செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

அந்திப்பொழுதினிலே!




மாலைச்சூரியன்  காட்சி - மொட்டை மாடியில் எடுத்த படம்.
நிலாப் போல் காட்சி அளிக்கிறது அல்லவா?


எங்கள் வீட்டு மொட்டை மாடியில், மற்றும் பயணத்தில் கண்ட  மாலை நேர சூரியனை  இங்கு பகிர்வாய்.


'ஒளியும் இருளும்' என்ற தலைப்பில்  பாரதி பாடிய  "வானமெங்கும் பரிதியின் சோதி " என்று தொடங்கும் பாடலில், "தருக்களின் மீதும் பரிதியின் சோதி" என்று பாடி இருப்பார்.


அது போல மொட்டை மாடிக்கு மாலையில் போனபோது, மாலைச் சூரிய ஒளி தென்னை மரத்தையும்,

வேப்பமரத்தையும்  தன் சோதியால் அலங்கரித்துக் கொண்டு இருந்தது.



தென்னம் கீற்றுக்கு  இடையே சூரிய ஒளி



தென்னை மரத்திற்கு அலங்கார சூரிய விளக்கு




வேப்பமரமும், தென்னை மரமும் சூரிய ஒளியில்


அந்தி வானம்

"செவ்வொளி வானில் மறைந்தே இளந்
தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்" (பாரதி)
பெளர்ணமி நிலா போல் காட்சி அளிக்கிறது அல்லவா/





காரில் பயணம் செய்யும் போது  பாதையில், மாலைப் பொழுதில் கண்ட மாலைச்சூரியன் காட்சி.


மொட்டை மாடியில் எடுத்த படம்

 மேகம் மறைத்து மறைத்து விளையாடியது சூரியனை.


வாத நாராயண மரங்களுக்கு இடையில்

இருமருங்கிலும் மரக்கூடாரங்கள், அதற்கு நடுவில் தன் ஒளி வெள்ளத்தை செலுத்தி  மகிழ வைத்தது.


வானமும் மரங்களும், சூரிய ஒளியும்  ஒரு பாடலை நினைவூட்டியது

//மாலையும், இரவும் சந்திக்கும் வேளையில் மயங்கிய ஒளியினைப் போல//


பஞ்சுப் பொதிகள் சிதறியது  போல வானம்,


                                  நார்த்தாமலையில் (சித்தன்ன வாசல் அருகில்) சூரியன் மறையும் காட்சி
சுனைநீரில்  மாலைக் கதிரவன் ஒளி
                                                        மலைவாயில் சூரியன்

வசன கவிதையில் பாரதி காட்சிப்படுத்திய இன்பம் :-

"இவ்வுலகம் இனியது; இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது;. தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது;
ஞாயிறு நன்று; திங்களும்  நன்று.


    வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க  வளமுடன்!
  -----------------------------------------------------------------------------------------------                                                      

25 கருத்துகள்:

  1. ஆஹா... ஆஹா... அத்தனையும் கண்கொள்ளாக் காட்சிகள்... இதுபோன்ற இயற்கையின் அழகை.. அது செய்யும் மாயாஜாலத்தையும் ரசிக்க மனமும் நேரமும் இல்லாதவர்கள் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையின் சுவாரசியங்களை இழந்துவிடுகிறார்கள்... நல்லதொரு பதிவு... நேரில் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் இயற்கையின் அழகை இப்படியாவது ரசிக்க வாய்ப்பு வழங்கியுள்ளீர்கள்.. நன்றி கோமதி மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.

      மாயவரத்தில் எடுத்த படங்கள், வழிப்பயணத்தில் எடுத்த படங்கள், நார்த்தா மலை போன போது என்று எடுத்த படங்களை பார்க்கும் போது சோர்ந்து கிடக்கும் என் உள்ளம் உற்சாகம் கொள்கிறது.

      நீங்கள் சொல்வது போல் சுவாரசியம் இல்லாமல் போகும் பொழுதை சுவாரசியம் ஆக்கி கொள்ளவே இந்த பதிவு. நான் இரண்டு வருடங்களுக்கு முன் முக நூலில் போட்ட மாலைச்சூரியன் படத்தை இன்று நினைவு படுத்தியது மார்க் , அதனுடன் நான் புதிதாக எடுத்த நார்த்தா மலை படத்தையும் இணைத்தேன்.

      உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. நல்ல ரசனை. இயற்கையை கண்முண் கொண்டுவந்தவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. அழகிய படங்களுக்கு மகாகவியின் பாடல் வரிகளுடன் இனிய நேர்முகம்!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. மிகவும் ரசித்தேன்...

    அருமை...

    தமிழ்மணம் இணைத்து +1... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி, தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டு அளித்தமைக்கு நன்றி.

      நீக்கு

  5. ஒவ்வொரு படமும் மிக அழகாக உள்ளன. பார்த்துப் பார்த்து ரஸித்து ரஸித்துப் படமாக எடுத்துக்காட்டி விளக்கமும் கொடுத்துள்ளீர்கள். இயற்கையின் இந்த ரம்யமான காட்சிகள் எப்போது கண்டாலும் மனதுக்கு மிகவும் சந்தோஷமாகவே உள்ளது. பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

      நீங்கள் சொல்வது உண்மைதான். இயற்கையின் அழகு எப்போதும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.


      உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  6. ஒரு பேப்பரும், பேனாவும் எடுத்துக் கொண்டு கவிதை எழுத உற்கார்ந்து விடலாம் போலப் படங்கள். எல்லாமே அருமை.

    வானம் எங்கும் பரிதியின் சோதி... எஸ் பி பி குரலில் மனதில் ஒலிக்கிறது. முன்னர் ஒரு பொதிகைத் தொலைக்காட்சித் தொடரில் எஸ் பி பி பட்டியல் நிறைய பாரதி பாடல் துணுக்குகள் எங்காவது கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

    நின்று பார்த்து ரசிக்க வைத்தன படங்கள். தம +1

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    முன்பு கிருஷ்ண ஜெயந்திக்கு உறி கட்டி தொங்க விட்ட படத்திற்கு கவிதை எழுதியது போல
    இந்த படங்களுக்கும் கவிதை எழுதுங்களேன்.
    படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    தமிழ்மண ஓட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கையால் எழுதுவதைவிட, காமிராவால் எழுதுவது சிறப்பானது என்று காட்டியிருக்கிறீர்கள்! நாங்களும் பயணம் போகும்போது புகைப்படம் எடுப்பதுண்டு. ஆனால் தேவையான அளவு வெளிச்சம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. வண்டியி லிருந்து இறங்கி நின்று படம் எடுக்கிற அளவுக்கு சாலை ஓரத்தில் இட வசதியோ, கால இடைவெளியோ கிடைப்பதும் இல்லை. ரசித்தேன்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் செல்லப்பா சார், வாழ்க வளமுடன்.
    உங்க்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
    இடத்திற்கு ஏற்ற மாதிரிதான் நாம் இருக்க வேண்டியது இருக்கிறது அல்லவா?
    படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ரசனைமிகுந்தவர் நீங்கள் என்பதை இந்த படங்கள் சொல்லாமல் சொல்லி செல்லுகின்றன

    பதிலளிநீக்கு
  11. அழகிய கண்கவர் படங்கள்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்க்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அழகான புகைப்படங்கள், சுருக்கமான நிறைவான விளக்கங்கள்.
    காற்று இனிது, நீர் இனிது, உங்கள் பதிவும் இனிது.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் இனிதான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோ சாரதா, வாழ்க வளமுடன்.
    பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அந்திப்பொழுதினிலே!...ஆஹா...கொள்ளை அழகு..

    எனக்கும் இவ்வாறு சூரியனை கொண்டு படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்...

    உங்க ஒவ்வொரு படமும் கவிதை...

    சூரியனும் வாதநாராயண மரமும் படம்..ரொம்ப அழகு..

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அனுராதா பிரேம் குமார், வாழ்க வளமுடன்.
    படங்களை ரசித்தமைக்கு நன்றி.
    உங்கள் தொடர் வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு