ஞாயிறு, 22 டிசம்பர், 2013

ஸ்ரீ சக்திபுரீஸ்வரர் கோவில்







சென்ற பதிவில் மணக்குடி ஆருத்ரா தரிசனம் பார்க்கப்போன போது அந்த கோவிலில் உள்ள  நடராஜர்,  பக்கத்து ஊர் கருங்குயில்நாதன் பேட்டையில் உள்ள சக்திபுரீஸ்வரர் கோவிலில்  பத்திரமாய் இருக்கிறது என்பதை அறிந்து அங்கு போய் வந்தோம் என்றும் ,அதை அடுத்த பதிவில்   பார்ப்போம் என்றும் கூறியிருந்தேன். இப்போது அக்கோயில் பற்றித் தெரிந்துகொள்வோம்.

இந்த கோவிலும் தருமபுரஆதீனத்தைச் சேர்ந்த கோவில்தான். மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் தான் இக்கோயிலையும்  பார்த்துக் கொள்கிறார்.  வீடு பக்கத்தில் தான் இருக்கிறது. நாங்கள் போனபோது  திறந்து காண்பித்து பூஜை செய்து பிரசாதங்கள் கொடுத்தார். 

சுவாமிக்கு முன்பு உள்ள நந்தியம்பெருமானை வணங்கி உள்ளே ஸ்வாமியை தரிசிக்கச் சென்றோம். சுவாமி சன்னதிக்கு உள்ளே  பெரிய பிள்ளையார்  இடதுபுறம் இருக்கிறது. வலது புறம் வள்ளி, தெய்வானையுடன் முருகன். கருவறையில் சுவாமி பெரிதாக அழகாய் இருந்தார்  காலையில் திருப்பள்ளிஎழுச்சி பூஜைக்கு செய்த அலங்காரம் அழகாய் இருந்தது.

அடுத்து வெளிப்பிரகாரம் சுற்றி வந்தோம். அங்கு  தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும் அழகாய் எழுந்தருளி  இருந்தார்கள்.வேறு சந்நிதிகள் இல்லை. மூன்று படிகள் ஏறிப்போய் தட்சிணாமூர்த்திக்கு பூஜை செய்ய வேண்டும். தூண்கள் அழகிய வேலைபாடுகொண்டு இருந்தது.

                                         


மற்ற ஸ்வாமிகள் இருந்த மண்டபங்கள் பழுது அடைந்து புல், பூண்டு மண்டி கிடந்தது. அப்புறம் ஸ்வாமி பின்புறம் மதிலில் லிங்கோத்பவர் இருந்தார் அழகாய். 

வெளிப்பிரகாரம் சுற்றி வரும் போது வன்னிமரம் அழகாய் இருந்தது தலவிருட்சமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

அம்மன் சன்னதி வெளி விமானம் மிகவும் மரம் வளர்ந்து  மேலே உள்ள ஸ்வாமி சிலைகளை தள்ளப் பார்க்கிறது.   உள்ளே அம்மன் மிக அழகான அலங்காரத்தில் இருந்தார்.குருக்கள் செய்திருந்த அலங்காரத்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.  ஆனந்தவல்லி அம்மனைப் பார்க்கும் போது ஆனந்தமாய் இருக்கிறது.

கோவிலின் சிறப்பு:- இந்திரஜித்துக்கு காட்சிக் கொடுத்த இடம். தக்கனின் யாகத்தில் பார்வதி அவமானப்பட, கோபம் கொண்ட சிவன் வீரபத்ரரை அனுப்ப, பயந்த இந்திரன் குயில் வடிவெடுத்து வழிபட்டது. கருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் பேட்டை என்று பெயர் காரணம் தாங்கி இருக்கிறது.

சுவாமி சந்நிதி விமானம்- மரம் வளர்ந்து இருக்கிறது


ஸ்வாமி சந்நிதி மதில்- இடியும் நிலையில்

சக்திபுரீஸ்வரரும், ஆனந்தவல்லியும்  எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்.
----------------------------

நாளை முதல் வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பு ஏற்க சீனா சார் அழைத்து இருக்கிறார். இங்கு என் வலைத்தளத்தில் வந்து படிப்பதுபோல் அங்கும் வந்து ஒருவாரம் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். 

ஆரம்பத்தில் நான் எழுதிய பதிவுகளை நாளை பகிர்ந்து கொள்கிறேன். வாருங்கள் வலைச்சரத்திற்கு,  பார்ப்போம் நாளை!

                                                      வாழ்க வளமுடன்.
                                                                =====
               

30 கருத்துகள்:

  1. பழைய கோவில்கள் எல்லாமே சுவாரஸ்யம்தான். மதில் சுவர் வெடிப்பு விட்டிருப்பது கவலைக்குரிய விஷயம். அரசு கவனிக்க வேண்டும். (நான் நம்ம ஸாரைச் சொல்லவில்லை! அரசாங்கத்தைச் சொன்னேன்!)

    வலைச்சர வாரத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. சக்திபுரீஸ்வரரும், ஆனந்தவல்லியும் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும். அருமையான ஆலயம் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    வலைச்சர ஆசிரியர் பணிக்கு வழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  3. வாங்க ஸ்ரீராம், வாழ்கவளமுடன்.
    மதில்சுவர் வெடிப்பு விட்டிருப்பது கவலை அளிக்கும் விஷயம் தான்.
    அரசு கவனிக்க வேண்டும்(நம்ம ஸாரைச் சொல்லவில்லை) நல்ல டைமிங் ஜோக்.

    வலைச்சர வாரத்திற்கு உங்கள் அட்வான்ஸ் வாழ்த்து கிடைத்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அறியாத கோயிலின் தகவலுக்கு நன்றி... படங்கள் மிகவும் அருமை...

    வலைச்சரத்தில் அசத்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. இப்படி பழைய புகழ்பெற்ற கோவில்கள் இடிபாடுகளுடன் இருக்க, புதிது புதிதாகக் கோவில் கட்டிக் கொண்டிருப்பவர்களை நினைத்தால் கோபம் தான் வருகிறது....

    அடுத்த வாரம் வலைச்சரத்தில் உங்கள் வாரம். மிக்க மகிழ்ச்சிம்மா...

    தொடர்ந்து சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  7. வலைச் சரம் பொறுப்பேற்பதற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வலைச்சர ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துக்கள்!
    பழைய கோவில்களை நிச்சயம் பாதுகாக்க வேண்டும். நம் சரித்திரத்தைச் சொல்லும் பொக்கிஷங்கள் இவை.

    பதிலளிநீக்கு
  9. //சக்திபுரீஸ்வரரும், ஆனந்தவல்லியும் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் அருள வேண்டும்//

    அருமையான பழமையான ஆலயம். படங்களும், விளக்கங்களும் நன்று.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  10. மீண்டும் நாளை முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கப்போவது கேட்க மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    தங்கள் பணி சிறக்கப் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    தொடர்ந்து வாருங்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    நீங்கள் சொல்வது போல் பழைய கோவில்கள் பொக்கிஷங்கள் தான்.உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    முன்பு வலைச்சரபொறுப்பை ஏற்றுக் கொள்ள சொல்லி முன்பு நீங்கள் கேட்டது நினைவில் உள்ளது. அப்போதும் உற்சாகமாய் பாராட்டி ஊக்கப்படுத்தினீர்கள்.
    இப்போதும் வந்து பாராட்டி வாழ்த்து சொன்னதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  17. சக்திபுரீச்வரர் கோவில் சுற்றிப் பார்ஹ்ட்டு விட்டோம். நாளை வலை சரத்தில் சந்திப்போம்.
    ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. கோவில் பற்றி அருமையான தகவல்களும் படங்களும் சகோதரி!

    பகிர்விற்கு நன்றி!

    இவ்வார வலைச்சர ஆசிரியப் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள்!

    த ம.4

    பதிலளிநீக்கு
  19. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி இளமதி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. கோவில் பற்றிய தகவல்கள் அருமை.. இடியும் நிலையில் இருப்பது வருத்தத்திற்குரிய விஷயம்...:(

    வலைச்சர வாரம் சிறக்க வாழ்த்துகள் அம்மா..

    பதிலளிநீக்கு

  22. எழுபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் புதுப்பித்த மதிலும் சன்னல்களும்...... ஹூங்காரம் கொட்டத்தான் முடிகிறது. பாவம் சக்திபுரீஸ்வரர். அவர் பக்தர்களுக்கு அருள்கிறார். ஆனால் பக்தர்கள் அவரைக் கண்டுகொள்வதில்லை என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  23. /லிங்கோத்பவர் இருந்தார் அழகாய்/

    மிக அழகான சிற்பங்கள். அருமையான படங்களுடன் தந்திருக்கும் தகவல்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க் ஆதி, வாழ்க வளமுடன்.கோவில் இடியும் நிலை கண்டு வருத்தமாய் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். கோவில் சிற்பங்கள் அழகாய் இருக்கிறது. பராமரிப்பும் சேர்ந்தால் நன்றாக இருக்கும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. ஆதி, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வாங்க பாலசுப்பிரமணியம் சார், நீங்கள் சொல்வது போல் பக்தர்கள் கண்டு கொண்டால் கோவிலின் பழமையை போக்கி புதியதாக ஆக்கி விடுகிறார்கள். அப்படி இல்லாமல் பழமையை காப்பாற்றினால் நல்லது.
    உங்களின் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. கோவில்கள் இடிபாடுகளுடன் இருப்பது பார்க்க கவலைதருகின்றது.

    கோவில் தகவல்கள் அருமை.

    பதிலளிநீக்கு

  29. என் வலைப்பூவை ( பூவையின் எண்ணங்கள் ) வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி, ஏறத்தாழ ஒரு வாரகாலம் வலைப் பக்கமே வர முடியாததால் முன்பே நன்றி சொல்ல் முடியவில்லை. மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    நான் நினைத்தேன் நீங்கள் ஊரில் இல்லை அதனால் தான் வரவில்லை என்று.

    பதிலளிநீக்கு