ஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும்!
"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்."
சூரியனை போற்றி பாடும் பாடல்
- மங்கல வாழ்த்துப் பாடல் , சிலப்பதிகாரம்
காலை பொழுது வரும் சூரியன் நம் மனதுக்கு மகிழ்ச்சியும் உடலுக்கும் நலமும் கொடுக்கும்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிழமை சிறப்பு. ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு. சூரிய வழிபாடு பழமையான வழிபாடு. சூரியன் ஒவ்வொரு பருவ காலத்திலும் ,ஒவ்வொரு வண்ணத்தில் காட்சி தருவாராம். வசந்த காலத்தில் பொன் வண்ணம்(தங்க நிறம்) , கோடை காலத்தில் செண்பகப்பூ நிறம், மழைக்காலத்தில் வெண்மை நிறம், முன்பனிக்காலம் தாமரை நிறம் ,பின் பனிக்காலம் சிவப்பு நிறம் .
ஆடி வெள்ளி சிறப்பு , அது போல ஆவணி ஞாயிறு சிறப்பு .
நாங்கள் ஆவணி ஞாயிறு சூரியனுக்கு பொங்கல் வைத்து வணங்குவோம்.
இந்த மாதம் (ஆகஸ்டு) 22 ம் தேதி ஆவணி ஞாயிறு வருகிறது.
வீட்டு வாசலில் ஆவணி மாதம் அதிகாலையில் சூரியனுக்கு பொங்கல் வைக்கும் காட்சி ( தங்கை வீடு மதுரை)
