வெள்ளி, 25 செப்டம்பர், 2026

எங்கள் குறை தீர்த்தே வரம் அருள்வாய் கணநாதா!




மகன் வீட்டு பிள்ளையார்கள் சதுர்த்தி அன்று.  

இந்த பதிவில் எங்கள் வீட்டு   சதுர்த்தி விழா படம்,  மற்றும்  நண்பர்கள் வீட்டு  விநாயகர்  படங்கள்,    ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் நடந்த  பிள்ளையார் சதுர்த்தி விழாநிறைவு படங்கள் இடம் பெறுகிறது.

   கவின் சிறு வயதில் செய்த லேகோ பிள்ளையாருடன் சதுர்த்தி அன்று.


ஆந்திராவை சேர்ந்த நணபர் வீட்டில் விநாயகர் பூஜை




வீட்டின் உள்ளே நுழைந்தவுடன்    காட்சி கொடுப்பவர் பெருமாள்.
கண்கள் மலர்ந்து நம்மை பார்த்து சிரிப்பது போல அழகிய கண்கள்.
அன்று புரட்டாசி சனிக்கிழமை புளியோதரையும்,  கொண்டைக்கடலை சுண்டலும் வைத்து இருந்தார்கள் அவர் முன். 

ஆந்திராவிலிருந்து செய்து கொண்டு வரபட்ட பெருமாள். புரட்டாசி  சனிக்கிழமை பெருமாள் தரிசனம் கிடைத்தது.


வட நாட்டை சேர்ந்த நண்பர்  (குஜராத்தி) வீட்டில் பிள்ளையார் பூஜை 


மகன் செய்த பலகையில் மருமகள் கோலம்  வரைந்து  அவர்களுக்கு  பரிசாக கொடுத்தார்கள்.அவர்கள் அதில் ஆரத்தி  செய்ய விளக்குகளை வைத்தார்கள்.

வந்தவர்களை எல்லாம் பூஜை செய்ய சொன்னார்கள். ஆரத்தி பாடல் முடியும் வரை  ஆரத்தி காட்டப்பட்டது.





அவர்கள் வீட்டில் இந்தியில் பாடியது நான் தமிழ் பாடலை பகிர்ந்து இருக்கிறேன்.




மகன் செய்த சிறு பிள்ளையார் பொம்மையை சிறு தட்டில் வைத்து பலகை மேல் வைத்து பூவுடன் கொடுத்தாள் மருமகள். மணிக்கு பின்னால் இருக்கிறது


அவர்கள் வீட்டில் வழங்க பெற்ற பிரசாதம் மாம்பழ ஜூஸ்  மூன்று வகை இனிப்புகள் பாவ்பாஜி அப்பளம், வற்றல், பிரியாணி போல ஒரு சாதம் நான் அதை சாப்பிடவில்லை.  பன்னில் உருளை , நிலக்கடலை  ஓமபொடி வைத்து  ஒரு டிஷ்



ஸ்ரீ மகா கணபதி ஆலயம்

ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில்  அரசமரத்தடியில் இருக்கும் பிள்ளையார்


மரத்தடியில் இப்போது புதிதாக மூவர் சிலைகள் உள்ளது. பிரம்மா, விஷ்ணு ,சிவன்

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நான்காம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து  சிறப்பாக ஹோமம் , அபிஷேகம், அலங்காரம், உற்சவ விநாயகர் கோயிலை சுற்றி ஊர்வலமாக  வந்து என்று அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது.

நிறைவு நாளில்  கோயிலில் பெரிய நீச்சல் குளம் போல ஏற்பாடு செய்ய பட்டு இருந்த  தொட்டியில் விநாயகர் தீர்த்தவாரி செய்தார். அதை தொடர்ந்து பெண்கள் முளைபாறி கரைத்தார்கள், பின்னர் குழந்தைகள், பெரியவர்கள்  விநாயகரை விசர்ஜனம்(கரைத்தார்கள்) செய்தார்கள்.

                                                                 கொடிமரம்  

நாங்கள் போன போது கூட்டம் இல்லாமல் இருந்தது கோவிலை மெதுவாக வலம் வந்து வணங்கி விட்டு கொடிமரத்துக்கு பின் பக்கம் நாற்காலி போட்டார்கள் எனக்கும், சம்பந்திக்கும் அதில் அமர்ந்து பூஜைகளை பார்த்தோம். அதனால் அமர்ந்த இடத்திலிருந்து தெரிந்தவற்றை நான் எடுத்தேன் படங்கள்,  பல படங்கள் கோவில்  நிர்வாகத்தினர் எடுத்த படங்கள். அவர்கள் மகனுக்கு அனுப்பி வைத்தார்கள். கோவிலை சுற்றி உள்ள சுவாமிகள் மிக அலங்காரமாக இருந்தார்கள்  அவர்களை எல்லாம் எடுத்தேன் இன்னொரு நாள் பகிர்கிறேன்.முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.





வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி சிலையை வைத்து வழிபட ஒரு பூஜா மண்டபம் கேட்டு இருந்தார்கள் மகன் செய்து கொடுத்தான் . 
சித்திரை மாத வளர்பிறை தசமியில் வாசவி ஜெயந்தி அன்று வழி பாடு சிறப்பாக செய்யபடுவதாக மகன் சொன்னான்.  


முதல் நாள் செய்த அலங்காரத்தில் விநாயகர்


கரும்பு சாறு செம்புகளில் ஊற்றப்படுகிறது கட்டளைக்கு கொடுத்து இருக்கும் குடும்பத்தார்கள் எல்லாம் செம்பை தூக்கி கொண்டு பிள்ளையாரை வலம் வந்து அபிஷேகம் செய்யும் குருக்களிடம் கொடுத்தார்கள்.அபிஷேகம் செய்யப்பட்டது.

ஸ்ரீ சக்கரத்தாழ்வார், சிவபெருமான் மற்றும் பிள்ளையாருக்கு கரும்புச்சாறினால் அபிஷேகம் செய்தால் எல்லா நலன்களும் கிடைக்குமாம்.

கரும்புச் சாறினால்  பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்தால் நம் உடலில் உள்ள தீரா நோய்நொடிகள் மற்றும் பிணிகள் நீங்கி நல் ஆரோக்கியம் கிடைக்குமாம்.

துன்பங்கள் மற்றும் வறுமை நீங்குமாம். செல்வ வளம் பெருகி மகிழ்ச்சி கிடைக்குமாம்.

நம்மை சுற்றி உள்ள பகைமை, மற்றும் எதிரிகள் தொல்லைகள் , பொறமைகள் நீங்கி அமைதியான வாழ்வு கிட்டுமாம். 

எல்லோருக்கும் எல்லா நலன்களையும் விநாயகர் அருளட்டும்.




பால், பழம் , பஞ்சாமிர்தம், மஞ்சள் மற்றும் பல வாசனை திரவியங்கள்  அபிஷேகம்


பால் அபிஷேகம்

ஹோம புகை கோயிலில் சுற்றாமல் இருக்க ஹோமகுண்டத்திற்கு மேல்  புகை போக்கி

பூர்ணாகுதி


 பூஜிக்க பட்ட புனித நீர் உள்ள    கடங்கள் கோவிலை வலம் வந்தது,  அபிஷேக கடங்களுக்கு பூஜை 


கட ம் அபிஷேகம்

பூஜை 

கோயிலுக்கு வந்த பக்தர்கள்

மகன் பொன்னாடை பெறுகிறான்

தந்தையை போலவே தனயனும் கோயிலில் பொன்னாடை பெறுகிறான்.
அவன் அப்பா, தாத்தா  கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் செய்து பொன்னாடை பெறுவார்கள். மகன் கோயில் பணி செய்து பொன்னாடை பெறுகிறான்.

அலங்காரம் செய்யப்படும் இடைவெளியில் தன்னார்வ  தொண்டர்களுக்கு மரியாதை , பிரசாதங்கள்  வழங்கப்பட்டது




கோயில் மரியாதைகள் செய்யப்பட்ட தன்னார்வலர்கள்


மகன் விநாயகர் முன்  பழக்கங்கள் வைக்க மரத்தில்   சின்ன ஸ்டூல் போல செய்து கொடுத்தான்   முன்னால் பக்கம் மணிகள் தொங்கும். 

ஊர்வலமாக  போக அலங்காரத்தோடு இருக்கும் உற்சவர்


உற்சவர் அமர போகும் பிள்ளையார் வாகனம்





ஆட்டம், பாட்டத்தோடு  வெயிலை பொருட்படுத்தாது  கோயிலை வலமாக இழுத்து வந்த பக்தர்கள்



தீர்த்தவாரி

பத்து நாட்கள் யாகசாலையில் இருந்த முளைப்பாரிகளை  கரைக்கும் பெண்கள்



பிள்ளைகள் வீட்டிலிருந்து கொண்டு வந்த பிள்ளையாரை  கரைக்கிறார்கள்


கரைக்க இருக்கும் பிள்ளையார்கள் பைகளில், கூடைகளில் என்று நிறைய இருக்கிறது.



அலங்காரத் தோற்றத்தில் விநாயகர்


சாதம் , காய்கள் டப்பாவில்



பாயாசம், ஊறுகாய்,  இனிப்பு , தண்ணீர் பாட்டில்  இவைகள்  

அன்னதானத்தோடு விழா இனிதாக நிறைவேறியது.

 காசு கொடுத்து வாங்கும் உணவகமும் இருந்தது, லட்டு, அதிரசம், மிச்சர், குளிர் பானங்கள் விற்கபட்டன. நாங்கள் இன்னொரு இடத்திற்கு போக வேண்டி இருந்ததால்  கூட்டத்தில் வரிசையில் நின்று உணவு வாங்க முடியாது என்று காசு கொடுத்து வாங்கும் உணவகத்தில் மாங்கோ லச்சி, பூரி, தோசை வாங்கி சாப்பிட்டு விட்டு திரும்பி விட்டோம் வீட்டுக்கு. பாதை பழுது பார்க்க படுவதால் வேறு வழியில்  திருப்பி விட்டார்கள் வாகனங்களை அதனால் நெருக்கடி ஏற்பட்டு மெதுவாக நகர்ந்தன கார்கள். வழ்க்கத்தை விட அதிக நேரம் ஆனது வீடு வந்து சேர.


ஸ்ரீ மகா கணபதி ஆலயம் அரிசோனா  மேலும் இந்த கோயில்  விழா படங்கள் எல்லாம் இங்கு பார்க்கலாம். மகன் , பேரன் , மருமகளை கோவிலுக்கு "எப்படி வர வேண்டுமோ அப்படி வந்து இருக்கிறீர்கள்" என்று பாராட்டி படம் எடுத்து கோயில்   முக நூல் பக்கம் போட்டு இருக்கிறார்கள்.

எங்கள் குறை தீர்த்தே வரம்  அருள்வாய் கணநாதா!

  அனைவர் வாழ்விலும்   என்றும் நன்மைகள் திகழ மகா கணபதி அருள் புரிய வேண்டி கொள்வோம். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

 
-----------------------------------------------------------------------------------------------------------------------------

32 கருத்துகள்:

  1. சுண்டலை விடுங்கள்..  ஆ..  புளியோதரையா?  ஆனால் அக்கா..  இப்போது புளியோதரையிலும் சுவாரஸ்யம் குறைந்து வருகிறது... 

    பெருமாள் அழகாக இருக்கிறார். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //சுண்டலை விடுங்கள்.. ஆ.. புளியோதரையா? ஆனால் அக்கா.. இப்போது புளியோதரையிலும் சுவாரஸ்யம் குறைந்து வருகிறது... //

      போச்சுடா கோயிலில் அடிக்கடி புளியோதரை சாப்பிட்டு விட்டீர்களா?
      கிடைக்கவில்லை கோயிலில் என்று சொன்னீர்களே!

      //பெருமாள் அழகாக இருக்கிறார். //

      ஆமாம் , அதுதான் பகிர்ந்தேன்.

      நீக்கு
  2. பல்வேறு வீடுகளின் விநாயகரை தரிசித்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பல்வேறு வீடுகளின் விநாயகரை தரிசித்தது மகிழ்ச்சி.//

      முன்பு கோயிலில் எத்தனை பிள்ளையார் பார்த்தோம் என்று எண்ணிக் கொண்டே வருவோம் . பிள்ளையார் ஊர்வலம் பார்ப்போம் ,

      இங்கு பேரன் படிகளில் பிள்ளையாரை அடுக்கி விட்டு எண்ணினான் எத்தனை பிள்ளையார் என்று.
      இந்த முறை கோயில், பல வீடுகளில் பிள்ளையார் தரிசனம் செய்தது எனக்கும் மகிழ்ச்சி.

      நீக்கு
  3. மணிக்குப் பின்னால் மறைந்ததது மகன் செய்த பிள்ளையார்!  மணியை நகர்த்தி வைத்து எடுத்திருக்கக் கூடாதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே எங்கள் வீட்டு கொலுவில் பலகை மேலே பிள்ளையார் தலை மட்டும் இருக்கும் பாருங்கள் அதே மாதிரி பிள்ளையார் தான் கொடுத்தார்கள் அவர்கள் வீட்டுக்கு.

      நீக்கு
  4. ப்ரசாதத்தில் கொழுக்கட்டையைக் காணோமே...  பிள்ளையாரும் வருத்தபப்டுவார்!!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மருமகள் செய்து வைத்து இருக்கும் பிரசாதம் பாருங்கள், அதில் மோதகம், இனிப்பு , கார பிடி கொழுக்கட்டை, எள் உருண்டை, அவல், பொரி, கடலை எல்லாம் இருக்கும். அழைத்தவர்கள் வீட்டில் தான் கொழுக்கட்டை இல்லை.

      நீக்கு
  5. ஆலயம் தொழுவது சாலவும் நன்றி.  கோவில் புகைப்படங்கள் நன்று.  அங்கும் விநாயக தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆலயம் தொழுவது சாலவும் நன்றி. கோவில் புகைப்படங்கள் நன்று. அங்கும் விநாயக தரிசனம்.//

      ஆலயம் தொழுவது சாலவும் நன்றுதான்.

      கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல பிழைக்க போன இடங்களில் கோயிலை கட்டிக் கொண்டு வழிபட்டு வருகிறார்கள். நிறைய புது கோவில்கள் வந்து இருக்கிறது இப்போது. இங்கு.

      நீக்கு
  6. மகன் பொன்னாடை பெறுவதும்,, உங்கள் வரிகளும்....   

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மகன் பொன்னாடை பெறுவதும்,, உங்கள் வரிகளும்....

      ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்...//

      ஆமாம், நீங்கள் சொன்னது போல மகிழ்ச்சியாக இருந்தாள் இந்த தாய்.அவனின் அப்பாவும் இருந்து இருந்தால் என்ற எண்னமும் வந்து போனது.

      நீக்கு
  7. வினைதீர்க்கும் விநாயகன் நம் எல்லார் குறைகளையும் களையட்டும்.  இந்தப் பதிவில் கவின் படம் தனியாக இல்லாததை அன்புடன் கண்டிக்கிறேன்!!!!!

    // மகன் , பேரன் , மருமகளை கோவிலுக்கு "எப்படி வர வேண்டுமோ அப்படி வந்து இருக்கிறீர்கள்" என்று பாராட்டி படம் எடுத்து கோயில் முக நூல் பக்கம் போட்டு இருக்கிறார்கள்.
    //

    சூப்பர். உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வினைதீர்க்கும் விநாயகன் நம் எல்லார் குறைகளையும் களையட்டும். இந்தப் பதிவில் கவின் படம் தனியாக இல்லாததை அன்புடன் கண்டிக்கிறேன்!!!!!//

      // மகன் , பேரன் , மருமகளை கோவிலுக்கு "எப்படி வர வேண்டுமோ அப்படி வந்து இருக்கிறீர்கள்" என்று பாராட்டி படம் எடுத்து கோயில் முக நூல் பக்கம் போட்டு இருக்கிறார்கள்.
      /

      சூப்பர். உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.//

      மகிழ்ச்சி தான். உங்களுக்கு மேலும் மகிழ்ச்சி தர

      கவின் படம் சேர்த்து விட்டேன் .

      உங்கள் எல்லா கருத்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ரசிகனின் வேண்டுகோளை ஏற்று, கவின் படம் இணைத்ததற்கு நன்றி! பார்த்துவிட்டேன். ரசித்து விட்டேன்.

      நீக்கு
    3. வந்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம். பேரனிடமும் சொன்னேன் மகிழ்ந்தான்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அழகான படங்களுடன் பதிவை மிக அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்.

    தங்கள் மகன் வீட்டு விநாயக சதுர்த்தி முதல் படம் கண்களை கவர்கிறது. தங்கள் தங்கை வீட்டில் வைத்தது போல உங்கள் வீட்டிலும், நான்கு படி விநாயகர் கொலு வைத்து விட்டீர்கள். ஒவ்வொரு பிள்ளையார்களாக பார்த்துப்பார்த்து ரசித்தேன். பிண்ணனியில் சுவரில் தொங்க விட்ட அந்த திரைச்சீலை கோவில் அமைப்புடன் நன்றாக உள்ளது. கீழ்தட்டில் பிள்ளையாருக்கு படைத்த பிரசாதங்களும் அருமை.

    நண்பர் வீட்டில் பெருமாள் சிலையும் நன்றாக உள்ளது. பிள்ளையாரையும், பெருமாளையும் ஒருசேர தரிசித்துக் கொண்டேன். மற்றும் தாங்கள் பகிர்ந்த பலவற்றையும் ஒவ்வொன்றாக பெரிதாக்கி பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் , வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. அழகான படங்களுடன் பதிவை மிக அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள்.//

      நன்றி.

      //தங்கள் மகன் வீட்டு விநாயக சதுர்த்தி முதல் படம் கண்களை கவர்கிறது. தங்கள் தங்கை வீட்டில் வைத்தது போல உங்கள் வீட்டிலும், நான்கு படி விநாயகர் கொலு வைத்து விட்டீர்கள். ஒவ்வொரு பிள்ளையார்களாக பார்த்துப்பார்த்து ரசித்தேன். பிண்ணனியில் சுவரில் தொங்க விட்ட அந்த திரைச்சீலை கோவில் அமைப்புடன் நன்றாக உள்ளது. கீழ்தட்டில் பிள்ளையாருக்கு படைத்த பிரசாதங்களும் அருமை.//

      அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி. போன ஆண்டில் இருந்து படிகளில் வைக்கிறான். திரைச்சீலை மகன் வடிவமைத்தது தான்.
      பிரசாதங்களை பாராட்டியதற்குநன்றி.

      //நண்பர் வீட்டில் பெருமாள் சிலையும் நன்றாக உள்ளது. பிள்ளையாரையும், பெருமாளையும் ஒருசேர தரிசித்துக் கொண்டேன். மற்றும் தாங்கள் பகிர்ந்த பலவற்றையும் ஒவ்வொன்றாக பெரிதாக்கி பார்த்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      வாருங்கள் மெதுவாக காலை நேர வேலைகள் இருக்கே! பல்வலி எப்படி இருக்கிறது? அது வேறு வேதனை தருமே! பல்வலி இருக்கும் போது ஓய்வு எடுத்தால் நலம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.

      .

      நீக்கு
  9. மகன் வீட்டு விநாயகர் கொலு, நண்பர்கள் வீட்டு பிள்ளையார்கள், மகா கணபதி ஆலய தரிசனம் என விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்ட நிகழ்வுகளின் தொகுப்பு சிறப்பு. நேர்த்தியான பூஜா மண்டபம். ஈடுபாட்டுடன் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் உங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்த மரியாதையும் மகிழ்ச்சிக்குரியது. கோயில் விழாப்படங்களை இணைப்பின் வழியாகச் சென்று முகநூல் பக்கத்திலும் பார்த்தேன். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //மகன் வீட்டு விநாயகர் கொலு, நண்பர்கள் வீட்டு பிள்ளையார்கள், மகா கணபதி ஆலய தரிசனம் என விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்ட நிகழ்வுகளின் தொகுப்பு சிறப்பு. //

      நன்றி ராமலக்ஷ்மி.


      //நேர்த்தியான பூஜா மண்டபம். ஈடுபாட்டுடன் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் உங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்த மரியாதையும் மகிழ்ச்சிக்குரியது. கோயில் விழாப்படங்களை இணைப்பின் வழியாகச் சென்று முகநூல் பக்கத்திலும் பார்த்தேன். அருமை.//

      பதிவில் அனைத்தையும் ரசித்துப்பார்த்து , முகநூல்படங்களையும் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி

      நீக்கு
  10. பதிவில் எல்லாப் படங்களுமே அழகாக இருக்கின்றன

    கோபுரம் படத்தை பின்னணியாக்க் கொண்ட அலங்காரம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //பதிவில் எல்லாப் படங்களுமே அழகாக இருக்கின்றன

      கோபுரம் படத்தை பின்னணியாக்க் கொண்ட அலங்காரம் அருமை//

      மகன் தயார் செய்த திரை சிலைதான்.

      நன்றி நெல்லைத் தமிழன்
      ஊருக்கு எல்லாம் போய் வந்து விட்டீர்களா?
      ஆலய தரிசனங்கள் நல்லபடியாக நடந்து இருக்கும் இல்லையா?

      நீக்கு
  11. மரத்தில் மண்டபங்கள் போன்றவை செய்து கொடுக்கும் சேவை.

    தங்கள் மகன் வாழ்க பல்லாண்டு. அந்த நல் எண்ணம் அவர் பையன் மனதிலும் படியும். சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மரத்தில் மண்டபங்கள் போன்றவை செய்து கொடுக்கும் சேவை.//

      ஆமாம் ,விளையாட்டாக பொழுது போக்காய் ஆரம்பித்தான், அது இப்போது இறைவனுக்கு செய்து கொடுக்க வைத்து இருக்கிறது.

      //தங்கள் மகன் வாழ்க பல்லாண்டு. அந்த நல் எண்ணம் அவர் பையன் மனதிலும் படியும். சூப்பர்//

      உங்கள் வாழ்த்துக்கு நன்றி நெல்லைத்தமிழன். பேரனும் கோயில்களுக்கு விளம்பர பலகை அழகாய் செய்து கொடுக்கிறான்.

      நீக்கு
  12. பாரம்பர்ய உடையில் மகன் மற்றும் கவின் படங்கள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாரம்பர்ய உடையில் மகன் மற்றும் கவின் படங்கள் மிக அழகு.//

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  13. மிகவும் சிறப்பான விநாயக சதுர்த்திக் கொண்டாட்டம்.

    நிறைந்த படங்களும் நீண்ட பதிவும் விழாவை சிறப்பாக்குகின்றன.

    மகன் வீட்டு விழா, கோவில் விழா, நண்பர்கள் வீட்டுவிழா என சகலத்தையும் படங்கள் எடுத்துப் போட்டுள்ளீர்கள். கண்டு வணங்கினோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி,வாழ்க வளமுடன்

      மிகவும் சிறப்பான விநாயக சதுர்த்திக் கொண்டாட்டம்.

      //நிறைந்த படங்களும் நீண்ட பதிவும் விழாவை சிறப்பாக்குகின்றன.//

      உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், எனது செமிப்பாகவும் பதிவு அமைந்து விட்டது.

      //மகன் வீட்டு விழா, கோவில் விழா, நண்பர்கள் வீட்டுவிழா என சகலத்தையும் படங்கள் எடுத்துப் போட்டுள்ளீர்கள். கண்டு வணங்கினோம். நன்றி.//

      நம் மக்கள் பிழைப்புக்காக வெளிநாடு போனாலும் அவர்கள் குடும்பம் கடைபிடிக்கும் பழக்கங்களை விடாமல் செய்கிறார்கள் என்பதை சொல்லவே இந்த பதிவு
      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  14. ஆ! எத்தனை விதாமான விநாயகர்கள் வைத்திருக்கிறீர்கள்? பல வருடங்கள் சேர்த்ததா?
    உங்கள் கணவரைப் போலவே உங்கள் மகனும் கோவிலில் பொன்னாடை மரியாதை பெறுவது சந்தோஷம். இறையருள்.
    கவின் செய்திருக்கும் லேகோ பிள்ளையார் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன்,வாழ்க வளமுடன்

      //ஆ! எத்தனை விதாமான விநாயகர்கள் வைத்திருக்கிறீர்கள்? பல வருடங்கள் சேர்த்ததா?//

      ஆமாம், மகன், அவர்கள் அப்பா, பேரன், மருமகள் செய்த பிள்ளையார்கள்மற்றும் கொலுவுக்கு வாங்கிய பிள்ளையார்கள் உள்ளது..

      //உங்கள் கணவரைப் போலவே உங்கள் மகனும் கோவிலில் பொன்னாடை மரியாதை பெறுவது சந்தோஷம். இறையருள்.//

      ஆமாம், கோவில் பணி செய்ய அவனுக்கு கிடைத்தது இறையருள்தான்.


      //கவின் செய்திருக்கும் லேகோ பிள்ளையார் அழகு.//

      மிக சிறு வயதில் செய்த லேகோ பிள்ளையார்

      நீக்கு
  15. பிரசாதமாக பாவ் பாஜியும், பர்கரும்.. interesting!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பிரசாதமாக பாவ் பாஜியும், பர்கரும்.. interesting!//

      அவர்கள் வட நாட்டை சேர்ந்தவர்கள் மூன்று வகை ஸ்வீட் மற்றும்பாவ் பாஜி, பர்கர்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு