ஞாயிறு, 19 ஜனவரி, 2014

வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும்

சென்ற வைகுண்ட ஏகாதசி அன்று (11.01.2014) கார்த்திகையும் இருந்ததால் முதலில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வைத்தியநாதன், தையல் நாயகி, செல்வமுத்துகுமாரசாமியை தரிசனம் செய்தோம்.

பின் ஏகாதசி தரிசனம் ஆரம்பித்து விட்டது. முதலில் திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்) போனோம். திருநாங்கூரில் 11 கோவில்கள் உள்ளன. திருப்பதி பெருமாளுக்கு அண்ணன்  என்று இந்த திவ்யதேசத்தில் உள்ள  அண்ணன் பெருமாளைச் சொல்கிறார்கள்.அண்ணன் கோவிலில்  .  அலங்காரமாய் முத்தங்கி சேவையில் காட்சிக் கொடுத்தார் மூலவர்.  உற்சவரும் அலங்காரமாய் காட்சிக் கொடுத்தார். தரிசனம் முடிந்து வெளியில் வந்ததும்,  லட்டு பிரசாதம் தந்தார்கள்.  தாயாரை சேவித்து விட்டு  கோவிலை வலம் வந்தால்  108திவ்ய தேசங்களின் பெரிய  படங்கள் இருக்கும். அதைச் சேவித்தால் 108 திவ்ய தேசம் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

திருவெள்ளக்குளம்  


இங்கு மூலவர் - ஸ்ரீநிவாஸன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்

தாயார் - அலமேல்மங்கை, (உற்சவர் பத்மாவதி, பூவார் திருமகள்.)

அண்ணன் கோவில்   தீர்த்தம்  - ஸ்வேத புஷ்கரிணி.

அல்லி மலர்கள் நிறைய பூத்து இருக்கிறது. நடுவில் உள்ள மண்டபத்தில் மடையான் காத்து இருக்கிறது  மீனுக்காக


திருத்தேவனார்தொகை

அடுத்து  திருத்தேவனார் தொகை (கீழச்சாலை)மாதவப்பெருமாள் கோவிலுக்குப் போனோம். அங்கு நாங்கள் போகும் போது மணி 11 . அப்போது தான் அங்கு பரமபத  வாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சார்த்திய கதவுக்கு அருகில் காத்து இருந்தோம்.

வந்தார் மாதவன்


கருடாழ்வாரை சுற்றிவிட்டு எங்களை அழைத்துக்கொண்டு  பரமபத வாசலில் நுழைந்தார்.
எல்லோரும் நலமாய் இருக்க ஆசி வழங்கினார்.

கடல்மகள் நாச்சியார் -மாதவநாயகி அலங்காரமாய்.


மாதவப்பெருமாள் கோவிலில்  பிரசாதபாத்திரங்களை பளிச் என்று சுத்தமாய் துலக்கி வெயிலில் காய வைத்து இருக்கிறார்கள்.

அடுத்து வைகுந்தநாதபெருமாளை காணச்சென்றோம் . அந்தக் கோவிலில் திருப்பணி நடப்பதால்  வைகுந்தநாதர் அருகில் உள்ள வண் புருஷோத்தமர் கோவிலில் எழுந்தருளி இருக்கிறார் என்று சொல்லும்  அறிவிப்பு :- அது போல் புருஷோத்தமர் கோயிலில் அழகிய வேலைப்பாடு மிகுந்த கண்ணாடி மண்டபத்தில் வெகு அலங்காரத்துடன் இருந்தார். வண் புருஷோத்தமரும் முன் பக்க மண்டபத்தில் அழகாய் காட்சி கொடுத்தார் அவரது திருவடிகளில் திருமங்கை ஆழ்வார் சிறிய வடிவில் அழகிய தோற்றத்தில் இருந்தார்.  வைகுந்தநாதர் கோவில் வாசல். 
இங்கு மூலவர் : வைகுந்த நாதன், 
தாயார் : வைகுந்தவல்லி  

வெளித்தோற்றம்.


தீர்த்தம் : லக்ஷ்மி புஷ்கரிணி, உதங்கபுஷ்கரிணி, விரஜாதீர்த்தம்.
நாங்கூரில்  வைகுண்டஏகாதசி திருவிழா  அதிகாலை மூன்று மணிக்கு நடைபெறும் கோவில்கள் பற்றிய விபரம்  அடங்கிய அறிவிப்புச் சுவரொட்டி. 
திருவண்புருடோத்தமம்  
இங்கு மூலவர் -ஸ்ரீவண்புருஷோத்தமப்பெருமாள், 
தாயார்-புருஷோத்தம நாயகி.


தீர்த்தம் - திருப்பாற்கடல்

 திருமணிமாடக் கோயில் 
மூலவர் :ஸ்ரீநாராயண பெருமாள்  
தாயார்: புண்டரீகவல்லித்தாயார்.தீர்த்தம்: இந்திரபுஷ்கரணி, ருத்ர புஷ்கரணி.

திருமணிமாடக் கோயிலில் வரும் 31ம் தேதி கருடசேவை நடைபெறவிருக்கிறது .தை அமாவாசைக்கு மறுநாள்  11 திவ்யதேசத்துப் பெருமாள்களும் கருடவாஹனங்களில் எழுந்தருளுவார்கள். திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார் தன் மனைவி குமுதவல்லியுடன் வந்து மங்களாசாஸனம் செய்துஅருளுவார்.

2012 ல்  திருமங்கையாழ்வார் மங்களாசாஸன  வைபவம் என்று பதிவு இட்டு  இருக்கிறேன். 

தரிசனம் தொடரும், அடுத்தபதிவில்.

வாழ்க வளமுடன்!
                                                      ----------------

39 கருத்துகள்:

 1. ஒவ்வொரு நிகழ்வையும் அருமையான, அழகான படங்கள் மூலம் (ஸ்வேத புஷ்கரிணி மிகவும் அருமை) நாங்களும் கலந்து கொண்டு தரிசனம் பெற்றோம்... மிக்க நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  முதலில் வந்து படித்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி.
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.. நீங்கள் சென்ற கோவில்களின் தரிசனம் எனக்கும் கிடைத்தது அக்கா.. மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
 4. மிகவும் அழகான திவ்ய தரிஸனம். படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

  கண்களின் ஒற்றிக்கொண்டேன்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. எங்களுக்கும் புண்ணியம்! பதிவும் படங்களும் அருமை. சில படங்கள் திறக்காமல் சண்டி செய்கின்றன!

  பதிலளிநீக்கு
 6. இறைவாச லேகியருள் இன்புறப் பெற்றே
  மறைபோற்ற வாழ்வீர் மலர்ந்து

  மென்மேலும் அழகிய பதிவுகள் தர வேண்டும்
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான நாளில் அருமையான தரிசனம் ..
  பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 8. ஒப்பிலியப்பனையும் பெருமாளுக்கு அண்ணன் என்றே சொல்லுகின்றார்கள்..

  நல்ல தரிசனம் தங்களால் கிடைத்தது. இன்னும் அந்தத் திருக்கோயில்களுக்குச் செல்லும் பேறு கிடைக்கவில்லை.

  வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  அம்மா.
  பதிவை மிக நேர்த்தியாக விளக்கம் கொடுத்து அதற்கான படங்களும் பதிவுக்கு ஒரு சிறப்பு... இறை தரிசனம் கிடைத்த ஒரு உணர்வுதான் அம்மா.எனக்கு
  வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. பதிவை மிக நேர்த்தியாக விளக்கம் கொடுத்து அதற்கான படங்களும் பதிவுக்கு ஒரு சிறப்பு.

  பதிலளிநீக்கு
 11. அருமையான பகிர்வு... எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல் நன்றாக தரிசனம் செய்திருப்பீர்கள்.. என்பதே மகிழ்ச்சியான விஷயம்..

  தொடர்கிறேன்..

  இந்த வருட வைகுண்ட ஏகாதசி பதிவை இன்னும் தொடர எனக்கு நேரம் வரவில்லை..

  பதிலளிநீக்கு
 12. Thanks for sharing, your tour and photoes.

  I had darshan of 11 Karuda sevai in 1992 (!).. but darshan of moola murthy only 6 temples (with in Naangur) yet to cover the rest.. the pending temples are

  1) Thevanaar thokai
  2) Annan koil
  3) Manikkoodam
  4) Kaavalampadi
  5) Parthan palli

  பதிலளிநீக்கு
 13. உங்கள் மூலமாக எங்களுக்கும் கிடைத்தது தரிசனம். படங்களுடன் அழகான பகிர்வு. புஷ்கரணியும், திருமணிமாடக் கோவில் கோபுரமும் மிக அருமையாக உள்ளன.

  பதிலளிநீக்கு
 14. வ்ணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
  உங்கள் தொடர்வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் வை. கோபாலகிருஷ்ண்னசார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி. பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன். படங்கள் பார்த்தீர்களா இல்லையா?
  பதிவை படித்து முடிக்கும் போது சில சமயம் வந்து விடுமே!
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சீராளன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், வாழ்த்து கவிதைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் சீராளன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், வாழ்த்து கவிதைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
  சிறப்பான் நாளில் அருமையான தரிசனம் தான்.

  உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்.
  ஜனவரி 31 அன்று திருமணிமாடகோவில் வந்தால் 11 பெருமாளகளையும் ஒன்றாய்ப் பார்க்கலாம்.
  உங்கள் கருத்துக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம், கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன். நீங்கள் சொன்னது போல தள்ளு, முள்ளு இல்லாமல் இறைவன் தரிசனம் கிடைத்தது. மகிழ்ச்சியான் விஷயம் தான்.

  எங்கள் ஊரில் இருக்கும் திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதரை தரிசிக்க சென்றாலும் வெகு நேரம் வரிசையில் நின்றுதான் தரிசனம் செய்ய வேண்டும். இந்த முறை அங்கு செல்லவில்லை.

  உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. கூடிய சீக்கீரம் உங்கள் வைகுண்டஏகாதசி பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் மாதவன்ஸ்ரீனிவாசகோபாலன், வாழ்க வளமுடன். 2012 ல் கருடசேவை பதிவுக்கு வந்து உங்கள் எண்ணங்களை சொல்வதாய் பின்னூட்டம் கொடுத்தீர்கள். அதற்கு அப்புறம் இப்போது மாதவபெருமாள் உங்களை அழைத்து வந்து இருக்கிறார். வாருங்கள் ஜனவரி 31ல் பார்க்கலாம் விட்டுப் போன கோவில்களை.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், அருமையான கருத்து பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு


 27. மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...? :-

  1. வாழ்க்கையின் எந்த நெறிமுறைகளுமே படிப்பதற்கும், அடுத்தவர்க்கு உப்தேசிப்பதற்கும் அல்லது அடுத்தவர் உபதேசத்தை கேட்பதற்கும் நன்றாகத் தான் இருக்கும்... ஆனால்...

  2. மின் நூல் பற்றிய சிறிய தகவல்...

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்கள் தகவலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். தகவலுக்கு நன்றி உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். தகவலுக்கு நன்றி உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். தகவலுக்கு நன்றி உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு

 32. சில பதிவுகள் படிக்கும்போது அவை பற்றிச் சிந்திக்கச் செய்யும். கோவில் மற்றும் ஆன்மீகப் பதிவுகள் என்னுள் நம் நாட்டில் கிடைக்கப்பெறும் புழக்கத்தில் இருக்கும் கதைகள் பற்றியும் அவை குறித்த நம்பிக்கைகள் பற்றியும் எண்ணிலா கேள்விகளையே எழுப்புகிறது. பதிவுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 33. உங்கள் தயவில் நானும் சொர்க்க வாசல் கண்டேன்......

  பதிலளிநீக்கு
 34. இன்றுதான் இந்த பதிவைப் பார்க்க முடிந்தது. இரண்டாம் பகுதி வழியே வந்தேன்.

  திருக்கடையூர்: அறுபதாம் கல்யாணம் என்ற எனது பதிவில் ஊக்கமது கைவிடேல் என்ற வலைப்பதிவர் என்.பக்கிரிசாமி அவர்கள் .//எங்கள் ஊர் திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. அரிகரன்கூடல் என்ற கிராமம். ... ... ...திருக்கடையூர் பக்கத்தில் அண்ணன் பெருமாள் கோயில், மார்க்கண்டேயன் கதைபோல கதைகொண்ட பெருமாள் கோயில் உள்ளது. மிகவும் அழகான கோயில். அடுத்தமுறை செல்லும்பொழுது மறக்காமல் செல்லுங்கள். எங்கள் ஊரைச் சுற்றி கோயில்கள் அதிகம்.. // என்று எழுதி இருந்தார்.

  நானும் ஒருநாள் அண்ணன் கோயில் போக வேண்டும் என்று இருக்கிறேன். தங்கள் பதிவில். உள்ள அழகிய படங்கள். மற்றும் விரிவான தகவல்கள் அங்கே செல்லும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும். பகிர்விற்கு நன்றி!
  பதிலளிநீக்கு
 35. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது சரிதான்.
  பக்தியும் நம்பிக்கையும் காரணகாரியமாகத்தான்.
  கோவில் வழிபாடுகளுக்கு ஒரு கதை வைத்து மக்களை நல்வழி படுத்தவும், நம்பிக்கையுடன் வாழ வைப்பதற்கும் உதவுகிறது.
  உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.
  //நானும் ஒருநாள் அண்ணன் கோயில் போக வேண்டும் என்று இருக்கிறேன்.//

  தரிசிக்க வாருங்கள்.
  அருமையான ஸ்தலம்.
  திருநாங்கூர்ரில் பெருமாள் கோவில் 11, சிவன் கோயில் 11 என்பார்கள் வந்தால் அனைத்தையும் பார்க்கலாம்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 38. எங்களுக்கும் கிடைத்தது தரிசனம். நன்றி.

  படங்கள் அத்தனையும் அழகு.

  பதிலளிநீக்கு
 39. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.

  உங்கள் வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.
  படிக்காத பழைய பதிவுகளை சேர்ந்த்து படித்து அருமையாக கருத்து சொல்லி உற்சாகபடுத்துவதற்கு நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு