வெள்ளி, 26 ஏப்ரல், 2013

பரங்கிப்பேட்டை பாபாஜி கோயில்




யோகி ராமய்யா அவர்கள் சென்னை மயிலாப்பூரில் 1952ஆம் ஆண்டில் ’கிரியா பாபாஜி யோக சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவர் அமெரிக்காவில் யோகப் பயிற்சி நிலையங்களை  ஏற்படுத்தி இருக்கிறார். நியூயார்க், வாசிங்டன் ஆகிய இடங்களில் அவரது கோவில்கள் உள்ளன.

அவர் 1954ல் பதரிநாத்துக்கு அருகில் கிரியாயோகாவை, பாபாஜி நாகராஜிடமிருந்து தீட்சை பெற்றார். அவருடைய யோக சங்கமானது இப்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2006 ஜூலை 12ஆம் தேதி கோலால்ம்பூரில் அவர் சித்தி அடைந்தார்.
அவருடைய ஆசிரமம் தமிழ்நாட்டில் கானாடு காத்தான் என்ற ஊரில் உள்ளது.






பாபாஜி கோவில் பரங்கிபேட்டையில் இருக்கிறது என்று கேள்விப்பட்டோம். சித்திராபெளர்ணமி அன்று  சிதம்பரம் சென்று சித்திரகுப்தரை தரிசிக்க சென்ற போது முதலில் பாபாஜி கோவில் சென்றோம்.  

சிதம்பரத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் பரங்கி பேட்டை என்ற இடத்தில் பாபாஜி அவதரித்தாகக் கூறப்படுகிறது. அவருக்கு இங்கு ஆலயம் உள்ளது. இந்த கோவிலை பாபாஜியின்  நேர் சீடர் ராமைய்யா அவர்கள் கட்டி இருக்கிறார்கள். 


இக்கோயிலில் நடுவில் பாபாஜி மூலவராக அமர்ந்து இருக்கிறார்.  சதுர வடிவத்தில் ஆவுடையார் பீடத்தில் பாபாஜி அமர்ந்து இருக்கிறார். வலது கையில் அபய முத்திரை. இடக்கையை மடியில் வைத்து இருக்கிறார். இவ்வூரில் மட்டுமே பாபாஜி சிலை இருக்கிறது. கோவில் வாசல் அருகில் வலப்பக்கத்தில் பிள்ளையார் திருவுருவம் உள்ளது. 
பாபாஜி கதிர்காமம் சென்ற போது அங்குள்ள ஆலமரத்தில் முருகன் அவருக்கு  காட்சி கொடுத்தராம். அதை விளக்குவது போல்  இடப்பக்கத்தில்  அந்த காட்சியை சிலையாக வடித்து  இருக்கிறார்கள்.
மண்டபத்தில் இரண்டு தூண்களில் அன்னை மற்றும் கிரியா அன்னை என்னும் சீடர்களின் வடிவங்கள் உள்ளன. இந்த தூண்களுக்கு கீழே பஞ்சாங்க கிரியாபீடம் உள்ளது.







கெளரிசங்கர் பீடம்
சன்னதிக்கு முன் கெளரிசங்கர் பீடம் எனும் யாக குண்டம் உள்ளது. கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் இங்கு யாக பூஜை நடக்குமாம். யாக குண்டம் அருகில் பாபாஜியின் பாதம் உள்ளது. தாமரை மலரின் மேல்  பாதம் உள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது.

 மண்டப விமானத்தில் அவர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள், ராமையா சீடராக  பாபாஜியின் காலடியில் இருப்பது  போன்ற உருவம் உள்ளது..அருகே அம்மன் என்கிற சிலையும் அம்மான் என்கிற சிலையும் உள்ளன..







இங்கு இருக்கும் ஆலமரத்தைச் சுற்றிலும் தியான மேடை அமைத்து இருக்கிறார்கள். பக்தர்கள் வந்து அமைதியாக தியானம் செய்து விட்டு ப்போகிறார்கள். கிளியின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருக்கும் அமைதியான இடம்.

இந்தக்கோயிலைத் தற்போது திரு.கார்த்திகேயன் என்பவர் கவனித்துக் கொள்கிறார். எங்களிடம் மிகுந்த அன்போடு பேசினார்.அங்கு தியானம் செய்வதற்கு ஒரு அறை உள்ளது. அங்கு இராமையா சிலை. மற்றும் பாபாஜி படங்கள் உள்ளன. கை கால் , முகம் கழுவிக் கொண்டு அங்கு சென்று தியானம் செய்யலாம் என்றார்கள். அதற்கு ஏற்ற வகையில் குளியல் அறை, கழிவறை நல்ல சுத்தமாக பராமரிக்கப்பட்ட நிலையில் உள்ளது.எங்களுக்கு நேரம் நிறைய இருந்த்தால் தியானம் செய்தோம்.

               

வெயில் அதிகமாக இருந்ததால்அந்த அறையில் பாட்டரியால் இயங்கும் மின்விசிறியை போட்டு விட்டார்கள். அமர்ந்து நானும் , என் கணவரும் தியானம் செய்தோம். பின் ஆலமரத்தின் அடியிலும் அமர்ந்து தியானம் செய்தோம். மனதுக்கு நிறைவாக இருந்தது.




ஆலமரத்திற்கு பக்கத்தில் துளசிமாடம் அழகாய் இருக்கிறது.

பூத்துக் குலுங்கிய வேப்ப மரம் தபோவனத்திற்கு குளிர்ச்சி தந்து கொண்டு இருக்கிறது.

அவர் சற்று நேரம் இருந்தால் பிரசாதம் ரெடியாகிவிடும் அன்னதானம் வழங்குவோம் என்றார். வெண்பொங்கல் பிரசாதம் செய்து கொண்டு வந்தார்கள் ஒரு அம்மா.. அவர்களும் சிறு வயதிலிருந்து இங்கு தான் சேவை செய்கிறார்களாம்.  பின்  என்னை அழைத்து பாபாஜிக்குப் பிரசாதத்தை  நீர் விளாவி  அளிக்க சொன்னார்.   நானும் மகிழ்ச்சியுடன் செய்தேன்.
கார்த்திகேயனும் அந்த அம்மாவும் உணவு அர்ப்பண பாடல் பாடினார்கள்.அது:

ஆம் ஹ்ரிம் க்ராம் சுவாஆ
சித்ராய சித்ரகுப்தாய
ஒளத் தத் சத்
ஒளம் கிரியா பாபாஜி நம் ஒளம்.

  பின் கற்பூரம் காட்டிவிட்டு வாதாமரத்தின் இலையில் காக்கைக்கு வைக்கச் சொன்னார்கள்.  பொங்கல்  ஆறி இருக்கிறதா என்று பார்த்து வைத்தார்கள்.  அந்த செயல்  பாராட்டப்பட வேண்டிய விஷயம்.பின் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களை கார்த்திகேயன் போய் அழைத்து வந்தார், பிரசாதம் வாங்கி செல்ல. காலையில் கிரிக்கெட் விளையாடி களைத்த சிறுவர்கள் வாங்கி சென்றார்கள். சாதுக்கள்,  பிற சமயமக்கள்  வந்து வாங்கி சென்றார்கள்.

திரு.கார்த்திகேயனைப் புகைப்படம் எடுக்கச்சென்றபோது அவர் தடுத்து அன்பு இருந்தால்போதும் என்று பாபாஜி கூறியதை கூறினார். பாபாஜி கூறியபடி எல்லோரிடமும் அன்பு செலுத்தும் உங்களைப் படம் எடுப்பது தவறில்லையென்று கூறி,அவருடைய அனுமதியுடன் எடுத்தோம்.
சிறு தொகையை அன்னதானத்திற்கு என்று கொடுத்த போது  அவருக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் என்ற கண்டிப்பு இல்லை. அன்பு செலுத்துங்கள் எல்லோரிடமும் . அது தான் அவருக்கு பிடித்தது என்றார். பாபாஜி இன்றும் ஜீவித்து இருப்பதாய் சொல்கிறார்.

இந்தக்கோயில் காலை 6 மணி முதல் 9 .30 மணி வரையிலும்,  மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை யிலும் திறந்து இருக்கும். வியாழக்கிழமைகளில் காலை முதல்  இரவு வரை  திறந்து இருக்கும். வியாழக்கிழமைகளில் இரவு 7மணிக்கு பாபாஜிக்கு அபிஷேகம் நடக்கும் என்றார்கள்.
 வெளியூர் அன்பர்கள் போன் செய்தால் திறந்து விடுவார்களாம். அங்கு சேவை செய்யும் கார்த்திகேயன் மேலும் சொன்னார். அவர் போன் நமபர் 9994197935. 



 பாபாஜி பற்றி புத்தகம் ஏதாவது இருக்கா? என்று கேட்ட போது இரண்டு மூன்று புத்தகங்கள் கொண்டு வந்து இதில் உங்களுக்கு  தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் இரண்டு பெரிய புத்தகங்கள், ஒரு சிறு புத்தகம் எடுத்துக் கொண்டோம்,  விலை 300 ரூபாய் என்றார். புத்தகத்தில் வரும் பணம் அவர்கள் நடத்தும் ஆஸ்பத்திரிக்குச் செல்லும்  என்றார்.

                              



பாபாஜியின் பெற்றோர்கள்  சுவேதநாதய்யர், ஞானாம்பிகை தம்பதியர்  சுவேதநாதய்யர் பரங்கிபேட்டையில் உள்ள  முத்துக்குமாரசுவாமி கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார்.அந்த கோவிலையும் பார்த்து வந்தோம்.

பரங்கிபேட்டையில் உள்ள ஆதிமூலேஸ்வரர், அமிர்தவல்லி கோவிலில்  , சித்ரகுப்தர் என்றும் 12 வயது தனக்கு இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினாராம்.அதையும் தரிசித்தோம். அந்த கோவிலைப்பற்றியும்  அடுத்தபதிவில் பார்க்கலாம்..
                         வாழ்க வளமுடன் !
                        ---------------------



48 கருத்துகள்:

  1. பாபாஜி பற்றி விரிவாகத் தந்துள்ளீர்கள். அறிந்து கொண்டோம்.

    கோவில் அழகாக இருக்கின்றது.

    படங்களைப் பார்க்கும் போதே சூழலும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

    பதிலளிநீக்கு
  2. பாபாஜி கோவில் பற்றி இதுவரை அறிந்திராத புதிய தகவல்கள். தியானம் செய்ய அமைதியும் இயற்கையின் அழகும் நிறைந்த அற்புதமான இடம் என்பது பார்த்தாலே தெரிகிறது.பகிர்வுக்கும் அழகானப் படங்களுக்கும் நன்றி.

    தரங்கம்பாடி பற்றிய என் பின்னூட்டத்தைக் காணவில்லையே.. ஸ்பேமுக்குப் போய்விட்டதோ?

    பதிலளிநீக்கு
  3. அருமையான கோவில் பற்றி சிறப்பான தகவல்கள்..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

  4. எத்தனைவித மனிதர்கள், நம்பிக்கைகள், சேவைகள்....!மனிதம் செழிக்க எல்லாமே தேவையோ.? பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பளிச் பளிச் என்று அற்புதமான படங்கள் மூலம் பாபாஜி கோவிலின் சிறப்புக்கள் அருமை அம்மா...

    மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
    பாபாஜி இலங்கை வந்து கதிர்காம முருகனை தரிசனம் செய்த போது ஆலமரத்தில் கதிர்காமமுருகன் காட்சி கொடுத்ததை பார்த்தீர்களா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வாங்க கீதமஞ்சரி, வாழ்கவளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் இயற்கையின் அற்புதம் நிறைந்த இடம் தான்.
    தரங்கம்பாடி பின்னூட்டம் நீங்கள் சொன்னது போல் ஸ்பேமுக்கு போய் விட்டது நீங்கள் சொன்னதால் இன்னும் மூன்று பேர் பின்னூட்டமும் கிடைத்தது.நன்றி கீதமஞ்சரி.
    உங்கள் அழகான பின்னூட்டங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.

    //எத்தனைவித மனிதர்கள், நம்பிக்கைகள், சேவைகள்....!மனிதம் செழிக்க எல்லாமே தேவையோ.? //

    நன்றாக சொன்னீர்கள் சார்.


    பதிலளிநீக்கு
  10. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.

    //எத்தனைவித மனிதர்கள், நம்பிக்கைகள், சேவைகள்....!மனிதம் செழிக்க எல்லாமே தேவையோ.? //

    நன்றாக சொன்னீர்கள் சார்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. தெரிந்து கொண்டேன். மகா அவதார் பாபாஜி பற்றி படித்துள்ளேன். (யோகியின் சுயசரிதைதான்) ரஜினி இவரை இமயமலைப் பயணத்தில் ஒருமுறை சந்தித்துள்ளதாகப் படித்துள்ளேன். இவர் தவம் செய்த குகைக்குள் கஷ்டப்பட்டுச் சென்று வந்ததாக அவர் எழுதியிருந்த கட்டுரை படித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  13. இதுவரை அறியாத அருமையானதொரு கோயில் பற்றி சிறப்பான தகவல்கள். கொடுத்துள்ளீர்கள்.

    படங்களை அத்தனையும் மிகச்சிறப்பாக சிரத்தையாக அழகாக வரிசையாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.

    பாபாஜி தவம் செய்த குகைக்குள் கஷ்டப்பட்டுச் சென்று வந்ததை விஜய் தொலைக்காட்சியில் காட்டினார்கள் பார்த்து இருக்கிறேன்.
    பாபா படத்தில் பாபாஜியைப்பற்றி சொல்லி இருப்பார்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், நன்றி.
    உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  16. பாபாஜியின் அருள் கிடைத்து உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. So Graceful
    So Divine
    So Inspiring
    sometime in my life
    sure to visit and
    see this Great
    Soul.

    subbu thatha.
    www.subbuthatha.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  18. பாபாஜி கோவில் பற்றிப் படித்திருக்கிறேன்.
    ஆனால் இப்பொழுது பார்த்த திருப்தியே வந்து விட்டது ,உங்கள் பதிவைப்படித்த பின் தான்,
    இந்தக் கோவிலுக்கும் திரு.ரஜினிகாந்தின் பாபாவிற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
    பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்கவளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க சூரி சார், வாழ்க வளமுடன்.
    நீங்களும் ஒரு முறை போய் வாருங்கள், அமைதியான தெய்வீகமான இடம் தான். சென்னையிலும் இருக்கிறதாம்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ராஜி, வாழ்கவளமுடன்.
    இந்தக் கோவிலுக்கும் //திரு.ரஜினிகாந்தின் பாபாவிற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?//
    ரஜினிகாந்தின் பாபாதான். பாபா படத்தில் காட்டுவாரே அவர்தான்.
    விஜய தொலைக்காட்சியில் கூட பாபாஜி அமர்ந்து தவம் செய்த குகையில் ரஜினிகாந்த் உள்ளே போய் தியானம் செய்தார் என்று காட்டினார்களே அந்த பாபா தான். இமயமலையில் இன்னும் ஜீவித்து இருக்கிறர் என சொல்கிறார்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. பரங்கிப்பேட்டையில் பாபாஜியின் ஆசிரமம் இருக்கிறது என்பது புதுதகவல். அருமையான விவரங்களுடன் சொல்லி இருக்கிறீர்கள் கோமதி. இடத்தைப் பார்த்தாலே மனதில் அமைதி வந்துவிடும் என்று நினைக்கிறேன். பொழுதை இத்தனை அருமையாகச் செலவழிக்கிறீர்கள்.அதை எங்களுடன் பகிர்ந்தும் கொள்கிறீர்கள். மிக நன்றிமா.

    பதிலளிநீக்கு
  23. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.

    நாங்களும் இப்போது தான் கேள்விப்பட்டு போய் பார்த்து வந்தோம். சித்திரா பெளர்ண்மிக்கு சிதம்பரம் கோவிலில் இருக்கும் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடக்கும் முடிந்தபோது போய் பார்த்து வருவோம் அப்படி போகும் போது பாபாஜி கோவிலையும் பார்த்து வந்தோம்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  24. விரிவான தகவல்கள்.. நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  25. வாங்க அமைதிச்சாரல், வாழ்கவளமுடன்.
    முந்தைய பதிவுகளில் உங்களை பார்க்கமுடியவில்லையே! ஊருக்கு போய் இருந்தீர்களா?
    குறைஒன்றும் இல்லை லக்ஷ்மி அம்மாள் பற்றி ஏதாவது தெரியுமா உங்களுக்கு? அவர்களை பதிவுலகத்தில் கொஞ்சநாளாய் பார்க்க முடியவில்லையே!

    அவர்களைபற்றிய விபரம் தெரிந்தால் சொல்லுங்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சாரல்.

    பதிலளிநீக்கு
  26. மன நிறைவை கொடுத்த பதிவு சகோதரி கடவுள் அருள் இருப்பின் ஒரு தடவி சென்று தரிசிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் .மிக்க நன்றி மிக சிறந்த பகிர்வு

    பதிலளிநீக்கு
  27. வாங்க பூவிழி, வாழ்க வளமுடன்.
    பகிர்வு உங்களுக்கு பிடித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி.
    சென்று வாருங்கள் ஒருமுறை.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. அனைத்து சிற்ப்பங்களும், புகைப்படம் எடுக்கப்பட்ட விதமும் அருமை...

    பதிலளிநீக்கு
  29. வாங்க இரவின் புன்னகை, வாழ்கவளமுடன்.
    உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. விரிவான தகவல்களுடன் படங்களும். தியான மேடை நன்றாக உள்ளது.

    பிரசாதத்தை தங்களைப் படைக்கச் சொன்ன பெண்மணியின் அன்பும், பண்பும் கவருகிறது.

    /பொங்கல் ஆறி இருக்கிறதா என்று பார்த்து வைத்தார்கள். அந்த செயல் பாராட்டப்பட வேண்டிய விஷயம்./

    நிச்சயமாய்.

    பதிலளிநீக்கு
  31. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
    உங்களை இரண்டு நாளாய் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டேன் ராமலக்ஷ்மி. ஊருக்கு போய் இருந்தீர்களோ? கைவலி எப்படி இருக்கிறது?

    அந்த அம்மா, ஒரு சாதுவிடம் பசியாறும் அளவு உணவு வேண்டுமா பிரசாதம் போல் உணவு வேண்டுமா என்று கேட்டு கொடுக்கிறார்கள். பணி செய்யும் போது அதை ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும். அதை அங்குள்ள இருவருமே நன்கு செய்கிறார்கள் ராமலக்ஷ்மி.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  32. உண்மைதான். கார்த்திகேயன் அவர்களது அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது.

    கைவலி முழுமையாகக் குணமாகவில்லை. குறைந்த நேரமே கணினிப் பக்கம் வருகிறேன். இன்னும் ஓரிரு வாரங்களில் சரியாகிவிடுமென நம்புகிறேன். நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  33. அன்னதானம் நல்ல செயல்.
    படங்கள் அற்புதம், கதைகள் கட்டு என்றுத் தோன்றினாலும் :)

    பதிலளிநீக்கு
  34. இருந்த இடத்தில் இருந்து நல்ல தரிசனம் செய்தோம். விளக்கம் அருமை. படங்களும் தெளிவு தந்தது.இனிய வாழ்த்து.மிக்க நன்றி.
    ,வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  35. புதுத்தகவல்கள்! படங்களும் விளக்கங்களும் அருமை!

    அமைதியான இடமாத் தெரியுதே!!!!

    மனம் ஒருமைப்படணும்!

    பதிலளிநீக்கு
  36. பாபாஜி பற்றிய தகவல்களுக்கு நன்றிம்மா. அமைதியான இடமாக தெரிகிறது.

    //குறைஒன்றும் இல்லை லக்ஷ்மி அம்மாள் பற்றி ஏதாவது தெரியுமா உங்களுக்கு? அவர்களை பதிவுலகத்தில் கொஞ்சநாளாய் பார்க்க முடியவில்லையே!//

    இதையே தான் நானும் அமைதிச்சாரல் அவர்களிடம் மின்னஞ்சல் மூலமாக கேட்க நினைத்திருந்தேன்.

    லஷ்மிம்மாவை நெடுநாட்களாக காணவில்லை...

    பதிலளிநீக்கு
  37. வாங்க ராமலக்ஷ்மி.வாழ்க வளமுடன்.

    கைவலிக்கு பயிற்சிகள் செய்யுங்கள். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
    உங்கள் மறுவரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. வாங்க அப்பாதுரை, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வாங்க வேதா. இலங்கா திலகம், வாழ்கவளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வாங்க துளசி, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வாங்க ஆதி, வாழ்கவளமுடன்.நீங்கள் அமைதிச்சாரலிடம் லக்ஷ்மி அக்கா பற்றி மின்னஞ்சல் மூலம் கேட்டால் நானும் விசாரித்தாகச் சொல்லுங்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. பாபாஜி பற்றிய விரிவான செய்திகள்
    மிகவும் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  43. வாங்க புலவர் இராமாநுசம் ஐயா, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  44. லக்ஷ்மிம்மா ஒரு சின்ன ப்ரேக் எடுத்துட்டு இருக்காங்க. உறவினர்கள், விசேஷங்கள்ன்னு பிஸியோ பிஸி.

    சீக்கிரம் வருவாங்கன்னு எதிர்பார்ப்போம் :-)

    பதிலளிநீக்கு
  45. வாங்க அமைதிச்சாரல், வாழ்கவளமுடன்.
    நான் கேட்ட கேள்விக்கு விடை அளித்தமைக்கு மிகவும் நன்றி சாரல்.
    லக்ஷ்மி அக்கா நலமாய் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    வரட்டும் உறவுகளுடன் மகிழ்ந்து இன்னும் புத்துணர்வாய்.
    நன்றி அமைதிச்சாரல்.

    பதிலளிநீக்கு
  46. மிக அருமை..மிக்க நன்றி !!

    பதிலளிநீக்கு