ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

சஃபாரி வேர்ல்ட் பாங்காக் மிருகக்காட்சிசாலை பாகம் -2




இதற்கு முன்பு போட்ட பதிவு


கொக்கும் அதன் குஞ்சுகளும்




 

திறந்தவெளி மிருகக்காட்சி சாலையில் இருக்கும்  மிருகங்களைப்பார்க்க மனிதன் கூண்டு வண்டிக்குள்.


காரில் வெள்ளை  எருக்கம் பூ தென்னை ஓலையால் செய்த மாலை. இதை எல்லா வாகனங்களிலும் பார்க்கலாம்.


புலியை பார்க்கப் போகிறோம்



சம்பந்தி அம்மா பேரனிடம்  புலி வருதுடா என்று சொல்லும் சிறிய  காணொளி, காணொளி எடுத்த போது அவர்கள் பேரனிடம் பேசியதும் பதிவு ஆகி இருக்கிறது.


நடைபோடும் புலி  கொஞ்சம் பக்கத்தில் பயமில்லாமல் நடைபோடும் கொக்கு. ஒரு புலி படுத்து இருக்கும் மிக  சிறிய காணொளி தான் பார்க்கலாம்.


நிறைய புலிகள் பார்க்கலாம், நடைபோட்டுக் கொண்டும், நிழலில்படுத்து கொண்டும் இருக்கும். அவைகளை வரிக்குதிரை   போல பெயிண்ட செய்யப்பட்ட ஜீப்பில் வந்து ஒருவர்  கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்.


நடை போடும் புலி, பரண் போன்ற அமைப்பு இப்படி புலிகளுக்கு வைத்து இருக்கிறார்கள். அதிலிருந்து குதித்து கீழே நடைபோடுகிறது.

கொக்கும் பக்கத்தில் நடக்கிறது

வெகு தூரத்தில் நிழலில் படுத்தும் நின்றும் கொண்டும் உள்ள  புலிகள் தெரிகிறதா?


நிழலில் குட்டித்தூக்கம் போடும் கரடிகள் அருகில் காகங்கள்.


கரடியின் இருப்பிடம் மிக அழகாய் இருக்கிறது


மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகளால் மூடிய குட்டையில் மூழ்கி மேலே எழுந்த கரடி அதன் மேல் எல்லாம் இலை ஒட்டிக் கொண்டு இருக்கிறது.


உடலை சிலிருந்து இலைகளை உதிர்த்து குட்டையிலிருந்து  மேலே வரும் கரடி


சிங்கம் பார்க்க போகிறோம்

பெண் சிங்கங்கள்  படுத்து இருக்கிறது, பக்கத்தில் ஆண்சிங்கம் அமர்ந்து இருக்கிறது




இந்த இரண்டு படங்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது




இந்த காணொளி பாருங்கள் கொக்குகள் மரம் முழுவதும் இருக்கும் குஞ்சுகளுக்கு உணவு அளிக்க  சண்டை போடும் பெரிய கொக்குகள். காரில் போய் கொண்டே எடுத்த காணொளி. முழுவதும் பாருங்கள் சிறிய காணொளி தான்.

அடுத்த பதிவில் மான்கள், சிறிய ஓட்டகம்,  பஞ்சவர்ண கிளிகள், பேசும் கிளிகள் வரும்.


அனைவருக்கும் தமிழ் புத்தண்டு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

--------------------------------------------------------------------------------------------------

42 கருத்துகள்:

  1. கடைசி காணொளி இப்ப பார்த்திருக்கிறேன் கோமதிக்கா....அருமையா இருக்கு

    அந்தக் கூட்டின் அருகில் குஞ்சுகளோடு இருக்கும் இரு கொக்குகள் அலகுகளால் செய்வது அவை விஷயம் பரிமாறிக் கொள்கின்றனவோ? அவற்றின் உடல் மொழியாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது.

    இங்கு ரங்கனதிட்டுவில் அப்படி ஒரு மரத்தில் பார்த்தப்ப, இணைவதற்கு முன் அப்புறம் இணைய முயற்சித்தல் வந்திருந்தது அப்போது தெரியவில்லை வீட்டிற்கு வந்து காணொளியை சேமிக்கும் போதுதான் தெரிந்தது ஆஹா!!! வந்திருக்கிறதே என்று..

    பின்னர் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //கடைசி காணொளி இப்ப பார்த்திருக்கிறேன் கோமதிக்கா....அருமையா இருக்கு//

      நன்றி.

      //அந்தக் கூட்டின் அருகில் குஞ்சுகளோடு இருக்கும் இரு கொக்குகள் அலகுகளால் செய்வது அவை விஷயம் பரிமாறிக் கொள்கின்றனவோ? அவற்றின் உடல் மொழியாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது.//

      இரண்டு கூடுகள் தனி தனியாக இருக்கிறது கீதா, குஞ்சுகள் வாயை திறந்து தலையை தூக்கி கொண்டு இருக்கிறது. பெரிய கொக்குகள் இரண்டும் சண்டையிடுகிறது. விஷயம் பரிமாறிக் கொள்ளும் நேரம் இல்லை. மீண்டும் ஒரு முறை பாருங்கள் கீதா.

      //இங்கு ரங்கனதிட்டுவில் அப்படி ஒரு மரத்தில் பார்த்தப்ப, இணைவதற்கு முன் அப்புறம் இணைய முயற்சித்தல் வந்திருந்தது அப்போது தெரியவில்லை வீட்டிற்கு வந்து காணொளியை சேமிக்கும் போதுதான் தெரிந்தது ஆஹா!!! வந்திருக்கிறதே என்று..//

      ஒ சரி, நீங்கள் பார்த்த காட்சி அப்படி இருக்கலாம்.

      நீக்கு
  2. அட.... நிஜமாகவே புலி, கரடி, சிங்கம். அனைத்தையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //அட.... நிஜமாகவே புலி, கரடி, சிங்கம். அனைத்தையும் ரசித்தேன்//

      நன்றி.

      நீக்கு
  3. எனக்கு ஆப்பிரிக்க தேசங்களில் காடுகளுக்குள்ளான சஃபாரி செல்லவேண்டும் என்று ரொம்பவே ஆசை. வெஜ் உணவு கிடைக்கணும். எந்த டிராவல்ஸ் தேர்ந்தெடுக்கலாம் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    யாராவது, சாதம், மோர்க்குழம்பு, ரசம் லஞ்சுடன், காலையில் இட்லி தோசையுடன் ஆப்பிரிக்கா கூட்டிச் செல்கிறார்களா என்று பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா நெல்லை, அதுக்குக் கீதா ட்ராவல்ஸ்ல போகணும்!!!!!!

      நாங்க ரொம்ப வருஷத்துக்கு முன்ன மகனும் நானும் என்னவோ போறாப்ல ப்ளான் எல்லாம் போட்டோம்.

      இங்க பாருங்க எங்க போறதுனாலும் சாப்பாடு பத்தி ரொம்ப யோசிக்கக் கூடாது. ப்ரெட் பழம் இருந்தாலும் ஓகேன்னு கிளம்பிட வேண்டும். இங்குனா பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு சில இடங்களுக்கு அப்படித்தான் போக வேண்டும்.

      கீதா

      நீக்கு
    2. //எனக்கு ஆப்பிரிக்க தேசங்களில் காடுகளுக்குள்ளான சஃபாரி செல்லவேண்டும் என்று ரொம்பவே ஆசை. வெஜ் உணவு கிடைக்கணும். எந்த டிராவல்ஸ் தேர்ந்தெடுக்கலாம் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.//

      நெல்லை கிடைக்கும் தேடிப்பாருங்கள். உங்கள் ஆசைகள் யாவும் வரும் புத்தாண்டில் நிறைவேறட்டும்.

      //யாராவது, சாதம், மோர்க்குழம்பு, ரசம் லஞ்சுடன், காலையில் இட்லி தோசையுடன் ஆப்பிரிக்கா கூட்டிச் செல்கிறார்களா என்று பார்க்கணும்.//

      அப்படி நீங்கள் ஆசைபடும் உணவுகளுடன் பயணம் கிடைத்தால் நல்லதுதான்.

      நீக்கு
  4. இந்த மாதிரி சஃபாரிகளில் ஒன்றுக்கு மேல் நிறைய புலிகளைக் காணமுடியுமே தவிர, புலிகள் பெரும்பாலும் தனித்து இயங்குபவை. சிங்கங்கள் போல அல்ல. ஒரு ஏரியாவிற்கு ஒரு புலி, ஓரிரு குட்டிகள் இருந்தாலே அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்த மாதிரி சஃபாரிகளில் ஒன்றுக்கு மேல் நிறைய புலிகளைக் காணமுடியுமே தவிர, புலிகள் பெரும்பாலும் தனித்து இயங்குபவை. சிங்கங்கள் போல அல்ல. ஒரு ஏரியாவிற்கு ஒரு புலி, ஓரிரு குட்டிகள் இருந்தாலே அதிகம்.//

      ஒன்றுக்கு மேல் பல புலிகளை பார்த்தோம், நீங்கள் சொல்வது போல எல்லாம் தனியாக அமர்ந்து கொண்டு , தனியாக உலாத்திக் கொண்டு இருந்தன.

      நீக்கு
  5. காணொளியில் புலி வருவது தெரிகிறது.

    முதுமலை போகலாமா என்று யோசிக்க வைத்துவிட்டீர்கள். அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதுமலைக்கு இப்ப போனீங்கன்னா எதுவும் பார்க்க முடியாது நெல்லை. கொஞ்சம் குளிர் காலத்தில் அக்டோபரிலிருந்து பெஃப்யுருவரிக்குள் போறது நலல்து. அதுவும் காலை யில் போக வேண்டும்...

      கீதா

      நீக்கு
    2. //காணொளியில் புலி வருவது தெரிகிறது.

      முதுமலை போகலாமா என்று யோசிக்க வைத்துவிட்டீர்கள். அருமை//

      முதுமலை போக ஆசை வந்து விட்டதா? போய் வாருங்கள் கீதா சொல்வது போல கால நிலை அறிந்து போய்வாங்க.
      உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றிகள் நெல்லை.

      நீக்கு
  6. ஓப்பன் பில்.நத்தை குத்தி நாரைகள் போலத்தான் இருக்கு குஞ்சுகள் பார்க்க அழகு. இதுங்க ரொம்ப ஆழமான தண்ணிக்குப் போகாது.

    கூண்டு வண்டிகள் அழகா இருக்கு இங்க இப்படி இல்லைக்கா .
    பன்னேருகட்டா ல சஃபாரி மினி பஸ் அதில் ஒரு சில ஜன்னல்கள் மட்டும் தான் கம்பிகள் போட்டு ஒரு கட்டம் மட்டும் நல்ல இடைவெளி இருக்கும் ....அந்த சீட் அதுவும் ஜன்னல் கிடைச்சா நல்லாருக்கும் இல்லைனா வேஸ்ட். படங்கள் எடுப்பது சிரமம்

    அன்த ஜன்னல் கிடைக்க முண்டி அடிச்சு ஏறணும் சாமர்த்தியம் வேண்டும் நமக்கு அதெல்லாம் வராது. எல்லா ஜன்னல்களும் கம்பிகள் வைக்கலாம். ஆனா அதுக்கும் ஜன்னல் கிடைக்கணும். ஜீப் உண்டு 5,6 பேர் செல்வது போல....ஆனா அதுக்கு டிக்கெட் விலை கூடுதல்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓப்பன் பில்.நத்தை குத்தி நாரைகள் போலத்தான் இருக்கு குஞ்சுகள் பார்க்க அழகு. இதுங்க ரொம்ப ஆழமான தண்ணிக்குப் போகாது.//

      இந்த முறை பதிவு போட நேரம் செலவிடவில்லை. பறவைகளின் பேரை தெரிந்து கொண்டு விவரங்களை சொல்லி பதிவு போடவில்லை. கீதா சொல்வதை தெரிந்து கொள்கிறேன் நன்றி கீதா.

      //கூண்டு வண்டிகள் அழகா இருக்கு இங்க இப்படி இல்லைக்கா .
      பன்னேருகட்டா ல சஃபாரி மினி பஸ் அதில் ஒரு சில ஜன்னல்கள் மட்டும் தான் கம்பிகள் போட்டு ஒரு கட்டம் மட்டும் நல்ல இடைவெளி இருக்கும் ....அந்த சீட் அதுவும் ஜன்னல் கிடைச்சா நல்லாருக்கும் இல்லைனா வேஸ்ட். படங்கள் எடுப்பது சிரமம்//

      நின்று கொண்டு அல்லவா இந்த கூண்டு வண்டிக்குள் போகிறார்கள்
      எவ்வளவு நேரம் நிற்க முடியும்? இதிலும் படம் எடுப்பவர்களுக்கு கம்பி தடுப்பு கஷ்டம் கொடுக்கும் தான்.

      //அன்த ஜன்னல் கிடைக்க முண்டி அடிச்சு ஏறணும் சாமர்த்தியம் வேண்டும் நமக்கு அதெல்லாம் வராது. எல்லா ஜன்னல்களும் கம்பிகள் வைக்கலாம். ஆனா அதுக்கும் ஜன்னல் கிடைக்கணும். ஜீப் உண்டு 5,6 பேர் செல்வது போல....ஆனா அதுக்கு டிக்கெட் விலை கூடுதல்//

      அடிச்சு புடிச்சு ஏறுவது கஷ்டம் தான் கீதா.
      மகன் டிரவல்ஸில் கார் புக் செய்து விட்டான் கார் டிரைவர் அவர் செல்போனில் தாய்மொழியில் தான் பேசுவார், மகன் மொழி பெயர்த்து கொள்வார், அவரிடம் பேச தாய் மொழியில் டைப் செய்வார். கூகுள் உதவியால்.



      நீக்கு
  7. தென்னை ஓலை எருக்கம்பூ அவங்க சென்டிமென்டோ?

    புலி வருவது தெரிகிறது அக்கா. குரல் கேட்குது.

    அக்கா அந்த ரெண்டாவது காணொளி - புலி நடை கொக்கு அருகில் அதையும் யுட்யூபில் போட்டு விடுங்க அக்கா. நல்லாருக்கு பார்க்க

    புலிகளை நீங்க எல்லாம் ரசித்துப் பேசுவது நல்லாருக்கு...பாருங்கக்கா யுட்யூப், ஏ ஐ தானே உங்க உரையாடல்களை எல்லாம் கொடுத்திருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தென்னை ஓலை எருக்கம்பூ அவங்க சென்டிமென்டோ?//

      தெரியவில்லை. புத்தர் கோயில் மற்றும் மாரியம்மன் கோயிலில் இப்படி எருக்கம் பூ மாலை பார்த்தேன்.

      //புலி வருவது தெரிகிறது அக்கா. குரல் கேட்குது.//

      கேட்குதா அது மதினி குரல்.

      //அக்கா அந்த ரெண்டாவது காணொளி - புலி நடை கொக்கு அருகில் அதையும் யுட்யூபில் போட்டு விடுங்க அக்கா. நல்லாருக்கு பார்க்க//

      போட்டு விடுகிறேன் மிக சின்னதாக இருக்கே என்று பார்த்தேன்.

      //புலிகளை நீங்க எல்லாம் ரசித்துப் பேசுவது நல்லாருக்கு...பாருங்கக்கா யுட்யூப், ஏ ஐ தானே உங்க உரையாடல்களை எல்லாம் கொடுத்திருக்கு.//

      நான் பேசவில்லை, பேரன், மதினி, மகன், மருமகள் பேசுகிறார்கள்.

      நீக்கு
  8. ரொம்ப அழகா வசதி செய்து கொடுத்திருக்காங்க புலிகளுக்கு

    இந்தியாவிலும் புலிகள் எண்ணிக்கைக் கூடியிருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நிறைய குட்டிகள் வந்திருக்காம்.

    தூரத்துப் புலிகளும் தெரிகின்றன.

    இந்தக் கரடிங்க சில இடங்களில் படங்களில் சரியா வராதுங்க. இங்கயும் பார்த்தேன் பன்னேர்கட்டாவில் ஆனால் படத்தில் சரியா வரலை. இன்னும் நான் பதிவு போடவில்லை.

    எப்ப போனேன்னு சொல்ல மாட்டேனாக்கும். நெல்லை பார்த்தா உடனே என்னை வம்புக்கு இழுப்பார்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ரொம்ப அழகா வசதி செய்து கொடுத்திருக்காங்க புலிகளுக்கு//

      ஆமாம்.


      //இந்தியாவிலும் புலிகள் எண்ணிக்கைக் கூடியிருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நிறைய குட்டிகள் வந்திருக்காம்.//

      ஆமாம். நிறைய குட்டிகள் வளர்ந்து நலமாக இருக்கட்டும்.

      //தூரத்துப் புலிகளும் தெரிகின்றன.//

      நல்லது

      //இந்தக் கரடிங்க சில இடங்களில் படங்களில் சரியா வராதுங்க. இங்கயும் பார்த்தேன் பன்னேர்கட்டாவில் ஆனால் படத்தில் சரியா வரலை. இன்னும் நான் பதிவு போடவில்லை.//

      போடுங்க நேரம் கிடைக்கும் போது

      //எப்ப போனேன்னு சொல்ல மாட்டேனாக்கும். நெல்லை பார்த்தா உடனே என்னை வம்புக்கு இழுப்பார்!!!!//

      பதிவு போடும் போது தெரிந்து கொள்வார்.

      நீக்கு
  9. ஹப்பா இப்பதான் கரடி நல்லா தெரியுது கீழ படத்துல குட்டையில் இருந்து எழுவது...

    இங்கும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் அதாவது கரடிப் பகுதி., புலியின் பகுதி யானைகளின் பகுதி, சிங்கத்தின் பகுதி என்று ஒவ்வொன்றுக்கும் நம் வண்டிகள் நுழையும் முன் பெரிய பெரிய இரும்பு கதவுகளை அங்கிருக்கும் காவலர்கள் திற்ந்து விடுவாங்க அது ஒரு கதவு இல்லை இரண்டு மூன்று கதவுகள் கூண்டுகள் போன்று. காவலருக்கும் பாதுகாப்பு வேண்டுமே...

    சிங்கத்துக்கு வயசாகிடுச்சு போல ஆண் சிங்கத்துக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹப்பா இப்பதான் கரடி நல்லா தெரியுது கீழ படத்துல குட்டையில் இருந்து எழுவது...//

      ஆமாம். அதற்கு முன் உள்ள படங்கள் தூரத்தில் எடுத்தது. குட்டை கொஞ்சம் பக்கம்.

      //இங்கும் ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் அதாவது கரடிப் பகுதி., புலியின் பகுதி யானைகளின் பகுதி, சிங்கத்தின் பகுதி என்று ஒவ்வொன்றுக்கும் நம் வண்டிகள் நுழையும் முன் பெரிய பெரிய இரும்பு கதவுகளை அங்கிருக்கும் காவலர்கள் திற்ந்து விடுவாங்க அது ஒரு கதவு இல்லை இரண்டு மூன்று கதவுகள் கூண்டுகள் போன்று. காவலருக்கும் பாதுகாப்பு வேண்டுமே...//

      ஆமாம். இங்கும் தனி தனி இருப்பிடம் தான்.

      //சிங்கத்துக்கு வயசாகிடுச்சு போல ஆண் சிங்கத்துக்கு//
      ரொம்ப வயது ஆகவில்லை கீதா

      நீக்கு
  10. எல்லாமே ரசித்துப் பார்த்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அனைத்தையும் ரசித்து பல கருத்துக்களை கொடுத்தற்கு நன்றி.

      நீக்கு
  11. படங்கள் நன்று. காணொளிகள் சிறப்பு. புலியின் பக்கத்தில் நடைபோடும் கருப்பு முகம் கொண்ட பறவை Ibis, அன்றில் பறவை. விலங்குகள் வனங்களில் எப்படி வாழுமோ அதே சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் உயிரியல் பூங்காக்கள் பாராட்டுக்குரியவை. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //படங்கள் நன்று. காணொளிகள் சிறப்பு. புலியின் பக்கத்தில் நடைபோடும் கருப்பு முகம் கொண்ட பறவை Ibis, அன்றில் பறவை. விலங்குகள் வனங்களில் எப்படி வாழுமோ அதே சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் உயிரியல் பூங்காக்கள் பாராட்டுக்குரியவை. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்.//

      அன்றில் பறவையா ! துணையை பிரிந்து இருக்காது என்று சொல்லும் அன்றில் பறவையா? மகிழ்ச்சி நீங்கள் சொன்னது கேட்டு, நன்றி.
      உயிரியல் பூங்காக்கள் பாராட்டுக்குரியவைதான்.
      வனங்களில் விலங்குகளை பார்த்த மகிழ்ச்சி நமக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  12. ஒரே மரத்தில் இவ்வளவு கூடுகள் கட்டியுள்ளனவே, எந்தக் கூடு யாருடையது என்று எப்படி அடையாளம் வைத்துக் கொள்ளுமோ...  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்


      //ஒரே மரத்தில் இவ்வளவு கூடுகள் கட்டியுள்ளனவே, எந்தக் கூடு யாருடையது என்று எப்படி அடையாளம் வைத்துக் கொள்ளுமோ...//

      பறவைகள் ஒலி, வாசனை, இருப்பிடம் முதலியவற்றால் தங்கள் கூட்டை அடையாளம் தெரிந்து கொள்ளுமாம். தங்கள் கூட்டில் ஒருவித வாசனையை விட்டு செல்லுமாம்.

      நீக்கு
  13. புலிகளும் சிங்கங்களும் சிறை என்று அறியாமலேயே பெரிய சிறையில் இருக்கின்றன. கரடி ஒரு பக்கம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு எல்லை போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புலிகளும் சிங்கங்களும் சிறை என்று அறியாமலேயே பெரிய சிறையில் இருக்கின்றன. கரடி ஒரு பக்கம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு எல்லை போல...//

      கானகத்திலிருந்து வந்த மிருகங்களுக்கு தன் இருப்பிடம் இதுவல்ல என்று தெரியாமல் இருக்குமா?

      தங்கள் எல்லைக்குள் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொண்டு இருக்கும். உண்மையான கானகத்திற்கும், செயற்கை கானகத்திற்கும் புதிதாக வரும் உயிரினங்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம்.

      நீக்கு
  14. கொக்குகளும் காகங்களும் அதன் மேலுள்ள பூச்சிகளை சாப்பிட்டு அவைகள் வாய், உடலை சுத்தப்படுத்தும் என்பதால் அவைகளை ஒன்றும் செய்யாதோ... 

    அல்லது பசி வந்திட பத்தும் பறந்து போமோ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொக்குகளும் காகங்களும் அதன் மேலுள்ள பூச்சிகளை சாப்பிட்டு அவைகள் வாய், உடலை சுத்தப்படுத்தும் என்பதால் அவைகளை ஒன்றும் செய்யாதோ...

      அல்லது பசி வந்திட பத்தும் பறந்து போமோ...!//

      நாளை உணவுக்கு சேமிக்கவேண்டும், என்ற எண்ணம் வாராமல் நேரா நேரத்திற்கு உணவு கிடைத்து விடுகிறது அதால் உணவு தேவைக்கு பிற உயிரை அடித்து தின்னும் வேலை இல்லை.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இன்று இப்பதிவுக்கு நான் வருவதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது.

    புலி, கரடி சிங்கம் போன்ற மிருகங்களைப் பார்த்துக் கொண்டேன். அதைச்சுற்றிப் பார்க்க சென்ற கூண்டு வண்டி நன்றாக உள்ளது.

    அதற்கு நீங்கள் தந்த விளக்க வசனம் அருமை. கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் மிருகங்களைப் பார்க்கச் சென்றால், நாம் நடந்து போகலாம். இதில் யாருக்காவது ஒருவருக்குத்தான் சுதந்திரம். வேறு வழியில்லை.!

    காணொளிகள் அனைத்தும் நன்றாக உள்ளது. நடந்தும், படுத்தும் கொண்டிருக்கும் புலி, கரடி, சிங்கங்கள் அவற்றுடன் அருகில் பயமின்றி உலா வரும், கொக்க், காகம் போன்ற பறவைகள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன்.

    இங்கும் பசுமாடுகள் மேல் அமர்ந்து, அதன் அருகிலேயே எப்போதும் நடந்து கொண்டேயிருக்கும் கொக்குகள் ரசிக்க வைப்பனவையாக இருக்கும். அதற்கும் மாடுகளின் மேலுள்ள உண்ணிகள் ஆகாரமாக கிடைக்க அப்படியே பழகி கொண்டுள்ளது அல்லவா? ஆனால், புலிகளின் அருகே நெருங்க இயலுமா என்பது ஆச்சரியம்தான். மேலும் எல்லாம இறைவனின் கருணைகள்தான்.

    இறுதி காணொளியும் கண்டு ரசித்தேன். கொகெகுகளின் வாழ்விடங்களும் , அவைகளின் சண்டை, மற்றும் பாசம் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கிறது. படங்களையும், காணொளிகளை யும் நன்றாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

      உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      .//இன்று இப்பதிவுக்கு நான் வருவதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது.//

      நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம் கமலா, புத்தாண்டு வேலைகள் இருந்து இருக்கும் அல்லவா?


      //புலி, கரடி சிங்கம் போன்ற மிருகங்களைப் பார்த்துக் கொண்டேன். அதைச்சுற்றிப் பார்க்க சென்ற கூண்டு வண்டி நன்றாக உள்ளது.//

      ஆமாம்.

      //அதற்கு நீங்கள் தந்த விளக்க வசனம் அருமை. கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் மிருகங்களைப் பார்க்கச் சென்றால், நாம் நடந்து போகலாம். இதில் யாருக்காவது ஒருவருக்குத்தான் சுதந்திரம். வேறு வழியில்லை.!//

      நீங்கள் சொல்வது சரிதான். யாருக்காவது ஒருவருக்குக்குதான் சுதந்திரம் கிடைக்கும்.

      //காணொளிகள் அனைத்தும் நன்றாக உள்ளது. நடந்தும், படுத்தும் கொண்டிருக்கும் புலி, கரடி, சிங்கங்கள் அவற்றுடன் அருகில் பயமின்றி உலா வரும், கொக்க், காகம் போன்ற பறவைகள் அனைத்தையும் பார்த்து ரசித்தேன்.//

      நன்றி.

      //இங்கும் பசுமாடுகள் மேல் அமர்ந்து, அதன் அருகிலேயே எப்போதும் நடந்து கொண்டேயிருக்கும் கொக்குகள் ரசிக்க வைப்பனவையாக இருக்கும். அதற்கும் மாடுகளின் மேலுள்ள உண்ணிகள் ஆகாரமாக கிடைக்க அப்படியே பழகி கொண்டுள்ளது அல்லவா? ஆனால், புலிகளின் அருகே நெருங்க இயலுமா என்பது ஆச்சரியம்தான். மேலும் எல்லாம இறைவனின் கருணைகள்தான்.//

      ஆமாம். இறைவனின் கருணைதான். மாடுகள் , ஆடுகள் மேல் பவனி வரும் பற்வைகள், மற்றும் பக்கத்தில் நடந்து வரும் கொக்குகளை படம் எடுத்து முன்பு போட்டு இருக்கிறேன்.

      பறக்க முடியாத கழுகிற்கு மற்ற பறவைகள் உனவு கொண்டு ஊட்டுவதை முன்பு ஒரு காணொளியில் பார்த்தேன். அவைகளிடம் உதவும் உள்ளமும் இருக்கிறது.

      பள்ளி பத்தில் வேடனிடம் சிக்கிய சிங்கத்தை சுண்டெலி வலையை அறுத்து தப்பிக்க வைத்த கதை வேடனிடம் மாட்டிய மானை காப்பாற்றிய காகம் கதை எல்லாம் உண்மைதான் என்பதை உணர்கிறோம்.


      //இறுதி காணொளியும் கண்டு ரசித்தேன். கொகெகுகளின் வாழ்விடங்களும் , அவைகளின் சண்டை, மற்றும் பாசம் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கிறது. படங்களையும், காணொளிகளை யும் நன்றாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//


      அனைத்தையும் ரசித்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.


      நீக்கு
  16. படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    காணொளிகள் கண்டேன் சிறப்பாக உள்ளது.

    தொடர்ந்து வருகிறேன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

      காணொளிகள் கண்டேன் சிறப்பாக உள்ளது.

      தொடர்ந்து வருகிறேன்.....//

      உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.

      நீக்கு
  17. ஆஹா கோமதி அக்கா பயமில்லாமல் சபாரி பார்த்திட்டீங்கள். பெண் சிங்கம் எல்லாம் நித்திரை கொள்ள, ஆண் சிங்கம் பாதுகாப்பாக இருப்பது அழகு.
    நான் திருமணமான புதிதில் போயிருக்கிறேன் பின்பு போனதில்லை, சரியான பயம். கோயில் யானைக்கு அருகில் கூட போகமாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //ஆஹா கோமதி அக்கா பயமில்லாமல் சபாரி பார்த்திட்டீங்கள். பெண் சிங்கம் எல்லாம் நித்திரை கொள்ள, ஆண் சிங்கம் பாதுகாப்பாக இருப்பது அழகு.//

      காருக்குள் இருக்கிறோம், குடும்பத்தோடு போகிறோம் அதனால் பயமில்லை.

      ஆமாம், ஆண்சிங்கம் பாதுகாப்பாக இருப்பதை பார்க்கும் போது அழகாய் இருந்தது தான், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

      //நான் திருமணமான புதிதில் போயிருக்கிறேன் பின்பு போனதில்லை, சரியான பயம். கோயில் யானைக்கு அருகில் கூட போகமாட்டேன்.//

      குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் காட்ட்டவில்லையா?
      யானை என் தலையில் டொம் என்று துதிக்கையை போட அனுமதித்து இருக்கிறேன் சிறு வயதில் இப்போது கழுத்து தாங்காது என்று யானை பக்கம் போவதே இல்லை.

      நீக்கு
  18. கரடி அமைதியாக இருக்கு, புலி பரணில எல்லாம் ஏறி இருக்குதே. அனைத்து வீடியோக்களும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கரடி அமைதியாக இருக்கு, //

      ஆமாம், கரடி தமிழ் நாட்டில் ஊருக்குள் வந்து வீடுகளில் புகுந்து மிகவும் ரகளை செய்கிறது .

      //புலி பரணில எல்லாம் ஏறி இருக்குதே. அனைத்து வீடியோக்களும் பார்த்தேன்.//

      ஆமாம், அதற்கு உயரம் பிடிக்கும் போல! அனைத்து வீடியோக்களையும் பார்த்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  19. கூடுகளோடு கொக்குகள் இருப்பது அழகாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கூடுகளோடு கொக்குகள் இருப்பது அழகாக இருக்கு.//

      அந்த வீடியோ பிடிக்கும் என்று தான் போட்டேன்.

      உங்கள் வரவுக்கும், கருத்துபகிர்வுக்கும் நன்றி அதிரா.

      நீக்கு
  20. அழகான படங்களும், காணொளிகளும். கடைசி காணொளி சில இடங்களில் வேகமாக நகர்ந்து விடுகறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //அழகான படங்களும், காணொளிகளும். கடைசி காணொளி சில இடங்களில் வேகமாக நகர்ந்து விடுகறது.//

      காணொளி வேகமாக நகர காரணம் கார் வேகமாய் நகர்வதால்தான்.
      உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

      நீக்கு