ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

படைப்பதும் காப்பதும் அவன் செயல் !



மகன் வீட்டில் வருடாவருடம் வசந்த காலத்தில் கூடு கட்டி முட்டையிட்டுக்  குஞ்சு பொரிக்கும் மணிப்புறா
இரண்டு முட்டைகள் இடும் 

தாய்ப்  பறவையின்  அடியில் குஞ்சுகள் 
தெரிகிறதா?

உணவு கொண்டு வரச் சென்று இருக்கு தாய்ப் புறா,  இரண்டு குஞ்சுகளும் தெரிகிறதா?

வளர்ந்து விட்டன- அழகுக் குஞ்சுகள்
எப்படிப் பார்க்கிறது பாருங்க  ,"அவங்க அம்மாவுக்குக் காட்ட வேண்டுமாம் நம்மை. அதுதான் நம்மை போட்டோ புடிக்கிறார் அண்ணன் " என்று பேசிக் கொள்கிறதோ!





உண்வூட்டும் காட்சி படமாக,  கீழே காட்சியாக

Quail - egg இந்த பறவைகள் நிறைய  பெரிய குடும்பத்தோடு இரை எடுக்க வரும் மகன் வீட்டுக்கு. நான் இந்த பறவைகளின் படங்களை முன்பு பதிவு போட்டு இருக்கிறேன். இந்த முறை  இந்தப் பறவையும் மகன் வீட்டில் முட்டையிட்டு இருக்கிறது. 
மகன் முட்டையிட்டு இருப்பதைக் காட்டியவுடன் அதன் குஞ்சுகள் பொரிந்தவுடன் காட்டு, உணவு கொடுப்பதைக் காட்டு என்று சொல்லிக் கொண்டு இருந்தேன். 


இந்த கல் இடுக்கில் இந்தப் பறவை போவதைப் பார்த்துத் தான்  கண்டு பிடித்து இருக்கிறான் மகன், பறவை அங்கு முட்டை இட்டு இருப்பதை.

இரண்டு மூன்று நாளாகத் தாய்ப்பறவையைக் காணவில்லையாம் . குஞ்சுகள் எப்படி பொரியும் அடைகாக்காமல் என்று கவலைப்பட்டு  என்ன செய்வது என்று கூகுளில் தேடிக் கொண்டு இருக்கிறான். இங்குபேட்டரில் வைத்து பொரிய வைப்பது தான் வழி என்று இருக்காம்.  21 நாளில் பொரிந்து விடுமாம் இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லையாம்.  தாய்ப் பறவைக்கு ஏதாவது ஊறு நேர்ந்து இருக்குமோ என்று  எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது.

நம் வீட்டுக்கு வந்தவை  நல்லபடியாக  வெளியே போனால் நமக்கும்  மகிழ்ச்சி.

இப்படி கீழே முட்டை இட்டு இருக்கே அதற்கு ஏதாவது ஆபத்து வருமோ என்று நினைத்தேன் ., இறைவன் கணக்கு நமக்குப் புரிவதில்லை,

போனபதிவில் இடம் பெற்ற பெண் குயில் நலமாக எதிர்க் கோடி வீட்டில்  உணவு எடுக்க வந்த போது



படைப்பதும்  காப்பதும் அவர் செயல்.


எங்கள் வளாகக் குருவி குஞ்சுக்கு உணவு கொடுத்து விட்டு  வெளியே  எட்டிப் பார்க்குது.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

72 கருத்துகள்:

  1. அழகான படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.

    நல்லவேளை பறவைகளை கொரோனா தாக்கவில்லை ஆகவே நாம் இந்த அளவுக்காவது பாதுகாப்பாக இருக்கிறோம்.

    வாழ்க வையகம் இறையே துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //நல்லவேளை பறவைகளை கொரோனா தாக்கவில்லை ஆகவே நாம் இந்த அளவுக்காவது பாதுகாப்பாக இருக்கிறோம்.//

      நல்லவேளை இறைவன் காக்கட்டும் பறவைகளை.(அனைத்து உயிர்களையும்)

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. பறவைகளுக்கு மட்டும் தீநுண்மி பரவி இருந்தால்...

      விபரீதத்தை நினைத்துப் பார்க்கவே மனம் அஞ்சுகிறது...

      நீக்கு
    3. ஆமாம் தனபாலன் , விபரீதத்தை நினைத்துப் பார்க்கவே மனம் அஞ்சுவது உண்மை.
      பூம்புகாரில் நிறைய காக்கை கூட்டமாக இறந்து கிடந்தது என்று தொலைக்காட்சியில் காட்டினார்கள் பயந்தேன் அதைப்பார்த்து. நல்லவேளை யாரோ விஷ உணவு வைத்து இருக்கிறார்கள் . ஜனங்கள் அதை புதைத்து மஞ்சள் தண்ணீரை ஊரெங்கும் தெளீத்து உள்ளார்கள்.

      அவைகள் நன்றாக இருக்கட்டும் வீட்டில் இருக்கும் நமக்கு அதன் ஒலியும் அதன் மகிழ்ச்சியான ஓட்டமும் தான் ஆறுதல்.

