திங்கள், 19 டிசம்பர், 2016

என்ன பார்வை ! என்னபார்வை!

எங்கள்  வீட்டுக்கு வந்த பறவை - கழுகு இனத்தை சேர்ந்த  வல்லூறு  விரைவாக பறக்ககூடிய பறவை. 290 கி.மீ 

//வல்லூறு (Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது. கீழே பாய்ந்து இரையைக் கொல்லும் பொழுது மணிக்கு 290 கி.மீ விரைவிலே பறக்க வல்லது. விலங்கு உலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை இந்த வல்லூறுதான். வல்லூறு வலுவாக பறந்துகொண்டே தன்னைக்காட்டிலும் உருவில் பெரிய பிற பறவைகளைக் கொல்ல வல்லது. மிக விரைவாக உயரப் பறந்து செல்லும்; வாத்துபுறாவினங்களை இது மிக எளிதாகத் தாக்கிக் கொல்லும். வல்லூறு சுமார் 46 செ.மீ நீளம் கொண்டது. இதன் இறக்கைகளின் நீளம் 106 செ.மீ.//

நன்றி விக்கிமீடியா.


 எங்கள் வீட்டுக்கு தண்ணீர் குடிக்க குளிக்க வந்தது நேற்று. 

மார்கழி வந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகம் அதனால் தண்ணீர் தாகம் வெயிலின் வெப்பம் தணிக்க  தண்ணீரில் சிறிது நேரம் அமர்வு. 
இந்தப் பக்க பார்வை
அந்தப் பக்கம் பார்வை
ஜன்னல்வழியாக என்னைப் படம் எடுக்கிறாயா? என்று ஒரு மேல் நோக்கிய பார்வை
                              சரி, சரி  தண்ணீர்  குடித்துவிட்டுப் போகிறேன்.

                                                         வாழ்க வளமுடன்!
*********************************************************************************

32 கருத்துகள்:

  1. பறவையை பறவை பார்வையில் எடுத்திருந்த படங்கள் அருமை. வல்லூறு ஐ பற்றிய விவரங்களும் சுருக்கமாக இருந்தாலும் சிறப்பாக இருந்தன. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. கொஞ்சம் ரஸ்னா கொடுத்து அனுப்பி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான புகைப்படங்கள்
    குறிப்பாக முறைக்கிற படம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. கொடுத்து வைத்த பறவை..

    தனக்கும் இப்படியொரு யோகமா!.. என்று மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கும்...

    என்னதான் கோபம் வேகம் எல்லாம் இருந்தாலும் -
    தாகம் என்று வந்து விட்டால் கீழிறங்கித் தான் ஆகவேண்டும்..

    மனிதர்கள் தான் இதனை உணர்ந்தார்களில்லை!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.
    என் தளத்தை இப்போது பார்க்க முடிகிறதா?
    நீங்கள் சொல்வது போல் அடுத்தமுறை வரும் போது
    கொடுத்துவிடுகிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    நன்றாக சொன்னீர்கள்.
    உங்கள் கருத்துக்கு, வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வெவ்வேறு ஆங்கிளில் பறவையின் படங்கள் மிகவும் அருமையாக எடுக்கப்பட்டுள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    திரு. துரை செல்வராஜூ அவர்களின் பின்னூட்டக் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள். :)

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் கோபலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    படங்களை பாராட்டியதற்கு நன்றி சார். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி .

    துரைசெல்வராஜூ சார் பின்னூட்டம் பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  11. உங்களின் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. They fly high because they think they can. முடியும் என்றால் முடியும் என்பதற்கு இந்த வகைப் பறவை இனங்கள் சரியான உதாரணம்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார். வாழ்க வளமுடன்.
    நல்ல தகவல் சொன்னீர்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. தெளிவாக படம் எடுக்க அனுமதித்திருக்கிறார் அந்த சிறப்பு விருந்தினர். மேல்நோக்கிய அதன் அந்த முறைப்பு பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    தண்ணீர் தொட்டியில் வந்து உட்காரும் போது வித்தியாசமான சத்தம் கொடுத்தார், எப்போதும் கேட்கும் பறவையின் சத்தம் இல்லையே என்று ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தேன்..அதனால்தான் சிறப்பு விருந்தினரை படம் எடுக்க முடிந்தது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. இது கழுகின் ஒரு பிரிவுபோல் தெரிகிறது. நிச்சயமாக வல்லூறு இல்லை. வல்லூறு (vulture?) பிணம் தின்னிக் கழுகு என்று அழைக்கப்பட்டாலும் அது மிகப்பெரியது, நீளமான கூரிய அலகு (பிணத்தைக் கொத்தி இழுக்க) கொண்டது. அதன் இறக்கை ஒவ்வொன்றம் மூன்று அடிக்குக் குறையாது. அதன் குஞ்சே பெரிய வல்லூரின் சிறுய தோற்றமாக இருக்கும்.

