புதன், 6 டிசம்பர், 2017

இயற்கையை அறிவோம் (படித்ததில் பிடித்தது)திரு. என். கணேசன் அவர்கள் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள்,தன்னம்பிக்கைக் கட்டுரைகள் எழுதி உள்ளார். ஆழ்மனத்தின் அற்புத சக்திகள்,  வாழ்ந்து படிக்கும் பாடங்கள் என்று நிறைய எழுதி இருக்கிறார். புத்தகங்கள் போட்டு இருக்கிறார். ஆங்கிலத்திலும், தமிழிலும் வலைத்தளம் வைத்து இருக்கிறார்.இவர் பதிவுகள் எல்லாம் நன்றாக இருக்கிறது,  அதில் படித்ததில் பிடித்ததை இங்கு பகிர்ந்து இருக்கிறேன். இந்த காணொளி பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன், என்று காணொளியின்  நிறைவில் சொல்லி இருந்தார். அதனால்  இங்கு பகிர்ந்தேன்.அவர் சொல்வதைக்  கேட்கும்போது நன்றாக இருக்கிறது, ஆனால்

அந்த குழந்தையின் பக்குவத்தில் ஆனந்தமாய்  இருப்போமா  என்பதே நம்முள் கேள்வி. தோல்வியை, துயரத்தைத் தாங்கும் மனவலிமை, மீண்டும் உயிர்த்தெழும் தன்னம்பிக்கை இருந்தால் அவர் சொல்வது சாத்தியம்.  நடப்பது எல்லாம் கடவுள் செயல் என்றாலும் துவளாமல்இருக்கலாம்.மார்கழி வரப்போகிறது 'மார்கழியில் ஆன்மீகமும் ,ஆரோக்கியமும்,'  என்ற கட்டுரை.

ஆன்மீகத்தையும், ஆரோக்கியத்தையும் வளர்க்கும்  மார்கழி மாதவழிபாட்டில் நாமும் ஈடுபட்டு இரட்டைப் பலன் அடைவோம் என்கிறார்.

"உடல்நலம் தரும் விரல் முத்திரைகள்" என்ற  பதிவு செயல்முறை விளக்கங்களுடன் இருக்கிறது.மருந்துகள் இன்றி, பக்கவிளைவுகள் இன்றி  இருப்பதால்  உடல் ஆரோக்கியத்திற்கு செய்து பார்க்கலாம்."ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?" இந்த பதிவில் வரும் கடைசி வார்த்தை மிகவும் பிடித்தது:-   //நமது ஆறாத காயங்களின் வலியும், நமது பொருமல்களும் நம்மை காயப்படுத்தியவர்களை எந்த விதத்திலும்  பாதித்து விடுவதில்லை. மாறாக நம் மகிழ்ச்சியைத் தான் குலைத்து விடுகிறது என்பதையும் மறந்து விடாதீர்கள். உண்மையாகவே  இதெல்லாம் புரியும் போது அதுவரை ஆறாத காயங்களும் ஆற ஆரம்பிக்கும்.?/"முதுமையிலும்  மூளையின் ஆற்றல் குறையாதிருக்க" என்ற பதிவுமுதுமையிலும் ஆற்றலைச் சிறப்பாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ஆணித்தரமாகச் சொல்லும் கட்டுரை."வயதில்லா உடலும் காலமறியா மனமும்" என்ற பதிவு என் போன்ற வயதானவர்களுக்குத்  தன்னம்பிக்கை தருவது.வளமான "வாழ்விற்கு  வழிகள் பத்து" எல்லாம் நன்றாக இருக்கிறது. படித்துப் பாருங்கள்.'எனக்கு வயதாகவில்லை, எனக்கு எதற்கு' என்று நீங்கள்

 கேட்பது கேட்கிறது.  வயதாகும்போது பயன்படும் கட்டுரைகள் படிக்கலாம் ஒருமுறை.நான்  பின் தொடரும் வலைத்தளம்  . உங்களுக்கும் பிடித்து இருந்தால் தொடரலாம்.                                                                      வாழ்க வளமுடன்.!

---------------------------------------------------------------------------------------------------------------------------

28 கருத்துகள்:

 1. பின்னர் சென்று பார்க்கிறேன். இப்படி வலைத்தள அறிமுகங்கள் செய்வது மற்றவர்களுக்கும் புதிய தளங்கள் பற்றி அறியக் கிடைக்கும். நல்ல விஷயம்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  காணொளி எப்படி என்று சொல்லவில்லையே!
  உங்கள் தளத்தில் பசுபதிவுகளை இணைத்தது மகிழ்ச்சி.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. காணொளி இன்னும் பார்க்கவில்லை மேடம். பின்னர்தான் பார்க்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  இப்போது வேலைக்கு போக வேண்டும் அல்லவா?
  இங்கு மாலை 6 மணி
  அவசரமில்லாமல் நிதானமாய் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல பகிர்வும்மா...

  காணொளி மாலையில் பார்க்கிறேன்மா....

  பதிலளிநீக்கு
 6. //'எனக்கு வயதாகவில்லை, எனக்கு எதற்கு' என்று நீங்கள்

  கேட்பது கேட்கிறது. வயதாகும்போது பயன்படும் கட்டுரைகள் படிக்கலாம் ஒருமுறை.//

  ஹா... .ஹா... ஹா படிப்பபவர் தலையில் கொட்டிய விதம் நன்று.

  இணையம் பிரச்சனை மீண்டும் வந்து காண்பேன் பகிர்வுக்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.
  நேரமும், இணையமும் ஒத்துழைக்கும் போது அவசியம் படித்தும், கேட்டும் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 9. திரு. என். கணேசன் அவர்களது தளத்தை அறிவேன்..
  ஆனாலும் எல்லா தளங்களிலும் சுற்றுவதற்கு நேரம் இருப்பதில்லை..

  இனிமையாக அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோ துரைசெலவராஜூ, வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது உண்மைதான்.
  எல்லா தளங்களுங்களுக்கும் சென்று கருத்து சொல்ல நேரம் வேண்டுமே! உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. எனக்கு வயதாகவில்லை எனக்கெதற்கு .? எனக்குதான் வயதாகி விட்டதே இனி எதற்கு?

  பதிலளிநீக்கு
 12. இவரது தளத்தை அறிவேன். தன்னம்பிக்கை தரும் கட்டுரைகள் நிரம்பியது.

  நல்லதொரு பகிர்வு.

  பதிலளிநீக்கு
 13. கோமதிக்கா இவரது தளம் சென்று வாசித்ததுண்டு...ஆனால் கருத்து இட்டதில்லை. எங்கள் பெட்டிக்கும் வரும். மிக மிக நல்ல பதிவுகள். ஒரு சில நம்மால் முடியுமா என்றும் தோன்றும் ...என்றாலும் மிகவும் நல்ல கருத்துகள். இவரது தளத்தையும் குறித்து வைத்துள்ளேன் அறிமுகப்படுத்த வேண்டி..

  இன்னும் இப்படி நிறைய நல்ல தளங்கள் இருக்கின்றான....அவ்வப்போது சென்று வாசிப்பதுண்டு...கருத்து இடவில்லை என்றாலும். எல்லாம் செல்ல நேரம் கிட்டுவதில்லை. காணொளி பார்க்கிறேன் இதோ....

  ஆறாத காயங்கள் பற்றி சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது ஒன்று நினைவுக்கு வரும்....பௌன்ஸ் ஆகி வரும் பந்தை நாம் பிடித்தால் அது நம்முடனேயே தங்கிவிடும் ஆனால் அதை விட்டால் அது நழுவிப் போய்விடும் அது போல் உன்னை நோக்கி எறியப்படும் அம்பு போன்ற வார்த்தைகளை உள்வாங்காமால் சென்று விடுதல் நலம் என்று ஏதொ ஒரு தத்துவ விளகக்த்தில் வாசித்த நினைவு. சரியான வார்த்தைகள் நினைவில்லை...அர்த்தம் இதுதான்...

  மிக்க நன்றி கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
 14. அருமையான தளம் அக்கா அவருடையது .காணொளி பார்த்தேன் .
  குழந்தை மனசு கள்ளம்கடமில்லாதது அதற்கு இருக்கும் பக்குவம் பெரியவங்க எல்லாருக்கும் வந்தா உலகில் பிரச்சினைகள் குறையும் .தோல்வியை தாங்கும் ஏற்கும் மனசு பலருக்கு இங்கில்லைக்கா :(

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  உங்களுக்கு வயது ஆகவில்லை, வயதானாலும் தன்னம்பிக்கையுடன் , குடும்ப உறவுகள் என்ற பாதுகாப்பு அரணில் இருக்கிறீர்கள்.
  அதனால் உங்களுக்கு தேவையில்லை.

  மனது சோர்வு , வயதாகிவிட்டது என்ற எண்ணம் உள்ளவர்கள் , தனிமையில் இருப்பவர்களுக்கு உற்சாகமாய் வாழ்க்கையை எதிர்கொள்ள உதவும் பதிவுகள்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
  நானும் படிப்பேன் , கருத்து சில நேரம் சொல்வேன்.

  //உன்னை நோக்கி எறியப்படும் அம்பு போன்ற வார்த்தைகளை உள்வாங்காமால் சென்று விடுதல் நலம் என்று ஏதொ ஒரு தத்துவ விளகக்த்தில் வாசித்த நினைவு. சரியான வார்த்தைகள் நினைவில்லை...அர்த்தம் இதுதான்...//

  வேதாத்திரி மகரிஷியும் இதைதான் சொல்வார்.

  மற்றவர்கள் விடும் சொல் அம்புகளை வாங்காமல் விட்டால் நம்மை பாதிக்காது. அப்படியே வாங்கி கொண்டாலும் நம் வினைகள் கழிவதாய் நினைத்துக் கொள்ளவேண்டும்.

  உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.

  //தோல்வியை தாங்கும் ஏற்கும் மனசு பலருக்கு இங்கில்லைக்கா ://

  நீங்கள் சொல்வது உண்மை ஏஞ்சல், சிறு தோல்வியைகூட தாங்க முடியாமல் துவண்டு போகிறார்கள்.

  சிறு குழந்தைகள் இப்போது விளையாட்டில் கூட தோற்க விரும்பவில்லை.

  நீங்கள் காணொளி பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. அவருடய தளத்தை அறிவேன், படித்தும் வருகிறேன், இதையும் படித்து இருக்கிறேன் அருமையான விஷயத்தை பகிர்ந்து இருக்கீங்க சிஸ்

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் பூவிழி, வாழ்க வளமுடன்.
  நீங்களும் இவர் தளத்தை பின் தொடர்வது மகிழ்ச்சியே
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. கோமதி அக்கா.. நல்ல விசயங்களைத்தான் பகிர்ந்திருக்கிறீங்க....

  //உடல்நலம் தரும் விரல் முத்திரைகள்" என்ற பதிவு செயல்முறை விளக்கங்களுடன் இருக்கிறது.//

  இதை நானும் செய்தேன் சில நாட்கள் பின்பு மறந்திட்டேன், அத்தோடு எனக்கு அதை நம்ம முடியாமல் இருக்கு.. ஹீலர் பாஸ்கர் அவர்கள் காட்டித்தந்தார்

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

  //உடல்நலம் தரும் விரல் முத்திரைகள்" என்ற பதிவு செயல்முறை விளக்கங்களுடன் இருக்கிறது.//

  இதை நானும் செய்தேன் சில நாட்கள் பின்பு மறந்திட்டேன், அத்தோடு எனக்கு அதை நம்ம முடியாமல் இருக்கு.. ஹீலர் பாஸ்கர் அவர்கள் காட்டித்தந்தார்//

  எங்கள் மனவளகலை வகுப்பில் முத்திரைகள் உண்டு. செய்து வந்த போது நன்றாக இருந்தது.

  நமக்கு எது நம்பிக்கை அளிக்கிறதோ அதைதான் செய்ய வேண்டும்.

  ஹீலர் பாஸ்கர் அவர்கள் உறுப்புகளை இயக்கும் 9 பயிற்சிகள் என்பதை மட்டுமே பார்த்தேன். முத்திரை பயிற்சி பார்க்கவில்லை பார்க்கிறேன்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. செயல்முறை விளக்கம் அருமை. கணேசன் பக்கங்கள் சென்றேன், வாசித்தேன், தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 25. செயல்முறை விளக்கம் அருமை. கணேசன் பக்கங்கள் சென்றேன், வாசித்தேன், தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 26. அக்கா நலமா இருக்கீங்களா வலைப்பக்கம் உங்களை பார்த்து ரொம்ப நாளாச்சு ஒரு ஹாய் சொல்ல வந்தேன் .டேக் கேர் அக்கா

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன் .
  உங்கள் அன்பு விசாரிப்புக்கு நன்றி.
  என் மாமியார் அவர்களுக்கு உடல் திலை சரியில்லை.
  போனமாதம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டார்கள். சீரியஸ் கண்டிஷன் என்று சொன்னதால் அமெரிக்காவிலிருந்து வந்து விட்டோம்.


  கோவை வந்து விட்டோம்.
  அவர்களை கவனித்து கொள்வதால் நேரம் இல்லை.

  இறைவன் அருளால் மீண்டும் சந்திப்போம்.  பதிலளிநீக்கு