விநாயகர் படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விநாயகர் படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 செப்டம்பர், 2017

மகாகவி பாரதியார் கவிதைகள்

பாரதியார் நினைவு நாளில்  பாரதியாரின்
கவிதை  விநாயகர்  நான்மணி மாலையிலிருந்து சில :-

காலைப் பிடித்தேன் கணபதி! நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு  நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனகே.




No automatic alt text available.
எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல் ,
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந்திட நீ செயல்வேண்டும்.
கனக்குஞ் செல்வம், நூறு வயது;
இவையும் தரநீ கடவாயே.


Image may contain: 1 person, indoor


கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க !
வாரணமுகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரணமுகத்தான்  அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் , பண்ணவர் நாயகன்
இந்திர குரு, எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம் ; கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும் ; அகக்கண் ஓளிதரும்;
அக்கனி தோன்றும்  ; ஆண்மை வலியுறும் ;
திக்கெலாம் வென்று  ஜெயக்கொடி  நாட்டலாம் .
கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்றோங்கலாம்;
அச்சதீரும், அமுதம்விளையும் ;
விந்தை வளரும்; வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை  எய்தவும்
இங்கு நாம் பெறலாம் ; இஃதுணர் வீரே.

பாரதியின் கவிதைகள் புதிய சக்தியை ஊட்டும். புத்துணர்வு கொடுக்கும்.
தேசிய கவிக்கு வணக்கங்கள்.

                                                                   வாழ்க வளமுடன்.!