இந்தத் திருக்கோயில் கும்பகோணத்தில் மகாமகக் குளம் கீழ்க்கரையில் உள்ளது.
23.8.2019 அன்று கும்பகோணம் போனபோது அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகளாய் வருகிறது.
குடந்தைக் கோவில்கள்
அமுத குடத்தின் மேலிருந்த தேங்காய் விழுந்த இடத்தில் தோன்றிய இலிங்கம் (தேங்காய் லிங்கமாய் மாறியது) இவர் நவகன்னியர்கள் மகா மகக்குளத்தில் நீராட வந்த போது அபி முகமாக (மேற்கு முகமாய்) இருந்து அருள் புரிந்ததால் இக் கோயில் மேற்கு நோக்கி அமைந்து இருக்கிறது. இது ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அபிமுகேஸ்வர பெருமான் கோயில் என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கோவிலைப் பகலில் எடுத்த படம் திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பதிவில் போட்டு இருக்கிறேன், இந்தப் பதிவில் இரவு எடுத்த படங்கள் .
சுவாமி விமானம்
அம்மன் விமானம்
தலவிருட்சம் நெல்லி மரத்தடியில் நாகர்கள்
நோய் தீர்க்கும் தலம் என்பதால் தலவிருட்சம் நெல்லி. பக்தர்களுக்குப் பல நோய்களைப் போக்கி அற்புதம் செய்தவர் இங்கு உள்ள இறைவன். அமிர்தவல்லி அம்மனும் கேட்டவரம் தருபவள். அம்பாளை நினைத்து காரியத்தை நடத்தினால் எல்லாம் நலமாகுமாம்.
யோக தெட்சிணா மூர்த்தியின் பாதம் அருகே இரண்டு கொம்பு காணப்படுகிறது, பாம்பு படம் எடுத்து நிற்கிறது. இவரும் மிகச் சிறப்பு வாய்ந்தவராம்.
தட்சிணாமூர்த்தியின் சிறப்பைச் சொல்கிறது .
இங்குள்ள பைரவரும் மிகச்சிறப்பு. உயரமான பைரவர். நாங்கள் போன போது தேய்பிறை அஷ்டமி அபிஷேகம் நடந்து கொண்டு இருந்தது. தீர்த்தம் மகாமகக் குளம் தான் தீர்த்தம்.
நவக்கிரகங்களில் சனீஸ்வரன் கொஞ்சம் உயரம். சனி தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் தோஷத்தைப் போக்க வல்லவராம்.
மகா மகக் குளம்- இரவில்
குளத்தைச் சுற்றி ஒளிர் விளக்குகள் -குளக்கரையில் இருந்து அபிமுகேஸ்வரர் கோவில் தெரிகிறது.
வானத்தில் பெளர்ணமி நிலவு போல் காட்சி அளிக்கும் மின்சார விளக்கு
கீழே வாகன விளக்கு எரிக்கும் சூரியன் போல எதிரில் வருபவர்கள் கண்ணைக் கூச வைக்கும் ஒளி.
போன பதிவில் இவர்களைத் தரிசனம் செய்த விபரம் சொல்லி விட்டேன்.
ஆதிகும்பேஸ்வரர் கோவில் தங்கத்தேர் -ஒரு பக்தர் பார்த்துக் கொண்டே இருந்தார், அவர் நகர்ந்தால் எடுக்கலாம் என்றால் அவர் நகர்வதாய் இல்லை. பக்தருடன் எடுத்து விட்டேன்
மங்களம் -போகிற வருபவர்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது
துதிக்கையை ஆட்டி ஆட்டி ஆடிக் கொண்டு இருந்தது.
கோவிலில் ஒரு மண்டபம் -இரவு ஆகி விட்டதால் வெளிப் பிரகாரம் போகவில்லை,
கோவிலுக்குப் போகும்போதே கடையை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு போனோம் , போகும்போதே கண்ணன் கவர்ந்தார். வரும் போது அந்த கடைக்கு வந்து நின்றுவிட்டோம். மகன் கொலு பொம்மைகள் வாங்கச் சொல்லி இருந்தான், கிருஷ்ணஜெயந்தி அன்று கண்ணனை வாங்கி விட்டோம், பேரனுக்கு மரச்செப்பு வேண்டுமாம் அதையும் வாங்கிக் கொண்டோம். முன்பே வாங்கிக் கொடுத்து இருக்கிறோம், அது பழசு ஆகி விட்டதாம் அதனால் புதிதாக வாங்கித் தரச் சொன்னான்.மேலும் சில பொம்மைகள் வாங்கிக் கொண்டோம்.
படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது சகோ.
பதிலளிநீக்குவிளக்கவுரைகளும் அருமை
வாழ்க வளமுடன்...
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
முதல் படம். இரவு நேரத்தில் எடுக்கப் பட்டிருப்பதாலேயே படம் ஒரு விசேஷ அழகாய் இருக்கிறது. மகாமக குளமும் ரொம்ப அழகு.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குபகலில் எடுத்த படம் போன பதிவில் போட்டு விட்டதால் , இரவு எடுத்த படம் போட்டேன்.
படங்களை ரசித்தமைக்கு நன்றி.
மங்களம் படம் எடுக்கிறீர்களா என்று குறுகுறு என்று பார்த்துக்கொண்டிருக்கிறது. அழகு. பொதுவாகவே எல்லா படங்களும் நன்றாயிருக்கின்றன.
பதிலளிநீக்குஇரவு நேரம் ஆகி விட்டதால் கோவிலில் கூட்டம் இல்லை, மங்களத்திடம் ஆசீர்வாதம் வாங்கும் ஆட்களும் இல்லை . அது குழந்தைகளை கண்டால் தான் குஷியாக இருக்கும்.உங்கள் கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குகும்பகோணத்தை அடுத்துள்ள ''திருநாகேஸ்வரத்தில்'' கூட்டம் தூள் கிளப்புமே தவிர்த்து கும்பகோணத்துக்குள் உள்ள நான்கு கோயில்களுக்குள்ளும் கூட்டம் இராது...
நீக்குநகரின் மத்தியிலுள்ள கும்பேஸ்வரர், வியாழசோமேசர், சார்ங்கபாணி கோயில்களில் தாராளமாக தரிசனம் செய்யலாம்...
சகோ துரை செல்வராஜூ வாழ்க வளமுடன்.
நீக்குமீள் வருகைக்கு நன்றி.
நவராத்திரி சமயத்தில் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் கூட்டம் அதிகமாய் இருக்கும்.
கொலு மிக அருமையாக இருக்கும்.
நீங்கள் சொல்வது போல் திருநாகேஸ்வரர் கோவில் எப்போதும் கூட்டம் தான்.
சாரங்கபாணி கோவில் கோபுர தரிசனம் மட்டும் செய்தோம்.
சக்கரபாணி கோவில்தான் போனோம்.
முன்பு கும்பகோண கோவில்கள் அனைத்தும் பலமுறை பார்த்து இருக்கிறோம்.
அழகான படங்கள்.. மனதைக் கவர்கின்றன...
பதிலளிநீக்குமீண்டும் ஒருமுறை அபிமுகேஸ்வரர் கோயிலுக்குள் வலம் வந்த மாதிரி இருக்கிறது..
தங்களுக்கு கால் வேதனை தீர்ந்திருக்கும் என எண்ணுகிறேன்..
அபிமுகேசரும் அமிர்தவல்லி அம்பிகையும் அனைத்து நலன்களையும் தந்தருள்வார்களாக..
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குகால் வலி சரியாகி வருகிறது.நீங்கள் எல்லோரும் நலம் வேண்டிக் கொண்டது பலன் அளித்து வருகிறது.
