வியாழன், 10 செப்டம்பர், 2020

உடுப்பி கிருஷ்ணர் கோவில்


மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.

 கர்நாடகா கோவில்கள் சென்றதைப் பதிவாக்கி வருகிறேன்  , அதில் இன்று உடுப்பி கிருஷ்ணர் கோவில்.

இன்று கிருஷ்ணஜெயந்தியைக் கொண்டாடும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்!


கிருஷ்ணன் கோவில் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது. திருக்குளத்தின் பேர் மத்வ புஷ்கரணி. 

ஸ்ரீ மத்வாச்சாரியார் அவர்களுக்கு கிடைத்த கிருஷ்ணர் சிலையைக் கொண்டு உடுப்பியில் கோவில் அமைத்தார் . கடலில் புயல் ஏற்பட்ட போது மத்வர் புயலை நிறுத்திப் புயலில் சிக்கிய கப்பலைக் காப்பாற்றியதால் கப்பல் மாலுமியால் கிருஷ்ணர் சிலையும் பலராமன் சிலையும் கிடைத்தாக வரலாறு சொல்கிறது. கிருஷ்ணமடம்  என்று அழைக்கபடுகிறது இந்த மடம்.

சந்திரன் தன் 27 மனைவிகளுடன் இங்கு வணங்கியதாகச் சொல்கிறது வரலாறு.

  

படகில் அலங்காரம் நடக்கிறது. இடது பக்கம் ஓரத்தில்  கீழ அடுக்கில் உடுப்பி கிருஷ்ணர்  வரலாறு சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. மேல் அடுக்கு வழியாக வரிசையாக சென்று கிருஷ்ணர் இருக்கும் இடத்திற்குப் போக வேண்டும்.
போகும் வழி எல்லாம் நேரடிக் காட்சியாகத் தொலைக்காட்சியில் சுவாமியைத் தரிசனம் செய்து கொண்டே போகலாம்.

சங்கரா தொலைக்காட்சியில் உடுப்பி கிருஷ்ணரின் அபிஷேகம் அலங்கார பூஜைகள் அடிக்கடி பார்த்து  எனக்கு அவரை இப்போது தான் பார்ப்பது போலவே இல்லை. பழகிய கிருஷ்ணரைப் பார்ப்பது போலத்தான் இருந்தது.
ஜன்னல் வழியே பார்ப்பது புதிதாகத் தோன்றவில்லை.

கிருஷ்ணர் சன்னதியின் கதவு விஜயதசமி அன்று திறக்கப்படுமாம்.
ஜன்னல் வழியே பார்ப்பதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.  கிருஷ்ணர் கனகதாசர் என்ற அன்பருக்குக் காட்சி தந்த ஜன்னல். 9 துவாரங்கள் கொண்ட  ஜன்னலின் பேர் கனகதண்டி என்றே அழைக்கப்படுகிறது அந்த ஜன்னலில் தங்கக் கவசம் அணிவித்து இருக்கிறது. அதிலும் நிறைய சித்திரங்கள் வடித்து இருக்கிறார்கள்.

ஜன்னல் வழியே வரிசையாகப் பார்த்து விட்டுப் போய் விட்டோம்,முதலில். .அப்புறம்  உள்ளே எல்லாச் சன்னதிகளில் உள்ள தெய்வங்களை வணங்கி விட்டு வந்து மீண்டும் பார்க்கும் ஆசையில் பார்க்கப் போனோம் கிருஷ்ணரை. ஆச்சிரியம்!  "ஹோகி ஹோகி" என்று சொல்லும் பணியாளர்களும் இல்லை, கூட்டமும் இல்லை. மிக அருமையாக தரிசனம் ஆச்சு!  கண் குளிர, மனம் குளிர தரிசனம் செய்தோம். மலர்களால் மிக அழகாகக் கிருஷ்ணரை அலங்கரித்து இருந்தார்கள் பாக்குமரப்பூக்கள், பலவண்ணப்பூக்களால் அலங்காரம் செய்து இருந்தார்கள்.

வரிசையில் போய் கொண்டு இருக்கும் போது திருக்குளத்தைப் படங்கள் எடுத்தேன்.


விளக்கு அலங்காரம் செய்யப் போகிறார்கள். பின்னால் தெரியும் தேர் விறகுத்தேர். இந்த தேர் எட்டு மடங்கள் கோவிலின் பொறுப்பை எடுத்து கொண்டு இருக்கிறதாம் மத்துவர் அமைத்த மடங்கள். ஒவ்வொரு மடமும் இரண்டு மாதம் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாம் ,  பொறுப்பை ஏற்கும் விழா சமையம் இந்த விறகுத் தேர் அமைக்கப்படுமாம், பின்பு கோயிலில் ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும்  அன்னதான சமையல் செய்யப் பயன்படுமாம்.

அன்னபிரம்மா என்ற சமையல் கூடம்

கோவிலுக்குப் போகும் வழியில் சிறு மண்டபத்தில் கிருஷ்ணர்

கோவில் அருகில் வைத்து இருந்த பலகையில் கிருஷ்ணர் அமர்ந்த கோலத்தில் அலங்காரம்


இப்படித்தான் கிருஷ்ணர் விக்கிரகம்  இருக்கும். ருக்மணி  கிருஷ்ணரைக் குழந்தைப் பருவத்தில் பார்க்க ஆசைப்பட்டுத் தேவ தட்சன் விஸ்வகர்மாவை  சாளக்கிரமத்தில் வடிமைக்கச் சொன்னது- துவாரகை கடலில் முழுகிய போது கடலுக்குள் போன கிருஷ்ணர் சிலை  மத்வருக்கு மாலுமிகளால் கிடைத்தது.



 மடத்தின் கட்டிடங்கள் நிறைய இருக்கிறது(எட்டு மடங்கள் இருக்கிறதாம்)

கிருஷ்ண ஜன்மாஷ்டமியைக்  கொண்டாட விழாக் கோலம் கொண்டுள்ளது 

தேர் உருவாகும் காட்சி
வர்ணம் அடிக்கிறார்கள்

தேர் ,திருவிழாவிற்குத்  தயார் ஆகிறது



இந்தத் தேரில் லட்சுமி  நரசிம்மர், கண்ணன் படங்கள் காட்சிகள் இருக்கிறது 

தேரைச்சுற்றிப் பத்து அவதாரங்களின் காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.

பக்தர்கள் தங்கள் பொருட்களை வைக்கும் அறை 

திருவிழா விவரங்கள் நடக்கபோகும்  நடனம், பாட்டு, பஜனை விவரங்கள் கன்னடத்தில் இருக்கிறது .அதனால் தெரியவில்லை



                                        பள்ளிச்சுற்றுலா வந்த குழந்தைகள்.
கிருஷ்ணருக்குப் பிடித்த அப்பம் செய்யும்    பாத்திரம்,  கோலத் தட்டுக்கள் விற்பனை

கோபாலனுக்குப் பிடித்த பசுக்கள்
சகலவசதி கொண்ட பசுமடம்

கோவிலுக்குள் அமைந்து இருக்கும்  கடைகள், கடைக்குப் பக்கத்தில் தெரியும் மாடியில்தான் அன்னதான கூடம். நாங்களும் சாப்பிட்டோம் .

குழந்தைகளுக்கு வேண்டிய புல்லாங்குழல், மற்றும் ஒருவர்  வாங்கி வரச்சொன்ன தவழும் கண்ணன் இருக்கும் தொட்டில் வாங்கினேன்.
கடைகள் பக்கம் இருந்து தெரிந்த கோபுர கலசங்கள்
கோபாலன் குழல் ஊதி  மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின் குறைவேது!

மனம் மகிழ உடுப்பி கிருஷ்ணரை வணங்கித்  திரும்பினோம்.



வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
-------------------------------------------------------------------------------------------------------------------------


22 கருத்துகள்:

  1. ஒவ்வொரு பகுதியையும் அருமையாக படம் எடுத்து, சுற்றிக் காண்பித்து விட்டீர்கள் அம்மா... அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
      சுற்றிப் பார்த்து விட்டீர்களா? மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  2. தரிசித்தோம்...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. இன்று உடுப்பி கிருஷணரை அருமையாக தரிசனம் செய்து வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி.

    படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. இவ்வளவு படங்களை அதன் விபரங்களோடு அழகாக படமெடுத்து இருக்கிறீர்கள்.தங்களுக்கு அன்பான பாராட்டுக்கள். நாங்களும் எங்கள் சுற்றுலாவில் உடுப்பிச் சென்று தரிசித்து வந்தோம். அப்போது இத்தனை விபரங்கள், படங்கள் என எதுவும் சேகரிக்கவில்லை.அதனால் எல்லாவற்றையும் நினைவு கூற முடியவில்லை.மேலும் அங்கு சென்று வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. மீண்டும் சந்தர்ப்பம் அமைந்தால், அவன் வரச்சொல்லி அழைத்தால், போக வேண்டுமென நினைத்துக் கொண்டேயுள்ளோம். நீங்கள் படங்களுடன் சொல்லச் சொல்ல கொஞ்சம் அந்த நினைவுகள் நினைவுக்கு வருகிறது. தங்களின் பகிர்வு மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது. மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      படங்கள் காமிராவிலும் போனிலும் எடுத்தேன். படங்களைப் பார்த்ததால் எனக்கும் நினைவு இருக்கிறது. இல்லையென்றால் எனக்கும் மறந்து இருக்கும்.நானும் பார்த்து ஐந்து வருடம் ஆச்சு.

      மீண்டும் சந்தர்ப்பம் அமையும் அழைப்பார் தரிசனம் செய்யலாம்.
      நாங்கள் போன போது விழாகோலம் கொண்டு இருந்தது கோவில் அதனால் படங்கள் கிடைத்தது. கோவிலை இரண்டு மூன்று நாள் அங்கு தங்கினால்தான் இன்னும் நன்றாக பார்க்கலாம். தனியாக போனால்தான் அது நடக்கும், நாங்கள் சுற்றுலா குழுவில் போனதால் அடுத்து அடுத்து என்று போய் கொண்டு இருந்ததால் படங்கள் எல்லாம் அவசரம் அவசரமாகத்தான் எடுத்தேன்.

      உங்களுக்கு இந்த பதிவு மகிழ்ச்சி தந்தது அறிந்து எனக்கும் மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு
  4. உடுப்பி கிருஷ்ணர் கோவில் தரிசனம் உங்களால்! ஸ்ரீஜெயந்தி நாளில் சிறப்பான, சரியான பகிர்வு. நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
      ஸ்ரீ ஜெயந்தி நாளில் போட்டுவிட வேண்டும் என்று நினைத்தேன், அதை கிருஷ்ணன் நடத்தி வைத்தார்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அன்பு கோமதி,
    எங்களுக்கு இன்று கிருஷ்ணர் பிறந்த நாள். உடுப்பி கிருஷ்ணன்
    வந்து சேர்ந்தார்.
    நன்றி கோமதி.
    எத்தனை எத்தனை படங்கள். அருமையாக விவரணையும், தேர் அலங்காரமும் கண்ணைப் பறிக்கிறது.கையில் வெண்ணெய் மத்துடன் கண்ணன்
    பிரமாதம்.
    கனகதாசர் படம் பல செய்திகளைச் சொல்கிறது.
    மிகமிக நன்றி மா. மீண்டும் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      உங்களுக்கு கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள்.

      உடுப்பி கிருஷ்ணர் வந்து விட்டாரா? மகிழ்ச்சி.

      //கையில் வெண்ணெய் மத்துடன் கண்ணன்
      பிரமாதம்.//

      ஆமாம் அக்கா, கண்ணன் கையில் வெண்ணை மத்துடன் அழகாய் இருப்பார்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  6. உடுப்பி கிருஷ்ணர் தரிசனம் மிக நன்று. க்ருஷ்ணர் நினைவலைகளில் அவன் தரிசனம் கிடைத்தது. அங்கு அன்னக் கூடங்களில் விறகடுப்புதான் உபயோகிக்கறாங்களா?


    அது 'ஹோகி' 'ஹோகி' - போங்க போங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      கிருஷ்ணர் நிலைவலைகளில் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

      நிறைய விறகு அடிக்கி வைத்து இருக்கிறார்கள். அன்னக்கூடங்களில் உள்ளே போய் பார்க்கவில்லை. விறகு தேர் பற்றி படித்தேன் அதில் அந்த விறகை அன்னதான சமையலுக்கு பயன்படுத்துத்திக் கொள்வார்கள் என்று போட்டு இருக்கிறது. விறகு காய வைத்து இருந்தார்கள் முதல் நாள் மழை பெய்த காரணத்தால்.

      //அது 'ஹோகி' 'ஹோகி' - போங்க போங்க.//

      போங்க போங்க என்று அர்த்தம் புரிந்தது.கோகி என்று என் காதில் விழுந்தது ஹோகி என்று திருத்தி விடுகிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.



      நீக்கு
  7. கிருஷ்ணரை தரிசித்தேன்.
    வரிசையாக படங்களுடன் சொல்லிய விதம் அருமை. வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. உடுப்பிக்குச் செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை. எப்போது கை கூட போகிறதோ? என்று இன்று நினைத்துக் கொண்டேன். உங்கள் வழியாக உடுப்பி தரிசனம் கிடைத்தது. விரைவில் நேரில் உடுப்பி கிருஷ்ணன் தரிசனம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      //உடுப்பிக்குச் செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை.//
      ஆசை நிறைவேற கிருஷ்ணரின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

      உங்கள் நம்பிக்கை உடுப்பி கிருஷ்ணன் தரிசனம் கிடைக்க வைக்கும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. நிறைந்த படங்களும் செய்திகளுமாக அருமையான பதிவு.. உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் தங்களால் ஆயிற்று..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்

      பதிவு பற்றிய கருத்து சொன்னதற்கு நன்றி.

      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. ஆயிரம் தான் சொல்லுங்க..
    நம்ம ஊர் தேர்களின் அழகும் கம்பீரமும்
    வேறெந்த தேருக்கும் அமைவதேயில்லை...

    பதிலளிநீக்கு
  11. உடுப்பி...காண ஆசைப்பட்ட இடம். இறையருளால் இன்று கண்டேன், உங்கள் பதிவு மூலமாக. மனம் நிறைவாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      வாய்ப்பு கிடைக்கும் போது போய் தரிசனம் செய்யுங்கள்.
      உங்கள் கருத்து மனநிறைவாக இருந்தது, நன்றி.

      நீக்கு