Friday, May 5, 2017

சிட்டுக்குருவி


உணவு  ஊட்டும் காணொளியை ப் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.


எங்கள் குடியிருப்பில்  குருவி கூடு கட்டி இருக்கிறது. காலை முதல் மாலை வரை அதன் கீச் கீச் ஒலி கேட்டுக் கொண்டு இருக்கும்.  கூட்டிலிருந்து குஞ்சுகள் வெளி வந்த உடன் தாய், தந்தை குருவிகள் மாற்றி மாற்றி உணவை கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிய வண்ணம் இருக்கும்.

நான் ஜன்னலில் வைக்கும் சாதத்தை  ஒவ்வொரு பருக்கையாக அலகில் கொத்தி எடுத்து வந்து ஊட்டுவதே அழகு. சின்னதாக இருந்தவரை கூட்டுக்குள் இருந்து உணவை வாங்கிய  குஞ்சுகள் கொஞ்சம் பெரிதானவுடன் வெளியே வந்து வாங்க ஆரம்பித்து விட்டது.

முண்டி அடித்து முதலில் நிறைய உணவை சாப்பிடும் குஞ்சு முதலில் பறக்க தயார் ஆகி விடுகிறது.. ஓரமாய் அம்மா உள்ளே வந்து கொடுக்கட்டும் என்று இருக்கும் சோம்பல் குஞ்சு மெதுவாய் பறக்கும் போல!

அம்மா ! அம்மா எனக்கு
அம்மா! ஆ ஊட்டு!
 அம்மா ! அம்மா வா பக்கத்தில்
 குஞ்சு இறக்கையை விரித்துக் கொண்டு உணவை வாங்கும் அழகே ! அழகு!

சமத்தாய் உள்ளே இருங்கள் அம்மா வந்து விடுகிறேன்
யாராவது   பார்க்கிறார்களா? என்ற கவனிப்பு

அம்மா எங்கே காணோம்!
மெல்ல கீழே இறங்கிக்   கவனிக்கிறது ஒரு குஞ்சு
 அடப் போக்கிரிக் குட்டி ! உன்னைக்  கீழே வராதே! என்று சொல்லிப் போனேன் அல்லவா?   .  உன் உடன்பிறந்த இரண்டு பேரும் சமத்தாய் அம்மா பேச்சைக் கேட்டு உள்ளேயே இருக்கிறார்கள் அல்லவா?  ( மூன்று குஞ்சுகள்)

உனக்கு  இறக்கை முளைத்து விட்டது  என் பேச்சை எங்கே கவனிக்கப் போகிறாய். இனி கவனமாய் இரு. இன்னும் கொஞ்ச நாளில் என்னைப் போல் நன்றாகப் பறக்கலாம். இனி நீயே உன் உணவைத் தேடிச் செல்லலாம். இடையூறுகளிலிருந்து தப்பிக்கச் சொல்லித் தருகிறேன் அதுவரை பொறுமையாக இரு கண்ணு.

                                                                  வாழ்க வளமுடன்.


46 comments:

நெல்லைத் தமிழன் said...

காணொளி எனக்கு வேலை செய்யலை. ஆனால் சிட்டுக்குருவி படங்களும் அவைகள் உண்பதும் பார்க்க பரவசமா இருக்கு. கரண்ட் பாக்சானாலும் சரி எந்த இடமானாலும் சரி, அவைகள் குடும்பம் நடத்தத் தயாராகிடுது.

தி.தமிழ் இளங்கோ said...

வீடியோ விறுவிறு என்று முடிந்து விட்டது. உங்களின் ஆர்வம் பாராட்டத் தக்கது. தனது குஞ்சுகளை இவ்வளவெல்லாம் சீராட்டி பாராட்டி வளர்க்கும் தாய்க் குருவி, அவை பெரியவை ஆனதும் அவற்றைப் பற்றிக் கவலைப் படுவதே இல்லை என்பது இயற்கையின் அதிசயம்தான். ‘ அண்ணன் என்னடா தம்பி என்னடா ‘ என்ற பாடலில் வரும்,

// வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா.. //

என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.

கோமதி அரசு said...

வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.
சின்ன காணொளிதான். ஏன் வரவில்லையென தெரியவில்லை.
சின்ன பறவைக்கு அதிக மூளையை கொடுத்து இருக்கிறார் கடவுள், மற்ற யாரும் தொந்திரவு செய்யாத பாதுகாப்பான இடம் அதற்கு போதும்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி .

கோமதி அரசு said...

வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
சிட்டுக்குருவி மிக சுறு சுறுப்பு கொஞ்ச நேரம் தான் நின்றது அதனால் சின்ன காணொளிதான் அதுதான் விறு விறு என்று முடிந்து விட்டது.
பறக்கும் வரை அதன் பொறுப்பு இருக்கிறது, அதன் பின் நீங்கள் சொன்னது போல்தான்.

// வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா.. //

பாடல் பகிர்வு அருமை.


நாம் பாசம் வைத்துக் கொண்டு சாகும் வரை இன்பமும், துன்பமும் அனுபதித்துக் கொண்டு இருக்கிறோம்.

அந்த காலம் போல் வானபிரஸ்தம் போய் விட்டாலும் கவலை இல்லை.
என்ன செய்வது வாழ்க்கைமுறை மாறி விட்டதே ! வாழ்ந்து ஆக வேண்டும்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

KILLERGEE Devakottai said...

காணொளி காண இயலவில்லை சகோ.

குருவிக்கு ரெக்கை முளைச்சுடுத்து, கூட்டைவிட்டு பறந்து போயிடுத்து.

Angelin said...

கொள்ளை அழகுக்கா .வீடியோ பார்த்தேன் ..என்னே அழகு ..இறைவனின் படைப்பில் ..

சின்னஞ் சிட்டுக் குருவியே உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு என பாடத்தோணுது :)

middleclassmadhavi said...

Chinnanchiriya jeevangal mel ungalukku irukkum akkarai potraththakkadhu

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

நான்கு குஞ்சுக்ளில் ஒன்று ரெக்கை முளைச்சு கூட்டை விட்டு பற்ந்து போய் விட்டது.
மூன்று இருக்கிறது நாளை ஒன்று பறந்துவிடும் என்று நினைக்கிறேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான அபூர்வமான படங்கள்.

எப்படித்தான் புகைப்படமாக எடுத்தீர்களோ! ஆச்சர்யமாக உள்ளது.

மின் சாதன ஒயர்களின் இடையே கூடு கட்டியுள்ளதைப் பார்க்க எனக்கும் மிகவும் பயமாகவே உள்ளது.

இதுபோன்ற சின்னச்சின்ன சிட்டுக் குருவிகளைப் பார்த்தாலே சந்தோஷமாக உள்ளது.

பகிர்வுக்கு பாராட்டுகள் + நன்றிகள், மேடம்.

கோமதி அரசு said...

வணக்கம் ஏஞ்சலின் , வாழ்க வளமுடன்.
உங்களுக்கு வீடியோ தெரிந்ததா ? மகிழ்ச்சி.
பாடுங்கள் ஏஞ்சலின். என்னை சந்தோஷமாய் வைத்து இருப்பதும் இந்த குருவிகள் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன்.
சிட்டுக்குருவி உங்களை அழைத்து வந்து விட்டது.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கோபால்கிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
பால்கனி பக்கத்தில் கதவு கிட்ட ஒளிந்து இருந்து எடுத்தேன் சார்.
பால்கனிக்கு நாம் வந்தாலே பறந்து விடும். கேபிள் டி.வி ஒயர்கள்.

பாரதியும் நோக்க நோக்க களியாட்டம் என்று சொல்லி இருக்கிறார்.

காக்கை , குருவி எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாடலில்.

உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

சிட்டுக்குருவிப் படங்கள் பார்க்கப் பார்க்கப் பரவசம்
அற்புதம்
காணொளி திறக்க மறுக்கிறது
நன்றி சகோதரியாரே

கோமதி அரசு said...

வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன். காணொளி ஏன் திறக்க மாட்டேன் என்கிறது என்று தெரியவில்லையே! உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா அழகு.....

Ramani S said...

சிட்டுக் குருவியைப் பார்ப்பதே
அபூர்வம் என ஆகி விட்ட
நிலை வந்து விட்ட நிலையில்...

இப்படிப் பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது

பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார் , வாழ்க வளமுடன்.
இங்கு குருவியை பார்த்தவுடன் ஆச்சிரியம் , ஆனந்தம் ஏற்பட்டது உண்மை.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Chellappa Yagyaswamy said...

அழகாக வாய்திறக்கும் குஞ்சுக்குருவிக்கு எனது வாழ்த்துக்கள்!

-இராய செல்லப்பா நியூஜெர்சி

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான பதிவு. படிப்படியாய் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் அழகாய் இருக்கின்றன. பொறுமையாய்க் காத்திருந்து எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள். முதலில் முன்னேறிய அந்தக் குருவிக்கு குஞ்சுதான் அந்தக் குழந்தைகள் செட்டில் ஸ்மார்ட்! முதல் மார்க்! இளையதாய் இருக்குமோ! காணொளி எனக்கும் ஓடவில்லை! தம வாக்ட்டு விட்டேன்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
அழகான ரசனைக்கும், புகைப்படங்களுக்கும் பதிவிற்கும் பாராட்டுகள்.

கோமதி அரசு said...

வணக்கம் செல்லப்பா சார், வாழ்க வளமுடன்.
குஞ்சுக் குருவிக்கு வாழ்த்து சொன்னது மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

துரை செல்வராஜூ said...

சிட்டுக்குருவி கூடு கட்டுவதும் குஞ்சு பொரிப்பதும் நல்ல சகுனங்கள் என்பார்கள்...

அதிலும் நாம் போகும் இடம் எல்லாம் நம்மைத் தொடர்ந்து ஏதாவது ஒரு உயிரினம் வருவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை..
ஒரு துணையில்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை!..
- என்றுரைப்பார் கவியரசர்..

வாழ்க வளமுடன்!..

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
இன்று நான் பயந்தது நடந்து விட்டது , காலை ஒரு குருவி குஞ்சு பறந்து விட்டது அதை தொடர்ந்து மற்றொரு குஞ்சு பால்கனியில் வந்து அமர்ந்து விட்டது, சாதம், அரிசி எல்லாம் வைத்தேன் தொடவே இல்லை தாய், தந்தை குருவிகள் வந்து சத்தம் கொடுத்தவுடன் பறந்து விட்டது. மூன்றாவது பறக்கவே முடியமால் கூட்டிலிருந்து வெளியே சன்சைடில் விழுந்து விட்டது. யாராவது வந்தவுடன் கீழே இறங்கி எடுக்க சொல்லலாம் என்று பார்த்தேன் , அதற்குள் அதை காணவில்லை வருத்தமாய் இருக்கிறது. பெற்றோர் குருவிகள் இரண்டும் தேடி குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
நானும் உறவினர்கள் வருகையாலும், வீடுமாற்றம் காரணமாகவும் இணையம் பக்கம் வரவில்லை.
உங்கள் பணி ஓய்வு விழா பதிவை படிக்கிறேன். உங்கள் பணி ஓய்வு விழா சிறப்பாக நடந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
உங்க்கள் கருத்துக்கும்,பாராட்டுக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வாக்குபடி நல்லதே நடக்கட்டும்.
பாடல் பகிர்வு அருமை.
சொந்தங்கள் தூரத்தில் இருக்கும் போது இவைதான் நமக்கு சொந்தங்கள்.
உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

மனோ சாமிநாதன் said...

காணொளி மிக அருமை!
சகோதரர் தமிழ் இளங்கோ பகிர்ந்த பாடலும் அதற்கு உங்களின் அருமையான பதிலும் அற்புதம்!

எனக்கும் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. சகோதரரின் பகிர்வும் உங்களின் பதிலும் இணைந்த வரிகள் அவை!

'சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள், அந்த உறவு முறிந்தது!

நாம் போடும் மேடைகள் நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்.....'

கோமதி அரசு said...

வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
காணொளி பார்க்க முடிந்தது மகிழ்ச்சி.
உங்கள் பாடல் பகிர்வும் அருமை.

//நாம் போடும் மேடைகள் நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்.....'//

நீங்கள் சொல்வது சரிதான் நாம் போடும் மேடை நாடக மேடைதான். சூத்திரதாரி
இறைவன் நமக்கு இந்த உலக மேடையில் என்ன பாத்திரம் கொடுத்து இருக்கிற்றோ அதை திறம்பட அவன் அருளால் நடிக்க வேண்டியது நம் கடமை.
ஆட்டுவிப்பவன் அவன், ஆடுபவர்கள் நாம்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

காமாட்சி said...

அழகான குருவிக்குடும்பம்.காணொளி மிக்க அழகு. கடைசியில் பாவம் ஒரு குருவி. அதற்காகவும் அதன் அம்மா,அப்பாக்குருவி என்ன செய்ய முடியும். பொருமை ட்டும் இல்லை,ஆர்வமும் இருந்தால்தான் இப்படிக் காணொளி எடுக்க முடியும். நன்றி இவைகளைப் பார்க்கக் கொடுத்ததற்கு. அன்புடன்

கோமதி அரசு said...

வண்க்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
அழகான குருவி குடும்பம், மீண்டும் கூட்டை சரிசெய்கிறது .
உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

ராமலக்ஷ்மி said...

பொறுமையாக எடுக்கப்பட்ட படங்களின் அருமையான தொகுப்பு. படங்களுக்கான கருத்துகளும் அருமை. எனக்கும் காணொளிகள் வேலை பார்க்கவில்லை. ஆனால் ஃபேஸ்புக்கில் பார்த்ததாக இருக்குமென நம்புகிறேன்.

கோமதி அரசு said...

வனக்கம் ராமலக்ஷ்மி. வாழ்க வளமுடன்.
ஊருக்கு போய் இருந்தீர்களா?
காணொளி முகநூலில் பகிர்ந்த படம் தான்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஆம், சென்ற ஒருவாரம் நெல்லையில் இருந்தேன்.

சென்னை பித்தன் said...

உயிருள்ள படங்கள்
அருமை

கோமதி அரசு said...

வணக்கம் சென்னை பித்தன் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

நினைத்தேன் ராமலக்ஷ்மி. விடுமுறைக்கு தங்கை வந்து இருக்கிறார்களா? அம்மா, தம்பி நலமா?

Jayanthi Jaya said...

ஆஹா அருமை.

புகைப்படங்கள் அருமை.

உங்கள் புகைப்பட கருவிக்கு அருமையாக போஸ் கொடுத்த சிட்டுக் குருவி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

வணக்கம் ஜெயந்தி ஜெயா. வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
சிட்டுக்குருவி குடும்பத்திற்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி.

Jayanthi Jaya said...

கோமதி நான் முக்திநாத் செல்லும் முன் உங்கள் வலைத்தளம் என்று தெரியாமலே திருமதி பக்கங்களுக்கு வருகை தந்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

வணக்கம் ஜெயந்தி ஜெயா, வாழ்க வளமுடன்.
முக்திநாத் தரிசனம் நன்கு ஆச்சு என்று நினைக்கிறேன்.
முக்திநாத் போகும் முன் என் பதிவை படித்த்து மகிழ்ச்சி.

Thulasidharan V Thillaiakathu said...

அழகு அழகு அழகு அப்படி ஒரு அழகு!!! உங்கள் வரிகள் செம!! மிக மிக ரசித்தோம்...

காணொளி ஓடவில்லை.. புகைப்படங்கள் மிக மிக அழகு பொறுமாயாக ஒவ்வொரு ஆக்ஷனையும் எடுத்துருக்கிறீர்கள் அக்கா...என்ன அழகுக் குஞ்சுகள்! சிட்டுக்குருவியே அழகுதான்/ பாத்துக் கொண்டே இருந்தேன்....அந்தக் குஞ்சுவிற்கு தைரியம் ஓவர்தான் ஹஹஹஹ...சமர்த்து....பொகிஷமான படங்கள்...மனதை மகிழ்விக்கிறது.

மிகவும் ரசித்தோம்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அக்கா மீண்டும் ரெஃப்ரெஷ் செய்து பார்த்தேன் காணொளி வேலை செய்தது ஐயோ சோ க்யூட்!!!! ரொம்ப அழகாக இருக்கு அக்கா....மீண்டும் பார்த்தேன்...கொடுத்துவிட்டு பறந்து விடுகிறதே அம்மா அடுத்த இரை தேட போலும்!!! எப்படி எடுத்தீர்கள் அக்கா? இவ்வளவு அருகில் சூம் செய்து எடுத்தீர்களோ? சரியான நேரத்திற்கு எடுத்திருக்கிறிரிகள்...அருமை

ரசித்தேன் ரசித்தேன்

கீதா

கோமதி அரசு said...

வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
காணொளி சிலருக்கு திறக்க மாட்டேன் எங்கிறது ஏன் என்று தெரியவில்லை.
இப்போது கூடு வெறுமையாக இருக்கிறது. அடிக்கடி வந்து கூட்டை பார்த்து போகிறது குருவிகள்.
மீண்டும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலம் தான் வரும் அதுவரை காத்து இருக்க வேண்டும்.
எங்களுக்கும் மகிழ்ச்சியை தந்தது குருவி குஞ்சுகள்.
உங்கள் வரவுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
மீண்டும் வந்து காணொளியை பார்த்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.
குஞ்ச்சுகளின் மகிழ்ச்சி ஆரவாரம் கேட்டு எட்டிப் பார்த்து எடுத்தேன் , திரைசிலையின் பின் ஓலிந்து கொண்டு.
சூம் செய்து எடுத்தேன்.
மீண்டும் வந்து ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

மீண்டும் இரசித்தேன்.

கோமதி அரசு said...

வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
மீண்டும் ரசித்தமைக்கு நன்றி.