பொதுவாக ஒவ்வொருவரும் காலையில் படுக்கையை விட்டு எழும் போது இறைவா இன்றைய பொழுது நல்ல பொழுதாக போக வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
நான் எங்கள் மன்றத்தில் செய்யும் பிரார்த்தனையை சொல்லிக் கொள்வேன் காலையில், அது : --
//அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக//
இன்பமோ, துன்பமோ அவன் பொறுப்பு என்று போய் கொண்டு இருக்கிறது என் வாழ்க்கை.
மத்தியதர மக்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் ஒரு நாள் பொழுது வழக்கம் போல் போகும். ஆனால் சாமானியர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அன்றாடக்காச்சி என்று சொல்லப்படுபவர்களுக்கு ஒரு நாள் பொழுது ஒவ்வொரு மாதிரிதான் போகும். தினம் ஒரே மாதிரி இருப்பது இல்லை.
ஒரு நாள் தொலைக்காட்சிப்பெட்டியில் சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தேன், அன்று என் மனநிலை ஒன்றிலும் லயிக்கவில்லை.
புதியதலைமுறை சேனலில் ” சாமானியர்களுடன் ஒரு நாள் ” என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். அது சீனி மிட்டாய், சவ் மிட்டாய், பப்ரமிட்டாய் என்று சொல்லபடுகிற மிட்டாயை செய்து அதை விற்று வாழ்க்கை நடத்துபவரைப்பற்றி.
ஒரு நாள் முழுவதும் அவருடன் இருந்து மிட்டாய் செய்வது முதல் அவர் சைக்கிளில் போய் பக்கத்து கிராமத்தில் விற்பதையும், பின் வீட்டுக்கு வருவது வரை காட்டினார்கள்.
மத்தியதர மக்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் ஒரு நாள் பொழுது வழக்கம் போல் போகும். ஆனால் சாமானியர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அன்றாடக்காச்சி என்று சொல்லப்படுபவர்களுக்கு ஒரு நாள் பொழுது ஒவ்வொரு மாதிரிதான் போகும். தினம் ஒரே மாதிரி இருப்பது இல்லை.
ஒரு நாள் தொலைக்காட்சிப்பெட்டியில் சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தேன், அன்று என் மனநிலை ஒன்றிலும் லயிக்கவில்லை.
புதியதலைமுறை சேனலில் ” சாமானியர்களுடன் ஒரு நாள் ” என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். அது சீனி மிட்டாய், சவ் மிட்டாய், பப்ரமிட்டாய் என்று சொல்லபடுகிற மிட்டாயை செய்து அதை விற்று வாழ்க்கை நடத்துபவரைப்பற்றி.
ஒரு நாள் முழுவதும் அவருடன் இருந்து மிட்டாய் செய்வது முதல் அவர் சைக்கிளில் போய் பக்கத்து கிராமத்தில் விற்பதையும், பின் வீட்டுக்கு வருவது வரை காட்டினார்கள்.
கடையில் போய் இரண்டு கிலோ சீனி வாங்கி வந்தார் , சீனியை ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு வீட்டின் பின்புறம் உள்ள விறகு அடுப்பில் வைத்து காய்ச்சுகிறார், காய்ச்சும் போதே நல்ல ரோஸ் கலர் சேர்க்கிறார்.(மிட்டாய் கலர் என்றே அழைப்பார்கள் ரோஸ் கலரை) கரண்டியின் பின்புறம் வைத்து கிண்டி விடுகிறார். கம்பி பதத்தில் ரெடியானவுடன் பக்கத்தில் இருக்கும் ஒரு வழு வழு என்று சிமெண்ட் போட்ட திண்ணையில் தண்ணீர் விட்டு கழுவி விட்டு சீனி கலவையை அதில் விடுகிறார் அவர் மனைவி அதை துணி சுருட்டுவது போல( பாயை சுருட்டுவது போல்) சுருட்டி பின் நீட்டி மடித்து அதனை மரக் கம்பில் சுற்றி அதன் மேல் பாலீதீன் கவரை சுற்றிக் கொடுக்கிறார் கணவனிடம்.
கணவர் ஒரு பை, கூடை எல்லாம் எடுத்து கொண்டு சைக்கிளில் பயணிக்கிறார். சீனி மிட்டாய் சீனி மிட்டாய் என்று கூவி கொண்டு போகிறார்.
சென்னைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நிற்கிறார். குழந்தைகள் அவர் குரலைக் கேட்டு ஓடி வருகிறார்கள் அவர்கள் கையில் காசு இல்லை , அவர்கள் கையில் கொஞ்சம் சுருட்டிய முடி இருக்கிறது அதை பையில் போட சொல்கிறார் பின் அதன் அளவுக்கு ஏற்ற மாதிரி மிட்டாய் கொடுக்கிறார்.
சில குழந்தைகள் மதுபாட்டில் கொடுத்து மிட்டாய் வாங்கி செல்கிறார்கள்.
மிட்டாய்காரர் சொல்கிறார் அப்பாவின் மது பாட்டில் குழந்தைகளுக்கு மிட்டாயாகிறது என்று. குழந்தைகளிடம் நிறைய கொண்டு வாருங்கள் நிறைய மிட்டாய் தருகிறேன் என்கிறார்.
மிட்டாய்க்கார ர் பாட்டில்களை கடையில் போட்டு காசு வாங்கி கொண்டு அரிசி, காய்கறி மற்றும் தன் குழந்தைகளுக்கு திண்பண்டம் வாங்கி செல்கிறார்.
மிட்டாய்க்கார ர் பாட்டில்களை கடையில் போட்டு காசு வாங்கி கொண்டு அரிசி, காய்கறி மற்றும் தன் குழந்தைகளுக்கு திண்பண்டம் வாங்கி செல்கிறார்.
வாங்கி போன பொருட்களை மகிழ்ச்சியுடன் கொடுக்கிறார். மனைவியிடம். தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு உணவு சமைக்கிறார் மனைவி. பின் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். அதன் பின் குழந்தைகள் விளையாட போய்விடுகிறார்கள்.
கணவனும் மனைவியும் பையில் இருந்த தலைமுடியை எடுத்து சுத்தம் செய்து சவுரிமுடி செய்கிறார்கள். மனைவி நாளை கொண்டு வரும் முடியில்தான் சவுரி ரெடியாகும் என்கிறார் .
கணவனும் மனைவியும் பையில் இருந்த தலைமுடியை எடுத்து சுத்தம் செய்து சவுரிமுடி செய்கிறார்கள். மனைவி நாளை கொண்டு வரும் முடியில்தான் சவுரி ரெடியாகும் என்கிறார் .
இப்படி ஒருநாள் பொழுது போகிறது.
மிட்டாய் விற்பனை நன்கு நடந்தால்தான் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் நல்லது.இவர் சும்மா சவ் மிட்டாயை இழுத்து பிய்த்து மட்டும் கொடுக்கிறார். முன்பு சவ் மிட்டாய் விற்றவர்கள் போல் அழகாய் பலகலரில் மிட்டாய் செய்து மாலை, வாட்ச் எல்லாம் செய்து கொடுத்தால் நன்றாக விற்பனை ஆகலாம்.இப்போது காலமும் மாறி விட்டது கிராமத்து குழந்தைகளும் பைவ்ஸ்டார் சாக்லேட், மற்றும் வித விதமாய் குழந்தைகளை கவர விளம்பரங்களுடன் வரும் மிட்டாய்களை வாங்கி சாப்பிட பழகி விட்டதால் இந்த சவ் மிட்டாய் மவுசு குறைந்து விட்டது.
முன்பு சவ் மிட்டாய்காரார் இரண்டு மூன்று கலரில் பள பள என்று இருக்கும் சவ் மிட்டாயை கொண்டு வருவார். அவர் வைத்து இருக்கும் தடியில் மேல் புறம் பொம்மை இருக்கும் அதன் கையில் தாளம் இருக்கும் அதை தட்டிக் கொண்டே மிட்டாய் விற்பார். (பொம்மை மிக அழகாய் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்) காசுக்கு ஏற்ற மாதிரி, வாட்ச், கழுத்துக்கு மாலை, செயின், எல்லாம் வித விதமாய் செய்து தருவார். நான் சிறுமியாக இருக்கும் போது இந்த மிட்டாய் வாங்கி சாப்பிடத் தடை இருந்தாலும் ஏதாவது ஒருசமயம் தடை விலக்கப்பட்டு போனால் போறது இன்று ஒருநாள் மட்டும் அடிக்கடி கேட்க கூடாது என்று வாங்கி கொடுக்கப்படும்.
இந்த முறை அழகர் திருவிழாவில் ஒரு மிட்டாய்க்காரரைப் பார்த்தேன் அழகரும் அவரும் ஒரே நேரத்தில் வந்து விட்டதால் அழகரை வணங்கி விட்டு மிட்டாய்காரரை படம் எடுக்கலாம் என்றால் அவர் நகர்ந்து விட்டார். அவர் முதுகுபக்கம் சாய்த்து வைத்து இருந்த பொம்மையை எங்கோ பார்த்து போல் இருக்கே என்று நினைத்த போது திருப்பரங்குன்றத்தில் ஒரு முறை பொம்மை மிட்டாய்காரரை போட்டோ எடுத்தது நினைவு வந்தது. அவரே தான் இவர்.
அழகர் திருவிழாவில் எடுத்த படம்
திருப்பரங்குன்றத்தில் எடுத்தபடம்
என் கணவர் வரைந்த கணினி ஓவியம்.
உறவோடு உறவாடி என்ற இந்த பதிவில் திருப்பரங்குன்றத்தில் காதணிவிழாவிற்கு போய் இருந்த நிகழ்வுகளையும் திருப்பரங்குன்றத்தில் நடந்த விழாக் காட்சிகளையும், மிட்டாய்காரர் பற்றிய செய்திகளையும் காணலாம்..
மிட்டாய் விற்பனை நன்கு நடந்தால்தான் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் நல்லது.இவர் சும்மா சவ் மிட்டாயை இழுத்து பிய்த்து மட்டும் கொடுக்கிறார். முன்பு சவ் மிட்டாய் விற்றவர்கள் போல் அழகாய் பலகலரில் மிட்டாய் செய்து மாலை, வாட்ச் எல்லாம் செய்து கொடுத்தால் நன்றாக விற்பனை ஆகலாம்.இப்போது காலமும் மாறி விட்டது கிராமத்து குழந்தைகளும் பைவ்ஸ்டார் சாக்லேட், மற்றும் வித விதமாய் குழந்தைகளை கவர விளம்பரங்களுடன் வரும் மிட்டாய்களை வாங்கி சாப்பிட பழகி விட்டதால் இந்த சவ் மிட்டாய் மவுசு குறைந்து விட்டது.
முன்பு சவ் மிட்டாய்காரார் இரண்டு மூன்று கலரில் பள பள என்று இருக்கும் சவ் மிட்டாயை கொண்டு வருவார். அவர் வைத்து இருக்கும் தடியில் மேல் புறம் பொம்மை இருக்கும் அதன் கையில் தாளம் இருக்கும் அதை தட்டிக் கொண்டே மிட்டாய் விற்பார். (பொம்மை மிக அழகாய் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்) காசுக்கு ஏற்ற மாதிரி, வாட்ச், கழுத்துக்கு மாலை, செயின், எல்லாம் வித விதமாய் செய்து தருவார். நான் சிறுமியாக இருக்கும் போது இந்த மிட்டாய் வாங்கி சாப்பிடத் தடை இருந்தாலும் ஏதாவது ஒருசமயம் தடை விலக்கப்பட்டு போனால் போறது இன்று ஒருநாள் மட்டும் அடிக்கடி கேட்க கூடாது என்று வாங்கி கொடுக்கப்படும்.
இந்த முறை அழகர் திருவிழாவில் ஒரு மிட்டாய்க்காரரைப் பார்த்தேன் அழகரும் அவரும் ஒரே நேரத்தில் வந்து விட்டதால் அழகரை வணங்கி விட்டு மிட்டாய்காரரை படம் எடுக்கலாம் என்றால் அவர் நகர்ந்து விட்டார். அவர் முதுகுபக்கம் சாய்த்து வைத்து இருந்த பொம்மையை எங்கோ பார்த்து போல் இருக்கே என்று நினைத்த போது திருப்பரங்குன்றத்தில் ஒரு முறை பொம்மை மிட்டாய்காரரை போட்டோ எடுத்தது நினைவு வந்தது. அவரே தான் இவர்.
அழகர் திருவிழாவில் எடுத்த படம்
திருப்பரங்குன்றத்தில் எடுத்தபடம்
உறவோடு உறவாடி என்ற இந்த பதிவில் திருப்பரங்குன்றத்தில் காதணிவிழாவிற்கு போய் இருந்த நிகழ்வுகளையும் திருப்பரங்குன்றத்தில் நடந்த விழாக் காட்சிகளையும், மிட்டாய்காரர் பற்றிய செய்திகளையும் காணலாம்..
வாழ்க வளமுடன்!
நான் இந்த மிட்டாய்க் காரரைப் பார்த்ததுண்டு. சுவைப்பதில் விருப்பம் இருந்ததில்லை! அவர்களின் ஒருநாள் பற்றிப் படிக்க பாவமாக இருக்கிறது. இந்த மிட்டாய்க்கு மவுசு போனால் அவர் பிழைப்புக்கு என்ன செய்வார்?
பதிலளிநீக்குஅரசு ஸாரின் ஓவியத்தை ரசித்தேன். பேப்பரில் கையால் வரைவதே (எனக்கு) சிரமம். கணினியில் இவ்வளவு நேர்த்தியாக வரைவது கடினம். பாராட்டுகளைப் பிடியுங்கள் ஸார்...
மிக நன்றி கோமதி. சாரோட படங்களும் அற்புதம்.
பதிலளிநீக்குமிட்டாய் செய்யும் முறையை இதுவரை அறிந்ததில்லை.
எத்தனை உழைப்பு. முடி வாங்குவது இப்போதுதான் தெரியும்.
எத்தனை பண்டமாற்றம் நடைபெறுகிறது.
வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது போல் சாரை வரைய சொல்லி கேட்டு வாங்கி போட்டு விட்டேன்.
கணினியிலும் படம் வரைவது சிரமமாய் தான் இருப்பதாய் சார் சொல்கிறார். நினைத்தபடி கையால் வரைவது போல் இல்லை என்று.
உங்கள் பாராட்டுக்களை சொல்லிவிட்டேன், நன்றி சொன்னார்கள்.
மிட்டாய் மவுசு குறைந்து விட்டதால் அவர் பாடு கொஞ்சம் கஷ்டம் தான். எளியமக்களின் குழந்தைகளிடம் பண்டமாற்று முறையில் மிட்டாய் விற்பதால் அவர் பிழைப்பு ஓடுகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமுடியை சேர்த்து வைத்து இருந்து முடி கட்டுபவர்களிடம் விற்பார்கள், அல்லது தங்களுக்கே கட்டி வாங்கி கொண்டு கட்டிய கூலி மட்டும் கொடுப்பார்கள் பார்த்து இருக்கிறேன். மிட்டாய்க்கு முடி கொடுப்பதை இப்போது தான் பார்த்தேன்.
உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
என் பால்ய நாட்களில் ஜவ்வு மிட்டாய் பிரியமாய் இருந்தது. நாளெல்லாம் ரோசே வண்ணம் வாயில் இருக்கும்.
பதிலளிநீக்குஉங்கள் பிரார்த்தனை மனசைத் தொட்டது.
அரசு சார் ஓவியம் அழகானது.
வணக்கம் மோகன்ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபஞ்சு மிட்டாய், சவ்மிட்டாய், குச்சி ஐஸ் எல்லாம் சாப்பிட்டு வாயில் கலர் செய்து கொள்வது சிறு வயதில் மகிழ்ச்சியை அள்ளி தந்த காலம்.
உங்கள் கருத்துக்கு நன்றி மோகன்ஜி.
தங்கள் கணவர் வரைந்துள்ள கணினி ஓவியம் அருமை. அவருக்கு என் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஇன்றைய அன்றாடங்காய்ச்சிகளான ஏழைத்தொழிலாளிகளின் வாழ்க்கை பற்றியும், பண்டம் மாற்று வியாபார முறைகள் பற்றியும் நன்கு அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.
அனைத்தும் மிகவும் யோசிக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்.
சவ்வு மிட்டாய் - நெய்வேலியில் பங்குனி உத்திரம் சமயத்தில் மட்டும் தான் கிடைக்கும். ஆனால் சாப்பிட அனுமதி கிடைத்ததில்லை..... :(
பதிலளிநீக்குஇப்போது சாப்பிட நினைத்தாலும் கிடைப்பதில்லை.
சார் வரைந்த படம் நன்றாக இருக்கிறது.
வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். சாரிடம் பாராட்டுக்களை தெரிவித்து விட்டேன். கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன் . முருகன் கொவிலுக்கு வந்து இருக்கிறேன் பல வருடங்களுக்கு முன்பு. பங்குனி உத்திரம் சிறப்பாய் நடைபெறும் என்று சொல்லி இருக்கிறார்கள். சவ் மிட்டாய் சாப்பிட மதுரை திருவிழாவிற்கு வாருங்கள். உங்கள் கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குபதிவு அருமை,,, நிரைய பாட்டில்கள் கொண்டுவா,, ம்ம்
பதிலளிநீக்குஅவரின் ஒரு வாழ்க்கையே நமக்கு இப்படி என்றால் தினம் தினம்,,
ஓவியம் மிக அருமை.,,,
இதை உள்ளார்ந்து கவனித்தால் மனம் கனத்து விடுகின்றது இவர்களும் இந்தப்பூமியில் வாழப்பிறந்தவர்களே... இவர்களுக்கு ஒருநாள் நல்ல உணவு என்பது கனவாகவே இருக்கின்றது...
பதிலளிநீக்குஎத்தனையோ கோடீஸ்வர்களின் பணம் வெறுதே வங்கிகளில் கொட்டிக் கிடக்கின்றது அவர்களுக்கு இவர்களைப் பற்றிய சிந்தனையை இறைவன் கொடுக்கவே மாட்டான் இதுதான் இறைவனின் வாழ்க்கை அமைப்பு
என்ன செய்வது நம்மால் வேதனைப்படத்தான் முடியும்.
த.ம. 2
வணக்கம் மகேஸ்வரி பாலசந்திரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅவரின் நிலமை அவரை அப்படி பேச வைக்கிறது. பாட்டில்களை கடையில் விற்றுதான் வீட்டுக்கு உணவு பொருட்களை வாங்கி செல்கிறார். ஒருநாள் பொழுதே இவ்வள்வு கஷ்டம் என்றால் தினம் தினம் மிகவும் கடினம் தான் வாழ்க்கை நடத்துவது.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் அவர் ஒரு நாள் வாழ்க்கையை பார்த்த போதே மிகவும் கஷ்டமாய் தான் இருந்தது. மனம் கனத்து போனது உண்மை.
”வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொது உடமை ” என்று கவிஞர் பாடியது எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்றால் இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டும்.
நீங்கள் சொல்வது போல் வங்கியில் பதுக்கி வைத்து இருக்கும் பணத்தை இல்லாத ஏழைகளுக்கு உதவ நல்ல திட்டம் அமைத்து கொடுக்கலாம். தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கலாம்.
நல்லாட்சி மலரட்டும் ஏழைகளின் நிலை மாறட்டும்.
உங்கள் விரிவான கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.
பஞ்சு மிட்டாய் பஞ்சு மிட்டாய்
பதிலளிநீக்குகுரல் கேட்டதுமே
அம்மாவிடம் காலணாவுக்குக்
கெஞ்சியது
அவள் அனுமதி பெற்ற உடன்
அடுப்படி அஞ்சரைப்பெட்டிக்குள் இருந்த
அரையணா வை எடுத்து ச்சென்று
ஆனந்தமாய்த் தின்றது.
அதெல்லாம் அந்தக்காலம்
சுப்பு தாத்தா.
வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅம்மாவிடம் கொஞ்சி, கொஞ்சி வாங்கியது அந்த காலம் தான்.
இப்போது அதை நினைத்து மகிழ வேண்டிய காலம் .
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
மன்னிக்கவேண்டும் சார் உங்கள் பின்னூட்டம் பபளிஸ் ஆக மறுத்து விட்டது.ஐபோனில் மெயிலை பார்த்து விட்டு உடனே பப்ளிஸ் செய்யவில்லை என்றால் மீண்டும் அதை பப்ளிஸ் செய்ய முடிவது இல்லை.
he comment doesn't exist or no longer exists. இப்படி சொல்லிவிடும்.
கவனக் குறைவுக்கு மன்னிக்கவும் சார்.
பஞ்சு மிட்டாய்க் காலத்துக்கே சென்று விட்டது நினைவுகள் இதல்லாமல் தினமும் பன் ரொட்டி பிஸ்கட்என்று மதிய வேளைகளில் எங்கள் கிராமத்தில் வருபவரையும் உங்கள் பழைய பதிவு வளையல் காரரும் நினைவுக்கு வருகிறார்கள் அரசு சாருக்குப் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
ஒருநாள் ஒரு கனவு என்பது போல - ஜவ் மிட்டாய் விற்பவருடைய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றது பதிவு..
பதிலளிநீக்குமுன்பு ஒரு சமயம் - கடலை வண்டிக் காரருடன் பழகியிருந்த நாட்களில் அவருடைய வாழ்க்கையும் இப்படித்தான்..
பேருந்து நிலையத்தின் அருகில் வண்டியை நிறுத்தினால் - ஓரளவுக்கு வியாபாரம்.. ஆனால் - மாமூல் என்று ஒன்றரை படிக்கு மேல் ஸ்வாஹா ஆகிவிடும்.. தவிர்க்கவே முடியாது..
அவரும் வாழ்ந்து பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்து விட்டு - தற்போது பேரப்பிள்ளைகளுடன்
நோய் நொடி இல்லாமல் நல்ல வாழ்க்கை - காரணம் அவரது நேர்மை..
கடல்நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ?..
சாமான்யர்களுக்கும் கீழாக - நிதர்சனத்தில் எத்தனை எத்தனையோ ஏழை பாழைகள்..
யார் இவர்களைக் கைதூக்கி விடக்கூடும்?..
வணக்கம் துரைசெல்வராஜூ சார் , வாழ்க வளமுடன். எந்த தொழில் செய்தாலும் நேர்மை இருந்தால் நீடித்து வாழலாம். அதற்கு நீங்கள் சொன்ன கடலைக்கார்ர் நல்ல உதாரணம். இவர்களை விடவும் மோசமாய் இருக்கும் ஏழைகளின் நிலை கஷடம்தான் நீங்கள் சொல்வது போல். உங்கள் கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஅந்நாளைய நினைவுகளைத் தூண்டிவிட்டது இப்பதிவு. இப்பொழுதும் இந்த மிட்டாய்க்காரர்களைக் கண்டால் மிகவும் ஆசையாக இருக்கிறது, உடனே வாங்கி சாப்பிடவேண்டுமென்று.
பதிலளிநீக்குவணக்கம் ஐம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.அந்த நாள் நினைவுகளை மீட்டு வந்ததா பதிவு? நன்றி. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குசிறுவயதில் திருவிழாக் கொண்டாடங்களில் மிட்டாய் சாப்பிட்டது நினைவில் நிழலாடியது. அதுவும், ரிஸ்ட் வாட்ச் போல கையில் கட்டி விட்டு விட்டு ஒரு துணுக்கு மிட்டாயை எடுத்து வாயிலும் தீற்றி விடுவானே-- அந்த ஜவ்வு மிட்டாய்.
பதிலளிநீக்குமிட்டாய் என்பது சுவைப்பதற்காக. அதை கையில் கட்டி விட்டு குழந்தையை ஏமாற்றுவானேன் என்று வாயிலும் ஒரு துணுக்கை தீற்றி விடும் அந்த மிட்டாய் காரனின் கருணையை இப்பொழுது நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. வாயில் தீற்றிய சுவையின் ஆறுதலில் கையையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த ரிஸ்ட் வாட்சை மற்றவர்களிடம் காட்டுவதிலும் ஒரு பெருமை.
கொஞ்ச நேரத்திற்குத் தான். கையில் கட்டியது பொறுக்க முடியாமல் வாய்க்குப் போய்ச் சேரும் தருணமும், முழுதும் சாப்பிட்டு முடித்த பின், வாட்ச் இல்லாத கையைப் பார்த்துக் கொள்வதும் அற்புதமான தருணங்களாக இப்பொழுதும் உணர முடிகிறது.
பழைய நினைவுகளை தூண்டும் பகிர்வு அம்மா...
பதிலளிநீக்குவணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன். உங்கள் மலரும் நினைவுகளை அழகாய் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவணக்கம் குமார் , வாழ்க வளமுடன். அந்தநாள் நினைவுகள் வந்ததா மகிழ்ச்சி.
பதிலளிநீக்குயாரும் தொடாத விஷயத்தை, சீனி மிட்டாய் செய்யும் ஒருவர் பற்றி அழகாக, சுவாரஸ்யமாக எழுதியிருகிறீர்கள் கோமதி! இனிய பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குமிட்டாய்க்காரரின் ஒருநாள் வாழ்வை அழகாக சொல்லிவிட்டீர்கள்.புதுமைப் பித்தனின் ஒருநாள் கழிந்தது என்ற கதை நினைவுக்கு வந்தது
பதிலளிநீக்குஅரசு சாரின் ஓவியங்களின் நேர்த்தி பிரமிக்க வைத்தது
ஜீவி சாரின் கருத்து நெகிழச் செய்கிறது.
பதிலளிநீக்குவணக்கம் முரளிதரன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குபுதுமைபித்தன் அவர்கள் சொன்னது போல் இவர்கள் வாழ்க்கை எல்லாம் ஒரு நாள் கழிந்தது நாளை எப்படியோ என்று தான் நினைக்க வைக்கிறது.
சாரின் ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி முரளிதரன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஜீவி சார், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குமீண்டும் வந்து ஜீவி சாரின் கருத்தைப்பற்றி சொன்னதற்கு நன்றி.
இளமைக் கால குழந்தைகளின் நிலையை அழகாய் சொன்னார்.
மிட்டாய் வாட்ச் கட்டியிருக்கிறேன். சவ்வு மிட்டாய் நிறைய சாப்பிட்டிருக்கிறேன் . பஞ்சு மிட்டாய் மிட்டாய் போல் இன்னும் இனிக்கிறது அந்த காலம் மனதில்
பதிலளிநீக்குவணக்கம் சிவகுமாரன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஅந்தக் கால நினைவுகள் மனதில் வந்ததா?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
புதிய பதிவா இருக்குமோனு நினைச்சேன். இதை முகநூலில் படிச்சேன். அருமையான நினைவலைகள். அப்போல்லாம் கடிகாரம் இல்லைனா நெக்லஸ் தான் அந்த மிட்டாய்க்காரர் கிட்டேக் கேட்டு வாங்குவது! ஏதோ நிஜமான கடிகாரமும், நெக்லஸும் கிடைச்சால் போல் சந்தோஷமா இருக்கும்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா, வாழ்க வளமுடன் . நீங்கள் சொல்வது உண்மைதான். குழந்தை பருவ சந்தோஷங்கள் மீண்டும் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
பதிலளிநீக்குஜவ்வு மிட்டாய், பஞ்சு மிட்டாய் கமர்கட் என்று அந்தக் கால நினைவுகள் அலை மோதின. அந்த எளிய வாழ்க்கை என்பது இப்போதும் சிறிய ஊர்களில் இருக்கத்தான் செய்கின்றது. நகரங்கள்தான் தொலைத்து வருகின்றன.
பதிலளிநீக்குஇது போன்ற வியாபாரிகளின் ஒரு நாள் வாழ்க்கையை மிக அழகாக நீங்கள் பார்த்ததைத் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். உண்மைதான் இவர்களுக்கு நாளை என்பது இல்லை எனலாம் அன்றாட வாழ்வியல் தத்துவங்களில் வாழ்பவர்கள். இன்றைய காசு நாளைய பொழுதின் கஞ்சிக்கு என்றுதான் செல்கின்றது. அழகான பதிவு.
கீதா: மேற் சொன்ன கருத்துடன் இது.......வீட்டில் அனுமதி கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அப்போதைய வயதில் இருக்கும் சில திருட்டுத்தனங்கள், வீட்டிற்குத் தெரியாமல் வாங்கி உண்பது, உதட்டில், உதட்டுச் சாயம் போல் நமக்குத் தெரியாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த கலர் மிட்டாய், ஜவ்வு மிட்டய், பஞ்சு மிட்டாயின் கலர் வீட்டில் காட்டிக் கொடுத்துவிட "உனக்கு உதட்டில் உதட்டுச் சாயம் பூசும் அளவு வயதாகிவிட்டதா தைரியம் வந்துவிட்டதா என்று போட்டுவாங்குவார்கள் உண்மைய. திருட்டுத்தனமாய் மிட்டாய் வாங்கத் தெரிந்த மனதிற்கு அவர்கள் கேட்கும் கேள்வியின் உள் அர்த்தம் புரியாத கள்ளம் கபடமற்ற மனம்... "இது உதட்டுச் சாயம் இல்லை என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்து உண்மையைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இறுதியில் ஒப்புக் கொண்டு திட்டு வாங்குவது என்று பல சுவாரஸ்யமான நினைவுகள்....
அழகான பதிவு
வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.
வாழவியல் தத்துவத்தை அழகாய் சொன்னீர்கள் கீதா.
சிறுபிராயத்தின் நினைவுகளை அழகாய் சொன்னீர்கள் துளதிதரன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
மிட்டாய் பழைய நினைவுக்கு...கூட்டிச் சென்றது. திருவிழா நாட்களில்...சாப்பிட்ட நினைவு
பதிலளிநீக்குகணினி ஓவியம் அழகு...
வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் , வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
எனக்கும் பழைய ஞாபகங்கள். வாங்கித் தரமாட்டார்கள். ஆனால் ரோட்டில் இருக்கும் குழந்தைகள் வாங்கும்போது அவர் கையில் வாட்ச்,நெக்லஸ் எல்லாம் விதம் விதமாக சுத்தி விடுவதும் அந்தப் பொம்மை கை தட்டுவது கண்ணுக்குள் நிக்குது :)
பதிலளிநீக்குவணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. நன்றி.