இன்று பதிவு எழுதும் போதும் அபிமுகேஸ்வரர் அமிர்தவல்லி இருவரிடமும் வேண்டிக் கொண்டேன், பூரண நலம் பெற வேண்டி. நலத்தை தருவார்கள்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அழகான படங்கள்.... ஒவ்வொன்றும் அழகு.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
கோபுரத்துக்கு மட்டும் அழகிய வண்ணம் தீட்டிவிட்டு, கீழே சுவரைக் கவனிக்காமல் விட்டிருப்பது ஒரு மாதிரி அழகைக் கெடுப்பதைப்போல இருக்கு.
பதிலளிநீக்கு//தலவிருட்சம் நெல்லி மரத்தடியில் நாகர்கள்//
ஓ சூப்பராக இருக்கு.. இருண்டபின் போயிருக்கிறீங்க போல இருக்கே.
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
நீக்குகோபுரத்துக்கு வண்ணம் தீட்டி விட்டு கீழே சுவருக்கும் வண்ணம் அடித்து இருப்பார்கள். நம் மக்கள் செய்யும் வேலை விளக்கு போட்டு விட்டு எண்ணெய் கையை ஒரு துணி கொண்டு வந்து துடைக்க மாட்டார்கள், சுவரில் தூணில் கை துடைத்துக் கொள்வார்கள்.
மாணவ செல்வங்கள் தங்கள் பரீட்சை நம்பரை சுவாமி சுவற்றில் எழுதி வைத்து பாஸ் செய்யச் சொல்லி வேண்டிக் கொள்வார்கள். அதை கோவில் நிர்வாகம் அழிப்பார்கள் சரியாக அழிக்காமல் கறுப்பு கறுப்பாக தெரிகிறது.
மாமாவின் புத்தக வெளியீடு விழா நிறைவு பெற்றபின் போனோம் (இரவு தான்) .
//அமிர்தவல்லி அம்மனும் கேட்டவரம் தருபவள். அம்பாளை நினைத்து காரியத்தை நடத்தினால் எல்லாம் நலமாகுமாம்.//
பதிலளிநீக்குநானும் வணங்கிக்கொண்டேன்.
//மகா மகக் குளம்- இரவில்//
மிக அழகு.
அதிரா, நீங்கள் வேண்டிக் கொண்டது மகிழ்ச்சி.
நீக்குமகாமகக் குளம் இரவில் அழகாய் தெரிவதை குளத்தை முழுவதும் வலம் வந்து எடுக்கலாம். ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு அழகு. நான் இரண்டு பக்கம் மட்டும் எடுத்து இருக்கிறேன்.
//வானத்தில் பெளர்ணமி நிலவு போல் காட்சி அளிக்கும் மின்சார விளக்கு//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஆரம்பம் அதை நிலவு எனத்தான் நானும் நினைச்சேன்..
//ஆதிகும்பேஸ்வரர் கோவில் தங்கத்தேர் -ஒரு பக்தர் பார்த்துக் கொண்டே இருந்தார், அவர் நகர்ந்தால் எடுக்கலாம் என்றால் அவர் நகர்வதாய் இல்லை. //
ஹா ஹா ஹா எப்படிக் கடத்தலாம் என ஐடியாப் போடுகிறாரோ?:))
ஹா ஹா ஹா ஆரம்பம் அதை நிலவு எனத்தான் நானும் நினைச்சேன்..//
நீக்குஆஹா! என்ன பொருத்தம்!
//ஹா ஹா ஹா எப்படிக் கடத்தலாம் என ஐடியாப் போடுகிறாரோ?:))//
ஐயோ! பாவம் பக்தர், மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
கலை உணர்வு உள்ள்வராகவும் இருக்கலாம், வேலைபாட்டை ரசித்து பார்த்துக் கொண்டு இருக்கலாம்.
ஓ மங்களாக்கா கொள்ளை அழகு.. ச்சோ ஸ்மார்ட்:)).
பதிலளிநீக்குகடையிலிருக்கும் கண்ணன் அழகு, ஆனா கண் தத்ரூபமாக வரவில்லை.
வெள்ளை மாளிகை அதிரா , மங்களாவை அக்கா ஆக்கி விட்டீர்களா?
பதிலளிநீக்குஅதற்கு வயது என்ன தெரியவில்லையே!
கண்ணன் கண் தத்ரூபகாக வரவில்லையா? கண்ணன் என்னை அந்த கண்ணால் பார்வை பார்த்து '''வாங்கு என்றுச் சொல்லி விட்டார் 'வாங்கி விட்டேன் பொல்லாத கண்ணன் இல்லையா!
உங்கள் முழு பெயரை சொல்லி வரவேற்க மறந்து விட்டேன், அதனால் கருத்துக்களுக்கு நன்றி சொல்லும் போது அழைத்து விட்டேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.
///மங்களாவை அக்கா ஆக்கி விட்டீர்களா?////
நீக்குமரியாதை இல்லாமல் கூப்பிட்டால், அம்மனுக்குப் போட்டுக் குடுத்திடுவாவோ எனும் பயம்:).. ஹா ஹா ஹா...
ஓஒ கண்ணனை வாங்கிட்டீங்களோ ஆவ்வ்வ்வ்வ்வ் அப்போ இம்முறை நவராத்திரி கண்ணனோடுதான்போல.... எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கு...
திரும்பவும் கண்ணனைப் பார்க்கலாமே எண்டு....
மங்களா நல்ல பெண் அப்படி எல்லாம் அம்மனிடம் சொல்லமாட்டாள். அம்மனுக்கும் அதிரா நல்ல பெண் என்று தெரியும் . பயம் வேண்டாம்.
நீக்குகண்ணன் எனக்கு வாங்கவில்லை, மகனுக்கு அனுப்பி விட்டேன். என் வீட்டில் ஏற்கனவே இருக்கிறார் கண்ணன் . அந்த கடையில் பொம்மைகள் வாங்கியது மகனுக்கு. அவன் வாங்கி வரச் சொன்னான்.
என்னிடம் இருப்பதை எடுத்துக் கொள் வந்து என்றேன் நீங்கள் வையுங்கள் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டான்.
அப்படியே அலமாரியில் பொம்மைகளை அடிக்கி கொலு வைக்க போகிறேன்.
வாங்க அப்போது கண்ணனைப் பார்க்கலாம்.
எல்லா படங்களும் அழகா இருக்கு அக்கா. ஆனாலும் 1வது படம் பார்த்ததும் மனதை கொள்ளை கொண்டுவிட்டது. அதே மாதிரி மகாமக குளம் படமும். மிக அழகு. கோவில் பற்றி தகவல்கள் மூலம் அறிந்தாயிற்று. கும்பகோணம் என்றாலே கோவில்களின் நகரம் என்பார்கள்.
பதிலளிநீக்குமங்களா மங்களகரமா இருக்காங்க. நல்ல போஸ் கொடுக்கிறாங்க.
படத்தில் பார்க்கும்போது கூட வாகனத்தின் லைட் கண்ணை கூச செய்கிறது. மின்சாரவிளக்கு நிலா மாதிரியே தெரிகிறது.
கண்ணன் மிக அழகு . பின்னால் இருக்கும் கணேஷர் , மண்சுட்டிவிளக்கு (5திரி போடுவது)லஷ்மி,விவேகானந்தர் படங்கள் மிகவும் அழகா இருக்கு. கண்திருஷ்டி படம் மிரட்டுகிறது.சுவாமி மடியில் லஷ்மி ?இருப்பது படம். அது என்ன சுவாமி அக்கா.
அழகான தெய்வீக பதிவு. 2 படங்களும் சூப்பர்..
வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
நீக்குஅனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அம்மு.
//சுவாமி மடியில் லஷ்மி ?இருப்பது படம். அது என்ன சுவாமி அக்கா.//
ஸ்ரீ சொர்ண ஆக்ர்ஷணபைரவர் அம்மு.
இவரை கும்பிட்டால் பொருள் தருவார் என்று எல்லோரும் கடை வீடுகளில் வாங்கி வைப்பார்கள். உண்மையாக உழைத்து இவரையும் கும்பிட்டால் அள்ளிக் கொடுப்பார்.
கடையை அவசரமாக எடுத்தேன் படம். நிதானமாய் எடுத்து இருந்தால் இன்னும் பொம்மைகள் படம் விழுந்து இருக்கும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஅழகான கோவில் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.படங்கள் மிக அருமையாய் வந்திருக்கின்றன. ஒவ்வொரு படத்திற்கும் அழகான விமர்சனம். இரவில் எடுத்த படங்கள் நல்ல வண்ணமுடன் ஜொலிக்கிறது. அதனால் முதல் படத்திலேயே விளக்கின் ஒளி கோபுரத்தின் மேலாக நிலவு போன்ற பிரமையை ஏற்படுத்தியது.
ஸ்வாமி, அம்மன் விமான படங்கள், தெட்சிணாமூர்த்தி, மகாமக குளம் படங்கள் என அனைத்தும் இரவு நேரத்தில் அழகாக உள்ளது. மங்களா யானை நல்ல உயரத்துடன் கம்பீரமாக உள்ளது. தங்கத் தேர் கண்களை கவர்கிறது. நிலவு, சூரியன் என உவமானபடுத்தப்பட்டு எடுத்த படம் மிகவும் அமர்க்களமாக, அதே சமயம் இரவின் அமைதியை பிரதிபலிப்பதாக காட்சி தருகிறது.
கொலு பொம்மைகள் படம் நன்றாக உள்ளது. கண்ணன் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் மனதை கவர்வார். பொம்மைகள் சுற்றியுள்ள படங்களும் அழகு. அடுத்தப் பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குகோபுர மேலே உள்ள விளக்கு முழுநிலவு போல் தான் தெரிகிறது.
பதிவின் ஒவ்வொரு படத்தையும் ரசித்து பார்த்து கருத்து சொன்னது மனதுக்கு மகிழ்ச்சி கமலா.
மங்களா நல்ல உயரம் தான். கண்ணன் எங்கிருந்தாலும் மனதை கவர்வார் என்பது உண்மைதான். உள்ளம் கவர் கள்வன் தான்.
உங்கள் விரிவான கருத்துக்கும்,அடுத்த பதிவுக்கு காத்து இருப்பதற்கும் நன்றி நன்றி.
ஆதி கும்பேஸ்வரர் கோவில் படங்கள் நல்லா வந்திருக்கு. யானையும்தான்.
பதிலளிநீக்குமங்கள விலாஸ் ஹோட்டலுக்கு (கும்பேஸ்வரர் கோவில் பக்கம்) போனீங்களோ?
வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
நீக்குமங்கள் விலாஸ் ஹோட்டல் போக வில்லை, ஆனால் "சண்முகபவன் ஓட்டல்" போனோம். அது வலையபட்டி அக்கிஹாரம் வீதியில் இருக்கிறது.
நன்றாக இருந்தது. காலை டிபன் சாப்பிட்டோம்.
முதல் நாள் இரவு நாங்கள் தங்கி இருந்த ராயாஸ் ஓட்டல் பக்கம் இருந்த உணவு விடுதியில் சாப்பிட்டோம், சுமராக இருந்தது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
அன்பு கோமதி மா. இரண்டு நாட்களாக வெளிவேலை முழு நாட்களையும்
பதிலளிநீக்குஆக்கிரமித்துக் கொண்டது.
மங்களாம்பிகாவும் கும்பேஸ்வரரும் மிக சான்னிதியம் வாய்ந்தவர்கள்.
மங்களா குட்டியும் ஆழ்ந்த அறிவோடு பார்க்கிறது. செல்லம்.
யானையே அழகுதான். மகாமகக் குளமும் சுற்றி இருக்கும் விளக்குகளும் மிக மிக அழகு.
அந்தப் பொம்மைக்கடை அப்படியே அள்ளிக்கொள்ளலாம் போல ஆசை.
மதுரை கோவிலில் கூட பெரிய பெரிய பொம்மைகள்
வைத்திருப்பதாகத் தங்கை சொன்னாள். விலை எப்படி இருக்குமோ.
நீங்கள் மகனுக்கு அனுப்பிக் கொடுத்தது மிக மகிழ்ச்சி.
உடல் நலம் சீக்கிரம் நேர் பட வேண்டும். தங்கச்சி. வளமுடன் வாழ்க.
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குநேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கதானே! பதிவுகள்.
//மங்களாம்பிகாவும் கும்பேஸ்வரரும் மிக சான்னிதியம் வாய்ந்தவர்கள்.//
நவராத்திரிக்கு இந்த கோவிலில் கொலு மிக நன்றாக இருக்கும். மிகவும் சான்னிதியம் வாய்ந்தவர்கள் தான் . அலங்காரம் அம்மனுக்கு மிக நன்றாக இருக்கும் பார்த்து கொண்டே இருக்கலாம்.
நீங்கள் சொல்வது போல் யானையே அழகுதான்.
பொம்மை கடையில் பொம்மைகளை பார்க்க ஆசைதான். இருப்பதை எடுத்து வைத்து கும்பிடவே மனபலம் தேவை படுகிறது, அதனால் மகனுக்கு மட்டும் வாங்கினேன் எங்களுக்கு வாங்கவில்லை.
மதுரையில் அம்மன் சன்னதி கடையில் முன் பக்கத்தில் பொம்மைகடைதான். நான் செட்டியார் பொம்மை முன்பு வாங்கினேன். இப்போது கோவிலுக்கு போகவே இல்லை. ஆடி மாதம் முளைகொட்டுத் திருவிழாவிற்கு போனதுதான்.
உங்கள் கருத்துக்கும், உடல் நலம் பெற வாழ்த்தியதற்கும் நன்றி.
நீலப் பின்னணியில் கோயிலின் பெயர் தாங்கிய வெள்ளை ஒளி முகப்புப் படத்தில் வெகு அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குஆகா, இரவு ஒளிக்கீற்றில் மகாமகக் குளம் எவ்வளவு அழகு?..
கும்பகோணத்தில் பிறந்து விட்டு, கும்பகோணத்தை விட்டு வேறெங்கோ வாழ்கிறோமே என்று இருக்கிறது.
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
நீக்குகோவில் படங்கள், மகாமகக் குளம் படங்களை ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
கும்பகோணத்தில் தான் பிறந்தீர்களா? பிறந்த ஊரை விட்டு வேறு ஊர்களில் இருக்க வேண்டி உள்ளது . பிறந்த ஊர் நினைவுகள் வந்து விட்டதா?
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அபிமுகேஸ்வர பெருமான் கோயில் தரிசனம் ...மிக அருமை மா .
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் மிக அழகு ..பகலில் ஒரு காட்சியும் இரவில் ஒரு காட்சியும் என என்ன அழகு ....
இரவில் எடுக்கும் படங்களுக்கு என்றும் அழகு அதிகமே ..
மங்கலம் , தங்கதேர் எல்லாமே சிறப்பு ..
கொலு கண்ணன் மனதை கொள்ளைக் கொள்கிறார் ...
வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
நீக்குபகலில் ஒரு காட்சியும் இரவில் ஒறு காட்சியுமாகத்தான் தெரியும். இரவு எடுத்த படங்களையும், மங்களம், தங்கத்தேர், மற்றும் கண்ணனை ரசித்துப் பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி அனு.
அழகிய படங்களுடன் கோவில் தரிசனம் கண்டு மகிழ்ந்தோம். கண்ணன் சிலையும் அழகு.
பதிலளிநீக்கு