சனி, 2 ஜனவரி, 2016

கங்கை கொண்ட சோழபுரம்

முகப்பு வாசல் தோற்றம்
கோவிலுக்கு வெளியே 

சாமி சன்னதி படிகளிலிருந்து எடுத்த சாமி  சிலை இல்லா சன்னதி.
துர்க்கை அம்மன் சன்னதி அருகிலிருந்து எடுத்த படம்

அஷ்டபுஜ துர்க்கை
இது போன்ற மண்டபங்கள் நான்குபுறமும் இருந்து இருக்கிறது முன்பு -
அவை எல்லாம் அணைக்கரைப் பாலமாகி விட்டது.
பஸ் நிறுத்தம் அருகே இருந்து எடுத்த படம்.

நந்தியின் கழுத்தில் மணிகளும், சங்கிலிகளும், குட்டி குட்டி சிம்மங்களும், இலைகளும் எவ்வளவு கலை நுணுக்கம்?


நந்தி சிலையின் மேல்  இலை வேலைப்பாடு
அம்மன்சன்னதி வாசலிலிருந்து

சிம்மக் கிணறு

சிம்மகிணற்றில் ஒரு அம்மன் சிலைகளும் கற்களும் கிடக்கிறது.

சிம்மக்கிணறுக்கும் இந்த வட்ட கிணற்றிற்கும் இடையே வழி இருக்கிறதாம்.

கிணற்றில் மீனுக்கு பொரி போட்டு இருப்பது வானத்து நட்சத்திரங்கள் போல் இருக்கிறது அல்லவா?

சோழகங்கம் ஏரி- .   (கோவிலிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது)கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து இங்கே விடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
ராஜேந்திசோழன் 11ம் நூற்றாண்டில்  இந்த சோழகங்க ஏரியை உருவாக்கினார் இன்று பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது, கங்கை கொண்ட சோழபுரம் கோவில். இந்த ஆண்டும் வழக்கம் போல்  ஜனவரி முதல்தேதி போய் வந்தோம். எப்போதும் அந்த கோவிலுக்குப் போனாலும் மகிழ்ச்சியைத் தரும் மனதுக்கு.

சென்ற ஆண்டு இன்பமும், துன்பமும் நிறைந்த ஆண்டு.  இந்த ஆண்டு துன்பத்தைத் தாங்க வல்லமையும்,  துன்பத்தைப் போக்கும் வழியும் உன் அருளால்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் குறையாமல் இருக்கவேண்டும் என்று வேண்டி வந்தோம். 

தொடர்ந்து பயணங்கள் செய்து கொண்டு இருப்பதால் பதிவிடவோ நண்பர்கள்  வலைத்தளங்களை படித்து கருத்திடவோ முடியவில்லை. 

ஒரே இடத்தில் நிலையாக நிம்மதியாக சிறிது காலம் இருந்தால் தான் பதிவிட  கருத்திட முடியும். அதற்கு சில மாதங்கள் ஆகலாம். மீண்டும் வருவேன்.

எல்லோருக்கும் இந்த ஆண்டு மனநிறைவையும், எல்லா நலங்களையும் தர வேண்டும்.

படங்கள் எல்லாம்  அலைபேசியில்(ஐ போனில்) எடுத்தேன், காமிராவில் எடுத்த படங்கள் வீட்டில் நிறைய இருப்பதால் .


மேலும் கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றிய விவரங்களும் படங்களும் இந்த பதிவில் இருக்கிறது.

                                                                    வாழ்க வளமுடன்.

33 கருத்துகள்:

  1. அழகிய புகைப்படங்கள் சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இடம். ஒரு அதிர்வு இருக்கும். அழகிய புகைப்படங்களுடன் நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  3. ரோபோ இல்லை என்று சொல்லு என்று ஒவ்வொரு ப்ளாக்கிலும் படுத்துகிறதே.... எங்கள் ப்ளாக்கிலும் இந்த நிலைதானா?

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல் தான்.
    அலுப்பு தட்டாது என்பதும் உண்மை.
    உங்கள் வலைத்தளத்தில் ரோபோ படுத்தவில்லையே!
    என் வலைத்தளத்தில் இருக்கிறதா ரோபோ?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அருமையான புகைப்படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
    எவ்வளவு நாளாச்சு உங்களைப்பார்த்து!
    நலமா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அழகான தெளிவான படங்கள்! தகவல்கள் சிறப்பு! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அழகு மிகுந்த படங்கள் பார்க்கப் பார்க்க நினைவலைகள் கோவிலுக்குச் செல்லும். வெகுநாட்களுக்கு முன் சென்றது. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  13. தங்கள் பதிவு வெளியான நிமிடங்களில் முழுமையாக வாசித்து விட்டேன்..
    ஆனாலும், இங்கே இணைய இணப்பு சரியாக இல்லாததால் - உடன் கருத்திட முடியவில்லை..

    பள்ளி நாட்களில் சுற்றுலா சென்றதைப் போல இருக்கின்றது..
    அழகான படங்கள்.. மேலும் சிறப்பினைக் கூட்டுகின்றன..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் ஐ போனில் எடுத்த படங்கள் எல்லாவற்றையும் ‘ஐ’ என்று ஆர்வமாகப் பார்த்தேன். நல்ல தெளிவான படங்கள். பாராட்டுக்கள். (பொதுவாக செல் போனில் படம் எடுக்கும்போது கவனமாக இருக்கவும். கையில் பிடிமானம் கிடைக்காது; ஆர்வக் கோளாறால் தடுமாறி விடாதீர்கள்) எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    பள்ளி நாட்களில் சுற்றுலா செல்வதை போல் தான் இன்னும் நான்
    கண்டு களிக்கிறேன் ஒவ்வொரு இடங்களையும்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
    எப்போது முடியுமோ அப்போது கருத்திடலாம் சார்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் தி.தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்கு நன்றி.
    உங்கள் அறிவுரையை நினைவில் வைத்துக் கொள்கிறேன், கவனமாய் இருக்கிறேன்.
    ஓடும் ரயிலில், காரில் போகும் போது ஜன்னலுக்கு வெளியே தெரியும்
    காட்சிகளை எடுக்கும் போது என் கணவர் பத்திரமாய் பிடித்துக் கொள்
    என்று சொல்வார்கள்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி . உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. கங்கை கொண்ட சோழபுரம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட புரம். கோயிலின் சிற்பங்கங்கள் பார்க்கப் பார்க்க அலுக்காதவை. சிற்பிகளின் கற்பனைத் திறன் மலைக்க வைப்பபை.

    இப்பொழுது உங்கள் படத்தில் பார்க்கும் பொழுது தான் தெரிந்தது. கோபுரத்திற்கு அளவெடுத்த ப்ரேம் மாதிரி அந்த முகப்பு வாசல் தோற்றம் எவ்வளவு அழகாக இருக்கிறடு?.. கோயிலுக்கு வெளியே அந்த சிமிண்ட் பெஞ்ச், தண்ணீர் தொட்டி, பார்க்கின் சுற்று வளைவுகள் இவையெல்லாம் கோபுரத்தின் பழமைச் சிறப்புக்கு அன்னியப்பட்டத் தோற்றம் தந்தாலும் ஒரு சுற்றுலா தலத்தின் சிறப்புக்கு இக்காலத்தின் தேவையான அழகு கொண்டு சிறப்பாகத் தான் இருக்கின்றன.

    சாமி இல்லாத இடமே இல்லை என்றாலும், இந்த சந்னதியில் சாமி சிலை ஏதும் இல்லை என்று சொல்கிறீர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். சிதிலமடைந்த மண்டபத்தைப் பார்த்த பொழுது முகப்பு வாசலும் சிதிலமடைந்திருக்குமோ என்று தோன்றியது.

    தலை நிமிர்த்தி காலை மடித்திருந்திருந்த அந்த நந்தி கொள்ளை அழகு! அந்த அழகுக்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கலைநுணுக்க வேலைப்பாடுகள் எவ்வளவு அழகு சேர்க்கின்றன என்று பிரமிப்பாக இருந்தது.

    சிம்மக் கிணறு அட்டகாசம். வயிற்றுப் பகுதியில் தற்கால வாசல் கேட்! வட்ட கிணறையும் சிம்மக் கிணறையும் இணைக்கிற மாதிரி வழி இருக்கிறது என்றால் அது சோழர் கால பொறியியல் ஞானததிற்கு சான்று.

    ஆட! பொறித் துணுக்குகள் வானத்து நட்சத்திரங்களே தாம்! உங்கள் கற்பனையும், அந்த அற்புத புகைப்படமும் மனசைக் கவர்ந்தது.

    சோழ கங்க ஏரி பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மேலதிகத் தகவல்கள் தெரிந்தால் அதற்காகவே ஒரு தனிப்பதிவு போடலாம்.

    வழக்கம் போல ஜன்வரி 1-ல் நீங்கள் கங்கை கொண்ட சோழபுரத்தில்! இந்த ஆண்டுக்கான உங்கள் பிரார்த்தனையும் மிகவும் அர்த்தபூர்வமாக இருந்தது.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. மிக நீண்ட பின்னூஈட்டம் அளித்தேன். வந்து சேரவில்லை போலிருக்கு. பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    விருந்தினர் வருகை அதனால் மெயில் பார்க்கவில்லை.
    ஒய்வு கிடைத்தபின் வந்துப்பார்த்தால் உங்கள் விரிவான பின்னூட்டம் நன்றி.

    நீங்கள் சொல்வது போல் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் இறைவன்.
    அந்த மண்டபத்தில் சாமி சிலை இல்லை என்று போட்டு இருக்க வேண்டும்.
    நீங்கள் சொல்வது போல் சோழர் கால கட்டிடக்கலை வல்லுனர்கள் இருந்தது உண்மை என்பதை அவர்கள் கட்டிய கோவில்கள் எல்லாம் பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது இன்றும்.(காலத்தை வென்று.)

    வானத்து நட்சத்திரங்களை ரசித்தமைக்கு நன்றி.
    சோழகங்க ஏரி 11ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழ்ரால் உருவாக்கப்பட்டது. இப்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. இன்னும் விவரங்களை தெரிந்து கொண்டு நீங்கள்சொல்வது போல் ஒரு பதிவு எழுதுகிறேன்.
    எத்தனையோ வருடங்களாக கங்கைகொண்ட சோழபுரம் போய் வருகிறேன். இந்தமுறைதான் சோழகங்க ஏரியை பார்த்தேன். அதன் அழகும், பரப்பும் வியக்க வைக்கிறது.முன்பு இதை விட பெரிதாக் இருந்தது என்றும் சோழகங்கஏரியின் வடிகாலாக வீராநாரயணஏரியை உருவாக்கினார் இராஜேந்திர சோழர் என்கிறார்கள்.
    உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  20. தங்களால் மீண்டும் ஒரு முறை
    கங்கை கொண்ட சோழபுரத்திற்குப் பயணித்த உணர்வு
    நன்றி சகோதரியாரே
    படங்கள் ஒவ்வொன்றும் அருமை

    பதிலளிநீக்கு
  21. படங்கள் மிகத் தெளிவு. நன்று நன்று-
    தகவலும் நன்று.
    புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் வேதா, இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. படங்கள் எல்லாம் தெளிவாக, கோவிலின் அழகைக் கூட்டிக் காண்பிக்கின்றன! எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறந்த‌ அழகு போலிருக்கும். உங்களை மாதிரியே நானும் இதுவரை சோழகங்கம் ஏரியைப்பார்த்ததில்லை. அடுத்த முறை போகும்போது பார்க்க வேண்டும்!!

    பதிலளிநீக்கு
  25. படங்கள் அழகு அம்மா...
    பகிர்வுக்கு நன்றி.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்ம..

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்கவளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் ஒவ்வொரு முறையும் புதிதாய் பார்ப்பது போல் தான் தோன்றும்.
    அடுத்தமுறை போகும் போது சோழகங்க ஏரிக்கு போகும் வழியில் இருக்கும் குருவாலப்பர் வீரநாராயண பெருமாளைப் பார்த்து விட்டு அப்புறம் சோழகங்க ஏரி பார்க்கலாம். நாங்கள் ஜனவரி 1ம் தேதி பார்க்கும் கோவில் இதுவும் ஒன்று.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் குமார், வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. இது போல்தான் தஞ்சாவூர் கோவிலும்,
    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது/

    பதிலளிநீக்கு
  29. கங்கை புரம் தரிசனம் மகிழ்ச்சி தருகிறது.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் மாதேவி,வாழ்க வளமுடன்.
    தொடர்ந்து பதிவுகளுக்கு கருத்து வழங்கியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. ஒவ்வொரு புதுவருடத்திற்கும் இங்கு செல்வது குறித்து முன்னர் பகிர்ந்திருக்கிறீர்கள். அழகான படங்கள். நந்தியின் பிரமாண்டத்தை அருமையான கோணத்தில் வெளிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

    வாழ்த்துகளுக்கும் நன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு