ஞாயிறு, 5 மார்ச், 2017

நார்த்தாமலை பகுதி- 4 (மாலை நேரக் காட்சிகள்)

மாலையில் வீடு திரும்பும் ஆடுகள் ( மலை மேல் இருந்து எடுத்த படம்)

மீன் கிடைக்குமா?  காத்து இருக்கும் கொக்கு
ஓய்வு எடுத்து மீனைப் பிடிக்க ஒரே பாய்ச்சல் நீர்  நோக்கி ( மகள் எடுத்த படம்)
மகள் எடுத்த படம்
எனது மகன் தனது   காமிராவில் எடுத்த படம்

மாலை நேரம் ஆனந்த  குளியல்   (மகன் எடுத்த படம்)

மலை மேல் உள்ள  சுனை நீர்- கிராமத்து குழந்தைகளுக்கு நீச்சல் குளம்.(மகன் எடுத்த படம்)
சகோதரிகளின் செல்லச் சண்டை.  ( மகன் எடுத்த படம்) அவர்களும் குளிக்க வந்து இருக்கிறார்கள்.

கரையோரமாக நாங்கள் நடந்து வந்த பாதை 

எங்களை மகள் எடுத்த படம். மலையிலிருந்து கீழ் இறங்கும் போது

மாலைச்சூரிய ஒளி மண்டபத்தைப் பொன் வண்ணம் ஆக்கியது

சுருக்குப்பையிலிருந்து வெற்றிலையைப் போட்டுக் கொண்டுகாலை நீட்டி  மாலைப் பொழுதை  ரசிக்கும் அம்மா
பூச்சி கிடைக்குமா? என்று பார்க்கும் பூச்சி பிடிப்பான் பறவை.


மாலை நேரம் தங்கள் வீடு வந்து ஓய்வு எடுக்கும் ஆடுகள்.

நார்த்தா மலைப்பயணம் இனிதாக  நிறைவு பெற்றது.  தொடர்ந்து படித்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.

============================


31 கருத்துகள்:

  1. படங்கள் அழகு. நீங்களும் ஸாரும் இருப்பது மணிரத்னம் படம் மாதிரி இருக்கிறது.

    :))

    பதிலளிநீக்கு
  2. இதில் உள்ள படங்கள் அத்தனையும் மிகவும் அழகாக கவனமாக வெகு திறமையுடன் எடுக்கப்பட்டுள்ளன.

    நாங்களே நேரில் போனால்கூட இவ்வளவு விஷயங்களை உன்னிப்பாக கவனித்திருக்க முடியாமல் போய்விடக்கூடும்.

    மேலே ஸ்ரீராம் சொல்லியுள்ளது மிகவும் கரெக்ட். அந்தப்படங்களில் வெளிச்சமும் தெளிவும் இல்லாவிட்டாலும்கூட, அது ஒரு ஸ்டைலாகவே உள்ளதுடன், அதில் உள்ளது நீங்கள் இருவரும்தான் என்று புரியக்கூடியதாக அமைந்துள்ளது ஓர் தனிச் சிறப்பாகும்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஶ்ரீராம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் கோபலாகிருஷ்ணன் சார். வாழ்க வளமுடன்.

    உங்கள் பாராட்டுக்கு நன்றி. மகள் எங்களை எடுத்த படத்தைப் பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.
    அந்தி வேளை, மாலைச்சூரியன் பின்புறம் அந்த மாதிரி வேண்டு மென்றே எடுக்கப்பட்ட காட்சி.
    ஶ்ரீராம் மணிரத்தினம் படத்தில் இது போன்ற காட்சிகள் வரும் அதைதான் குறிப்பிட்டார். அவர் பேர் உள்ளவர்தான் காமிராமேன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  5. அவசியம் ஒருமுறை
    சென்று பார்த்தே ஆக வேண்டும் என்ற
    ஆவலைத் தங்களின் பதிவும் படங்களும்
    தூண்டியுள்ளன
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார் , வாழ்க வளமுடன்.
    அவசியம் சென்று வாருங்கள், அழகான, அமைதியான இடம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அழகான படங்கள்... மிகவும் ரசித்தேன் அம்மா...

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  9. எடுத்த புகைப்படங்களை பிறிதொரு நாள் பார்த்து மகிழும் வாய்ப்பும் உள்ளது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. மனதை அள்ளும் அழகான படங்கள்..ஆடுகள் வரிசையா செல்வதும் குளத்தில் குதிக்கும் /குளிக்கும் சிறாரும் பொன்னந்தி மாலையில் நடக்கும் நீங்களும் மரம் சூழ் மலைப்பகுதியும் அழகோ அழகு

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

    //எடுத்த புகைப்படங்களை பிறிதொரு நாள் பார்த்து மகிழும் வாய்ப்பும் உள்ளது வாழ்த்துகள்//

    ஆமாம் சார், நீங்கள் சொல்வது உண்மை.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  12. வண்க்கம் ஏஞ்சலின் , வாழ்க வளமுடன்.
    எல்லா படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. இரம்மியமான சூழல். அனைவர் எடுத்த படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. உங்களைத் தேடி வந்து பறவைகள் சுற்றுவது இறைவன் கொடுத்த வரம்!..

    எங்களுக்கும் இதெல்லாம் காணக் கிடைக்கின்றது..

    தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் துரை செல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அனைத்து படங்களும் ரொம்ப அழகா இருக்கு...


    பதிலளிநீக்கு
  18. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. இயற்கையில் மனம் லயித்திடவைக்கும் அழகான படங்கள்.. சிறுகுழந்தைகளின் உற்சாகம் அழகு. சாரும் நீங்களும் மாலைச்சூரியனின் ஒளியில் நிழலுருவாகத் தோன்றும் படம் உச்சம்.. வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  20. இரண்டு பகுதிகளும் நிதானமாகப் படித்து படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டிய பதிவுகள்!
    உங்கள் உழைப்புக்கும் ஆர்வத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் உற்சாகம் தரும் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. படங்கள் அத்தனை அழகு! சிறுவன் குளத்தில் குதிப்பது, மீன் கொத்தி மேலேழும்புவது, அந்த அம்மா காலை நீட்டி இருப்பது என்று ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லுகிறது. சிறுவர்கள் கொடுத்து வைத்தவர்கள் இப்படி சுனை எல்லாம் இருந்து குளிப்பது என்று....அருமையான இடம்...

    பதிலளிநீக்கு
  24. malargali naar kondu thoduthu maaliaaguvathu poola eluthudan pugai padam serthu varalatrai aavana paduthamaiku vaalthukal.

    பதிலளிநீக்கு
  25. தேர்ந்த ஃபோட்டோகிராஃபரால் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளன. மகனும் மகளும் வந்து இருந்து உங்கள் பொழுதை இனிமையாக ஆக்கி இருப்பதற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோ சாரதா , வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
    படங்களை ரசித்தமைக்கு நன்றி.
    கிராமத்து குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்தான்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. My Mobile Studios வாழ்க வளமுடன்.
    உங்கள் அழகான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    நம்மை போன்றவர்களுக்கு வாழ்வில் வசந்த காலம் என்றால் பிள்ளைகள் வரும் நாள் தான்.
    உங்கள் வரவுக்கு கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு