புதன், 30 மே, 2012

மனசுக்குள்ளே வந்த மாயம் என்ன?




தலைப்பை பார்த்து என்ன இது  ஐம்பதை கடந்த அம்மா 60 நெருங்க சில காலங்களே இருக்கும் மாது எழுத வைக்கும் தலைப்பா இது என்று நினைப்பவர்களுக்கு என் பதில் இருபதோ ,அறுபதோ மனது எல்லோருக்கும் இருக்கே!

மனது சிலநேரங்களில் மகிழ்ச்சியாய் , சில நேரங்களில் சோகமாய் . சிலநேரங்களில் தெம்பாய், சிலநேரங்களில் சலிப்பாய் தோன்றுவது சகஜம் தானே! இப்போது எனக்கு மகிழ்ச்சியாய், தெம்பாய் உள்ளது. வசந்த காலம் போல் உள்ளது . பேரன் பேத்தி . மகள் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த உணவு, அவர்களுக்கு பிடித்த தொலைக்காட்சி பார்த்தல். என்று பொழுது ஓடுகிறது. தெம்பு இல்லாதது போல் இருந்த உடம்பில் புது தெம்பு வந்து விட்டது. அது தான் அன்பு என்னும் அருமருந்து தரும் தெம்பு.

பதிவுகள் படித்து கருத்திடுவது, பதிவுகள் எழுதுவது எல்லாம் சில நாட்களுக்கு  முடிந்த போது. இந்த மாதம் ஆரம்பத்தில் நாங்கள் சென்ற ஆன்மீக சுற்றுலாப் பற்றிய செய்திகளை உங்களுடன் பிறகு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் பதிவுகளையும் படித்து கருத்திட வேண்டும்.

இன்னும் என் பயணம் முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் புது வரவாய் இளந்தளிர் ஒன்று வந்து இருக்கிறது. அந்த புது  வசந்தத்திற்கு பெயர் சூட்டுவிழாவிற்கு போக வேண்டும்.(கொழுந்தன் அவர்களுக்கு பேரன் பிறந்து இருக்கிறான்)

வீட்டில் டெல்லி பேரன் இந்தி கலந்த தமிழ் பேசுவதை கேட்டு மகிழ்தல், பேத்தியின் கர்நாடக இசை பயிற்சி பாடலை கேட்டல்., பேரன் மிருதங்க பயிற்சி செய்வதை கேட்பது என பொழுது இனிதாக கழிகிறது.

பேரனுக்காக சர்க்கஸ் சென்று வந்தோம். பேரனுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். சர்க்கஸில் யானைஅவனுக்கு பிடித்த  கிரிக்கெட் விளையாடியது அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. கற்பனையில் கிரிக்கெட் விளையாடுவான் அவனே சிறிது நேரம் பவுலிங் ,செய்வான், அவனே பேட்டிங் செய்வான். தாத்தாவுடன் விளையாடும் போது ஒவ்வொரு ஆட்டாக்காரராய் மாறி விளையாடுவான். தாத்தாவிடம் சொல்லி பேட் வாங்கி வந்து எப்போதும் கையில் வைத்துக் கொண்டு,  படுக்கும் போதும் தலைக்கு வைத்து படுத்துக் கொண்டு மகிழ்கிறான்.
   


இன்னும் கடற்கரை செல்லவேண்டும். தாத்தாவிற்கு ஐபாட் டச்சில்  வெயிலுக்கு ஏற்ற உடை அணிந்து ஊஞ்சலில் அமர்ந்து  தாத்தாவும் பேரனும் விளையாடுகிறார்கள்.இவர்கள் எல்லாம் இங்கு இருக்கிறார்கள் என்று என் மகனின் மகன் நானும் இங்கு வருகிறேன் என்கிறான். எல்லோருடனும் ஸ்கைப்பில் உரையாடுகிறான். செம்டம்பர் மாதம் வருகிறோம் விடுமுறை கிடைத்தால் என்கிறார்கள். இறைவன் அருளால் எல்லாம் நலமாய் வரவேண்டும்.

குழந்தைகள் வெளிநாட்டில், வெளியூரிலில் இருக்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் வரும் நாள் தானே வசந்த காலம்! எல்லா பெற்றோர்களுக்கும் அந்த வசந்தகாலம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு அவசியமோ அது போல் உறவுகளை மறக்காமல், இருக்க பாசம் என்னும் நூல் கயிறு அறுந்து போகாமல் இருக்க உறவுகளின் சந்திப்பு அவசியம். வான் மழையை எதிர்பார்த்து இருக்கும் சாதகப் பறவைகள் பெற்றோர்கள்.

எங்கள் மாமனார், மாமியார் நாங்கள் ஊருக்கு போகும் போது மகிழ்வதும் திரும்பி வரும் போது அவர்கள் முகம் வாடிவிடுவதைப பார்க்கும் போது நாமும் அந்த நிலையில் தானே இருக்கிறோம் என்ற எண்ணம்  வரும்.  இத்தனை வயதிலும் என் அத்தை , மாமா அவர்கள்  மகிழ்ந்து இருப்பது ஆலமரத்தின் விழுதுகள் போன்ற தங்கள் குழந்தைகளின் அன்பால் தான். நாங்கள் நலமாய் இருப்பது ஆலமரத்தின்  நிழலால். விழுதுகளின் அன்பால்.

பதிவுகளே வெளிவரவில்லையே நல்மாக இருக்கிறீர்களா ? என வலையுலக அன்பர்கள் கேட்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்வின் பின் பகுதியில் கிடைத்த இந்த புது வசந்தத்தால் வாழ்வு மேலும் இனிமையாக இருக்கிறது.

நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.
நலமாக இருக்கிறேன்.  ஊர்ப்பயணங்கள் முடிந்து வந்து உங்களுடன் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.









42 கருத்துகள்:

  1. புது வசந்தத்துக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. அது தான் அன்பு என்னும் அருமருந்து தரும் தெம்பு.

    இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். அன்பால் அகிலத்தையே வெல்லலாமல்லவா?

    அன்பின் மகத்துவத்தை பதிவு முழுவதும் காண முடிந்தது. பகிர்வினுக்கு நன்றி.!

    பதிலளிநீக்கு
  3. அன்பு என்னும் அருமருந்து தரும் தெம்பு.

    அமிர்தமாய் வர்ஷிக்கும் அன்புத்துளிகள் !

    பதிலளிநீக்கு
  4. அடடா, பேரக்குழந்தைகளோடு ஆனந்தத்தில் திளைத்திருக்கும்போது ’சிவ பூஜை கரடி’யாகத் தொந்தரவு பண்ணிட்டோமோ?

    நல்லா எஞ்சாய் பண்ணி, ஃபுல்லா சார்ஜ் ஏத்திக்கோங்க. அடுத்த விஸிட் வரை தாங்கணுமே!! :-))))))))

    பதிலளிநீக்கு
  5. அன்புக்கு தான் எல்லோரும் ஏங்குகிறோம் ஆனந்தமாய் அனுபவியுங்கள் அம்மா

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நாளா காணுமேன்னு நானும் தேடினேன். நீங்க குழந்தைகளுடன் எஞ்சாய் பண்ணிட்டு இருந்ததை அழகா சொல்லி இருக்கீங்க. வயதான எல்லாருக்குமே இந்த ஃபீலிங்கை புரிஞ்சுக்கமுடியும்.இனி அடிக்கடி பதிவு போடுங்க.

    பதிலளிநீக்கு
  7. வாங்க கே.பி ஜனா சார், உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  8. வாங்க பழனிவேல், நீங்கள் சொல்வது போல் அன்பால் அகிலத்தை வெல்லலாம். உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க இராஜராஜேஸ்வரி, நீங்கள் சொல்வது போல் அமிர்தமாய் வர்ஷிக்கும் அன்புத்துளிகளை ருசித்துக் கொண்டு இருக்கிறோம். இறைவனுக்கு நன்றி சொல்லிகொண்டு.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க ஹுஸைனம்மா, உங்கள் நலம் விசாரிப்பை என் மகள் சொன்னாள். என்னை காணோம் என்று தேடும் உங்கள் அன்புக்கு நன்றி, தொந்திரவு ஒன்றும் இல்லை., மகிழ்ச்சியே!

    சார்ஜ் ஏற்றிக் கொள்கிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. மகிழ்வான தருணங்களை அறியத் தந்திருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி. இளந்தளிருக்கு எனது வாழ்த்துகளும்.
    சுற்றுலா கட்டுரைக்குக் காத்திருக்கிறோம். பயணம் முடிந்து வாருங்கள்:)!

    பதிலளிநீக்கு
  12. வாங்க இந்திரா, நீங்கள் சொன்னது போல் எல்லோரும் அன்புக்குத் தான் ஏங்குகிறோம். உங்கள் வரவுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  13. வாங்க லக்ஷ்மி அக்கா, நீங்களும் என்னை தேடியது அறிந்து மகிழ்ச்சி.
    எழுதுவதற்கு பயண அனுபவங்கள் நிறைய உள்ளன எழுதுகிறேன்..
    உங்கள் அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ராமலக்ஷ்மி, இளந்தளிருக்கு உங்கள் வாழ்த்தை தெரிவித்து விடுகிறேன்.இனிமையான தருணங்களை தந்த இறைவனுக்கு நன்றி.

    பயணக் கட்டுரை விரைவில் எழுதுகிறேன். நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  15. //வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு அவசியமோ அது போல் உறவுகளை மறக்காமல், இருக்க பாசம் என்னும் நூல் கயிறு அறுந்து போகாமல் இருக்க உறவுகளின் சந்திப்பு அவசியம். //

    மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
    //வாழ்வின் பின் பகுதியில் கிடைத்த இந்த புது வசந்தத்தால் வாழ்வு மேலும் இனிமையாக இருக்கிறது.//

    மிகவும் சந்தோஷம்,மேடம்.
    ENJOY EVERYTHING WELL & BE HAPPT.

    பதிலளிநீக்கு
  16. மகிழ்ச்சியான பதிவு.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. உங்கள் மனசு இலேசாகியிருப்பது புரிகிறது. மனம் பறக்கத் தொடங்கி விட்டால் சின்ன சின்ன இயலாமை களும் பஞ்சாய்ப் பறந்து போம்! இன்னொருவர் சந்தோஷத்தில் தன் சந்தோஷத்தைப் பார்க்கத் தெரிந்தவர் கள் பாக்கியசாலிகள். குழந்தைகள் உலகம் தேவலோகம். அந்த உலகில் சஞ்சரிக்க லாயக்கான குழந்தை உள்ளம் பெறுவதும் கொண்டாட்டம் கொள்வதும் கொடுப்பினை. அதெல்லாம் நம் பெரியோர்கள் செய்த புண்ணியம். தங்கள் பகிர்தலுக்கு ரொம்ப சந்தோஷம், கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா31 மே, 2012 அன்று AM 3:04

    ''...பாசம் என்னும் நூல் கயிறு அறுந்து போகாமல் இருக்க உறவுகளின் சந்திப்பு அவசியம். வான் மழையை எதிர்பார்த்து இருக்கும் சாதகப் பறவைகள் பெற்றோர்கள்...''

    சரியாகச் சொன்னீர்கள். மகிழ்வாக உள்ளது உங்கள் மகிழ்வை வாசிக்க. ஆகா உங்கள் வயது தெரிந்துள்ளது. நான் உங்களிலும் மூத்தவள் சகோதரி. மேலும் மகிழ்வு பொங்கி உடல் ஆரோக்கியமாக வாழ வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  19. வான் மழையை எதிர்பார்த்து இருக்கும் சாதகப் பறவைகள் பெற்றோர்கள்.// அற்ப்புதமான உண்மையை அழகாக சொல்லிய விதம் அருமை .

    பதிலளிநீக்கு
  20. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், நீங்கள் நலமா?

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ஜீவி சார், மிக சரியாக சொன்னீர்கள் சார்.. பெரியோர்கள் செய்த புண்ணியத்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது.
    உங்கள வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க ரத்னவேல் ஐயா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க வேதா, இலங்கா திலகம், உங்கள் மகிழ்ச்சியான வாழ்த்துக்களுக்கு நன்றி சாகோதரி.
    என்னை காணோம் என்று நலம் விசாரித்து உங்கள் அன்பை தெரிவித்தீர்கள். மீண்டும் நன்றி உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  24. வாங்க சசிகலா, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
    பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. புது வசந்தம் வரவிற்கு வாழ்த்துகள்.....

    நாங்களும் மூன்று வாரம் இப்படித்தான் தமிழகம் சென்று விட்டோம். இப்போதுதான் நான் தில்லி திரும்பி இருக்கிறேன்.. இனிய மூன்று வாரம்....

    பதிவுகளுக்குக் காத்திருக்கிறோம். அவசரமில்லை.... இனிய பொழுதுகளைக் கழித்து வாருங்கள்......

    பதிலளிநீக்கு
  26. இந்த மனமும், இந்த உறவும் என்றும் வேண்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. வாங்கG.M.பாலசுப்பிரமணியம் சார், உங்கள் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க வெங்கட், மூன்று வாரங்களை இனிமையாக கழித்து வந்தீர்களா?
    அம்மா, அப்பா நலமா?
    ஆதியும், ரோஷ்ணியும் வந்து விட்டார்களா? அங்கு இருக்கிறார்களா?
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. குழந்தைகள் வெளிநாட்டில், வெளியூரிலில் இருக்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் வரும் நாள் தானே வசந்த காலம்! எல்லா பெற்றோர்களுக்கும் அந்த வசந்தகாலம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன்.//
    அன்பு கோமதி எத்தனை உண்மையான வார்த்தைகள். நானும் காத்திருக்கிறேன். குஅந்தைகளும் தாத்தா பாட்டிகளும் சேர்ந்தால் மகிழ்ச்சிக்கு ஏது முடிவு.
    வெயிலுக்கு இதமான உடை அணிவித்து நிறைய இளநீர் உண்டு வளமாக இருக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  30. வாங்க வல்லி அக்கா, உங்கள் மகள், குழந்தைகள் வரப்போகிறார்கள் உங்களுக்கும் வசந்த காலம் தான்.

    இளநீர் அருந்தி வெப்பத்தை தணித்து வருகிறோம்.

    வளமாக இருக்க வாழ்த்திய உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. "வசந்தகாலம்" என்றும் மகிழ்ச்சியே.

    அன்பு அனைவர் வாழ்விலும் நிலைக்கட்டும்.

    பேரனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  32. குடும்பத்தோடு ஒன்று கூடி மகிழ்ந்திருப்பீர்கள். நலங்கள் நிறையட்டும். வாழ்க!.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  33. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வந்து விட்டார்கள் என மகிழ்வதற்குள் ஊருக்குப் புறப்பட்டு விடுகிறார்கள்.

    மாயம் தான் .. வருவது புரிவதற்குள் போவது முடிவாகி விடுகிறது.

    பதிலளிநீக்கு
  34. இந்த மகிழ்சிக்கு முன்னால் , எதுவும் முக்யம் இல்லை என்பது அனுபவத்தில் நான் கண்டது. நேரம் போவதே தெரியாது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. வாங்க மாதேவி, நான் இன்னும் கோவையில்தான் இருக்கிறேன்.
    உங்கள் பின்னூட்டத்தை இன்று தான் பார்த்தேன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வாங்க வேதா. இலங்காதிலகம் இன்னும் அத்தை, மாமா,(மாமனார், மாமியார்) மற்றும் உறவினர்களுடன் இருக்கிறேன். அடுத்த மாதம் ஊருக்கு வந்த பின் பதிவுகளை பார்க்க வருவேன்.

    உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  37. வாங்க வெற்றி மகள், உங்கள் கருத்து சரியே! உங்கள் அனுபவம் உண்மை.
    உங்கள் கருத்துக்கும், உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. நலம்தானே அம்மா ஏன் பதிவுகள் எழுதுவது இல்லை புத்துணர்ச்சியுடன் வருக என வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  39. அன்பு இந்திரா, உங்கள் அன்புக்கு நன்றி.
    நலமாய் இருக்கிறேன்.

    அத்தைக்கு(மாமியாருக்கு) கண் ஆப்ரேஷன் அவர்களுக்கு உதவி வருகிறேன்.
    அடுத்த மாதம் முதல் எழுதவேண்டும்.

    பதிலளிநீக்கு
  40. //அது தான் அன்பு என்னும் அருமருந்து தரும் தெம்பு.//

    மாமனார், மாமியார் நாங்கள் ஊருக்கு போகும் போது மகிழ்வதும் திரும்பி வரும் போது அவர்கள் முகம் வாடிவிடுவதைப பார்க்கும் போது எனக்கும் ரொம்ப கவலையாக தான் இருக்கும் அம்மா... என்ன செய்வது நம்முடைய சூழ்நிலை ... எனக்கும் அனைவரும் ஒன்றாக இருந்தால்தான் பிடிக்கும் ..... உங்களுடைய பயணம் சிறக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  41. vijipathiban வாங்க, நீங்கள் சொல்வது உண்மை தான். நம் சூழ்நிலை விடுமுறையில் தான் மாமனார், மாமியார் அவர்களை மகிழ்ச்சிப்படுத்த முடிகிறது.
    அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சிதாம். முடிநத போது எல்லாம் மகிழ்ச்சியை கொடுப்போம், மகிழ்ச்சியை பெறுவோம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ஊருக்கு வந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  42. வாங்க தருமி சார், உங்கள் பின்னூட்டத்தை இப்போது தான் பார்த்தேன்.

    பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வந்து விட்டார்கள் என மகிழ்வதற்குள் ஊருக்குப் புறப்பட்டு விடுகிறார்கள்.
    மாயம்தான்//
    நீங்கள் சொல்வது சரி.

    அவர்களுடன் உறவினர் வீடுகள், பதிவர் சந்திப்பு என்று சிட்டாய் பறந்து விட்டது காலம்.

    அடுத்து மருமகள், பேரன் வருகிறார்கள் அடுத்தமாதம், அதுவும் அப்படித்தான் பறந்துவிடும் மாயமாய்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு