வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

தாய்மை

இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் தெரு நாய்  நான்கு குட்டிகள் ஈன்றது. அந்த குட்டிகளை போட்டோ எடுக்கச் சென்ற போது அழகான காட்சி கிடைத்தது , தன் நாக்கால் தன் குட்டிகளை நாவால் நக்கி அன்பு பாராட்டும் தாய்மை!
கண்களை மூடி உருகும் தாய்மை
அம்மாவைத் தொடரும் குட்டிகள்

வீதியில் செல்ல முயலும் குட்டியைத் தன் வாயால் கவ்வி  பாதுகாப்பாய் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லல்


நேற்று போட்டோ எடுக்க நாய் குட்டிகள் இருக்கும் சாலைஎதிர்புறத்திற்கு போய் நின்று கொண்டு எடுத்தேன். ஒரு நாய்க்குட்டி  சாலையைக் கடந்து என்னிடம் வந்து நின்றது,  அப்போது திடீரென்று சாலைக்கு நடுவில் நடக்க ஆரம்பித்தது குட்டி. இரண்டு பக்கமும் கார், ஆட்டோ வந்து விட நான் பதறி இரண்டு பக்கமும் கை காட்டி நிறுத்தி குட்டியைத் தூக்கி அதன் அம்மா அருகில் விட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு வேர்த்து விறுவிறுத்துப் போய் விட்டது.. காரோட்டி வந்தவரும், ஆட்டோ ஓட்டி வந்தவரும் சிரித்துக் கொண்டு கை அசைத்துச் சென்றார்கள். நாயும் தன் குட்டியை தூக்கிவிட்டாளே என்று என்னைக் குதறாமல் விட்டது.   உடனே தாய் நாய் வீதியில் சென்ற குட்டியை முதலில் சாக்கடையின் கீழ்ப்பகுதிக்குப் பாதுகாப்பாய் கொண்டு விட்டு வந்தது. அப்புறம் ஒவ்வொரு குட்டியாய் கொண்டு வைத்து விட்டது(மழை நீர் மட்டும் போகும் சாக்கடை- அதனால் அதில் தண்ணீர் இல்லை) மேலே வரப் பார்த்த குட்டிகளை இழுத்து உள்ளே வைத்துக் கொண்டது.   என் கணவரிடம் வந்து சொன்ன போது  நாய் உன்னை சும்மா விட்டது  பெரிய விஷயம் என்றார்கள். தாய் நாய்க்குத் தெரிந்து இருக்கும், நான் குட்டியை காப்பாற்றத்தான் தூக்கினேன் என்று.

வெவ்வேறு ஊர்களில் எடுத்த படங்கள். கீழே வருவது :-

எல்லோரும் சமத்தாய் பால் குடித்துவிட்டு விளையாடப் போவீர்களாம்
அம்மா கொஞ்சம் நில்லு எனக்கு  பசிக்குது
போனமாதம் நடைபெற்ற  ’தாய்மை’   என்ற தலைப்பில் போட்டோ கேட்ட தமிழில் புகைப்படக்கலை போட்டிக்கு அனுப்ப பட்ட படம் ஆல்பத்தில் இடம்பெற்று மகிழ செய்தது
அம்மா கொஞ்சம் நில்லு எனக்கு  பசிக்குது
சகல ஜீவராசிகளுக்கும் தாய்மை உணர்வு உண்டு தானே! 
அன்பை அனைத்து ஜீவராசிகளும் ஒவ்வொரு வழியில் வெளிப்படுத்துகிறது. அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்று வாழ்வோம்.

வாழ்க வளமுடன்!
-----------------

42 கருத்துகள்:

  1. அஹா.. மிக அழகாய் இருக்கு அனைத்து படங்களும்.
    சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அம்மா
    தாய்மைக்கு எதுவும் நிகராகது..அழகிய படங்களுடன் நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.இப்படியான அன்பு பாசம் யார் இடமும் வராது. தங்களின் அன்புக்கு நான் தலைசாய்த்து வணங்குகிறேன்..த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. அழகான படங்களுடன் அற்புதமான தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்.

    ‘தாய்மை’ என்ற தலைப்பும் அருமை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. விரைந்து செயலாற்றியிருக்கிறீர்கள். /தாய் நாய்க்குத் தெரிந்து இருக்கும், நான் குட்டியை காப்பாற்றத்தான் தூக்கினேன் என்று./ நிச்சயமாய்!

    அருமையான காட்சிகளைக் காணத் தந்திருப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. டக்கென நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்.நீங்கள் சொல்லும் போதே எங்களுக்கும் வேர்த்து விட்டது.ஆனால் அந்த நாய் ஒன்றும் செய்யாது என தான் நானும் நினைத்தேன், நீங்களும் அவ்வாறே முடித்து இருக்கிறீர்கள்.நன்றாக இருக்கிறது தாய்மை.

    பதிலளிநீக்கு
  6. குட்டியை நாம் தூக்கினால் தாய் அப்படியெல்லாம் நம்மிடம் விரோதம் பாராட்டுவதில்லை. அது நம்மை நன்றாகவே நம்புகிறது.


    ரசிக்க வைக்கும் படங்கள். அழகான குட்டிகள். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு உங்களுக்கு நன்றாக பொழுது போகும். குட்டிகளின் விளையாட்டு மனதைக் கொள்ளை கொண்டு போகும்!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ரமாரவி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ரூபன், வாழக வளமுடன்.உங்கள் கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் உமையாள் காயத்திரி, வாழ்க வளமுடன்.

    சில நாய்கள் பக்கத்தில் பார்க்க போனாலே உறுமும், அதுதான் பயமாய் இருந்தது. ஆனால் இந்த நாய் சாதுவாய் இருந்தது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. படங்கள் அருமை சகோதரியாரே
    தங்கள் அன்பும் பாசமும் போற்றுதலுக்கு உரியது
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    சில நாய்கள் பக்கத்தில் கூட போக விடமாட்டேன் என்கிறது, பற்களை காட்டி உறுமும்.

    இந்த நாய் நீங்கள் சொல்வது போல் விரோதம் காட்டாமல் நட்பு பாராட்டியது.

    குட்டிகளின் விளையாட்டை ரசிக்க முடியாமல் நளை மறுபடியும் பயணம்.

    நான் திரும்பி வரும் போது வேறு இடம் மாறி இருக்குமோ! என்னவோ! பார்ப்போம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. தங்களின் பதிவு கண்டு மனம் நெகிழ்ந்தது..

    நல்ல மனம் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  16. ரசிக்க வைக்கும் தாய்மை ரசனையோடு எங்களுக்கும் வழங்கியமைக்கு நன்றி மேடம். தாய் நாய் எவ்வளவு மூர்க்கமாக இருக்கும் என்று தெரியும். ஆனாலும் அது தன் குட்டியை ஆபத்திலிருந்து நீங்கள் காப்பாற்றுகிறீர்கள் என்று உணர்ந்து அமைதி காத்திருக்கிறதே.. எவ்வளவு ஆச்சர்யம்! உங்கள் தாய்மை கண்டு அந்தத் தாயும் நெகிழ்ந்திருப்பாள்.

    பதிலளிநீக்கு
  17. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.
    http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_14.html
    நன்றி!

    பதிலளிநீக்கு
  18. உயிர்களிடத்தில் அன்பு வேணும் – என்ற பாரதியின் வரிக்கு விளக்கமாய் உங்கள் பதிவும், படங்களும். நண்பன் யார்? எதிரி யார்? என்பதனை நாய்களும் பூனைகளும் எப்படியோ உணர்ந்து கொள்கின்றன. என்றோ ஒருநாள் அலலது சிலநாள் அந்த நாய்க்கு நீங்கள் ஏதேனும் உணவு கொடுத்து இருப்பீர்கள். அதனால்தான் அதன் குட்டியைக் காப்பாற்ற திடீரென்று நீங்கள் தூக்கியபோதும் அது உங்களை ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  19. படங்கள் மிகவும் அழகாக எடுக்கப் பட்டுள்ளது ! வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
  20. ஆஹா... அட்டகாசமான படங்கள்... அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
  21. நாய்க்குட்டியை பதறிப்போய் காப்பாற்றிய உங்களின் தாய்மை உணர்வை அதன் தாய் இனங்கண்டு விட்டது போலும்! தாய்மை என்னும் தலைப்பு உங்களையும் சேர்து மிகவும் பொருத்தமே!

    பதிலளிநீக்கு
  22. பதிவும் படங்களும் அருமை. சில மாதங்களுக்கு முன் “தாய்மையின் வலிமை” என்று ஒரு காணொளி வெளியிட்டிருந்தேன். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதையே துளசிதரன் தில்லையகத்து சில நாட்களுக்குமுன் பகிர்ந்திருந்தார்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் துரைசெல்வராஜூ,வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    தாய் நாயின் அமைதி ஆச்சிரியப்பட வைத்தது உண்மை. நாய் மனிதர்களை நம்பும் என்பார்கள் அது உண்மை என்று கண்டுக் கொண்டேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் என் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் தி. தமிழ் இளங்கோ, வாழ்கவளமுடன். உங்கள் அழகான கருத்துக்கு நன்றி. தமிழ்மணவாக்கிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் அம்பாளடியாள்., வாழ்கவளமுடன்.
    வெகுநாட்கள் ஆயிற்றே! உங்களைப்பார்த்து நலமா?
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் குமார், வாழ்கவளமுடன்.
    படங்களை ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் மனோ சாமிநாதன். வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    உங்கள் பதிவை நிறைய விட்டுப்போய் இருக்கும் ஊர்களுக்கு ஓயாமல் போய் கொண்டு இருப்பதால்.
    தாய்மை வலிமைதான் அதில் சந்தேகம் இல்லை.
    பார்க்கிறேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. அருமையான செயலைஸ் செய்திருக்கிறிர்கள் கோமதி. நாய்கள் தாய்களாக இருக்கும் போது சிறுவது வழக்கம் தான். அதிசயமாக நன்றி பாராட்டி இருக்கிறது இந்த நல்ல நாய். அறிவாளி. படங்கள் அனைத்தும் மிக அற்புதம். நன்றி மா.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.

    நாய்கள் நல்ல நண்பர்கள், அறிவாளிகள் தான் நீங்கள் சொல்வது போல்.
    உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  33. தலைப்பிற்கேற்ற அருமையான படங்கள்....

    நீங்கள் செய்தது நல்ல விஷயம்.

    பதிலளிநீக்கு

  34. படங்கள் அருமை.தலைப்பும் அருமை.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் காஞ்சனாராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. எழுத வார்த்தையே வரல்லை. அற்புதம்.அழகான குட்டிகள் உங்களின் படபடப்பு எனக்கும். வளர்ப்பு நாயினும் சிலவேளை விடாது என் அனுபவம். ஆனா நன்மைதான் செய்கிறீங்க என அதுக்கு தெரிந்துவிட்டதுபோலும். "தாய்மை " க்கு ஈடேதுமில்லை.நன்றிகள்.
    (அக்கா என அழைப்பதில் தப்பேதுமில்லையே)

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.
    அக்கா என்று அழைக்கலாம். மிகவும் மகிழ்ச்சி நீங்கள் அப்படி அழைப்பதில்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. ஆஹா! மனதைக் கொள்ளை கொள்ளுகின்ரது. சகோதரி! சகோதரி, நாம் குட்டியைக் காப்பாற்றப் போகின்றோம், நம்மால் எந்த இடரும் இல்லை என்றால் அதுவும் நம் தெரு நாய் என்றால் தாய் நாய் நம்மை ஒன்றும் செய்யாது. நமது எண்ணங்கள் அவர்களுக்கு நன்றாகப் புரியும். அருமையான படங்கள்....ஆனால் அதே சமயம் மனதையும் வாட்டியது ஒரு விடயம். என்ன்னவென்றால் அந்த நாய் குட்டிகளின் வாழ்வு எத்தனை நாளோ என்று.....பல குட்டிகள் அடிபட்டு இறக்கின்றன. நோய் வந்து இறக்கின்றன. காப்பாற்றப்பட முடியாமல் சீரழிகின்றன. அதுதான் மனதை வருத்தும்.

    படங்கள் அனைத்தும் அற்புதம்.....தங்களின் நல்ல உள்ளம் வாழ்க வளமுடன் சகோதரி!

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
    எங்கள் தெருவில் நிறைய நாய் இருக்கிறது, குட்டிப்போட்ட நாய் எனக்கு பழக்கமில்லா நாய்.
    நான் போட்டோ எடுத்து குட்டி நாயை காப்பாற்றிய பின் மறுநாள் ஊருக்கு போய் விட்டேன். 10 நாட்கள் கழித்து வந்துப் பார்த்தால் தாய், சேய் நாய்களை காணோம். இதைவிட சந்தடி இல்லா அமைதியான தெருவுக்கு போய் விட்டதோ என்னவோ. பள்ளி இருப்பதால் அதிக போக்குவரத்து இருக்கும் எங்கள் பகுதி.
    முன்பு கொஞ்சம் நாய் அதிகமாகிவிட்டால் கார்ப்பரேஷன் வண்டி வந்து பிடித்து சென்று விடும் அப்போது வருத்தமாய் இருக்கும். இப்போது மேனகா காந்தியால் உயிர்பிழைத்து வாழ்கிறது நாய்கள்.

    உங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு