திங்கள், 4 ஆகஸ்ட், 2014

வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்.

ஆடித்திருநாள்  நாளை  ஊர் மக்கள் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் நம் பகுதிக்கு வருமா? ( என்று மக்கள் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். மக்கள் கவலைப்பட்டது போலவே மயிலாடுதுறைக்குத் தண்ணீர் வரவில்லை. ஆடி மாதத்தில் காவேரி அன்னையை வணங்க முடியவில்லையே! என்று வருந்திக்கொண்டு  இருந்தவர்களுக்கு. காவேரி முழுக்குத் துறையில் செயற்கைக் குட்டை செய்து அதில் மக்கள் விழா கொண்டாடினார்கள் என்று செய்தியில் சொன்னார்கள்.
 நாங்கள் புகழ்பெற்ற வீரநாராயண ஏரியை(வீராணம்) பார்க்கப்போய் விட்டோம்.


எங்கள் ஊர் காவேரி,- தண்ணீர் இல்லை- தண்ணீர் வரவை எதிர்பார்த்து நிற்கிறது இரு கரையும்.

மாரியம்மன் கோவில் பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து அங்குள்ள அடிகுழாயில் தீர்த்தம்   எடுக்க வந்திருக்கிறார்கள். காவேரியில் நீர் இருந்தால் அதில் எடுத்துச்சென்றிருப்பார்கள்..

திரு இந்தளூர் பெருமாள் வந்து திருமஞ்சனம் ஆடும் மண்டபம்.
ஆடிப்பெருக்கிற்கு ஆற்றிற்கு செல்ல  சிறு தேர் செய்யும் சிறுவர்கள்.
கொள்ளிடத்தில் நீர் வரப்போவதால் அதைத் தூர்வாருகிறார்கள்.
அணக்கரை செல்லும் வழியில் உள்ள கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு விட்டது
காடுமாதிரி புதர் மண்டிவிட்டதால்  இயந்திரம்தான் விரைவாகச் சுத்தம் செய்யும், மனிதனை விட

அணைக்கரை (கீழ்அணைக்கட்டு)
கொஞ்சமாகப் போகும் தண்ணீரில் மக்கள் பூஜை செய்கிறார்கள்
வழியெல்லாம் ஆட்டை வெட்டிக் கொண்டு இருந்தார்கள், மக்கள் வாங்கிப் போய்க் கொண்டு இருந்தார்கள். இங்கு ஒரு ஆடு  மக்களுடன் நோன்பு கும்பிடுகிறது. அது அடுத்த நோன்புக்கு இருக்குமோ என்னவோ!
அணைக்கரைப் பாலத்தின்  அருகில் வாகனங்கள் நிறைய நிற்கிறது. விழாக் கடைகள் போட்டு இருக்கிறார்கள்
வீராணம் மதகடியில் ஆடிப்பெருக்குக்குப் படைக்க வந்த பெண்கள் கூட்டம். ”அதோ பாருடி நம்மைப் படம் எடுக்கிறார்கள் , எங்கள் படம் நாளை பேப்பரில் வருமா ?” என்று கேட்டார்கள், என்னிடம்  மலர்ந்த  முகத்துடன் இந்தப் பெண்கள்.என் சிறிய காமிராவைப் பார்த்தே இப்படிக் கேட்கிறார்களே, வெள்ளை உள்ளம் கொண்ட இந்தப் பெண்கள்!

கண்ணுக்கு இமைபோன்ற கண்ணாளன் கண்களில் தூசியா? விரைந்து போக்கும் அன்புக் கைகள்.(ஏரிக்கரையோரம் கிடைத்த பொக்கிஷம்)
வீரநாராயண ஏரி(வீராணம் ஏரி) அணைக்கட்டுக்குச் செல்லும் வழி இன்று திறந்து இருக்கும். தண்ணீர் திறந்துவிடும்போது பூட்டி விடுவார்கள் என்றார்கள்.



அணைக்கட்டிலிருந்து எடுத்த ஏரியின் காட்சி
 பூஜையை முடித்து விட்டு  அணைக்கட்டைப் பார்க்க வரும் மக்கள்.

கல்யாணமாலையை ஏரியில் விடும் பெண்ணும் மாப்பிள்ளையும்
கல்யாணமாலை
இந்த அம்மாதான் காப்பரிசி, வெல்லம் கலந்த அவல்பொரி கொடுத்தார்கள் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார்கள் நாங்கள் மயிலாடுதுறையிலிருந்து வருகிறோம் என்றவுடன் ஏரி பார்க்க வாந்தீர்களா? நான் சின்னபிள்ளையாக இருக்கும் போது ஏரியின் உச்சி வரை தண்ணீர் இருக்கும் நாங்கள் மேலே நின்றே படைத்து விட்டுப் போவோம் என்றார்கள்.  
அவர்கள் கொடுத்த காவேரி அன்னைக்குப் படைத்த பிரசாதம்

வீரநாராயண ஏரியில்  படகு விடும் காட்சியைப் பார்த்தால்  கோடிக்கரை பூங்குழலி நினைவுக்கு வருதா?  

அலைகடல் போல் விரிந்து பரந்த வீரநாராயண ஏரியக் காணொளி எடுத்தேன் ஆனால் அது இங்கு ஏறமாட்டேன்  என்று அடம் பிடிக்கிறது. இன்னொரு நாள் அதற்கு மனசு வரும் போது இங்கு உங்கள் பார்வைக்கு வரும்.
கீழே உள்ள வேதா அவர்களின் ஓவியத்தில் உள்ளதுபோல் பறவைகள் கறுப்பாய்ப் பறக்கிறதா? (ஏரிக்கரையில் பறவைகளின்  குதுகலம் அடுத்த பதிவில் வரும்.)

வெள்ளை நுரையுடன் அலை அடிக்கிறது
ஆசையே அலை போல ! நாம் எல்லாம் அதன்மேலே - ஓடம் போல
வீராண குழாய்கள்- ஆனால் இது புதுக் குழாயாக இருக்கிறது. பழையது மிக பெரிதாக இருக்கும். அதன் உள்ளே  வீடு இல்லாதவர்கள் குடித்தனம் நடத்தினர் என்று வரும்.

 கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனில்  காவேரி ஆற்றையும் அதன் கரைகளின் அழகையும், நாட்டின் செழிப்பையும் சொல்கிறார். எல்லோரும் படித்து இருப்பீர்கள், மறுபடி படிக்க வசதியாக பொன்னியின் செல்வன் கதை மீண்டும் கல்கியில்  வருகிறது.  ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை ப்பொழுதில் தொடங்குகிறது கதை அதற்கு பொருத்தமாய்  3/8/2014 முதல் வந்துவிட்டது..

கல்கி அவர்களின் அழகான கற்பனை:-

ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரர் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீரச் சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச்சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியதேவன் என்பது அவன் பெயர்.நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த வீரநாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருக்கிறது.

ஆடிப் பதினெட்டாம்பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும் தொட்டுக் கொண்டு  ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பி கரையில்  உச்சியைதொட்டுக் கொண்டு அலை மோதிக் கொண்டிருப்பது  வழக்கம்
.
                 

ஓவியர் வேதாவின் கைவண்ணத்தில் வீரநாராயண ஏரிக்கு ஆடிக்குப் படைக்க வரும் பெண்கள் , ஆண்கள், சிறுவர்கள்
பூஜை சாமான்களை மூடி எடுத்து வரும் பெண்கள், சிறுதேர் உருட்டி வரும் சிறுவர்கள்,  பறவைகள் பறந்து வரும் அழகு!

வந்தியதேவன்  குதிரையில் போய்கொண்டே ரசித்த காட்சி:-

// அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து , தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக்கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும், பெண்களும் குழந்தைகளும், வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து வித விதமான அலங்காரங்கள்  செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, இருவாட்சி, செண்பகம், முதலிய மலர்கள் கொத்து கொத்தாய் அலங்கரித்தன். கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில்  தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு , சித்திரான்னம் முதலியவற்றைக்கமுகு மட்டையில் போட்டுக்கொண்டு உண்டார்கள்.இன்னும் சில தயிரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளை கணவாய்களின்   ஓரமாக  எறிய, மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக் கரைக்கு வெளியே விழுந்தடித்து  ஓடி வருவதைக் கண்டு கைகொட்டி சிரித்தார்கள்.ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களைஅவர்கள் அறியாமல் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறுபக்கத்தில் அவை ஓடிவருவதை கண்டு மகிழ்ந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிதுநேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப்பாட்டும் கும்மியும், சிந்தும் பாடினார்கள்.

வடவாறு பொங்கி வருது
வந்து பாருங்கள்
வெள்ளாறு விரைந்து வருது
வேடிக்கைபாருங்கள் தோழியரே!
காவேரி புரண்டு வருது
காணவாருங்கள், பாங்கியரே!”

என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத் தேவன் செவிகளில்  இன்ப வெள்ளமாக பாய்ந்தன.//


//வட காவேரி என்று பக்தர்களாலும், கொள்ளிடம் என்று பொதுமக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீரநாராயணஏரியில்  பாய்ந்து அதை பொங்கும் கடலாக ஆக்கி இருக்கிறது.அந்த ஏரியின் எழுபத்து நான்கு  கண்வாய்களின் வழியாகவும் தண்ணீர் குமு குமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்திற்கு நீர் வளத்தை  அளித்துக் கொண்டிருந்தது.//

இப்படி அந்த காலத்தில் நீர்வளம் நன்றாக இருந்து வளப்படுத்தியதாகச் சொல்கிறார் கல்கி. நீர்வளம் குறைவாக மழை தப்பி போனாலும் ஏரியின் நீர் பாசனம் வளத்தை அள்ளி தந்திருக்கிறது இந்த ஊருக்கு.

காட்டுமன்னர்குடி வீரநாராயணபெருமாள் பதிவு படிக்காதவர்கள் படிக்கலாம்.

போனமாதம் வீரநாராயணபுரம் சென்ற போது  எடுத்த படங்கள் பின் வருவன

காலைவேளையில் வயல்வெளி, கதிரவன் வரவுக்கு முன் புல்மேல் பனித்துளி
                                               பாதைகளுக்கு மரக்கூடாரம்

இரு பக்க மரமும் சேர்ந்து பாதைக்குக் கூடாரம் அமைக்கிறது

வீரநாரயாணப்பெருமாள் கோவில் பிரகாரத்தில் மதிலுக்கு  அப்பால்  குலை குலையாய்க் காய்த்துத் தொங்கும் மாங்கனி
மலர்கள் பூத்துக்குலுங்கும் காட்சி. வசந்த காலம் வந்து விட்டது என்று சொல்கிறது.மரங்களில் தேனிக்களின் கூடு நிறைய இருந்தது. காரில் போய்க் கொண்டிருக்கும்போது சிலவற்றை எடுக்கமுடியவில்லை. மயில்கள் அடர்ந்த மரக் கூட்டத்தின் நடுவே இருந்து அகவியது அதின் நீண்ட தோகையை மட்டும் காட்டி மறைந்தது. 
 வந்தியதேவன் குதிரையில் வீரநாராயண ஏரிக்கரையின் மேல் ஏரியின் அழகை  ரசித்துக்கொண்டு சென்றதுபோல் நாங்கள் அவ்வழியில் காரில் ரசித்துக்கொண்டே சென்றோம். கட்டுரை அடுத்த பதிவில் தொடரும்.

                                                      வாழ்க வளமுடன்.
                                                                 ----------------

50 கருத்துகள்:



  1. மிக அழகான அருமையான வர்ணனை. நானும் வீராணம் ஏரிக்குப்போகணும். காட்டுமன்னார்குடிக்குப்போய் வீரநாராயணப்பெருமாளைப் பார்க்கணும்னு பல முறை சொல்லிவிட்டேன். இன்னும் நடக்கவே இல்லை. வந்தியத் தேவன் மாதிரி 74 கணவாய்கள் இருக்கின்றனவானு பார்க்கணும்னு எல்லாம் நினைச்சுப்பேன். :) பொன்னியின் செல்வன் மறுபடி படிக்க ஆசை வந்து விட்டது. புத்தகம் இல்லை. :(

    பதிலளிநீக்கு
  2. ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்..
    அழகான படங்களைப் பார்த்ததும் ஒரு புறம் மகிழ்ச்சி.. மறு புறம் வேதனை..

    சரியான திட்டமிடல் இல்லை . அதனால் தான் ஆடிப் பதினெட்டுக்கு முன் காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் விடவில்லை. காவிரி நெடுக மண் அள்ளியதால் பள்ளத் தாக்குகள் ஏற்பட்டு விட்டன - என்று ஒரு நாளிதழில் எழுதி இருந்தார்கள்..

    எப்படியோ - காவிரி தான் அனைவரையும் வாழவைக்க வேண்டும்.

    அழகான படங்களுடன் முழுமையான திருநாளைக் கண் முன் நிறுத்திவிட்டீர்கள்.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரி!

    கண்கொள்ளாக் காட்சிகள்!
    காவிரி அன்னை வரவு நோக்கிக் காத்திருக்கும் இயற்கை அழகு அற்புதம்!

    எத்தனை சிறப்புகள் எங்கள் பூமியில்...
    உங்கள் வசம் நல்ல நிழற்படக் கருவி இருக்கின்றது. இயற்கையுடன் உங்கள் விளையாட்டு என்னைக் கொஞ்சம் பொறாமைப்பட வைகின்றது...:)

    மிக அருமை! பகிர்விற்கு அன்பு நன்றியுடன் உளமார்ந்த வாழ்த்துக்களும் உங்களுக்கு!

    த ம.1

    பதிலளிநீக்கு
  4. ஹைய்யோ!!!!!


    படங்கள் ஒவ்வொன்னும் அள்ளிக்கிட்டுப் போகுதே!!!!!

    அதிலும் 'அந்த பொக்கிஷம்' அபாரம்!!!!!

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான ஏராளமான படங்களுடன் விளக்கங்கள் யாவும் வெகு நேர்த்தியாக அற்புதமாக உள்ளன.

    இந்த இடங்களுக்கெல்லாம் நேரில் போய்ப்பார்த்து வந்ததுபோல ஓர் திருப்தி ஏற்பட்டது.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. அழகிய படங்கள். கல்கி நான் ரெகுலராக வாங்குகிறேன். இந்த இதழ் முதல் நான் படித்ததும் என் மாமாவுக்குக் கொடுத்து விடுவதாய் ஏற்பாடு பொன்னியின் செல்வன் படிக்க வேண்டியே இந்த ஏற்பாடு! "நீதான் ஏற்கெனவே வச்சிருக்கியே... இதை எனக்குக் கொடுத்துடு" என்றார்!

    வறண்ட காவேரியைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. @Durai Selvaraj, verum pallathaakkukaL illai. MaranappaLLangkaL avai. :( makkalukku nilaimaiyin vipareetham puriyavillai. :(

    பதிலளிநீக்கு
  8. படங்களுடன் பதிவிடும் பாங்கு அழகு. படங்களுக்கு ஏற்ப சிறு வர்ணிப்பும் ரசிக்க வைக்கிறது. பொன்னியின் செல்வன் என்றோ படித்தது. மீண்டும் தொடராக வருவதாய்க் கூறி இருக்கிறீர்கள் வாங்கிப் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    அம்மா.

    இரசிக்கவைக்கும் படங்களுடன் மிகமிக அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் உண்மையில் தங்களின் இந்த பதிவை பலதடவை இரசித்து இரசித்து பார்த்தேன் படங்களை..பகிர்வுக்கு நன்றி அம்மா.
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்- //
    வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன். உங்கள் பின்னூட்டம் publish செய்தால் The comment doesn't exist or no longer exists.
    என்று வருகிறது ஏன் என்று தெரியவில்லை.

    மன்னித்துக் கொள்ளவும். பின்னூட்டத்தை எடுத்து ஒட்டி இருக்கிறேன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்
    பதிவை ரசித்து பார்த்தமைக்கு நன்றி ரூபன்.


    பதிலளிநீக்கு
  10. கண்ணுக்கினிய காட்சிகளை அழகாக படம் பிடித்ததுடன் வர்ணனையும் பொன்னியின் செல்வன கதையையும் நினைவுபடுத்தி பகிர்ந்தவிதம் சிறப்பு! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
    மும்பையிலிருந்து வந்தவுடன் வந்து பாருங்கள் காட்டுமன்னார்குடி வீரநாராயணபெருமாளையும், பார்க்கலாம்.
    இங்கு வந்தபின் புத்தகம் கிடைக்கும், இப்போது உடனே படிக்க வேண்டும் என்றால் project madurai.org என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் துரைசெல்வராஜு சார் , வாழ்கவளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    நீங்கள் சொன்னமாதிரி காவேரி அன்னை அனைவரையும் நலமாக வாழ வைக்கட்டும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது எப்படி இருக்கிறீர்கள்?

    உங்களிடம் அருமையான கவிதை புனையும் திறமை இருக்கிறது. பன்முகதிறமைவாய்ந்த நீங்கள் என்னை புகழுவது !

    உளமார்ந்த வாழ்த்துக்களுக்கும் உற்சாகம் தரும் பின்னூடடத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் துளசி, வாழ்க வளமுடன்.
    படங்களை ரசித்தமைக்கு நன்றி. அடுத்த பதிவுக்கும் வாருங்கள்.

    பொக்கிஷ படத்தை ரசித்தமைக்கு நன்றி. எனக்கும் மிகவும் பிடித்தது அன்பும், காதலும் அதில் இருக்கிறது அல்லவா?

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், இனிய பாராட்டுக்களுக்கும்அன்பான நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஸ்ரீராம் , வாழ்க வளமுடன்.
    இனி வரும் பொன்னியின் செல்வன் மாமாவுக்கா? நல்லது.
    காவேரி வறண்டு கிடப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாடி...   எத்தனைப் படங்களின் பகிர்வு...!

      நீக்கு
    2. மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  17. வணக்கம் ஜி.எம். பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.
    வாங்கி படிக்கலாம் சார் நன்றாக இருக்கும் பொன்னியின் செல்வன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் தளிர், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. நெய்வேலியில் இருந்தபோது தஞ்சாவூர்-சென்னை நெடுஞ்சாலையில் பயணிக்கும்போதெல்லாம் இந்த வீராணம் குழாய்களையும் அவற்றில் குடியிருந்த குடும்பங்களையும் பார்த்து வியந்ததுண்டு..... இத்தனை பெரிய குழாய்களில் நீர் கொண்டு செல்ல வேண்டுமெனில் எத்தனை நீர் இந்த ஆற்றில் இருக்குமென நினைத்துக் கொள்வேன்.

    இப்போதைய வீராணம் ஏரி பார்க்கும் போது மனதில் வலி.....

    படங்கள் அனைத்துமே அழகு....

    பதிலளிநீக்கு
  20. அருமையான படம் மற்றும் பதிவு. ஊருக்கு சென்று வந்தது போல் இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  21. மிக சிறப்புப் பதிவு. - பொன்னியின் செல்வன் படமும்
    இயற்கை அழுகு. படங்கள் - பயணம் ரசித்தேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  22. மிக சிறப்புப் பதிவு. - பொன்னியின் செல்வன் படமும்
    இயற்கை அழுகு. படங்கள் - பயணம் ரசித்தேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சதுக்கபூதம், வாழ்க வளமுடன்.
    உங்கள் ஊரா? வீரநாராயணபுரம்.
    சிலப்பதிகாரத்தில் மிகவும் விருப்பமா? சிலப்பதிகாரத்தில் வருவதுதானே சதுக்கபூதம்?
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் வேதா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    வாழ்த்துக்களுக்கு நன்றி வேதா.

    பதிலளிநீக்கு
  25. படங்கள் எல்லாம் பிரமாதம். இயற்கை அழகை அப்படியே அள்ளி வழங்கியிருக்கிறீர்கள். புல்லில் பனித்துளி கவருகிறது. நீர் வற்றிய நதிப் பாதை மட்டும் வருத்தம் தருகிறது.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. ஊர்ப்பக்கம் காவிரி வரவில்லை என்றவுடன் தண்ணீர் உள்ள வீராணம்பக்கம் போய் விட்டீர்கள் போலிருக்கிறது. ரொம்பவும் பொறுமையாக கேமராவில் நிறைய படங்கள் எடுத்து இருக்கிறீர்கள். நானும் ரொம்ப நேரம் பொறுமையாக இருந்து (எங்களது கம்ப்யூட்டரில், உங்கள் வலைபதிவு முழுமையும் வர ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டது) உங்கள் பதிவினைப் பார்த்தேன் அல்லது படித்தேன். படங்கள் தெளிவாக இருந்தன. அருமையாக போகஸ் பண்ணி இருந்தீர்கள்.

    கல்கியின் பொன்னியின் செல்வனை ரொம்பவும் ரசித்து படித்து ஒன்றி போயிருக்கிறீர்கள் போலிருக்கிறது. எம்ஜிஆர் நடித்த கலங்கரை விளக்கம் படத்தில் வரும் கதாநாயகியும் கல்கியின் சிவகாமியின் சபதம் கதையில் ஒன்றிப் போனவராக மகேந்திரவர்மன் நினைவாக இருப்பார். நான் கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்ததில்லை. மற்ற சமூக நாவல்கள் சிறுகதைகள் படித்து இருக்கிறேன்.

    த.ம.4

    பதிலளிநீக்கு
  27. 'வீர நாராயண ஏரி' 'ஆடிப்பெருக்கு' என்று பார்த்ததுமே பொன்னியின் செல்வனின் ஆரம்ப அத்தியாயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று படங்களைப் பார்த்துக் கொண்டே வந்தேன்.

    பூங்குழலியை பற்றிச் சொன்னதும்
    கோடிக்கரை பூங்குழலி இங்கே எங்கு வந்தாள் என்று நினைத்துக் கொண்டே 'முதல் அத்தியாய வீர நாராயண ஏரி'யை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள், நாம் தான் சொல்ல வேண்டும்' என்று நினைத்துக் கொண்டே படம் பார்த்து வந்தேன்..

    என்னே ஆச்சரியம்! பொன்னியின் செல்வன் முதல் அத்தியாயத்தையே காண கிடைத்த சந்தோஷம் என்னையும் திக்குமுக்காடச் செய்தது.

    'கல்கி' கல்கி தான்! எவ்வளவு வாசகர்களை தம் எழுத்துத் திறமையால் வசப்படுத்தியிருக்கிறார்!

    மனம் நிறைந்த பதிவு! அச்சில் வரும் பத்திரிகைகள் கூட செய்யாதது!
    மிக்க நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
    எனக்கும் வழி எங்கிலும் இருந்த வீராணம் குழாய்களைப் பார்த்ததும்,அதில் வசிக்கும் மக்களின் நினைவுதான் வந்தது. சினிமாக்கள், கதைகளில் , நேரில் பார்த்த காட்சிகள் கண்களில் மலர்ந்தது.
    வீராணம் ஏரி மறுபடியும் பழைய நிலைமைக்கு வந்து மக்கள் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்று வணங்கி வந்தேன்.

    ’’ஏரி,குளம்,கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய மாரி அளவாய் பொழிக மக்கள் வளமாய் வாழ்க! என்று வணங்குவோம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    இயற்கை அழகை அப்படியே கொஞ்சம்கூட குறையாது அள்ளி வழங்கும் நீங்கள் என் படங்களை பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது ராமலக்ஷ்மி.

    நல்ல மழை பெய்தால் நம் வருத்தம் மறையும்.

    அதற்குதான் காவேரி மண் எடுத்து பிள்ளையார் பிடித்து வைத்து மக்கள் தங்கள் கோரிக்கைகளை கவேரி அன்னையிடம் சொல்கிறார்கள்.

    நல்லமழைபெய்யவேண்டும், மணாளன் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆடிபெருக்கு அன்று வணங்குகிறார்கள்.
    எல்லோர் வேண்டுதலும் பலிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சிவ. இளங்கோ, வாழ்க வளமுடன்.

    எங்களுக்கு இந்த வருடம் ஆடிபண்டிகை கிடையாது.
    காட்டுமன்னார்குடி சென்றபோது வீரநாராயணஏரி பார்க்காமல் வந்து விட்டோம்.

    ஆடிபெருக்கு சமயம் வீரநாராயணஏரி கோலகலமாய் இருக்கும் என்று பொன்னியின் செல்வனில் சொல்லி இருப்பதாலும் ஏரியின் அழகைப் பார்க்க போனோம்.

    ஏமாற்றவில்லை ஏரி தண்ணீர் குறைந்து இருந்தாலும் பறவைகளும், இயற்கை சூழலும் ரம்யமாக இருக்கிறது.

    பொன்னியின் செல்வன் கதை ஆடி பெருக்கு சமயத்தில் ஆரம்பிக்கிறது மறுபடியும் வருகிறது என்று தொலைக்காட்சி விளம்பரம் பார்த்தவுடன் படிக்காதவர்கள் படிப்பார்களே என்று பகிர்ந்து கொண்டேன்.

    நீங்கள் படித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும். நான் பிறப்பதற்கு முன்பு கல்கி எழுதி இருக்கிறார். என் அம்மா இந்த கதையை தொகுத்து வைத்து இருந்தார்கள் .

    மறுபடியும் ஒருமுறை 80, 85ம் வருடம் வந்த போது நானும் தொகுத்து வைத்து இருக்கிறேன்.


    பொறுமையாக படங்களை பார்த்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி
    தமிழ்மண வாக்கு அளித்தமைக்கும் நன்றி. .

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
    போன பதிவில் உங்களை எதிர்பாத்தேன்.

    //ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறி பிரயாணம் செய்து கொண்டிருந்தான்//

    என்று வரும். இந்த கதையைப் படித்தவர்கள் அந்தவாலிப வீரர் பேரை சொல்லுங்களேன் !
    என்று கேட்டு இருந்தேன் சார்.

    என் தொகுப்பில் பொன்னியின் செல்வன் 13ம் அத்தியாயத்திலிருந்து தான் இருக்கும்.

    இப்போது 13 அத்தியாயங்களை தொகுக்க வேண்டும்.

    உங்கள் வரவுக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்திகும் நன்றி சார்.
    அடுத்த பதிவுக்கும் வாருங்கள் சார் ஏரியின் அழகு இன்னும் வரும்.


    பதிலளிநீக்கு
  32. //கோமதி அரசு said...
    வணக்கம் சிவ. இளங்கோ, வாழ்க வளமுடன்.//

    மன்னிக்கவும்! எனது பெயர் தி தமிழ் இளங்கோ. அந்நாட்களில் அரசு ஊழியர்களின் சங்கத் தலைவராக இருந்த சிவ இளங்கோ எல்லோருக்கும் தெரிந்த முகம் என்பதால் எனது பெயரையும் அவ்வாறு சொல்லி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. மிக அருமை! பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வண்க்கம் தி.தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.

    நான் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் உங்கள் பெயரை தப்பாக குறிப்பிட்டமைக்கு. மன்னித்துக் கொள்ளுங்கள். இனி கவனமாக இருப்பேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வீரநாராயண ஏரி பற்றிய
    சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் Yarlpavanan Kasirajalngam, வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. அழகான படங்கள். இங்கும் ஆடி பதினெட்டுக்காக கொஞ்சம் போல அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்துள்ளது. கொள்ளிடத்திற்கு வரவில்லை.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன் , வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் ஆதி வெங்கட், வாழ்க வளமுடன்.
    கொஞ்சம் முன்பே திறந்து விட்டு இருக்கலாம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. பசுமை ... இயற்கை..அழகியபடங்கள்.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் மாதேவி, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    நீங்கள் நலம் தானே?

    பதிலளிநீக்கு
  42. விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் கோமதி .
    இணைப்பு இதோ http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/09/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  43. ஒரே நேரத்தில் இணைந்து இருக்கிறோம் நீங்கள் என் தளத்திலும், நான் உங்கள் தளத்திலும்.எண்ணம் நம்மை இணைத்து இருக்கிறது.
    விருதுக்கு நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம்.

    பதிலளிநீக்கு
  44. அக்கா...இந்தப் பதிவின் இணைப்பை முகப்புத்தகத்தில்(face book) ல் கொடுத்திருக்கிறார்கள்.அதில் நீங்கள் எடுத்த இதிலுள்ள ஒரு புகைப்படம் விநாடிக்கு 3 என்ற விகிதத்தில் 1000க்கு மேற்பட்ட விருப்பக் குறிகளை பெற்றுக் கொண்டு செல்கிறது. பெருமளவில் பேசப்படுகிற படம் அது. அதை மகுடேசுவரன் எனும் கவிஞர் தன் பக்கத்தில் ஏதேச்சையாய் தேடிக் கண்டடைந்து பதிவிட்டிருக்கிறார். அற்புதமான படம். அற்புதமாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். முகப்புத்தகத்தில் இருக்கிறீர்களா? இணையுங்களேன் அங்கும். நன்றி. தீபிகா

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் தீபிகா, வாழ்க வளமுடன்.
    உங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    தகவலுக்கு நன்றி.
    முகபத்தகத்தில் இருக்கிறேன்.அங்கும்
    இணைக்கிறேன் பதிவுகளை.

    பதிலளிநீக்கு
  46. ஏரியின் புகைப்படங்களும், விபரங்களும் அருமை சகோ

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் தேவகோட்டைஜி,, வாழ்க வளமுடன்.
    ஏரியின் புகைப்படங்களை பார்த்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.

    பதிலளிநீக்கு