Wednesday, April 6, 2016

ஆலம்பூர் நவப்பிரும்மா கோயில்கள்

ஸ்ரீசைலம் போய்விட்டுத் திரும்பி கர்நூல் வரும் முன்  ஆலம்பூர்  என்ற ஊரில் உள்ள நவப்பிரம்மா கோவில் பார்த்தோம். மிக அழகான  கோவில்.
தொல்லியல் துறையின் பொறுப்பில் இருக்கிறது. சேதம்  அடைந்து இருக்கிறது பல சிற்பங்கள்,  இருந்தாலும் மிச்சம் இருக்கும் சிற்பங்கள் பல அழகிய கலைவேலைப்பாடு நிறைந்தவை. பார்க்கப் பார்க்கப் பரவசம் தரும் அழகு.
 


இங்கு ஜோகுலாம்பாள் திருக்கோயில் உள்ளது. சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று

 2002 ல் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஜோகுலாம்பாள் அம்மன் மிக அழகாய் அலங்காரமாகக்  காட்சி தந்தார்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகு. அப்போது அங்கு இருந்த தெலுங்கு பேசும் குடும்பத்தினர் குனிந்து மண்டியிட்டு அமர்ந்து  அம்மனைப் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள் .அவர்கள் பேசியது கொஞ்சம் புரிந்தது , அம்மனின் மூக்குத்தி ஜொலிப்பது கீழே மண்டியிட்டு அமர்ந்து பார்த்தால்தான் தெரிகிறது  என்று எங்களைப் பார்த்து மீண்டும் தெலுங்கில் சொன்னார்கள்.  நாங்களும் பார்த்தோம் . மிக அழகாய் மூக்குத்தி ஜொலித்தது.

கோவிலைச் சுற்றி அகழி மாதிரி இருந்தது. குழாய்கள் இருந்தது. விழாக் காலங்களில் நீரூற்றுகள் இயங்கும் போலும்.  அம்மனுக்கு குங்குமார்ச்சனை நடக்கிறது தினமும்.  அழகிய நந்தவனம் இருக்கிறது.  முன்பக்கக் கோபுரம்  ஐந்து நிலைகளுடன் அழகாய் இருக்கிறது.  

கொடிமரமும் பின் புறம் அம்மன் கோபுரமும்

கோவிலைச்சுற்றி அகழி
                        
தூண்களில் அழகிய சிற்பங்கள்
அழகிய நந்தி மண்டபம்
                                              சிதிலமடைந்த நந்தி, கோபுரங்கள்.
அடியும், முடியும் காண ,பிரம்மாவும், விஷ்ணுவும் போகும் கதை சித்தரிக்கப்பட்டு இருக்கிறது..

                                                    நுணுக்கமான கலைவேலைப்பாடு
வாழைமரமும்  குரங்கும், இரு தோழிகள்.


                 
             

                      
                                                               திரிபுரசம்ஹாரம்

அகோர வடிவம்

தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை  அழிக்க எடுத்த தோற்றம்.

இப்படி பல புராணக்கதைகளை கொண்ட அழகிய சிலைகள் அமைந்த கோவில். கோவில் நகரம் என்று அழைக்கப்படும் ஆலம்பூர் நவப்பிரம்மா கோவில்.

பறவைகள் தண்ணீர் குடிக்க, குளிக்க  வைத்து இருக்கும்  கல் தொட்டி போல் உள்ளது.

 இந்தக் கோவிலின் அழகிய வேலைப்பாடு அமைந்த ஜன்னல்கள், கோவிலுக்குள்  குடியிருக்கும் சிவலிங்கங்களின் காட்சி.  மற்றும் கோவில் வளாகத்தில் அமைந்து இருக்கும்  தர்க்கா ஆகியவை பற்றி  அடுத்த பதிவில்   பார்க்கலாம்.
                                                       வாழ்க வளமுடன்.
                                                          -----------------------

23 comments:

KILLERGEE Devakottai said...

பிரமிப்பான புகைப்படங்கள் அழகிய விளக்கவுரைகளுடன் அருமை வாழ்த்துகள் சகோ
முதல் புகைப்படத்தை மட்டும் சுட்டுக் கொண்டேன் நன்றி.
தமிழ் மணம் 1

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
காமிரா ஜூம் செய்வது கெட்டு போய் விட்டது. ஐபோனில்தான் எடுத்தேன்.
முதல்படத்தை எடுத்துக் கொண்டது, மகிழ்ச்சி.
புகைப்படக்கலைஞ்ர்களுக்கு அருமையான இடம் வித விதமாய் படங்கள் எடுக்கலாம்.
கலைவேலைப்பாடு கொட்டிக் கிடக்கிறது .
உங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

jk22384 said...

அண்மையில் சென்று வந்தோம். ஆனால் நிறைந்த கூட்டம் காரணமாக இவ்வளவு நுணுக்கமாக பார்க்க இயலவில்லை. படங்களுக்கு நன்றி.

--
Jayakumar

வை.கோபாலகிருஷ்ணன் said...

பதிவும் விளக்கங்களும் அருமை. இனிய புனிதப் பயணம். வழக்கம்போல படங்களெல்லாம் மிக மிக அருமை. பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள்.

கோமதி அரசு said...

வணக்கம் ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.

தர்க்காவில் விஷேசம் இருக்கும் அப்போது கூட்டம் நிறைய இருக்கும் என்றார்கள்.
அந்த விழாவா நீங்கள் போய் இருந்த போது?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

Ramani S said...

புராதனக் கோவிலாக மட்டும் அல்லாது
பிரமாண்டமான கோவிலாகவும் இருக்கும்
போல இருக்கிறதே

சிற்பங்களை பார்த்து இரசிக்கும்படியாக
அருகாமைக் காட்சிகளாகக் கொடுத்திருந்தது
மிக மிக அருமை

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
புராதனக் கோவில் தான் . 12ம் நூற்றாண்டை சேர்ந்த கோவில்.
உங்கள் கருத்துக்கும், நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

கோவில் கோபுரமே வித்தியாசமாக இருக்கிறது! அந்த ஊர்ப் பாணி! ஜோகுலாம்பாள் அம்மன்! பெயரும் வித்தியாசம். அழகிய, அருமையான இடங்களைக் கண்டு ரசித்து வந்திருக்கிறீர்கள். உங்கள் கேமிராக்கண் வழியே நாங்களும் ரசித்தோம்.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
ஆமாம், நீங்கள் சொல்வது போல் வித்தியாசமகத்தான் இருந்தது.
சாளுக்கியர்கள் கட்டிடக் கலை.
உங்கள் கருத்துக்கு நன்றி.
துரை செல்வராஜூ said...

தங்களுடைய திருத்தல சுற்றுலா - அழகிய படங்களுடன்
எங்களுக்கும் நல்ல விஷயங்களைத் தெரியப்படுத்துகின்றது..

அடுத்த பதிவினுக்காகக் காத்திருக்கின்றேன்..

வாழ்க நலம்!..

கோமதி அரசு said...

வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
இறைவன் அருளால் அடுத்த பதிவை விரைவில் பதிவிட வேண்டும்.

ADHI VENKAT said...

அழகியப் படங்களுடன் கூடிய அருமையான பகிர்வும்மா... தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன்.

கோமதி அரசு said...

வணக்கம் ஆதி, வாழ்க வளமுடன்.
நேரம் இருக்கும் போது வாருங்கள் ஆதி.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன்

Dr B Jambulingam said...

கோயில் உலா அருமை. புகைப்படங்கள் நிகழ்விடத்திற்கு கொண்டு சென்றன. நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் பள்ளி பணி இப்போது அதிகம் தானே ! பேப்பர் திருத்துவது.
மாணவர் சேர்க்கை என்று நிறைய வேலை இருக்குமே.
உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்குமோ வரலாம்.


.

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி .

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான படங்களுடனும் தகவல்களுடனும் கூடிய பதிவு சகோ...அறியாத ஒரு கோயிலைப் பற்றி அறிந்து கொள்ள உதவியது மிக்க நன்றி பகிர்விற்கு...

கோமதி அரசு said...

வணக்கம் துளசிதரன் கீதா, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆலயம் கலை நுட்பம் மிக்கதாக காணப்படுகிறது.படங்களுடன் பகிர்வு அருமை

கோமதி அரசு said...

வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்
நலமா? உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

KILLERGEE Devakottai said...


சகோ எனது தொடர்கதையின் முடிவு பகுதி காண...

http://killergee.blogspot.ae/2016/04/blog-post_9.html