      நீக்கு
  2. வணக்கம் சகோ ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. படங்கள் எல்லாமே அழகு! அந்த தாய்ப்பறவை திரும்பி வந்து விட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன் , வாழ்க வளமுடன்

      தாய்ப்பற்வை திரும்பி வரவில்லை.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். தங்கள் மகன் பறவைகளின் ஒவ்வொரு நிலையையும் மிக தெளிவாக படம் எடுத்து அனுப்பியுள்ளார். தங்களைப் போலவே தங்கள் மகனுக்கும் பறவைகளிடத்து பாசம், அக்கறை என நிறைய கருணை உள்ளம் உள்ளது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். அங்கு (தங்கள் மகன் வீட்டில்) அனைவரும் நலமாக உள்ளார்களா?

    இறைவன் தான் படைக்கும் ஜீவராசிகளுக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவி பண்ணுவார். தங்கள் மகன் அந்த பறவையின் முட்டைகளை எப்படி தாய் பறவையின் துணையின்றி பத்திரமாக காத்தார்? அப்புறம் அந்தப் பறவை வந்ததா? குஞ்சுகள் பத்திரமாக இருக்கின்றனவா? வெளியில் இரை தேடச் சென்ற போது அந்த தாய் பறவைக்கு ஏதேனும் துன்பங்கள் வந்து விட்டதோ என்னவோ? பாவம்...! படிக்கும் போதே மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. கடவுள்தான் அனைத்து உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். பிரார்த்தனை செய்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      மகன் வீட்டில் எல்லோரும் நலம்.
      நான் ரசிப்பேன் என்பதால் ஒவ்வொரு பருவத்தையும் படமாக்கி தந்தான்.
      மணிப்புறா குஞ்சுகள் எல்லாம் சந்தோஷமாய் பறந்து போய்விட்டது.

      காடை பறவை வரவில்லை. ஏதோ கஷ்டம் அதனால் வரவில்லை.
      கடவுள் அனைத்து உயிர்களையும் காக்க வேண்டும்.

      உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.

      நீக்கு
  5. வாவ்வ்வ் கோமதி அக்கா, இந்த புறாப் பறவைக்குடும்பப் படங்கள் நீங்கள் ஏற்கனவே போட்டனீங்கள், அவையைத்தான் திரும்பவும் போட்டீங்களோ? இல்ல இவை இந்த வருடமும் இப்படிக் குஞ்சு பொரிச்சிருக்கினமோ...

    என்னா அழகு.. பார்த்துக் கொண்ட்ே, ரசிச்சுக் கொண்டே இருக்கலாம்.. குஞ்சுகளின் கழுத்து மிக மெல்லிசாக, பலம் இல்லாததுபோல இருக்குது பார்க்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      இந்த புறா படம் இந்த வருடம் முட்டையிட்டபோது எடுத்து அனுப்பியது. வருடா வருடம் அடே போகன்வில்லா செடி மறைவில் தான் கூடு கட்டி குஞ்சுபொரித்து போகும்.

      அதன் கழுத்து மெலிதாகதான் இருக்கும். பார்த்துக் கொண்டு ரசித்து கொண்டு இருக்கலாம் என்று தான் மகன் அனுப்பினான்.

      நீக்கு
  6. ஆஆ அவை குயில் எனப்படும் காடைப் பறவைகள்.. இப்படி முட்டை இட்டிருக்கிறதே, அதுவும் நிலத்தில், மரத்தில் கூடு கட்டத் தெரியாத இனம் போலும்.. நல்லவேளை மகன் வீட்டில் பப்பி, பூஸ் ஆரும் இல்லைப்போலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா, காடைப் பறவைகள் தான். இப்படி தரையில் முட்டையிட்டு இருப்பதுதான் எனக்கு பயமாய் இருந்தது. மகன் வீட்டில் செல்லபிராணிகள் இல்லை.
      மரத்தில் கூடு கட்டவேண்டும் என்றால் எத்தனை பெரிய கூடு வைக்க வேண்டும் !அவைகளை குஞ்சு பொரித்து உணவு அளிப்பதே மிகவும் கஷ்டம்.

      நிறைய முட்டை இருக்கே!

      நீக்கு
  7. //இரண்டு மூன்று நாளாகத் தாய்ப்பறவையைக் காணவில்லையாம் . குஞ்சுகள் எப்படி பொரியும் அடைகாக்காமல் என்று கவலைப்பட்டு என்ன செய்வது என்று கூகுளில் தேடிக் கொண்டு இருக்கிறான். //

    ஓ ஆண்டவா.. என்ன இது... இது ஒரு வகை கோழி இனம்தானே, மனிதரைப் பார்த்த பயத்தில் ஓடி ஒளிச்சு விட்டதோ... சில பறவைகளுக்கு அடை காக்கத் தெரியாதெல்லோ... நான் நினைக்கிறேன், வைக்கோல் ஏதும் மேலே மூடி வைத்து, கொஞ்சம் குளிர் இல்லாமல் பாதுகாத்தால், பொரித்துவிடும், இப்போ வெயில் காலம் ஆரம்பித்து விட்டமையால், தன் பாட்டில் பொரித்துவிடும் எனத்தான் நினைக்க்கிறேன், ஆனா பாம்பு ஏதும் வந்து விடுமோ? அங்கு பாம்பு இருக்குதாமோ கோமதி அக்கா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ,நானும் சொன்னேன். ஹலோவின் சமயம் வைக்கோல் கிடைக்கும். மற்ற நேரம் கிடைக்காது. வெயில் நேரம் பாம்பு, தேள் எல்லாம் வரும். அதிலிருந்து முட்டையை காப்பாற்ற வேண்டும் இறைவன்.

      நீக்கு
    2. தேள் குட்டியாய் வீட்டுகுள் வந்து இருக்கிறது. பாப்புகளை வெளியில் போன இடங்களில் பார்த்து இருக்கிறான், போட்டோ எடுத்து அனுப்பி இருக்கிறான். இறைவன் அருளால் வீட்டுக்குள் வராமல் இருக்க வேண்டும்.

      நீக்கு
  8. //போனபதிவில் இடம் பெற்ற பெண் குயில் நலமாக எதிர்க் கோடி வீட்டில் உணவு எடுக்க வந்த போது//

    ஆவ்வ்வ் இன்னும் ஜோடியைக் காணவில்லையே?:) நான் அனுப்பிய குயிலார் இன்னும் வந்து சேரவில்லைப்போலும்.. ஃபிளைட் எல்லாம் டிலே எல்லோ:), அதனாலயாத்தான் இருக்கும்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் அனுப்பிய குயிலார் இன்னும் வந்து சேரவில்லைப்போலும்.. ஃபிளைட் எல்லாம் டிலே எல்லோ:), அதனாலயாத்தான் இருக்கும்:).//

      இருக்கும் இருக்கும்.

      நீக்கு
  9. ஹா ஹா ஹா அவைகளும் தன் குட்டிக் கிட்னியை ஊஸ் பண்ணிக் கஸ்டப்பட்டு எங்கெல்லாம் இடமொதுக்கி கூடு கட்டி முட்டை இட்டு குஞ்சு பொரிக்குது.. நாம் நினைக்கிறோம், பறவைகளுக்கு ஈசி வாழ்க்கை, அழகாக, சுகந்திரமாகப் பறக்கிறதே என, ஆனா அவர் அவர் கஸ்டம் அவரவர்க்குத்தான் புரியும் என்பது உண்மைதான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா, நீங்கள் சொல்வது மிகவும் சரி.இயற்கை சீற்றம், மற்றும் தட்பவெட்ப சூழ்நிலைகள், இதற்கு ஏற்ப பறவைகள் அதற்கேற்ற இடம் தேடி எவ்வளவு தூரம் பறந்து வந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து போகிறது.
      நாம் சொல்லும் வார்த்தை சுதந்திரம் ஆனால் அவை தன் எதிரிகளிடமிருந்து தன்னைக்காத்துக் கொண்டு தன் குஞ்சுகளை பாதுகாக்க அவை படும் பாடு எவ்வளவு!

      அவர் அவர் கஷ்டம் அவர் அவருக்குத்தான் தெரியும் என்பது முற்றிலும் உண்மை அதிரா.
      குருவி படமும் நேற்று எடுத்தது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. அந்தப் பெண் குயில் நலமாக இருப்பது சந்தோஷம் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      பெண்குயில் நலமாக இருப்பதைப்பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.

      நீக்கு
  11. மகன் வீட்டில் மணிப்புறா குடும்பம் மகிழ்ச்சி தருகிறது. பறவைகளுக்கு நம் மேல் அந்த நம்பிக்கை வர கொடுத்து வைத்திருக்க வேண்டும். காணொளியும் கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் பழைய வீட்டில் எலுமிச்சை மரத்தில் இந்த மணிப்புறா கூடு கட்டி போகும்.
      இப்போது இந்த வீட்டில் போகன்வில்லா கொடிக்கு இடையில் கூடு கட்டி குஞ்சு பொரித்து போகிறது. காணொளியும் பார்த்தீர்களா? மகிழ்ச்சி.

      நீக்கு
  12. முட்டையிட்ட தாய்ப்பறவை வராமல் இருக்காதே... அதற்கென்ன ஆச்சோ, பாவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாய்ப்பறவைக்கு ஏதோ துன்பம் . வெளியில் பறந்து போகும் போது எவ்வளவு துன்பங்கள் அவைகளுக்கு அவற்றை வெற்றிகரமாக தாண்டிதான் அவை வாழ வேண்டும்.

      அவற்றின் விடா முயற்சிகள் வாழ்க்கை போராட்டங்கள் தான் எத்தனை எத்தனை!
      அவைகளை இறைவன் காக்க வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. அனைத்தும் அழகான படங்கள். படைப்பதும் காப்பதும் அவன் செயல் - அதே தான் - இன்றைய சூழலில் நாம் அனைவருமே அந்த எண்ணத்தோடு தானே பிரார்த்திக் கொண்டு இருக்கிறோம். நலமே விளைய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
      நன்றாக சொன்னீர்கள் வெங்கட், நாமும்
      இன்றைய சூழலில் நாளை என்ன நட்க்க போகிறது என்ற பயத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இறைவனின் கருணையை வேண்டி பிரார்த்திக் கொண்டு இருக்கிறோம் என்பது உண்மை.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. துல்லியமான படங்கள்....

    அனைத்தும் அழகு மா...😍😍😍


    அசோ தாய் பறவை வரவில்லையா....
    அந்த முட்டைகள் இனி எப்படி பொரியும்...

    கடவுள் காக்கட்டும்...பிரார்த்தனை தான் வழி.. எல்லாம் அவன் அருளில்🙏🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      ஆமாம், பிரார்த்தனை ஒன்றுதான் வழி.
      வேறு எதுவும் செய்யமுடியாது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. மணிப்புறா மனதை கொள்ளை கொள்கிறது...

    உண்வூட்டும் அந்த காணொளி காட்சி ஆகா...!

    பதிலளிநீக்கு
  17. அட... அந்த பெண் குயில்... நீங்கள் காண்பதற்கே நன்றி சொல்ல வந்திருக்கு அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு நிம்மதியை தர வந்து இருப்பதாய் நான் நினைத்தேன், இறைவனுக்கு நன்றி.

      நீக்கு
  18. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
    உணவூட்டும் காணொளி பார்த்தீர்களா மகிழ்ச்சி.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. உங்கள் மனமே உங்கள் மகனுக்கும். கவின்குட்டியும் இப்படிதான் இருப்பார் என நினைக்கிறேன். அவர்கள் எல்லாரும் நலந்தானே அக்கா. அழகான கலர் போகன்வில்லா. அதற்கு அந்த பரிச்சயமானதால்தான் அங்கு வந்து ஒவ்வொரு வருடமும் கூடுகட்டுகிறது. அவர்களுக்கும் அறிவு உண்டுதானே. அழகாக உணவு கொடுக்கிறது வீடியோ காட்சி அருமை.
    அடகடவுளே தாய்பறவை சுகமாக வரவேண்டும். இல்லாவிட்டால் அத்தனை முட்டையும் எப்படி பொரிக்கும். இப்ப உங்கள் மனநிலையே எனக்கும் வந்துவிட்டது. மகனிடம் மறக்காமல் கேளுங்கள் என்னவாயிற்று என்பதை. இயற்கைக்கு மாறாக பொரிக்கவைத்தால் பின் குஞ்சை வளர்த்து பறக்கவிடவேண்டுமே.. கடவுளை கும்பிடவேண்டியதுதான்.
    ஆ..அந்த குயில் வந்ததா. இப்பத்தான் நிம்மதியாய் இருக்கும் உங்களுக்கு. எனக்கும்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
    மகன் குடும்பத்தினர் எல்லோரும் நலம். கவின் குட்டி நலம்.
    அழகான கலர் போகன்வில்லா அதற்கு அங்கு வந்து கூடு வைத்து பழகி விட்டது.
    நீங்கள் சொல்வது போல் அதற்கு அறிவு உண்டு.
    வீடீயோ காட்சி நன்றாக இருக்கா ? உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று பகிர்ந்தேன்.

    இன்னும் வரவில்லை, காலை வெயில் மாலை குளிர் அதனால் தானாகவும் பொரிக்காதாம்.
    இறைவன் விட்டவழி. தினம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன், பறவை வரவில்லை இயற்கை விட்டவழி என்கிறான் பையன்.

    குயில் வந்தது மனதுக்கு நிம்மதி அம்மு.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அம்மு.

    பதிலளிநீக்கு
  21. எல்லாப்படங்களும் மிக அழகாகத் தெளிவாக இருக்கின்றன. உங்கள் மகன் வீட்டில் என்றால் அமெரிக்கா இல்லையா?

    இயற்கையை மனிதன் சீண்டினால் இயற்கை தன் கோபத்தைக் காட்டத்தான் செய்யும். நிகழ்வதே அதற்கு உதாரணம்

    அங்கும் எல்லொரும் நலமுடன் இருக்கிறார்கள் தானே? உங்கள் மகன் இருக்கும் ஊரில் நிலைமை எப்படி உள்ளது? ஷட்டவுன் அங்கும் தானே இல்லையா?

    எல்லோரும் நலமுடன் இருக்கவும், உலகம் விரைவில் முன்பு போல் மாறவும் பிரார்த்தனைகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்
      மகன் வீடு அரிசோனா.நீங்கள் சொல்வது சரிதான்,
      இயற்கையை பாழ்படுத்தினால் விளைவை சந்திக்க தான் வேண்டும்.
      எல்லோரும் நலம் தான். எல்லாம் வீட்டில் இருந்து வேலைபார்க்கிறார்கள்., பேரன் பள்ளி பாடம், கர்னாடக சங்கீதம், மற்றும் தமிழ பாடம் படிக்கிறான்.

      //எல்லோரும் நலமுடன் இருக்கவும், உலகம் விரைவில் முன்பு போல் மாறவும் பிரார்த்தனைகள்.//

      உங்கள் கருத்துக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      நீக்கு
  22. ஹையோ கோமதிக்கா என்ன அழகு என்ன அழகு மணிப்புறா...குஞ்சுகள் தெரிகின்றனவே...அந்த சூரிய வெளிச்சத்தில் மணிப்புறா நன்றகத் தெரிகிறாள். செல்லம் என்று கொஞ்ச வேண்டும் போல் இருக்கு...என்ன ஒரு இன்னசென்ஸ் முகத்தில் அழகு இல்லையா?

    செல்லங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இயற்கை நமக்கு எத்தனையோ கோடி இன்பம் தந்திருக்கிறது ஆனால் நாம் தான் அதைப் பார்த்துக் களிக்காமல் எதை எதையோ செய்து கொண்டிருக்கிறோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      பறவைகள் அழகுதான். சூரியவெளிச்சத்தில் எடுத்தபடம் பிடித்து இருக்கா மகிழ்ச்சி.குஞ்சுகளை அவை அம்மாவிடம் உணவு வாங்குவதை எல்லாம் நாள் முழுக்க பார்த்து கொண்டு இருக்கலாம்.

      இயற்கையை ரசிக்க கண் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லி களிக்க வேண்டியதுதான் முடிந்த போதெல்லாம்.

      நீக்கு
  23. இரு குஞ்சுகளும் நன்றாகத் தெரிகின்றன அக்கா. தாய் வெளியே போயிருக்கே அந்தப் படம்...வளர்ந்த குஞ்சுகள் ஆஹா...
    //"அவங்க அம்மாவுக்குக் காட்ட வேண்டுமாம் நம்மை. அதுதான் நம்மை போட்டோ புடிக்கிறார் அண்ணன் " என்று பேசிக் கொள்கிறதோ!//

    ஹா ஹா ஹா பின்னே பின்னே....புறாக்குஞ்சே....அம்மாவுக்குக் காட்டினால்தானே அம்மா இங்குஎல்லோருக்கும் உங்களைக் காட்டி எல்லாரும் மகிழ்வோம்...எங்கள் வாழ்த்துகளையும் அன்பையும் சொல்லிடுங்க அக்கா மணிப்புறாக்களுக்கு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹா ஹா ஹா பின்னே பின்னே....புறாக்குஞ்சே....அம்மாவுக்குக் காட்டினால்தானே அம்மா இங்குஎல்லோருக்கும் உங்களைக் காட்டி எல்லாரும் மகிழ்வோம்...எங்கள் வாழ்த்துகளையும் அன்பையும் சொல்லிடுங்க அக்கா மணிப்புறாக்களுக்கு!!//

      சொல்லி விடுகிறேன். வாழ்த்தும் , அன்பும் அவைகளை வாழ வைக்கும்.

      நீக்கு
  24. ரொம்ப அழகாக எடுத்திருக்கிறார் உங்கள் மகன்...அவருக்கும் வாழ்த்துகள் சொல்லிடுங்க. க்ளோசப்பில் எடுக்கும் அளவு கிட்டவோ? அல்லது கேமரா ஜூம் செய்து எடுக்கும் அளவான கேமரா இல்லையாக்கா..

    காணொளியும் கூட அழகாக எடுத்திருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகன்வில்லா கொடியை தூணில் ஏற்றி இருக்கிறான் நாம் தொடும் தூரம் தான்.
      தள்ளி நின்றுதான் எடுக்கிறான். காமிராவில் ஜூம் செய்து தான் எடுத்து இருப்பான்.
      காணொளி எனக்கும் பிடித்தது.
      மகனுக்கு உங்கள் வாழ்த்தை சொல்லிவிடுகிறேன் கீதா.

      நீக்கு
    2. மகனிடம் உங்கள் வாழ்த்தை சொல்லிவிடுகிறேன் கீதா.

      நீக்கு
  25. கோயல் ஆஹா செம அழகு. அதுவும் முட்டை போட்டிருக்கா..அதுக்குத் தெரியும் இங்கு போட்டால் நாம் உலகம் முழுவதும் தெரிவோம் கோமதிப்பாட்டி மூலம் என்று!!!!!!!!!!!!!!!!ஃபேமஸ் ஆவோம் என்று..ஹா ஹா ஹா

    மகன் முட்டையிட்டு இருப்பதைக் காட்டியவுடன் அதன் குஞ்சுகள் பொரிந்தவுடன் காட்டு, உணவு கொடுப்பதைக் காட்டு என்று சொல்லிக் கொண்டு இருந்தேன். //

    நினைத்தேன்..நீங்க சொல்லிய்ருப்பீங்கனு....உங்கள் மகனும் அழகாகப் படம் எடுத்து அனுப்புகிறார் பொறுமையாக...அதற்கே பாராட்ட வேண்டும்.

    இந்த கல் இடுக்கில் இந்தப் பறவை போவதைப் பார்த்துத் தான் கண்டு பிடித்து இருக்கிறான் மகன், பறவை அங்கு முட்டை இட்டு இருப்பதை.

    இரண்டு மூன்று நாளாகத் தாய்ப்பறவையைக் காணவில்லையாம் . குஞ்சுகள் எப்படி பொரியும் அடைகாக்காமல் என்று கவலைப்பட்டு என்ன செய்வது என்று கூகுளில் தேடிக் கொண்டு இருக்கிறான். இங்குபேட்டரில் வைத்து பொரிய வைப்பது தான் வழி என்று இருக்காம். 21 நாளில் பொரிந்து விடுமாம் இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லையாம். தாய்ப் பறவைக்கு ஏதாவது ஊறு நேர்ந்து இருக்குமோ என்று எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது.

    நம் வீட்டுக்கு வந்தவை நல்லபடியாக வெளியே போனால் நமக்கும் மகிழ்ச்சி.

    இப்படி கீழே முட்டை இட்டு இருக்கே அதற்கு ஏதாவது ஆபத்து வருமோ என்று நினைத்தேன் ., இறைவன் கணக்கு நமக்குப் புரிவதில்லை,//

    உண்மை அக்கா. இப்போ என்னாச்சுன்னு சொல்லுங்க...முட்டை பொரிந்ததா இல்லையா...
    உங்கள் மகனும் உங்கள் இருவரைப் போலவே...தாய் தந்தை 8 அடி என்றால் மகன் பல அடிகள் பாய்கிறார் கண்டிபபக பேரனும் அவ்வழியே வருவார். இப்படியான சூழல் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோயல் ஆஹா செம அழகு. அதுவும் முட்டை போட்டிருக்கா..அதுக்குத் தெரியும் இங்கு போட்டால் நாம் உலகம் முழுவதும் தெரிவோம் கோமதிப்பாட்டி மூலம் என்று!!!!!!!!!!!!!!!!ஃபேமஸ் ஆவோம் என்று..ஹா ஹா ஹா//

      கோமதி பாட்டிக்கு அதன் குஞ்சுகளை பார்க்க முடியாத ஏமாற்றம்.
      பொட்டை பொரியவில்லை இறைவன் விட்டவழி.
      ஏஞ்சல் சொல்வது போல் கேட்கலாம் .

      நீக்கு
  26. குயிலக்காவுக்கு அவ துணையை தேம்ஸ்லில் பார்த்ததும் சந்தோஷம இருந்திருக்கும்!!!!

    கடைசிப் படமும் அழகு குருவி எட்டிப் பார்ப்பது..நீங்களும் ஹப்பா தேடி தேடிப் படம் எடுக்கறீங்க கோமதிக்கா...

    வாழ்த்துகள் பாராட்டுகள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குயிலக்காவுக்கு அவ துணையை தேம்ஸ்லில் பார்த்ததும் சந்தோஷம இருந்திருக்கும்!!!!//

      இருக்கும் இருக்கும்.

      உணவு கொடுப்பதை எடுக்க காத்து இருக்கிறேன். அது உள்ளே போய் வெளியே பற்க்க அந்த பக்கம் இந்த பக்கம் பார்க்கும் காட்சிதான் இப்போது கிடைக்கிறது.
      உங்கள் கருத்துக்கள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அனைத்துக்கும் நன்றி நன்றி.

      நீக்கு
  27. அக்கா மணிப்புறாக்கள் குடும்பம் அழகு .ஒவ்வொரு படமும் மனசை கொள்ளகொள்ளுது .எங்க வீட்டுக்கும் ரெண்டு பேர் வராங்க .ஒரு புறா கெஞ்சியே கேட்கும் உணவு :)அணிலும் பயமில்லாம வருது .
    அந்த QUAIL முட்டைகள் பற்றி அங்கே வைல்ட் லைப் SANCTUARY இருந்தாலோ அல்லது RSPB போல் இருந்தாலோ விசாரிக்க சொல்லுங்க .உடனே இங்க்யூபேட்டரில் வைப்பது நலம் .குயிலம்மா மீண்டும் வருகை தந்தது மகிழ்ச்சி 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      உங்களுக்கு படங்கள் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      கெஞ்சி உணவு கேட்கும் புறாக்களையும் அணிலையும் படம் எடுத்து போடுங்கள் ஏஞ்சல்.

      //முட்டைகள் பற்றி அங்கே வைல்ட் லைப் SANCTUARY இருந்தாலோ அல்லது RSPB போல் இருந்தாலோ விசாரிக்க சொல்லுங்க .உடனே இங்க்யூபேட்டரில் வைப்பது நலம் //

      கேட்டு கொண்டு இருக்கிறான், நாளை புல்வெளிகளை தோட்டத்தில் சுத்தம் செய்ய ஆள் வர போகிறார்கள் அவர்களிடம் கொடுத்துவிட நினைத்து இருக்கிறான்.
      மகன் படங்களை அனுப்பி நாள் ஆகி விட்டது எனக்கு பதிவு போட நேற்றுதான் நேரம் கிடைத்தது. 21 நாளில் குஞ்சு பொரித்துவிடும் அதற்கு நல்ல வெட்பம் வேண்டுமாம்.

      உங்கள் யோசனைகளை மகனிடம் சொல்கிறேன், காலமும் நேரமும் சரியாக இருந்தால் குஞ்சுகள் நலமாகும்.

      நீக்கு
  28. E அன்பு கோமதி, எப்பவும் போலக் கடைசியாக வந்திருக்கிறேன்.
    எத்தனை அருமையான பதிவு மா. அந்த போகன் வில்லாக்
    கலரை சொல்வதா.
    அன்பு மகனின் படம் எடுக்கும் நேர்த்தியைச் சொல்வதா.
    அணு அணுவாக எடுத்திருக்கிறாரே.
    மணிப்புறக்களைப் பார்த்ததும் புத்தம் புது மணிப்புறா நானே தான் பாடல் நினைவுக்கு
    வந்தது.
    காடை முட்டைகளுக்கு இறைவன் என்ன எழுதிவைத்திருக்கிறாரோ.
    இறைவன் காப்பாற்றட்டும். உணவூட்டும் காணொளி மிக அருமை.
    மனம் நெகிழவைக்கும் பதிவு.
    அன்பு கோமதி வாழ்க வளமுடன்.,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
      எப்போ நேரம் கிடைக்கிறதோ அப்போ படிக்கலாம் அக்கா.

      படங்களும், பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      //மணிப்புறக்களைப் பார்த்ததும் புத்தம் புது மணிப்புறா நானே தான் பாடல் நினைவுக்கு வநதது//

      அந்த பாடல் எனக்கும் பிடிக்கும் அக்கா.

      //காடை முட்டைகளுக்கு இறைவன் என்ன எழுதிவைத்திருக்கிறாரோ.
      இறைவன் காப்பாற்றட்டும்//

      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான் அவர் என்ன எழுதி வைத்து இருக்கிறாரோ அப்படித்தான் நடக்கும்.

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

      நீக்கு
  29. இப்படியெல்லாம் அமைவது அபூர்வம்...

    பறவைகள் தங்களது நுண்ணுணர்வால் தங்களைப் புரிந்து கொண்டிருக்கின்றன..

    இவ்விதம் அமைவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

    அழகான படங்கள்... இனிமையான பதிவு...

    கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!.. என்பது மனிதர்களுடன் மட்டுமல்ல...

    சிற்றுயிர்களுடனும் தான்!...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //பறவைகள் தங்களது நுண்ணுணர்வால் தங்களைப் புரிந்து கொண்டிருக்கின்றன..

      இவ்விதம் அமைவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்...//
      கேட்க மகிழ்ச்சி.

      கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!.. என்பது மனிதர்களுடன் மட்டுமல்ல...

      சிற்றுயிர்களுடனும் தான்!...

      அன்பான வார்த்தைகளுக்கு நன்றி

      அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  30. படங்கள் அருமை. அது தரும் எண்ணங்கள் நல்லனவாக இருக்கின்றன.

    அதிக முட்டையிட்டாலும் இயற்கை, அதனைச் சமன் செய்துவிடும் (கடல் ஆமை கரையில் 300 முட்டைகள் இட்டு மூடிவைத்தாலும் அதில் 20 சதவிகிதம்தான் கடலுக்குள் சென்று சேரும். அதுபோல).

    நீங்கள் எல்லோரும் எழுதுவதைப் பார்த்து, நானும் இங்கு எங்கள் பால்கனியில் (4வது மாடி/18 மாடி கட்டிடத்தில்) பெரிய ஸ்டூல் வைத்து அதன் மேல் பாத்திரத்தில் தண்ணீர், அருகில் பிஸ்கட் போன்றவைகள் வைத்தாலும் காக்கை, பருந்து, புறா போன்றவைகள் வருவதில்லை. பருந்து ஒரு நாள் பால்கனி கம்பிமேல் உட்கார்ந்திருந்தது. காக்கையும் அவ்வப்போது காண்கிறேன். (எங்கள் பால்கனியில்). எப்படி அவைகளுக்கு நாங்கள் தினமும் உணவு தருவோம் என்பதை வெளிப்படுத்துவது?

    பஹ்ரைனில் ஆங்காங்கே இடங்கள் இருக்கும். அங்கு சென்று தானியங்கள் நிறைய போட்டுவிட்டுவருவோம். நிறைய புறாக்கள் இருந்தாலும் பெரும்பாலும் அவை பறந்துவிடாது. இங்க, ஏகப்பட்ட பருந்துகள், காக்கைகள் புறாக்கள் இருந்தாலும் எங்க வீட்டு பால்கனிக்கு வரலை என்பது எனக்கு குறைதான் (அதை ஒட்டி பறக்கும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன் , வாழ்க வளமுடன்

      படங்கள் அது தரும் எண்ணங்கள் நல்லதா? மகிழ்ச்சி தமிழன்.

      //அதிக முட்டையிட்டாலும் இயற்கை, அதனைச் சமன் செய்துவிடும் (கடல் ஆமை கரையில் 300 முட்டைகள் இட்டு மூடிவைத்தாலும் அதில் 20 சதவிகிதம்தான் கடலுக்குள் சென்று சேரும். அதுபோல).//

      நீங்கள் சொல்வது சரிதான்.

      //பெரிய ஸ்டூல் வைத்து அதன் மேல் பாத்திரத்தில் தண்ணீர், அருகில் பிஸ்கட் போன்றவைகள் வைத்தாலும் காக்கை, பருந்து, புறா போன்றவைகள் வருவதில்லை. பருந்து ஒரு நாள் பால்கனி கம்பிமேல் உட்கார்ந்திருந்தது. காக்கையும் அவ்வப்போது காண்கிறேன். (எங்கள் பால்கனியில்). எப்படி அவைகளுக்கு நாங்கள் தினமும் உணவு தருவோம் என்பதை வெளிப்படுத்துவது?//

      மனம் தளராமல் தொடர்ந்து வையுங்கள் ஒரு நாள் வரும் அதற்கு பயம் போய் பாதுகாப்பு உணர்வு வந்தவுடன் வரும். இப்போது எறும்புகள் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கும்.

      முன்பு நீங்கள் சொல்வது போல் பள்ளிவாசலுக்கு போய் புறாக்களுக்கு தானியங்கள் போட்டு வருவார்கள்.
      அங்குள்ள புறாக்கள் பயமில்லாமல் வந்து சாப்பிடும்.

      வட நாட்டில் ஒரு பெண் இப்போதும் தானியங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டு வெகு தூரம் போய் பறவைகளுக்கு வைத்து வருகிறார்.

      வெகு சீக்கீரம் பறவைகள் உங்கள் பால்கனி நோக்கி வரும். வாழ்த்துக்கள்.


      நீக்கு
  31. எல்லா விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நம்மைப்போல இன்ப துன்பங்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நெல்லைத்தமிழன், எல்லா விலங்குகளுக்கும் , பறவைகளுக்கும், சகல ஜீவராசிகளுக்கும் இன்ப, துனபங்கள் உண்டு.
      உங்கள் விரிவான கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  32. சிட்டுக்கள் அனைத்தும் அழகு. அவைகள் நலமாக வாழட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி .

      நீக்கு
  33. அழகான படங்கள். இன்னொரு பறவைக்கும் ஊறு இல்லாமல் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் நல்லபடியாக வளர்ந்து பறக்கப் பிரார்த்தனைகள். முன்னொரு சமயம் இம்மாதிரிப் புறாக்குஞ்சுகளைத் தாயும், தந்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துக்கொள்வதை நானும் படம் எடுத்திருந்தேன். ஆனால் அது தில்லியில் ஓர்ப்படி வீட்டுச் சமையலறையில். கடவுள் கிருபையில் விலங்குகள், பறவையினம் ஆகியவைக்குத் தொற்று ஒன்றும் இல்லாமல் நல்லபடியாக இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.
      தில்லியில் ஓர்ப்படி வீட்டு ஜன்னலில் புறாக்குஞ்சுகளுக்கு உணவு கொடுப்பதை சொன்ன நினைவு இருக்கிறது.

      //கடவுள் கிருபையில் விலங்குகள், பறவையினம் ஆகியவைக்குத் தொற்று ஒன்றும் இல்லாமல் நல்லபடியாக இருக்கப் பிரார்த்தனைகள்.//

      ஆமாம் அவை நன்றாக இருக்கட்டும் நாம் பிரார்த்தனைகள் செய்து கொள்வோம்.

      உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      நீக்கு
  34. படங்கள் வெகு அழகு. நான் எப்படி இத்தனை நாட்கள் பார்க்கவில்லை என்று தெரியவில்லை. 
    குஞ்சுகள் சிறியதாக இருக்கும் பொழுது அந்த கூட்டை நெருங்கக்  கூடாது. தன்  குஞ்சுகளுக்கு ஏதோ ஆபத்து என்று எண்ணி, தாய்ப்பறவை தாக்கும் என்பார் எங்கள் அம்மா. காமிராவில் ஜும் லென்ஸ் உபயோகித்து படமெடுத்தார்களா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      குஞ்சுகள் சிறியாதாக இருக்கும் பொழுது பக்கத்தில் எந்த பறவையும் பறக்க கூடாது கத்தி காதை பிளக்கும் குருவிகள்.
      மணிப்புறா அமைதியானது அதற்கு உள் உணர்வு உண்டு நம்மை தொந்திரவு செய்ய மாட்டான் என்று. வருடாவருடம் வந்து குஞ்ச் பொரித்து போகிறது.
      காமிராவில் ஜூம் செய்து எடுத்து இருப்பான் என்று தான் நினைக்கிறேன்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  35. மணிப்புறாக் குடும்பத்தைப் பொறுமையாகப் படமாக்கியுள்ளீர்கள்.

    Quail பறவை திரும்பி வந்ததா? மகன் தகவல் சொன்னாரா?

    பெண்குயிலைப் பார்த்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் ராமலக்ஷ்க்ஷ்மி, வாழ்க வளமுடன்
    மணிப்புறா மகன் எடுத்த படங்கள்.
    Quail பறவை திரும்பிவரவில்லை முட்டைகள் அப்படியே இருக்கிறது.
    பெண் குயில் நலமாக இருப்பது மகிழ்ச்சி.
    உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு