Sunday, September 20, 2015

சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் அப்பன் திருப்பதிமண்டபத்தில் அனந்தசயனத்திலும் அமர்ந்தும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் ஊர் மக்கள்.

கோவில் வாசலில் இருந்து அழகான நடைபாதை

தினமலர் படம் - மூலவர் சீனிவாசபெருமாளும், 
உற்சவர் சீனிவாசபெருமாளும்
                                                 அலர்மேலுவள்ளி தாயார்
ஆண்டாள்
பஞ்சமுக ஆஞ்சநேயர்
பெருமாள்
தும்பிக்கை ஆழ்வார்
துளசிமாடம்
பெருமாள் விமானம்

                                      
                                            கோவிலின் பின்புறம்

                                         
கோவில் பிரகாரம்


இரண்டு மாதங்களுக்கு முன் அழகர்கோவில் போய் இருந்தோம், சித்திரைத் திருவிழா முடிந்து, அழகர் திருவிழாவும் முடிந்து, அழகர் அழகர் கோவில் திரும்பியதும் நடக்கும் திருவிழாவைக் கண்டு வந்தோம். அன்று  காலையில் தங்கப்பல்லாக்கு, மாலையில் தங்கக்குதிரைவாகனத்தில் பவனி. 

அப்பன் திருப்பதியை சொல்லாமல் அழகர் கோவில் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா?  அழகர் கோவில் போகும்போது வழியில் இந்த அப்பன் திருப்பதி கோவில் வருகிறது. அழகர் கோவில் போன அன்று அந்தக் கோவிலைப் பார்த்தோம், அழகர்கோவில் போய்விட்டு வரும் போது அப்பன் திருப்பதியை தரிசனம் செய்தோம்.

அழகர் சித்திரை திருவிழாவுக்கு மதுரைக்கு வரும்போது, வரும் வழி எல்லாம் கல் மண்டபங்கள் இருக்கும். அதில் இளைப்பாறி இளைப்பாறி வருவார்.  அப்போது பூஜை செய்யும் மண்டகப்படிக்காரர்கள் இருப்பார்கள். அது போல் இந்த கோவில்  முன்பு உள்ள மண்டபத்தில் ஒரு இரவு தங்கிச் செல்வாராம்.

வாசல் முன்பு கருப்பண்ணசாமி இருக்கிறார்., உள்ளே அழகிய நடைபாதை இருமருங்கிலும் அழகிய தூண்கள். நடுவில்நான்கு கல்தூண்நடுவில் பலிபீடம் இருக்கிறது. 

சுவாமி சன்னதியில்  தூணில் அழகிய சிற்பங்கள் உள்ளன. சுவாமி மூலவர்  ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகாய் காட்சி அளிக்கிறார். சின்னமூர்த்தமாய்.
உற்சவ சுவாமிகளுக்கும் மிக அழகாய் அலங்காரம் செய்து வைத்து இருந்தார்கள்.

சக்கரத்தாழ்வார், விஷ்வக் சேனர், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள், ராமர் ஆகியோரின் சிலைகள் உள்ளன.திருமலை நாயக்கர் தன் மனைவியுடன்  இருக்கும் சிலை இருக்கிறது.

பட்டரிடம் அப்பன் திருப்பதி என்று ஏன் பெயர் வந்தது என்றால் திருப்பதி பெருமாள் மாதிரி அழகு அதனால் என்று சொல்லிவிட்டார். அவர் வழக்கமாய்ப் பணி செய்யும் பட்டருக்கு உதவிசெய்பவராக இருப்பார் என்று நினைக்கிறேன்  தலவரலாறு தெரிந்து வைத்துக்கொள்ளவில்லை.

தினமலர் கோவில்கள் தலவரலாறு மூலம்படித்து தெரிந்து கொண்டதை இங்கு பகிர்கிறேன். முன்பு ஒரு காலத்தில் ஒரு  அழகிய வாலிபன்  வழி எங்கிலும் காணப்பட்ட இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்துக் கொண்டே குதிரையில் மதுரையம்பதிக்கு சென்று கொண்டு இருந்தார். ஊர் மக்கள் எல்லோரும் இவர் யார்?இயற்கையை ரசித்துக் கொண்டு போவதைப்பார்த்தால் கவிஞர், போலவும், கதை எழுதுபவர் போலும் இருக்கிறாரே என்று பேசிக் கொண்டார்கள்.     அந்த வழியில் இருந்த பெருமாள் கோவிலின் பட்டர்,ஆற்றில் பெருமாளின் திருமஞ்சனத்திற்கு நீர் எடுத்து வரும் போது, அவரைப் பார்த்து சிரித்தார் அந்த வாலிபர். அப்போது பட்டர்,” யாரப்பா நீங்கள்?”என்று கேட்டபோதும் பதில் சொல்லாமல் புன்சிரிப்பை பதிலாக தருகிறார்,  பட்டர் அதையே பதிலாக எடுத்துக் கொண்டு  தன் வேலையைப்பார்க்க ஆரம்பிக்கிறார், வாலிபர்   அவர்பின்னேயே போய் அவர் இறைவனுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம்செய்வதை லயித்துப் பார்க்கிறார். பின் பூஜை ஆனதும் பிரசாதம் பெற்றுக் கொள்கிறார், 
மனநிறைவுடன்.  அப்போது நினைவுக்கு வருகிறது பட்டருக்கு நாம்

கேட்டகேள்விக்கு இந்த வாலிபன் பதில் சொல்லவில்லையே என்று திரும்பிப்பார்த்தால் மாயமாய் மறைந்து விட்டார். அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது வந்து மாயமாய் மறைந்தவர் மாயவனே !என்று.

அப்பனே என்று தேடியதால், பெருமாள் அப்பன்  திருப்பதி சீனிவாசபெருமாள் ஆனார். 


மாயவன் இயற்கையைக் கண்டு ரசித்தது போல் நானும் கோவில் பக்கத்தில் இருந்த மரத்தில் பார்த்த பறவைகூட்டைப்பார்த்து  ரசித்தேன், 


இயற்கை அழகும் சீதோஷ்ண நிலையும் நன்கு இருப்பதால் இங்கு வந்து இருக்கும் அயல் நாட்டுப் பறவை.
           இன்னொரு கூட்டில் தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும் பறவையின் இறக்கை மட்டும் தெரிகிறது.


புரட்டாசி மாதத்தில் எல்லோரும் பெருமாள் கோவில்களை தரிசித்து வருவதால் நானும் பெருமாள் கோவில்ப் பற்றி பகிர்ந்து கொண்டேன். அழகர் கோவில் போகும் போது போகும் வழியில் உள்ள அப்பன் திருப்பதியை கண்டு அவனருள் பெறலாம்

                                                                     வாழ்க வளமுடன்.


37 comments:

KILLERGEE Devakottai said...


புகைப்படங்கள் அழகு விடயங்களும் அருமை
தமிழ் மணம் 1

ரூபன் said...

வணக்கம்
அம்மா

அற்புதமான படத்துடன் அற்புதமான விளக்கம்கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பரிவை சே.குமார் said...

அழகர் கோவில் சென்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் போதெல்லாம் இந்தப் பகுதியைக் கடந்துதான் செல்வதுண்டு. ஆனால் கோவிலுக்குள் போனதில்லை. அடுத்த முறை செல்லும் போது இங்கும் போக வேண்டும். அழகர் எங்கள் குலதெய்வம். அம்மா இப்போ மதுரையில் இருக்கிறீர்களா? நம்ம வீட்டம்மணியின் அம்மா வீடு மதுரைதான்...

Nagendra Bharathi said...

அருமை

ஸ்ரீராம். said...

சில படங்கள் திறக்கவில்லை. அவற்றைத் தனியாகக் க்ளிக் செய்து தனி ஜன்னலில் கண்டு ரசித்தேன். அப்பன் திருப்பதியில் என் அத்தையும் மாமாவும் ஆசிரியர்களாகப் பணியாற்றிய காலம் உண்டு. இப்போது இருவருமே இல்லை. மதுரையில் இருந்திருந்தும் இந்தக் கோவில் பார்த்ததில்லை.

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்கவளமுடன்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்கவளமுடன்.
இப்போது ஒருவாரம் மாயவரம், மீண்டும் அடுத்தவாரம் மதுரை.
நித்யாவிற்கு மதுரையா? மகிழ்ச்சி. அடுத்தமுறை போகும் போது போய்வாருங்கள்
அழகான கோவில். உங்கள் வரவுக்கு நன்றி..

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
அத்தை, மாமா இந்த ஊரில் இருந்தார்களா? அழகான அமைதியான ஊர்.
படங்களை பார்த்து ரசித்தமைக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அப்பன் திருப்பதி அறிந்தேன்
படங்கள் அருமை
நன்றி சகோதரியாரே

கோமதி அரசு said...

வணக்கம் சகோதரர் ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

மனோ சாமிநாதன் said...

படங்களும் தலவரலாறும் அருமை!

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் பகிர்வு அருமை. தகவல்களுக்கு நன்றி.

பெயர் தெரியாத அந்த வெளிநாட்டுப் பறவை அழகாக உள்ளது.

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள். தகவல்களும் புதியது..... நன்றிம்மா....

மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

சசிகலா said...

கோவிலுக்கு உடன் வந்த திருப்தியை தந்தது தங்களின் படத்துடனான பகிர்வு. அழகான இயற்கை எழில் கொஞ்சும் சூழல்.

கோமதி அரசு said...

வணக்கம் மனோசாமிநாதன், வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், உங்கள் கருத்துக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் நகேந்திரபாரதி, வாழ்கவளமுடன்.


உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அற்புதமான வரலாறு. . வெகு அழகான படங்கள்.. நன்றி கோமதி.

கோமதி அரசு said...

வணக்கம் வல்லி அக்கா, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கே. பி. ஜனா... said...

அருமையான தகவல்களுடன் நேர்த்தியான பதிவு. வந்தனம்.

கோமதி அரசு said...

வணக்கம் கே.பி. ஜனா சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

துரை செல்வராஜூ said...

அழகர் கோயிலுக்குச் சென்றிருக்கின்றேன்.. ஆயினும் அப்பன் திருப்பதியைத் தரிசித்ததில்லை.. அழகான படங்களுடன் இன்றைய தரிசனம்..

இயற்கை ஆர்வலரான தங்களுக்கு - கூட்டுக்குள் பறவை - அழகான விருந்து..

வாழ்க நலம்!..

கோமதி அரசு said...

வணக்கம் சகோதரர் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கீத மஞ்சரி said...

அப்பன் திருப்பதி என்னும் புதியதொரு கோவில் பற்றி அறிந்துகொண்டேன். நல்ல பளிச்சென்ற படங்களும் தல வரலாற்றுச்சிறப்பும் சிறப்பு. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி மேடம்.

கோமதி அரசு said...

வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Anuradha Prem said...

அருமையான பகிர்வு ....அழகான படங்கள்...

தனிமரம் said...

அருமையான புகைப்படங்களும் அப்பன் திருப்பதி வரலாறும்.பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அனுராதா பிரேம் , வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தனிமரம், வாழ்கவளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

Geetha M said...

வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்

Geetha Sambasivam said...

அப்பன் திருப்பதியும் போனதில்லை. அருமையான காட்சியைப் படமாக்கித் தந்தமைக்கும் கோயில் பற்றிய பகிர்வுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
அழகர் கோவிலுக்கு போகும் வழியில் இருந்தாலும் எங்களுக்கும் இப்போது தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
உங்கள் கருத்துக்கு நன்றி.

viveksonai vivek said...

கள்ளழகர் சித்திரை திருவிழாவின்போது மதுரை செல்லும் வழியில் இந்த அப்பன் திருப்பதி கோவில் மண்டபத்திற்குள் வடக்கு வழியாக நுழைந்து அப்படியே தெற்கு பக்கம் வழியாக சென்றுவிடுவர் இந்த இடத்திற்கு முன் உள்ள ரோட்டிற்கு "அழகர் கால் படாத இடம்" என்று கூறுவார்கள்

viveksonai vivek said...

கள்ளழகர் சித்திரை திருவிழாவின்போது மதுரை செல்லும் வழியில் இந்த அப்பன் திருப்பதி கோவில் மண்டபத்திற்குள் வடக்கு வழியாக நுழைந்து அப்படியே தெற்கு பக்கம் வழியாக சென்றுவிடுவர் இந்த இடத்திற்கு முன் உள்ள ரோட்டிற்கு "அழகர் கால் படாத இடம்" என்று கூறுவார்கள்