வெள்ளி, 10 ஜனவரி, 2014

ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு - பாகம்- 2

நேற்றைய பகிர்வு ஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு படித்து இருப்பீர்கள்.

நாதமுனிகளின் அவதாரம்;-

ஸ்ரீமந் நாதமுனிகள் சோழநாட்டில் தற்போது கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திலுள்ள  காட்டுமன்னார்குடி என்ற வீரநாராயணபுரத்தில்கி.பி 823ல் சோபகிருது வருடம் ஆனி மாதம் 7ம் தேதி புதன்கிழமை பெளர்ணமி திதி கூடிய அனுஷ நட்சத்திரத்தில்    அவதரித்தார். இவர், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நித்ய சூரியான “கஜாநநர்” என்னும் ஆனைமுகமுடையவரின் அம்சமானவர்.

இவருக்கு பெற்றோரிட்ட பெயர் ஸ்ரீரங்கநாதன். இவர் முனிவர் போன்று யோக மார்க்கத்தில் தலைசிறந்தவராக திகழ்ந்ததால் இவரை அனைவரும் “முனி” என்றும் ஸ்ரீரங்கநாத முனி என்றும் அழைத்தனர். அதுவே நாளடைவில் மருவி “நாதமுனி” என்றாகி விட்டது.

திருமணம்:-

ஸ்ரீமந் நாதமுனிகள் அரவிந்தப்பாவை என்ற உத்தமியை மணந்து கொண்டு காட்டுமன்னார்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீவீரநாராயணப் பெருமாளுக்கு நித்திய கைங்கர்யம் (தொண்டு) செய்து வந்தார்.

திவ்யதேசயாத்திரை:-

கிருஷ்ணபக்தியில் திளைத்த இவர் தன் குடும்பத்துடன், கண்ணன் அவதரித்து திருவிளையாடல்கள் புரிந்த  திருத்தலங்களுக்கு சென்று தரிசித்தார்.

ஆளவந்தாரின் அவதாரச்செய்தி:-
யமுனை ஆற்றங்கரையில் அவர் தியானத்தில் இருந்தபோது கண்ணபிரான் குழந்தையாக ஸ்ரீமத் நாதமுனிகளின் முன் தோன்றினான் , “என்னைப்போல் உமக்கு ஒரு பேரன் பிறப்பான், அவன் வேதாந்தத்தை நிலைநாட்டுவான்”
என்று சொன்னான்.

ஆளவந்தார் அவதாரம்:-

யமுனைத்துறைவனாகிய கண்ணபிரானது வாக்குபடி, ஸ்ரீமந் நாதமுனிகளின் மகன் ஈஸ்வர முனிக்கும்,  மருமகள் ஸ்ரீரங்கநாயகிக்கும் ,தாது வருடம் , ஆடிமாதம் , வெள்ளிக் கிழமை , பெளர்ணமி திதி கூடிய உத்ராட நட்சத்திரத்தில் , ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு
 “ யமுனைத்துறைவன்” என்று  பெயர் சூட்டி அழைத்தனர்.

யமுனைத்துறைவன், வித்யா கர்வமிக்க ஆக்கியாழ்வான் என்பவரை வேதாந்த வாதத்தில் வென்று, சோழ மன்னனிடம் பாதி இராஜ்யம்  பெற்று,
ஸ்ரீ ஆளவந்தார் என்று அழைக்கப்பட்டார்.

பின் ஸ்ரீமந் நாதமுனிகளின் நியமனத்தால் , அரசனாக இருந்து போக வாழ்க்கை நடத்தி வந்த இந்த ஸ்ரீ ஆளவந்தாரை ஸ்ரீ மணக்கால் நம்பி என்ற ஆசாரியர் திருத்திப் பணிகொண்டார். மேலும் ஸ்ரீரங்கஸ்ரீயைக் காட்டிக் கொடுத்து துறவறம் மேற்கொள்ள செய்தார். ஸ்ரீ ஆளவந்தாரே ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் “முதல் ஜீயர்” ஆவார்.

நாதமுனிகள் திவ்யபிரபந்தங்களைப் பெற்ற வரலாறு:-

ஒரு முறை வீரநாராயணப்பெருமாளை தரிசிக்க தென்திசையிலிருந்து சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்திருந்தனர்.அவர்கள் ஸ்ரீகும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணிபெருமாளைக் குறித்த நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியான “ஆராவமுதே” என்று தொடங்கி பத்துப்பாசுரங்களைப் பாடினர்.  இதனைக் கேட்டு மகிழ்ந்த நாதமுனிகள், முடிவுப்பாசுரத்தில் “ஆயிரத்துள் இப்பத்தும்” என்ற சொற்கள்  வரக்கண்டு ஆயிரம் பாடல்களையும் பாட வேண்டினார்.பத்துப்பாடல்களை மட்டுமே தமக்குத் தெரியும் என்றனர். நாதமுனிகள்   குமபகோணம் சென்று ஸ்ரீ சாரங்கபாணியிடம் சென்று இது குறித்து விண்ணப்பித்தார்.இறைவன் (திருக்குருகூர்  முன்பு)  “ஆழ்வார்திருநகரி” என்ற ஊரில் புளியமரத்தின் அடியில் சிலைவடிவில் உள்ள  ஸ்ரீ சடகோபரிடம் பெற்றுக்கொள்ள சொல்லி மறைந்தார்.

ஸ்ரீசார்ங்கபாணியின் வார்த்தைகளைக் கேட்ட  ஸ்ரீமந் நாதமுனிகள்   திருக்குருகூர் என்ற ஆழ்வார்திருநகரிக்கு சென்றுஆதிநாத பெருமாளை தரிசனம் செய்து புளியமரத்தடியில் அர்ச்சாரூபியாக (சிலைவடிவில்)
எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சடகோபர் என்ற நம்மாழ்வாரை தரிசித்தார்.
பின் சடகோபர் இயற்றிய பாடல்கள் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா? என்று வினவ ஒருவர்  திருக்கோளூர் என்ற திவயதேசத்தில் நம்மாழவாரின் சீடர் மதுரகவியாழவார் ,அவருடைய வாரிசுகளில் ஸ்ரீபராங்குசதாசர் என்ற ஒரு பெரியவர் இருக்கிறார் அவரிடம் கேளும் என்றார்.

நாதமுனிகள் திருக்கோளூர் சென்று ஸ்ரீ பராங்குசதாசரை அடிபணிந்து வந்த காரியத்தை சொல்ல அவர் ஸ்ரீ மதுரகவிகள் ஸ்ரீ சடகோபரைப்பற்றி அருளிய “கண்ணிநுண் சிறுதாம்பு” என்னும் பதினோரு பாடல்கள் மட்டும் உள்ளது இவற்றை  12000 முறை பக்தியுடன் பாடினால் சடகோபர் காட்சி கொடுப்பார் என்று எங்கள் பெரியவர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன். இப்பாடல்களை உமக்கு தருகிறேன் நீர் பக்தியுடன் ஓரிடத்தில் அமர்ந்து எதற்கும் எழுந்து போகாமல் ஒரு சேர பாடல்களைப் பாடி பூர்த்தி செய்து  சடகோபரின் தரிசனம் பெற்று பாடல்களை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஆசீர்வதித்தார்.


ஸ்ரீமந் நாதமுனிகள்  ஆழவார் திருநகரி சென்று,   அந்த  பதினோரு பாடல்களை  12000 முறை  திருப்புளியமரத்தின் அடியில் இருந்து பாடினார். அந்த பக்தியை மெச்சி காட்சி கொடுத்த சடகோபர், தான் பாடிய ஆயிரம் பாசுரங்களையும், மேலும் மற்ற பாசுரங்களையும் தேவகானமாய் இசைத்து அருளினார். ஸ்ரீவைணவ கோட்பாடுகளையும் நன்கு உபதேசித்தார்.

யோக பயிற்சியில் வல்லவரான் ஸ்ரீமந் நாதமுனிகள் “ஏகசந்தகிரகியாக” அனைத்து பாசுரங்களையும் பெற்றுக் கொண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்.(ஏகசந்தகிரகி என்றால் ஒருவர் ஒன்றை ஒருமுறை கேட்ட அல்லது படித்த மாத்திரத்திலேயே மனதில் நிலைநிறுத்தும் தன்மை ஆகும்)

இப்படி நாலாயிரம் பாசுரங்களையும் பெற்றார் ஸ்ரீமந் நாதமுனிகள்,

ஸ்ரீஇராமானுஜரின் அவதாரச்செய்தி:-

ஆழ்வார் திருநகரிலேயே தங்கி, தன் ஆசாரியரான ஸ்ரீசடகோபருக்கும் ஸ்ரீ ஆதிநாதப்பெருமாளுக்கும் தொண்டு செய்து வந்தார். ஒரு நாள் காட்டுமன்னார்குடி ஸ்ரீ வீரநாராயணப்பெருமாள் அவரது கனவில் தோன்றி தம் இருப்பிடத்திற்கு வருமாறு அழைத்தார். ஸ்ரீ சடகோபரிடம் விடை பெறும் போது  சடகோபர் மறுபடி காட்சிக் கொடுத்து ஒரு விக்ரத்தைகொடுத்து, ”இவர் ஸ்ரீவைஷ்ணவத்தை வளர்க்க வரும் வருங்கால ஆசாரியர். கலியில் ’லோககுரு’ என்று எல்லாராலும் போற்றப்பட இருப்பவர். இந்த விக்ரகத்திற்கு நித்திய ஆராதனைகள் செய்துவருங்கால், உம்முடைய வழித்தோன்றல்களில் ஒருவர், இவரைக் காண்பார்” என்று  சடகோபர் கூறியருளினார்.

அவர் சொன்னது போல் பிற்காலத்தில் ,ஸ்ரீமந் நாதமுனிகளின் பேரன் ஸ்ரீஆளவந்தாரின் காலத்தில், அவருடைய திரு அவதாரம் நிகழ்ந்தது.

அந்த விக்ரகத்தில் உ:ள்ளவர் வேறு யாரும் அல்ல, அவர் தான் ஸ்ரீஇராமானுஜர்.

ஸ்ரீஆளவந்தார் ஸ்ரீஇராமானுஜரைக்காணல்:-

ஸ்ரீஆளவந்தார், காஞ்சிபுரத்தில் ஸ்ரீசடகோபர் சொன்னது போன்ற
 முகப்பொலிவுடன் ஒருவர் காஞ்சிபுரத்தில் இருப்பதை அறிந்து, காஞ்சி சென்று அவரைப் பார்த்தார்.  ”ஆம் முதல்வன்”  இவர்தான் விக்ரத்தில் உள்ளவர் ” என்று தீர்மானித்து காஞ்சி வரதராஜ பெருமாளிடம் வேண்டினார். அவரை ஸ்ரீ வைஷ்ணவம் வளர்க்க ஸ்ரீரங்கம் அனுப்பி வைக்க வேண்டும் என்று மனமுருக வேண்டிக் கொண்டு ஸ்ரீ ரங்கம் திரும்பினார்.

ஸ்ரீஇராமானுஜர் ஸ்ரீரங்கம் எழுந்தருளல்:-

காஞ்சி வரதருக்கு பிரியமான பகவத் இராமானுஜரை எப்படி ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வருவது என்று ஆலோசனை செய்து அனைவராலும்  தேர்ந்து எடுக்கப்பட்டவர்,ஆளவந்தாரின் மகன் ‘திருவரங்கப் பெருமாள் அரையர்’
அவர் காஞ்சிபுரம் சென்று வரதனை திவ்வியப்பிரபந்தங்களைஅபிநயத்துடன் பாடி வணங்கினார். அதற்கு மயங்கிமகிழ்ந்த   உமக்கு வேண்டிய வரத்தைக் கேள் என்றார்.  “நம் இராமானுசனை நமக்கு தந்தருள வேண்டும்” என்று  கேட்க ,அரையர் இசையில் மயங்கிய வரதன்,  பகவத் இராமானுஜரை ஸ்ரீரங்கம் அனுப்ப சம்மதித்தார்.

ஸ்ரீமந் நாராயணன் ஆதிகுருவாகவும், ஸ்ரீமந் நாதமுனிகளும், அவருடைய  திருப்பேரனார்  ஸ்ரீ ஆளவந்தார் என்ற யமுனாசார்யார் மத்தியிலுமாக  ஸ்ரீவைஷ்ண்வ குரு பரம்பரை அமைந்துள்ளது . இதையே பகவத் இராமானுஜரின் சீடரான ஸ்ரீகூரத்தாழ்வான் நமக்காக அருளியுள்ளார்.

“லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ,நாத யாமுந மத்யமாம்,
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.”

ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீமந் நாராயணன் திருவடியடைதல்:-

இப்படி பல பெருமைகளை பெற்ற ஸ்ரீமந் நாதமுனிகளை தன் இருப்பிடமான பரமபத்திற்கு அழைத்துக் கொள்ள எண்ணினான் நாராயணன்.
ஒருநாள் பெருமாளை சேவிக்க சன்னதிக்கு சென்றார் நாதமுனிகள். அப்போது வில்லுடன் இருவரும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு குரங்குடன் வந்து அவருடைய மகளிடம்,’ ஸ்ரீமந் நாதமுனிகள் எங்கே?’ என்று கேட்டனர்  அதற்கு அவள் தன் தகப்பனார் பெருமாளை சேவிக்க சென்றதாக சொன்னாள். வந்தவர்கள் சென்று விட்டனர்.

கோயிலுக்கு சென்று திரும்பியதும் நாதமுனிகளிடம் மகள் அவரைத் தேடிவந்தவர்களைப் பற்றிக்கூறினாள். ஸ்ரீமந் நாதமுனிகள் ,’சக்ரவர்த்தி திருமகனே தன்னை அழைக்க வந்திருப்பார். தன்னுடன் சேர்த்துக் கொள்ள பகவான் நடத்திய திருவிளையாடலே இது’  என்று சொல்லி  ’எனக்கு அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே’என்று கதறியவாறு அவர்கள் சென்ற வழியைக் கேட்டு ஓடினார்.

இவ்வாறு ஓட்டமும் நடையுமாய் சென்றவர், வழியில் பூச்சரம் ஒன்றை கணடார். அதைக் கண்டவர், “ஆகா! இது சீதாபிராட்டி அணிந்திருந்த தல்லவா, விழுந்திருக்கிறது” என்று சொல்லியவாறு சென்றார். தற்பொழுது அந்த இடமே “பூவிழுந்த நல்லூர்”  என்று அழைக்கப்படுகிறது..

இன்னும் சிறிது தூரம் சென்றபின் ஒரு குரங்கின் கால் தடம் மண்ணில் பதிந்திருந்ததைக் கண்டவர் ,  அவர்கள் இந்த வழியில் செல்கின்றனர்  என்று ஊர்ஜிதப்படுத்தினார். அந்த இடமே ’குரங்கடி’ என்று முன்பும் தற்பொழுது “குறுங்குடி” என்றும் அழைக்கப்படும். ஊர்.

இவ்வாறு பயணத்தை தொடர்ந்தவர் வழியில் எதிரே கண்டவர்களைப் பார்த்து தன்னைப் பார்க்கவந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி ”அவர்களை இந்த வழியில் கண்டீர்களா?” என்று கேட்டார். அவர்களும் “ஆம்! கண்டோம்! கண்டோம்! அவர்களின் தோற்றம் கம்பீரமாகவும், முகம் பிரகாசமாகவும் இருந்தது “ என்றனர் . அந்த இடமே தற்பொழுது இருக்கும்“கண்டமங்கலம்” என்ற ஊர்.

இவ்வாறு அவர்கள் சொன்ன உடன் மிக்க ஆர்வம் கொண்ட அவர் கங்கைகொண்ட சோழபுரத்தை நோக்கி சென்றார், இவ்வூருக்கு கிழக்கே சுமார் ஒரு கி.மீ தூரத்தில் சென்றவர் எதிரே வந்தர்களிடம் தன்னை காணவந்தவர்களின் அடையாளங்களைச் சொல்லி “கண்டீர்களா? என்று கேட்டார் அவர்கள் கண்டிலோம் ! என்று சொன்னார்கள்.. தன்னை காண வந்த பரமாத்மாவை  தான் காணவில்லை என்ற ஏக்கத்தில்  இருந்தார்.

கடவுளிடம் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் இருந்தால் அந்த நிமிஷமே பகவான் அழைத்துக் கொள்வார் என்பதற்கு இணங்க , கொளுத்தும் வெயிலில் ஸ்ரீஇராமபிரானைத் தேடிச்சென்ற  ஸ்ரீமந் நாதமுனிகள் , அப்பொழுது ஆசாரியரைத் தேடிவந்த சீடர் ஸ்ரீ மணக்கால் நம்பிகள் என்ற ஸ்ரீராமமிஸ்ரர் மடியில் தலைசாய்த்து “என்னை சக்கரவர்த்தித் திருமகன் அழைக்கிறான், நான் புறப்படப் போகிறேன்” என்றவர், “எனக்கு ஒரு அபிலாஷை . பேரன் ஆளவந்தாரை எப்படியாவது அழைத்து வந்து நம் ’குலதனத்தை’ (திருவரங்கநாதரை) காண்பித்துவிடு” என்று கூறியவாறு எம்பெருமான்  திருவடிகளை அடைந்தார்.

ஸ்ரீராமனை தேடி போனவருக்கு  அவர் பெயர் தாங்கிய ஸ்ரீ இராமமிஸ்ரர் என்ற சீடரின் மடி கிடைத்தது.

ஸ்ரீமந் நாதமுனிகளின் சீடர்களான உய்யக் கொண்டார், குருகைக்காவலப்பன், ஆகியோர் அடங்கிய் சீடர்கள் குழாம் நாதமுனிகளின் திருக்குமாரர் ஈஸ்வரமுனியைக் கொண்டு இறுதிச் சடங்குகள் செய்தனர்.. பெருந்திரளான அடியார்கள் முன்னிலையில் அவ்விடத்திலேயே சரம விக்ரகத்தைப் பள்ளிப்படுத்தினர்.அவ்விடத்தில் “திருவரசு” அமைத்து அதன்மேல் ஸ்ரீதேவி, பூமிதேவி, சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரங்களை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தனர். அந்த இடம்தான் “சொர்க்கப்பள்ளம்”என்று இப்போது அழைக்கப்படுகிறது.

ஸ்ரீமத் நாதமுனிகள் ஸ்ரீவைஷ்ணவ  சம்ரதாயத்தின் வேர்.அவரில்லை என்றால் நாலாயிர திவயப்பிரபந்தம் கிடைத்திருக்காது. அவரது திருப்பேரன் ஸ்ரீ ஆளவந்தார் இல்லை என்றால், நம் இராமானுஜர் ஸ்ரீ வைஷ்ணவ தலைமைப்பீடம் ஏற்றிருக்க மாட்டார். எனவே “ நமக்குதிவ்யபிரபந்தங்களை  நல்கிய நம் நாதமுனிகளை நாளும் நாம் வணங்குவோம்.”

                 ஸ்ரீமந் நாதமுனிகள்  திருவடிகளே சரணம்!

                                             *                     *                   *

ஸ்ரீமத் நாதமுனிகள் வரலாறு பற்றி  கோவிலில் பட்டர் சொன்னாலும் விவரமாய் எழுத உதவியது பட்டர் கொடுத்த மு.வெ..இரா ரெங்கராஜ ராமானுஜதாசன் அவர்கள் எழுதிய “ஸ்ரீமந் நாதமுனிகள் வைபவம்” எனற நூலிருந்து  முக்கியமானதை மட்டும் தொகுத்து கொடுத்து இருக்கிறேன்.

பெருமாள் சந்நிதி விமானம்

ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள்




இப்போது கோவிலில் “திருவரசு” மேல் இருந்த ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீநிவாச பெருமாளைத் தனிக் கோவிலில் அமைத்து வைத்து இருக்கிறார்கள்.
திருவரசு மேல் கையில் தாள்முடன் நாதமுனிகள்



நாதமுனிகள் திருவரசின் மேல்,  தாளத்தை வைத்திருக்கும் தோற்றத்தில்  நாதமுனிகளின் சிலை உள்ளது. பீடத்திற்கு கீழே அவ்ரது ஆறு சீடர்களின் சிலை உள்ளது. அவரை சுற்றி வந்து வழி படலாம். பின் புறச் சுவரில் ஸ்ரீராமர்,சீதை, லட்சுமணர், அனுமன் சிலைகள் உள்ளன. இரு பக்க  சுவ்ற்றிலும்  ஆழ்வார்கள் சிலை உள்ளது.

பெருமாள் சன்னதியின் முன்புறம் நாதமுனிகளுக்கு தனியாக சந்நிதி உள்ளது. அங்கு சின் முத்திரையில் இருக்கும்படியான அவரது சிலை உள்ளது. அதைப் போன பதிவில் பகிர்ந்து இருந்தேன். பெருமாளுக்கு முன் புறம் கருடாழ்வார் கூப்பிய திருக்கரத்துடன் இருக்கிறார்.
                              

                                  
ஸ்ரீநிவாசப்பெருமாள் சந்நிதி


                          பெருமாள்                           நாதமுனிகள்                  


நாதமுனிகள் திருவரசு பணிகளில் இன்னும் சில பணிகள் முடிக்க வேண்டி உள்ளது. சுற்றுச்சுவர், கோசாலைக்கட்டிடம், மகாமண்டபம், நந்தவனம், மடப்பள்ளி , கிரில் கேட் எல்லாம் போட வேண்டுமாம். வரும் அடியார்கள் உதவினால் முடிக்கலாம் என்று பட்டர் சொன்னார்.

கோசாலை
பட்டர் எங்களுக்கு கேசரி பிரசாதம் கொடுத்தார்.  இனிப்பை  உண்டு எதிர்பாராமல் இந்த கோவில் தரிசனம் கிடைத்த அற்புதத்தை எண்ணி வியந்து போற்றி வந்தோம்.
-                                                        
                                                  வாழ்க வளமுடன்.
                                                              ___________




32 கருத்துகள்:

  1. பக்திமணம் கமழும் சிறந்த பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி !இன்னும் இது போன்ற அதிசயங்களிநூடாக இறைவனைத் தரிசிக்கும் வாய்ப்புத் தங்களுக்கும் தங்களின் மூலம் எமக்கும் கிட்டிட வேண்டும் என்றே வேண்டுகின்றேன் .
    மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  2. நாத முனிகளின் வரலாறும் அவரின் பக்தியினால் நாலாயிர திவ்ய பிரபந்தம் நமக்கு கிடைத்த வரலாறும் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி..ராமரை தேடி நாத முனிகள் நடந்து வந்த ஊர்களின் பெயர் காரணம் இது வரை அறிந்திராத அரிய தகவல். மார்கழியில் நல்ல பொருத்தமான அழகான பதிவு.. பகிர்விற்கு நன்றி அக்கா..

    பதிலளிநீக்கு
  3. வைகுண்ட ஏகாதசிக்கு ஏற்றவாறு

    பாகவதோத்தமரான
    இறைவனடி சேர்ந்த ஸ்ரீ நாதமுனிகளின் வரலாறு அருமை.
    அச்சுப் பிறழாமல் அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள் கோமதி. மிக நன்றி.

    --
    அன்புடன்,
    ரேவதி.நரசிம்ஹன்

    பதிலளிநீக்கு
  4. கேசரியாக, பிரஸாதமாக இனிக்கும் அனைத்துத் தகவல்களும் படங்களும் அருமையோ அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. குறுங்குடி தகவல் உட்பட அனைத்தும் மிகவும் சிறப்பு... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. அறியாத தகவல்கள். படங்களுடன் மிக அருமையாகத் தந்துள்ளீர்கள். நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  7. அறியாத தகவல்கள். படங்களுடன் அருமையாகத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அறியாத தகவல்கள். படங்களுடன் அருமையாகத் தொகுத்து அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீமந் நாதமுனிகள் ஆழவார் திருநகரி சென்று, அந்த பத்து பாடல்களை 1200 முறை திருப்புளியமரத்தின் அடியில் இருந்து பாடினார் //

    கண்ணி நுண் சிறுத்தாம்பு -என்று தொடங்கும் பாசுரங்களை சில லட்சம் முறைகள் சேவித்து நாலாயிரங்களைய்ம் பெற்றார் என கேள்விப்பட்டுள்ளேன் ..!

    பதிலளிநீக்கு
  10. எதிர்பாராமல் கிடைத்த நற்பேறு .. அருமையான தரிசனத்தை அனைவருக்கும் ஏற்படுத்திக்கொடுத்தமைக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  11. படங்களும் விவரங்களும் நன்றாகத் தொகுத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீ நாதஐகுண்ட ஏகாதசியன்று பகிர்ந்து எல்லோரும் ராமநாமம் உச்சரிக்க வைத்து விட்டிர்கள். ராம தரிசனம் கிடைக்காமல் நாதமுனிகள் பதரியத்தை தத்றுபமாக எழுதியுள்ளீர்கள். நன்றி கோமதி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன். உங்கள் தொடர் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
    இன்று வைகுண்ட ஏகாதசிக்கு சில பெருமாள் கோவில்கள் போய் வந்தேன்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் இனிமையான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் இராஜராஜேஸ்வரி. வாழ்க வளமுடன்.
    ஸ்ரீமத நாதமுனிகள் முதலில் ஆயிரத்ட்துள் இப்பத்தும்” என்று முடியும் ஆயிரம் பாடல்களைதான் இறைவனிடம் கேட்கிறார் அவர் சடகோபரிடம் போகச் சொல்கிறார் .
    அப்புறம் அவர் மதுரகவி ஆழ்வாரின்வழித்தோன்றல் ஸ்ரீ பரங்குச்தாசரிடமிருந்து “கண்ணின்நுண் சிறுத்தாம்பு” என்னும் பதினோரு பாடல்களைப் பெற்று அதை புளியமரத்தின் அடியிலிருந்து 12000 முறை பாடி பாடல்களை பெற்றார் என்று போட்டு இருக்கிறது. விட்டு போனதை கவனமாய் படித்து சொன்னதற்கு நன்றி இராஜராஜேஸ்வரி.
    இலட்சம் தடவையா என தெரியவில்லை.
    12000 முறை என்று போட்டு இருக்கிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. தீடிர் என்று தான் நாதமுனிகள் அழைத்தார்.

    நீங்கள் சொன்னது போல எதிர்பாராமல் கிடைத்த நற்பேறுதான்.
    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    முதல் பாகம் படித்தீர்களா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ராஜலக்ஷ்மி,வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.நானும் உங்களுடன் சேர்ந்து ராமநாமம் சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  23. 'கண்ணினுட் சிறுத்தாம்பு' 11 பாசுரங்களை பன்னீராயிரம் முறைகள் சேவிக்க நம்மாழ்வார் தோன்றுகிறார் என்பது சரியான தகவல்.
    மிகமிக அருமையாக விவரித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    திருக்கோவிலின் படங்களைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக உள்ளது, கோமதி.

    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ரஞ்சனி , வாழ்க வளமுடன்.
    உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி.

    உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. சிறப்பான தகவல்கள்.....

    பல விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் வெங்கட் நாகராஜ,வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. உங்களை அந்தத் திருவரசு அழைத்து தரிசனம் கொடுத்திருக்கிறதே... உங்கள் பேறை எண்ணி வியக்கிறேன்.

    ஸ்ரீமன் நாதமுனிகள் வரலாறு போன்றவை அறிந்தவைகள்தாம். பன்னீராயிரம் முறைதான் கண்ணி நுண் சிறுத்தாம்பு பாசுரம் சேவித்தார்

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்


    //உங்களை அந்தத் திருவரசு அழைத்து தரிசனம் கொடுத்திருக்கிறதே... உங்கள் பேறை எண்ணி வியக்கிறேன்.//


    நிறைய வருடங்கள் அந்த வழியாக கங்கை கொண்ட சோழபுரம் போய் வந்து இருக்கிறோம், ஆனால் அவர் அன்றுதான் அழைத்து இருக்கிறார். அழைத்த நேரம் நல்ல நேரம்தானே!

    எல்லாம் அவன் செயல். என் கணவரின் கண்ணில்தான் அந்த அறிவுப்பு பலகை பட்டது அழைத்து சென்றார்கள். சாரின் புண்ணியத்தால் எனக்கும் கிடைத்தது.


    //ஸ்ரீமன் நாதமுனிகள் வரலாறு போன்றவை அறிந்தவைகள்தாம். பன்னீராயிரம் முறைதான் கண்ணி நுண் சிறுத்தாம்பு பாசுரம் சேவித்தார்//

    பிரபந்தம் படித்து வரும் உங்களுக்கு தெரியாமல் இருக்குமா!

    சார் புரட்டாசி மாதம் முழுவதும் நாலயிரதிவ்யபிரபந்தம் படிப்பார்கள்.அதற்கு பழைய புத்தகம் கிழிந்து வருகிறது என்று புது புத்தகம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாங்கினார்கள்.
    பழையதை பைண்ட் செய்ய வேண்டும் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  29. அன்பின் கோமதிமா,
    இத்தனை விவரமான பதிவை அப்பொழுது படித்த நினைவுகூட
    இல்லை. எவ்வளவு விவரங்கள்.
    சொல்லி இருக்கிறீர்கள்.

    நாதமுனிகள் 12000 முறைதான் கண்ணி நுண் சிறுத்தாம்பு
    பாசுரத்தை சேவித்தே ஸ்ரீ நம்மாழ்வார் தரிசனம்
    பெற்றார்.
    ஒரு ஆயிரம் கிடைத்ததும் போதும் என்று நினைத்தபோது
    மற்ற மூவாயிரத்தையும் சொல்லி
    கொடுத்தாராம்.
    இப்படித்தான் நாலாயிரமும் கிடைத்தன என்பார்கள்.
    தமிழுக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

      நீங்கள் முன்பு படித்து பின்னூட்டம் போட்டு இருக்கிறீர்கள்.

      //இப்படித்தான் நாலாயிரமும் கிடைத்தன என்பார்கள்.
      தமிழுக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு.//

      ஆமாம் அக்கா.


      நீக்கு
  30. சார் புரட்டாசி மாதம் முழுவதும் நாலயிரதிவ்யபிரபந்தம் படிப்பார்கள்.அதற்கு பழைய புத்தகம் கிழிந்து வருகிறது என்று புது புத்தகம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாங்கினார்கள்.
    பழையதை பைண்ட் செய்ய வேண்டும் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள்." மஹா பெரிய பாக்கியம்.எத்தனை புண்ணியம் செய்தால் இந்தப் பேறு கிடைக்குமோ.

    நம்மாழ்வார்,மதுரகவி,நாதமுனி, ஆளவந்தார்
    என்று தொடரும் குருபரம்பரைப் பாடல்களைத் தினம்
    சேவிப்பது வழக்கம்.
    அன்பு கோமதிமா,
    உங்கள் வழியாக இந்தப் பேறு கிடைத்தது
    மீண்டும் படிக்கக் கிடைத்தது.
    மதுராவில் ,ஸ்ரீ நாதமுனிக்கு ஒரு வான் ஒளி கிடைத்து அதை அவர்
    பின்பற்றிப் பராங்குசரைச் சந்திததும், குருகூர் சென்று மதுரகவியாரின்
    பாசுரங்கள் சொன்னதுமே
    தெரியும்.
    எத்தனை பாடுபட்டு நமக்கு இறைவன் மொழிகள்
    கிடைக்கின்றன.

    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் இறைவனடி சேர்ந்தது கார்த்திகை மாதம் ஏகாதசி திதிதான். மிகவும் சிறப்பு வாய்ந்த கைசாக ஏகாதசி.

      //நம்மாழ்வார்,மதுரகவி,நாதமுனி, ஆளவந்தார்
      என்று தொடரும் குருபரம்பரைப் பாடல்களைத் தினம்
      சேவிப்பது வழக்கம்.//

      நல்லது குருமார்கள் நல்லவழி காட்டுவார்கள்.

      //எத்தனை பாடுபட்டு நமக்கு இறைவன் மொழிகள்
      கிடைக்கின்றன.//

      இறை பெரியோர்கள் காட்டிய வழியில் இறைவனை சிந்தித்து வாழ்வோம்.

      நன்றி அக்கா உங்கள் கருத்துக்களுக்கு.





      நீக்கு