சனி, 13 ஏப்ரல், 2013

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்


சித்திரை விஷுக்கனி காணும் நாளில்,  மா, பலா, வாழை  என்ற முக்கனிகளும்
மற்றும் எல்லாப் பழங்களும் இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்படும்.



தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற பதிவில் சென்ற ஆண்டு விஷுக்கனி
கொண்டாடுவதைப் பற்றி  சொல்லிவிட்டேன்.

இந்த ஆண்டு,  விஷுக்கனியில் முக்கியமாக  இடம் பெறும் மா, பலா, வாழையும் அதன் நன்மைகளையும் பற்றிப் படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பழங்களைப்பற்றி இயற்கை சங்கத்தில் சொல்வதையும் பகிர்ந்து கொள்கிறேன்.


சூரியன் தனது ஒளியால் காய்களைக்  கனியச்செய்கிறது.
சூரியசக்தியால் சுவை ஊட்டப்பட்ட கனிகளைச் சாப்பிடுவதால் எல்லா
உயிரினங்களும், மனிதர்களும், உடலுக்குத் தேவையான சக்திகளைப்
பெறுகிறார்கள்.

காலையில் பழ உணவு எடுத்துக் கொள்வதைப் பழ ஆகாரம் என்று சொன்னார்கள். அது  தான் மருவி இப்போது பலகாரம் என்று ஆனதாய் சொல்கிறார்கள், இயற்கைச் சங்கம் என்ற அமைப்பை வைத்து இருப்பவர்கள். காலையில் சாப்பிடும் பழ  உணவு, பொன் போன்றது. மத்தியானம் வெள்ளி போன்றது. இரவில் ஈயம் போன்றது என்கிறார்கள். தினசரி உணவில் ஒரு பகுதி பழங்களாக அமைந்தால் அதன் மூலம் இயற்கை சத்துக்கள் கிடைக்கும் .அந்த அந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களை உண்பதால் இயற்கை சக்திகள் குறைவில்லாமல் கிடைக்கிறது. நோய் வராமல் பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

பழம் சாப்பிடுவதால் அது உணவாகவும் இருக்கிறது, மருந்தாகவும்
இருக்கிறது. குடலுறிஞ்சிகளால் எளிதில் உறிஞ்சப்படக்கூடியதாகவும்,
நார்ப்பொருள்கொண்டதாகவும்,  குடலின் புளிப்புத் தன்மையை
அகற்றுவதாகவும் இருக்கிறது.

 முக்கனிகள்

 மாம்பழம்:

மாம்பழத்தில் வைட்டமின் A உயிர்ச்சத்து நிறைந்து உள்ளது.  இரத்தம்
சுத்திகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.  மாம்பழம் கிடைக்கும் காலங்களில்
மாம்பழத்தை உண்டு பலம் பெறலாம்.

வாழைப்பழம்:

குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்
பழம், வாழைப்பழம். இதில் வைட்டமின் A ,  வைட்டமின் B,  B2,  C
உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய
இருக்கின்றது. இந்த சத்தின் அளவு வாழைப்பழத்தில் உள்ள வகைக்கு வகை
வித்தியாசப்படும்.

பலாப்பழம்

முக்கனிகளுள் ஒன்று. தலைநரம்புகளுக்கு  வலிமையக் கொடுக்கும். அதிக
அளவு சூட்டைத்தருவதால் அளவோடு உபயோகிக்க வேண்டும்.
வைட்டமின் A உயிர்ச்சத்து அதிகம் இருப்பதால் இதைச் சாப்பிட்டால் உடல்
வளர்ச்சி சீரடையும். தேகத்தில் தோலை வழுவழுப்பாக வைத்து இருக்க
உதவும். நரம்புகளுக்கு உறுதி தரும். இரத்தத்தை விருத்தி செய்யும். பல்
சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும் , பற்களைக் கெட்டிப்படுத்தும்.
வைட்டமின் A உயிர்ச்சத்துக்கு தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தி
உண்டாகையால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

