வெள்ளி, 27 ஜூலை, 2012

குயில் பாட்டு கேளுங்கள்

வசந்தகாலம் வந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி. சகலஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சி. மரங்கள், செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கும்.   பறவைகள் கானம் பாடும்.  விடுமுறைக்கு  எங்கள் ( கோவையில் )  வீட்டுக்கு போய் இருந்த போது எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும்  தூங்கு மூஞ்சி மரத்தில் குயில் கீதம் பாடியது.  அத்தை நீ  ஊருக்கு வரும் போது மழை பெய்யும், குயில் பாடும் எப்போதும் என்று என் கணவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். பாலக்காட்டு கணவாயிலிருந்து மழை  பெய்யும் சீஸன். ஆனால் இந்த முறை மழை எதிர்பார்த்த மாதிரி இல்லை. சிறுவாணி தண்ணீர் நான்கு நாட்களுக்கு ஒரு முறை  விட்டார்கள். குயில் எல்லா காலத்திலும் பாடினாலும் வசந்த காலத்தில் அதன் பாடல் நன்றாக இருக்கும். நிறைய குயில்கள் வரும்.

என் கணவரிடம்  வீடியோ எடுங்களேன் என்று கேட்டேன் அவர்கள் எடுத்து தந்தார்கள் அதற்கு தான் எவ்வளவு கஷ்டம் நாம் எடுக்கும் போது பாடாது, வீட்டிற்குள் வந்தவுடன் பாடும், முகம் காட்டாது முதுகை காட்டிக்கொண்டு  இருக்கும். நிறைய பொறுமை தேவைப்பட்டது.

நீங்களும் கேட்டு மகிழுங்களேன்.



29 கருத்துகள்:

  1. நகர வாழ்க்கையில் இது போன்ற சந்தோஷம் ஏது.நிற்க நேரமில்லாமல் அலைபேசும் கூட்டம்தான் .மிக்க மகிழ்ச்சி. நன்றிஅம்மா.

    பதிலளிநீக்கு
  2. இந்த சந்தோஷம் எல்லாம் கிராமத்தில் தான் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  3. \\எடுக்கும் போது பாடாது, வீட்டிற்குள் வந்தவுடன் பாடும், முகம் காட்டாது முதுகை காட்டிக்கொண்டு இருக்கும். / ஆமா ரொம்ப கஷ்டம் தான்..
    நல்லா வந்திருக்கு..

    பதிலளிநீக்கு
  4. இனிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் சந்தோஷமளிக்கும் பகிர்வு.

    காணொளியாக எடுப்பதோ, குரலைப்பதிவு செய்வதோ மிகவும் சிரமமான வேலைகள் தான்.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நம்மூர் குயிலின் கீதம் மட்டுமல்ல, தெருவில் எதையோ விற்றுக்கொண்டு போகும் வியாபாரியின் குரல்களும் கொஞ்சநேரம் என்னை ஊரில் கொண்டுவந்து நிறுத்திவிட்டன. அழகான காணொளி, மெனக்கெட்டு எடுத்ததைப் பறைசாற்றுகிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. கேட்டு மகிழ்ந்தோம். பகிர்வுக்கு நன்றி கோமதிம்மா.

    அதே போல கேமராவைக் கண்டாலும் முகம் திருப்பிக் கொள்ளும் சில பறவைகள். சில நமக்கு நட்பாகி போஸ் கொடுக்கும்:)!

    பதிலளிநீக்கு
  8. மகிழ்ச்சி தரும் படைப்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. சின்னவன் ரெண்டு நாள் முன்னாடித்தான் குயில் சத்தம் எப்படியிருக்கும்னு கேட்டான். இந்த வீடியோ போட்டுக் காண்பிச்சேன். நன்றிக்கா!!

    பதிலளிநீக்கு
  10. அதற்கு தான் எவ்வளவு கஷ்டம் நாம் எடுக்கும் போது பாடாது, வீட்டிற்குள் வந்தவுடன் பாடும், முகம் காட்டாது முதுகை காட்டிக்கொண்டு இருக்கும். நிறைய பொறுமை தேவைப்பட்டது.///uNmaiதான்.அழகாக வந்துள்ளது காணொளி.உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க இந்திரா, உங்கள் முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    நகர வாழ்கையிலும் நினைத்தால் இந்த சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.
    மனம் வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. வாங்க லக்ஷ்மி அக்கா, உங்கள் ஊரிலும் மழை பெய்யுமே இப்போது, அப்படியென்றால் குயில் பாடுமே!
    உங்கள் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. விடியோ நல்லா இருக்கா? கயல்விழி, ஏதோ எங்களுக்கு தெரிந்த மாதிரி எடுத்தோம்.
    பாராட்டு உற்சாகம் தருகிறது.

    பதிலளிநீக்கு
  14. வாங்க திண்டுக்கல் தனபாலன், உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. விடியோ நல்லா இருக்கா? கயல்விழி, ஏதோ எங்களுக்கு தெரிந்த மாதிரி எடுத்தோம்.
    பாராட்டு உற்சாகம் தருகிறது.

    பதிலளிநீக்கு
  16. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க கீதமஞ்சரி, நம்மூர் வெங்காய வியாபாரியின் குரலும் குயிலின் பாட்டுடன் சேர்ந்திசை செய்கிறதை கேட்டு விட்டீர்களா!
    உங்கள் தொடர் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க ராமலக்ஷ்மி, குயிலின் கீதத்தை கேட்டீர்களா மகிழ்ச்சி.

    உங்கள் கேமரா மாதிரி என் கேமரா இல்லை. சின்ன கேமரா அதில் ஜூம் செய்வது சிறிது தான் செய்ய முடியும்.
    நீங்கள் உங்கள் கேமராவில் எடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ஏதோ முயற்சி செய்து இருக்கிறோம்.

    பறவைகளை தூரத்திலிருந்து எடுத்தால் போஸ் கொடுக்கும் பக்கத்தில் போனால் நொடிப் பொழுதில் பறந்து போய் விடுகிறது.
    தினம் மொட்டைமாடியில் பறவைகள் வரும் போது தூரத்திலிருந்து ஏதோ எடுத்துக் கொண்டு இருக்கிறேன் அதை ஒரு சமயம் பகிர்ந்து கொள்கிறேன்.
    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க கவி அழகன், உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க ஸாதிகா, எங்கள் இருவருக்கும் பாராட்டும், வாழ்த்தும் சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ஹுஸைனம்மா, சின்னவர் உங்களிடம் கேட்டது என் காதுகளில் ஒலித்து நான் குயில் சத்ததை தந்து விட்டேனா!

    மட்டில்லா மகிழ்ச்சி இதை கேட்டு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வசந்தகாலம் வந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி. பகிர்ந்த்தற்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  23. குயிலோசை கேட்டு மகிழ்ந்தோம்.

    பறவைகளை படம்எடுப்பதில் உள்ள சிரமம் சரியாகச்சொன்னீர்கள் தருணத்தில் ஓடி மறையும் :)

    பதிலளிநீக்கு
  24. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வரவுக்கும்,பாரட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க மாதேவி, கேட்டு மகிழ்ந்தது அறிந்து மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க அமதிச்சாரல், குயில் பாட்டு கேட்டீர்களா? பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. குயிலின் இசையை ரசித்ததோடு எங்களையும் ரசிக்க வைத்ததற்கு நன்றி.
    அவசர உலகில் இது போன்ற ரசிப்புகள் மனதை மகிழ்ச்சிப்படுத்தும்

    பதிலளிநீக்கு
  28. என் முந்தைய பதிவுகளைப் படித்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு