ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

அபிராமி அன்னைக்கு ஓர் அழகிய அங்கி




திருக்கடவூர்த் தலச்சிறப்பு:
சிவபெருமானது அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாக திகழ்வது திருக்கடவூர். இப்போது திருக்கடையூர் என்கின்றனர். இக் கோவில் தருமபுர ஆதீனத்தை சேர்ந்த்து.  திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகி மூவரால் தேவாரம் பாடப்பட்ட சிறப்பு உடைய பாடல் பெற்ற ஸ்தலம்.பிஞ்சிலம்,(ஒருவகை முல்லைகொடி) ,வில்வமரம் ஆகியவற்றைத் தல விருட்சமாக கொண்டது. தேவர்களும்அசுரர்களும்  பாற்கடல் கடைந்த போது வினாயகரை வழிபடாத காரணத்தால் வினாயகர் இந்த தலத்தில் அமிர்தகுடத்தை மறைத்து வைத்துவிட்டாராம். அந்த அமிர்தகுடமே சிவலிங்கமான காரணத்தால் இங்குள்ள மூலவருக்கு அமிர்தம்+ கடம்= ”அமிர்தகடேஸ்வரர் ‘ என பெயர்.

அமிர்தகுடத்தை மறைத்தவிநாயகர் கள்ளவாரண பிள்ளையார் என்று
அழைக்கப்படுகிறார். இவர் மீது அபிராபி பட்டர் பாடல் பாடி இருக்கிறார்.

மஹாவிஷ்ணுவின் தியானத்தில் உண்டான சக்தியே அபிராமி அம்மை.

சிவபக்திக்காக தனது பக்தன் மார்க்கண்டனுக்கு என்றும் 16 வயது சிரஞ்சீவி வரம் அளித்து தனது இடது பாதத்தினால் எமனை உதைத்து சமஹ்காரம் செய்தார், பின்   பூமாதேவிக்காக எமனை அனுக்ரஹம் செய்த சிறப்பு ஸ்தலம்.

காலன் எமனை சம்ஹரித்த சிறப்பால், மிருத்யுஞ்ஜெயமூர்த்தியாக விளங்கும்இந்த சுவாமியை தன் 59 வயது பூர்த்தி 60 வயது ஆரம்பமான “உக்ரரத சாந்திக்கும் “60 வய்து பூர்த்தி 61 வயது ஆரம்பமான “சஷ்டியப்தபூர்த்தி” வைபவத்திற்கும் 69 வயது பூர்த்தி 70 வயது ஆரம்பமான “பீமரதசாந்தி” வைபவத்திற்கும் , 80 வயது  ஆரம்பமன “சதாபிஷேகம் “மற்றும் “ஆயிஷ்ய ஹோமம்”  ஜாதகரீதியான  மிருத்யுஞ்ஜெய ஹோமங்களுக்கு கலசங்களில் பூஜை செய்து ஹோமங்கள் செய்து  நலம் பெறுவது சிறப்புடையது.

சரபோஜி அரசர் காலத்தில் தனது பக்தனுக்கு தை அமாவாசை அன்று முழு
பெளர்ணமியாக்கி “அபிராமி அந்தாதி “ அருளச் செய்த சிறப்புடையது.
63 நாயன் மார்களில் குங்கிலிய நாயனார் காரிநாயனார் சிவத்தொண்டு ஆற்றி
அருள் பெற்ற ஸ்தலம்.

கார்த்திகை மாதத்தில்  வரும் (திங்கள்கிழமை) சோமவாரத்தில் 1008 சங்குகளால்  அபிஷேகம் நடைபெறுவது மிகச்சிறப்புடையது.

சித்திரை மாதம் மகநட்சத்திரத்தில் கால் சம்ஹார பெருவிழாவும், சித்ரா
பெளணமியில் தீர்த்த வைபவமும் இத் தலத்தில் நடைபெறும்.

ஒருமுறை சரபோஜி அரசர் கோவிலுக்கு வந்தாராம், அபிராமி அம்மனை தரிசிக்க. அப்போது அம்மன் கோவிலில் இருந்த அம்மன் மேல் மிக பிரியம் உள்ள அபிராமி பட்டர் என்பவர் இந்த உலகை மறந்து அம்மன் நினைவில் கண்மூடி இருந்தார். அப்போது ராஜா தான் வந்ததுகூட தெரியாமல் இப்படி இருக்கிறாரே என்று கோபப்பட அங்குள்ளவர்கள் அவர் அம்மன் நினைவில் தியானத்தில் இருக்கிறார் என்று சொல்ல, இன்று என்ன திதி என்று அரசர் கேட்க, அதற்கு அவர் மெய் மறந்த நிலையில் பெளர்ணமி என்று சொல்ல, அவர் இன்று அமாவாசை அல்லவா இவர் பெளர்ணமி என்கிறரே இன்று பெளர்ணமியைக் காட்டவில்லை என்றால்  தண்டனை என்ற போது அபிராமி பட்டர் தன்னை சொல்லவைத்தது  அன்னைதான் அவளே கதி என்று அபிராமி அந்தாதி பாட, தாய்  காட்சி கொடுத்து தன் காது தோட்டை எடுத்து வானத்தில் வீசி அமாவாசையை பெளர்ணமி ஆக்கினார் என்பது வரலாறு.




 தன் குழந்தைக்கு ஒரு கஷ்டம் என்றால் அன்னை இறங்கி வருவாள்
இல்லையா? வந்தாள்  அருளும் தந்தாள். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை  நாளன்று அனனை  அற்புதம் செய்த அந்த நாள் இங்கு கொண்டாடப்படுகிறது.

அன்னையின் நந்தவனம்


அன்னையின் நந்தவனம்


நேற்று. (09/02/2013) தை அமாவாசை ஆனதால் அந்த விழா அங்கு நடைபெற்றது. நேற்று மாலை நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.

அபிராமி சந்நிதியில் மலர் விதானம் அமைக்கும் பணி

அந்த விழாவில் 1000 குடத்திற்கு மேல் மக்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு
அபிஷேகம் செய்தார்கள். விளக்கு பூஜை நடந்தது. நவசக்தி அர்ச்சனை, இரவு
நடைபெறும் என்றார்கள். அம்மன் சன்னதியில் மலர் விதானம் அமைக்க பட்டது.நேற்று அற்புத காட்சியாக  அபிராமிஅம்மைக்கு  நவரத்தின அங்கி புதிதாக   செய்திருந்தார்கள். அம்மன் போன்ற உருவம் செய்து அதற்கு அந்த நவரத்தின  அங்கியை அணிவித்திருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
நவரத்தின அங்கி அலங்காரம்-புறப்படுமுன்


நவரத்தின அங்கியுடன் புறப்பாடு

கண்கொள்ளாக் காட்சி

திருவீதி உலா

பலகோடி ரூபாய் மதிப்புடையதானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு. அம்மனுக்குச் சாற்றுமுன் இத்திருவுருவத்தை திருக்கோயிலினுள்ளும் திருவீதிகளிலும் எழுந்தருளி திருஉலா செய்தனர். அதுவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆதீனகர்த்தர்கள்,பக்தர்கள் முன்னிலையில் அம்மனுக்கு அங்கி சார்த்தும் வைபவம் நடைபெற்றது.

வாழ்க வளமுடன்.


43 கருத்துகள்:

  1. ஒவ்வொரு பகிர்வுக்கும் பொருத்தமாக ஓவியம் வரைந்து கொடுக்கும் உங்களவருக்கு பாராட்டுகள்.

    நீங்கள் எடுக்கும் புகைப்ப்டங்களை விட இந்த ஓவியங்கள் சொல்லும் விஷயம் அதிகம்...

    சிறப்பான பகிர்வு. திருக்கடையூர் செல்ல வேண்டும்....

    பதிலளிநீக்கு

  2. என் அறுபதாம் ஆண்டு நிறைவை திருக்கடையூரில் கலியாணமாகக் கொண்டாடினோம். எங்கள் பேரன் பேத்திக்கு தாத்தா பாட்டி கல்யாணம் கண்ட மகிழ்ச்சி. அந்த நாள நினைவுகளைக் கிளறி விட்டது உங்கள் பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. தீருக்கடையூர் தலம்பற்றிய வரலாறுகள் தெரிந்துகொண்டோம்.

    பட்டர் நிலாவை வணங்கும் சித்திரம் அருமை.

    அம்பாளின் கொள்ளை அழகில் மயங்கிவிட்டோம்.

    மனம் குளிர்ந்த தர்சனம்.

    பதிலளிநீக்கு
  4. நேற்று. (09/02/2013) தை அமாவாசை ஆனதால் அந்த விழா அங்கு நடைபெற்றது. நேற்று மாலை நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.

    வாழ்த்துகள்..

    நவரத்ன அங்கி தரிசனம் கண்கொள்ளாக் காட்சியாக மனம் கவர்ந்தது ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. //அம்மன் போன்ற உருவம் செய்து அதற்கு அந்த நவரத்தின அங்கியை அணிவித்திருந்தார்கள். கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.//

    அந்தக்கண்கொள்ளாக்காட்சியை நானும் தங்களின் இந்தப்பதிவின் மூலம் காணும் பாக்யம் கிடைத்தது.

    அந்த அம்மன் அழகோ அழகாக உள்ளது.

    மனது சந்தோஷமாக உள்ளது.

    >>>>>>

    பதிலளிநீக்கு
  6. எல்லாப்படங்களும், விளக்கங்களும் அருமையோ அருமை.

    தங்கள் கணவர் வரைந்துள்ள படம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் படியாக மிக அழகாக வரையப்பட்டுள்ளது.

    ஒரு கோயிலின் இயற்கை சூழ்நிலையையும், வழிபாட்டு முறைகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

    அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  7. உங்களவர் வரைந்திருக்கும் ஓவியம் கதை முழுதும் சொல்லிவிட்டது.
    உங்கள்போடோக்கள் ,தகவல்கள் மூலம் அபிராமியின் நவரத்தின அங்கி தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

    நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள் .
    தொடருங்கள் ..

    பதிலளிநீக்கு
  8. நவரத்ன அங்கி தரிசனம் கண்கொள்ளாக் காட்சி..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  9. வாங்க வெங்கட், வாழ்கவளமுடன்.
    நீங்கள் சாரின் ஓவியத்தை பாராட்டியது சாருக்கு மகிழ்ச்சி.
    புகைப்படங்களை விட ஓவியம் சொல்லும் செய்தி நிறைய தான். முன்பு படம் பார்த்து கதை சொல் என்று சிறிய வயதில் படித்து இருக்கிறோம். அந்த பாணி எப்போதும் வரவேற்பு பெறும்.
    திருக்கடையூருக்கு வாருங்கள்.
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  10. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன். உங்கள் மணிவிழா இங்கு நடைபெற்றதா! மகிழ்ச்சி .
    பேரக்குழந்தைகள் தாத்தா, பாட்டி திருமணம் பார்ப்பது மகிழ்ச்சி தானே!
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
    ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.
    அம்பாளின் அழகில் மயங்கி விட்டீர்களா!
    தர்ஷனம் செய்ததில் மகிழ்ச்சி. .
    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  12. நந்தவனத்தைப்பார்க்க அழகாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  13. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.

    பதிவு போட்டவுடன் அன்னை உங்களை இங்கு அழைத்து வந்து விட்டாள் போலும்!

    வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    அம்மன் அழகை எல்லோரும் பார்க்க வேண்டும் என்றுதான் அவசரமாய் பதிவு போட்டேன்.

    கணவர் படத்தை ரசித்து பாராட்டிய விதமும் உங்கள் , வாழ்த்துக்களுக்கும் மிக மிக நன்றிகள் சார். (கணவரின் நன்றியும்)

    பதிலளிநீக்கு
  15. வாங்க ராஜி, வாழ்கவளமுடன்.

    கணவர் ஓவியத்தை பாராட்டியதற்கு வாழ்த்துக்கள்.
    பதிவை பாராட்டியதற்கும் நன்றி.
    தொடருகிறேன் ராஜி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.
    நந்தவன அழகை ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு


  18. தல வரலாறு அருமை...

    மிகவும் ரசித்தேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  19. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. அபிராமி அன்னயின் தரிசனம் ஆனந்தம்.தாங்கள் அடைந்த பெரும்பேற்றை எங்களுக்கும் பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி அம்மா. ஓவியங்கள் வெகு அழகு.

    பதிலளிநீக்கு
  21. திருக்கடவூர் பற்றிய மிகவும் சிறப்பான பதிவு.
    பதிவுக்கு பொருத்தமான சாருடைய ஓவியம் மிக அருமை.
    நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  22. வாங்க இந்திரா, வாழ்கவளமுடன்.
    நலமா இந்திரா?உங்கள் கணவர் நலமா? ஊரில் இல்லையா?
    இரண்டு மூன்று பதிவுகளில் உங்களை தேடினேன். ஓவியத்தை பாராட்டியதற்கு நன்றி.
    நான் கண்ட அன்னையின் அழகை நீங்களும் பார்க்க பகிர்ந்தேன் அதை கண்டு களித்தமைக்கு நன்றி இந்திரா.

    பதிலளிநீக்கு
  23. வாங்க ரமாரவி, வாழ்கவளமுடன்.

    தொடர்ந்து வருகை தந்து பதிவையும் ஓவியத்தையும் பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. விசாரிப்புக்கு மிகவும் நன்றி அம்மா. கணவரும் நலமே.உறவினர் திருமணம் நண்பர்கள் இல்லத்தில் சுப நிகழ்வுகள் விருந்தினர் வருகை என்று நேரமின்மையால் திருமதி பக்கங்கள் படிக்க இயலவில்லை. மிகவும்நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  25. வாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.

    என் விசாரிப்புக்கு வந்து பதில் சொன்னதற்கு மிகவும் மகிழ்ச்சி. எல்லோரும் நலமாய் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  26. அம்பாளின் நவரத்தின அங்கி சேவையையும் ,தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

    வழக்கம் போல் ஓவியம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  27. தகவல்களும் படங்களுமாக பகிர்வு மிக அருமை. முழுநிலாவுடன் சித்திரம் மிகச் சிறப்பு. அன்னையின் நந்தவனம் பார்த்ததும் ஸ்ரீராம் பரிசாக அனுப்பி வைத்த தூறல்கள் புத்தகத்தின் பின் அட்டைப்படம் நினைவுக்கு வருகிறது. இங்கேதான் எடுக்கப்பட்டதா என அவர்தான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  28. ஓவியங்களும் படங்களும் மனதைக் கவர்ந்தன. அம்மன் வீதி உலா சிறப்பு.

    பதிலளிநீக்கு
  29. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
    நேற்று கோவில் போய்விட்டதால் பின்னூட்டத்தை இன்று தான் பார்த்தேன்.
    சார் ஓவியம் நன்றாக இருக்கிறதா, மகிழ்ச்சி.
    ஸ்ரீராம் அவர்களிடம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.அன்னையின் நந்தவனம்பற்றி அவர் தான் சொல்லவேண்டும்.நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க சசிகலா,வாழ்கவளமுடன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.
    சாரின் ஓவியம் நன்றாக இருந்ததா வழக்கம் போல்! மகிழ்ச்சி. நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  32. திருக்கடவூரைப் பற்றி குமுதம் ஜோதிடம் ஏ.எம்.ஆர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். உங்கள் பதிவும் அதை நெருங்கிவிட்டது! அந்த ஓவியம் யார் வரைந்தது?

    பதிலளிநீக்கு
  33. வாங்க மதுரை அழகு, வாழ்க வளமுடன்.
    ஓவியம் என் கணவர் வரைந்தது.

    என் முந்தைய பதிவுகளில் அவர்கள் வரைந்து இருக்கிறார்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. அபிராமி அம்மாவைக் காண்பித்துக் கொடுத்ததற்கு
    மிகவும் நன்றி கோமதி. நேரம் இல்லாததால் இங்கே போகவில்லை.
    அந்தக் குறையைத் தீர்த்து வைத்தீர்கள்.
    நன்றி கோமதி. உங்களவர் வரையும் ஓவியங்கள் பதிவுக்கு அலங்காரம் செய்கின்றன.

    பதிலளிநீக்கு
  35. வாங்க அக்கா, வாழ்க வளமுடன்.
    அபிராமி அம்மன் தரிசனம் கிடைத்ததா! மகிழ்ச்சி.

    என் கணவர் ஓவியத்தை பாராட்டியதற்கு மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  36. படங்கள் வெகு சிறப்பு.

    சோழ நாட்டுக் கோயில்களின் நந்தவன அழகே அழகு தான்!

    பத்து ஆண்டுகளுக்கு முன் எங்களது சஷ்டியப்த பூர்த்தியும் திருக்கடையூர் கோயில் அம்மன் சன்னதியில் நிறைவாக நிகழ்வுற்ற பேரு பெற்றோம்.

    'குமுதம் ஜங்ஷன்' இதழில் அது பற்றிய கட்டுரை எங்கள் புகைப்படங்களுடன் வெளியாகியிருந் தன.

    தங்கள் கட்டுரை நிறைவாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  37. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் சஷ்டியப்த பூர்த்தி திருக்கடையூர் அம்மன் சன்னதியில் நடந்தது அறிந்து மகிழ்ச்சி.
    உங்கள் திருமண புகைபடங்களுடன் கட்டுரை குழுதம் ஜங்ஷன் இதழில் வந்தது மகிழ்ச்சி.
    என் கட்டுரை நிறைவாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  38. இரண்டு மூன்று முறை திருக்கடையூர் சென்று வந்த நினைவுகளை மீட்(டு)டிஎடுத்தது பதிவு.

    பதிலளிநீக்கு
  39. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    //அன்னையின் நந்தவனம் பார்த்ததும் ஸ்ரீராம் பரிசாக அனுப்பி வைத்த தூறல்கள் புத்தகத்தின் பின் அட்டைப்படம் நினைவுக்கு வருகிறது. இங்கேதான் எடுக்கப்பட்டதா என அவர்தான் சொல்ல வேண்டும்.//
    என்று ராமல்க்ஷ்மி உங்களுக்கு ஒரு கேள்வி வைத்து இருந்தார்கள் பின்னூட்டத்தில்.

    நீங்கள் தான் சொல்லவேண்டும்.
    //நினைவுகளை மீட்(டு)டிஎடுத்தது பதிவு.//

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  40. //ன்னையின் நந்தவனம் பார்த்ததும் ஸ்ரீராம் பரிசாக அனுப்பி வைத்த தூறல்கள் புத்தகத்தின் பின் அட்டைப்படம் நினைவுக்கு வருகிறது. இங்கேதான் எடுக்கப்பட்டதா என அவர்தான் சொல்ல வேண்டும். //

    ஆமாம். ஆமாம்.

    ராமலக்ஷ்மியின் பின்னூட்டம் படிக்கத் தவறியிருக்கிறேன்! இல்லா விட்டால் முன்னதாகவே ஆமாம் என்று சொல்லியிருப்பேன்! :))

    அவரின் நினைவாற்றலுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  41. வாங்க ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
    ராமல்க்ஷ்மி ஊரில் இல்லை போலும் அதனல் பதிவில் காணவில்லை. வந்தவுடன் உங்கள் பீன்னூடம் பற்றி சொல்கிறேன்.
    உடன் வந்து நந்தவனம்(படம் அங்குதான் எடுக்கபட்டது) அது தான் என்று சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  42. நன்றி ஸ்ரீராம்:).

    ஆம், இரண்டு தினங்கள் ஊரில் இருக்கவில்லை. பதில் பெற்றுத் தந்ததற்கு நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  43. ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் நினைவாற்றலை புகழ்ந்து இருக்கிறார் ஸ்ரீராம், அதை தெரிவிக்கவே உங்களுக்கு தகவல் சொன்னேன்.

    பதிலளிநீக்கு