Friday, November 6, 2015

குன்றத்தூர் முருகன் கோயில்

சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூரில் சிறிய மலையின் மீது  இருக்கும்   முருகன் கோவிலுக்கு சென்றமாதம் சென்று இருந்தோம். (தம்பி மகள் திருமண நிச்சயதார்த்தத்திற்கு மாங்காடு சென்று இருந்தோம் ) அப்படியே முருகன் தரிசனம்.

பழைய சினிமா படங்களில் எல்லாம் இந்தக் கோவில் கண்டிப்பாய் இடம்பெறும். பலவருடங்களாய் பார்க்க நினைத்த கோவிலை என் மருமகள்  கல்யாணநிச்சயத்தால் பார்க்க முடிந்தது.

இவ்வூர் பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழார் சுவாமிகள் பிறந்த ஊர். இந்த ஊரில் அவருக்கு தனிக் கோவில் உண்டு.

மாங்காட்டிலிருந்து இவ்வூர் நாலு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
அழகிய வடக்கு நோக்கிய இராஜகோபுரம், படி ஏறுவதற்கு முன் அழகான மண்டபம். 

கோவில் வரலாறு சொல்லும் அறிவிப்புப்பலகை கூறும் கதை:-

திருப்போருரில் அசுரர்களை வென்று வந்த முருகன், இந்தக் குன்றத்தூர் குன்றில் தங்கிச்  சென்றதால்  இத்தலத்திற்கு தென் திருத்தணி என்ற பெயரும், , இங்குள்ள குன்றின் மீது முருகன் அமர்ந்ததால் குன்றத்தூர் என்ற பெயரும்   ஏற்பட்டது.

சோழ அரசர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. முருகன் தங்கி இருந்து பூஜை செய்த சிவனுக்குக்  கட்டிய கோவில் மலையடிவாரத்தில் இருக்கிறது.

கோவிலுக்குள் நுழைந்தவுடன் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக ச்செல்லும்படியாகத் தடுப்பு கட்டி இருக்கிறார்கள் . தடுப்புக்கு அப்பால் வள்ளி தெய்வானையுடன்  உற்சவ முருகன் மிக அழகாய்  காட்சி தருகிறார். உற்சவ மூர்த்திக்கு முதலில்  ஆரத்தி  செய்து  காட்டி விட்டு மூலஸ்தானத்திற்கு அழைத்து செல்கிறார் குருக்கள். முருகன் மிக அழகாய் விபூதி அலங்காரத்தில் அவர் மட்டுமே காட்சி தருவார் நேரே பார்த்தால். ஒரு புறம் இருந்து வள்ளியும் மற்றொருபுறம் இருந்து தெய்வானையையும் பார்க்க வேண்டும்.

முருகன் சன்னதியில் தட்சிணாமூர்த்தியும், விஷ்ணு துர்க்கையும் இருக்கிறார்கள், பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, நவக்கிரகங்கள், பைரவர் இருக்கிறார்கள்.
தூண்களில் அழகிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 
கிளி சோதிடம் பார்ப்பவர்,  யாசிப்பவர்கள் படிகளில்
படியேறி முருகனைத் தரிசனம் செய்யப் போகும் போது  ஒரு  குட்டி தேவதை தன் பெற்றோர்களுக்குப் போட்டோ எடுக்க போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

படியேறி வருகிறோம், எங்கள் மனக்குறைகளைப்  படிப்படியாகக் குறைத்துவிடப்பா!

கோவிலுக்குப் போகும் பாதை
கோவில் வரலாறு சொல்லும் அறிவிப்புப் பலகை

படியேறிச் சென்றவுடன் முதலில் வருவது வலம்சுழி விநாயகர் சன்னிதி

பிள்ளையாரின் பின் புறத்திலிருந்து பார்த்தால்  அழகான இயற்கைக் காட்சி தெரிகிறது.

குன்றத்தூர் முருகன் குறைகளை தீர்ப்பார் என்று  சொல்கிறது வரலாறு, மனக்குறைகளைப்  போக்கி மன ஆறுதலைத் தரவேண்டும் குன்றத்தூர் முருகன் அனைவருக்கும்.

அப்படியே எல்லோருக்கும் இனியதீபாவளி நல் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன். 
வாழ்க வளமுடன்.

50 comments:

துரை செல்வராஜூ said...

குன்றத்தூர் சென்றதில்லை.. ஆயினும் அழகான படங்களுடன் இனிய தரிசனம்..

வாழ்க நலம்..

திண்டுக்கல் தனபாலன் said...

பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தரிசனம் - (அழகிய படங்களுடன்)....

நன்றி அம்மா...

செங்கதிரோன் said...

அருமையானப் பதிவு .நன்றி

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. அழகான குட்டித் தேவதை.

தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், கோமதிம்மா!

இளமதி said...

மனம் நிறைக்கும் பக்திப் பதிவு அக்கா!
படங்கள் மிக அருமை!

பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

Nagendra Bharathi said...

அருமை

ஸ்ரீராம். said...

அருகிலேயே இருந்தும் நான் இன்னும் பார்க்காத இடம். சீக்கிரமே போக வேண்டும். பி. சுசீலாம்மாவின் குரலில் 'குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி... நம்பி..' பாடல் காதுகளில் ஒலிக்கிறது!

கரந்தை ஜெயக்குமார் said...

இதுவரை குன்றத்தூர் சென்றதில்லை
இன்று தங்களால் கண்டேன்
நன்றி சகோதரியாரே
தம+1

மோ.சி. பாலன் said...

அருள்தருவாய் முருகா

ரூபன் said...

வணக்கம்
அம்மா
படங்களுடன் கோவில் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ரூபன் said...

வணக்கம்
அம்மா
படங்களுடன் கோவில் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

அழகான படங்கள்.. பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

இனியதீபாவளி நல் வாழ்த்துகள்..!

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் செங்கதிரோன், வாழ்க வளமுடன்.
உங்கள் முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Dr B Jambulingam said...

நான் பார்க்கவேண்டிய கோயில்களின் பட்டியலில் இக்கோயிலும் ஒன்று. இக்கோயிலுக்குச் செல்லும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

கோமதி அரசு said...

வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
நேரம் கிடைக்கும் போது சென்று வாருங்கள் அழகான முருகன்,
அமைதியான இடம். சுசீலா அவர்களின் பாடல் கேட்க வேண்டும்.

கோமதி அரசு said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி

கோமதி அரசு said...

வணக்கம் மோ.சி . பாலன், வாழ்கவளமுடன்.
உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம், ரூபன், வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
நலமா?
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்கவளமுடன்.
வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வாருங்கள்.

கோமதி அரசு said...

வணக்கம் நாகேந்திர பாரதி, வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

போனது இல்லை. படிகள் எல்லாம் சினிமாவில் பார்த்தவை! முருகனை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்குமானு தெரியலை! அத்தனை படிகள் ஏறணுமே! :)பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கீதா, வாழ்கவளமுடன்.
படி அதிகம் இல்லை 87 படிகள் தான் , ஏறிவிடலாம்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

‘தளிர்’ சுரேஷ் said...

அழகான படங்களுடன் ஆலயதரிசனம் சிறப்பு! நன்றி!

கோமதி அரசு said...

வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

புகைப்படங்கள் அனைத்தும் அழகு சகோ
தமிழ்மணம் + 1

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிறகும் நன்றி.

rajalakshmi paramasivam said...

பல முறை சென்றிருக்கிறேன் இந்தக் கோவிலிற்கு. ஆனாலும் இந்தக் கோவில் பற்றிய உங்கள் பதிவு படிக்க மிக சுவாரஸ்யம். படங்களும் மிக நேர்த்தி.
வாழ்த்துக்கள் கோமதி.!

கோமதி அரசு said...

வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
நலமா? ஊருக்கு போய் இருந்தீர்களா?
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அழகான கோவில் - படங்களும் தகவல்களும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள், கோமதிம்மா!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!

யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

இன்னும் குன்றத்தூர் சென்றதில்லை. எங்கள் லிஸ்டில் உண்டு. உங்கள் பதிவு பல தகவல்களைத் தந்தது உதவியாக இருக்கிறது சகோ.

விளக்கங்களுடன் புகைப்படங்கள் அழகு. மிக்க நன்றி சகோ.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குன்றத்தூரில் எங்கள் ஈழத்து உறவுகள் பலர் வழ்வதால் 2013 சென்னை வந்த போது, முருகன் தரிசனமும் கிட்டியது. மதியம் அன்னதானமும் அன்புடன் தந்தார்கள். மிக ரம்மியமான சூழல். உங்களைப் போல்ஆர அமர இருந்து அனுபவிக்கவோ, பார்க்கவோ நேரம் போதவில்லை.
கோவிலில் அன்னதானம் கொடுக்கும் இடத்தில் உள்ள தூண்களில் இருந்த சிற்பவேலைப்பாடுகளில் "காம சூத்திரச் " சிற்பங்கள் மிகப் பதிவான இலகுவாகப் பார்க்கக் கூடிய இடத்தில் செதுக்கப்பட்டிருந்தது.எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.
அமைதியான தரிசனத்துக்கு உகந்த கோவில்.

கோமதி அரசு said...

வணக்கம் துளசிதரன் , வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் யோகன், வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கீத மஞ்சரி said...

சுவையான தலச்சிறப்புடனும் அழகான படங்களுடனும் நிறைவானதோர் பகிர்வு. நன்றி மேடம்.

கோமதி அரசு said...

வணக்கம் கீதமஞ்சரி,வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Vimalan Perali said...

கோயிலுக்குள் நேரடியாய் சென்று வந்த உணர்வு,,,/

கோமதி அரசு said...

வணக்கம் விமலன், வாழ்க வளமுடன். உங்கள் வரவிற்கும் கருத்துக்கும் நன்றி.

மோகன்ஜி said...

இப்போதே பார்த்தேன். மனதுக்கு அமைதி அளிக்கும் கோவிலல்லவா இது?

கோமதி அரசு said...

வணக்கம் மோகன் ஜி, வாழ்கவளமுடன்.

மனதுக்கு அமைதி அளிக்கும் கோவில் தான் மோகன் ஜி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

மாதேவி said...

மாங்காடு போயிருக்கிறேன்.குன்றத்தூர் சென்றதில்லை. நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் மாதேவி, வாழ்கவளமுடன்.
மாங்காட்டில் உறவினர்கள் இருக்கிறார்களா?
மாங்காட்டு அம்மன் பார்க்க வந்து இருந்தீர்களா?
உங்கள் வருகைக்கு நன்றி.