டோ செய்கிறேன் அக்கா. இப்ப எதுக்குமே வழி இல்லாமல் இருக்கிறது.
மனசு பல சமயங்களில் சுணங்கிப் போகிறது. என்னடா இது என்று...
கீதா
//கூம்பு கூம்பாகக் கோபுரங்கள் ஒல்லியா....அது கவர்ச்சி!!
நீக்குசுற்றிச் சுற்றி அந்தப் புத்தர் சிலை அருகில் வந்தாச்சோ? கை ஒடிந்த புத்தா...
பாருங்க அமைதியை போதித்த புத்தரின் சிரஸில் அமைதிப் புறா!!!! சிம்பாலிக்!!//
ஆமாம்.
//இதற்கு அடுத்த படம் அட்டகாசமாக இருக்கு கோமதிக்கா. அருமையான ஷாட். தூரத்தில் அத்தனை கோபுரங்களும் ஒருமித்து!!!! அதன் பின் சைட் வியூ...//
நன்றி கீதா
//அக்கா ஹைஃபைவ்...கைய கொடுங்க....படத்தின் கீழ் வரை பார்க்கும் முன் நான் இந்த வரியை எழுதிவிட்டு படத்தின் கீழ் பார்த்தால் நீங்களும் அதையே சொல்லியிருக்கீங்க!!!!!!//
ஒத்த கருத்து உடையவர்கள் தானே கீதா.
//சுற்றி சுற்றி நிறைய இருக்கு போல பார்ப்பதற்கும் படங்கள் எடுப்பதற்கும். அரை நாள் ஆனதா அக்கா? நீங்க எப்படி நடந்தீங்க இத்தனை தூரமும்?//
மதியம் முதல் மாலை வரை இருந்தோம். கால்வலிதான் மெதுவாக நடந்தேன்.
//பர்மாகாரங்க அழித்த போது தலையை கொய்திட்டாங்க போல, என்ன குணமோ?
உடைந்தவற்றை சீர்ப்படுத்தியிருக்கலாம் அரசு. ஏன் செய்யவில்லையோ? பார்க்கவே மனசு ஒரு மாதிரி ஆகுது.//
போரின் நினைவாக அப்படியே வைத்து இருக்கிறார்கள். நினைவு சின்னங்களை புதுபிக்க கூடாது.
//டிட்டோ செய்கிறேன் அக்கா. இப்ப எதுக்குமே வழி இல்லாமல் இருக்கிறது.
மனசு பல சமயங்களில் சுணங்கிப் போகிறது. என்னடா இது என்று...//
ஆமாம் , இயற்கையை ரசித்து வந்தால் மகிழ்ச்சிதான். நான் தொலைக்காட்சியில் இயற்கையை ரசித்து கொண்டு இருக்கிறேன் இப்போது.
அடுத்த பதிவிற்கு ஆவலுடன்...
பதிலளிநீக்குஎல்லாப்படங்களும் ரசித்தேன் கோமதிக்கா
கீதா
//அடுத்த பதிவிற்கு ஆவலுடன்...
நீக்குஎல்லாப்படங்களும் ரசித்தேன் கோமதிக்கா//
அனைத்தையும் ரசித்து பல வேலைகளக்கு இடையில் வந்து நிறைய பின்னுட்டங்கள் போட்டு உற்சாகப்படுத்தியதற்கு நன்றி கீதா.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. அயுத்தயா நகரின் வெளிப்பக்கமிருந்து எடுத்த எல்லா புகைப்படங்களும் அருமையாக உள்ளது.
நல்ல செங்கற்களால் கட்டப்பட்ட புத்தர் கோவிலாகையால், அத்தனை இடிபாடுகளை தாங்கிக் கொண்டு நிற்கிறது. அங்குள்ள புத்தர் சிலைகளை ஆங்காங்கே உடைத்திருப்பது மனதிற்கு வேதனையை தருகிறது. எதிர்த்தவர்கள் பர்மியர்கள் என்றாலும் அவர்கள் கடவுளை ஏன் அங்கஹீனமாக்க வேண்டும்.?
கூம்பு போன்ற மூன்று கோபுரங்கள் படம் அழகாக இருக்கிறது. அமைதிக்காக பாடுபட்ட அவரின் தலை முடிமேல் அழகாக வந்தமர்ந்த அமைதிப்புறா படங்கள் அடுத்தடுத்த கோணங்களில் அற்புதமாக வந்துள்ளது.
/இயற்கையுடன் இணைதல்:
இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது, நமது மனநிலையை மேம்படுத்த உதவும். அது மட்டுமன்றி, நம் மனதை மற்றும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும். பூங்காவில் உட்காருவது, மழையில் நனைவது, வெறும் காலில் புல் தரையில் நடப்பது, அருவியில் குளிப்பது போன்ற நடவடிக்கைகள் உங்களை ஹீல் செய்ய உதவும்.///
நல்லதொரு மன நிலைமைக்கான பயிற்சிகளை அழகாக சொல்லியிருக்கிறார் கள். அமைதி சிறந்தது என்று வலியுறுத்திய புத்தபெருமான் சொன்ன, அதையே புத்த துறவிகள் பின்பற்றும் வாக்கியங்களும்அருமை. "மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் ." என்பது போல் மனதில் பல வஞ்சகங்கள் தோன்றாது அமைதியாக இருந்தாலே இறைவனோடு ஒன்றி விடலாம். நல்ல பகிர்வு.
அடுத்தப்பதிவுக்கும் காத்திருக்கிறேன் சகோதரி. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்கு//பதிவு அருமை. அயுத்தயா நகரின் வெளிப்பக்கமிருந்து எடுத்த எல்லா புகைப்படங்களும் அருமையாக உள்ளது.//
நன்றி.
//நல்ல செங்கற்களால் கட்டப்பட்ட புத்தர் கோவிலாகையால், அத்தனை இடிபாடுகளை தாங்கிக் கொண்டு நிற்கிறது//
ஆமாம், இப்போது உள்ள செங்கற்கள் என்றால் இந்த அளவு உறுதியாக இருக்காது.
. //அங்குள்ள புத்தர் சிலைகளை ஆங்காங்கே உடைத்திருப்பது மனதிற்கு வேதனையை தருகிறது. எதிர்த்தவர்கள் பர்மியர்கள் என்றாலும் அவர்கள் கடவுளை ஏன் அங்கஹீனமாக்க வேண்டும்.?//
போர் வெறியர்களுக்கு எதுவும் பொருட்டு அல்ல.
//கூம்பு போன்ற மூன்று கோபுரங்கள் படம் அழகாக இருக்கிறது. அமைதிக்காக பாடுபட்ட அவரின் தலை முடிமேல் அழகாக வந்தமர்ந்த அமைதிப்புறா படங்கள் அடுத்தடுத்த கோணங்களில் அற்புதமாக வந்துள்ளது.//
அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//நல்லதொரு மன நிலைமைக்கான பயிற்சிகளை அழகாக சொல்லியிருக்கிறார் கள். அமைதி சிறந்தது என்று வலியுறுத்திய புத்தபெருமான் சொன்ன, அதையே புத்த துறவிகள் பின்பற்றும் வாக்கியங்களும்அருமை. "மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் ." என்பது போல் மனதில் பல வஞ்சகங்கள் தோன்றாது அமைதியாக இருந்தாலே இறைவனோடு ஒன்றி விடலாம். நல்ல பகிர்வு.//
ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் தான்.
//அடுத்தப்பதிவுக்கும் காத்திருக்கிறேன் சகோதரி. நன்றி.//
உங்கள் கருத்துக்கு நன்றி நன்றி.
கோபுரங்களின் வடிவமைப்பும் கட்டுமானமும் அழகாக உள்ளது. சிதைந்த நிலையில் இருப்பவை, உடைந்த நிலையில் காணப்படும் புத்தர் சிலைகள் வருத்தம் அளிக்கின்றன. இயற்கையும் இணைதல்.. கவனத்தில் கொள்ள வேண்டிய அருமையான குறிப்பு.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி வாழ்க வளமுடன்
நீக்கு//கோபுரங்களின் வடிவமைப்பும் கட்டுமானமும் அழகாக உள்ளது. சிதைந்த நிலையில் இருப்பவை, உடைந்த நிலையில் காணப்படும் புத்தர் சிலைகள் வருத்தம் அளிக்கின்றன. இயற்கையும் இணைதல்.. கவனத்தில் கொள்ள வேண்டிய அருமையான குறிப்பு.//
ஆமாம், சிதைந்த நிலையிலும் அழகாய் இருக்கிறதே! இது முழுமையாக இருந்து இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் மனதில் வந்து போய் கொண்டு இருந்தது இந்த இடத்தை சுற்றிப்பார்க்கையில்.
இயற்கையுடன் இணைதல் குறிப்பு உங்களுக்கு பிடிக்கும் என்று தெரியும், இயற்கையை மிக அழகாய் படம் பிடிப்பவர்கள் அல்லவா நீங்கள்.
ஆம், பதிவுகளுக்கான தகவல்களை சேகரித்து நமது எழுத்து நடையில் கொடுக்க நிறைய அவகாசம் தேவை. ஆங்கிலத்திலிருந்து தமிழ் பக்கத்திற்கு வருகையில் மொழிபெயர்ப்பு பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை, மேலும் ஆங்கிலத் தகவல்கள் அனைத்தும் தமிழில் தரப்பட்டிருப்பதில்லை. அதனால் தமிழாக்கமும் பல நேரங்களில் அவசியப்படுகிறது. நேர அவகாசம், கணினியில் அதிகம் உட்கார முடியாத உடல்நலப் பிரச்சனைகளால் எனது பயணப் பதிவுகளும் திட்டமிட்டபடி பகிர முடியாமல் சேர்ந்து போயுள்ளன.
பதிலளிநீக்குதங்கள் எழுத்து நடை அல்ல என்பதை ஸ்ரீராம் சரியாகக் கணித்து கூறி விட்டுள்ளார்.
//ஆம், பதிவுகளுக்கான தகவல்களை சேகரித்து நமது எழுத்து நடையில் கொடுக்க நிறைய அவகாசம் தேவை. //
நீக்குபயணம் போய் வந்த சூட்டுடன் போட்டு இருந்தால் அந்த இடம் பற்றிய நினைவுகளும் இருக்கும் , அது இல்லாத போது அதுவும் வெளி நாட்டு பயணம் கட்டுரைக்கு தகவல் சேகரிக்க வேண்டியது உள்ளது.
//ஆங்கிலத்திலிருந்து தமிழ் பக்கத்திற்கு வருகையில் மொழிபெயர்ப்பு பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை, மேலும் ஆங்கிலத் தகவல்கள் அனைத்தும் தமிழில் தரப்பட்டிருப்பதில்லை.//
ஆமாம் , ராமலக்ஷ்மி.
//அதனால் தமிழாக்கமும் பல நேரங்களில் அவசியப்படுகிறது. நேர அவகாசம், கணினியில் அதிகம் உட்கார முடியாத உடல்நலப் பிரச்சனைகளால் எனது பயணப் பதிவுகளும் திட்டமிட்டபடி பகிர முடியாமல் சேர்ந்து போயுள்ளன.//
ஆமாம், உங்களுக்கு கைகளில் அடிபட்டு அதிலிருந்து மீண்டு வந்து எழுதி கொண்டு இருப்பது இறைவன் அருள்.
சரியான தகவல்களை கொடுக்க வேண்டும் என்பதாலும் என்னால் தொடர்ந்து அமர்ந்து இருக்க முடிவது இல்லை என்பதாலும் அப்படியே கொடுத்தேன்.
//தங்கள் எழுத்து நடை அல்ல என்பதை ஸ்ரீராம் சரியாகக் கணித்து கூறி விட்டுள்ளார்.//
ஆமாம் , கண்டு பிடித்து விட்டார். நானும் தகவல் எடுத்து கொடுத்து இருக்கும் பக்கத்தின் சுட்டி கொடுத்து நன்றியும் போட்டு விட்டேன், அதையும் பார்த்து விட்டார்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.
வெளிப்பக்க மதிலோரம் இருக்கும் மூன்று கோபுரங்கள் படம் எடுத்த கோணம் மிக அழகாக உள்ளது.
பதிலளிநீக்குமழைநீர் வடிகால் வசதி சிறப்பான திட்டம்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்கு//வெளிப்பக்க மதிலோரம் இருக்கும் மூன்று கோபுரங்கள் படம் எடுத்த கோணம் மிக அழகாக உள்ளது.//
நன்றி.
//மழைநீர் வடிகால் வசதி சிறப்பான திட்டம்.//
ஆமாம், சிறப்பான திட்டம்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.