புதன், 12 ஜனவரி, 2011

பொங்கல் வாழ்த்து
செய்யும் விளைந்தது;
தையும் பிறந்தது
செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்!-புதுச்
செங்கதிர் கீழ்த்திசை கண்டோம்!
பொய்கை புதர்செடி
பூக்கள் நிறைந்தன;
பொன்னொளி எங்கணுங் கண்டோம்!-புதுப்
பொன்னொளி எங்கணுங் கண்டோம்!

மாவும் சுளைப்பலா
வாழையும் செந்நெலும்
வந்து குவிந்தது வீட்டில்! - தை
வந்தது வந்தது நாட்டில்!
கூவும் குயிலினம்
கூவாக் குயிலினம்
தாவிப் பறந்தது மேல்வான்!- ஒளி
தாவிப் பறந்தது கீழ்வான்!

சிட்டுச் சிறுவரின்
செங்கைக் கரும்புகள்
தொட்டுப் பிசைந்தன பொங்கல்! -அதை
இட்டு மகிழ்ந்தனர் பெண்கள்!
வெட்ட வெளியெலாம்
மெல்லியர் பண்ணிசை
மேவும்; சிலம்பொலி கேட்கும்; - தமிழ்
வெற்றி முரசெங்கும் ஆர்க்கும்!

------கவிஞர் வாணிதாசன்.

பாட்டாளி மக்களெல்லாம் பல்லாண்டு வாழ்கவே!
வீட்டுக்கு வீடு செல்வம் விரைந்துயர்ந்து பொங்குகவே!
நாட்டிலும் வீட்டிலும் நல்லோர் சொல் செயல்படுக!
ஏட்டறிவோடியற்கையறி வெங்கும் பொங்கித் திகழ்க!

------- வேதாத்திரி மகரிஷி

வலை உலக அன்பர்களுக்கு உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்.

17 கருத்துகள்:

 1. நல்ல நல்ல பாடல்களை அறிமுகப்படுத்துகிறீர்கள்.
  பொங்கல் வாழ்த்துக்கள்ம்மா..:)

  இதை இசையோடு பாடினால் இன்னு ம் நன்றாக இருக்கும் கேட்க...

  பதிலளிநீக்கு
 2. கோலங்கள் மிக அழகாக இருக்கிறது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 3. கோலங்களும் பாடல்களும் அழகு அருமை. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்:)!

  பதிலளிநீக்கு
 4. கோலங்கள் மிக அருமை. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. இன்னும் ரெண்டு மூணு நாலு இருக்கே..
  அதுக்குள்ள பொங்கல் வாழ்த்தா..?
  ஒருவேளை, நீங்க பிளாகுக்கு லீவு விட்டுட்டுப் போறீங்களோ ?

  பதிலளிநீக்கு
 6. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
  உங்கள் வாழ்த்துக்கு நன்றி. வாழ்த்திய விதம் அருமை. கோலங்கள், அழகாய் உள்ளன.

  பதிலளிநீக்கு
 7. குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் அம்மா :)

  பதிலளிநீக்கு
 8. பொங்கலுக்கான கோலங்கள், பாடல்கள் அனைத்தும் அருமை. உங்கள் வாழ்த்து எங்களை மகிழ்வித்தது அம்மா.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. "பொன்னொளி எங்கணுங் கண்டோம்!"
  இனிதான பாடல் வாழ்த்து மகிழ்ச்சியை தருகிறது.

  உங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய
  பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. கோலங்கள் அனைத்தும் சூப்பரு ;)

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்ம்மா ;)

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 13. அருமையான பகிர்வு,தாமதமான வாழ்த்துக்கள்.கோலம் மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
 14. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு