கோவில் நகரம் என்று அழைக்கப்படும் ஆலம்பூர் நவப்பிரம்மா கோவில்கள் பற்றி முந்திய பதிவில் சில படங்களைப் பகிர்ந்து இருந்தேன். இந்தப் பதிவில் அந்தக் கோவிலில் உள்ள அழகான ஜன்னல்கள், கலையம்சம் உள்ள சிலைகள் பகிர்வு.
இங்கு உள்ள சிற்பங்கள் இரண்டு காலத்தில் உள்ளவர்களின் கலைப்பாணி என்கிறது விக்கிமீடியா. சில சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டை சார்ந்த சாளுக்கியர்கள் கலை , சிலசிலைகள் 12ம் நூற்றண்டை சேர்ந்த காகதீயர்கள் காலத்தை சேர்ந்தது என்கிறது. இருவர் காலத்து சிற்பங்களும் அழகுதான்.
இங்கு உள்ள சந்நிதிகளில் சிவலிங்கங்கள் உள்ளன கருவறையில் எல்லா சிவன் அருகிலும் எண்ணெய் டின்கள் அடுக்கப்பட்டு இருக்கிறது. அதையும் சேர்ந்து தான் வணங்க வேண்டும். படம் எடுக்க வேண்டும்.
கோவில் வளாகத்தில் தர்க்கா இருக்கிறது. ஹஸரத் சையது ஷா பயில்வான் அவர்கள் தர்க்கா. அந்த தர்க்காவில் நடக்கும் திருவிழாவில் சாதி மதம் பாராமல் அனைவரும் கலந்து கொள்வார்களாம் என்று எங்கள் டாக்ஸி டிரைவர் அந்த தர்க்காவை பற்றி சொன்னார். அங்கு உள்ளே போய் வணங்கி வந்தோம் அங்கு இருந்தவர் வீபூதி மாதிரி (பாபா கோவில் உதி போல்) கொடுத்து பூசிக்கொள்ளுங்கள் என்றார் இந்தியில். நினைத்தது நடக்கும் அமர்ந்து வேண்டிச் செல்லுங்கள் என்றார்.
நம் ஊர்ப் பக்கம் கோவில்களில் தாங்கள் வீடு கட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கல்மேல் கல் வைத்து அடுக்கி வைத்து இருப்பார்களே அது போல் இந்தக் கோவிலிலும் அடுக்கி வைத்து இருந்தார்கள்.
நாம் கோவிலை பார்த்துக் கொண்டு இருக்கும் போது நம்மைச் சிறிது நேரம் நின்று தன்னைப் பார்க்க வைத்த அழகிய நாய்.
அடுத்து கர்நூல் பயணம். அங்குள்ள கொண்டாரெட்டி கோட்டையைப் பார்த்தோம். அடுத்த பதிவில். அதை பார்ப்போம்.
வாழ்க வளமுடன்.
-----------------------
கல்லில் வடிக்கப்பட்டுள்ள அனைத்துச் சிற்பங்களும் அருமையோ அருமை. எத்தனைச் சிற்பிகளின் வியர்வை சிந்திய உழைப்பு இதன் பின்னால் இருக்கக்கூடும் என்று நினைத்தாலே ஆச்சர்யமாக உள்ளது.
பதிலளிநீக்கு>>>>>
//நாம் கோவிலை பார்த்துக் கொண்டு இருக்கும் போது நம்மைச் சிறிது நேரம் நின்று தன்னைப் பார்க்க வைத்த அழகிய நாய். //
பதிலளிநீக்குஉச்சாணியில் உற்சாகமாக அமர்ந்துள்ள நாயும் அழகோ அழகு !
>>>>>
//கோவில் வளாகத்தில் தர்க்கா இருக்கிறது. ஹஸரத் சையது ஷா பயில்வான் அவர்கள் தர்க்கா. அந்த தர்க்காவில் நடக்கும் திருவிழாவில் சாதி மதம் பாராமல் அனைவரும் கலந்து கொள்வார்களாம் என்று எங்கள் டாக்ஸி டிரைவர் அந்த தர்க்காவை பற்றி சொன்னார். அங்கு உள்ளே போய் வணங்கி வந்தோம் அங்கு இருந்தவர் வீபூதி மாதிரி (பாபா கோவில் உதி போல்) கொடுத்து பூசிக்கொள்ளுங்கள் என்றார் இந்தியில். நினைத்தது நடக்கும் அமர்ந்து வேண்டிச் செல்லுங்கள் என்றார்.//
பதிலளிநீக்குஹிந்து முஸ்லீம்களின் இதுபோன்ற ஒற்றுமையை நாம் பல இடங்களில் இன்றும் காண முடிகிறது.
மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டிணம் சென்றபோது இதனை நான் நன்கு உணர்ந்தேன்.
திருச்சி உறையூரில் உள்ள நாச்சியார் கோயிலும், அங்கு ஆண்டுதோறும் ஓர் குறிப்பிட்ட நாளில் ஸ்ரீரங்கம் எம்பெருமாள் எழுந்தருளிச் செல்வதும் மேலும் ஓர் நல்ல உதாரணம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு ஊரில் உள்ள வசதி வாய்ந்ததோர் முகமதிய சகோதரர், அந்த ஊரில் பிள்ளையார் கோயில் கட்ட. பெருமளவு செலவினைத் தானே ஏற்றுக்கொண்டு உதவியுள்ளார் என பத்திரிகையொன்றில் படித்துள்ளேன்.
நேற்று எனக்கு ஓர் வாட்ஸ்-அப் செய்தி கிடைத்தது. அதில் ஓர் அருமையான செய்தியும் பல காட்சிகளும் என்னை அப்படியே பிரமிக்க வைத்தன.
நேற்று 09.04.2016 கடப்பாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் யுகாதி பண்டிகைக்காக யுகாதி பச்சடி பிரஸாதம் வழங்கப்பட்டுள்ளது. அதில் பல முஸ்லீம் சகோதரிகள் தங்களின் கருப்புக்கலர் பர்தாவுடன் கலந்துகொண்டு, வரிசையில் நின்றுகொண்டு, கோயில் பட்டர் கையால் தரும் பிரஸாதம் வாங்கிச்சாப்பிட்டுச் செல்கின்றனர். மேலும் அவர்கள் ”பெருமாள் எங்களுக்கு மாப்பிள்ளை முறை. எங்கள் பீபீ நாச்சியாரின் கணவர் அவர்” என பெருமையுடன் சொல்லிக்கொண்டே பிரஸாதம் வாங்கிச் சாப்பிட்டுச் செல்கிறார்கள்.
பகிர்வுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள். - VGK
வணக்கம்கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் எத்தனையோ சிற்பிகளின் உழைப்பு தான் ,
காலத்தை வென்று சிற்பிகளின் பெருமையை சொல்லிக் கொண்டு இருக்கிற்து.
ஆடாமல் அசையாமல் படம் எடுப்பதற்கும் ஒத்துழைப்பு கொடுத்தது அந்த நாய்.
//ஹிந்து முஸ்லீம்களின் இதுபோன்ற ஒற்றுமையை நாம் பல இடங்களில் இன்றும் காண முடிகிறது.//
நாச்சியாரை திருமணம் செய்து கொள்ளும் விழா பல் கோவில்களில் 10 நாட்கள் விழாவில் நடைபெறும்.
நீங்கள் சொன்ன யுகாதி பண்டிகை செய்தியை முகநூலில் படித்தேன், ஸ்ரீராம் அண்ணன் பேப்பரில் வந்த விஷயத்தை பகிர்ந்து இருந்தார்கள்.
எங்கள் ஊரில் சந்தனகூடு விழாவில் இந்து பெருமக்கள் அலங்காரம் செய்வார்கள் கலந்து கொள்வார்கள். ஒற்றுமையாக எல்லா பண்டிகைகளையும் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.
உங்கள் மூன்று பின்னூட்டங்களுக்கும் மிக நன்றி சார்.
நல்லதொரு கலைப் பொக்கிஷத்தைக் கண்ணெதிரே நிறுத்தி விட்டீர்கள்..
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு.. அருமை!..
பாருங்கள்.. அந்த நாயும் - தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருக்கின்றது!..
இன்று - நமது தளத்திலும் சமய ஒற்றுமை தான்!..
நேரமிருப்பின் கண்டு மகிழ்க!..
வாழ்க நலம்!..
அழகான வேலைப்படுகள். அருமையாக புகைப்படம் எடுத்து வழங்கி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஇந்து,முஸ்லீம்களின் ஒற்றுமை நிறைவாய் இருக்கிறது.
மாப்பிள்ளை பொருமாள் எல்லோரையும் திருடும் கள்வன்.....அழகோஅழகு அவன்.
உருகாதோர் யார் உளர்....ம்
அற்புதம் நன்றி அம்மா
வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் தள செய்திகளை படித்தேன்.
சமய ஒற்றுமைக்கு இவை எல்லாம் எடுத்துக் காட்டுக்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
அழகிய புகைப்படங்கள் நானும் ஓசியில் தொடர்கிறேன் சகோ
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும் , தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.
புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை
பதிலளிநீக்குநேரில் கண்ட உணர்வு
நன்றி சகோதரியாரே
கோயில் உலா வந்தேன். புகைப்படங்கள் அருமை.
பதிலளிநீக்குகோயில் உலா வந்தேன். புகைப்படங்கள் அருமை.
பதிலளிநீக்குஎன்ன ஒரு சிற்பக்கலை..! அவர்கள் கட்டியுள்ள கோவில்களின் உள்ளே இருக்கும் குளுமையை இந்தக் காலத்தில் நம்மால் கொண்டு வர முடிவதில்லை!
பதிலளிநீக்குஉள்ளே இருக்கும் தர்ஹா மத நல்லிணக்கத்தின் வெளிப்பாடு. நான் கூட அங்கு ஒரு கல் வைக்கலாமா என்று நினைக்கிறேன்.
கல்லின் மேல் நாலுகால் நண்பர் ஜோர்!
ஒரே நாள் பயணமாக மதுரை வந்து திரும்பினேன்.
அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபழைய காலத்தில் உள்ள கோவில்களில் இருக்கும் குளுமை இப்போது கட்டப்படும் கோவில்களில் இல்லை என்பது உண்மை.
நீங்களும் கல் அடுக்கி வணங்கி வந்தால் வீடு நிச்சியம்.
நாலுகால் நண்பரை பாராட்டியதற்கு நன்றி.
அப்பா நலம் தானே?
உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வணக்கம் துரைசெல்வராஜூ , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்கு நன்றி.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களோடு கோவில் உலா செய்த திருப்தி. புகைப்படங்கள் அருமை மேடம்!
பதிலளிநீக்குவணக்கம் மோகன்ஜி வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.