இன்று உலக சிட்டுக்குருவி தினம்!
இந்த தினத்தில் சிட்டுக்குருவி பற்றி ஒவ்வொரு ஆண்டும் பதிவு போடும் நான் போடவில்லை என்றால் குருவி அதிராவின் மூலம் கேட்டு விட்டது.
//இன்றைய சிட்டுக்குருவிகளைக் கொண்டாட மறந்திட்டீங்களே கோமதி அக்கா:)//
அதிராவிற்கு நான் அளித்த பதில் :- சிட்டுக்குருவி தினத்தை மறக்கவில்லை. முகநூலில் பகிர்ந்து இருக்கிறேன்.
நான் மறந்தாலும் மார்க் மறக்காமல் போன வருடம் போட்டதைக் காட்டியது அதைப் போட்டு விட்டேன்.
அதிரா கேட்டதால் அதிரா படிக்காத 2014ல் பதிவு செய்த "சிட்டுக்குருவியைத் தேடித் தேடி "என்ற பழைய பதிவை இங்கு மீள் பதிவாக்கி விட்டேன்.
நாங்கள் மயிலாடுதுறையில் இருந்த போது போட்ட பதிவு. அங்கு நான் இருந்த வீட்டில் பல பறவைகள் வரும். ஆனால் சிட்டுக்குருவி வரவில்லை.
ஆனால் இப்போது மதுரையில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நிறைய இருக்கிறது. அதனைப் படம் எடுத்து நிறைய பதிவுகள் போட்டு விட்டேன்.