சுதந்திரத்திற்காக எத்தனை எத்தனை வீரர்கள் முன்பு பாடுபட்டு இருக்கிறார்கள். அவர்களில் வீரன் அழகுமுத்துகோன் அவர்களும் ஒருவர் என்பதைத் திருநெல்வேலிக்குப் போகும் பாதையில் இருக்கும் அவர்களது நினைவு மண்டபத்தில் உள்ள வரலாற்றைப் படித்து தெரிந்து கொண்டோம்.
,கோவில்பட்டி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக 5 கி.மீ . தொலைவில் காட்டாங்குளம் கிராமம் உள்ளது.
அழகான தோரணவாயில்
போகும் பாதையில் வெகு தூரத்திற்கு ஆள் அரவம் இல்லை. இரண்டு பக்கமும் தரிசு நிலங்கள்
வீரன் அழகு முத்துகோன் நினைவு இல்ல வாயில்
நினைவு கல்வெட்டு
ஓவியம்
இளைய சமுதாயத்தினரும் தெரிந்து கொள்ள வேண்டிய வீரர்களது வாழ்க்கை வரலாறு.
வீரன் அழகு முத்துக்கோன் வீர வரலாறு
வீரத்தோற்ற சிலை
நினைவு இடத்திற்கு போன வருடம் ஜூன் மாதம் சென்று வந்தோம் நினைவு இடத்தை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் , சென்ற வருடம் முகநூலில் பகிர்ந்து இருந்தேன்.
”இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகு முத்து கோன் என்ற தலைப்பில் முனைவர் கே. கருணாகரப்பாண்டியன் வரலாற்று ஆய்வாளர் அவர்கள் எழுதி இருந்த கட்டுரை நேற்றைய தினமலரில் வந்துள்ளது..
இவரது கட்டுரையைப் படித்தவுடன் நேற்றே பதிவிட வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய் விட்டது.
நேற்று அவரது பிறந்த நாளில் பதிவிட முடியவில்லை. நெட் வேலை செய்யவில்லை. விட்டு விட்டு வந்தது ஓர், இரு படம் ஏற்றினேன் அப்புறம் நெட் முழுமையாக நின்று விட்டது. நேற்று இடம்பெறத் திருவுள்ளம் இல்லை என்று விட்டுவிட்டேன்.
என் கணவர் மொபைல் பார்ட்னர் முன்பு வைத்து இருந்தார்கள் அதில் கொஞ்சம் நெட் இருக்கும் போட்டுப் பார் என்றார்கள் இன்று . பின் அதன் மூலம் பதிவு ஏற்றி விட்டேன் வெற்றிகரமாய்.
வீரன் அழகு முத்துகோன் அவர்களுக்கு மனதார வீரவணக்கம் செய்யலாம் .
வருகைப் பதிவேட்டில் என் கணவர் கையெழுத்திட்டார்கள்
வாழ்க வளமுடன்
----------------------
அரிய தகவல்கள்....பல இடர்களுக்கு இடையே பதிவிட்டாலும்...மிகவும் அருமையான நிறைவான பதிவு....வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குவீரன் அழகு முத்துக்கோன் நினைவு நாளில் நிறைய விஷயங்களை அறியத் தந்தீர்கள்..
பதிலளிநீக்குநாட்டைக் காத்த நல்லோருக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலி..
அழகு முத்துக் கோன் நினைவு மண்டபம் 2004-ல் முதலமைச்சரால் திறந்து வைக்கப் பட்டது
பதிலளிநீக்குமுதலமைச்சர் ப்ட்யர் இல்லையே கல்வெட்டில் .....! படங்களுடனும் தகவல்களுடனும் பதிவு நன்று வாழ்த்துகள்
நல்ல கட்டுரை. நினைவு மண்டபம் பற்றிய தகவலுக்கும் வீரர் அழகு முத்துக்கோன் பற்றிய தகவல்களுக்கும் நன்றிம்மா....
பதிலளிநீக்குSuper sako
பதிலளிநீக்குNot open my Computer
நல்ல தகவல்கள். புகைப்படத்தின் தெளிவால் எளிதாகப் படிக்க முடிந்தது. வீரர் அழகுமுத்துக் கோனின் திரு உருவச் சிலை சென்னை கிண்டியிலும் திறக்கப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குமண்ணின் பெருமையினையும், விடுதலையின் பெருமையையும் பேசும் அருமையான கட்டுரை. அழகுமுத்துக்கோனை நினைவுகூர்ந்த விதம் பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குஅருமையான தகவல்கள் சகோ. புகைப்படங்களும் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் அனுராதா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇவ் பதிவு போடும் போது பல இடர்பாடுகள் தான்,
முடித்தவுடன் மனம் நிறைவு பெற்றது.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றி.
வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் நாட்டைக் காத்த நல்லவர்களுக்கு நாம அஞ்சலி செலுத்துவது நம் கடமைதான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் பலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅங்கு முதலமைச்சர் பேர் இடம்பெறவில்லை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் தேவகோட்டை, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅலைபேசியில் பார்த்தீர்களா?
எப்படி சூப்பர் என்று சொல்கிறீர்கள்?
உங்கள் கணினியில் ஏன் என் பதிவு தெரிய மாட்டேன் என்கிறது?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇணைய தொட்ர்ப்பு கிடைக்கவில்லை அதனால் மறுமொழி காலதாமதம்.
அழகுமுத்துக் கோனின் திரு உருவச் சிலை சென்னை கிண்டியிலும் திறக்கப்பட்டுள்ளது.//
கிண்டியிலும் திறக்கப்பட்டு இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் ஜமபுலிங்கள் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.
வணக்கம் சகோ சாரதா , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வரலாறு அறியத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇது போன்ற தலைவர்களை அவர்களின் தன்னலமற்ற வீரத்தை சாதிக் கூண்டுக்குள் அடைத்து விடுகிறார்கள்.
வேதனையான விசயம் இது.
வணக்கம் சிவகுமாரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
நீங்கள் சொல்வது சரிதான், சாதிக் கூண்டுக்குள் அடைப்பது வேதனையான விசயம் தான்.