வெள்ளி, 29 செப்டம்பர், 2017

நவராத்திரி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் நவராத்திரி  வாழ்த்துக்கள்.
எல்லோரும் நலம் தானே? நாங்கள்  மகன் ஊருக்கு வந்து இருக்கிறோம்.
இங்குதான்  இந்த முறை நவராத்திரி பண்டிகை.
மகன் இருப்பது அரிசோனா மாநிலத்தில் பீனிக்ஸ். போனவாரம் இங்கு வந்தோம்.

Image may contain: indoor

                                                மகன் வீட்டுக் கொலு

திடீர் பிரயாணம். யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியவில்லை. காணோம் என்று தேடினீர்களா?

எல்லோர்  பதிவுகளையும் படிக்க நிதானமாய் வருவேன். பண்டிகை என்பதால் கொலு பார்க்க நண்பர்கள், உறவினர்கள் வருகிறார்கள்.
எங்களையும் கொலுப் பார்க்க சில நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

Image may contain: indoor
இந்த கொலுவில் காய்கறி கல்யாணம் சிறப்பு.

No automatic alt text available.
கத்திரிக்காய் பரங்கிகாய் கல்யாணம்.No automatic alt text available.
சின்ன மலைக் கோயில் , பார்க், தெப்பக்குளம்.
Image may contain: one or more people and indoor
ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலில்  விளக்கு பூஜை செய்யும் பொம்மை இந்த வீட்டில் நன்றாக இருந்தது.

Image may contain: flower, table and indoor
பார்வதி திருமணம், கார்த்திகை பாலன் பிறப்பு, மற்றும் பூலோக மக்கள்
திருமணக் காட்சி.

Image may contain: 2 people, people standing
உழவுக்கு செல்லும் கணவனுக்கு உணவு எடுத்து செல்லும்
உழவனின்  மனைவி பழையக் கால பொம்மை  அழகு.

Image may contain: indoor
கொலுவிற்கு வரும் கிரிகெட் ரசிகர்களுக்கு  பிடித்த பொம்மை.

Image may contain: 1 person, shoes
மற்றொரு வீட்டில் :-

 கோலம் போடுதல், சாதம் வடித்தல், அம்மி அரைத்தல், ஆட்டுக்கல்லில் அரைத்தல், திருவையில் திரித்தல், முறத்தில் புடைத்தல் சிறப்பு பொம்மை .
உரலில் இடிப்பது விட்டு போனது போல!
அயல் நாட்டில் இருந்தாலும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். எல்லா குழந்தைகளும் கர்நாடக இசை பயின்று பாடுவது மிகவும் மகிழ்ச்சியாக் இருக்கிறது.

நவராத்திரி பார்க்க வந்த குழந்தைகள் பாட சொன்னவுடன் உடனே பாடுவது மிக சிறப்பு. நன்றாக பாடுகிறார்கள். சில குழந்தைகள் ஆங்கிலத்தில் பாடலை எழுதி வைத்துக் கொண்டு பாடினார்கள். அரிசோனா தமிழ் பள்ளியில்  படிக்கும் குழந்தை தமிழில் எழுதி வைத்து இருந்த திருப்புகழ் பாடினான்.

விழாக்கள் எல்லாம் உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுவது மகிழ்ச்சி. வேலை வேலை என்று ஓடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் நாள். குழந்தைகள் தனியாக விளையாடிக் கொண்டு இருந்தவர்களுக்கு கூடி விளையாட கிடைத்த நாள். அம்மாக்கள் குழந்தைகளை வீட்டுக்கு போகலாம் வா என்று கூப்பிட்டால் மனசே இல்லாமல் இன்னும் கொஞ்ச நேரம் அம்மா என்று விளையாட கெஞ்சும் குழந்தைகள். மொத்ததில் மகிழ்ச்சியை தரும் விழாதான்.

தூரத்திலிருந்து வருவதால் தினம் கலவை சாதங்கள் சுண்டல் உண்டு எல்லோர் வீடுகளிலும். சில சமயம் நண்பர்கள் நாங்கள் இந்த பிரசாதம் கொண்டு வருகிறோம் என்று சொல்லி ஆளுக்கு ஒன்று கொண்டு வந்து எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியாக விழாவை சிறப்பிக்கிறார்கள்.

