புதன், 30 அக்டோபர், 2013

தீபாவளி வாழ்த்துக்கள்

(படம் வரைந்தது - என் கணவர் ) 
தீபாவளி என்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி,ஆனந்தம் அவர்களுக்கு பிடித்த ஆடைகள், அவர்களுக்கு பிடித்த பலகாரங்கள் எல்லாம் கிடைக்கும் நாள் அல்லவா! தீபாவளி.வாணவெடிகள்.குழந்தைகள் வெடிக்கும் போது பெற்றோர்கள் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் கவனமாய்.
தீபாவளி அன்று குழந்தைகள் வெடிக்கும் போது ஏழை, சிறுவர், சிறுமியர் ஏக்கமாய் வந்து பார்த்துக் கொண்டு இருந்தால் அவர்களுக்கும், இரண்டு மத்தாப்புக்களை கொடுக்க சொல்ல வேண்டும் குழந்தைகளை. அவர்கள் மலர்ந்து  மத்தாப்பாய் சிரிக்கும் போது  எல்லோருக்கும் ஆனந்தம் ஏற்படும்.குழந்தைகளுக்கும் பிறருக்கு உதவும் மனப்பான்மை வரும்.

 மலர்கள் ஏற்றிய மத்தாப்பு ’என்ற பதிவில்  கற்கை நன்றே வலைத்தளம் வைத்து இருக்கும் கபீரன்பன் அவர்கள் வித்தியசமாய்  நாற்பது ஏழைச் சிறுவர், சிறுமியருடன் தீபாவளி பண்டிகையைக்   கொண்டாடியதையும் அவர்களின் உற்சாகத்தையும் எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள். இப்படி எல்லோரும் வித்தியாசமாய் ஒருமுறையேனும் கொண்டாட ஆசை வரும், படித்தால்.

 வயிற்றை கெடுக்காமல் பலகாரங்களை அளவோடு உண்ண வேண்டும்.  பலகாரங்களை  உறவு நட்புகளுக்கும்,மற்றும்  தீபாவளி அன்று நம்மை நாடி வரும் ஏழைகளுக்கும் கொடுத்து மகிழ வேண்டும்.

வலை உலக நட்புகள் எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
                                                              
                                                               வாழ்க வளமுடன்!

                                                                       -----------------

52 கருத்துகள்:

  1. படம் மிக மிக அருமை
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பண்டிகை நாட்களில் இல்லாதோருக்கு உதவிசெய்து அவர்களை மகிழ்வடையச்செய்வதே சிறப்பானது. அதைஅழகாக பகிர்ந்துள்ளீர்கள்.

    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. மனம்நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அந்த படம் அபார அழகு!
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  6. அழகாக படம் வரைந்துள்ள தங்கள் கணவருக்கு என் பாராட்டுக்கள்.

    வாழ்க வளமுடன் + நலமுடன்.

    பதிலளிநீக்கு
  7. படம் அருமை... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. ஓவியம் மிக அழகு!
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  9. அழகான படம்... பாராட்டுக்கள்...

    இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. வண்ண ஓவியம் வெகு அழகு. இரசித்தேன்! வாழ்த்துகளுக்கு நன்றி. பகிர்வதில் உள்ளது விழாக்கால மகிழ்ச்சி. நல்ல பகிர்வு.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  11. குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. என்னதான் சொல்லுங்கள்... தீபாவளி என்றால் 'அந்த நாளும் வந்திடாதோ' என்றுதான் பாடத் தோன்றுகிறது.

    நீண்ட நாட்களுக்குப் பின் சார் படம்! நன்றாக இருக்கிறது.

    என்ன பலகாரம் சாப்பிட்டாலும் கூடவே தீபாவளி மருந்தும் சாப்பிட்டு விடுவோம்தானே... எனவே பிரச்னை இல்லை! :)))

    தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. அடேயப்பா! ஒரு வருடத்திற்குப் பிறகும் நினைவில் வைத்திருந்து அந்த பதிவை பலருடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுடைய உயர்ந்த உள்ளத்திற்கு என் வந்தனங்கள். தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். அரசு சாருக்கும் வந்தனங்கள். அவரை இன்னும் நிறைய படங்களை போடச் சொல்லி பதிவிடுங்கள்.நன்றி

    பதிலளிநீக்கு
  14. வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பின்னூட்டத்திற்கும் சார் படத்தை ரசித்தமைக்கும் நன்றி.இதற்கு முந்திய இரண்டு பதிவுகளில் உங்களை காணோமே!
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. தமிழ்மண ஓட்டுக்கு நன்றி ரமணிசார்.

    பதிலளிநீக்கு
  16. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
    இருப்பவர்களுக்கு இப்போது எல்லா நாளும் தீபாவளியாக இருக்கிறது.
    எல்லா நாட்களும் நினைத்த போது ஆடை, நினைத்த போது விரும்பிய உணவு பண்டங்கள் வாங்கப் படுகிறது.தேவைக்கு அதிகமாய் வாங்கி உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுகிறது.

    இல்லாதவர்களுக்கு பண்டிகையை கழிப்பதே பெரிய பாடாய் இருக்கிறது.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் மனம்நிறைந்த தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  18. வாங்க இராஜராஜேஸ்வரி,வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க கே.பி. ஜனாசார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க கோபாலகிருஷ்ணன் சார்,வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    என் கணவர் வரைந்த படத்திற்கு வழத்துக்கள், பாராட்டுக்கள் அளித்தமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ஸ்கூல் பையன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க மனோசாமிநாதன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன். சார் வரைந்த ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.
    அந்தக் கால குழந்தைகளுக்கு கொஞ்சம் இருந்தால் கூட காக்கா கடி கடித்து பகிர்ந்து உண்ணும் பழக்கம் இருந்தது. இப்போது சுகாதாரம், கண்ட இடத்தில் கண்டதை , கண்டவர்களிடமிருந்து வாங்கி உண்ணக்கூடாது என்று கட்டுபாடுடன் வளர்க்க படுவதும், தனிமையில் வளர்வதாலும் பகிர்தலை சொல்லித் தர வேண்டி உள்ளது. பகிர்வதில் தான் மகிழ்ச்சி என்பதை குழந்தைகள் புரிந்து கொண்டால் என்றும் மகிழ்ச்சி தான்.


    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
    உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    //என்னதான் சொல்லுங்கள்... தீபாவளி என்றால் 'அந்த நாளும் வந்திடாதோ' என்றுதான் பாடத் தோன்றுகிறது.//

    அந்தக்கால மலரும் நினைவுகள் வந்து பாட செய்வது உண்மை.
    புது உடை அணிந்து அக்கம்பக்கத்தில் பலகாரம் கொடுத்து வர போவது, சகோதர, சகோதரிகளுடன், வெடிகளை வெடித்து மகிழ்ந்த நினைவுகள், அம்மா கொடுக்கும் தின்பண்டம் தவிர நாமே தின்பண்டங்களை எடுத்து சென்று தோழிகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்த நாட்கள் மீண்டும் வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

    //நீண்ட நாட்களுக்குப் பின் சார் படம்! நன்றாக இருக்கிறது.//


    உங்கள் ஓவியத்திற்கு ஸ்ரீராம் என்ற ரசிகர் இருக்கிறார் படம் வரைந்து தாருங்கள் என்று கேட்டுக் கொண்டதால் வரைந்து தந்தார்கள்.

    //என்ன பலகாரம் சாப்பிட்டாலும் கூடவே தீபாவளி மருந்தும் சாப்பிட்டு விடுவோம்தானே... எனவே பிரச்னை இல்லை! :)))//

    அது தானே! மருந்து இருக்கவே இருக்கு. நன்றாக சாப்பிடுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.
    உங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.









    பதிலளிநீக்கு
  27. வாங்க கபீரன்பன், வாழ்க வளமுடன்.
    எத்தனை வருடங்கள் ஆனால என்ன நல்ல நினைவுகளை மறக்க முடியுமா? அருமையான் பதிவு அல்லவா!
    சார் ஐந்து பதிவுகளுக்கு படம் வரைந்து தந்து இருக்கிறார். நானும் உங்கள் ’சித்திரமும், கை பழக்கம் ’வலைத்தளம் போல் ஒரு தளம் ஆரம்பித்து வரைந்து வையுங்கள் உங்கள் எண்ணங்களை என்கிறேன். அவர்கள் கேட்டால் தானே!
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம்

    பதிவு அருமை வாழ்த்துக்கள்

    இனியதீபாவளி வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  29. வாங்க ரூபன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. //ஏழை, சிறுவர், சிறுமியர் ஏக்கமாய் வந்து பார்த்துக் கொண்டு இருந்தால் அவர்களுக்கும், இரண்டு மத்தாப்புக்களை கொடுக்க சொல்ல வேண்டும் குழந்தைகளை. அவர்கள் மலர்ந்து மத்தாப்பாய் சிரிக்கும் போது எல்லோருக்கும் ஆனந்தம் ஏற்படும்.குழந்தைகளுக்கும் பிறருக்கு உதவும் மனப்பான்மை வரும்.//

    உண்மை, எங்க பால்கார அம்மாவுக்கு நாங்க துணி எடுக்கும் கடையில் துணிகளும், அவங்க பிள்ளைகளுக்குப் பட்டாசுக்குப் பணமோ அல்லது அலுவலகத்திலிருந்து வரும் பட்டாசுகளில் ஒரு பகுதியோ கொடுத்து வந்தோம். பல ஆண்டுகள் இது தொடர்ந்தது. அதே போல் எங்க வீட்டுப் பக்ஷணங்களும் கொடுப்போம். :)))

    பதிலளிநீக்கு
  31. அருமையான படம், அருமையான பதிவு. கபீரன்பனின் இந்தப் பதிவு படிக்கலைனு நினைக்கிறேன். போய்ப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. படம் மிக அருமை! வரைந்தவருக்கும் எங்களுக்கும் இங்கு காண்பித்த உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    நாம் கொண்டாடுவதுடன் நின்றுவிடாமல் இல்லாதோர்க்கு உணர்வோடு உதவிடுவோம்!

    அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  33. ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    பதிலளிநீக்கு
  34. படம் அழகு! அருமை.
    தங்கள் கணவருக்கு பாராட்டு!
    விழாக்கால பகிர்வு. இனிய வாழ்த்துகள்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்etha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  35. படம் அழகு! அருமை.
    தங்கள் கணவருக்கு பாராட்டு!
    விழாக்கால பகிர்வு. இனிய வாழ்த்துகள்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்etha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  36. அன்பு கோமதி. அனைவரின் உள்ளங்களிலும் உங்கள் அன்பு விரிந்து பரந்திருக்கிறது.
    எங்கள் வாழ்த்துகளும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கு வருகிறது. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  37. வாங்க கீதா, வாழ்க வளமுடன்.

    // எங்க பால்கார அம்மாவுக்கு நாங்க துணி எடுக்கும் கடையில் துணிகளும், அவங்க பிள்ளைகளுக்குப் பட்டாசுக்குப் பணமோ அல்லது அலுவலகத்திலிருந்து வரும் பட்டாசுகளில் ஒரு பகுதியோ கொடுத்து வந்தோம். பல ஆண்டுகள் இது தொடர்ந்தது. அதே போல் எங்க வீட்டுப் பக்ஷணங்களும் கொடுப்போம். ://
    மிகவும் நல்ல செயல்.
    இந்த மாதிரி உள்ளவர்களுக்கு தான் உதவ வேண்டும்.
    நானும், எங்கள் குடி இருப்பை பார்த்துக் கொள்ளும், வாட்சமேன்,வேலையாள் இவர்களுக்கு கொடுப்பேன் வருட வருடம்.

    பலகாரங்கள் முன்பு குழந்தைகள் இருந்தார்கள் வீடு வீடாய் கொண்டு பலகாரங்களை கொடுத்து வருவார்கள். இப்போது பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் அக்கம் பக்கது வீடூகளுக்கு கொடுத்து விடுவேன்.
    நாங்கள் தீபாவளிக்கு ஊருக்கு போய் விடுவதால் முன்பே பாக்கெட் போட்டு கொடுத்து விட்டு செல்வேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
    கபீரன்பன் பதிவு படித்துப் பாருங்கள் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  38. வாங்க இளமதி, வாழ்க வளமுடன்.படத்தை ரசித்து வாழ்த்தியதற்கு நன்றி.
    //நாம் கொண்டாடுவதுடன் நின்றுவிடாமல் இல்லாதோர்க்கு உணர்வோடு உதவிடுவோம்!//

    ஆம், இளமதி இல்லாதோர்க்கு உதவினால் நல்லது . எல்லோருக்கும் கொடுக்கமுடியாவிட்டாலும், ஒரு சிலருக்காவது உதவலம்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி இளமதி.

    பதிலளிநீக்கு
  39. வாங்க நம்பள்கி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் பதிவை ரசித்தமைக்கு நன்றி.
    பிளஸ் +1 நான் அதில் இல்லை.
    உங்கள் பதிவை வந்து படித்து கருத்து சொல்கிறேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வாங்க வேதா இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.
    என் கணவர் ஓவியத்திற்கு உங்கள் பாராட்டு மகிழ்ச்சி, நன்றி.இனிய தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் அன்பும் எல்லோரிடமும் பரந்து விரிந்து இருக்கிறது.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. உங்கள் கணவரின் ஓவியம் அருமையாயிருக்கிறது.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  43. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்
    இனிய தீவளி நல் வாழ்த்துக்கள் தோழி .

    பதிலளிநீக்கு
  44. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், மனம் கனிந்த இனிய வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  45. வாங்க அம்பாள்டியாள் , வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும்
    மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  46. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், கோமதி!

    பதிலளிநீக்கு

  47. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  48. வாங்க கி. பாரதிதாசன் கவிஞர் ஐயா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், அமுதான கவிதை வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  49. வணக்கம்
    படம் வரைந்த உங்கள் கணவருக்கு மிக்க நன்றி... அருமையாக உள்ளது
    பதிவு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  50. வாங்க ரூபன்,வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  51. Nalama!..
    Best wishes.
    I came here..and writting something...
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு