Wednesday, February 6, 2013

வாழ்க்கைப் பயணம்

இன்னாருக்கு இன்னார் என எழுதி வைத்தானே தேவன் அன்று என்று சொல்வார்கள்.  திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்பார்கள்.
இவளுக்கு என்று ஒருவன் பிறக்காமலா இருப்பான் என்பார்கள், யாருக்கு மாப்பிள்ளை யாரோ அவர் எங்கே பிறந்து இருக்கிறாரோ என்பார்கள்.

சமீபத்தில் ஒரு இல்லத்தில் நடந்த திருமணவிழாவில் ஒரு புத்தகத்தை திருமணத்திற்கு  போனவர்களுக்கு தாம்பூல பையில் போட்டுக் கொடுத்தார்கள்.

என். பாலச்சந்திரசிவாச்சாரியார் என்பவர் தன் அன்பு மகள் இந்திரா பிரியதர்ஷினியின் திருமணத்தின் போது  இதை வெளியிட்டு எல்லோருக்கும் கொடுத்தார். புத்தகம் வேதகாலம் முதல், தற்காலம் வரை உள்ள திருமணங்களை ஆய்வு செய்து இனிய இல்லறம் என்று தலைப்பிட்டு இல்லறத்தின் மேன்மையை பல கட்டுரைகளாகச் சொல்கிறது.  எல்லா  மத திருமணங்களும், சடங்கு முறைகளும்,  எல்லாபிரிவு திருமணங்களும் இந்த புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது.


1.வேதம் சொல்லும் திருமணம் -- தி.ஸா.ஷண்முக சிவாசார்யர்
2. தமிழகத்தின் திருமணச்சடங்குகள் ---- பூசை. ச. அருணவசந்தன்
3.  தமிழர் திருமணம் -- புலவர் ஷேக் அலாவுதீன்
4. சமண பெளத்தத் திருமணங்கள் ----- புலவர் கோ. தட்சிணாமூர்த்தி
5. கிறிஸ்தவத் திருமணம் ------ பேரா. டாகடர். மு. ஆல்டெபனஸ் நதானியேல்
6. இஸ்லாமிய மணக் கோட்பாடுகள் ------- அ.ஹொலால் முஸ்தபா
7. இந்திய இல்லற்ச்சட்டவிதிகள் ------- இந்திராணி செல்வகுமார்

                             இல்லறம் நல்லறமாக

1. இல்லறம் சிறக்கத்  தியானம் செய்!--------- Dr. விஜயலட்சுமி பந்தையன்
2, எவருக்கு எவர் துணை?----- தமிழ்வாணன்
3. தாம்பத்திய தந்திரங்கள் ------  லேனா தமிழ்வாணன்
4. மனநலமும் ,தேகபலமும் ---- குருபர தேசிக வைத்தியர்
5. காலநிலை மாற்றமும் , கவனிக்கவேண்டிய பிரச்சினைகளும் --- தேன்தமிழ்
6. இல்லறத்தில் ஆன்மீகம் === புலவர் தில்லை. கலைமணி
7. திரைப்படங்களில் இல்லறக் கண்ணோட்டம் --- வீ. நா. பகவத்சிங்
8. குடும்பம் ஒரு கோயில் --- தமிழ்ப் பொறியாளன்
9,  இல்லறத்தில்மூவர் சாதித்த இனிய நல்லறங்கள் === கா. விஜயராகவன்
10. இல்லறத்தில் காதல் ---- கிருத்திகா.
 இவ்வளவு பேர் எழுதியதை தொகுத்தது தான் இந்த புத்தகம்.

’இனிய இல்லறம்’   புத்தகம் பெயர்.
தொகுப்பாசிரியர் பெயர் தேன்தமிழ், M.A. M.Phil.,
பதிப்பாசிரியர்  லேனா தமிழ்வாணன் , M.A., (Dip.in.journalisam)
மணிமேகலைப் பிரசுரம்.
இலவசமாக வெளியிட்டதால் விலை போடவில்லை.

புத்தகத்தில் படித்ததில் சில  பகுதி :

//நாம் ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு செல்வதானால் நாம் பயணம் செய்ய வேண்டிய நாள், நேரம் பயணிக்கும் வழி, எதில் பயணம் செய்கிறோம் போன்றவற்றை அறிந்தே புறப்படுகிறோம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் குறை இருந்தால் கூட நாம் பயணிக்க மாட்டோம். திருமணம் ஒரு மிகப்பெரிய வாழ்க்கைப் பயணம். அதனால் இந்நிகழ்வுக்கு அபரிமிதமான தெய்வபலமும், நன்னெறிகளும்  தம்பதிகளுக்கு மிக அவசியம். திருமணம் என்பதை விவாஹம் எனக்கூறுவர்.  ’வஹ்’ எனில் தாங்குதல், தெரியப்படுத்துதல், ப்ரயாணம் செய்தல் என்று பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.’வி’என்னும் எழுத்தை முன்னர் சேர்த்தோமானால் “விவாஹகம்” அதாவது நன்றாக தாங்குதல், நன்றாக பயணித்தல் என்று பொருட்படும். ஆம் இல்வாழ்க்கை சுகம் துக்கம் இரண்டும் கொண்டது. இதைக் கடப்பதற்கு நமக்கு ஒரு நல்ல துணையை நமக்கு அமைத்துக் கொடுக்கும் நிகழ்வே , நல்வாழ்க்கை எனும் பயணத்தின் முதல் அடியே திருமணம். இதையே பெரியோர்கள் “இல்லறமே நல்லறம் எனக்கூறினர்.

புது மணத் தம்பதியருக்கு ;  வாழ்வின் ஒவ்வொரு அடியையும் வாழ்க்கை துணையோடு நிதானத்தோடும் , நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் அடியெடுத்து வையுங்கள். இல்லற வாழ்க்கை தேனாக இனிக்கும்.

உணர்வுகளின் பரிமாற்றமும், புரிதலும், விட்டுக் கொடுத்தலும் கொண்ட காதல் இல்லறம் என்றும் வளம் பெறும் ,இனிய இல்லறம் என்றும் சிறக்கும்.

இளமை சக்தி மிக்கது. முதுமை அனுபவச் சாட்டையை கையில் பிடித்திருப்பது ,இரண்டும் அதனதன் பணியை சரியாக செய்தால் குடும்பத்தேர் உல்லாச வலம் வரும்.

வாழ்வு என்ற வண்டிக்கு இருவரும் சக்கரங்கள். அவற்றுள் எந்த சக்கரமாவது சரிவர ஓடவில்லை என்றால் வணடி ஓடாது! காதலிலும், கவர்ச்சியிலும் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து  சமபங்காளிகள் என்ற உணவர்வோடு குடும்ப வண்டியை உருளச் செய்ய வேண்டும்.
இருவரும் ஓருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் தன்மையில்தான் குடுமபம் நன்றாக நடைபெறும் விதம் அடங்கி இருக்கிறது.

விட்டுக் கொடுத்தலும், பகிர்தலும், அன்பின் எல்லையற்ற அரவணைப்பும் தம்பத்தியமும் சங்கமிப்பது தான் இல்லறம்.

அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்து அற்று.//


இப்போது இதை ஏன் சொல்கிறீர்கள் என்கிறீர்களா?

எங்களுக்கு நாளை (07/02/2013) திருமண நாள். திருமண வாழ்வின்  40 வது ஆண்டு நிறைவடைகிறது.


                                                மலரும் நினைவுகள் - படங்கள் 40 ஆண்டு அனுபவத்தில் ஏற்பட்ட அனுபவங்களை சொல்லாமல் வேறு புத்தகத்திலிருந்து அனுபவம் சொல்கிறீர்கள்-  உங்கள் அனுபவம் என்ன? என்று கேட்பவர்களுக்கு :நாங்கள் இன்றும் குழந்தைகள் போல் சண்டையிட்டுக் கொள்வோம். பின் குழந்தைகள் போல் சமாதானம் ஆகி விடுவோம். கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம், அவர் வெளியில் கோபப்படாத நல்ல பண்பாளர், புன்னகை ததும்பும் முகத்தினர். நானும் அப்படித்தான்.   கருத்து வேற்றுமைகளை உடனுக்கு உடன் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.  எங்களுக்கு ஏற்படும் கருத்து வேற்றுமை கேட்டால் சிரிப்பு வரும். காய்கறி  நன்றாக இல்லை, பார்த்து வாங்க தெரியவில்லை  என்றும் பொருட்களை எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கவில்லை அது இது என்று தான். உறவினர் வீட்டு திருமணம், விசேஷங்களுக்கு (நல்லது கெட்டதுகளுக்கு) விடுமுறை இல்லை என்று பல்லவி பாடுவது அப்படி போனாலும காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டது போல் ஓடி வருவது  அதுதான் எனக்குப் பிடிக்காதது, அவர்களிடம். அப்போது நேரமில்லை ஓய்வு பெற்ற பின்னாவது ஆற அமர போய் வரலாம் என்றால் இப்போதும் வேலையில் சேர்ந்து கொண்டு விடுமுறை இல்லை என்பது தான்., என்ன செய்வது! பள்ளிக் குழந்தைகள் போல் விடுமுறையை எதிர்பார்த்து காத்து இருந்து எங்கும் போக வேண்டும்.

காலம் ஓடுகிறது. நாங்களும் அதனுடன் ஓடுகிறோம். கடவுள் துணையோடும், பெரியவர்களின் ஆசிகளோடும்.

எல்லோரும் நலமாக வாழ்க்கைத்துணையோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.58 comments:

ஸாதிகா said...

இனிய நாற்பதாவது மணநாள் வாழ்த்துக்கள்.இன்னும் பல்லாண்டு பல்லாண்டு சீருடனும் சிறப்புடனும் சரீர நலத்துடனும்,உடல் பலத்துடன்,செல்வ வளத்துடனும்,சிறப்புடன் வாழ வாழ்த்துகள்.அன்றைய புகைப்படங்கள்,திருமண பத்திரிக்கை அனைத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி.இன்னாளைய புகைப்படத்தயும் காண ஆவல்.

வாழ்கவளமுடன்.

தருமி said...

நொடியில் ஓடிப்போன 40 வருடங்கள் போல் இன்னும் பலப்பல நொடிகள் இணைந்து நலம் காண வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

ஆஹா... 40 வருஷங்களா... மனமார்ந்த வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.

அப்புறம், சண்டைக்கான காரணங்கள் - சேம் ப்ளட்!! ஆண்கள் எல்லாருமே எப்பவுமே இப்படித்தானோ!! :-)))))

கோபிநாத் said...

மனமார்ந்த வணக்கங்கள் அம்மா & அப்பா ;))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எங்களுக்கு நாளை (07/02/2013) திருமண நாள். திருமண வாழ்வின் 40 வது ஆண்டு நிறைவடைகிறது.//

மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

>>>>>
வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாங்கள் இன்றும் குழந்தைகள் போல் சண்டையிட்டுக் கொள்வோம். பின் குழந்தைகள் போல் சமாதானம் ஆகி விடுவோம். கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம்.//

சரியாகச்சொன்னீர்கள். நமக்கு வேண்டியவர்களிடம் மட்டுமே நாம் கோபப்பட முடியும். கோபம் உள்ள இடத்தில் தான் குணமும் இருக்கும்.

//அவர் வெளியில் கோபப்படாத நல்ல பண்பாளர், புன்னகை ததும்பும் முகத்தினர். நானும் அப்படித்தான்.//

சபாஷ்! அப்படித்தான் இருக்க வேண்டும்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//காலம் ஓடுகிறது. நாங்களும் அதனுடன் ஓடுகிறோம். கடவுள் துணையோடும், பெரியவர்களின் ஆசிகளோடும்.

எல்லோரும் நலமாக வாழ்க்கைத்துணையோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்//

கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.

மேலும் பல்லாண்டு பல்லாண்டு இதே பாசத்துடன் வாழவும், அவர் படங்கள் வரைந்துதர தாங்கள் பதிவிட்டு அசத்தவும் அந்த ஆண்டவன் அருள் புரியட்டும்.

காட்டியுள்ள புகைப்படங்கள், தங்கள் கணவர் வரைந்துள்ள் ஓவியமும் நன்றாக உள்ளன.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிப்ரவரி 7 என்பது எனக்கும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாள் ஆகும்.

நான் பிறந்த தேதி டிஸம்பர் 8 என்றாலும், என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது, வாத்யாராகப் பார்த்து என் பிறந்த நாளை பிப்ரவரி ஏழு என நிர்ணயித்து விட்டார்.

அதனால் என் Official Date of Birth 7th February என ஆகி விட்டது.

அதன்படி நான் 10 மாதங்கள் முன்பாகவே பணிஓய்வு பெற நேரிட்டது.

சுமார் 7-8 லட்சங்கள் எனக்கு இதனால் இழப்பாகியும் விட்டது.

என்ன செய்வது? அப்போதெல்லாம் பள்ளியில் சேர்க்கையில் BIRTH CERTIFICATE எல்லாம் கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

இதைப்பற்றி என் பதிவினில் கூட மிகவும் நகைச்சுவையாக நான் எழுதியிருக்கிறேன்.

http://gopu1949.blogspot.in/2012/03/1.html

saba said...

"கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம்"

வாழ்த்த வயதில்லை ஆகையால் இந்த நன்னாளில் உங்கள் ஆசிகளை எங்களுக்கு தாருங்கள் ....

rajalakshmi paramasivam said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
Many many happy returns

அன்புடன்
ராஜி

கவியாழி கண்ணதாசன் said...

பெருமைகொள்ளும் விஷயமாக இந்த நாற்பதாவது திருமண நாளை கொண்டாடுங்கள் .இந்த கால தம்பதியினர் உங்களை பார்த்தாவது இல்லறத்தின் அருமையையும் அவசியத்தையும் புரிந்து கொள்ளட்டும். முடிந்தால் எல்லா நண்பர்களையும் அழைத்து நீங்கள் பெருமைகொள்வதைவிட திருமணமும் வாழ்கையும் பற்றி எடுத்துச் சொல்லவாவது சிறப்பாக கொண்டாடுங்கள்.
40வத் திருமணநாள் வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள். பழைய புகைப் படங்கள் அழகு. கூட அரசு சார் வரைந்த படமும். சின்னச் சண்டைகளும் சமாதானங்களும் இல்லா விட்டால் ருசி இருக்காது. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

கோமதி அரசு said...

வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.
உங்கள் முதல் வருகைக்கும், மனம் நிறைந்த வாழ்த்துக்கும் மிக மிக நன்றி.
எங்கள் இப்போதைய புகை படங்கள் அடிக்கடி போடுகிறேனே! அதனல் போட வில்லை. போன பதிவில் ரதத்தில் அமர்ந்த படம் போட்டு இருக்கிறேன்.
’எங்கள் குலதெய்வம்’ பதிவில் எங்கள் புகைப்படம் போட்டு இருக்கிறேன்.
இன்னொரு பதிவில் உங்கள் ஆசை பூர்த்தி செய்யப்படும் ஸாதிகா.
வாழ்க வளமுடன் என்று நீங்கள் நிறைவு செய்து இருப்பது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.

கோமதி அரசு said...

வாங்க தருமி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வாக்கு போல் காலங்கள் நொடியில் ஓடட்டும்.
உங்கள் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
அப்புறம், சண்டைக்கான காரணங்கள் - சேம் ப்ளட்!! ஆண்கள் எல்லாருமே எப்பவுமே இப்படித்தானோ!! :-)))))//

ஆஹா , அங்கும் அப்படித்தானா?

உங்கள் வாழ்த்துக்கும், பிராத்தனைகளுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கோபிநாத், வாழ்க வளமுடன்.உங்கள் வணக்கத்திற்கு நன்றி. உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் கோபி.

கோமதி அரசு said...

வாங்க வி. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

உங்கள் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களுக்கு முதலில் நன்றி.

//சரியாகச்சொன்னீர்கள். நமக்கு வேண்டியவர்களிடம் மட்டுமே நாம் கோபப்பட முடியும். கோபம் உள்ள இடத்தில் தான் குணமும் இருக்கும்.//


நீங்கள் சொல்வது உண்மை. கோபப்பட்ட நேரத்தை கணப் பொழுதில் மறந்து விடுவார்கள்.

//மேலும் பல்லாண்டு பல்லாண்டு இதே பாசத்துடன் வாழவும், அவர் படங்கள் வரைந்துதர தாங்கள் பதிவிட்டு அசத்தவும் அந்த ஆண்டவன் அருள் புரியட்டும்.//
உங்கள் அழகான வாழ்த்துக்கு,
என் கணவரும் உங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்.

அதன்படி நான் 10 மாதங்கள் முன்பாகவே பணிஓய்வு பெற நேரிட்டது.

பிப்ரவரி 7 என்பது எனக்கும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாள் ஆகும்.

//நான் பிறந்த தேதி டிஸம்பர் 8 என்றாலும், என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது, வாத்யாராகப் பார்த்து என் பிறந்த நாளை பிப்ரவரி ஏழு என நிர்ணயித்து விட்டார்.

//சுமார் 7-8 லட்சங்கள் எனக்கு இதனால் இழப்பாகியும் விட்டது.//

மறக்க முடியாத நாளாய் பிப்ரவரி ஏழு இருப்பது மகிழ்ச்சி.
7,8 லட்சங்கள் அதனால் நஷ்டம் என்று தெரிகிற போது கஷ்டமாய் தான் இருக்கிறது.

நான்கு பின்னூட்டங்கள் போட்டு உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி சார்.


கோமதி அரசு said...

வாங்க சபா, வாழ்க வளமுடன்.
நமக்கு மிகவும் வேண்டியவர்கள் நம் நலனில் அக்கறை உள்ளவ்ர்கள் மேல் தான் நமக்கு கோபம் வரும்.
வாழ்த்த வயது தேவை இல்லை யார் வேண்டும் என்றாலும் வாழ்த்தலாம்.
எங்கள் ஆசிகள் உங்களுக்கு. வாழ்கவளமுடன்.

கோமதி அரசு said...

வாங்க ராஜி, வாழ்க வளமுடன்.
உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கவியாழி கண்ணதாசன், மிக சிறிய வயதில் எங்களுக்கு திருமணம் நடந்ததால் 40 வருடங்கள் என்பது ஒரு கணக்கீடு ஆகி விட்டது.

இப்போது உள்ள குழந்தைகள் வாழ்க்கையில் செட்டில் ஆன பின் தான் திருமணம் என்று இருக்கிறார்கள்.
வீடு, கார் வாழ்க்கை தேவைகள் நிறைவு பெற்ற பின் தான் திருமணம் எனும் போது அதில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது.
முன்பு பெரியோர்கள் தகுந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். காலம் மாறுகிறது.
எங்கள் மகிழ்வை உங்கள் எல்லோருடனும் அறிவித்து கொண்டாடுகிறேனே!
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பழைய படங்களையும், சார் வரைந்த படத்தையும் ரசித்தமைக்கு நன்றி.
//சின்னச் சண்டைகளும் சமாதானங்களும் இல்லா விட்டால் ருசி இருக்காது. //

நீங்கள் சொல்வது உண்மை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துகள் அம்மா.....
RAMVI said...

மிகவும் நல்ல புத்தக அறிமுகம்.

//கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம், //

மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க மேடம்.

தங்களுக்கும் ,சாருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிக்கும் அவரது இனிய மறு பாதிக்கும் எங்கள் மனமார்ந்த திருமணநாள்
வாழ்த்துகள். இதே இனிமையும் பொறுமையும் என்றும் நிலைத்திருக்கவேண்டும் நல்லவர்கள் செழிக்க நாடு செழிக்கும். அதுபோல நல்ல
தம்பதிகளின் வாழ்க்கைப் பயணம் மற்றவர்க்கு எடுத்துக் காட்டாக அமையும்.
அன்பு தங்கச்சிக்கு மிக அன்பான வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

வாங்க வெங்கட் , வாழ்கவளமுடன்.

உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ரமாரவி, வாழ்க வளமுடன்.
புத்தகம் நன்றாக இருக்கா, நன்றி
கோபத்தை கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடம் தானே காட்ட முடியும்.


உங்கள் நல் வாழ்த்துக்களை சாரிடம் தெரிவித்து விட்டேன்.
எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க சொன்னார்கள்.

கோமதி அரசு said...

அன்பு வல்லி அக்கா வாங்க, வாழ்க வளமுடன்.

உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
என்னவரும் உங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்.
அன்புமயமான அக்காவின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

மதுரை அழகு said...

திருமண நிகழ்ச்சிகளில் புத்தகம் கொடுப்பது நல்ல பழக்கம்!

கோமதி அரசு said...

வாங்க மதுரை அழகு, வாழ்க வளமுடன்.
உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

G.M Balasubramaniam said...


திருமணத்தில் இரு மனம் இணைவது அவசியம். அந்தக் காலத்திலேயே காதலித்துக் கைப் பிடித்த மனைவியுடன் கைகோர்த்து வாழ்க்கைப் பயணத்தில் 48 ஆண்டுகள் கடந்து விட்டவன் நான். ஒரு காலத்தில் என் பேச்சுக்குக் கட்டுப் பட்டு என்னைத் தொடர்ந்தவள் இப்போது எனக்குத் தாயாகி நிற்கிறாள். உங்கள் பதிவு என்னையும் எங்கள் மண வாழ்க்கையை அசை போட வைக்கிறது. நான் என் மனைவிக்காக ஒரு அந்தாதிப் பாடலை “ பாவைக்கு ஒரு பாமாலை “ என்று எழுதி சமர்ப்பித்து இருக்கிறேன். படித்துப் பாருங்கள் . ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு . வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளில் தான் சந்தோசமே அடங்கி உள்ளது... இல்லையென்றால் வாழ்வில் சுவாரஸ்யம் ஏது...?

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...

கோமதி அரசு said...

வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழக வளமுடன்.
நீங்கள் சொல்வது சரி இரு மனம் இணைய வேண்டும் அது தான் மிக மிக முக்கியம் திருமண வாழ்வில்.

வயது ஆக ஆக மனைவி கணவனுக்கு தாய் தான்.
முன்பே தாய் போல் தான் கவனித்துக் கொள்வார்கள். பின் இன்னும் கவனிப்பு அதிகம் தான் ஆகும். உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.
பாவைக்கு பாமாலை படித்து இருக்கிறேன். மறுபடியும் படிக்கிறேன் சார்.
நன்றி. வணக்கம்.

ஜீவி said...

எனக்கானால் இன்று ஒரே ஆச்சரியம்.

நேற்று வந்த தபால், பெட்டியில் கிடந்தது. இன்று காலை தான் பார்த்தேன். பார்த்தால் உறவுக்காரர் வீட்டுத் திருமணப் பத்திரிகை.

சற்று முன் தான் எங்கள் குடியிருப்பு இல்லத்தார் வந்து அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்து அழைத்துவிட்டுப் போனார்கள்.

கணினியைத் திறந்தால், உங்கள்
திருமணத் திருநாளின் நாற்பதாண்டு நிறைவு நாளின் பூரிப்பைக் காணமுடிந்தது. கறுப்பு வெள்ளை படங்களுக்கே அலாதியான ஒரு களை உண்டு. அந்த அழகில் புகைப்படங்களும் பேசின.

நல்ல மனங்களுக்கு கடவுள் துணையும் பெரியவர்களின் ஆசியும் என்றும் உண்டு.

அரசு சாருக்கும் கோமதியம்மாவுக்கும் எங்கள் குடும்பத்தினரின் அன்பு
வாழ்த்துக்கள்.

சுற்றம் புடைசூழ வாழ்க வளமுடன், நீவிர் பல்லாண்டு; பல்லாண்டு!

பி.கு: அந்த வரைபடம் சார் வரைந்ததா?.. அழகோ, அழகு!
வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

வாங்க திண்டுக்கல் தனபாலன் , வாழ்க வளமுடன்.
//
சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளில் தான் சந்தோசமே அடங்கி உள்ளது... இல்லையென்றால் வாழ்வில் சுவாரஸ்யம் ஏது...?//

நீங்கள் சொல்வது உண்மை தான்.
உங்கள் வரவுக்கும், நல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.

இரண்டு மூன்று பதிவுகளில் உங்கள் பின்னூட்டங்களை பார்க்க முடியவில்லை.
கதை எழுதுவதில் முழு கவனமும் செலுத்தி விட்டீர்கள் போலும்.

//நேற்று வந்த தபால், பெட்டியில் கிடந்தது. இன்று காலை தான் பார்த்தேன். பார்த்தால் உறவுக்காரர் வீட்டுத் திருமணப் பத்திரிகை.

சற்று முன் தான் எங்கள் குடியிருப்பு இல்லத்தார் வந்து அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு பத்திரிகை கொடுத்து அழைத்துவிட்டுப் போனார்கள்.//

தை பிறந்து விட்டால் திருமணங்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.

கணினியில் சார் வரைந்த ஓவியம் தான்.பொங்கல் பதிவிலிருந்து என் ஒவ்வொரு பதிவுக்கும் படம் வரைந்து தருகிறார்கள்.

//அரசு சாருக்கும் கோமதியம்மாவுக்கும் எங்கள் குடும்பத்தினரின் அன்பு
வாழ்த்துக்கள்.

சுற்றம் புடைசூழ வாழ்க வளமுடன், நீவிர் பல்லாண்டு; பல்லாண்டு!//

இந்த மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி சார் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் எங்களின் அன்பு கனிந்த நன்றிகள்.

sury Siva said...

நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் முடிந்த நாங்கள்
தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில்
பெருமை கொள்கிறோம்.

அது என்ன திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று
புதிர் போடுகின்றீர்கள் ?


எங்கள் திருமணம் மணப்பாறை ஒரு ஓட்டு வீட்டில் தானே நிச்சயிக்கப்பட்டது. !!சுப்பு தாத்தா.
மீனாட்சி பாட்டி.

s suresh said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! வணக்கங்கள்! விவாஹம் பற்றிய விளக்க பகிர்வு நிறைய கற்றுக் கொடுத்தது! நன்றி!

ராமலக்ஷ்மி said...

இனிய மணநாள் வாழ்த்துகள்:)! பொருத்தமான புத்தகத்தைப் பற்றிப் பகிர்ந்துள்ளீர்கள். மலரும் நினைவுகளைப் படங்களாக எங்களுடனும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கார்ட்டூன் வழக்கம் போல் அருமை. புகைப்படக்காரரும், பின்பக்கம் கைகளைக் கட்டிக் கொண்டு கவனிக்கும் சிறுவனும், நாணத்துடன் நிற்கும் மணப்பெண்ணும், சோபா பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும் சிறுமியும் தத்ரூபம்:)!

மாதேவி said...

இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.

பல்லாண்டுகள் மகிழ்வுடனும், நலத்துடனும் வாழ வாழ்த்துகின்றேன்.

நல்லதோர் புத்தகத்தையும் அறியத் தந்துள்ளீர்கள்.

rajalakshmi paramasivam said...

புத்தகம் வாங்கிப் படிக்கத் தோன்றுகிறது.
சுவாரஸ்யமாக இருக்கும் போல் தெரிகிறது.
உங்கள் இளமைக்கால போட்டோ மிகவும் அழகு.
நாற்பதாவது திருமணநாளைக் கொண்டாடும் தம்பதிக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கல்.உங்கள் பதிவு மிகவும் உபயோகமானது ,இக்கால இளைஞர்களுக்கு படிக்க வேண்டிய பதிவு.

கோமதி அரசு said...

வாங்க சூரி சார், உங்கள் இருவர் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.
நீங்கள் வந்து வாழ்த்தியது மீனாட்சி சுந்தரேஸ்வரர் வந்து வாழ்த்தியது போல்.

//எங்கள் திருமணம் மணப்பாறை ஒரு ஓட்டு வீட்டில் தானே நிச்சயிக்கப்பட்டது. !!//

உங்கள் நகைச்சுவை உணர்வை மிகவும் ரசித்தோம்.

என் கணவரும் உங்கள் இருவருக்கும் தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்.

கோமதி அரசு said...

வாங்க சுரேஷ் , வாழகவளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

சுரேஷ், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ராமலக்ஷ்மி. வாழ்க வளமுடன். புத்தகம், படங்கள் நன்றாக இருக்கா மகிழ்ச்சி.

சார் படத்தை சரியாக நன்கு கவனித்து கருத்துக்கள் சொன்னது சாருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
அவர்களுக்கு கார்ட்டூன் வரைய ஆர்வம் மேலும் வளர்கிறது உங்கள் கருத்தால்.
நன்றி ராமலக்ஷ்மி.

கோமதி அரசு said...

வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
புத்தகம் உங்களுக்கு பிடித்து இருப்பதில் மகிழ்ச்சி.

கோமதி அரசு said...

வாங்க ராஜி , வாழ்கவளமுடன்.மறுமுறை வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.
புத்தகம் மணிமேகலைப் பிரசுரத்தில் கேட்டால் கிடைக்கும்.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி ராஜி.

கோவை2தில்லி said...

மனமார்ந்த வாழ்த்துகள் அம்மா. புகைப்படங்கள் அழகோ அழகு...

ஐயாவின் வரைபடம் பிரமாதம். சொல்லி விடுங்கள்...

Ranjani Narayanan said...

கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் நீங்கள் இருவரும் ரொம்ப அழகா இருக்கிறீர்கள்.

இன்றைக்குப் போல என்றைக்கும், சண்டையும், சச்சரவுமாக, அதையெல்லாம் குழந்தைகளைப் போலவே தீர்த்துக் கொண்டு பல பல ஆண்டுகள் வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்க வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

வாங்க ஆதி , வாழ்க வளமுடன். புகைபடம் அழகாய் இருக்கா! வாழ்த்துக்கு நன்றி, மகிழ்ச்சி.
சாரிடம் சொல்லிவிட்டேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ஆதி.

கோமதி அரசு said...

வாங்க ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
புகைபடம் நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு மகிழ்ச்சி.
வாழ்த்து மிகவும் சூப்பர். அதற்கு நன்றி.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ரஞ்சனி.

இராஜராஜேஸ்வரி said...

நாற்பதாவது திருமணநாளைக் கொண்டாடும் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

Thekkikattan|தெகா said...

வணங்கிக்கொள்கிறேன். இது போன்ற சிறு சிறு சச்சரவுகளும் ஒரு விதமான உரையாடலாகத்தான் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது ... :)

பகிர்விற்கு மிக்க நன்றி! கார்டூன் எப்பொழுதும் போல மிக சிறப்பாக இருக்கிறது அந்த வாழை இலையும், புகைப்படக்காரரிலும் அதிக நுட்ப அவதானிப்பு தெரிக்கிறது. :)

கோமதி அரசு said...

வாங்க தெகா, வாழ்க வளமுடன்.


இது போன்ற சிறு சிறு சச்சரவுகளும் ஒரு விதமான உரையாடலாகத்தான் என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது ... :)

நீங்கள் சொல்வது சரிதான். அதுவும் உரையாடல் தான்.

கோபம் தணிந்தபின் அன்று அப்படி சொன்னீர்களே, நீ இப்படி சொன்னாயே, என்று சச்சரவுகளுக்கு காரண காரியங்களை ஆராயும் விவாத மேடையாகும் உரையாடல்.
நீங்கள் எல்லோரும் கார்டூனை பாராட்ட ஆரம்பித்தவுடன் நுட்பங்கள் ,அவதானிப்புககள் அதிகமாகிறது.
கலைஞனுக்கு பாராட்டு தானே மேலும் தன் கலையை மெருகு படுத்த தூண்டும் தூண்டுகோல்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி தெகா.

கோமதி அரசு said...

வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

malar balan said...

//உங்கள் அனுபவம் என்ன? என்று கேட்பவர்களுக்கு :நாங்கள் இன்றும் குழந்தைகள் போல் சண்டையிட்டுக் கொள்வோம். பின் குழந்தைகள் போல் சமாதானம் ஆகி விடுவோம். கோபத்தை நமக்கு வேண்டியவர்களிடம் காட்டாமல் வேறு எங்கு காட்டுவதாம், //
ரொம்ப அருமை யான வரிகள் இந்த சுவரஸ்யம் இல்லாமல் வாழ்கை ருசிக் காது
நிறைவுடன் வாழ வாழ்த்துகள் பல

கோமதி அரசு said...

வாங்க மலர் பாலன், வாழ்கவளமுடன்.
உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

Jaleela Kamal said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
என்றும் உஙக்ள் வாழ்வில் இன்பம் பொங்கிட வாழ்த்துக்கள்
பிப்ரவரி ஏழாம் தேதியா 40 ஆண்டுகளா?
எனக்கும் பிப்ரவரி ஏழாம் தேதிதான்.
25 வது திருமண நாள்.
சின்ன சினன் சண்டைகள் ஹி இங்கும் தான்
அந்த காலத்து திருமண புகை படம் மிக அருமை.
உஙக்ள் கணவர் வரைந்தத்து அதை விட அருமை

கோமதி அரசு said...

வாங்க ஜலீலா, வாழ்கவளமுடன்.
உங்களுக்கும் பிப்ரவரி 7தான் திருமணநாளா!
வாழ்த்துக்கள். எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழுங்கள்.

சின்ன சின்ன சண்டைகள் அங்கும் அப்படித்தானா !

பழைய புகைப்படத்தை ரசித்தமைக்கும்,
என் கணவர் வரைந்த ஓவியத்தை பாராட்டியதற்கும் நன்றி ஜலீலா.