நலங்கள் நல்கும் நவராத்திரி 2013 ல் நியூஜெர்சி யில் கொண்டாடிய  கொலு சுட்டி படிக்கலாம்.

பொளச்சுக் கிடந்தா வரேன் தாயி!

பொம்மை கொண்டு வரும் தாத்தாவின் நினைவுகளை மருமகளிடம்  பகிர்ந்து கொண்டேன்.அதை நீங்களும் படித்துப் பாருங்களேன். ஒவ்வொரு கொலு சமயத்திலும் பொம்மை கொண்டு வரும் தாத்தா நினைவு வந்து விடும்.


நவராத்திரி வாழ்த்துக்கள்
மாயவரம் புனூகீஸ்வரர் கோயில் நவராத்திரி விழா  மலைமகள், அலைமகள், கலைமகள் அலங்காரங்கள் இந்த பதிவில்.
சகலகலாமாலை, பாடல் பகிர்வும்  இருக்கிறது.

எங்கள் வீட்டுக் கொலு  ;- எளிமையாக வைத்த கொலு.


 அம்மன் அலங்காரம்  மகன் செய்த

ஒலி, ஒளிக்காட்சி சரஸ்வதி சபத காட்சி பின்னனியில் பார்க்கலாம்.
மருமகள் அலங்காரம் செய்தாள்.

நிறைய இருக்கிறது பேசவும், சொல்லவும். நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  பதிவுகளை படித்து கருத்திட கொஞ்சம் கால அவகாசம் தேவை.

மனபலமும், உடல் நலமும் தெளிந்த நல் அறிவும் வேண்டும் என்று

  அம்மனிடம்  வேண்டிக் கொள்கிறேன்.

அப்பாதுரை சார் சொன்னது போல் கொலுவுக்கு முன்னாலும் உழைக்க வேண்டும், கொலு முடிந்த பின்பும் உழைக்க வேண்டும். அதற்கு  உடல் நலமு, மனபலமும்  வேண்டும். அதை அன்னை அருள்வாள்.

கொலுபடிகளை அமைத்து வைக்கும் வரை மலைப்பு,!வைத்தபின் மகிழ்ச்சி.
அது போல் பொம்மைகளை மீண்டும் அதன் அதன் இடத்தில் பத்திரமாய் எடுத்து வைக்கும் போது மலைப்பு ! எடுத்து வைத்து விட்டால் மகிழ்ச்சி.
கொலுபடிகள் இருந்த இடத்தைப் பார்க்கும் போது வெறுமை ! மீண்டும் அடுத்த வருடத்தை எதிர் நோக்கும் உள்ளம்.

அடுத்த வருடம் வரை நவராத்திரி நினைவுகளை அசைபோடும் உள்ளம்.பேரனின் ஓவியங்க்கள் அவன் விளையாட்டு சாமான்கள் என்று தனியாக அவன் அறையில் வைத்து அனைவரையும் அழைத்து சென்று காட்டி மகிழ்ந்தான்.

மருமகள் பெண்கள்,  ஆண், பெண் குழந்தைகளுக்கு ஏற்ற பரிசு பொருட்களை தேர்ந்து எடுத்து கொடுத்து மகிழ்ச்சிப் படுத்தினாள்.

விழாக்களில்  குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து உழைத்தால் அலுப்பும், சலிப்பும் ஏற்படாது. பண்டிகைகளை அனைவரும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வோம்.

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

                                                   வாழ்க வளமுடன்.


34 கருத்துகள்:

 1. கோமதி அக்கா உங்கள் போஸ்ட் பார்க்க மிக்க மகிழ்ச்சியாகவும் அதே நேரம், நலமோடும் இருக்கிறீங்க என்பது தெரிகிறது.. கொஞ்சம் யோசித்தேன் எங்கும் காணவில்லையே என..

  //திடீர் பிரயாணம். யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியவில்லை. காணோம் என்று தேடினீர்களா?///
  யேஸ்ஸ்ஸ் யாரிடமும் கேட்கவில்லை ஆனா மனதில் நினைத்தேன், பின்பு நினைத்தேன்.. ஏதோ கிராமத்தில் போய் நின்றுவிட்டு வருவோம் என ஒரு தடவை சொல்லியிருந்தீங்க.. அங்கு போனால் நெட் இல்லைப்போல என்றெல்லாம் நினைச்சேன்ன்.. மிக்க மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 2. கொலுப் படங்கள் பார்க்க மிக ஆசையாக இருக்கு.. சூப்பராக இருக்கு கொலு எல்லாம்.. நவராத்திரி வாழ்த்துக்கள்... மகன் வீட்டில் அனைத்தையும் ஹப்பியா எஞ் ஜோய் பண்ணிக் களித்து வாங்கோ..

  நவராத்திரி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
  தேடியது அறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன் .
  லண்டன் வழியாக வந்தோம் . உங்களை நினைத்துக் கொண்டேன். ஏஞ்சலினையும் நினைத்துக் கொண்டேன்.

  நவராத்திரி வாழ்த்துக்களுக்கு நன்றி. மகிழ்ச்சியாக களித்து இருக்க சொன்னதற்கு நன்றி.

  கொலு கருத்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. படங்களை ரசித்தேன். அருகிலேயே இருக்கும் பொருள்களின் அருமை தெரியாது என்பார்கள். நாடு விட்டு நாடு செல்லும்போது சொந்த மண்ணைப் பிரிந்திருக்கும் சோக ஏக்கத்திலேயே நாம் நம் கலாச்சாரங்களை இன்னும் அதிகமாக பின்பற்றத் தோன்றுகிறது.

  நீங்கள் என்னிடம் ஊர் செல்வதாகச் சொல்லி விட்டதால் தேடவில்லை! நீங்களும், ஸாரும் மற்றும் உங்கள் உறவுகளும் நலம்தானே?

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் இந்தப் பதிவுக்கு தலைப்பு வைக்க மறந்து விட்டீர்கள்! தம பட்டையையும் காணோம்.

  பதிலளிநீக்கு
 7. கொலு ரொம்ப அழகு! அங்கும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள் என்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி! நவராத்திரி வாழ்த்துகள் சகோதரி.

  கீதா: கோமதிக்கா நான் ரொம்பவே நினைத்துக் கொண்டேன் என்னடா கோமதிக்கா நவராத்திரி பதிவு போடவில்லையே என்று. நீங்கள் கோயம்புத்தூர் சென்றது தெரியும் அதன் பின் காணவில்லையே என்று நினைத்தேன். இப்போது தெரிகிறது நீங்கள் அங்கு சென்றது. பயணம் இனிதாக இருந்தது அல்லவா? நானும் கொஞ்சம் பிஸி....வீட்டில் கொலு எல்லாம் இல்லை. ஆனால் ரவுன்ட்ஸ்...

  கொலு ரொம்ப அழகா இருக்கு அக்கா....அதுவும் அந்த உரல், அம்மி என்று பெண்கள் இருப்பது மிக மிக அழகாக இருக்கிறது. எங்கு வாங்கினீர்கள் அக்கா அந்த பொம்மைகள்?

  அக்கா மெய்யாலுமே வெளிநாட்டில் இருப்பவர்கள் நம் விழாக்களை ரொம்பவே ஆர்வமுடன் கொண்டாடுகிறார்கள் இங்கை விட குழந்தைகள் உட்பட என்று சொல்லலாம்...

  உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்...

  நவராத்திரி, விஜயதசமி தின வாழ்த்துகள் அக்கா. உங்கள் மகன் குடும்பத்தாருக்கும் இனிய வாழ்த்துகள்! வாழ்க நலமுடன்!

  பதிலளிநீக்கு
 8. கொலுவினை ரசித்தோம். ரசனையுடன் வைக்கப்பட்டிருந்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோ அழகான படங்கள் கொலு பொம்மைகள் தேவகோட்டையில் சிறப்பானவை என்பது தாங்கள் அறிந்ததே....

  சிறுவயதில் எல்லோர் வீட்டுக்கும் போய் வந்த நினைவுகள்....

  தாங்கள் ஊருக்கு போயிருப்பீர்கள் என்று நானும், தில்லை அகத்து கீதா அவர்களும் பேசிக்கொண்டோம் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.

  த.ம.2

  பதிலளிநீக்கு
 10. உங்களை ரொம்ப நாளாக காணவில்லையே என்று நினைத்தேன். பிறகு சுற்றுலா அல்லது வெளியூர் சென்றிருக்கலாம் என்று நினைத்தேன். பூமிப்பந்தின் இன்னொரு புறத்துக்கே சென்றிருக்கிறீர்களா? மகிழ்ச்சி.

  கொலு பொம்மைகள், அலங்காரங்கள் அருமை. வாழிய நலம்.

  பதிலளிநீக்கு
 11. உங்களைக் காணவில்லையே என்று தேடி, அதிரா சொல்வது போல் நினைத்தேன்!
  அயல்நாட்டில் நம் பண்பாட்டை விட்டுக் கொடுக்காமல் கொலு கொண்டாடுவது மிக்க மகிழ்ச்சி! தமிழிலேயே எழுதி வைத்துப் பாடும் குழந்தை பற்றிய தகவல் பெருமை!! படங்கள் அருமை!

  பதிலளிநீக்கு
 12. முதற்கண் -
  அன்பின் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..

  எல்லாருக்கும் அன்னை நல்லருள் பொழிவாளாக!..

  அப்புறம் அங்கே அன்புச் செல்வங்கள் மற்றும் உற்றார் உறவினர் அனைவரும் நலம் தானே..

  மற்றபடிக்குத் தாங்கள் காவிரி புஷ்கரத்திற்காக
  மயிலாடுதுறை சென்றிருப்பீர்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்..

  நலம் வாழ்க!..

  கொலு படங்கள் அனைத்தும் அழகு .. அருமை..

  கடைசியில் அம்மி அரைப்பதும் மாவு இடிப்பதும்
  பொம்மைகளாகிப் போனது தான் காலத்தின் லீலை..

  பதிலளிநீக்கு
 13. பதிவில் பல கொலுக் காட்சிகள் எல்லாம் ஒன்றா கொலுவுக்கு அந்நாட்டினரைக் கூப்பிட்டீர்களாநவ ராத்திரி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 14. அக்கா ஆமாம் நான் தேடினேன் எங்கே இன்னும் புது போஸ்ட் பாரதியார் பாடலுக்கு அப்புறம் காணோமேன்னு ..யோசிச்சேன் இப்போ தொடர் பண்டிகைகள்னாலே பிஸின்னு ..

  அமெரிக்கா கொலு கொள்ளை அழகு ..வேறே தேசம் போனாலும் இன்னும் எத்தனை அழகா வித விதமா செய்றாங்க சூப்பர்

  குட்டி குட்டி பொம்மைகள் கண்ணுக்கும் மனதுக்கும் இனிமை சந்தோஷம்

  பதிலளிநீக்கு
 15. எல்லாப்படங்களும் அழகாக இருக்கின்றன. அக்கா. இங்கு வளரும் குழந்தைகள் தமிழில் பாடல் பாடுவது கேட்க அருமை. அவர்களிடையே நம் கலை,கலாச்சாரம் சொல்லி வளர்ப்பது மிக நல்லது. அவர்களும் ஆர்வதோடு பயில்கிறார்கள்,அறிகின்றார்கள்.
  உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.
  enjoy your trip akka.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ஸ்ரீராம் வாழ்க வளமுடன்.

  இந்தியாவில் இருப்பவர்களே வேலை தொந்திரவால் கொலு வைப்பதை தவிர்த்து வருகிறார்கள். பெண்கள் ஆபீஸ் வேலை, வீட்டு வேலை என்று அங்கும் சிரமபடுகிறார்கள்.

  அங்காவது வேலைக்கு ஆள் கிடைக்கும். இங்கு எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் போய் கொண்டு கொலு வைப்பது சிறப்பு தானே!
  எங்கள் மருமகள் வேலைக்கு செல்லவில்லை.

  நேற்று பதிவை வலை ஏற்றுவதற்குள் ஒரு வழியாகி விட்டது.

  தலைப்பு , லேபிள் எல்லாம் கொடுத்த பதிவு என்னாச்சு என்று தெரியவில்லை.
  எடிட் போஸ்டில் இருந்த பதிவை அவசரமாய் வலைஏற்றியதில் தலைப்பு இருக்கா என்றுப் பார்க்கவில்லை.

  தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டு போட்டு இருக்கே!

  உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி. சாருக்கு கொஞ்சம் உடல் ந்லமில்லாமல் இருந்தது இப்போது தேவலை.

  அலைச்சல், தூக்கமின்மை, சளி தொந்திரவு இருந்தது இப்போது தேவலாம்.
  உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


  பதிலளிநீக்கு
 17. வணக்கம் துளசிதரன், கீதா, வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி துளசிதரன்.
  வணக்கம் கீதா, வாழ்க வ்ளமுடன்.

  கோவை போய் வந்த பின் தான் மகன் அழைத்தான் திடீர் பிரயாணம்.
  நம் மக்கள் இங்கு அதிகமாய் இருக்கிறார்கள். வாராவாரம் தமிழ் பள்ளியில் தமிழ் கற்கிறார்கள். மருமகளும் தமிழ் கற்றுத் தருகிறாள். எல்லோரும் சமுதாய சேவையாக செய்கிறார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும்.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


  பதிலளிநீக்கு
 18. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோ தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.

  தேவகோட்டையில் கொலு நன்றாக இருக்கும் என்று கேள்விபட்டு இருக்கிறேன்.
  சிறுவயதில் பார்த்தது தானா இப்போது யார் வீட்டுக்கும் கொலு பார்க்க போகவில்லையா?

  கோவை போகும் போது கீதாவிடம் சொன்னேன். இங்கு வருவது மிகவும் குறுகியகாலத்தில் என்பதால் பயண ஏற்பாடுகள் அது இது என்று வலை பக்கமே வர இயலவில்லை.
  ஸ்ரீராமிடம் சொல்லி வந்தேன்.

  நீங்களும் கீதாவும் என்னை நினைத்து கொண்டது மகிழ்ச்சி.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.

  //உங்களை ரொம்ப நாளாக காணவில்லையே என்று நினைத்தேன்//


  நினைத்தது அறிந்து மகிழ்ச்சி.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. நலம் தானே, கோமதிம்மா?

  அரிசோனா பீனிக்ஸ் நான் வந்திருக்கிறேன். சரியான பாலைவனமும் பாலைவனத்தைச் சார்ந்த பகுதியுமாச்சே! ஹூவர் டாம் பார்த்து விட்டு வாருங்கள். லாஸ் வேகா போயிருக்கிறீர்களா?.. அதுவும் பக்கம் தான். வெவ்வேறு தேசங்களின் பிரபல சின்னங்களை நினைவுபடுத்துகிற மாதிரி அமைக்கப் பட்ட பிர்மாண்ட தங்கும் விடுதிகள் பார்க்க கண்கொள்ளாக் காட்சி.

  பீனிக்ஸில் தமிழ் கற்றுக்கொடுக்க இருக்கும் பள்ளி பற்றி அறிந்தது மகிழ்ச்சி அளித்தது.
  'அமெரிக்காவில் கொலு' அற்புத அனுபவங்கள். சேர்ந்து சந்தோஷமாக வாழப் பழகிய மக்கள். நினைத்துப் பார்த்தால் பொறாமையாய் தான் இருக்கிறது. நாம் ஏன் இப்படி ஆகிப் போனோம் என்பதை நினைத்தால் வருத்தமாகத் தான் இருக்கிறது.

  மெதுவாக வாருங்கள், அவசரமில்லை.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.

  //உங்களைக் காணவில்லையே என்று தேடி, அதிரா சொல்வது போல் நினைத்தேன்!//

  நினைத்தீர்களா? நன்றி, மகிழ்ச்சி.

  குழந்தைகள் தமிழில் பேசுவது, பாடுவது எல்லாம் மகிழ்ச்சி அளிக்கும் காலமாக இருக்கிறது.
  உங்கள் கருத்துக்கு நன்றி மாதவி.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
  இங்கு எல்லோரும் நலம்.

  மயிலாடுதுறை போக முடியவில்லை. இங்கு வரச் சொன்னன் மகன், வந்து விட்டோம்.

  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  இங்கு இப்போதுதான் இந்த குடியிருப்புக்கு வந்து இருப்பதால் பழகவில்லை.
  நம் நாட்டார் பலமொழி பேசும் மக்கள் வருகிறார்கள் நம் வீட்டு கொலுவுக்கு.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
  நீங்கள் தேடியது அறிந்து மகிழ்ச்சி.
  நீங்கள் சொல்வது போல் அந்நிய நாட்டை இப்போது நம் நாடாக நினைக்கும் காலம். நம் பிழைப்பு அங்கு தான் எனும் போது வேறு என்ன செய்வது?
  எங்கிருந்தாலும் நம் நாட்டின் பண்டிகைகளை கொண்டாடி மகிழ்வது மகிழ்ச்சிதான்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் அம்மு, வாழ்க வளமுடன்.
  // அவர்களிடையே நம் கலை,கலாச்சாரம் சொல்லி வளர்ப்பது மிக நல்லது. அவர்களும் ஆர்வதோடு பயில்கிறார்கள்,அறிகின்றார்கள்.//

  நீங்கள் சொல்வது போல்தான் இங்கு வளர்க்கிறார்கள்.
  உடைகளும் பண்டிகைகால நம் உடைகள் அணிந்து வருகிறார்கள்.

  உங்கள் கருத்துப்படி இங்கு இருக்கும் காலம் வரை (4 மாதம் இருப்போம்) மகிழ்ச்சியோடு இருக்க இறைவன் அருள்புரிய வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கிறேன். நன்றிம்மா அம்மு.

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
  நலமாக இருக்கிறேன் சார்.
  அன்பான விசாரிப்புக்கு நன்றி.

  //அரிசோனா பீனிக்ஸ் நான் வந்திருக்கிறேன். சரியான பாலைவனமும் பாலைவனத்தைச் சார்ந்த பகுதியுமாச்சே! ஹூவர் டாம் பார்த்து விட்டு வாருங்கள். லாஸ் வேகா போயிருக்கிறீர்களா?.. அதுவும் பக்கம் தான். வெவ்வேறு தேசங்களின் பிரபல சின்னங்களை நினைவுபடுத்துகிற மாதிரி அமைக்கப் பட்ட பிர்மாண்ட தங்கும் விடுதிகள் பார்க்க கண்கொள்ளாக் காட்சி.//

  ஆமாம் சார் பாலைவனம்தான். அதுவும் ஒரு அழகு. கள்ளிசெடிகளும் அழகு.
  பார்க்க வேண்டும் நீங்கள் சொன்ன இடங்களை. குறைந்த காலம் தான் இருக்க போகிறோம். அதற்குள் முடிந்த இடங்களுக்கு அழைத்து செல்வான் மகன்.
  ஆறு மாதம் இருக்க சொல்கிறான் சார் நான்கு மாதம் என்கிறார்கள்.

  உங்கள் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 29. அன்பு கோமதி, எனக்கு என்னவோ தோன்றிக் கொண்டே இருந்தது.
  நீங்கள் இங்கே வந்திருக்கலாம் என்று. நிஜமாகவே வந்திருக்கிறீர்கள்.

  கொலு மிகவும் அழகு. சார் இருக்கும் இடத்தில் அமைப்புக்குக் கவலையே இல்லை. மகனும்
  சேர்ந்து அருமையாகச் செய்திருக்கிறீர்கள்.
  இங்கும் பேரன் சென்றவிடமெல்லாம் திருப்புகழும் பஜகோவிந்தமும் பாடி வருகிறான்.

  உங்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, விஜய தசமிக்கான வாழ்த்துகள் அம்மா.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
  உங்கள் எண்ணம் போல் இங்கு வந்து இருக்கிறோம் மகிழ்ச்சி. அழைத்து கொண்டே இருந்தான் . வந்து விட்டோம்.

  பேரன் பாடல்கள் பாடுவது அறிந்து மகிழ்ச்சி அக்கா. உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு
 31. நவராத்திரி சமயத்தில் சென்றது நல்லதாயிற்று. பலர் வீட்டுக் கொலுவையும் கண்டு களிக்கும் வாய்ப்பும் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. குழந்தைகளுக்கு பாடத் தெரிந்திருப்பது மகிழ்ச்சி. வித்தியாசமான பலவித கொலுப் பொம்மைகளின் படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 32. பொம்மைகள் அருமை! குறிப்பாக கோலம் போடுதல், அம்மியில் அரைத்தல், ஆட்டு உரலில் மாவாட்டுதல் போன்ற பொம்மைகள் அழகு. ஒரு கா லத்தில் இவை அனைத்தையும் ஒரே பெண் செய்தாள் என்றால் இன்று நம்புவார்களா? பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் பானுமதி, வாழ்க வளமுடன்.
  முன்பு அனைத்தும் வீட்டு உதவிக்கு ஆள் இல்லாமல் அவர்கலே செய்து ஆரோக்கியமாய் இருந்தார்கள்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு