Saturday, June 18, 2016

தியாகச் செம்மல் கக்கன்

பூக்கடை ஒன்றும் பக்கத்தில் இல்லை அதனால் மண்டபத்தில் உள்ள கோழிக் கொண்டைப் பூவை எடுத்து  அவர் உருவச்சிலைக்கு போட்டு வணங்குகிறார் என் கணவர்


வாழ்க்கை வரலாறு

நேரில் பார்ப்பது போல் ஓவியம்
ஹாலில் கடைசியில் நிற்பது போல் தோற்றம்
கக்கன் அவர்கள் உறவினர் (தம்பி மருமகள்)   மணிமண்டபத்தை சுத்தமாய் பராமரிக்கிறார்

மணிமண்டபத்திற்கு எதிரில் இருக்கும் நூலகத்தைப் பராமரித்து வருபவர்நூலகர் மணிமண்டபத்தின் சாவி வாங்கி வரும் வரை நூலகத்தில் நான் படித்த புத்தகம்
கைவிரல்களில் கலைமானின் வடிவம்  கொண்டு வந்து, இது என்ன என்று கேட்கும் விளையாட்டு
நூலகத்தில்   செய்தித்தாள் படித்துக் கொண்டு இருக்கும் அனபர்கள்

நாங்கள் மேலூர் வட்டம் தும்பைப் பட்டியில் உள்ள  திரு .கக்கன்ஜி அவர்களின் மணி மண்டபத்திற்கு டிசம்பர் மாதம் கடைசியில் போய் இருந்தோம்.

நாங்கள் போன போது மண்டபம் பூட்டி இருந்தது . காலை 9 மணி இருக்கும் . யாரைக் கேட்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்த போது ஒருவர் வந்தார், மணி மண்டபத்தை பார்க்க வந்தீர்களா ?என்று கேட்டார் ஆமாம் என்றோம் . அவர்,” எதிரில் இருக்கும் நூலகத்தில் அமர்ந்து இருங்கள். மண்டபத்தை பார்த்து கொள்பவர் வீடு அருகில் தான் இருக்கிறது” என்று கூறி, சாவி வாங்கி வருவதாக சொல்லி சென்றார்.

சாவியுடன் ஒரு அம்மாவும் வந்தார்கள், அவர்கள் கக்கன்ஜி அவர்களின் தம்பி மருமகள் என்று சொன்னார்கள். நூலகரும்,  மருமகள் அவர்களும்   உடன் வந்து திறந்து காட்டினார்கள். எல்லா தலைவர்களுடன் இருக்கும் படங்கள் உள்ளன .  பதவியை தன் குடும்ப மக்களுக்கு பயன்படுத்திக் கொள்ளாத நேர்மையானவர் என்று  தன் மாமாவின் பெருமைகளைச் சொன்னார் மருமகள். 

இருவருக்கும் நன்றி சொல்லி வந்தோம். 

இன்று அவர் பிறந்த நாள் இந்தச் சமயத்தில் தியாகச் செம்மலை ச்சென்று வணங்கி வந்ததைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தன்னலம் கருதாமல் நாட்டுக்கு உழைத்த தலைவரை வணங்குவோம்.
------------------------------
வாழக வளமுடன்.

47 comments:

தி.தமிழ் இளங்கோ said...

ஆச்சரியமான பதிவு. பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

மாமனிதர்.

வல்லிசிம்ஹன் said...

பெரந்தலைவருக்கு அடுத்த படியாக மதிக்கப் பட்ட நல்ல மனிதர் மிக நன்றி கோமதி.

Anonymous said...

நல்ல மனிதர் மிக நன்றி
Vetha.Langathilakam.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பதிவு

http://ypvn.myartsonline.com/

KILLERGEE Devakottai said...

இவருக்கு மணஇமண்டபம் கட்டி கல்வெட்டில் பெர் பொறித்துக்கொண்ட அரசியல்வாதிகள் அவரைது கும்பத்தை கை விட்டு விட்டார்கள், மக்களும் மறந்து விட்டார்கள் இவரது மகன் குணடைந்தும் அழைத்துப்போக ஆளின்றி 34 வருடங்களாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருக்கின்றார் நேர்மைக்கு கிடைத்த பரிசு இது தகுயில்லாதவர்களை அரியணையில் ஏற்றி விட்ட மக்கள் இந்நாடு இன்னும் மோசமடையும்.

குறிப்பு - கக்கன்ஜி எனக்கு சொந்தமோ, பந்தமோ கிடையாது

தமிழ் மணம் 3

கோமதி அரசு said...

வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
என்ன ஆச்சிரியம் ? புரியவில்லை.
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் மாமனிதர் தான்.

கோமதி அரசு said...

வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.

போற்றுதலுக்குரிய நல்ல மனிதர் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வேதா .இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜீவலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Dr B Jambulingam said...

தெரிந்துகொள்ளவேண்டிய மாமனிதரின் புகழ் பாடும் தங்களின் இப்பதிவு அருமை. பதிவின் மூலமாக எங்களையும் அழைத்துச்சென்று அவரைப் பற்றிய நினைவுகளை அன்போடு பகிர்ந்துகொண்ட விதம் நன்று.

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வதை நானும் கேள்வி பட்டு இருக்கிறேன்.
என்ன செய்வது!

தன்னலம் மறந்த தலைவர்களுக்கு மக்கள் கொடுக்கும் பரிசு மிகவும் கொடுமைதான்.

உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் முனைவர் .ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.

உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

rajalakshmi paramasivam said...

திரு.கக்கன் அவர்களைப் போன்ற அரசியல்வாதிகள் நம்மைப் பிரமிக்க வைக்கிறார்கள்.
அவரைப்பற்றி பதிவு எழுதி பெருமைப்படுத்தியதற்கு பாராட்டுக்கள் கோமதி.

கோமதி அரசு said...

வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

G.M Balasubramaniam said...


மணி மண்டபபலகைக்கு கீழ் இந்தியக் குடியரசு ஸ்தாபிதம் 1947 என்று இருக்கிறதே

‘தளிர்’ சுரேஷ் said...

தியாக சீலரின் வாழ்க்கை வரலாற்றை படப் பதிவுகளின் ஊடே அருமையாக அறிந்து கொள்ள முடிந்தது! சிறப்பான பதிவு! நன்றி!

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
இந்தியா 1947 ல் சுதந்திரம் அடைந்த்து.அப்போது அது குடியரசு நாடாக இருந்தது மன்னராட்சி இல்லை, அரசியல் அமைப்பு சட்டம் அதன் பிறகு உருவாக்கப்பட்டது 1950 ஜனவரி 26ல் சட்டபூர்வமாக குடியரசு நாடாக அறிவிக்கபட்டது அதனால் தான் இந்தியக் குடியரசு ஸ்தாபிதம் என்று குறிப்பிடுகிறார்கள் போலும்.
உனங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Srimalaiyappanb sriram said...

அருமை வாழ்த்துக்கள் ... https://ethilumpudhumai.blogspot.in

ராமலக்ஷ்மி said...

நல்லதொரு பகிர்வு. தியாகச் செம்மலைப் போற்றுவோம்.

துரை செல்வராஜூ said...

மகத்தான மனிதர் - திரு. கக்கன் ஜி அவர்கள்..
தியாக சீலர் என்பதற்கும் மேலான மாமனிதர்.

அவரது மணி மண்டத்திற்கு எங்களையும் அழைத்துச் சென்றமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு மனிதர். அவரது நினைவு நாளில் நல்லதோர் பகிர்வு.

R.Umayal Gayathri said...

கக்கன் ஐயா அவர்கள்பற்றி இப்போது தான் அறிந்தேன் அம்மா நன்றி

Vimalan Perali said...

போற்றுதலுக்குரிய மனிதர்,,,.
அவர் தம் நினைவுகள் மட்டுமே இன்று நம்முடன்,,/

sury Siva said...

1975 வாக்கில் நான் சென்னை வந்தபோது மக்களோடு தானும் ஒருவராக
அரசுப் பேருந்து ஒன்றில் அவர் பயணித்ததும் அவருடன் சில நிமிடங்கள் நானும் அவருடன் பயணித்த அனுபவமும் மறக்க முடியாத ஒன்று.

இவர் போன்ற தியாகச் சிகரங்கள் ஒரு நூறாண்டுக்கு ஒரு முறை தான் பிறப்பார்கள் போலும்.

அவர் வாழ்ந்த வாழ்க்கை இன்றைய மக்கள் நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்கு உயர்ந்தது .

சுப்புத்தாத்தா.
WWW.VAZHVUNERI.BLOGSPOT.COM

தி.தமிழ் இளங்கோ said...

// வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
என்ன ஆச்சிரியம் ? புரியவில்லை. //

சகோதரி அவர்களே குழப்பம் அடையத் தேவையில்லை. சாதாரணமாக கக்கன் போன்றவர்களது நினைவிடம் சென்று வந்ததாக, யாரும் வலைப்பதிவுகள் எழுதி நான் படித்தது இல்லை. இதனை நினைத்தே, ’ ஆச்சரியமான பதிவு. பாராட்டுக்கள்.’ என்று சொன்னேன். மற்றபடி ஒன்றும் இல்லை.

கோமதி அரசு said...

வணக்கம்ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம், வாழக் வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் மகத்தான மாமனிதர் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...
This comment has been removed by the author.
கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் விமலன், வாழக் வளமுடன்.
அவரை நினைவில் கொள்ள வேண்டும்
பள்ளி மாணவர்களுக்கு இவர் போன்ற உயர்ந்த தலைவர்களின்
வாழ்க்கை வரலாறு பாடமாக வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் பஸ்ஸில் பிரயாணம் பண்ணும்
எளிமையான தலைவராக இருந்து இருக்கிறார்.
நீங்கள் சொல்வது போல் அவர் எளிய வாழக்கை தன்னலம் கருதா வாழ்க்கை இன்றைய மக்கள் நினைத்து பார்க்க முடியாது தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

கோமதி அரசு said...

வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
மீண்டும் வந்து என் சந்தேகத்திற்கு பதில் சொன்ன உங்களுக்கு நன்றி.
எனக்கு அவர் நினைவிடத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது
அதை பகிர்ந்து கொண்டேன். நாங்கள் போன போது அவர் நினைவு நாள் முடிந்து இருந்தது. அவர் பிறந்த நாளுக்கு காத்திருந்து அவர் நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

KABEER ANBAN said...

//..நாங்கள் போன போது அவர் நினைவு நாள் முடிந்து இருந்தது. அவர் பிறந்த நாளுக்கு காத்திருந்து அவர் நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.//

இன்னும் ஆச்சரியம் கூடுகிறது. இவ்வளவு பொறுப்புடன் நினைவு வைத்து பதிவு எழுதும் தங்கள் முனைப்பிற்கு தலை வணங்குகிறேன்.

சுப்பு சார் சொன்னதை வழிமொழிகிறேன். நல்ல மனிதர்களை அவர்கள் வாழ்ந்த காலத்தில் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பது காட்டில் வளரும் சந்தனமரத்தைப் போலதான். காலப்போக்கில்தான் அதன் மணம் அதை பிற மரங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும்.
நல்ல பதிவுக்கு நன்றி

கோமதி அரசு said...

வணக்கம் கபீரன்பன், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது அருமை.
கக்கன் அவர்கள் புகழ் சந்தனமரம் போல் மணம் பரப்பி வருகிறது.
இப்போது உள்ள தலைவர்கள் போக்கை பார்க்கும் போது கக்கன் ஜி போன்ற தலைவர்கள் இப்போது இல்லையே ! என்று நினைப்பு வருவதை தடுக்க முடியவில்லை.
சூரி சார், நீங்கள் எல்லாம் அருமையான கருத்தை பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி.

தமிழன் திரட்டி said...

பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி சுலபமாக பதிவுகளை இணைக்கலாம் (http://www.tamin.in)

தமிழன் திரட்டி said...

தமிழன் திரட்டி www.tamiln.in

Saratha J said...

அருமையான பதிவு.

கோமதி அரசு said...

வணக்கம் தமிழ் திரட்டி, வாழ்க வளமுடன்.
நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் சாரதா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான மனிதரைப் பற்றி அழகான புகைப்படங்கள் உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டோம்.

கோமதி அரசு said...

வணக்கம் துளசிதரன் , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Saratha J said...

அருமையான பதிவு. எனது வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.