1973ஆம் வருடம் பிப்ரவரி 6 ஆம் தேதி !
மதுரை ,திருப்பரங்குன்றம் சாலையிலுள்ள “குமரக கல்யாண மண்டபத்தில்” இரவு 7மணிக்கு ஒரே பரபரப்பு!
‘என்ன இன்னும் மாப்பிள்ளை வரலை ! ’என்று ஆளுக்கு ஆள் பேசிக் கொண்டு இருந்தார்கள். ’கோவையிலிருந்து எத்தனை மணிக்கு புறப்படுவதாய் சொன்னார்கள், மாப்பிள்ளை அழைக்கப் போனவர்கள்’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தார்கள், பெண்ணின் அப்பாவிடம்.
கவலை தோய்ந்த முகத்துடன் கேள்வி கேட்கும் எல்லோருக்கும் நிதானமாய் உள்ளுக்குள் ஏற்பட்டு இருக்கும் பதட்டத்தை மறைத்துக் கொண்டு பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள் பெண்ணின் அப்பா . பெண்ணின் அம்மா எல்லா தெய்வங்களையும் வேண்ட ஆரம்பித்து விட்டார்கள். இப்போது போல் அந்தக் காலத்தில் அலைபேசி வசதிகள் இல்லை. கல்யாணமண்டபத்தின் தொலைபேசிக்கு காலதாமதத்தின் காரணத்தை சொல்ல மறந்து விட்டனர், மாப்பிள்ளை அழைக்கச் சென்றவர்கள்.
மாப்பிள்ளை அழைப்புக்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் தங்கள் மாப்பிள்ளை அழைப்பு எப்படி நடந்தது என்றும், வேறு ஊரில் எப்படி அசம்பாவிதங்கள் மாப்பிள்ளை அழைப்பின் போது நடந்தது என்றும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதைக் கேட்ட பெண்ணின் பெற்றோர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்தது.
1973இல் பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் பஸ் ஸ்டிரைக் வேறு. போக்குவரத்து இல்லை. அதனால் மிக நெருங்கிய உறவினர்கள் முன்பே வந்துவிட்டார்கள். மற்றவர்கள் ரயிலில் வந்துகொண்டு இருந்தார்கள் அவர்களை அழைக்க வேன், வாடகைக் கார் என்று ஏற்பாடு ஆகி இருந்தது.
வந்தவர்கள் எல்லாம் கேட்கும் கேள்வி - மாப்பிள்ளை வரவில்லையா? - என்பது தான். ஒரு வழியாக எல்லோர் பிரார்த்தனையின் பலனாய் நலமாக மாப்பிள்ளை வந்தார். வழியில் டயர் பழுது அடைந்து அதை மாற்றிவந்ததால் காலதாமதம். ( அந்தக்காலத்தில் 1973ல் நடந்த திருமணத்தில் மாப்பிள்ளை காலதாமதாய் வந்ததுபோல், 1997இல் நடந்த அவர்களின் மகளின் திருமணத்தின் போது மாப்பிள்ளை காலதாமதமாய் வந்தார். என்னே ஒற்றுமை! தஞசாவூரில் 1997-இல் பெரியகோயில் குடமுழுக்கு விழாவிற்கு முதல் நாள் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாய்ப் போக்குவரத்துப்பிரச்சினையால் அன்று அவர்கள் வருவது தாமதமானது. )
மாப்பிள்ளை வந்தார், மாப்பிள்ளை வந்தார். மாட்டு வண்டியிலே !
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!
என்று அந்தக்காலப் பாட்டு உண்டு. அதுபோல் மாட்டு வண்டியில் வந்து இருந்தால் கூட வந்து இருக்கலாம் போல மாப்பிள்ளை. அலங்கரித்த காரில் வந்தார் வந்தார் வந்தாரே!
மண்டபத்தின் அருகில் இருந்த பிள்ளயார் கோயிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு சிறப்பாக நடைபெற்றது.
மணமகன் வரவில்லை என்ற விபரம் எல்லாம் தெரியாமல் மணப்பெண் தன் அறையில் தன் மாமா பெண், அத்தை பெண், தன் பெரியப்பா, சித்தப்பா பெண்கள், அண்ணன், தம்பிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருந்தாள்.
இன்று போல் அன்று மாப்பிள்ளை , பெண் சேர்ந்து அமர்ந்து வரவேற்பு நடக்காது . மாப்பிள்ளை அழைப்பின்போது பெண் ஒளிந்து இருந்துதான் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் .
மறுநாள் மணமேடையில் எதிர் எதிராக ஆசனம் போட்டு இருப்பார்கள். அதில் பெண்ணையும் , மாப்பிள்ளையையும் அமர வைத்து இருப்பார்கள். அப்போதுதான் இருவரும் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பெண் ஊஞ்சலில் இருப்பாள், அப்போது மணமகன் பார்த்துக் கொள்வார்.
அப்புறம் மோதிரம் மாற்றி, மாலை மாற்றி - பின் தான் திருமணம்.
அந்த மணமக்கள் யார் என்று தெரிந்ததா? தெரியவில்லையா? அவர்கள் நாங்கள் தான். எங்களுக்குத்தான் பிப்ரவரி 7-இல் திருமணம் ஆனது.
1973ஆம் வருடம் பிப்ரவரி 6 ஆம் தேதி !
மாப்பிள்ளை அழைப்பு இப்படியாக நடந்தது.
அன்றைய தினம் நடந்த வேறு சில நாட்டுநடப்புகள் - சுதேசமித்திரன் நாளிதழில் இருந்து:- (40 ஆண்டுகளுக்கு முந்தைய நாளிதழ்)
(இப்போது சுதேசமித்திரன் வருவதில்லை)
எங்கள் திருமணத்தின்போது தங்கத்தின் விலை என்ன தெரியுமா?
1 கிராம் தங்கத்தின் விலை- ரூ25.25பை
அதாவது ஒரு பவுன் (22 காரட்) =ரூ202
வேறு செய்திகள்:-
மத்திய மந்திரிசபை விஸ்தரிப்பு
அப்போதும் தமிழகத்தில் மின்வெட்டு.
ஆலைத்தொழிலதிபர்களின் யோசனையைப் படித்துப்பாருங்கள்
அப்போதும் தெலுங்கானாப் போராட்டம்:-
அன்றைய ரேடியோ நிகழ்ச்சிகள்:-

![]() |
| மோதிரம் மாற்றல் |

சென்னையில் அன்று நடந்த சினிமாக்கள்:-
சுதேசமித்திரன் பதிப்பு நூல்கள் பற்றிய விளம்பரம்:-
வாழ்க வளமுடன்!
-------------