பொதுவாக பலாப்பழம் உடலுக்கு நன்மை தரக்கூடியதாகவே உள்ளது.
பழனி பஞ்சாமிர்தத்தில் கூடப் பலாப்பழம் சேர்க்கப்படுகிறது. ஐந்து வகை
பழத்தினையும் தேனையும் சேர்ந்து தயாரிக்கும் பஞ்சாமிர்தம் உடலுக்கு
மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். விருந்துகளில் முக்கனி பரிமாறப்படுகிறது.  அதற்குக் காரணம், விருந்தில் சுவையான உணவுகள் பரிமாறப்படும்போது  நாம் அதிகமாய் சாப்பிட்டு விடுவோம். அதனால் உணவு ஜீரணம் ஆகவும்  உடற் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும்  நம் முன்னோர்கள் முக்கனிகளை விருந்தில் பரிமாறினார்கள். விருந்துணவை முக்கனிகளுடன் சாப்பிடும் போது ஜீரணம் சீக்கிரமாக நடந்து, இரைப்பையை விட்டு உணவு வெளியேறிவிடும். வயிற்று உபாதை இருக்காது.


எங்கள் வீட்டில் செய்யும் தமிழ்ப்புத்தாண்டு இனிப்பு:

   1 டம்ளர் அவலுக்கு அரை டம்ளர் வெல்லம் வேண்டும். வெல்லத்தைப் பொடி செய்து  1 ட்ம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து,  கல், மண் போக வடிகட்டி பின் அதைக் கொதிக்க   வைத்து சுத்தம் செய்யப்பட்ட அவலில்   ஊற்றி மூடி வைக்க வேண்டும்,   அதனுடன் சிறிது பாசிப்பருப்பு, எள் வறுத்துப் போடலாம்.,(வெல்ல நீரை  கொதி வந்தவுடன் அவலில் ஊற்றிவிடவேண்டும். வெகு நேரம் கொதிக்கவைத்தால் பாகு மாதிரி ஆகிவிடும்). அதுவும் ஊறினால் நன்றாக இருக்கும். நன்கு அவல் ஊறியவுடன் அதனுடன் தேங்காய்த் துருவலைப் போட்டு, கிளறி , ஏல்க்காயைப் பொடி செய்து போட்டு, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு  போட்டால்    இனிப்பு அவல் ரெடி.

புத்தாண்டு செய்திகள்

விஜய ஆண்டு நல்ல பலன்களைக் கொடுக்கட்டும்!

//மண்ணில் விசய வருடம் மழை மிகுதி
எண்ணு சிறுதானியங்கள் எங்குமே-- நண்ணும்
பயம் பெருகி நொந்து பரிவாரமெல்லாம்
நயன்களின்றி வாடுமென நாட்டு//

என்று பஞ்சாங்கத்தில் உள்ள பாடல் கூறுகிறது.

இப்பாடலில் கூறப்பட்டுள்ள நன்மைகளே நடக்கட்டும்.மழை பெருகட்டும்!
தானியங்கள் விளையட்டும்.

இனிய புத்தாண்டு மலரட்டும்!
இனிய வாழ்வு அனைவருக்கும் மலரட்டும்!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

இந்தப் புத்தாண்டில் நல்லதே நடக்க வேண்டுவோம்.

//இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின்புற்றிருந்து  வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.//

 ===== மகா கவி பாரதியார்.


வாழ்க வளமுடன்.

59 கருத்துகள்:

  1. பழ ஆகாரம் பலகாரம் ஆனதும், முக்கனிகளைப்பற்றிய சத்துள்ள தகவல்களுக்கும் நன்றி...

    அனைவருக்கும் இனிதான வாழ்வு மலரட்டும்...

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. தங்களுக்கும் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கோமதிம்மா! முக்கனிகள் குறித்த பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  3. Asiya Omar அவர்கள் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார்கள்...

    /// கோமதியக்கா(கோமதி அரசு) அவங்க ப்ளாக்கினை பார்வையிட முடியவில்லை.துள்ளிக் குதிக்கிறது. அவர்களிடமும் தெரிவிக்கவும். ///

    சரி செய்ய :

    Visit : http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html

    பதிலளிநீக்கு
  4. இனிப்பு அவல் ரொம்ப எளிமையாக இருக்கும் போலிருக்கே? செய்து பார்க்கிறேன்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அமிர்தமாய் இனிக்கும் முக்கனிகள் பற்றிய பதிவு .மிக்க நன்றிக்கா
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. முக்கனிகளான மா, பலா, வாழை பற்றியும் விஷுக்கனி பற்றியும் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  8. //
    எங்கள் வீட்டில் செய்யும் தமிழ்ப்புத்தாண்டு இனிப்பு:

    1 டம்ளர் அவலுக்கு அரை டம்ளர் வெல்லம் வேண்டும். வெல்லத்தைப் பொடி செய்து 1 ட்ம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கல், மண் போக வடிகட்டி பின் அதைக் கொதிக்க வைத்து சுத்தம் செய்யப்பட்ட அவலில் ஊற்றி மூடி வைக்க வேண்டும், அதனுடன் சிறிது பாசிப்பருப்பு, எள் வறுத்துப் போடலாம்.,(வெல்ல நீரை கொதி வந்தவுடன் அவலில் ஊற்றிவிடவேண்டும். வெகு நேரம் கொதிக்கவைத்தால் பாகு மாதிரி ஆகிவிடும்). அதுவும் ஊறினால் நன்றாக இருக்கும். நன்கு அவல் ஊறியவுடன் அதனுடன் தேங்காய்த் துருவலைப் போட்டு, கிளறி , ஏல்க்காயைப் பொடி செய்து போட்டு, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு போட்டால் இனிப்பு அவல் ரெடி.//

    நாங்களும் சாப்பிட ரெடி. பார்ஸலில் கொடுத்து அனுப்ப்ய்ங்கோ, ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  9. //நன்மைகளே நடக்கட்டும்.மழை பெருகட்டும்! தானியங்கள் விளையட்டும்.

    இனிய புத்தாண்டு மலரட்டும்!
    இனிய வாழ்வு அனைவருக்கும் மலரட்டும்!

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

    இந்தப் புத்தாண்டில் நல்லதே நடக்க வேண்டுவோம்.//


    மிகவும் சந்தோஷம். அப்படியே நடக்கட்டும். ததாஸ்து. ;)

    பதிலளிநீக்கு
  10. ,தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். விஜய வருடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நன்மைகள் யாவும் நலமாய் நடந்தேறட்டும்.

    முக்கனிகள் பற்றி பல அறியாத செய்திகளை அறிந்துகொண்டேன். இனிப்பு அவல் செய்முறையும் புதிது. பகிர்வுக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  12. முக்கனிகள் குறித்த தகவல்கள் நன்று.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. இனிய “விஜய” தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. அன்பு கோமதி,
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா.

    உங்கள் நல்ல இதயத்துக்கும் அருமைக் கணவருக்கும் மக்கட் செல்வங்களுக்கும்
    இறைவன் சர்வ சௌபாக்கியங்களையும் அள்ளிக் கொடுக்க வேண்டும். பாயாசம் படித்து மகிழ்ந்தேன்:)

    பதிலளிநீக்கு
  15. விஷுக்கனி பற்றி வெகு அழகாக விளக்கியுள்ளீர்கள்... நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  16. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.. இனிப்பு அவல் குறிப்பு அருமை, அதையே இன்று இனிப்பாக செய்து விடுகிறேன்.முக்கனிகள் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. இனிய விஜய வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  18. முக்கனியின் சாறை வழங்கிய உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும்

    பதிலளிநீக்கு
  19. இனிய விஜய வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. மிக்க நன்றி சகோதரி உங்கள் வாழ்த்திற்கு....

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  21. உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் மற்றும் 'திருமதி பக்கங்கள்'சக வாசக நண்பர்களுக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    முக்கனியில் பலா கிடைக்கவில்லை அது தான் சார் வரைந்து தந்தார்கள் அவரமாய்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க திண்டுக்கல் தனபாலன் சார், உங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
    ஆசியா அவர்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறேன். என் வலைத்தளத்திற்குள் வர ஹுஸைனம்மா சொன்னது போல சொல்லி இருக்கிறேன்.
    நீங்கள் முன்பே வலைச்சரத்தில் குறிபிட்டு இருந்தீர்கள் இந்த லிங்கை.
    நான் போய்ப் பார்க்கிறேன்.
    உங்கள் உதவிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன்.இனிப்பு அவல் மிக எளிமையாகத்தான் இருக்கும் வெல்லத்தண்ணீர் கொதித்தவுடன் அவலில் ஊற்றிவிட வேண்டும். பாகு ஆகி விட்டால் அவல் ஊறாது அது மட்டும் தான் இந்த இனிப்பில் கவனிக்க வேண்டிய விஷ்யம்.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
    விடுமுறைக்கு ஊருக்கு போய் வந்து விட்டீர்களா?

    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    //தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு [விஜய] நல்வாழ்த்துகள்.//

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    //முக்கனிகளான மா, பலா, வாழை பற்றியும் விஷுக்கனி பற்றியும் வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள்.//

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

    //நாங்களும் சாப்பிட ரெடி. பார்ஸலில் கொடுத்து அனுப்ப்ய்ங்கோ, ப்ளீஸ்.//

    அனுப்பிவிடுகிறேன், மிகுந்த சந்தோஷம்.

    //மிகவும் சந்தோஷம். அப்படியே நடக்கட்டும். ததாஸ்து. ;)//

    அப்படியே நடக்கட்டும் என்று நீங்கள் சொன்னதை கேட்கும் போது அந்த கோபாலனே சொன்னது போல்.
    மக்கள் எல்லோரும் உங்கள் ஆசிப்படி நலமாக இருக்கட்டும்.
    உங்கள் வரவுக்கும் நான்கு பின்னூட்டத்திற்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  27. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.உங்கள் வாழ்த்துப்படி நன்மைகள் யாவும் நலமாய் நடந்தேறட்டும்.

    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்கவளமுடன்.
    இரண்டு , மூன்று பதிவுகளில் உங்களை காணோம் , வேலைகள் அதிகமோ?

    உங்கள் வரவுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க இராஜராஜேஸ்வரி , வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன். உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வாங்க கே.பி.ஜனாசார், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வாங்க ராதாராணி, வாழ்க வளமுடன்.
    இனிப்பு அவல் செய்தீர்களா? நன்றாக இருக்கா?
    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வாங்க பூவிழி, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வாங்க ராஜி, வாழ்கவளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. திருமதி பக்கங்கள் என்ற பெயரை இப்போதுதான் அறிந்து கொண்டு ஓடி வந்தேன். முக்கனி இனிப்பாக இருக்கிரது. ப்ளாகை கண்டு பிடித்ததில் ஸந்தோஷம். உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தின் அனைவருக்கும் விஜய புத்தாண்டு வாழ்த்துகள். அன்புடன் சொல்லுகிறேன்.

    பதிலளிநீக்கு
  38. பழ ஆகாரம் பலகாரமாக மாறி பல ஆகாரமாகிவிட்டது.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.மிக அருமையான பகிர்வு.ஆமாம்,ஒரு மாதமாக என்னால் இந்தப் பக்கம் வரமுடியலை. தனபாலன் சாரிடம் விளக்கம் கேட்டிருந்தேன், பதிலிற்கு மிக்க நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  40. இனிப்பு அவல் எள் சேர்க்காமல் பாசி பருப்பு , தேங்காய், வெல்லம், முந்திரி மட்டும் சேர்த்து செய்தேன். அருமை..நன்றி.

    பதிலளிநீக்கு
  41. விஜய ஆண்டு ஜெயம் பல தரட்டும்!

    இனிப்பு அவல் இந்த முறையில் செய்ததில்லை. கொதி வந்ததும் ஊற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியமைக்கு நன்றி.

    முக்கனிகளின் சிறப்பு அருமை. பழ ஆகாரம் திரிந்து பல ஆகாரத்தை காலை மாலை வயிற்றில் திணிப்பதும் வேடிக்கை.

    பதிலளிநீக்கு
  42. தங்களுக்கும் அனைவருக்கும் என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா ....

    பதிலளிநீக்கு
  43. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், கோமதிம்மா.

    பஞ்சாங்க செய்திகள் எப்படியிருந்தாலும் மஹாகவியின் வரிகள் நம்பிக்கை ஒளியேற்றுகிறது.

    ஸ்ரீ விஜய வருஷத்தில் ஜெயங்கள் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  44. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  45. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    சாரின் மா, பலா, வாழை ஒவியம் பார்க்கவில்லையா?
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  46. வாங்க காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் சமையல் குறிப்புகளுக்கு வருவேனே கோமதி அரசு ! உங்கள்
    கோடை சமையல் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    என் வலைத்தளத்தை கண்டு பிடித்து வந்தமைக்கும், உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  47. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  48. வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.நானும் உங்கள் வரவை முந்திய பதிவுகளில் எதிர்ப்பார்த்தேன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  49. வாங்க ராதா ராணி, வாழ்க வளமுடன்.
    என் மகனுக்கும், எள், பாசிப்பருப்பு போடாமல் செய்ய வேண்டும். அவன் இருந்தால் அப்படித்தான் செய்வேன்.
    உடனே செய்து பார்த்தமைக்கும், வந்து கருத்து சொன்னதற்கும் மிக மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  50. வாங்க நிலாமகள், வாழ்க வளமுடன்.

    கொதி வந்ததும் ஊற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியமைக்கு என்ன காரணம் என்றால் அவல் ஊறாமல் சவுக் சவுக் என்று ஆகி விடும். சாப்பிடுவது கஷ்டம்.
    கொதி வந்தவுடன் ஊற்றினால் பூ போல மெதுவாய் ஊறி சாப்பிட நன்றாக இருக்கும். அது தான் வலியுறுத்த வேண்டி உள்ளது. அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடம்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி நிலாமகள்.

    பதிலளிநீக்கு
  51. வாங்க விஜி பார்த்திபன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  52. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கையோடு இருப்போம் நல்லதே நடக்கும் என்று.
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  53. முக்கனிகள் பற்றியும், அவல் இனிப்பு, பலகாரம் என சுவையான செய்திகள்....

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  54. வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.
    புத்தாண்டு சிறப்பாக கொண்டாடினீர்களா?

    ரோஷ்ணி நலமா? உங்களுக்கும் இந்த புத்தாண்டு எல்லா நலங்களையும், வளங்களையும் அருளட்டும்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  55. சரியான லிங்க் கொடுத்ததற்கு அன்பு நன்றி கோமதி!
    இப்போது வலைத்தளம் மின்னி மின்னி மறையவில்லை!
    உங்களுக்கும் எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
    இனிப்பு அவல் குறிப்பு ருசிகரமாயிருக்கிறது. எளிமையாகவும் இருக்கிறது! செய்து பார்க்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  56. வாங்க மனோசாமிநாதன்,வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  57. கனிகளின் முக்கியத்துவத்துடன் புத்தாண்டு நலமாகவும் மகிழ்ச்சியாகவும் மலர்ந்திருக்கின்றது.

    இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  58. வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
    உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  59. தோழி மன்னிக்கவும் தாமத வருகைக்கு இங்கு எங்கள் பகுதியில் மின்சாரம் சரிவர இயங்கவில்லை அதனால் தாமதம். முக்கனி தகவல்கள் அருமை. கவிதை வரிகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு