சனி, 9 ஜூலை, 2016

ஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில்

மதுரையிலிருந்து 15 கி.மீ தூரத்தில், அழகர் கோவிலுக்கு இரண்டு கி.மீபக்கத்தில் இருக்கிறது இந்த ஸ்ரீ பத்திரி நாராயணர் கோவில்.

வேப்பமரத்தின் நிழலில் அழகான மண்டபம்.


 
வடக்கில் உள்ள பத்ரிநாத் ஸ்தல பெருமை  சொல்கிறது  

 

திருமங்கையாழ்வாரின்  பாடல்களும்,  வடக்கில் உள்ளது போல் இங்கு அமைக்க பட்டதற்கு காரணமும் எழுத பட்டு இருக்கிறது.

மூலவர்  ஸ்ரீ பத்ரி நாராயணருக்கு  இலந்தைமரமாக வடிவெடுத்து நிழல் கொடுத்த வரலாறு. 


மூலவர் இருக்கும் விமானம்   இலந்தை மர நிழலில் 
இலந்தை மரம் லட்சுமி  அல்லவா ?அவரை வலம் வந்து வணங்க சொன்னார் பட்டர்.
இலந்தை இலை தெரிகிறதா?

சிறு மண்டபத்தின் உள்ளே நாமம்  தெரிவது பண்டரி நாதர் பக்கத்தில் இருப்பது ருக்மணி.

இந்த கோவில் கட்டியவர் காசி போனபோது கங்கையில் நீராடிய போது அவர் கையில் தட்டுப்பட்டதாம்  ஒரு கல்  அவர்  இந்த கல்லை என்ன செய்வது என்று சான்றோர்களை கேட்டபோது உன் கோவிலில் வை என்று உத்தரவு வந்ததாம்.   அப்போது அவர் கோவில் கட்டவில்லை.
அதன் பின் சிறு மண்டபத்தில் பண்டரிநாதராகவும், ருக்மணி தாயாராகவும் வழி பட்டு வந்து இருக்கிறார்.  அதன் பின்  ஸ்ரீ பத்ரி நாராயணர் கோவில் கட்டிய பின்  முன் புறம் ஸ்ரீ பத்ரி நாராயணரும், பின்புறம் இலந்தைமரமும் வைத்து இருக்கிறார்.

                 

ஸ்ரீபத்ரி நாராயணரை சுற்றி வந்து வணங்குவதற்கு சின்ன பிரகாரம் உள்ளது. அதில் துளசி, மஞ்சள், பச்சை கனகாம்பர செடிகள் வளர்ந்து அழகாய் காட்சி அளிக்கிறது. இலந்தை மரத்தின் நிழல் விழுந்து இருப்பதால் உங்களுக்கு  துளசி செடி மட்டும் தெரியும். இந்த படத்தில்.
விநாயகர் சிலை பெரிதாக தனி சன்னதியில் இருக்கிறார். அரசும், வேப்பும் முன்புறம் இருக்கிறது. விநாயகருக்கு கீரீடம்,  மற்றும் கவசங்கள் தங்கம் போல் மின்னியது .


அரசும், வேம்பும்

மண்டப வாசலை தாண்டி உள்ளே  சிலபடிகள் ஏறி போனால் சின்ன கருடாழ்வார் நடுவில் இருக்கும் ஸ்ரீ பத்ரி நாராயணரை வணங்கியபடி இருக்கிறார். அப்புறம் இடது புறம் முதலில் அழகான அனுமன்.

அடுத்து  அரவிந்தவல்லி தாயார் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார் பட்டர். அடுத்து ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் மண்டியிட்ட தோற்றத்தில் இருக்கிறார்.  முன்புறம் அழகான உற்சவ விக்கிரங்கள். கண்கவர் அழகு.

மூலவர்  வடநாட்டில் உள்ள பத்ரிநாராயணரை விட பெரிது. வடநாட்டில்  உள்ள பத்ரிநாராயணரை கஷ்டபட்டு பயணம் செய்து  போய் கருவரையில் இருக்கும் பத்ரிநாராயணரை வரிசையில் நின்று சாமி பக்கத்தில்   போய் தரிசிக்கும்   போது கைபிடித்து இழுத்து நகர சொல்லிவிடுவார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை பட்டர்  நமக்கு  உள்ளே யார் யார் இருக்கிறார்கள் என்பதை அழகாய் விளக்கி தீபத்தை காட்டி விளக்கினார். பக்கத்தில் பார்க்கலாம் .   பத்ரி நாதர் கண் மூடிய நிலையில் தியானத்தில்  இருக்கிறார்.  வலது பக்கம் குபேரன், கைகூப்பிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இடது புரம் நரநாராயணர்கள் , கீழே எப்போது நாராயண நாமம் சொல்லிக் கொண்டே இருக்கும் நாரதர்,  கருடன், கண்ணனின் பரம பக்தர் உத்தவர் பஞ்சலோக சிலைகள் அழகாய் இருப்பதை காட்டினார். 

வலது புறம் சங்கரர்  இருக்கிறார்.  உற்சவ விக்கிரங்களை வைக்க இருப்பிடங்கள் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.(பத்திரபடுத்த).

அமைதியான அழகான கோவில். வயதான பட்டர் எங்கு இருந்து வருகிறீர்கள் என்று கேட்டு கதைகளை சொல்லி  பிரசாதங்கள் கொடுத்தார்,

ஆங்கில மாத முதல் ஞாயிறும், தமிழ் மாதம் முதல் ஞாயிறும் மாலை பஜனை உண்டாம் அப்போது மட்டும் கோவில் எட்டுமணிக்கு மேல் வரை திறந்து இருக்கும்.  மற்ற நாட்களில்  இரவு 7.30க்கு எல்லாம்  நடை சாற்றப்படும்.


நாங்கள் வடநாட்டில் உள்ள ஸ்ரீ பத்ரி நாராயண கோவில் பத்ரிநாத்  தரிசனம் செய்ததைப்பற்றி எழுதிய பதிவின் சுட்டி. விரும்பினால் நேரம் இருந்தால் படிக்கலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

                                                             வாழ்க வளமுடன்.

22 கருத்துகள்:

  1. இதுவரை இக்கோயிலுக்குச் சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இனி அழகர் கோயிலுக்குச் செல்லும் போது ஸ்ரீ பத்ரி நாராயணர் கோயிலுக்கும் செல்ல வேண்டும்..

    நல்லதொரு தகவல் அளித்தமைக்கு மகிழ்ச்சி..

    நலமெலாம் பெருகட்டும்..

    பதிலளிநீக்கு
  3. புகைப்படங்களும் தகவல்களும் அருமை!

    பதிலளிநீக்கு
  4. அழகர் கோவில் சென்றிருக்கிறேன். பத்ரி நாதர் கோவில் சென்றதில்லை. உங்கள் பதிவைப் படித்ததும் அந்தக் குறை நீங்கியது.நல்ல விளக்கமான பதிவு. நன்றி கோமதி .

    பதிலளிநீக்கு
  5. //பனி "உரை"யக்கூடிய //

    :)))

    இந்தக் கோவில் நான் சென்றதில்லை! அழகிய படங்கள் அந்த இடத்தின் அழகாய்ச் சொல்கின்றன. அடுத்த முறை மதுரை வரும்போது பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  6. பத்ரிநாத்... வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். அதிலும் பனி, மழை, நிலச்சரிவு ஏற்பட்டால் பயணிகள் அங்கே செல்ல முடியாது. மதுரையில் பத்ரிநாத் கோவில் இருப்பது தெரியாத விஷயம். தகவலுக்கும் புகைப்படங்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

    பதிலளிநீக்கு
  7. அமைதியான சூழலில் அமைந்த அழகிய கோவில்.

    தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் டாக்டர், ஜம்புலிங்கம் சாஎ, வாழ்க வளமுடன்.
    வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வரலாம், அமைதியான அழகான கோவில்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    அருமையான கோவில் வாய்ப்பு கிடைக்கும் போது பாருங்கள்.
    உங்கள் கருத்துக்கும், வாழத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    இந்த கோவில் கட்டி பத்து வருடங்கள் தான் இருக்கும்.
    அடுத்தமுறை வரும் போது பாருங்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அருமையான தகவல். இதுவரை சென்றதில்லை.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    http://mathysblog.blogspot.com/2012/08/8.html

    நாங்கள் முன்பு வடக்கில் உள்ள பத்ரிநாத் கோவில் போன சுட்டி கொடுத்து இருந்தேன் பதிவில் எப்படி காணமல் போனது தெரியவில்லை.




    திருக்கேதாரத்தலப் பயணம் -பகுதி- 8 2012லில் எழுதிய பதிவில் சார்தம் என்று அழைக்கப்படும் கேதார்நாத், பத்ரி நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி போய் வந்த பதிவில் எட்டவது பகுதியில் பத்ரி நாத் பற்றி எழுதி இருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

    பனி உரைந்து எப்படி வழி எல்லாம் கிடக்கிறது என்று தெரியும். மிகவும் பனி சமயத்தில் உற்சவர் சாமியை கீழே கொண்டு வந்து விடுவார்கள் அங்கு கோவில் அடைக்கப்பட்டு விடும்.

    அடுத்த முறை அழகர் கோவில் போகும் போது வழியில் நிறைய கோவில்கள் இருக்கிறது பார்க்க ஒவ்வொன்றாக பார்க்கலாம் நேரம் கிடைக்கும் போது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது சரிதான் பனி, மழை சமயத்தில் பத்ரி நாத் செல்ல முடியாது.
    நாங்கள் போன போது பனிகட்டிகள் உருகி ஓடி வந்ததை பார்த்தோம், வழி எல்லாம் சுத்தம் செய்து கொண்டே இருந்தார்கள் இருபுறங்களிலும் பனியை ஒதுக்கி வழி செய்து தந்தார்கள். நீங்கள் அந்த கட்டுரை படித்தீர்கள் தானே!

    உங்கள் கருத்துக்கு நன்றி . அடுத்த முறை வரும் போது பாருங்கள் இங்குள்ள பத்ரிநாதரை.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் Jeevalingam Yarlpavanan Kasirajalingam, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ராமலக்ஷ்மி , வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ரிஷபன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அருமையான தகவல்கள், அழகான படங்கள் அக்கா. என் மாமி ப்த்ரிநாத் சென்று வந்தார்கள். இனிமேல் வந்தால் இங்காவது செல்லலாம்.
    பகிர்விற்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  19. அருமையான கோயில் அறிமுகத்திற்கு நன்றி! படங்கள் அழகு!

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு