பயணத்தின்போது கண்ட காட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணத்தின்போது கண்ட காட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 ஜூலை, 2017

பயணத்தின்போது கண்ட காட்சிகள்

மாறுதலாக ஒரு பதிவு. ஸ்ரீராம், வெங்கட்.  இருவரும் இன்று போட்ட பதிவைப்பார்த்தவுடன் நான் எடுத்த படங்களை மட்டும் போட்டால் என்ன என்ற ஆசை வந்து விட்டது. பயணங்கள் போது எடுத்த படங்கள்.
இந்த படங்களில் கடைசியில் நான் எடுத்த படங்கள்தான்  என்பதை உறுதிப்படுத்துவது போல் ஒரு குறிப்பு  இருக்கிறது. சொல்லுங்கள் பார்க்கலாம் பார்த்து.


மரத்தின் நிழல்  தெரிகிறதா ? மதில் மேல்

  கோவில் மதில்  மேல்   வயதான குரங்காரார் அமர்ந்து   மனிதர்களை வேடிக்கை பார்க்கிறார். 
திருப்பரங்குன்றம்  மதில் மேல் அமர்ந்து இருக்கும் குரங்காரார்

அணிலே! அணிலே ! அழகு அணிலே என்ன வேலை செய்கிறாய்?


பறித்துப் பறித்துக்காய்களைக் கொறித்துக் கொறித்துக் தின்கிறேன்
(பரங்குன்றம் மலை)


ஏதாவது தரமாட்டாயா? என்ற பார்வை. 


அம்மி, ஆட்டுக்கல்லில் அமர்ந்து அரைக்க  மரப்பலகை 
பாரதியாரைப் போலீஸ்காரர் படம் எடுக்கும் போது தலையைக் குனிந்து தலைப்பாகையை  மட்டும் காட்டுவார். அது போல் வாத்து தலையை தன் முதுகில் மறைத்துக் கொண்டது.
முகம் காட்டி விட்டேன் இப்போது திருப்தியா?

பூவும் எறும்பும்


உச்சிக் கொம்பில் அமர்ந்து பார்க்கும் புல் புல் (பரங்குன்றம்)


பெளர்ணமி பால்குடம், காவடி பரங்குன்றம் முருகனுக்கு

மைசூரு - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் 

'ஊரெங்கும்  என் தயவு வேண்டி இருக்கிறது வருணபகவான் வரவில்லாமல்' என்கிறதோ தண்ணீர் லாரி.
இதன் வரவு குறைய  வருணபகவான் மழையைக் கொடுக்க வேண்டும் உயிர்கள் தழைக்க!


வாழ்க வளமுடன்.