Monday, January 4, 2016

கங்கை கொண்ட சோழபுரம்- பகுதி -2

கங்கை கொண்ட சோழபுரத்தில்  படங்கள் நிறைய  எடுத்தேன்  .  நீங்களும் கண்டு மகிழ இங்கு  மேலும் சில படங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். 
கங்கை கொண்டசோழபுரம் முதல் பகுதி பார்க்காதவர்கள் பார்க்கலாம்.


சுவாமி விமானம்
புன்சிரிப்பாய் நடராஜர்
திருமால்
தட்சிணாமூர்த்தி
சிவபெருமான் சண்டீசப்பதம் தந்த காட்சி.(கொன்றை மாலை சூட்டிய காட்சி)

//அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம்
உண்டகலமும்  உடுப்பனவும்  சூடுவனவும்  உனக்காகச்
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்குத்
துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்.//

சேக்கிழார்  அருளிய திருத் தொண்டர்புராணத்தில்  சண்டேஸ்வர
புராணப்பாடல்.
திருமகள்
சுவாமியும், அம்மனும்காலை நேர பூஜை மணி ஒலிக்கிறது

ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள்.
பிச்சாடனர் (கைகள் தனியாக செய்து பொருத்திய வேலைப்பாடு, இப்போது கைகள் இல்லாமல் பொருத்திய துவாரம் தெரிகிறது)

வாசல் இடதுபுறம்  தெரியும் காட்சி

சுவாமி  தரிசனம் செய்து விட்டு  வரும் வாசல் மேல் பகுதியில் அழகிய வேலைப்பாடு உள்ள கருங்கல் ஜன்னல்
 (மற்றொரு வாசல்  )துவாரபாலகர் சிரிப்பது போல் இருக்கிறது அல்லவா?
 இரண்டு கிளிகள் வருகிறவர்களை பார்வையிட்டுக் கொண்டு இருக்கிறது
கழுத்தைச் சாய்த்து ஒரு பார்வை

அர்த்தநாரீஸ்வரர்
கோவிலில் கோழியும், சேவலும் சுற்றி திரிந்து கொண்டு இருந்தது

நிறைய சிலைகளை  மண்டப வாசலில் நிறுத்தி வைத்து விட்டார்கள்.

வாழ்க வளமுடன்
=============

24 comments:

KILLERGEE Devakottai said...

புகைப்படம் எடுத்த விதமே அழகு சகோ காணொளியும் கண்டேன்
தமிழ் மணம் 1

துரை செல்வராஜூ said...

தங்கள் நிழற்படப் பார்வையில் பறவைகளும் விலங்குகளும் சிக்கிக் கொள்வது அற்புதம் தான்!..

நேரில் சென்று பார்த்ததைப் போன்ற உணர்வினை ஏற்படுத்தின - பதிவில் உள்ள படங்கள்..

வாழ்க நலம்..

ஸ்ரீராம். said...

எவ்வளவு புகைப்படங்கள் எடுத்தாலும் திருப்தி வராது. அழகிய புகைப்படங்கள்.

தம வாக்கிட்டு விட்டேன்.

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைத்த அழகான படங்களும்
அருமையான பகிர்வுகளும்...

பாராட்டுக்கள்..

ஜீவி said...

திரு. துரை செல்வராஜூ அவர்களை வழி மொழிகிறேன். இறைப்பணி ஆற்றும் உங்கள் உள்ளம் கனிவானது. அவன் அருள் தங்கள் ஆற்றலாகியிருக்கிறது. தொண்டர் தம் பெருமை சொல்லவும் கூடுமோ??...

KABEER ANBAN said...

Archaeological survey of India-வின் கட்டுக்குள் இருக்கும் அனைத்து கோவில்களும் அழகிய புல்தரை, பூங்கா என்பதாக சுற்றுப்புறம் சுத்தமாக பராமரிக்கப்படுவது வெகு ஆறுதலாக இருக்கிறது. மனதுக்கு இதமாகவும் உள்ளது. அழகான படங்களுக்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் ஒவ்வொன்றும் கவிதையாய் அருமை

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். நீங்கள் சொன்னது போல்
எவ்வளவு படம் எடுத்தாலும் ஆசை விடவில்லை.
கருத்துக்கும், தமிழ்மணவாக்கிற்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜீவி சார், வாழ்கவளமுடன்.
இறைதொண்டு ! உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கபீரன்பன், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் தொல்லியல்துறை எடுத்துக் கொண்டுள்ள
கோவில் எல்லாம் அழகாய் சுத்தமாய் பராமரிக்கப்படுவது உண்மை.
உங்களை வெகு நாட்களுக்கு பின் பார்ப்பது மகிழ்ச்சி.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.....

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நனறி.

மாதேவி said...

மிகவும் அழகாக இருக்கிறது. நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் மாதேவி, வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

பரிவை சே.குமார் said...

படங்களும் பகிர்வும் அருமை அம்மா...
படங்களின் மீது உங்கள் பேரை பதியலாமே... நீங்கள் எடுத்த போட்டோக்கள்தானே...

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்கவளமுடன். நான் எடுத்த படங்கள் தான். இனி நீங்கள் சொன்னது போல் பேரைப் போடுகிறேன் நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஒவ்வொரு சிற்பத்தையும் சிறப்பாகப் படமாக்கிக் காணத் தந்துள்ளீர்கள். ஆலய மணியின் ஓசைக்கும் எங்கள் நன்றி:)!

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Geetha Sambasivam said...

பக்கத்திலே தான் இருக்கு. ஆனாலும் என்னமோ போகமுடியலை! இனியும் முடியுமானு தெரியலை! படங்கள் எல்லாமும் விபரங்களும் அருமையாக உள்ளன.

கோமதி அரசு said...

வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
எல்லாம் முடியும் போய் வாருங்கள்.
எவ்வளவு தூரம் உள்ள கோவில் எல்லாம் போய் வந்து இருக்கிறீர்கள்!
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.