சனி, 11 ஜூன், 2016

கர்னூல் கொண்டாரெட்டி கோட்டை

ஸ்ரீசைலம் கோவில், ஆலம்பூரில் உள்ள நவப்பிரம்மா கோவில் பார்த்தபின்  கர்னூலில் உள்ள கொண்டாரெட்டி கோட்டை பார்த்ததை இந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறேன்.  அந்தக்கால கட்டடக் கலைக்குச் சான்றாகக் காலங்கள் கடந்தும் உயர்ந்து நிற்கிறது, தன்னுள் நிறைய கதைகளைப் பொதிந்து வைத்துக் கொண்டு.

இந்தக் கோட்டை, கர்னூல்  நகரத்தின் நடுவில்  உள்ளது. விஜய நகரப் பேரராசு வம்சத்தை  சேர்ந்த அச்சுததேவராயுலு என்ற மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கிருந்து கிருஷ்ணாநதியை தாண்டிஉள்ள ஆலம்பூர் வரை சுரங்கப் பாதை உள்ளதாகக்  கூறுகிறார்கள்.  சுரங்கபாதையைப் பூட்டி வைத்து இருக்கிறார்கள்.


ஆலம்பூர் அரசராக  இருந்தவர்  கொண்டா ரெட்டி  (1597 - 1643 ) , இவர் கோல்கொண்டா அரசர்களின் கீழ் ஆண்ட கர்நூல் நவாபினால் சிறைபிடிக்கப்பட்டார்.இவரைக்  கர்னூல் கோட்டையில் வைத்து இருந்தார்கள்.

கொண்டா ரெட்டி,  சிறைச்சாலையிலிருந்து  இங்குள்ள சுரங்கப்பாதை வழியாகத் தப்பித்து ஆலம்பூர் அரண்மனை சென்றார் என்றும் , அவர் ஆட்சி செய்த பகுதிகள் கோல்கொண்டா அரசர்களின் கீழ் வந்ததும்  என்றும் சொல்கிறார்கள். கொண்டாரெட்டி  இந்த   கோட்டையில்  சிறைவைக்கப் பட்டதால் அவர் நினைவாகக்  கோட்டைக்கு  அவரது பெயரை வைத்து,      நினைவுக்கோபுரமும் அமைக்கப்பட்ட தாகச்  சொல்லப்படுகிறது.

இந்தக் கோட்டை ’எர்ரா புருஜூ’ என்று அழைக்கப்படுகிறது.
’எர்ரா புருஜு’ என்பதற்கு ,’ சிவப்புத்  தண்ணீர்த் தொட்டி’ என்று அர்த்தமாம்.

நகரின் மையப் பகுதியில் இருப்பதால்  மக்களுக்கு மாலை நேரக் காற்று வாங்க நல்ல பொழுது போக்கும் இடமாய் இருக்கிறது.
கோட்டை மேல் இருந்து பார்த்தால் ஆட்டோக்கள் தான் அதிகம் தெரிகிறது.

பக்கத்தில் காவலர்களின் பயிற்சித்  திடல் உள்ளது. குடியரசுதினத்திற்காகக் காவலர் அணிவகுப்பு ஒத்திகை பார்க்கப்பட்டுக் கொண்டு இருந்தது வெகு அழகாய் இருந்தது.
போட்டோவும் காணொளியும் எடுத்தேன். இங்கு போட்டோ மட்டும் பகிர்ந்து இருக்கிறேன்.






வாசலில் இருந்த கோட்டை வரலாறு

கர்னூல் கொண்டா ரெட்டி கோட்டையைத் தொல்லியல்துறை பராமரித்து வருகிறது


உள் நுழையும்  வாசல் அழகான பசுஞ் செடிகளுடன் காணப்படுகிறது

மேலே ஏறிப் போகும் படிக்கட்டுகள்.






செங்கல்லாலும், கருங்கற்களாலும்  கட்டப்பட்ட கோட்டை.
குடியரசு தினநிகழ்ச்சிக்கு  ஒத்திகை பார்க்கப்படுகிறது
கோட்டையிலிருந்து  ஊர்க்காட்சி,  ஆட்டோக்கள் தான் அதிகம் ஊரில்.
ஸ்தூபியின் அழகிய காட்சி




கீழ் இறங்கும் படிக்கட்டுகள்
படிகள்  கொஞ்சம் தான்.



கோட்டையைச் சுற்றி வரும் பாதை
கோட்டை மேல் இருந்து மாலைச் சூரியனது  காட்சி
கோட்டையிலிருந்து சூரியன்    
மாலைச்சூரியன்  ஜக ஜோதியாய்

                             கோட்டையில் சுரங்கப் பாதையின் வாசல்

                                                             வாழ்க வளமுடன்.


30 கருத்துகள்:

  1. காலத்தைக் கடந்து நிற்கும் பழங்காலக் கட்டிடக் கலை பிரமிக்க வைக்கிறது. படங்கள் கோட்டையின் அழகை மெருகூட்டுகின்றன. சூரிய அஸ்தமனம் பேரழகு.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஹுஸைனம்மா , வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அழகிய புகைப்படங்கள் விளக்கவுரையுடன் நன்று இப்பொழுது இப்படியெல்லாம் கோட்டை கட்ட முடியுமா ? வியப்பாகத்தான் இருக்கின்றது பகிர்வுக்கு நன்றி சகோ
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.
    இப்பொழுது கட்டமுடியாது, கட்டினாலும் காலத்தை வென்று நிற்காது.
    உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை
    படங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற
    பிரமிப்பை ஏற்படுத்துகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தெளிவான புகைப் படங்களுடன், நல்ல விவரமான கட்டுரை. பயணக் கட்டுரைகளில் கூடவே அந்த ஊர் ஹோட்டல், ஆட்டோ கட்டணம் என்று இன்னும் சுவாரஸ்யம் சேர்க்கவும்.

    ஆட்டோக்கள் நிறைந்த படத்தில் , சும்மா எண்ணிப் பார்த்தேன். 28 ஆட்டோ ரிக்‌ஷாக்கள் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு தலைவர் சிலையாக நிற்கிறார்.

    பதிலளிநீக்கு
  8. மீண்டும் பள்ளியில் அமர்ந்து வரலாற்றுப் பாடம் படித்த மகிழ்ச்சி...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்கவளமுடன்.
    நாங்கள் டாக்ஸியில் சென்றோம், சில உள்ளூர் கோவில்களுக்கு ஆட்டோவில் சென்றோம். நம் ஊரைவிட கட்டணம் குறைவுதான்.
    படங்களை நன்றாக பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    நிறைய இடங்களில் என். டி . ராமாராவ் அவர்கள் சிலை இருக்கிறது. தூரத்தில் தெரியும் சிலை யார் என்று தெரியவில்லை , இரவு ரயிலை பிடிக்க வேண்டியது இருந்ததால் அந்த பக்கம் போகவில்லை. கர்னூலில் நாங்கள் தங்கவில்லை அதனால் ஓட்டல் பற்றி குறிப்பிட வில்லை. ஸ்ரீசைலம், நந்திலால் ஆகிய இடங்களில் தங்கினோம், அதை பற்றி ஸ்ரீசைலம் பதிவில் சொல்லி இருக்கிறேன்.
    கர்னூல் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கு, ஆட்டோவில் பயணிக்கலாம்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அழகிய படங்கள்
    அற்புதச் செய்திகள்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    வரலாற்றை விருப்பபாடமாய் எடுத்த காரணத்தால் பதிவு
    வரலாற்று பாடம் போல் வந்து விட்டது போல்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அருமையான புகைப்படங்கள். எத்தனை எத்தனை கதைகள், நிகழ்வுகள் இந்தக் கோட்டைகளில்.... அனைத்தும் தெரிந்து கொள்ள இந்த பிற்ப்பு போதாது....

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது சரிதான், வாழ்நாள் முழுவதும் பார்த்தாலும் பார்த்து முடியாது, கதைகள் அனைத்தையும் அறியமுடியாது .
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அழகான பதிவு,,,,சிறப்பாக இருக்கிறது பார்ப்பதற்கு,வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  16. கோட்டைகளின் கதைகள் என்றுமே வசீகரமானவை. சுவாரஸ்யத்தைக் கூட்டுபவை. இளம் வயதிலிருந்தே ஹரிஹர புக்கர், விஜயநகர சாம்ராஜ்யம் என்றால் ஒரு கிரேஸ்! ஒன்றுபட்ட பாரதத்தின் ஒவ்வொரு பகுதி வரலாற்றுச் செய்திகளை நினைத்தால் மனம் விதவிதமான இலயிப்புகளில் ஆழ்கிறது. குறுகிய பிரதேச மனப்பான்மை சுக்குநூறாகிறது. இந்த கர்நூல் கொண்டாரெட்டி கோட்டையையே எடுத்துக் கொள்ளுங்களேன். ஊரோடு ஒட்டி அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. மக்களின் உணர்வுகளோடு ஒன்றரக் கலந்த கோட்டை.

    அந்த சுரங்கப்பாதை தான் தன்னுள் எத்தனை எத்தனை கதைகளைப் புதைத்து வைத்திருக்கிறதோ என்கிற எண்ணம் மேலிடுகிறது. அந்த 'சிவப்புத் தண்ணீர் தொட்டி' சரிதம் என்னவோ தெரியவில்லை. நினைக்க நினைக்க எல்லாமே ஆழ்ந்த நினைவுகளில் நம்மை ஆழ்த்துபவை. சாகச நிகழ்வுகளீல் தோய்ந்தவை.

    தமிழகக் கோட்டைகளைப் பற்றி எழுத்தாளர் விட்டல்ராவ் நிறைய எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி எனது 'ந்.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை' நூலில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

    அரைத்த மாவையே அரைக்காமல் மாறுதலான பதிவுக்கு வாழ்த்துக்கள். படங்களும் அழகு. நன்றி, கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  17. கர்னூல் கோட்டை பற்றி இதுவரை அறிந்ததில்லை .படங்களும் விவரிப்பும் அருமை

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் விமலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ஜீவி சார், வாழ்கவளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் அந்தக்கால அரண்மனைகளில்
    உள்ள சுரங்கப்பாதைகள் , கோட்டைகளில் உள்ள சுரங்கப்பாதைகளை வைத்து
    எத்தனை எத்தனை கதைகள் உள்ளன !
    போர் காலங்களில் எதிரிகளின் கையில் கிடைக்காமல் அரண்மனையிலிருந்து தப்பி சென்று மீண்டும் போர்தொடுத்து கோட்டை, கொத்தளங்களை மீட்ட மன்னர்கள், பெண்கள், குழந்தைகள் த்ப்பிசென்று மெய்காப்பாளர்கள் மூலம் உயிர் பிழைத்து மீண்டும் நாட்டை மீட்டவர்கள் என்று எத்தனை எத்தனை கதைகள் எல்லாமே நாட்டுப்பற்றை பறைசாற்றும் கதைகள்.
    எத்தனை பேர் தங்கள் உயிரை நீத்து இருக்கிறார்கள்.
    ராஜா, ராணி, மந்திரி தவிர உண்மையான சிப்பாய், குடிமக்கள் என்று எவ்வளவு பேரை வைத்து வரலாறு பின்னப்பட்டு உள்ளது!

    உங்கள் புத்தகத்தை படிக்க வேண்டும் விட்டல்ராவ் அவர்கள் கோட்டைகளை பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று படிக்க ஆவல்.

    சிவப்பு தொட்டி பெயர் காரணம் நானும் முயன்று பார்த்தேன் தெரியவில்லை.
    கோட்டை அருகே ஒரு பெரிய தண்ணீர் தொட்டி தெரிகிறது. அதற்கு அடையாளமாய் இந்த இடத்தை அப்படி குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிவை ரசித்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  20. பிரம்மாண்டம். அழகிய புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் முரளிதரன், வாழ்கவளமுடன்.
    டாக்ஸி டிரைவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இரவு ரயிலுக்கு போவதற்குள் கர்னூலில் பார்க்க வேண்டிய இடங்களை காட்ட சொன்ன போது கர்னூல் கோட்டை அழைத்து சென்றார். அடுத்த முறை வாருங்கள் உங்களை நிறைய இடம் அழைத்து செல்கிறேன் என்றார்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. அழகிய புகைப்படங்கள் ஏராளமான தகவல்கள் இந்தக் கோட்டை பார்த்தது இல்லை. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார் , வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. அந்தக்காலக்கோட்டைகளைப்பார்க்கும்போது எப்போதும் ஏற்படும் பிரமிப்பு, இந்தக் கோட்டையைப்பார்க்கும்போது மேற்படுகிறது. அனால் உயரமான படிகள் எப்போதும் ஏறுவதற்கு பயத்தைத் தரும். இந்தக்கோட்டையில் படிகள் குறைவாக இருக்கிறது!

    விரிவான, அழகான பதிவும் புகைப்படங்களும் அழகு!!

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் சில கோட்டைகளில் படி குறுகலாய் வெளிச்சம் இல்லாமல் இருக்கும். இந்த படி பயத்தை தரவில்லை.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  27. கோட்டையின் அழகை அழகாக படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. கோட்டைகள் கதைகள் எல்லாமே சுவாரஸ்யமானவை பல கதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளவை. புகைப்படங்கள் மிக மிக அழகு. அழகாக எடுக்கின்றீர்கள் அம்மா...

    ஒரு புதிய இடத்தைப் பற்றித் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் துளசிதரன் , வாழ்க வளமுடன்.
    கோட்டைகள் கதைகள் எப்போதுமே சுவையானது தான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு