நான் சமையல் குறிப்பு எழுதியதே இல்லை. சமையல் அட்டகாசம் தளம் வைத்து வித விதமான சமையல் செய்து அசத்தும்
சகோதரி ஜலீலா அவர்கள் சமையல் போட்டி அறிவித்து ஒருமாதம் ஆகி விட்டது. என்னையும் அழைத்து இருந்தார்கள்
நான் ஊருக்கு போய் விட்டு வந்ததால் அவர்கள் அழைப்பை தாமதமாகத்தான் பார்த்தேன். நான் வலைச்சரத்தில் எனக்கு பிடித்த பதிவுகளை குறிப்பிடும் போது அவர்களுக்கு அவர்கள் சமையலை புகழ்ந்து சமையல் ராணி என்று பட்டம் கொடுத்தேன். அவர்கள் சமைப்பது போல் எல்லாம் என்னிடம் எதிர்பார்க்க மாட்டார்கள். நான் இப்போது அனுப்பி இருக்கும்
சமையல் குறிப்பை பார்த்து விட்டு இனி மேல் சமையல் குறிப்பு கேட்க மாட்டார்கள் என நினைக்கிறேன். முதலில் சமையல் குறிப்புக்கு அளவு சரியாக சொல்லத்தெரியவேண்டும். என் அம்மா கண் அளவு சொல்லிக் கொடுத்தார்கள் . என் மாமியார் டம்ளர் அளவு சொல்லிக் கொடுத்தார்கள். ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணீர். கலந்த சாதம் செய்யும் போது ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு.தண்ணீர் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.
முன்பெல்லாம் ஆண்களுக்கு சமைப்பது கஷ்டம் இப்போது எல்லாம் எளிதாக எல்லாம் கிடைக்கிறது. என் கணவர் கல்யாணம் ஆவதுக்கு முன் சமையல் செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள். கணேஷ் ராம் 777 என்ற திடீர் தயாரிப்புக்கள்
வாங்கி சமைப்பார்களாம், ஈகிள் சாம்பார் பொடி, புளியோதரை பொடி வாங்கி சமைத்து இருக்கிறார்களாம். அவர்கள் எல்லாம் நன்றாக சமைப்பார்கள் இருந்தாலும் திருமணம் ஆனவுடன் சமைப்பதையே விட்டு விட்டார்கள். நான் ஊருக்கு போனால் பெண், மகன் எல்லாம் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு செய்து கொடுத்தது இல்லை.
திருமணம் ஆகாத ஆண்கள் தாங்களே சமைத்துக் கொள்ள எளிதாக இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. சமைக்க வேண்டும் நினைக்கும் ஆண்கள் எப்படியும் சாதம் குக்கரில் வைக்க தெரிந்து இருக்கும்.
அவர்களுக்கு அம்மா அல்லது உடன் பிறந்தவர்கள், சாம்பார் பொடி, புளிக்காச்சல் , பருப்புப் பொடி, மற்றும் பொடி வகைகளை எப்படியும் செய்து கொடுத்து இருப்பார்கள். எதுவும் சமைக்க பிடிக்கவில்லை என்றால் சாதம் வைத்து பொடிகளை போட்டு, நெய்யோ, நல்லெண்ணெயோ விட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். அவர்கள் கொடுத்த பொடிவகைகள் தீர்ந்து விட்டால் எளிதாக அவர்களே வறுத்து பொடி செய்து கொள்ளலாம். அப்படி ஒரு பொடி வகையை சொல்கிறேன்.
தனியா(ய்) இருப்பவர்களுக்கு உடலை நன்கு வைத்துக் கொள்ள:
தனியாவில் உடல் செல்களை பாதுகாக்கும் ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளது.
தனியா பொடி:
----------------------
தேவையானவை
உளுத்தம்பருப்பு -அரைக்கரண்டி,
கடலைப்பருப்பு -அரைக்கரண்டி
தனியா - 1 கரண்டி(வரக்கொத்துமல்லி )
மிளகு -கால்ஸ்பூன்.
வற்றல் மிளகாய் - 3 { காரம் வேண்டும் என்றால் மேலும் ஒன்றோ, இரண்டோ சேர்த்துக் கொள்ளலாம்.)
உப்பு- அரை ஸ்பூன்(தேவைக்கேற்ப)
பெருங்காயம் -சிறிது அளவு. (கால்ஸ்பூன்) கட்டி வறுத்து போட்டால் வாசம் கம கம என்று இருக்கும் ஆண்களுக்கு அதை உடைத்து போட நேரம் இல்லை என்றால் பெருங்காயப் பொடி கால் ஸ்பூன் போட்டுக் கொள்ளலாம்.
மேலே உள்ள் சாமான்கள் எல்லாவற்றையும் வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு சிறிது சிவப்பாய் (கருகாமல்)
ஆறியவுடன் பொடி செய்து கொண்டு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
தொட்டுக் கொள்ள உருளை காரக்கறி செய்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு காரக்கறி
அரிசி வைக்கும் பாத்திரத்திற்கு மேலயே வேறு பாத்திரத்தை வைத்து உருளையை நன்கு கழுவி விட்டு அதில் போட்டு வேக வைத்து எடுத்து தோலை உரித்து நான்காக வெட்டிக் கொண்டு, கடுகு,, உளுந்தபருப்பு தாளித்து உருளையை போட்டு, கொஞ்சம் மிளகாய் தூள், கொஞ்சம், மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு போட்டு பிரட்டி, சிறு தீயில் அவ்அப்போது கிளறி விட்டால் முறு , முறு உருளை மசாலா கறி ரெடி. (நினைவு இருக்கட்டும் சிறு தீயில்)
சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் உருளை கிழங்கு என்றால் பிடிக்கும் தானே!
(என் கணவர் வரைந்த படம்) |
வெங்காயமும் போட்டு செய்யலாம், வெங்காயம் இல்லாமல் இருந்தால் நல்ல முறு முறு என்று இருக்கும்.
தக்காளி சாதம்
தக்காளி சாதம் எளிதாக செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி அரை கப்.
தக்காளி பழம் 2 பெரியது.
பெரிய வெங்காயம் 1
பச்சை பிளகாய் 2
கடுகு கால்ஸ்பூன்
உளுந்தபருப்பு - அரை ஸ்பூன்.
சாம்பார் பொடி அரைஸ்பூன்.
ஒரு கப் சாதத்திற்கு இரண்டு கப் தண்ணீர் சிறிது நல்லெண்ணெய், எலுமிச்சை சாறு இரண்டு சொட்டு விட்டால் உதிரி உதிரியாக சாதம் ஒன்னோடு ஒன்று ஒட்டாமல் வரும்.
சாதத்தை நல்ல உதிரி உதிரியாக வேகவைத்து ஒரு தட்டில் போட்டு ஆறவைத்துக் கொள்ளவேண்டு.வாணலியில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடு, உளுந்து தாளித்துக் கொள்ளலாம், சிறிது பட்டை, சோம்பு , கிராம்பு
வேண்டும் என்றால் போட்டு கொள்ளலாம், பிடிக்காதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டாம். பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி கொண்டு (சிறிது உப்பு போட்டு வதக்கினால் சீக்கிரம் வதங்கும்) பின் தக்காளியை போட்டு வதக்கி கொண்டு சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காய் பொடி, உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கி பின் ஆறவைத்த சாதத்தைப் போட்டு கிளறி இறக்கினால் தக்காளி சாதம் ரெடி. அதன் மேல் பச்சை கொத்துமல்லியை நன்கு கழுவி சிறிதாக வெட்டி போட்டு அலங்கரிக்கலாம். சிறிது நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போட்டால் நல்லசுவையாக
இருக்கும் தக்காளி சாதம்.
இதற்கு தொட்டுக் கொள்ள உருளைக் கறியும், உருளை சிப்ஸ், வடகம், வத்தல் எல்லாம் நன்றாக இருக்கும்.
இன்னொரு உருளை சமையல் குறிப்பு:
உருளைக்கிழங்கை நன்கு கழுவிக் கொண்டு பொடி பொடியாக தோலோடு வெட்டிக்கொண்டு அதை வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து மஞ்சள் பொடி, மிளகாய் தூள், உப்பு போட்டு சிறு தீயில் வதக்கினால் அருமையான உருளை பொரியல் கிடைக்கும்.
மற்றுமொரு சமையல் குறிப்பு:
ஆப் பாயில் உருளை
உருளையை கொஞ்சம் கனமாய் வட்டமாய் வெட்டிக் கொண்டு அதை எண்ணெயில் பொரித்து எடுத்து மிளகுத்தூள், உப்புத்தூள் போட்டும் செய்து சாப்பிடலாம். (ஆப் பாயில் உருளை என்று சொல்வார்கள்) என் அப்பா ,என் கணவர், என் குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
இந்த சமையல் குறிப்புகளை ஜலீலாவிற்கு பேச்சிலர் சமையலுக்கு அனுப்பி இருக்கிறேன்.
சமையல் குறிப்புகள் கொடுத்தது இல்லை. இந்த சமையல் குறிப்பு பேச்சிலருக்கு தெரிந்த சமையலாககூட இருக்கலாம்.
அட..அட..அட... நீங்கள் இப்போ சொன்ன சமையல் குறிப்பு பூரா உடனே சமைத்து சாப்பிடத்தோன்றுகிறது கோமதிம்மா...அருமையான குறிப்புகள்.நீங்கள் சமைத்து படம் எடுத்து போட்டு இருக்கலாம்..>)
பதிலளிநீக்குநீங்க சொன்ன குறிப்பு அருமை ஆனால் என்ன அதிகமாக உருளை சாப்பிட்டால் உருண்டையாகி விடபோகிறது அதற்கும் சேர்த்து சொல்லுங்கள்
பதிலளிநீக்குதங்கள் கணவர் வரைந்துள்ள படம் மிகவும் அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குசிம்பிளாகவும் சிறப்பாகவும் கத்தியுடன் வரைந்துள்ளார். பாராட்டுக்கள்.
தங்களின் சமையல் குறிப்புகளும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ஆ... நீங்களும் போட்டியில் குதிச்சாச்சா...
பதிலளிநீக்குஎன் கணவரும் திருமணத்திற்குமுன் சமைத்ததுண்டு. எனக்கு ஆரம்ப சமையலில் அவசியமான டிப்ஸ் சொல்லித் தந்ததுண்டு. ஆனால், இப்போ... ஹூம்... :-))))
unmaile ennai mathiriyana bachelors kku thevaiyana samaiyal kurippukal.. naalaikke try panna poren... nantri ...
பதிலளிநீக்குஎளிய அருமையான சமையல் குறிப்புகள்
பதிலளிநீக்குமனைவி குழந்தைகள் ஊருக்குப் போகிற காலங்களில்
இந்த ஐட்டங்கள் நிச்சயம் கை கொடுக்கும்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
tha.ma 1
பதிலளிநீக்குசமையல் குறிப்புகள் ஜோர்! ஜோர்!
பதிலளிநீக்குஆஹா ஒரெ பதிவில் இவ்வளவு சமையல் குறிப்புகள்.
பதிலளிநீக்குஉங்களவர் வரைந்த படமும் நன்று.
கோமதி அக்கா
பதிலளிநீக்குஎனக்கும் முன்பு கண் அளவு , ஒரு குத்து மதிப்பாக தான் சமைத்து பழக்கம்,
அதே போல் டம்ளர் அல்லது ஆழாக்கில் தான் அளப்பேன்,
சமையல் குறிப்பு போட ஆரம்பித்ததில் இருந்து தான் மற்றவர்களுக்கு அளவு தெரியனுமேன்னு அளவுடன் குறிப்பு போட ஆரம்பித்தேன்,
மிக அருமையான குறிப்பு என் அழைப்பை ஏற்று என் ஈவண்டுக்கு அனுப்பியமைக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்குசமையல் செய்வது எளிது. இந்த பாத்திரம் கழுவுவதுதான்........!
அன்பு ஸாதிகா வாங்க, வாழ்க வளமுடன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன்.
பதிலளிநீக்குஉருளை ஆப் பாயில் சமைத்து செய்யும் முறை படம் போட்டு இருக்கிறேன் பாருங்கள்.
உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி.
வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎதுவும் அளவுடன் சாப்பிட்டால் உடல் நலமாக இருக்கலாம்.
வட நாட்டில் உருளை இல்லாத சமையலே இல்லை, அங்கு இளம் வயதினர் அளவாய் அழகாய் இருக்கிறார்கள்.
ஒரு சிலர் குண்டாய் இருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.உங்கள் பாராட்டால் மகிழ்ந்த என் கணவர் உங்களுக்கு தன் நன்றியை தெரிவிக்கச் சொன்னார்.
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.
வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபோட்டியில் குதிக்கவில்லை. உங்களை போன்ற திறமையாளர்களுடன் முடியுமா!
ஜலீலாவின் அன்பு அழைப்பை தட்ட முடியாமல் ஏதோ சமையல் குறிப்பு அளித்து இருக்கிறேன்.
என் கணவரும் திருமணத்திற்குமுன் சமைத்ததுண்டு. எனக்கு ஆரம்ப சமையலில் அவசியமான டிப்ஸ் சொல்லித் தந்ததுண்டு. ஆனால், இப்போ... ஹூம்... :-))))//
இங்கு என் கணவரும் அப்படித்தான் தான் அப்படி சமைத்து இருக்கிறேன், இப்படி சமைத்து இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.
ஒரு நாளாவது ஏதாவது செய்து கொடுக்க வேண்டுமே ஹும் ))))
வாங்க Annbhu, வாழக வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் முதல் வரவுக்கு வாழ்த்துக்கள்.
நான் போட்டியில் வெற்றி பெற போவது இல்லை.
யாராவது திருமணம் ஆகாத ஒருவர் வந்து பாராட்டினாலே போதும் வெற்றி பெற்ற மாதிரி என்று சொன்னேன் என் கணவரிடம்.
அது போல் நீங்கள் நாளை சமைத்துப் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டீர்கள்.
மகிழ்ச்சி, நன்றி.
வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களுக்கு இந்த ஐட்டங்கள் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
உங்கள் புதுவருட வாழ்த்துக்களுக்கு நன்றி.
ரமணி சார் தமிழ்மண ஓட்டுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க கே.பி. ஜனா சார், உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க வெங்கட், வாழ்க வளமுடன். கிடைத்தவாய்ப்பை விட்டு விட கூடாது அல்லவா! அது தான் இத்தனை குறிப்புக்கள்.
பதிலளிநீக்குஎன்னவர் உங்கள் பாராட்டுக்கு நன்றி தெரிவித்தார்.
வாங்க ஜலீலா, வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநீங்கள் செய்முறை எல்லாம் அழகாய் எழுதுவீர்கள்.
சில படங்கள் இணைத்து இருக்கிறேன் ஜலீலா.
என் மேல் நம்பிக்கை வைத்து சமையல்க் குறிப்பு எழுத அழைத்தமைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு.
வாங்க பாலசுப்பிரமணீயம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஎன் கணவர், என் மகன் ஏன் நாங்களும் சொல்வது சமையல் எளிது பாத்திரம் கழுவதுதான் கஷ்டம் என்று.
அருமையான இலகு சமையல்கள் பலவும் கொடுத்திருக்கின்றீர்கள்.
பதிலளிநீக்குஅருமையான சுலபமாக செய்யும் சமயல் குறிப்பு கொடுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅருமையாக பதிவிட்டுள்ளீர்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ராஜி
நல்ல குறிப்புகள்.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா. வெற்றி பெற வாழ்த்துகள்!
படம் அருமையாய் வரைந்திருக்கிறாகள்.
அருமையான குறிப்புகள்.சூப்பர் பகிர்வு.
பதிலளிநீக்குஎளிமையாய் சமைக்கும் அருமையான குறிப்புகள் ..
பதிலளிநீக்குபரிசு கிடைக்க வாழ்த்துகள்..
வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுறிப்பை பாராட்டியதற்கு நன்றி.
உங்கள் பாராட்டே வெற்றி பெற்றமாதிரி.
என் கணவர் உங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வாங்க ஆசியா, வாழ்க வளமுடன், நீங்கள் சமையல் ராணி அல்லவா!
பதிலளிநீக்குநீங்கள் பாராட்டியதே எனக்கு மிக்க மகிழ்ச்சி.
வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
ஆஹா.. நீங்களும் கோதாவில் குதிச்சுட்டீங்களா :-))
பதிலளிநீக்குஉருளைக்கிழங்கை எப்படிச் சமைச்சாலும் ருசிக்கும். வறுவல் செஞ்சா கேக்கணுமா?. தட்டு காலியாகறதே தெரியாது.
உங்களவர் வரைந்த படம் அருமை.
ஆபீஸ் விட்டு அகால நேரத்துக்கு வந்து சமைக்க இயலாமல் ஆனால் பசியுடன் இருக்கும் ஆண்களுக்கு அவசரச்சமையலுக்கு தனியாப்பொடி சொன்னீங்க பாருங்க. அங்கதான் நீங்க நிக்கிறீங்க. உங்களின் தாயுள்ளத்துக்கு ஒரு சல்யூட்.
வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநானும் குதிக்க வேண்டும் என்பது ஜலீலாவின் விருப்பம், என்ன செய்வது!
என் கணவர் வரைந்த ஓவியத்தை பாராட்டியதற்கு அவர்களின் நன்றி உங்களுக்கு.
உங்களின் வரவுக்கும், அருமையான கருத்தும் நன்றி சாந்தி.
'தனியாப் பொடி' எனக்குப் பிடித்த ஐட்டம்!
பதிலளிநீக்குஉருளைக் கிழங்கு எப்படிச் செய்தாலும் சாப்பிடலாமே...!
வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகாலதாமதமாய் உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் அளிக்கிறேன்.
வீட்டில் தங்கை குடும்பத்தினர் வருகையால் வலைப்பக்கம் வரமுடியவில்லை.
உங்களுக்கு தனியாப் பொடி பிடிக்கும் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீங்கள் சொல்வது போல் உருளை எப்படி செய்தாலும் சாப்பிடலாம் .
உங்கள் வரவுக்கு நன்றி.
மேலும் படங்கள் பகிர்ந்து இருக்கிறேன் முடிந்தால் பாருங்கள்.
அருமையான எளிமையான சமையல் குறிப்புகள். புதுவருட நல்வாழ்த்துக்கள் அம்மா.இந்த வருடத்தில் மேலும் புத்துணர்வு வூட்டும் பதிவுகளை எதிர்பார்க்கிறேன் அம்மா.
பதிலளிநீக்குவாங்க இந்திரா சந்தானம் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்களுக்கும், உங்கள் குடுமபத்தினர்களுக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள்.
உங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
சமையல் குறிப்புகள் சுலபமாகவும் ருசிகரமாகவும் இருக்கிறதே. நன்றி
பதிலளிநீக்குவாங்க பூந்தளிர், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.