வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் உள்ள மீனாட்சி, சொக்கநாதருக்கு திருமணம். மதுரை எஸ் .எஸ் .காலனியில் உள்ள பிள்ளையார் கோவில்
திருமணம்பார்த்து அங்கு கொடுத்த நீர் மோர் அருந்தி மஞ்சள் , குங்குமம் வளையல் மஞ்சள் கயிறு பிரசாதம் பெற்று எல்லோரும் நலமாக இருக்க வேண்டி வந்தேன்.
கன்னி உஞ்சல்
நாங்கள் கொஞ்சம் தாமதம் ,அதனால் ஊஞ்சல் ஆடி முடித்து மாப்பிள்ளை பெண் மணமேடைக்கு போய் அமர்ந்து விட்டார்கள்.
சடங்குகள் விரைவாக நடந்தது
கல்யாண சீர் வரிசை
திருமாங்கல்யம் கட்டுவதை வீடீயோ எடுத்தேன் படம் எடுக்க மறந்து விட்டேன்.
வீடியோவை டிரிம் செய்தேன் அப்படியும் வலை ஏற மறுக்கிறது.
படத்தை பெரிது செய்து பாருங்கள் மலர் சுற்றிய மாங்கல்யம் தெரியும்.
(அலைபேசியில் எடுத்த படங்கள் )
மூலவர் மீனாட்சி சொக்கநாதர்
பெருமாள் தங்கையின் திருமணத்திற்கு மனைவியுடன் அலங்காரமாய்
திருமணம் முடிந்து வெளியே வந்தால் நீர் மோர் கொடுத்தார்கள் அதற்கு வரிசை
வேப்ப மர நிழலில் கோவில், கோவிலுக்குள் உள்ள அரசமரமும் தெரிகிறது
திருமணம் நடக்கும் போது பார்க்க வந்த சுமங்கலி பெண்கள் புதுத்தாலிக் கயிறு கட்டிக் கொள்ள கோவிலில் கொடுக்கப்பட்டது. அட்சதை அரிசி வழங்கினர். திருமணம் நடக்கும் போது நம் தலையில் போட்டுக் கொள்ள வேண்டும், அப்புறம் நம் குழந்தைகள், நம்மை விட சின்னவர்களுக்கு போட்டு ஆசீர்வாதம் செய்யுங்கள் , இறைவனுக்கு போடாதீர்கள் என்று அறிவுப்பு செய்தார்கள்.
வீட்டுக்கு வந்து கூட்டாஞ்சோறும் அப்பளமும், வடகமும் வைத்து சாப்பிட்டோம்.
சிறுபருப்பு பாயாசம்
மீனாட்சி திருமணத்திற்கு வீட்டில் பிரசாதம், சிறு விருந்து.
மதுரை மீனாட்சி- சொக்கனாதர் திருமணத்தை பார்க்க வந்தவர்களுக்கு சேதுபதி உயர்நிலை பள்ளியில் திருமணவிருந்து நடக்கும்.
அறுசுவை விருந்து அளிப்பார்கள் என்று சொல்வார்கள். யார் வேண்டுமென்றாலும் விருந்து சமைக்க உதவிக்கு போகலாம்.
ஐம்பதாயிரம் பேர்களுக்கு விருந்து நடைபெறும் அதனால் நிறைய பேர் உதவி தேவைப்படும்.
எங்கள் வீட்டிலும் சிறு விருந்து. தங்கள் வீட்டில் திருமணம் நடப்பது போல் ஒவ்வொரு வீட்டிலும் விருந்தினர் வருகை இருக்கும் . எங்கள் வீட்டிலும் இரண்டு விருந்தினர். அவர்களுடன் உண்டு மகிழ்ந்தோம்.
அன்னை மீனாட்சி திருமணம் முடிந்து இரவு வீதி வலம் வருவதை சங்கரா தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தோம். சுந்தரரேஸ்வரர் தங்க அம்பாரியில் பிரியவிடையோடு யானை மீது வந்தார்.மீனாட்சி ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் நான்கு மாசி வீதிகளில் வலம் வந்த காட்சியை கண்டு களித்தோம். நீங்களும் பார்த்து மகிழ்ந்து இருப்பீர்கள்.
மீனாட்சி திருக்கல்யாணத்தை தரிசித்தவர்களுக்கு அன்னை சகல நன்மைகளையும் தர வேண்டும்.!
வாழ்க வளமுடன்.
திருமண நிகழ்வுகளை அழகிய படங்களுடன் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி சகோ.
பதிலளிநீக்குவாழ்க வையகம்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
மதுரைத்திருவிழா களைகட்டி விட்டது. மதுரையே உற்சாக வெள்ளத்தில் மிதக்கும் நேரம் இது.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீக்குமதுரை மக்கள் உற்சாகம் வெள்ளத்தில் மிதக்கும் நேரம் தான். ஆனால் இந்த தேர்தல் கெடு பிடிகளால் கொஞ்சம் கஷ்டபடுகிறார்கள்.
நீர் மோர், கோடைக்கு விசிறி, அன்னதானம் எல்லாம் தேர் திருவிழா சமயம் நடக்கும் அது எல்லாம் தடை செய்யப்பட்டு இருக்காம்.
அங்கொரு கோவிலிலும் திருமண வைபவமா? சிறப்பு. படங்கள் நன்றாய் வந்திருக்கின்றன. முழுக்கோவிலையும் சற்று தூரத்திலிருந்து ஒரு படம் எடுத்துக் போட்டிருக்கலாமோ!
பதிலளிநீக்குநாங்கள் போகும் சின்ன கோவில்களில் எல்லாம் மீனாட்சி கல்யாணங்கள் ஒரே நேரத்தில் நடக்கிறது.
நீக்குமுழுக் கோவிலையும் படம் எடுக்க முடியாது. முன்பு எடுக்க முயற்சி செய்து இருக்கிறேன். எதிரே உள்ள வீட்டு மாடியில் இருந்து எடுத்தால் எடுக்கலாம் .
நம் பழைய வீட்டில் உள்ளது போல் ஆளோடியில் கோவில் அமைந்து இருப்பது போல் இருக்கும்.பக்கத்தில் எதிரில் வீடுகள். முன்பு அரசமரத்தின் அடியில் பிள்ளையார் இருந்து இருப்பார் போலும். அப்புறம் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒவ்வொரு தெய்வமும் வைத்து வழிபட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
தூரத்திலிருந்து எடுத்த படம் தான் முதல் படம்.
மதுரை மக்கள் தம் இல்ல விசேஷம் போல ஒவ்வொருவர் வீட்டிலும் திருமண விருந்து சமைத்துக் கொண்டாடுவது சிறப்பு. சேதுபதி ஸ்கூல் திருமண விருந்து விஷயம் எனக்குப் புதிது.
பதிலளிநீக்குமதுரை மக்கள், மதுரை கோவில்கள் எல்லாம் மீனாட்சி திருமணத்தை கொண்டாடி
நீக்குவிருந்து வைத்து மகிழ்கிறார்கள்.
திருமண விருந்துக்கு காய் வெட்டி கொடுக்க என் மருமகளின் அம்மா வருடா வருடம் போவார்கள்.
அதை அருட்பணியாக செய்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஓ சேதுபதி ஸ்கூலில் சாப்பாடு எல்லாம் உண்டா. அட!! என்ன ஒரு சேவை!
நீக்குஅருமையா இருக்கு எல்லாமே...கோமதிக்கா
கீதா
அருமையான படங்களுடன் விழாவின் நிகழ்வுகள் சிறப்பு அம்மா... நன்றி...
பதிலளிநீக்குவணக்கம் தனபாலன் , வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
வீடியோவை இரு பகுதியாக பிரித்து முயன்று பாருங்கள் அம்மா...
பதிலளிநீக்குவீடியோ மிகவும் சிறிது. ஐ போனிலிருந்து முகநூலில் உடனே ஏறி விடுகிறது., மெயிலுக்கு ஏறி விடுகிறது.
நீக்குவலைத்தளத்தில் தான் ஏறமாட்டேன் என்கிறது தனபாலன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மீனாட்சி கல்யாணம் தொலைக் காட்சியில் பார்த்தேன் வெப்பம் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே சாமரம் வீசி சிலர் தொண்டாற்றியதே மனதில் நின்றது
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
நீக்குதிருவிழா நடக்கும் இடங்களில் சாமரம் வீசுவதை ஒரு தொண்டாக செய்து வரும் முதியவர் எப்போதும் வியக்க வைப்பார்.
இப்போது இளைஞர்களும் அந்த தொண்டில் ஈடுபட்டு இருப்பது மனது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் அத்தனையும் மிக அழகு கோமதிக்கா.
பதிலளிநீக்குமதுரை முழுவதுமே கோலாகலமாகத்தான் இருக்கும் இல்லையா? சூப்பர் என்ன ஒரு மகிழ்ச்சியான இடம்!!!
இப்படி எல்லாம் இருந்தால் ஊரே எப்போதும் களைகட்டித்தான் இருக்கும் எல்லோருக்கும் மனசும் சந்தோஷமாக இருக்கும். நான் கோயில் சுற்றி இருக்கும் வீதியில் நடந்திருக்கிறேன். அதுவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
தங்கள் வீட்டு நிகழ்வு போல என்ன அருமை.
இப்படித்தான் எங்கள் ஊர்த் தேரோட்டம் இன்று. அங்கும் இருந்தவரை எங்கள் வீட்டில் விருந்தாகத்தான் இருக்கும்.
பகிர்விற்கு மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
நீக்குமதுரை முழுவதும் கோலாகலம்தான்.
உங்கள் ஊர்த் தேரோட்டம் நினைவு வந்து விட்டதா/
தேரோட்டம் அன்று எல்லோர் வீட்டிலும் விருந்து உண்டு. யார் வந்தாலும் சாப்பாடு கொடுத்து உபசரிப்பார்கள்.
விழாக்கள் எல்லாம் சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கு உற்சாகம் தருவதற்குதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
சைவ வைணவ சமயத்தினர் அனைவருமே மீனாக்ஷியைக் கொண்டாடிக் களிக்க வேண்டும்...
பதிலளிநீக்குஏனெனில் அவள் தான் இந்த மண்ணுக்கு சொந்தக்காரி...
நாற்பதாண்டுகளுக்கு முன் யார் யாரோ எவர் எவரோ சொல்லியதைக் கேட்டு ஏமாளிகளாகிப் போனோம்....
அன்றைக்குக் கொஞ்சம் சிந்தித்திருந்தால்
இன்றைக்குச் சி சங்கடங்களைத் தவிர்த்திருக்கலாம்...
தெற்கேயிருந்து திசை எல்லாம் வென்று
வடக்கே படை நடாத்திய தமிழ்க்குல வீராங்கனை மீனாக்ஷி....
அதொன்றுக்காகவே
அவளைக் கொண்டாடுவது நமது கடமை..
அவள் ஆண்ட மண் இது என்பதை மறந்து போனார்கள்....
ஆடடா.. நீ ஆடு!... என்று விட்டு வைத்திருக்கிறாள்..
இமைப்பொழுதில் சூலி என அவள் விழித்து நோக்கினால் பதர்கள் எத்திசைக்குப் பறந்து போகுமோ.. தெரியாது...
அழகான படங்களும் தகவலும் அருமை...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//சைவ வைணவ சமயத்தினர் அனைவருமே மீனாக்ஷியைக் கொண்டாடிக் களிக்க வேண்டும்...//
அப்படித்தான் கொண்டாடிக் களிக்கிறார்கள். நாளை முதல் அவள் அண்ணனுக்கு திருவிழா.
இரண்டையும் மக்கள் வசதிக்காக இணைத்தார் திருமலை நாயக்கர் மன்னர். அவர் வாழ்க!
ராஜமாதங்கி சியாமளா தேவி அல்லவா!
அவள் நினைத்தால் எல்லாம் நடக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
மதுரை மணக்கிறது. அருள் ஆசி தவழ்கிறது. அதுவும் தேரோட்டமும் தேர்தலும் ஒரே நாளைப் பங்கிட்டுக் கொண்ட பொழுது வழி வழி வந்த பாரதத்தின் எதிர்கால உன்னதம் அப்பொழுதே நிச்சயிக்கப் பட்டதாகப் பெருமை கிளர்ந்தது.
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
நீக்குநீங்கள் சொன்னது போல மதுரை மணக்கிறது.தேரோட்டமும் தேர்தலும் நல்லபடியாக நிறைவு பெற்றது. கள்ளழகர் பச்சைபட்டு அணிந்து வைகை ஆற்றில் இறங்கி விட்டார்.
பசுமை நிலைக்கும். விவசாயம் செழிக்கும். அது போதும்.
பாரதத்தின் எதிர்காலம் நல்லதாக இருக்க அருள்புரிய வேண்டும் .நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
புகைப்படங்கள் எல்லாம் மிகவும் அழகு!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அம்மையப்பன் திருமணத்தில் எங்களையும் கலந்துக்கொள்ள வைத்ததற்கு நன்றி
பதிலளிநீக்குவணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
மிக மிக மகிழ்ச்சி கோமதி மா. மீனாட்சி அம்மா நம் தாய்.
பதிலளிநீக்குஎன் பாட்டி கூடலழகர், மீனாட்சி அம்மன் கோவில் இதை விட மாட்டார்.
அதுவும் சென்ட்ரல் பஸ் நிலைத்திலிருந்து நேரே அம்மாவைப் பார்த்துதான் நடை.எத்தனை பெரிய யானைக் கொட்டாரம்.
அப்போதும் கூட்டம் அலைமோதும். ஆனால் சங்கடமே தெரியாது.
இப்போது நீங்கள் பதிந்திருக்கும் படங்கள் அனைத்தும் மிக அருமை.
கண்ணைப் பறிக்கும் வண்ணம். அருள் பொங்கும்
அம்மை அப்பன். மணம் பரப்பும் மல்லிகை அலங்காரம்.
திருமாலும் தேவியும்.
சொல்ல முடியாத மகிழ்ச்சி.
66இல் கடைசியாக பார்த்தது. வண்டி வண்டியாக மக்கள் சுற்றி இருக்கும் ஊர்களிலிருந்து
எங்கள் வீட்டு வழியாகப் போவார்கள்.
சித்ரா பவுர்ணமி கழித்து எதிர்சேவையும் முடிந்து
பீப்பி சத்தமும்,சந்தோஷ ஆரவாரமுமாகத் திரும்புவார்கள்.
மதுரையைத் தவிர வேறெங்கும் பார்த்ததில்லை. மனம் நிறை
மகிழ்ச்சியைக் கொடுத்ததற்கு நன்றி மா.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குமதுரை மீனாட்சி கல்யாணம், அழகர் எதிர்சேவை பார்க்க அலைமோதும் கூட்டம்
பார்க்க பார்க்க பரவசம்.
மலரும் நினைவுகளில் மூழ்கி விட்டீர்களா?
மகிழ்ச்சி.
மதுரை மீனாட்சி கல்யாண நேரத்தில் சுற்றி இருக்கும் அனைத்து கோவில்களிலும் அன்னையின் திருமணம் நடைபெறும் .
எல்லா குழந்தைகள் கையிலும் பீப்பி , காத்தாடி, பாலூன் என்று ஒரே உற்சாகம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.