இந்த தேன் சிட்டு மகன் வீட்டு தோட்டத்தில் உள்ள காய்ந்த மரத்தில் அமர்ந்து இருந்தது. எளிதில் படம் எடுக்க முடியாதபடி பறந்து கொண்டே இருக்கும். என்னமோ தெரியவில்லை ஓய்ந்து அமர்ந்து இருந்தது மரக்கிளையில். எனக்கு படம் எடுக்க வசதியாக இருந்தது. தோட்டத்திற்கு வரும் பறவைகளுக்கு பிடித்த மரம்.
பறவைகளின் அன்பால் மரம் துளிர்க்க ஆரம்பித்து விட்டது. கீழ் இருந்து துளிர்த்து கொண்டு இருக்கிறது., நிறைய கிளைகள் , துளிர் இலைகள் வந்து விட்டது.
