Friday, July 6, 2012

மெளனம்


                                                     

நலம் விசாரித்தல்:

”நலமாக இருக்கிறீர்களா?  செளக்கியமா? எப்படி

இருக்கிறீர்கள்?  சுகம் தானே! ”இப்படி எல்லாம் கேட்பது

ஒரு மரபு .


ஊரில் தான் இருக்கிறீர்களா? எங்கே ஆளயே காணோம்

பெண் வீட்டுக்கா, மகன் வீட்டுக்கா? கோயில் குளமா?,

அல்லது அத்தை மாமாவைப் பார்க்க போனீர்களா?

ஊரிலேயே இருப்பு இல்லையே என்பது தான்

ஊர்க்காரர்கள் கேட்கும்  கேள்வி.

கோவில் கும்பாபிஷேகம், உங்களை பார்க்கவில்லையே!

ஊரில் இல்லையா?  பிரதோஷத்தில் பார்க்கவில்லையே!

என்று விசாரிப்புக்கு பதில் சொல்லிக் கொண்டே

வரவேண்டும். என் மகள் சொல்வாள் ”உன் கூட வந்தால்

தேர் நகர்வது போல் தான் வரவேண்டும்.

விசாரிப்புக்களுக்கு நின்று நிதானமாய் பதில் சொல்லி

வருவாய், பின் நீ நலம் விசாரிப்பாய் ”என்பாள்.

இப்போது சொந்தம், பந்தம், ஊர்க்காரர்கள், மட்டும்

இல்லாமல் பதிவுலக அன்பர்களும்  கேட்கிறார்கள்.

எங்கே உங்களை வெகு நாட்களாய் காணோம்? பதிவுகள்

வரவில்லையே என்று அக்கறையாகக் கேட்கும் போது

அளவில்லா ஆனந்தம்  ஏற்படுகிறது.


நான் இந்த பதிவுலகம் வந்தது 2009 ஜூன் 1ஆம் தேதி .

ஏதோ எனக்கு தெரிந்த மாதிரி எழுதி வருகிறேன். எழுத

ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்த பதிவு

என் 100 ஆவது பதிவு. என் பதிவுகளை வாசித்துத் துணை

நிற்கும் நட்புகளுக்கு நன்றி.


இன்று நான் எழுத எடுத்துக் கொண்ட தலைப்பு:-

’மெளனம்’.
நான் 15 வருடங்கள்  விடாமல் வாராவாரம் சனிக்கிழமை

மெளனம் இருந்தேன்., ஞாயிறு காலைதான் பேசுவேன்.

மகளுக்கு மாப்பிள்ளை பார்த்தது, (மாப்பிள்ளை

டெல்லியிலிருந்து விடுமுறையில் வந்து இருப்பதால்

சனிக்கிழமை பார்க்க முடிவு செய்யப்பட்டது) மகனுக்கு

பெண் பார்க்க போனபோது எல்லாம் மெளனத்தில் தான்.


என் சித்தி ஒருவர் வியாழக்கிழமை மெளனம்

இருப்பார்கள். அதை சிறுவயதில் பார்த்ததால் ஆசை வந்து

விட்டது எனக்கும். என் சித்தியின் கண்ணும், கையும்

பேசும். பார்க்கவே நன்றாக இருக்கும்.
நான் மெளனம் இருந்த போது பெற்ற அனுபவங்கள், என்

மெளனத்தால் என் வீட்டார் பெற்ற அனுபவங்கள்,

அவஸ்தைகள் எல்லாம் சொல்கிறேன், அடுத்த பதிவில்.
நீங்களும் மவுனமாய் அதுவரை காத்து இருங்கள்.

மெளனத்தைபற்றிப் பெரியவர்கள், ஞானிகள் என்ன

சொல்கிறார்கள் ?

”எல்லா நேரங்களிலும் பேசிக் கொண்டே இருக்காமல்,

மெளனமாக இருக்கும் பண்பை வளர்த்துக்

கொள்ளவேண்டும். மெளனத்தை விட பெரிய ஆயுதம்

எதுவும் இல்லை ”-- அன்னை.

”தண்டிப்பவர்கள்பால் நான் செங்கோல்;

வெற்றிவேண்டுபவரிடத்து நான் நீதி;
ரகசியங்களுள் நான் மெளனம்;
ஞானிகளுடைய ஞானமும் நானே.”
‘ஸ்ரீமத் பகவத்கீதையில்  --- ஸ்ரீ கிருஷ்ணன்.

”ஓசை யொடுங்குமிடம் ஓங்காரத் துள்ளொளிகாண்
பேசாதிருக்கும் பிரமமிது என்றாண்டி.”---- பட்டினத்தார்.

                    சிவ மோனம்
”பொங்கிநின்ற மோனமும்
பொதிந்துநின்ற மோனமுந்
தங்கிநின்ற மோனமுந் தயங்கிநின்ற மோனமுங்
திங்களான மோனமுஞ் சிவனிருந்த மோனமே.”              

                  --சிவவாக்கியர்

”சும்மா இரு சொல்லற ” ,
”பேசா அநுபூதி பிறந்ததுவே.”---அருணகிரிநாதர்

                   சும்மா இரு
                         ---------------------
சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்று
எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே.

சும்மா இருக்கச் சுகம்சுகம்
 என்று சுருதியெல்லாம்
அம்மா நிரந்தரஞ் சொல்லவுங்
  கேட்டும் அறிவின்றியே
பெம்மான் மெளனி மொழியையுந்
  தம்பியென் பேதைமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன்
   அந்தோ! என் விதிவசமே.
------தாயுமானவர்
தாயுமானவரை  சின்னஞ்சிறு வயதிலேயே

ஆட்கொண்டவர் ஒரு முனிவர் .அவர் பேசுவது மிகக்

குறைவு. இரண்டொரு வார்த்தைகளுக்கு மேல்

அவருடைய வாயினின்று சொற்கள் வெளியே வரமாட்டா.

ஆதலால் அவரை மெளனகுரு எனக்கருதி  தாயுமானவர்

அவருக்கு சிஷ்யர் ஆகி தன் ஐயங்களை அகற்றிக்  கொண்டார். 
 அவருக்கு குரு உபதேதித்தது “சும்மா இரு” என்பது

தான்.இந்த உபதேச மொழிதான் தாயுமானவரின்

பாடல்கள் பலவற்றிலும் பீஜமந்திரமாய் அமைந்து

இருக்கிறது.


ஒரு தொழிலதிபர் அல்லது வணிகர் மாதந்தோறும்

அல்லது ஆண்டு தோறும் இருப்பிலுள்ள பொருள்களை

கணக்கெடுப்பது போல் எல்லோருமே மாதத்திற்கு ஒரு

நாளோ அல்லது ஆண்டுக்குச் சில நாட்களோ ஒதுக்கிக்

கொண்டு நம் இருப்பைக் கணக்கெடுக்க மெளனநோன்பு

அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

மெளனநோன்பு இருவகைஉண்டு.  1. ஒரு செயலைச்

செய்து முடிக்க வேண்டுமென்று மன உறுதியோடு

சங்கற்பம் செய்து கொண்டு  அவ் வேலை முடியும்

வரையில் பேசமால் இருப்பது. இது மனதையும்

உடலாற்றலையும் சிதறாமல்காத்து, தான் விரும்பும்

செயலை வெற்றியோடு முடிக்கத் துணை செய்யும்.

2. ஆன்ம தூய்மைக்காக குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கி

வைத்துக் கொண்டு , குடும்பம், பொருளாதாரம், வாணிபம்,

இவைகளிலிருந்து விலகி கொண்டு மெளனமாக இருந்து

அகத்தாய்வு செய்து கொள்ளுதல்.
----------வேதாத்திரி மகரிஷி.


சஷ்டி விரதம் இருப்பவர்கள் உண்ணாநோன்புடன்

மெளனநோன்பு இருப்பார்கள்.
இயற்கை வைத்தியத்தில் மெளன சிகிட்சை என்று ஒன்று

உண்டு.  மெளன கட்டளைக்கு  மதிப்பு அதிகம், மகான்கள்

சித்தர்கள் கட்டளையிட்டே நோய்களை விரட்டி உள்ளனர்.


எல்லா மதங்களை சேர்ந்தவர்களும்  மெளனத்தை கடைபிடிக்கிறார்கள்.

56 comments:

ராமலக்ஷ்மி said...

நூறாவது பதிவு!!!

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்:)!

மெளனத்தின் சிறப்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அனுபவத்தைக் கேட்க மெளனமாகக் காத்திருக்கிறோம்.

Sasi Kala said...

மெளன கட்டளைக்கு மதிப்பு அதிகம், மகான்கள்
மௌனத்தை பற்றிய விளக்கம் புதியது. 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

UNGALAKKU ENATHU MOUNAMA VAZTHUKKAL UNGALATHU 100TH PATHIVIRKU. NEENGAL MENMELUM NERAYA PATHIVUKALAI IDAVENDUM ENA VAZTHUGIREN

KARUNAKARAN
CHENNAI

வை.கோபாலகிருஷ்ணன் said...

வெற்றிகரமான 100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.

வலையுலகில் வலம் வந்ததில் மூன்றாவது பிறந்த நாளுக்கு வாழ்த்துகள்.

அன்புடன்
vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இப்போது சொந்தம், பந்தம், ஊர்க்காரர்கள், மட்டும்
இல்லாமல் பதிவுலக அன்பர்களும் கேட்கிறார்கள்.

எங்கே உங்களை வெகு நாட்களாய் காணோம்? பதிவுகள் வரவில்லையே என்று அக்கறையாகக் கேட்கும் போது
அளவில்லா ஆனந்தம் ஏற்படுகிறது.//

உண்மை தான். எனக்கும் இதே அனுபவம் தான் இப்போது.

பின்னூட்டங்கள் வாயிலாக மட்டுமின்றி, தொலைபேசிகள், மின்னஞ்சல்கள், சுட்டிகள், நேரில் என எல்லோருமே மீண்டும் மீண்டும் அழைப்பது ஆனந்தமாகவே உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மெளனம் பற்றிய அனுபவங்களை மெளனமாகவே சீக்கரமாக ஆரம்பித்து எழுதுங்கள்.

ஆவலுடன் மெளனமாகவே படிக்கக் காத்திருக்கிறோம்.

indhira said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அம்மா.அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் வெற்றிகரமான 100 ஆவது பதிவுக்கும், பதிவுலக மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவுக்கும் வாழ்த்துகள்.

அன்புடன் vgk

தருமி said...

இன்னும் பல நூறுகள் வர வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

வாங்க ராமலக்ஷ்மி, முதலாக வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி .

அடுத்தபதிவு அனுபவம் தான்.
உங்கள் காத்திருப்புக்கு நன்றி.

middleclassmadhavi said...

Congrats!

கோமதி அரசு said...

வாங்க வை, கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

சீக்கிரமாய் மெளன அனுபவங்களை எழுதுகிறேன்.

நீங்களும் பதிவுகள் எழுதி நாட்கள் ஆகி விட்டது, சூழநிலைகள் ஒத்து வரும் போது எழுதி விடுங்கள்.
எல்லோரும் ஆவலாய் காத்து இருக்கிறோம்.
நன்றி, வணக்கம்.

கோமதி அரசு said...

வாங்க சசிகலா, உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க தருமி சார், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க இந்திரா, உங்கள் தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கருணாகரன், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

Lakshmi said...

அதேதான் இத்தனை நாட்கள் எங்க போனீங்க 100-வது பதிவுக்கு வாழ்த்துகள் மௌனமாகத்தொடருங்கள் வைட்டிங்க்.

Thekkikattan|தெகா said...

இது போன்ற அனுபவ முயற்சிகளை தவறாமல் பகிர்ந்து கொள்வது எங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். நன்றி கோமதியம்மா :)

கோமதி அரசு said...

வாங்க லக்ஷ்மி அக்கா, நான் மகளுடன்
உறவினர்கள் வீட்டுக்கு எல்லாம் போய் இருந்தேன்.
என் மாமியார் அவர்களுக்கு கண் ஆப்ரேஷன் அவர்களுக்கு உதவி வந்தேன்.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க தெகா, நலமா?

அனுபவங்கள் என்று சொல்வது தானே எங்களை போன்றவர்களுக்கு வேலை.
உங்களுக்கு பிடித்தால் மகிழ்ச்சி.

வெங்கட் நாகராஜ் said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்மா.

மௌனம் குறித்து உங்கள் பகிர்வு சூப்பர். உங்கள் அனுபவங்கள் குறித்து தெரிந்து கொள்ள அவா.

எனக்குக் கூட மௌனம் சாதிப்பது பிடிக்கும். என்னால் ஒரு நாள் முழுவதும் மௌன விரதம் இருக்க முடியுமா தெரியவில்லை...

கே. பி. ஜனா... said...

மௌனம் மகத்தானது!

கோபிநாத் said...

100வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா ;)))

\\அவஸ்தைகள் எல்லாம் சொல்கிறேன், அடுத்த பதிவில்.
நீங்களும் மவுனமாய் அதுவரை காத்து இருங்கள்.\\

அதான் பிரேக் போட்டு எங்களுக்கு இப்பவே அவஸ்தையை புரியவச்சிட்டிங்களே...இருந்தாலும் வெயிட்டிங் ;))

ஜீவி said...

உங்கள் பின்னூட்டம் வரவில்லை என்றாலே, நீங்கள் ஊரிலில்லை என்பது தெரிந்து விடும். வருகைக்காகக் காத்திருப்பேன். வந்தவுடன், விட்டுப்போனது அது எத்தனை பதிவுகளாக இருக்கட்டுமே, ஏனோ தானோ என்றில்லாமல் அக்கறையுடன் வாசித்து அனுபவித்ததின் பகிர்தல் நிச்சயம்.

சதமடித்ததற்கு வாழ்த்துக்கள். உங்கள் திருக்கையிலை யாத்திரை அனுபவங்களையும், இலங்கை திருக் கோயில்கள் பற்றிய செய்திகளையும் மனம் இலயிக்க வாசித்திருக்கிறேன்.
இன்னும் பலப்பல சிறப்பான பதிவு களைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

Ramani said...

100வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
மௌனத்தின் சிறப்பை மிக அழகாகச் சொல்லிப் போகும்
இந்தப் பதிவு அருமையிலும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

100 க்கு வாழ்த்துக்கள் .

கோமதி அரசு said...

வாங்க வெங்கட், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
வெங்கட், உங்களுக்கும் மெளனம் சாத்தியமே.
முடிந்த போது இருக்கலாம்.
ஆதி, ரோஷ்னி எல்லோரும் நலமா? நான் விசாரித்தாக சொல்லவும்.

கோமதி அரசு said...

வாங்க ஜீவி சார், உங்கள் மனபூர்வமான வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்களை போன்றவர்களின் பாராட்டுக்கள் தான் என்னை எழுத தூண்டுகிறது.
மீண்டும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கே.பி. ஜனா, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கோபிநாத, வாழ்த்துக்களுக்கு நன்றி.
போனபதிவிலேயே என் அனுபவங்கள் குடும்பத்தினர் அவஸ்தைகளை சொல்லி இருந்தால் நீண்ட பதிவை படிக்க உங்களை போன்ற சுறு சுறுப்பானவர்களுக்கு நேரம் இருக்காது.
அதனால் தான் அடுத்தபதிவில் மீதி என்றேன்.
அடுத்தபதிவுக்கும் தொடர்ந்து வாருங்கள்.

கோமதி அரசு said...

வாங்க ரமணி, உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

பதிவு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.


தொடருகிறேன், வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க நண்டு@ நொரண்டு- ஈரோடு,
உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

மாதேவி said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிவுகள் மேலும் தொடர்ந்து வளரட்டும்.

படிக்கக் காத்திருக்கின்றோம்.

கோமதி அரசு said...

வாங்க மாதேவி உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
காத்திருப்புக்கும் நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் அம்மா..:)

உண்மையில் மௌனம் என்ற விசயத்தை நீங்கள் கையிலெடுத்தபின் தான்.. உங்கள் பலம் முழுமையாக எங்களுக்குத் தெரிந்ததுன்னு சொல்லலலாம்..

கோமதி அரசு said...

வா கயல்விழி, உன் வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஒ அப்படி வேறு இருக்கா!

உன்னால் தான் இந்த பதிவுலத்திற்கு வந்தேன் உனக்கு என் நன்றிகள்.

G.M Balasubramaniam said...

நான் நினைக்கிறேன்.பேசாமல் இருப்பதுதான் மௌனம் அல்ல. தேவை இல்லாததைப் பேசாமல் இருப்பதும் மௌனம்தான். நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

வாங்க G,M.Balasubramaniam சார், நீங்கள் சொல்வது சரி. வாய்மூடி இருப்பது மட்டும் மெளனம் அல்ல தேவை இல்லாத வார்த்தைகளை பேசாது இருப்பதும் மெளனம் தான்.

உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகக்ளும் மகிழ்ச்சியுமினி அடிக்கடி பதிவிடுவீர்கள் என நம்புகிறேன்.

ஹுஸைனம்மா said...

நலமே திரும்பி வந்து, எழுதத் துவங்கியது மகிழ்ச்சி.

வாரா வாரம் மௌன விரதமா??!! ஆச்சர்யம்தான். அதுவும் மகளைப் பெண் பார்க்க வந்த தினத்திலுமா!! பெண்ணைப் பெற்றவள் வாய்திறந்து “வா”வென்று கூட சொல்லவில்லை - என்று ஒரு பிடி பிடிக்கும் மக்கள் மத்தியில், இப்படி ஒரு மணமகன் வீட்டினரா!!

அனுபவங்களைப் படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

ஸாதிகா , உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
நாளை என் மெளன அனுபவங்கள் வருகிறது படித்துவிட்டு சொல்லுங்கள்.

கோமதி அரசு said...

வாங்க ஹுஸைனம்மா, நலமாக வந்து விட்டேன்.
வாரா வாரம் தான் மெளனம் இருந்தேன். 15 வருடங்கள்.
அந்த அனுபவங்கள் நாளை வருகிறது படித்துவிட்டு சொல்லுங்கள்.

, இப்படி ஒரு மணமகன் வீட்டினரா!!//

இதற்கு பதில் நாளை பார்க்கலாம்.
அவர்கள் உண்மையில் நல்ல சம்பந்தார். இறைவன் நல்ல இடத்தை அமைத்துக் கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

100வது பதிவுக்கு வாழ்த்துகள்.

அமைதிச்சாரல் said...

நூறாவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் கோமதிம்மா..

VijiParthiban said...

கோமதியம்மா உங்களுடைய 100 - வது பதிவுக்கு வாழ்த்துக்கள் .... மௌன விருதம் பற்றி கூறியுள்ளீர்கள் நல்ல அருமையான பகிர்வு... நான் உங்களுடைய மௌனம் -2 பதிவை பார்த்து விட்டு இதை பார்த்தேன் ... ஆனாலும் மறுபடியும் படித்தேன் .....

Ramani said...

Tha.ma 4

இராஜராஜேஸ்வரி said...

மெளனத்தை விட பெரிய ஆயுதம்

எதுவும் இல்லை ”-- அன்னை.

அருமையான பகிர்வு..


100 - வது பதிவுக்கு வாழ்த்துக்கள் .. பாராட்டுக்கள்..

கோமதி அரசு said...

வாங்க காஞ்சனா, உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க சாந்தி, உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க விஜி பார்த்திபன், உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
மறுபடியும் படித்தது அறிந்து மகிழச்சி.

Anonymous said...

100வது பதிவிற்கு இனிய வாழ்த்து.
மௌனம் பற்றி அற்புதமாக ஆய்ந்து எழுதியுள்ளீர்கள்.
அருமை...அருமை.கருத்து எழுத விரும்பி - தோண்டிய போது இதைக் கண்டேன். மகிழ்வு.
வேதா. இலங்காதிலகம்.

கோமதி அரசு said...

வாங்க வேதா. இலங்கா திலகம், வாழ்க வளமுடன். இதன் அடுத்த பதிவையும் படித்து பாருங்கள். நான் மெளனம் இருந்த அனுபவங்களை எழுதி இருப்பேன்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

yathavan nambi said...

அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (08/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

ADHI VENKAT said...

அன்புடையீர்,

வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/8.html

Dr B Jambulingam said...

வலைச்சரத்தில் இன்று தங்களது வலைத்தளத்தை திரு வை.கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
http://www.drbjambulingam.blogspot.com/
http://www.ponnibuddha.blogspot.com/

பூந்தளிர் said...

100- வது பதிவுக்கு பாராட்டுகள். இனிமையாக பேசுக. அன்பாக பேசுக. சபை அறிந்து பேசுக. பேசாதிருந்தும் பழகுக. என்று எப்பவோ படித்தது இங்க நினைவில் வந்தது. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்