Sunday, July 20, 2014

தெரிந்தால் சொல்லுங்கள்!ஒரே கொம்புதான் வீடு கட்டப்படும் இடம்.

ஒரு கொம்பைச் சுற்றி சுற்றிக் கட்டி முதலில் சிறிதாக ஆரம்பிக்கும் சுற்று ,வர வர குறுகி. சிறுதுவாரமாய் மாறுகிறது.  

                                  பாதாம் காய்கள் கொத்து கொத்தாய்

வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு ஓட்டலில் பாதாம் மரத்தில் இந்த கூடு இருந்தது. பச்சை நாரால் கட்டப்பட்டு இருந்தது கூடு இன்னும் முடிவடையவில்லை அங்கு இருந்த காவல்காரரிடம் கேட்டேன் இது எந்த பறவை கூடு கட்டுகிறது என்று பார்த்தீர்களா? என்று அவர்  தெரியாது அம்மா என்றார். அடுத்த பத்து நாள் கழித்து மறுபடியும் வைத்தீஸ்வரன் கோவில் போன போது இந்த கூட்டைப் பார்க்கவே அந்த ஓட்டல் போனோன் ஆனால் என்ன ஏமாற்றம் !  கூட்டைக் காணோம் ஒரு நாள் காற்று மழையில் கூடு கலைந்து போய் விட்டது .  ஐயோ! பறவைக் கூடு கலைந்து விட்டதே ! பறவையின் உழைப்பு அவ்வளவும் வீணாகி விட்டதே !என்று வருத்தமாய் இருந்தது.

  நான் நினைத்துப் போனது, எந்தப் பறவைக் கூடு கட்டி இருக்கிறதோ அது அங்கு வரும், அப்போது பார்த்து அதைப் படம் எடுத்து விட்டுச் சேர்த்து பதிவு போடலாம் என்று நினைத்த  நினைப்பு ஏமாற்றம் ஆனது.

உங்களில் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் இது எந்த பறவையின் கூடு என்று. கூட்டின் அடியில் அதன் வாயிலை அமைத்து இருப்பதால் தூக்கணாங் குருவியாக இருக்குமோ என்ற  நினைப்பு.

                                                            வாழக வளமுடன்
                                                                  ------------------------

37 comments:

Yarlpavanan Kasirajalingam said...

சிறப்பான ஆய்வுக் கண்ணோட்டம்

ரூபன் said...

வணக்கம்
அம்மா
தங்களின் கண்ணில் பட்ட பறவையின் இருப்பிடத்தை பதிவாக பதிவு செய்து எங்களையும் இரசிக்க வைத்தமைக்கு நன்றிகள் எனக்கும் தெரியாது என்ன பறவை என்று.
உறவுகளின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

எந்தப் பறவையின் கூடு என்று தெரியவில்லை. ராமலக்ஷ்மி சொல்லக் கூடும்!

rajalakshmi paramasivam said...

பார்த்தால் தூக்கனாங்குருவி கூடு போல் தான் தெரிகிறது. பறவை ஆர்வலர்கள் சொல்லக் கூடும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கூட்டின் அடியில் அதன் வாயிலை அமைத்து இருப்பதால் தூக்கணாங் குருவியாக இருக்குமோ என்ற நினைப்பு.//

இருக்கலாம். படங்களும் பதிவும், தங்களின் ஆர்வமும் வியப்பளிப்பதாக உள்ளன. பாராட்டுக்கள்.

சே. குமார் said...

பாவம் குருவி...

இது ஆரம்ப நிலை என்பதால் எந்தக் குருவி என்று தெரியவில்லை.... தூக்கணாங்குருவி தொங்குவது போல்தான் கட்டும்....

ஜீவி said...

//அது அங்கு வரும், அப்போது பார்த்து அதைப் படம் எடுத்து விட்டுச் சேர்த்து பதிவு போடலாம் என்று நினைத்த நினைப்பு ஏமாற்றம் ஆனது.//

கூடு கலைந்த உங்கள் துயரம் நியாயமானதே.

அந்தப் பறவை வந்திருந்தால் இந்த வரியும் எதிர்பார்ப்பும் வந்திருக்காதில்லையா?.

ஆனால் அது வந்திருந்து அதையும் படம் எடுத்துப் போடுவதை விட இதான் எஃபெக்டிவா அமைந்து விட்டது.

இதன் தொடர்ச்சி எப்பொழுது பூர்த்தியாகும் என்று தெரியவில்லை.
வேறொரு சந்தர்ப்பத்தில் இதே மாதிரியாக கூட்டின் அடியில் வாயிலை அமைத்திருக்கும் கூட்டையும் அதற்கு சொந்தமான பறவையையும் ஒருசேரப் பார்க்கும் பொழுது பரவசமாய்த் தான் இருக்கும்.

அப்பொழுது கூடு- பறவை சேர்ந்த படம் பிடித்து இந்தப் பதிவுக்கு லிங்க் கொடுத்து விடுங்கள்.

அப்படி அமைந்தால் அந்த இரண்டு பதிவுகளுமே அசாதரணத் தன்மை பெறும்!

எது எது எப்பொழுது நடக்க வேண்டுமோ, அது அது......


மனோ சாமிநாதன் said...

உங்களின் ஆர்வமும் மென்மையான மனசும், படங்களும் பதிவும்- எல்லமே அழகு!!

துரை செல்வராஜூ said...

தங்களின் எண்ணங்கள் விசாலமாகி இருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..

அது தூக்கணாங்குஇருவியாகத் தான் இருக்க வேண்டும். நாணல் தட்டுப்பாட்டால் சிறு சுள்ளிகளைக் கொண்டு கட்டுகின்றது என எண்ணுகின்றேன்.

படைத்தவன் அருளால் பறவை - இன்னல் இன்றி வாழட்டும்!..

இளமதி said...

அருமையான படங்களுடன் நல்லதொரு
ஆய்வுப் பதிவு சகோதரி!

ஊரில் இருக்கும்போது இப்படி மரங்களில்
பறவைகள் கூடு கட்டுவதைப் பார்த்திருக்கின்றேன்.
இது எந்த வகைக் குருவியின் கூடோ
தெரியவில்லைச் சகோதரி!..

நானும் அறியும் ஆவலில் உள்ளேன்.

பகிர்விற்கு இனிய நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

வல்லிசிம்ஹன் said...

தூக்கணாங்குருவிக்கூடு இன்னும் நீளமாக கீழே இறங்குமே கோமதிமா. கல்பட்டார் நடராஜன் பக்கம் போயிருக்கிறீர்களா. பறவைகள் ஆர்வலர்.படங்களும் போடுவார். என்ன கூடு என்று ஆர்வமாக இருக்கிறது.

கோமதி அரசு said...

வணக்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன். உறவுகள் பறவையின் பேரை சொல்வார்கள் என்று நானும் ஆர்வமாக இருக்கிறேன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.

கோமதி அரசு said...

வண்க்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் ராமலக்ஷ்மி சொல்லக்கூடும்.
நன்றி உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்.

கோமதி அரசு said...

வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் பறவை ஆர்வலர்கள் சொல்லக்கூடும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
தூக்கணங்குருவி கூடாக இருக்கலாம் நீங்களும் நினைப்பது மகிழ்ச்சி.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சார்.

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
அந்த பறவையின் எத்தனைநாள் உழைப்பு ! வீணாகி போனது வருத்தம் தான் குமார்.
நேற்று தொலைக்காட்சி விளம்பரத்தில் தேன்சிட்டு போல் இருக்கிறது அது இது போல் கூட்டுக்குள் போவதைக் காட்டினார்கள்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி குமார்.

கோமதி அரசு said...

வணக்கம் ஜீவிசார், வாழ்க வளமுடன்.
ஓட்டலின் கார் நிறுத்தும் இடத்தில் பாதாம் மரம் காய்கள் காய்த்து இருப்பதைப் பார்க்க அண்ணந்து பார்க்கும் போதுதான் இந்த கூடு தென்பட்டது.
இனி பாதாம் மரத்தைப்பார்க்கும் போதெல்லாம் இந்த கூடு நினைவுக்கு வரும்.

நீங்கள் சொல்வது போல்
கூட்டையும் அதற்கு சொந்தமான பறவையையும் ஒருசேரப் பார்க்கும் பொழுது பரவசமாய்த் தான் இருக்கும். அப்போது புதுபதிவும் இந்தபதிவின் லிங் கொடுத்து விடுகிறேன்.

எது எது எப்பொழுது நடக்க வேண்டுமோ, அது அது...... //

நீங்கள் சொல்வது உண்மை .
அது எப்பொழுதோ காத்து இருக்கிறேன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

கோமதி அரசு said...

வ்ணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

நானும் அறியும் ஆவலில் உள்ளேன்.

பகிர்விற்கு நன்றி சகோதரி!

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது நாணல்புற்களை வைத்து ஆற்றுப்படுகையில் பக்கத்தில் இருக்கும் மரத்தில் நிறைய கூடு தொங்குவதை ரயிலில் போகும் போது பார்த்து இருக்கிறேன்.

இந்த கூடும் புற்கள்தான் சார்.

படைத்தவன் அருளால் பறவை - இன்னல் இன்றி வாழட்டும்!..//
ஆம், நன்றாக வாழட்டும்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
நீங்களும் எந்த பறவையின் கூடு என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பது மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி இளமதி.

கோமதி அரசு said...

வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது உண்மைதான். இன்னும் நீள்மாகத்தான் இறங்கும் இன்னும் முடியவில்லை இதன் கூடு.

கல்பட்டார் நடராஜன் அவர்களைப்பற்றி ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி பதிவுகள் படித்து இருக்கிறேன். அவரோட சில பதிவுகள் படித்து இருக்கிறேன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா.

கோமதி அரசு said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் ஆவலுக்கு நன்றி.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

நானும் அறிந்து கொள்ளும் ஆவலில் உள்ளேன்...

இராஜராஜேஸ்வரி said...

தூக்கணாங் குருவிக் கூடு
தூங்கக் கண்டேன் மரத்திலே..

அடடா.பாதியில் கனவு கலைந்ததே..

முழுமையாகாமலே
காணாமல் போன கூடு..
கவலை தான்..1

‘தளிர்’ சுரேஷ் said...

அழகிய படங்களுடன் வித்தியாசமான பகிர்வு! நன்றி!

அப்பாதுரை said...

எந்தப் பறவையாக இருந்தாலும் இன்னொரு கூடு கட்டியிருக்கும். கவலை விடுங்கள்.

மாதேவி said...

அழகியவீடு கலைந்ததே.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
நீங்களும் ஆவலாக இருக்கிறீர்களா?
மகிழ்ச்சி.
நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பழைய சினிமாபாடல் பகிர்வு அருமை.
முழுமையாகாமலே கூடு கலைந்து போனது வருத்தம் தான்.
இன்று கிருத்திகைக்கு வைத்தீஸ்வரன்கோவில் போய் இருந்தேன் மறுபடியும் அந்த ஓட்டல் போய் பார்த்தால் மறுபடியும் வேறு பாதாமரத்தில் கூடு கட்டி இருக்கிறது ஆனால் முடிவடையவில்லை. அரை மணி நேரம் காத்து இருந்தும் ஒரு பறவையும் கூட்டின் அருகில் வரவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.

நீங்கள் சொல்வது சரிதான், அந்த பறவை வேறு கூடு கட்டி கொள்ளும் தான்.

இன்று அந்த கூட்டைப் பார்த்தேன். இன்றும் முடிவடையவில்லை கூடு.
ஒரு புல்லை எடுத்து வைக்கும் போதே அது கீழே விழும் அது திரும்ப திரும்ப வைக்கும் எவ்வளவு நாள் கட்டி இருக்கும் அந்த கூட்டை என்று கவலைபடாமல் இருக்க முடியாவில்லை சார். அதுவும் பறவைகள் குஞ்சு பொரிக்கும் காலம் மட்டும் தான் கூடு கட்டும், மற்ற நேரங்களில் மரம் கிளையிலேயே வசித்துக் கொள்ளும். இது போன்ற நேரத்தில் இயற்கை கூட்டை அழித்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
படிக்காமல் விட்டு போன எல்லா பதிவுகளையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.
அழகிய வீடு முடிவடையாமல் கலைந்து போனது.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

இது scaly breasted munia எனப்படும் குருவியின் கூடு. தங்கை வீட்டு மாடித் தோட்டத்தில் நான் எடுத்தபடம் இங்கே: https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/4474531721/

@ ஸ்ரீராம்,

இதனைப் படம் எடுத்திருந்ததால் சொல்ல முடிந்தது. வேறு கூடுகளாயின் கண்டுபிடிக்கச் சிரமப்பட்டிருப்பேன்:).

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

ஸ்ரீராம அவர்கள் உங்கள் மேல் வைத்த நம்பிக்கையை மெய்பித்து விட்டீர்கள்.

நன்றி. படம் பார்த்தேன் மிகவும் அழகாய் இருக்கிறது. நன்றி ராமலக்ஷ்மி என்ன பறவை என்று தெரிவித்தமைக்கு.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

ஸ்ரீராம அவர்கள் உங்கள் மேல் வைத்த நம்பிக்கையை மெய்பித்து விட்டீர்கள்.

நன்றி. படம் பார்த்தேன் மிகவும் அழகாய் இருக்கிறது. நன்றி ராமலக்ஷ்மி என்ன பறவை என்று தெரிவித்தமைக்கு.