நவராத்திரி வந்து விட்டது !
தேவி கொலு இருக்க வீடுகளுக்கு வந்துவிட்டாள் !
அம்பிகையைச் சிறப்பாக வழிபடுவதற்குரிய நாட்கள் நவராத்திரி. இது மாதந்தோறும் அமாவாசையை அடுத்துள்ள ஒன்பது நாட்களில் வந்தாலும், இரண்டு நவராத்திரிகளையே சிறப்பாக எடுத்துக்கூறுவார்கள் பெரியவர்கள்.
ஒன்று கோடைக்காலத்தில் வரும் பங்குனி அல்லது சித்திரையில் அமாவாசையை அடுத்துவரும் ஒன்பது நாட்களில் கொண்டாடப்படும்.
வசந்தருதுவில் வருவதால் இது வசந்த நவராத்திரி.
புரட்டாசி அமாவாசையை அடுத்து வரும் நவராத்திரி எல்லோரும் போற்றும் நவராத்திரி. இது சரத்(மழை) காலத்தில் வருவதால் சாரதா நவராத்திரி எனப்படும்.
வசந்த ருதுவும், சரத்ருதுவும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமானவை என்பார்கள். இவ்விரு காலங்களிலும் வெம்மை மிகுதியால் தண்மை மிகுதியாலும் அம்மை, காலரா முதலிய நோய்கள் பெருகி மக்கள் துன்படும் காலம். இக் காலங்களில் உலக மாதாவாக விளங்கும் அம்பிகையை வழிபடுவோர் அந்நோய்களினின்றும் நீங்கி அனைத்து நலங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
கோடைகால உணவுகள், குளிர்கால உணவுகளை அளவோடு உண்டு, நன்றாக உழைத்து ,உடல் நலத்தை காத்து கொள்ளச்செய்து இருக்கிறார்கள். வாழ்க்கையை நல்லபடியாக நடத்திச்செல்ல இறை நம்பிக்கை !. இறை நம்பிக்கை இருந்தால் ஒழுக்கம், பண்புகள் தானாக வரும் என்பதால் முன்னோர்கள் விழாக்களை வகைப்படுத்திக் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.
முன் காலத்தில் போருக்குப் போகும்போது கொற்றவையை (மலைமகள்) ,வழிபட்டு வெற்றியைப் பெற்று மகிழ்ந்தனர், திருமகளை வழிபட்டுச் செல்வம் பெற்றனர், கலைமகளை வழிபட்டுக் கல்வி பெற்றனர் என்று தொல்காப்பியம் போன்ற நூல்களில் சொல்லப்படுகிறது.
* * *
எங்களுக்குப் போன வருட கொலு, மாயவரத்தில். மகன், மருமகள், பேரன் வந்து சிறப்பு செய்தார்கள். இந்த வருடம் இந்த சமயத்தில் நாங்கள் மகன் (நியூஜெர்சி )வீட்டுக்கு வந்து இருக்கிறோம். இங்கு வந்து விட்டதால் எங்கள் ஊரில் வீட்டில் டிரங் பெட்டியில் இருக்கும் பொம்மைகளை மனதால் நினைத்து, கொலுப் படியில் எழுந்து அருளச் செய்து வழிபட்டேன். இந்த வருடம் இப்படித்தான் மானசீக கொலு என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.
பேரனுடன் தினமும் அவனுடைய விளையாட்டுச் சாமான்களுடன் கொலு மாதிரி வைத்து விளையாடிக் கொண்டு இருந்தேன். அவன் ,போன வருடம் ஊரில் வைத்தது போல் வை ஆச்சி! டெக்ரேட் செய் ஆச்சி! , நான் சந்தனம், பன்னீர் தெளித்து எல்லோரையும் வாங்கன்னு கூப்பிடுவேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.எல்லோரும் அதை கேட்டு சிரித்துக் கொண்டு இருந்தோம்..
மகனும், மருமகளும், வெள்ளிக்கிழமை (அமாவாசை அன்று) மாலையில், வாங்க கடைக்குப் போகலாம் என்று அழைத்து போனார்கள், காரில் போய் கொண்டே இருந்தோம், ரொம்ப தூரமா என்ன கடைக்கு என்ற போது அங்கு வந்து பாருங்கள் தெரியும் என்று அழைத்துப் போனார்கள், எடிசன் என்ற இடத்தில் இருக்கும் ஒருவர் வீட்டுக்கு. அங்கு நிறைய பேர் அட்டைப்பெட்டியை எடுத்துக் கொண்டு காரில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள், வீடு மாதிரி இருக்கே1 என்ன கடை என்று உள்ளே போனால் - ஆச்சிரியம்! கொலு பொம்மைகள்!
”அம்மா! நம் வீட்டிலும் கொலு வைக்கலாம் ,பொம்மை பாருங்கள் ”என்றான் மகன் .அந்த வீட்டின் கார் ஷெட்டில் படி அமைத்து அழகாய் பொம்மைகள் அடுக்கி வைத்து இருந்தார் விற்பனைக்கு. கொஞ்சம் தான் சின்ன பொம்மைகள் . மற்றவை எல்லாம் பெரிய பெரிய பொம்மைகள். ஒரு பொம்மையைத் தூக்கிப் பார்த்தால் கனமே இல்லை. ஆச்சரியமாய் இருந்தது அப்புறம் தெரிந்து கொண்டேன், பேப்பர் கூழ பொம்மைகள்! அழகாய் மண் பொம்மைகள் போலவே இருந்தது. அவருக்கு, கும்பகோணம், பண்ருட்டி, காரைக்குடியிலிருந்து பொம்மைகள் வருமாம்,மண் பொம்மையும் உண்டு நிறைய உடைந்து இருந்தது.கொலுவுக்கு ஒருவாரம் முன்பே வந்து விட வேண்டும், இப்போது விற்று விட்டது என்றார்.
நாங்கள் பிள்ளையார், பத்துமலைமுருகன்,(மலேஷியா) , வாழைமரத்தோடு இணைந்த கலச பொம்மை, மரப்பாச்சிப் பொம்மைகள் வாங்கினோம். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது மரப்பாச்சிப் பொம்மைகளைக் கொண்டு வைக்கும் பழக்கம் இருப்பதால் , முதன் முறை வைக்க போகிறீர்களா என்று கேட்டு விட்டு உள் இருந்து மரப்பாச்சிப் பொம்மைகளைக் கொண்டுவந்து கொடுத்தார்,.
அழகிய யோக நரசிம்மர், பூவராகப் பெருமாள், உலகளந்த பெருமாள், கல்யாண, காதுகுத்து செட், திருக்கழுக்குன்ற கழுகு குருக்கள் செட், எல்லாம் அழகாய் இருந்தது, மதுரைவீரன், ஐயனார், வாஸ்து லட்சுமி,(மடிசார் கட்டிக் கொண்டு, கையில் விளக்கு வைத்து கொண்டு கதவை திறந்து உள் வருவது போனற சிலை வாஸ்து லட்சுமியாம்) கிரகலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, சுபலக்ஷ்மி, காசி விசாலாட்சி, பிள்ளையார்பட்டி பிள்ளையார் பொம்மைகள் இருந்தன. எல்லாம் மிகப் பெரியவை!
போட்டோ எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தபோது இரண்டு காரில் வந்த கூட்டம் ஆண்களும், பெண்களுமாய் உள்ளே வந்து விட்டார்கள்.
‘சின்ன இடம், நாம் வாங்கி விட்டோம், இடைஞ்சல் செய்யக் கூடாது ,வெளியே வருவோம் ”என்று வந்து விட்டோம். வரும்வழி எல்லாம், ”எல்லாப் பொம்மைகளையும் வாங்க வில்லை என்றாலும் படமாவது எடுத்து இருக்கலாம்” என்று சொல்லிக் கொண்டு வந்தேன்.
கொலு பொம்மைகளை வாங்கிவிட்டு வரும்போது பசியாற, எடிசனில் சரவணபவன் ஓட்டலுக்குப் போனோம். அங்கு தோசை செய்வதைக் கண்ணாடித் தடுப்பு வழியாகப் பார்க்கலாம்.
அதை போட்டோ எடுக்க அனுமதி பெற்று எடுத்த படம்;-
மசால் தோசைக்கு மசால்வைக்கிறார்.
அழகாய்ச் சுருட்டுகிறார்
தினமும் வேலை வேலை என்று இருந்த மகன் , சனிக்கிழமை குழந்தையாய்ச் சிரித்து மருமகளுடன் , மற்றும் எங்களுடன் சேர்ந்து படிகள் அமைத்தான்.
எனது மகன், எப்போதும் தன் அலுவலக் வேலையின் நினைவில், என்ன சாப்பிட்டோம், என்று தெரியாமலும், குழந்தையோடு விளையாடக்கூட நேரம் இல்லாமலும் தினமும் இரவு வெகுநேரம் வேலை செய்துகொண்டு இருந்தான். இரண்டு நாட்களாகக் கொலு வைக்கும் வேலையில், பழைய உற்சாகம் தொற்றிக் கொள்ள, வேலைகளை மறந்து , மகிழ்ந்து இருந்ததைப் பார்க்கும் போது இது போல பண்டிகைகள் மனதைக் குதூகலப்படுத்தி மேலும் தெம்பாய் வேலைகளை செய்ய வைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
பொம்மைகள் இல்லை யென்றாலும், நம் வீட்டை அழகாய் சுத்தமாய் கலை நயத்தோடு வைத்துக் கொள்ளுதல், கைவேலைகள் செய்தவற்றை வைத்து அலங்கரிப்பது என்று தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்க செய்ய நவராத்திரி விழா உதவுகிறது, உடல் நலம், மனநலம் எல்லாம் இதனால் நன்றாக இருக்கிறது. மனதைக் குதூகலப்படுத்த உதவுகிறது. உறவுகள், நட்புகள் கலந்து பேச நேரம் ஒதுக்கும் நாளாகவும் இருக்கிறது. நாமும் விழாக்களைக் கொண்டாடி மகிழ்வோம்.
எங்கள் வீட்டுக் கொலு:-
பேரன் வைத்த கொலு
அவன் பார்க்கும் டாய் ஸ்டோரி கதாபாத்திரங்கள்
என் பொம்மையும் கொலுவில் வையுங்கள் தட்டில்
சுண்டல் செய்ய மாடல் கிச்சன் அடுப்பு
கொலுவில் வைக்க பைக், கார், விளையாட்டு சமையல் அறை, பந்துகள்
கார்ட்டூன் கதாபாத்திரங்கள்
கார்கள் டிரக்கில் வந்து இறங்குகிறது.
மகன் வீட்டு கொலு
என் கணவர் செய்த அம்மன் முகம். (சந்தனத்தில் செய்த அம்மன்)
புடவை நகை அலங்காரம் மருமகள் செய்தாள்.
கிரீடம் கிறிஸ்மஸ் மரத்தில் தொங்கும் மணி.அங்கு கிடைப்பதை வைத்து அம்மனை அலங்காரம் செய்து விட்டார்கள் என் கணவரும் , மருமகளும்.
வாழ்க வளமுடன்!
----------
மிக மிக அழகான கொலு அம்மா..
பதிலளிநீக்கு//பண்டிகைகள் மனதைக் குதூகலப்படுத்தி மேலும் தெம்பாய் வேலைகளை செய்ய வைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது//
மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!
ஹைய்யோ!!! அழகான அம்சமான கொலு!
பதிலளிநீக்குபைன்கோன் ஐடியாவை எடுத்துக்கிட்டேன். தேங்க்ஸ்.
பெண்கள் பண்டிகைன்னு சொல்றோமே தவிர முக்கால்வாசி வேலைகள் செய்வது ரங்க்ஸ்கள்தான்:-)
எப்படியோ அவுங்க மகிழ்ச்சியா இருந்தாச் சரி,இல்லையோ!!!
உண்மை... உண்மை... இது போல பண்டிகைகள் மனதை சந்தோசப்படுத்தும்...
பதிலளிநீக்குபேரன் வைத்த கொலு மிகவும் அருமை... பேரனுக்கு வாழ்த்துக்கள்...
தோசை சூப்பர்...
அற்புதமான கொலு
பதிலளிநீக்குவீட்டில் அனைவரும் பார்த்து ரசித்தோம்
அருமையான படங்களுடன் அருமையான விளக்கத்துடன்
சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 2
பதிலளிநீக்குஉங்களைப் போலவே உங்கள் கொலுவும்கச்சிதமாக அழகாக அமைந்திருக்கிறது..மிக அருமை. அலங்காரங்களும் அருமை. மகனுக்கும் மருமகளுக்கும் ,தங்கள் உறுதுணைவருக்கும், பேரனுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். தினம் ஆரத்தி எடுத்து திருஷ்டி கழித்துவிடுங்கள்.:)
பதிலளிநீக்குபடங்களை எல்லாம் ரசித்தேன்.அழகாக எடுத்து பகிர்ந்துள்ளீர்கள்...இனி நியுஜெர்ஸி தீபாவளிக்கொண்டாட்டத்தையும் படத்துடன் பகிருங்கள்...:)
பதிலளிநீக்குகொலுவின் அழகு மனதை அள்ளிக்கொண்டு போகிறது!
பதிலளிநீக்குநிறைவான நவராத்திரி கொண்டாட்டங்கள்.. வாழ்த்துகள்.!
பதிலளிநீக்குபிள்ளை. மருமகள், பேரனுடன் இந்த வருட நவராத்திரியா? பேரனின் பொம்மைகள் அணிவகுப்பு அருமை! கோலம், பைன்காய்கள் இருக்கும் ஜாடி எல்லாம் வண்ணத்தில் கண்ணைக் கவருகின்றன.கொலுப்படிகளின் பின்னாலிருந்து வரும் வெளிச்சம் கண்ணுக்கு இதமாக இருக்கிறது.
பதிலளிநீக்குசுண்டல் செய்யும் மாடர்ன் அடுப்பு பற்றி அடுத்த பதிவில் எழுதுங்கள். சும்மா தெரிந்து கொள்ளத்தான்!
உங்கள் கொலுவைப் பார்த்து ரசித்து, சரவண பவன் மசால்தோசையும் சாப்பிட்டு மகிழ்ந்தோம்.
பண்டிகைகள் நமது அன்றாட வாழ்வில் விழும் தொய்வைப் போக்கி உற்சாகமளிக்கவே!
இனிய நவராத்திரி நல் வாழ்த்துக்கள் சகோதரி!
பதிலளிநீக்குபடங்கள் மனதைக் கவர்ந்தன. பேரனின் விளையாட்டுக்கள் கொலு.. மனதில் பதிந்துகொண்டதம்மா..:)
மருமகளின் கைவண்னம் கண்டேன் சுவாமி அறையில்... பூஜை அறை அமைப்பும் அழகும் கண்டு கண்ணில் ஒற்றிக்கொண்டேன்!
மனதிற்கு இனம் புரியாத அமைதியையும் ஆறுதலையும் தருகிறது உங்கள் பதிவு!
பகிர்வினுக்கு மிக்க நன்றி சகோதரி!
த ம.3
மனதிற்கு மகிழ்வும் உறவுகளின் உன்னத்தை விளக்கும் விழாக்கள் அவசியமே...
பதிலளிநீக்குசுண்டலும் பொம்மை தானோன்னு பயந்தேன்.
பதிலளிநீக்குஎல்லா பண்டிகைகள்ளையும் முக்காலுக்கு மேலே வேலை செய்யுறது நாங்க தானே துளசிம்மா?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதிருச்சியில் குடியிருப்பில் இருந்தபோது 40 வருடங்களுக்கு முன்பு கொலு வைப்பதும் கொலுவுக்கு அழைப்பதும் போவதுமாகக் கோலாகலமாக இருக்கும். பெங்களூர் வந்தும் சிறிய அள்வில் கொலு வைத்துக் கொண்டிருந்தோம். இந்த வருடம் கொலு வைக்காமலேயே நவராத்திரி விழா. கடல் கடந்து சென்றும் கொலு வைத்துக் கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
மிக அழகாக வித்யாசமாக மிகவும் RICH ஆக அசத்தலாக உள்ளது.
பதிலளிநீக்குஓர் குழந்தைபோல நானும்
மிகவும் ரஸித்துப் பார்த்தேன்.
சின்னக்குழந்தைகளுக்கு அதுவும் குழந்தைகளுக்கு கார் பொம்மைகள் என்றாலே எப்போதும் ஆசை தான்.
நிறைய சேர்த்துக் கொள்வார்கள்.
என் பேரன் சிவாவிடமும் இதுபோலவே நூற்றுக்கணக்கான கார் பொம்மைகள் உள்ளன.
பார்கவே சந்தோஷமாக உள்ளது. பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அழகான கொலு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபுதுப் பொம்மைகளுடன் கொலு அருமை. டிரக்கில் கார்கள் வந்து இறங்குவது அழகு. பகிர்வுக்கு நன்றி:). தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குநம்ம பக்கம்தான் புரட்டாசி மாசத்துலே வரும் நவராத்ரியைக் கொண்டாடுறோம்.
பதிலளிநீக்குவடக்கே நாலு பருவகாலங்களுக்கும் ஒவ்வொன்னு இருக்கு.
சைத்ர மாசத்தில் வசந்த நவராத்திரி.
ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி.
புரட்டாசியில் சாரதா நவராத்திரி.
தை மாதத்தில் சியாமளா நவராத்திரி.
ஒவ்வொன்னும்தனித்தனியா உபவாசம் இருந்து கொண்டாடறாங்க. ஆனால் (எனக்குத் தெரிஞ்சவரை) கொலு வைக்கும் பழக்கம் அங்கில்லை
வாங்க தியானா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க துளசி, வாழ்க வளமுடன்.கொலு நல்லா இருக்கா? மகிழ்ச்சி. பைன்கோன் ஜடியா நன்றாக இருக்கா ! மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு//பெண்கள் பண்டிகைன்னு சொல்றோமே தவிர முக்கால்வாசி வேலைகள் செய்வது ரங்க்ஸ்கள்தான்:-)//
ஆம்,அவர்கள் உதவி இல்லை என்றால் எப்படி நம்மால் பண்டிகைகளை கொண்டாட முடியும்.
நவராத்திரி நாட்களில் விரதமிருந்து திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையை வழிபட்டும், வீடுகளில் அம்பிகையை எழுந்தருளச் செய்து ஆராதனை செய்தும், தேவிமகாத்மியம், படிக்கும் வழக்கம் உண்டு.
வட நாட்டில் மண்ணால் உருவம் செய்து 9 நாட்களும் வழிபட்டுவிட்டு பின் கரைத்து விடுவார்கள்.
கல்கத்தாவில் இந்த விழா எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.
நம் மாதிரி அவர்கள் துர்க்கையை அலங்காரம் செய்து வீடுகளில் பூஜை செய்வார்கள்.
கொலு இல்லையென்றாலும் அம்பிகை வழிபாடு உண்டு என்று தெரிகிறது.
தேவிமாகாத்மியத்தில் இப்படி சொல்லப்படுகிறது:-
//தேவீமாகாத்மியத்தைக் கேட்ட சுரதன் என்ற வேந்தனும், சமாதி என்ற வைச்யனும் நதியின் திட்டில் மூன்று ஆண்டுகள் நியமத்துடன் மண்ணால் உருவம் செய்து வைத்துப் பூஜித்தனர். அம்பிகை பிரத்யக்ஷமான போது வைசயன் வைராக்யம் மேலிட்டு ஞானத்தை வேண்டினான் , அரசனோ மறுபிறவியிலும் நீங்காமல் இருக்கும்படி இழந்த அரசை விரும்பினான். அம்பிகை அவ்வவ்விதமே அருளினாள்.அவ்வரசனே மறுபிறப்பில் சூரியனுக்குப்பிறந்து ஸாவர்ணி என்ற மனுவாக ஆனான் என சொல்கிறது //
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி துளசி.
வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
பேரனை வாழ்த்தியதற்கு நன்றி. உங்களை போன்றவர்களின் வாழ்த்து அவனை நலமாக இருக்க செய்யும்.
வாங்க ரமணிசார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வீட்டில் அனைவரும் கொலு பார்த்தது மகிழ்ச்சி. உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கு நன்றி.
அன்பு வல்லி அக்கா, வாழக வளமுடன்.
பதிலளிநீக்கு//அங்கே கோவிலில் கூடக் குட்டி பொம்மைகள் கிடைக்குமே.
தங்கள் நவராத்திரி சிறக்க வாழ்த்துகள் மா. வாழ்க வளமுடன்.//
உங்கள் வாழ்த்துப்படி பொம்மை வாங்கி வைத்து நவராத்திரி சிறப்பாகி விட்டது.
//அருமை. மகனுக்கும் மருமகளுக்கும் ,தங்கள் உறுதுணைவருக்கும், பேரனுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.//
உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி, மகிழ்ச்சி அக்கா.
வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குஉங்கள் விருபப்படி தீபாவளி பதிவும் இறைவன் அருளால் பகிரலாம்.
வாங்க கேபி.ஜனா சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபேரனின் கொலு, மற்றும் கொலு படங்களை ரசித்தமைக்கு நன்றி.
சுண்டல் செய்யும் மாடர்ன் அடுப்பு பேரனின் விளையாட்டு அடுப்பு அவன் அதில் சுண்டல் செய்வது போல விளையாடினான், கொலு சாமிக்கு எங்களுக்கு எல்லாம் சமைத்து தருவான்.
//பண்டிகைகள் நமது அன்றாட வாழ்வில் விழும் தொய்வைப் போக்கி உற்சாகமளிக்கவே!//
ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை
தான்.
உங்கள் வரவுக்கும், உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் நன்றி ரஞ்சனி.
வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபேரனின் கொலு , மற்றும் மருமகள் கைவண்ணம், மற்றும் அலங்காரங்களை க்ணடு மகிழ்ந்தது மகிழ்ச்சி.
//மனதிற்கு இனம் புரியாத அமைதியையும் ஆறுதலையும் தருகிறது உங்கள் பதிவு! //
மிகுந்த சந்தோஷம் இளமதி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.
வாங்க கலியபெருமாள், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//மனதிற்கு மகிழ்வும் உறவுகளின் உன்னத்தை விளக்கும் விழாக்கள் அவசியமே...//
நீங்கள் சொல்வது உண்மை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//சுண்டலும் பொம்மை தானோன்னு பயந்தேன்.//
பேரனின் சுண்டல் செய்யும் அடுப்பில் பொம்மை மாதிரிதான். சுண்டல் போல செய்து தருவான்.
மருமகள் நிஜ சுண்டல் செய்தாள் பயப்பட வேண்டாம்.
நம்மபண்பாடு மறக்காம அங்கேயும் சிறப்பாக கொண்டாடியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிகவும் அழகான கொலு. பேரனின் கொலு அழகு. அழகாய் நேர்த்தியாய் தன் விளையாட்டுப் பொருட்களை அடுக்கி கொலு அமைத்தக் குழந்தைக்கு வாழ்த்துக்கள். பணிச்சுமை மற்றும் பல மன அழுத்தங்களிலிருந்து விடுபடவும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவும் இது போன்ற பண்டிகைகள் உதவுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. தங்கள் மனம் நோகவிடாமல் கடைசி நிமிடத்தில் கொலு ஏற்பாடு செய்த மகன் மருமகளுக்குப் பாராட்டுகள். மொத்தத்தில் இந்த வருட கொலுவும் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது அல்லவா?
பதிலளிநீக்குஅழகான கொலு..பண்டிகைகளில் இந்த நவராத்ரிதானே நம்போன்ற பெண்களுக்கு உர்சாகமானது? அதிலும் உறவுகள் நட்புகள் அபூர்வமாகிவிட்ட நிலையில் பண்டிகை நம்மை மறுபடி சேர்க்கிறது உண்மைதான்..கொலுல பேரன் கைவண்ணம் ஜோர்!
பதிலளிநீக்குஅழகான கொலு... படங்கள் எல்லாமே அழகாக இருந்தும்மா.
பதிலளிநீக்குபேரனின் கொலுவும் சூப்பர்...
பண்டிகைகள் மனதை உற்சாகப்படுத்தும் என்பது உண்மை தான்.
வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு40வருடங்கள் கொலுவைத்து கோலகலமாய் கொண்டாடியதை கேட்க மகிழ்ச்சி, வயது ஆக ஆக முடிந்தவரை போதும் என்ற எண்ணம் வருவது இயல்புதானே!
கடவுள் அருளால் எப்படியோ பண்டிகை கொண்டாட முடிவது ஆனந்தம் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுழந்தை போல் ரசித்து பார்த்தீர்களா?
மகிழ்ச்சி.
பேரன் சிவா கார் பிரியனா !
குழந்தைகள் விளையாட்டு சாமான்கள் நம்மை குழந்தை ஆக்குவது உண்மைதான்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
வாங்க சுரேஷ், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும், கொலுவை ரசித்து கருத்து சொன்னதற்கும் நன்றி.
நவராத்திரி வாழ்த்துக்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.
வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
கவியாழி கண்ணதாசன், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குபேரனின் விளையாட்டு சாமான்களை அடிக்கி வைப்பதே தினம் வேலை.
கொலுவில் வைத்தவுடன் மீதி விளையாட்டு சாமான்களை வைத்து குழந்தை விளையாடினான் அதற்கே அவனை பாராட்ட வேண்டும்.
மகன், மருமகள், பேரனை பாராட்ட வேண்டும்,நீங்கள் சொன்னது போல் இந்த கொலுவை மறக்கமுடியாது .
எல்லோரும் மகிழ்ச்சியாய், நோய், நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான் இந்த அம்மாவின் பிராத்தனை.
உங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி கீதமஞ்சரி.
வாங்க ஷைலஜா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களின் நவராத்திரி பதிவுகள் நன்றாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் பெண்களுக்கு உற்சாகம் தரும் பண்டிகைதான். நவராத்திரி பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் நாட்கள் அல்லவா! கோலம், பிரசாதங்கள், மற்றும் கைவேலைகளின் திறமை, எல்லாம் காட்ட நல்ல சந்தர்ப்பம். உறவுகள், நட்புகள் இணைக்கும் பாலம் தான் பண்டிகைகள் அதற்கும் பெண்கள் தானே காரண்மாய் இருக்கிறோம். பேரனை பாராட்டியதற்கு நன்றி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.
வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஸ்ரீரங்கம் கொலு மிக அருமையாக இருக்குமே! ஒவ்வொரு வீடுகளிலும், கோவில்களிலும் விழா சிறப்பாக நடக்குமே!
ரோஷ்ணி மகிழ்ச்சியாக எல்லாவற்றையும் ரசிப்பாள் என நினைக்கிறேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஆதி.
அருமை அம்மா, விழா என்பதை எல்லோரையும் மகிழ்விக்ககூடிய உன்னத விடயம். தங்கள் கொலு- ரசிப்பு. பகிர்வுக்கு நன்றீங்க அம்மா.
பதிலளிநீக்குவாங்க பாண்டியன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.
தொடர்வருகைக்கு நன்றி.
கொலுவும் அதன் பகிர்வும் நன்று...சிறப்பு
பதிலளிநீக்குகுழந்தைகள் போல ஆhவமாக பெரியவர்களும் செய்யும் ஓரு தெய்வீகம் இது.
மகிழ்ச்சி.
வேதா. இலங்காதிலகம்.
வாங்க வேதா.இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும்,அருமையான கருத்துக்கும் நன்றி.
அழகான கொலு
பதிலளிநீக்குஅருமையான விளக்கங்கள்
பேரனுக்கு வாழத்துக்கள்
அப்பாதுரை கூட உங்க கொலுவுக்கு வந்துட்டார். ஃப்ளைட்லே வந்திருப்பார். :))) நான் தான் லேட்! :))) என்றாலும் கரெக்டா சரஸ்வதி பூஜை அன்னிக்குச் சிறப்பு நிவேதனம் எடுத்துக்க வந்துட்டேன்.
பதிலளிநீக்குமசால் தோசை எல்லாம் வேண்டாம். அலுத்துப் போச்சு. சுண்டல் போதும். இந்த அடுப்பில் சுண்டல் எப்படிச் செய்வதுனு பதிவு போட்டுட்டுச் சொல்லுங்க. சுண்டல் தீர்ந்து போவதற்குள் வந்துடறேன்.
நீங்க நவராத்திரியிலே பிசி போல; அதான் அங்கே ஆளையே காணோம். :)))))
//எனது மகன், எப்போதும் தன் அலுவலக் வேலையின் நினைவில், என்ன சாப்பிட்டோம், என்று தெரியாமலும், குழந்தையோடு விளையாடக்கூட நேரம் இல்லாமலும் தினமும் இரவு வெகுநேரம் வேலை செய்துகொண்டு இருந்தான். இரண்டு நாட்களாகக் கொலு வைக்கும் வேலையில், பழைய உற்சாகம் தொற்றிக் கொள்ள, வேலைகளை மறந்து , மகிழ்ந்து இருந்ததைப் பார்க்கும் போது இது போல பண்டிகைகள் மனதைக் குதூகலப்படுத்தி மேலும் தெம்பாய் வேலைகளை செய்ய வைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.//
பதிலளிநீக்கும்ம்ம்ம்... அங்கே எல்லாருமே இப்படித் தான் இருக்காங்க. எங்க பையர், மாப்பிள்ளையும் இப்படித் தான். பெண்,மருமகளும் வேலைக்குப் போறச்சே இப்படித் தான். இப்போ இரண்டு பேரும் வேலையை விட்டுட்டாங்க. எத்தனை நாளைக்குனு தெரியலை. :))))
20011 ஆம் வருஷம் தீபாவளிக்கு யு.எஸ்ஸில் இருந்தோம். எங்க பையர் எங்களுக்காக லீவு போட்டுவிட்டுக் காலம்பர எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துக் கோவிலுக்கு அழைத்துப் போனார். பல வருடங்கள் கழிச்சுப் பையரோடு கொண்டாடிய தீபாவளி அது. அவர் கல்யாணம் ஆனதும் தலைதீபாவளி கூட அங்கே தான். ஆக அவர் மனைவியோடும் எங்களோடும் கொண்டாடிய தீபாவளி 2011--ஆம் வருடம்.
பதிலளிநீக்குஎன்ன இருந்தாலும் இதிலெல்லாம் இந்தியாவை அடிச்சுக்க முடியாது தான். :((((
பதிலளிநீக்குவாங்க முருகானந்தம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
.
பேரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
வாங்க கீதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவு மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது போல்
அப்பாதுரை ஃப்ளைட்லே
வந்துட்டார்.
நீங்கள் லேட்டாக வந்தாலும் சரஸ்வதி பூஜைக்கு வேறு நிவேதனங்கள் வைத்து இருக்கிறேன்.
இந்தமுறையும் பேரன் சுண்டல் செய்யவில்லை, பிஸ்கட், ஜூஸ், மிட்டாய் தான் எடுத்துக் கொள்ள வாருங்கள்.
நீங்கள் தீபாவளி சமயத்தில் மகனுடன் இருந்த மாதிரி நாங்களும் இந்த முறை மகனுடன் இருக்க போகிறோம் தீபாவளிக்கு.
ஒருவர் வேலைக்கு போகும் போதே கஷ்டமாய் உள்ளது இங்கு. இருவரும் வேலைக்கு போய் விட்டால் மிகவும் கஷ்டம் நமக்கு.
நாம் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இங்கும் கூட்டு குடும்பம் இருக்கிறது. தாத்தா, பாட்டி பள்ளிக் கொண்டு விடுவது கூட்டி போவது பேரன், பேத்திகளை அழைத்துக்கொண்டு பார்க், கடை என்று வருக்கிறார்கள்.
வயதான மனிதர்களை வீல் சேரில் வைத்து அழைத்து செல்லும் இளையவர்களைப் பார்த்தேன்.
உங்கள் வரவுக்கும், அருமையான நான்கு பின்னூட்டங்களுக்கும் நன்றி.
உங்கள் நவராத்திரி பதிவுகளை ஆற அமர படிக்க வேண்டும். வருகிறேன்.
பண்டிகைகள் மனதுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருவன.
பதிலளிநீக்குஅழகிய அலங்காரம் வாழ்த்துகள்.
வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபண்டிகைகள் மனது மகிழ்ச்சியும், உற்சாகமும் தருவது உண்மைதான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.
//எங்கள் ஊரில் வீட்டில் டிரங் பெட்டியில் இருக்கும் பொம்மைகளை மனதால் நினைத்து, கொலுப் படியில் எழுந்து அருளச் செய்து வழிபட்டேன். இந்த வருடம் இப்படித்தான் மானசீக கொலு என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.//
பதிலளிநீக்குமானசீக கொலு!.. அற்புதமாத வார்த்தைப் பிரயோகம்!
என் 'இனி' கதை நினைவுக்கு வந்தது. 'மனதால் நினைத்து, கொலுப் படியில் எழுந்து அருள..'
நினைப்பின் தீவிர ஆளுகையில் அதுவும் உங்களால் முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமான்சீக கொலுவை ரசித்தமைக்கு நன்றி.
விஜயதசமி அன்று இரவு பொம்மையை படுக்க வைத்து விடுவோம்.
அப்புறம் மறு நாள் பொம்மைகளை எடுத்து வைப்போம். மனதால் கொலுப்படியில் எழுந்து அருள செய்தது போல் எப்போதும் படுக்க வைக்கும் நாரதர் பொம்மையை படுக்க வைத்தேன்.
இன்று எல்லாம் டிரங் பெட்டிக்கு போய் விடும்.
//விநாயகர் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்வார். நம் சந்தோஷம் தான் அவருக்கு முக்கியம்.//
இந்த பின்னூட்டம் நீங்கள் வந்தார், விநாயகர், தந்தார் அருளை என்ற பதிவுக்கு.
அது போல சரஸ்வதி பூஜைக்கும் கணவர் சரஸ்வதி செய்வார் அங்கு செய்தது போல் இங்கு செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு இடம் இல்லாமல் அம்மன் அழகாய் அவளுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்க வைத்து எங்களை சந்தோஷப்படுத்தினார். உங்களை நினைத்துக் கொண்டேன்.
தெய்வ வாக்கு போல் அல்லவா சொன்னீர்கள்.
உங்கள் இனி கதை நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி சார்.
நீங்கள் உணர்ந்தவைகளையும் மற்றவர்கள் உணர்ந்த அனுபவங்களையும் தானே கதையில் கொண்டு வருகிறீர்கள்.
உங்கள் வரவுக்கும், அருமையான பின்னூட்டங்களுக்கும் நன்றி சார்.
முதன்முதலில் வைக்கும்போது மரப்பாச்சி பொம்மை வைக்கவேண்டும் என்பது எனக்குச் செய்தி.
பதிலளிநீக்குஒருவாரத்துக்கு முன்பே வந்திருக்கவேண்டும் என்றார். அப்போ அங்கேயும் ஆர்வமாய் கொலு.வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள். விற்பனையாளர் அவர்கள் ஊர்க் காரரா, நம்நாட்டுக் காரரா?
கச்சிதமாய் அழகாய் மினி கொலு.
இழந்த உற்சாகங்களை மீட்டுத் தருகிறதென்றால் அதைவிட வேறென்ன வேண்டும்?
வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமுதன் முதலில் ஆரம்பிக்கும் போது மரபாச்சியுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்வார்கள் தஞ்சாவூர் பக்கம்.
பொம்மை விற்பவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர்.
புதிய தலைமுறையில் அன்று அமெரிக்கா கொலு என்ற போது நியூஜெர்சி கொலுதான் காட்டினார்கள், மிகவும் பெரிதாக கொலுவைத்தவர்கள் வீட்டை காட்டினார்கள்.
அந்த அம்மாக்களிடம் பேட்டி எடுத்த போது அவர்கள் சொல்வது 100 அழைப்பு கடிதம் வருகிறது எப்படி எல்லா வீட்டு கொலுவுக்கும் போவது என்கிறார்கள். குழந்தைகளுக்கு நம் விழாக்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் இது போல பண்டிகை கொண்டாட வேண்டும் என்று பேசினார்கள்.
கொலுவை பாராட்டியதற்கு மிகவும் நன்றி.
ஆம் 10 நாட்களும் மகன் மிகவும் உற்சாகமாய் இருந்தான், அது தானே வேண்டும் இந்த அம்மாவுக்கு.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்.