வெள்ளைப்புறா எங்கள் வீட்டுக்கு வந்தது
இந்த வெள்ளைப்புறாவைப் பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும் என்று முகநூலில் பகிர்ந்து இருந்தேன்.
அன்பின் தூதுவர்கள்.
என் ஜன்னல் வழியே என்ற தலைப்பில் பறவைகளை படம் எடுத்துப் போட்டு வருவது உங்களுக்கு தெரியும். முகநூலில் போடுவதை என் சேமிப்பாய் வலைத்தளத்தில் போடுவேன்.
அதிரா இரண்டு நாள் முன் போட்ட பதிவில் ஒரு அழகான வெள்ளைப்புறாவைப் போட்டு இருந்தார். "நான் அடுத்த பதிவில் வெள்ளைப்புறாவைப் போடலாம் என்று இருக்கிறேன் என்றேன் "அவர் காதலர் தினத்தில் போஸ்ட் செய்யுங்கள் அக்கா என்றார்கள்.
அதிராவின் விருப்பபடி காதலர் தினத்திற்கு ஒரு நாள் முன்பே வெள்ளைப்புறாவைப் போட்டு விட்டேன்.
முன்பு அமைதி புறவே அமைதி புறாவே அழைக்கின்றேன் உன்னை என்ற பதிவில் இதைவிட அழகான ஒல்லியான வெள்ளைப்புறா படம் போட்டு இருந்தேன்.
முன்பு அமைதி புறவே அமைதி புறாவே அழைக்கின்றேன் உன்னை என்ற பதிவில் இதைவிட அழகான ஒல்லியான வெள்ளைப்புறா படம் போட்டு இருந்தேன்.
ஜோடி ஜோடியாக மாலை நேரத்தில் பேசிக் கொண்டு இருந்த போது எடுத்தது
இவை அலைபேசியில் எடுத்த படங்கள்
என்ன அவசரம் ! மெதுவா சாப்பிடுங்க என்று போட்டேன் முகநூலில்
(சின்ன காணொளிதான் அவை அவசரமாய் சாப்பிடும் அழகை பாருங்கள்.)
இரண்டும் சேர்ந்து தான் தினம் சாப்பிட வரும். மற்ற பறவைகள் காத்து இருக்கும் இவை சாப்பிட்டு முடிக்கும் வரை.
சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கும் இடம்.
அன்பு
நீ சாப்பிடும் வரை நான் காத்து இருக்கிறேன்" என்று சொல்கிறது மைனா பெண் குயிலிடம் இது விட்டு கொடுக்கும் அன்பு. நீ சாப்பிடும் வரை
மேலே புறாக்களின் அன்பை பார்த்து ரசிக்கிறேன் என்கிறது மைனா.
மீண்டும் கூடு கட்டுகிறது , தன் குஞ்சுகளுடன் ஆனந்தமாக இருக்க வேண்டும்.
"ஆசை அலைகள்"என்ற படத்தில் வரும் இந்த பாடல் கேட்டு பாருங்கள் நன்றாக இருக்கும். சீர்காழி கோவிந்தராஜன் , எல். ஆர். ஈஸ்வரி ஜமுனா ராணி பாடியது.
அள்ளி அள்ளி கொடுத்தாலும் குறையாத அன்பாம், உள்ளம் என்று உள்ளவருக்கு உண்மையானதாம், உலகம் என்ற ஒன்று உள்ளவரை உறுதியானதாம் .
அன்பு என்பது தெய்வமானது, அன்பு என்பது இன்பமானது என்ற வரிகள் கொண்ட மிகவும் அருமையான பாடல்.
கொடுத்துப் பாருங்கள் அன்பை, பின் அது தரும் தெம்பை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார் மருதகாசி அவர்கள்.
மருதகாசி எழுதிய பாடலுக்கு ஏ.எம்.ராஜா இசை அமைத்து சுசீலா, திருச்சி லோகநாதன்,ஜிக்கியுடன் இணைந்து பாடியது. கேட்டுப் பாருங்களேன்.
"முத்தான முத்துக்குமாரா முருகைய்யா வா வா சித்தாடும் செல்வக்குமாரா "
கடைசி வரியில் அன்று பூத்த மலரால் உன்னை அர்ச்சிப்பேன் வருவாய் அப்பா, அன்பான மனதால் உன்னை அர்ச்சிப்பேன் வருவாய் அப்பா என்று வரும்.
அன்புதான் கடவுள் அன்புதான் அனைத்தும். என்று சொல்கிறார்கள்.
எல்லா மதங்களும் போதிப்பதும் அன்புதான்.
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்
அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும் அன்பே அனைத்துமென்றாய்
- கந்த குரு கவசம்
அன்பு செய்து வாழ்வோம். அன்பர்கள் தின வாழ்த்துக்கள் !
வாழ்க வளமுடன் !
அழகான, தெளிவான படங்கள் சகோ.
பதிலளிநீக்குபறவைகள் இனம் அழிந்து வருவது மனித இனங்களுக்கும் பாதிப்பே இதை மனிதர்கள் இன்னும் உணரவில்லை.
எல்லா மதங்களும் அன்பையே போதித்தன...
ஆனால்
மனிதன் மறந்தது அது ஒன்றையே...
காணொளி பாடல்கள் அருமை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று கேன்டேன் நன்றி சகோ.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
நிறைய பறவைகள் வரும் இப்போது குறைந்து வருகிறது. அதன் வசிப்பிடம் அழிந்து வருகிறதே!
ஆமாம் , எல்லா மதமும் அன்பை போதித்தது .
பாடல்களை கேட்டு மகிழ்ந்தது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி சகோ.
படங்களுடன் விளக்கங்கள் அருமை..அந்தப் பறவை இரண்டும் வந்த இடம் நல்ல இடம் அவைகளுக்குள் பாடிக் கொண்டிருக்கும்..நமக்குத்தான் அவைகளின் பாஷை புரியாதே..
பதிலளிநீக்குபறவைகள் பாடிக் கொண்டு இருக்கும்தான்.
நீக்குபறவை மொழி புரிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். உணவு தட்டில் இல்லையென்றால் வந்து குரல் கொடுக்கும் காக்கா, புறா தட்டில் வந்து அமர்ந்து கொண்டு வெறும் தட்டை தன் அலகு வலிக்க கொத்தும் சத்தம் கேட்டு வந்து உணவு வைப்பேன். மைனா, குயில் எல்லாம் வந்து அமரும் போதே சத்தம் கொடுக்கும் சார்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தேடிவரும் வெண்புறாக்கள். அமைதியின், அன்பின், சமாதானத்தின் அடையாளம். காணொளி பேஸ்புக்கில் பார்த்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குகாணொளி பேஸ்புக்கில் பார்த்தது மகிழ்ச்சி.
சீர்காழி பாடல் ஓரிருமுறை கேட்டிருக்கிறேன். ஏ எம் ராஜா பாடல் பலமுறை கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குசீர்காழி பாடல் வானொலி , தொலைக்காட்சி எதிலும் இப்போது கேட்க முடிவது இல்லை.
நீக்குஏ.எம். ராஜா பாடல் அடிக்கடி தொலைக்காட்சியில் பழைய பாடல் நிகழ்ச்சிகளில் கேட்க முடிகிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அழகான படங்கள்.
பதிலளிநீக்குஅனைவரிடத்திலும் அன்பு கொள்வோம்.
காணொளியும் பார்த்து ரசித்தேன் மா...
பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குகாணொளி, பாடல்கள் கேட்டது மகிழ்ச்சி.
அனைவரிடத்தும் அன்பு கொள்வோம்.
உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.
ஆஹா புறாப்பிள்ளையைப் போட்டு விட்டா கோமதி அக்கா.. என்னால்தான் பகல் வர முடியாமல் போய்விட்டது எங்கும்.
பதிலளிநீக்குவெள்ளைப்புறாப்பிள்ளை அழகோ அழகு.. எங்கள் டெய்சிப்பிள்ளையைப்போல அப்பாவியாக முகத்தை வைத்திருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
வெள்ளைப்புறாவில் ஜோடி இல்லையோ கோமதி அக்கா.. இவை பெண் புறாக்கள்தானே? இல்லை ஆணிலும் வெள்ளை இருக்கோ....
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குஅதிரா காதலர் தினத்தில் போடுங்கள் என்று அன்பு கட்டளை இட்ட பின் மறுக்கமுடியுமோ! அதுதான் போட்டு விட்டேன்.
//வெள்ளைப்புறாப்பிள்ளை அழகோ அழகு.. எங்கள் டெய்சிப்பிள்ளையைப்போல அப்பாவியாக முகத்தை வைத்திருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..//
டெய்சிப்பிள்ளை எப்போதும் அப்பாவியாக முகத்தை வைக்குமோ?
ஏதாவது குறும்பு செய்து அம்மாவிடம் திட்டு வாங்க கூடாது என்ற சமயம் மட்டும் தானே?
புறாப்பிள்ளை எப்போதும் அமைதிதான்.
இது பெண்புறாதான். எப்போதும் ஜோடியுடன் சுற்றி திரியாது. தனிமையில் இனிமையாக தவம் இயற்றுவது போல் அமர்ந்து இருக்கும். ஆணில் வெள்ளையும் கறுப்பும் கலந்து இருக்கிறது.
//வெள்ளைப்புறா எங்கள் வீட்டுக்கு வந்தது//
பதிலளிநீக்குஓமோம்ம்.. ஹப்பி வலண்டைன் டே சொல்ல வந்திருக்கிறது கோமதி அக்காவுக்கு... ஒரு டயமண்ட் ட்றிங் கிஃப்ட்டாகப் போட்டு விடுங்கோ[அது என்னிடம் கொண்டு வந்து தந்திடும்] ஹா ஹா ஹா:))
// ஹப்பி வலண்டைன் டே சொல்ல வந்திருக்கிறது கோமதி அக்காவுக்கு... ஒரு டயமண்ட் ட்றிங் கிஃப்ட்டாகப் போட்டு விடுங்கோ[அது என்னிடம் கொண்டு வந்து தந்திடும்] ஹா ஹா ஹா:))//
நீக்குஅனுப்பி விட்டேனே அருமை தங்கைக்கு வந்து சேர்ந்துவிடும் இன்று.
புறா என்றில்லை, பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே மனம் இலகுவாகும்.
பதிலளிநீக்கு//அதிராவின் விருப்பபடி காதலர் தினத்திற்கு ஒரு நாள் முன்பே வெள்ளைப்புறாவைப் போட்டு விட்டேன்.//
ஆவ்வ்வ் நன்றி கோமதி அக்கா. நாளைக் காலையில் எதிர்பார்த்தேன் இப்போஸ்ட்டை:)).. போஸ்ட் ரெடியாக்குவதுதான் கஸ்டம், ரெடியாக்கிட்டால் ஒரு நிமிடம் கூட தாமதிக்க முடியாது என்னாலும்:)) உடனேயே பப்ளிஸ் பண்ணி விடுவேன்..
//புறா என்றில்லை, பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே மனம் இலகுவாகும்//
நீக்குஉண்மைதான் அதிரா, ஆனாலும் வெள்ளை புறா மன அமைதி தரும்.
நீங்கள் சொல்வது போல் போஸ்ட் தயார் செய்து விட்டால் உடனே போட்டு விட்டால்தான் மனதுக்கு மகிழ்ச்சி.
யேஸ்ஸ்ஸ் மாடப்புறாவும் மணிப்புறாவும் படங்கள் முன்பும் போட்டிருக்கிறீங்க.. நாங்கள் சின்னவர்களாக இருந்தபோது அம்மா முணுமுணுக்கும் பாட்டு..
பதிலளிநீக்குமாடப் புறாவும் மணிப்புறாவும் மனசில் பேசிய பேச்சல்லோ...:)
//யேஸ்ஸ்ஸ் மாடப்புறாவும் மணிப்புறாவும் படங்கள் முன்பும் போட்டிருக்கிறீங்க.. நாங்கள் சின்னவர்களாக இருந்தபோது அம்மா முணுமுணுக்கும் பாட்டு..//
நீக்குஇல்லை இந்த புறாக்கள் வேறு. இது நேற்றும், அதற்கு முந்தின நாள் மாலையும் எடுத்தது. என் காமிராவில் தேதி போடும் வசதி இல்லை அதனால் உங்களுக்கு பழசு போல் தெரிகிறது.
நான் நிறைய பற்வைகள் ஜோடியாக போட்டு இருக்கிறேன்.
//மாடப் புறாவும் மணிப்புறாவும் மனசில் பேசிய பேச்சல்லோ...:)//
நாங்கள் சின்ன வயதாக இருக்கும் போது பாடிய பாடல்தான் தான் அதிரா.
பிடித்த பாடல்.
ஆஹா என்ன அழகாக, அதுவும் ஆராவது வருகிறார்களோ எனச் செக் பண்ணிக்கொண்டே விழுங்குகிறார்கள்.. பறவைகள் சாப்பிடுவதில்லைத்தானே கோமதி அக்கா, அவை இரைப்பை போன்று கழுத்தடியில் இருக்கும் பாக் இல்.. டக்கு டக்கென விழுங்கிப் போட்டு வச்சுப்போட்டு, பின்னர் மெதுவாக தன் பாட்டில் செமிபாடாகும்..
பதிலளிநீக்குஅருமையான சாப்பாடு, ஆனந்தமாக ஓய்வு.
மற்ற பறவைகள் இப்படி வாரி இறைக்காது அதிரா. புறாக்கள் தான் இப்படி சாப்பிடும்.காக்கா ஒரு துண்டை எடுத்து காலுக்கு அடியில் வைத்து நிதானமாக பிய்த்து கீழே சிந்தாமல் சாப்பிடும். குருவி ஒவ்வொரு பருக்கையாக கவனமாய் எடுக்கும்.
நீக்குஇது கோழி போல் பக் பக் என்று கொத்தி விழுங்கும் தான் சாப்பிடும் வரை யாரையும் பக்கத்தில் விடாது. அதன் இணை என்பதால் பேசாமல் இருக்கு, வேறு யாராவது என்றால் விரட்டி விட்டுத்தான் உண்ணும்.
மைனாவும் குயிலும் முன்பும் படங்கள் போட்டிருக்கிறீங்க.
பதிலளிநீக்குஇரு பாடல்களும் மிகப் பழமையானவை... 2 வது கேட்டிருக்கிறேன், முதலாவது கேட்டதுபோலத்தான் இருக்கு...
அழகிய போஸ்ட். அன்பைக் கொடுத்தால்தான் அன்பைப் பெறலாம், சிலர் கொடுக்க மாட்டினம் மற்றவர்கள் தன்னிடம் அன்பு காட்டுவதில்லை எனப் புலம்புவார்கள்... காசா பணமோ.. அன்புதானே... அன்பைப் பகிர்வோர்.
உங்களுக்கு அதிராவின் காதல் தின வாழ்த்துக்கள் கோமதி அக்கா.
மைனா, குயில் எல்லாம் அடிக்கடி வரும். இது புதிதாக எடுத்த படம் அதிரா.
நீக்குஒரு பாடல்களும் நான் சிறுமியாக இருக்கும் வந்த சினிமா பாடல்கள்தான்.
மிகவும் நல்ல பாடல்கள். அன்பான வார்த்தை தரும் ஆயிரம் தெம்பு.
காசா, பணமா என்று நீங்கள் சொல்வது போல் எதிரில் வரும் , பக்கத்தில் போகும் ஒரே குடியிருப்பில் வசிக்கும் அன்பர்களைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிக்க மறுப்பவர்களை என்ன சொல்வது?
காதல் தின வாழ்த்துக்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை மன்னிக்கவும்.
மிகவும் நெருங்கிய நட்பு பலவருட கால பழக்கம். உறவுகளுக்கு மேலாக சொந்தம் கொண்டாடும் நட்பு. எங்கள் வீட்டுக் குழந்தைகளால் "தொட்டப்பா" என்று அழைக்க படும் மாமியார் வீட்டுக்கு பக்கத்து வீட்டு மாமா 14ம் தேதி இறைவனடி சேர்ந்து விட்டதாக தகவல் வந்தது(கோவையில்) உடனே கிளம்பி போய் விட்டோம். நேற்று இரவு தான் வந்தோம்.
தாமதமான மறு மொழி.
உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
ஆ.....வெள்ளைபுறா நானும் உங்க நண்பர்கள் எனும் போஸ்ட் ல் போட்டதில் கூட இருக்கினம் வெள்ளைபுறா. அங்கு கொஞ்சம் கூட நின்றார்கள். விதவிதமாய். வெள்ளைபுறா ஒரு அழகுதான் இல்லையா அக்கா. உண்மையில் கில்லர் ஜீ அண்ணா சொன்னமாதிரி மனிதர்கள் உணருகிறார்கள் இல்லை. இங்கு சொல்வார்கள் தேனீ இனம் அழிந்தால் மனித இனமே இருக்காது என.
பதிலளிநீக்குஓய்வு எடுக்கும் இருவரும் கொள்ளை அழகு. எங்க இடத்தில் குறைவு. இவைகளை பார்க்கனும் என்றால் சிட்டிக்கு போகனும். ஆனா 1,2 பேர் தென்படுவார்கள். உங்க வீடியோ சூப்பர்.
பாடல் மிக அருமை இருக்கு. சிலோன் வானொலியில் போடும்போது கேட்போம். கனகாலமாச்சு கேட்டு..
அனைவரையும் அன்பால் அரைவணைப்போம் .
வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்.
நீக்குஆமாம், கோமதி அக்காவின் நண்பர் என்று போட்டதில் வெள்ளைப்புறா இருக்கே!
நினைவு இருக்கிறது அம்மு.
தேனீ பறவைகள் எல்லாம். இயற்கையை உருவாக்கும் காரணிகள். அவை அழிந்தால் இயற்கை பாழ்பட்டு விடும். இயற்கையை வளர்க்க இவை வேண்டும், இவை வளர இயற்கை வளமாக இருக்க வேண்டும்.
பாட்டுக்களை வானொலியில் கேட்டு கனகாலமாச்சுதான். முன்பு இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்கள்.
அன்பு செய்வோம், அன்பு அரைவணைப்பில் நனைவோம் அம்மு.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்பு இருக்கும் இடத்துக்கே அப்பறவைகள் வந்திருக்குங்கக்கா .சந்தோஷமா இருக்கு குழந்தைகளை பார்க்க .எங்க வீட்டுக்கு ராபின் பெர்ட்ஸ் கூட்டமா வராங்க .தனியா பறவை உணவு வாங்கி தட்டில் வச்சிடுவேன் .கிட்ட சென்று படம் எடுக்கணும் ஒருநாள்
பதிலளிநீக்குவணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
நீக்குசரியாக சொன்னீர்கள் அவை எங்களுக்கு குழந்தைகள் ஆகி விட்டது, அவைகளுக்கு பசிக்குமே! இப்போது உணவு தேடி நிற்குமே! என்று ஊருக்கு போனாலும் மனது ஏங்குது.
பறவைகள் இப்போது பழகி விட்டன. கதவு கிட்டே நின்றால் பயந்து ஓடுவது இல்லை.
என் கதவு கிட்டே தலை கண்டால் கொடியில் வந்து உடகார்ந்து என்ன வைக்கிறாள் தட்டில் என்று பார்க்கிறது பயமில்லாமல்.
ராபின் பறவைகளை படம் எடுங்கள். அங்குதான் பறவை உணவுகள் கிடைக்கிறதே!
ஊங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஏஞ்சல்.
அனைத்துப் படங்களும் அருமை. புறாக்கள் மட்டுமில்லை, மைனா, குயில், சிட்டுக்குருவி எல்லாமும் உங்களுக்கு மிக அழகாய்ப் போஸ் கொடுத்திருக்குப் போல! பாடல்கள் தேர்வும் நன்றாக உள்ளன. மிக எளிமையாகவும் அழகாகவும் அன்புத்திருநாள் கொண்டாடிவிட்டீர்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குகுயில், மைனா எல்லாம் அவைகளுக்கு தெரியாமல் எடுக்க வேண்டும்.காக்கா, புறாக்கள், குருவிகள் பழகி விட்டன.
படங்களை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அன்பு வாழ்த்துக்களுக்கு நன்றி.
படங்கள் அருமை. பறவைகளின் சங்கம்ம் வியப்பைத் தருகிறது. நீங்கள் படங்கள் எடுக்கும்வரை அமைதியாக இருந்தன போலிருக்கே.
பதிலளிநீக்குஇங்கு கீழ்த்தளத்திற்கும் எங்கள் தளத்து பாத்ரூம் ஷாப்ஃட்க்கிடையில் பெரிய ஆந்தை ஒன்றைப் பார்த்தேன். மெதுவாக ஷாஃப்ட் கதவைத் திறந்து படமெடுக்க முனைந்தேன். முகத,தை மட்டும் மேல்நோக்கிப் பார்த்தது. தொந்தரவு செய்ய விரும்பாமல் கதவைச் சாத்திவிட்டேன். என் பையன் பால்கனியில் பருந்து (கழுகு) அமர்ந்திருந்ததைப் பார்த்தானாம்.
புறாக்கள் உண்டு என்றாலும் இங்கு அனேகமாக அவை வரக்கூடாது என்று வலை போடுகிறார்கள்.
பாடல்கள் இனிமை.
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.
நீக்குபுது வீட்டுக்கு குடி போய் விட்டீர்களா? வாழ்த்துக்கள்.
பறவைகளை பார்வை இடுவது மகிழ்ச்சியான பொழுது போக்கு.
ஆந்தையை இரவு மகன் வீட்டில் படம் எடுத்தேன்.
ஆந்தை உங்கள் பக்கம் வருகிறதா? திருவெண்காட்டில் இருக்கும் போது மாடி படிகளில் தத்தி தத்தி இரவு ஏறி இறங்கி விளையாடும். அப்போது தொலைக்காட்சி பெட்டிகள் தூக்கத்தை கெடுக்கவில்லை. ஊர் சீக்கீரம் அடங்கி விடும் ஆந்தைகளின் சத்தம் சில நேரம் பயமுறுத்தும். சில நேரம் அலரும், சில நேரம் சிரிப்பது போல் இருக்கும்.
புறா அசுத்தம் செய்யும். நானும் ஒருபக்க பால்கனிக்கு வலை அடித்து இருக்கிறேன்.
பாடல்கள் கேட்டது மகிழ்ச்சி.
கருத்துக்கு நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குமிக அழகான படங்கள். வெள்ளைப்புறா முக அழகாக உள்ளது. நீங்கள் பகிர்ந்த படங்களையும், அதற்கு தகுந்தாற்போல் எழுதிய வாசகங்களையும் மிகவும் ரசித்தேன். அன்பானவர்களிடம் பறவைகள் பாசத்துடன் வந்து ஒட்டிக் கொள்ளும் என படித்திருக்கிறேன். இன்று தங்கள் பதிவில் கண்கூடாகவே அதை காண்கிறேன். பறவைகளிடம் பாசமாக பழகும் தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். அது தங்கள் நிழலில் கூடு கட்டிக் கொண்டு குடும்பமாக சந்தோஷமாக இருக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
பாடல்கள் அருமை. இரண்டாவது பாடல் கேட்டேன். ஏற்கனவே கேட்டுள்ளேன். முதல் பாடல் கேட்டு விட்டு வருகிறேன்.
ஆம். இறைவனும் அன்பு வடிவானவன். அன்பை மட்டுமே நம்மிடம் எதிர்பார்ப்பவன் நாம் அன்பு செலுத்தும் இடங்களில் வாழ்பவன்.
எதிர்பாராத அன்பை செலுத்த பழகிக்கொள்ள வேண்டும் என்ற தாங்கள் சொன்ன வரிகள் நன்றாக உள்ளது. கூடியவரை அப்படியே நடந்து கொள்ள இறைவனருளால் முயற்சிப்போம் . அருமையான அன்பு பதிவு. படித்து மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குபதிவையும் படங்களைடும் ரசித்து அருமையான கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.
என்னையும், பறவைகளையும் வாழ்த்தியது மகிழ்ச்சி.
//இறைவனும் அன்பு வடிவானவன். அன்பை மட்டுமே நம்மிடம் எதிர்பார்ப்பவன் நாம் அன்பு செலுத்தும் இடங்களில் வாழ்பவன்.//
இந்த வரிகளை கேட்டவுடன் பாபு படத்தில் "இதோ எந்தன் தெய்வம் முன்னேலே" பாடல் நினைவுக்கு வருது.
சில நேரங்களில் எதிர்ப்பார்த்தல் ஏம்மற்றம் தருகிறது. எதிர்ப்பார்க்காத அன்பு கிடைக்கும் போது மட்டற்ற மகிழ்ச்சியே!
உங்கள் அன்பான பின்னூட்டம் மகிழ்ச்சையை தருகிறது. உங்கள் கருத்துக்கு நன்றி.
புறாக்கள் தான் எத்தனை அழகு... பார்த்துக் கொண்டே இருக்கலாம்...
பதிலளிநீக்குஅன்பு (காணொளி) பாடல்கள் இரண்டும் அருமை அம்மா...
முதல் பாடல் அன்புடைமை அதிகாரத்திற்காக முன்பே சேமித்து வைத்திருக்கிறேன்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குஉங்களுக்கு பிடித்த பாடல் தொகுப்பில் இடம் பெறாமல் இருக்குமா இந்த பாடல்கள்?
படங்களையும், பாடல்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.
தீடிர் பயணம் வந்து விட்டது.
பதிலளிநீக்குபொறுத்து அருள்க!
விரைவில் வந்து மறுமொழி தருகிறேன்.
//அன்பு செய்து வாழ்வோம்// உண்மைதான். அன்புக்காகத்தானே அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்? அத்துடன், விலங்குகளின் வாழிடத்தை அழித்து நாம் வாழ்ந்து கொண்டிருந்தால் அவை நமது இடம்தேடி வருவது தானே இயல்பு?
பதிலளிநீக்குநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
வணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொல்வது சரிதான். விலங்குகள் வழிதடத்தை அழித்து நாம் வாழ்த்து கொண்டு இருக்கிறோம். பறவைகளின் கூடு கட்டும் மரங்களை அழித்து வருகிறோம்.
அவை நம்மை நாடி வருகிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
வருகிறேன் உங்கள் பதிவுக்கு.
புறாக்களின் புராணம்...
பதிலளிநீக்குகாதலர் தினத்துக்கான பதிவா... படங்களா...
அருமை.. அழகு...
அன்பினில் வாழட்டும் அகிலம்!...
வணக்கம் வாழ்க வளமுடன்.
நீக்குபுறாக்களின் புராணத்தை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
வாழ்த்துக்கள் அருமை.
ரசனையான படங்கள். பொறுமையாக எடுத்துப் பகிர்ந்த விதம் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
சென்னை வெளச் சேரியில் என் மகன் விட்டருகில்நிறைய புறாக்கள் வரும் அவற்றின் அழ்குக்கும் குரலுக்கும் சம்பந்தம் இருக்காது கர்ண் கொடூரம்
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
நீக்குமயில் அழகு குரல் நன்றாக இருக்காது. அது போல் தான் புறாவிற்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
'வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே'.. என்ற பாடல் நினைவுக்கு வந்து, புதுக்கவிதை என்றால் அதற்கு இலக்கணமெல்லாம் இல்லையா>' என்று நினைவுகள் வேறு திசைக்குப் பறந்து...
பதிலளிநீக்குவெள்ளைப்புறாவிற்கும் சமாதான குறியீடுக்கும் என்ன சம்பந்தம்? -- என்று நினைவுகள் அலைபாய்ந்து, மனவெளியில் பண்டித நேரு ஒரு வெள்ளைப் புறாவை கையில் பொத்தி பறக்க விடுகிற காட்சி பதிந்து... வெள்ளைப்புறா படத்தை போட்டாலும் போட்டீர்கள், என்னன்ன நினைவுகளோ!..
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
நீக்குபாட்டு நல்ல பாட்டு பகிர்வுக்கு நன்றி.
நினைவுகள் பறக்கிறதா!
நேரு வெள்ளைப்புறவை பறக்க விட்டு பஞ்சசீல கொள்கையை சொல்வார்.
நேருவும், வெள்ளை புறாவும், ரோஜாவும் மறக்கமுடியாது, படங்கள் வெகு அழகாய் இருக்கும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
பதிலளிநீக்கு----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
அன்பின் தூதுவர்கள்...🕊️🕊️🕊️🕊️🕊️
பதிலளிநீக்குஅன்பான படங்கள்...😊😊😊😊
கொடுத்துப் பாருங்கள் அன்பை,
பின் அது தரும் தெம்பை ...
என்ன ஒரு அழகிய வரிகள்...
படங்களும், பாடல்களும் மிக அருமை மா....
வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குபடங்களையும், பாடல்களையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
ஏதோ வேலைகள், ஒரு நாளைக்கு ஒரு பதிவிற்கு பின்னூட்டம் இடுகிறேன். புகைப்படங்கள் வெகு அழகு.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவேலைகளுக்கு இடையில் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
அருமையான படங்கள்.. பகிர்வு! அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருந்தபோது தினமும் வெள்ளைப் புறாக்களையும் மாடப் புறாக்களையும் பார்க்க முடியும். இப்போதிருக்கும் வீட்டுப் பக்கம் தென்படுவதில்லை. தோட்டத்தைத் தேடி மணிப்புறாக்களே வருகின்றன.
பதிலளிநீக்குகடைசிப் படத்தில் இருப்பது பெண் குயில்தானே?
வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் ராமலக்ஷ்மி, தனி வீடுகளுக்கு மணிப்புறா மட்டுமே வருகிறது.
கடைசி படத்திலும், மைனாவுடன் இருப்பதும் பெண்குயில்தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி .
உங்கள் இனிய நண்பர்களின் அழகிய காட்சிகள் எங்கள் மனதை நிறைத்தது.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் அணிலார் இரு குட்டிகளுடன் வாழ்கிறார்.:) சிறியது ஒன்றுக்கு பயம் கிடையாது வெளியே நன்கு வந்து இருக்கும் மற்றவர் இடையிடையே வெளியே வருவார்.
வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஅணில் பிள்ளை என்றே அழைப்போம் பயம் இல்லாமல் நம்முடன் பழகும் .
முன்பு திருவெண்காட்டில் இருந்த போது எங்கள் வீட்டில் வசித்தார்கள்.
உங்கள் வீட்டில் வாழ்வது மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.