    நீங்கள் போட்டிருக்கும் படங்களில் ஒன்றில்தான் இது புறா அல்ல, கழுகுக் குஞ்சு என்று தெரிகிறது. சமயத்தை விட்டுவிடாமல் படம் பிடித்துவிட்டீர்களே! பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.

    //வல்லூறு (Falcon) என்பது உருவில் சற்று சிறிய ஒரு கழுகு இனம். இது மிகவும் விரைவாகப் பறக்க வல்லது.//

    உருவில் சற்று சிறிய கழுகு இனம் என்று தான் விக்கிமீடியா போட்டு இருக்கிறது.
    .

    சின்ன வல்லூறு, ஓணாங்கொத்தி, பைரி என்று பல பெயர்களில் அழைக்கப் படும் என்று இதைப்பற்றி விவரங்கள் படித்தேன்.
    சிறியனவாய் இருந்தாலும் வலிமை வாய்ந்த கால்களையும் கால் நகங்களையும் உடைய இப்பறவைகள் வேட்டை விலங்குகளை கண்டதும் ஒலிஎழுப்பி எஜமானை விளிப்பூட்டவும் செய்யும்.

    இராசாளி; வைரி என்ற வகை பறவைதான் பிணங்களை சாப்பிடும்.


    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அருமையான பகிர்வு
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
  21. மிக அருமை. கம்பீரமான நேருக்கு நேரான கூர்ந்த இதன் பார்வையை நானும் சந்தித்திருக்கிறேன். கேமராவை எடுத்து வந்ததும் பறந்து விட்டது. உங்களுக்கு நிதானமாக போஸ் கொடுத்துள்ளது:).
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஜீவலிங்கம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    அந்த பறவைக்கு தெரியாமல் தான் எடுத்தால் தான் உண்டு.
    ஜன்னல்வழியாக அதற்கு தெரியாமல் எடுத்தேன், நீங்கள் எடுத்தால் இன்னும் அழகாய் எடுப்பீர்கள்.
    உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம்
    அம்மா

    சிறப்பான பதிவு படங்கள்ஒவ்வொன்றும் அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. இது ஶ்ரீரங்கத்தில் எங்க பால்கனிக்கும் அடிக்கடி வரும். புறாக்களில் பெரிய வகை என நினைத்திருந்தேன். வல்லூறு என்பதை இப்போது தான் அறிந்தேன். :) படங்கள் எல்லாம் அருமை. எப்படி எடுத்தீங்க அதுக்குத் தெரியாமல்?

    பதிலளிநீக்கு
  27. திரு நெல்லைத் தமிழன் சொல்லி இருப்பதை இப்போது தான் பார்த்தேன், படித்தேன். உண்மையில் வல்லூறுப் பறவைகளை ராஜஸ்தான், குஜராத் மற்றும் வட மாநிலங்களில் அதிகம் பார்க்க முடியும். ஆகையால் தான் இது சின்னதாக இருக்கே, புறா இனமோ என்று தோன்றியது. வல்லூறு ஒன்று இறக்கையை விரித்து மேலே சூரியனுக்கு நேரே பறந்தால் சூரிய ஒளியை மறைக்கும். என்ன பறவைனு கண்டு பிடிக்கலாம். :)

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    படங்கள் ஜன்னல் வழியாக எடுத்தேன்.
    விக்கிமீடியாவில் இது வல்லூறு என்று தான் போட்டு இருந்தது,
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. படங்கள் அனைத்தும் அழகு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு