Wednesday, March 6, 2013

பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்


மார்ச் 8ஆம் தேதியை மகளிர் தினமாய் நாம் கொண்டாடுகிறோம்.  சமுதாயத்திற்கு சேவை செய்த  சிறந்த பெண்மணி பத்மஸ்ரீ  கிருஷ்ணம்மாள் அவர்களை இந்த கட்டுரையில் வாழ்த்த விரும்புகிறேன்.
நாங்கள் கயிலைக்கு  புனிதப்பயணம் ஆரம்பித்தபோது 31.08.2011 அன்று நாங்கள் மயிலாடுதுறையிலிருந்து காலை 11 மணிக்கு சோழன் விரைவு ரயில் வண்டியில் சென்னைக்குப் புறப்பட்டோம்.    ரயிலில்  எங்கள் இருக்கைக்கு போகும் முன்பு ஒரு வயதான பெண்மணி இருந்த இருக்கையை தாண்டி போக நேரிட்டது. அவர்களை எங்கோ பார்த்தமாதிரி இருந்தது , அவர்களை ஏதோ பத்திரிக்கையில்(மங்கையர் மலர், அல்லது சிநேகிதி  என்று நினைக்கிறேன்) படித்து இருக்கிறேன் என்று என் கணவரிடம் சொல்லிக் கொண்டு இருந்த போது எனக்கு நினைவு வந்து விட்டது. அவர்கள்  சுதந்திர போராட்ட  வீராங்கனை, சமூக சேவகி  பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் ஆவார்.
கீழ்வெண்மணி கிராமத்து விவசாய  மக்களுக்கு அவர் தெய்வம் போல் என்று படித்தது நினைவு வந்தது.

அவர்கள் சில வெளி நாட்டு அன்பர்களுடன் வந்து இருந்தார்கள். செங்கல்பட்டுக்கு போகிறேன்  என்றார்கள்.  நாங்கள்  அவர்களை வணங்கி உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி என்றோம்.  எவ்வளவு உயர்ந்தவர்கள் அவர்களுடன் நின்று பேசுவதே பெரிய பாக்கியம். அவர்கள் அவர்களைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை கொடுத்தார்கள் அதைப்படித்த போது அவர்கள் எவ்வளவு விருதுகள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள், எவ்வளவு துன்பங்கள் பட்டு இருக்கிறார்கள் என்பது எல்லாம்  தெரிந்தது.

நிறைய விருதுகள் பட்டங்கள் எல்லாம் வாங்கியும் பெருமை கொஞ்சமும் இல்லாமல் மிக எளிமையாக நிறைகுடம் போல் ஒளிர்ந்த அவர்களை  போட்டோ எடுத்துக் கொள்கிறேன் என்று அவர்களை மட்டும் போட்டோ
எடுக்கப் போனேன். அவர்களுடன் வந்து இருந்த அயல்நாட்டுப் பெண்மணி நீங்கள் சேர்ந்து நில்லுங்கள், நான் எடுக்கிறேன் என்று அன்பாய்   எடுத்துக் கொடுத்தார்கள். அவர்களை பார்த்து வந்தபின் அடிக்கடி பொதிகை தொலைக்காட்சியில் அவர்கள் பேட்டி வைத்தார்கள். நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டேன். இதை முன்பே பார்த்து இருந்தால் அவர்களிடம் உங்களை பொதிகையில் பார்த்தேன் என்று சொல்லி இருக்கலாம். மன உறுதி நிறைந்த  சமூகசேவையை உயிர் மூச்சாகச் செய்த பெண்மணியை சந்தித்தது பற்றி  இந்த மகளிர் தினத்தில்  பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

”நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ” என்று தினமலர் குறிப்பிட்டு இருக்கிறது. படித்து இருப்பீர்கள். இருந்தாலும் இந்த பெண்கள் தினத்தில்  வீரமிக்க  பெண்மணிக்கு வணக்கம் சொல்ல மறுபடியும் படிக்கலாம் அல்லவா!

//"அந்த கூட்டத்தில் கல்யாண வயதில் இருந்த அந்தப் பெண் மட்டும் கழுத்தில், காதில், மூக்கில் என்று பொட்டு தங்க நகைகூட இல்லாமல், சாதாரண கைத்தறி புடவை அணிந்த நிலையில் எளிமையின் வடிவமாக காணப்பட்டார்'' என்று சுதந்திர போராட்ட தியாகியான ஜெகந்நாதனால் கைப்பிடிக்கப்பட்டவரும், தலித் சமூகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்தவரும், பூமிதான இயக்கத்தின் ஆணிவேராக இருந்தவரும், நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் சுவீடன் நாட்டால் வழங்கப்படும் "வாழ்வுரிமை விருது” பெற்றவரும்' இன்றைக்கு 94 வயதானாலும் தளரா மனஉறுதியுடன் காணப்படுபவருமான கிருஷ்ணம்மாளை இந்த கட்டுரை படம் பிடிக்கிறது

திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் 1926 ம் ஆண்டு பிறந்தவரான கிருஷ்ணம்மாள்தான் தமிழக தலித் இனத்தின் முதல் பட்டதாரி எனலாம்.கல்லூரியில் படிக்கும் போது எதிர்பாரதவிதமாக காந்திக்கு உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.,இதன் காரணமாக காந்தியத்தை கடைபிடிக்கத் துவங்கியவர், சர்வோதய இயக்கத்தில் பணியாற்றியவர், காந்தியவாதியான ஜெகந்நாதனை திருமணம் செய்துகொண்டவர்.

இந்த நிலையில் நாகை,கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்ட விவசாயிகள் எரித்துக்கொன்ற சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நாகை வந்தவர் , பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற வேண்டி நாகையில் தங்கியவர் பின்னர் நாகை வாசியாகவே மாறிவிட்டார்.

அப்போது விநோபாவே நாடு முழுவதும் பூமிதான இயக்கத்தை நடத்திக்கொண்டு இருந்தார். இருப்பவரிடம் இருந்து நிலத்தை பெற்று இல்லாதவருக்கு வழங்கும் இந்த பூமிதான திட்டத்தை தமிழகத்தில் நடத்திச் சென்றவர் கிருஷ்ணம்மாளாவார். தமிழகத்தில் மட்டும் 1 லட்சம் ஏக்கர் நிலத்தை பெற்று ஏழைகளுக்கு வழங்கினார்.

எவ்வளவுதான் உழைத்தாலும், எத்தனைகாலம் உழைத்தாலும் அரைப்படி நெல் கூடுதலாக கிடைத்தால் அதிசயம் என்று எண்ணியிருந்த உழவர்களுக்கு, சொந்தமாக உழைத்த மண்ணே கிடைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இந்த விஷயத்தை அசாதாரணமாக கிருஷ்ணம்மாள் நடத்திக்காட்டினார்.

நில மீட்பிற்காக தொடங்கப்பட்ட "லாப்டி' இயக்கத்தை விரிவுபடுத்தி விவசாய தொழிலாளர்களின் குடும்பத்தினர் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுதல், பாய் நெய்தல், மேல்படிப்பு படித்தல் என்று வலுவான,வளமான வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.

இதை எல்லாம் செய்யும் நாங்கள் தேவதூதர்கள் அல்ல,கொள்கைகளை மட்டுமே உதிர்க்கும் அரசியல்வாதிகளும் அல்ல, காந்திய சிந்தனையில் ,விநோபா வழியில் கிராமங்கள் உயர கிராமமக்கள் விழிப்புணர்வு பெற எங்களால் முடிந்த அளவு முயற்சிக்கிறோம்.,இந்த முயற்சி ஆங்காங்கே பலரால் மேற்கொள்ளப்பட்டால், நம் தேசம் ஏழைகளும், கோழைகளும் இல்லாத நல்ல கொள்கைப் பிடிப்புள்ள தேசமாகும் என்பதே எங்களது நம்பிக்கை, அந்த நம்பிக்கையை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறோம் எனும் கிருஷ்ணம்மாளின் பாதையில் தடைக் கற்களும்,முட்களும் மிக அதிகம், உடம்பிலும்,மனதிலும் பட்ட காயங்கள் இன்னும் அதிகம்.,ஆனால் இதையெல்லாம் சொல்லி எந்த நிலையிலும் பச்சாதாபத்தை பெற விரும்பாதவர் இவர்.

நாடி நரம்பு தளர்ந்து கயிற்றுக்கட்டிலில் எழுந்து உட்காரக்கூட ஆள் துணை தேடும் 82வயதில்தான் இவர்,விளைநிலங்களை உப்பளங்களாக மாற்றும் இறால் பண்ணையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் மேற்கொண்டார். இதற்காக இவர் குடியிருந்த வீடு தீவைத்து எரிக்கப்பட்டது, கூட இருந்தவர்கள் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இப்படி சொல்லமுடியாத சிரமங்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்று போராடியவர்.

விவசாய மண்ணையும்,விவசாய மக்களையும் இவர் நேசித்த அளவிற்கு நாட்டில் யாரும் நேசித்து இருப்பார்களா என்பது சந்தேகமே,இதனால் அனைவராலும் "அம்மா' என்றழைக்கப்படுபவர்.

கத்தியின்றி,ரத்தமின்றி சாதிக்கமுடியும் என்பதன் அடையாளமே கிருஷ்ணம்மாள் என்று வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவர் இவரைப்பற்றி எழுதிய புத்தகத்தில் வியந்து பாராட்டி எழுதியுள்ளார்.

தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக இல்லாத விவசாயிகளுக்கு நிலம், வீடு, கல்வி, வேலைவாய்ப்பு என்று நிகழ்காலமாகவும்,எதிர்காலமாகவும் விளங்கும் கிருஷ்ணம்மாளுக்கு சுவீடன் அரசு தனது நாட்டின் மிக உயர்ந்த விருதான "வாழ்வுரிமை விருது' வழங்கி கவுரவித்துள்ளது.

சிலருக்கு விருதால் பெருமை
சிலரால் விருதிற்கு பெருமை
கிருஷ்ணம்மாள் சந்தேகமில்லாமல் இரண்டாவது ரகம்.
-எல்.முருகராஜ்.//


இரு காந்திகள்
இக் கட்டுரை ஜெயமோகன் எழுதி இருக்கிறார்.


இந்த லிங்கில், கத்தியின்றி ரத்தமின்றி ! என்ற புத்தகத்தின் மதிப்புரை வந்திருக்கிறது.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்- சுதந்திர போராளியின் வீரவரலாறு இதில் கூறப்படுகிறது.

திருமதி . கிருஷ்ணம்மாள்  அவர்களின் கணவருக்கு  நினைவாற்றல் குறைந்து வருவதாகவும்   உடல் நலிவுற்ற கணவரை அன்பாக  பார்த்துக் கொண்டார்  என்று பத்திரிக்கை மூலம் அறிந்து கொண்டேன்.
போன மாதம் பிப்ரவரி 12ம் தேதி திரு ஜெகந்நாதன் அவர்கள் மறைந்தார் அப்போது அவருக்கு வயது 100 . திரு ஜெகந்நாதன் அவர்களின் புகழை விவசாயிகள் காலம் முழுவதும்  சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

திருமதி. கிருஷ்ணம்மாள் அவர்கள் மனம் தளராமல் தன் பணியைத் தொடர இறைவன் அவர்களுக்கு மனபலத்தையும், உடல் நலத்தையும் அருளவேண்டும்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.


                                                       ----------------------------

69 comments:

Sasi Kala said...

நாடி நரம்பு தளர்ந்து கயிற்றுக்கட்டிலில் எழுந்து உட்காரக்கூட ஆள் துணை தேடும் 82வயதில்தான் இவர்,விளைநிலங்களை உப்பளங்களாக மாற்றும் இறால் பண்ணையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் மேற்கொண்டார். இதற்காக இவர் குடியிருந்த வீடு தீவைத்து எரிக்கப்பட்டது, கூட இருந்தவர்கள் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இப்படி சொல்லமுடியாத சிரமங்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்று போராடியவர்.

கிருஷ்ணம்மாள் பற்றிய நிறைய செய்திகள் தெரிந்து கொண்டேன். பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும் விதம் வணங்கக்கூடிய பெண்மணி.
முதல் பட்டதாரி பெண்மணியைப்பற்றியும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. தொடருங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

கிருஷ்ணம்மாள் அவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன்... பலரும் அறியவும் பகிர்கிறேன் சகோ... (G+)

/// சிலருக்கு விருதால் பெருமை
சிலரால் விருதிற்கு பெருமை ///

நீங்கள் சொன்னது போல் விருதிற்கு இவரால் தான் பெருமை...

சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

மன உறுதி நிறைந்த சமூகசேவையை உயிர் மூச்சாகச் செய்த பெண்மணியை சந்தித்தது பற்றி இந்த மகளிர் தினத்தில் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

அம்மாவுக்கு இனிய மகளிதின வாழ்த்துகள்..!!

கோமதி அரசு said...

வாங்க சசிகலா, வாழ்கவளமுடன்.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

malar balan said...

நீங்கள் கொடுத்துவைத்தவர் நல்லவர்களை காணும் பாக்கியம் கிடைத்தது
மகளிரின் உயர்வை உயரவைத்த கிருஷ்ணமாள் அம்மாவிற்கு மகளிர் தின வாழ்த்துகள்
உங்களுக்கும் இந்த பகிர்வை படிக்கும் அனைத்து பெண்மைக்கும்
நல்ல பகிர்வை எங்களுடன் பகிர்ந்தற்கு நன்றி

கோமதி அரசு said...

வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன். கிருஷ்ணம்மாள் உங்கள் ஊரை சேர்ந்தவர்கள்.
உங்கள் வரவுக்கும், இந்த பதிவை G+ பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.

sury Siva said...

மகளிர் தினத்தன்று மனித குலமே போற்றிடும் பெண்மணி க்ருஷ்ணம்மாள் அவர்களைப்பற்றி
எழுதியது மனதிற்கு இதமாக இருக்கிறது.

சுப்பு ரத்தினம்.

ராமலக்ஷ்மி said...

மிகச் சிறந்த பெண்மணியைச் சந்தித்ததுடன் அருமையாக எங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள்.

தந்திருக்கும் சுட்டிகளிலும் சென்று வாசித்தேன்.

/தன் பணியைத் தொடர இறைவன் அவர்களுக்கு மனபலத்தையும், உடல் நலத்தையும் அருளவேண்டும்./

உங்கள் பிரார்த்தனையில் இணைகிறோம்.

தங்களுக்கும், அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

நம்பள்கி said...

இந்த தம்பதியைப் பற்றி நிறைய படித்துள்ளேன். உண்மயான காதல் தம்பதிகள்; வாழ்க்கை வாழ்வதற்கே எனபதை விட...எப்படி வாழ வேண்டும் என்று உலகத்திற்கு எடுத்துக் காட்டியவர்கள்.

கோமதி அரசு said...

வாங்க இராஜராஜேஸ்வரி, வாழக வளமுடன்.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க மலர்பாலன், வாழ்க வளமுடன். நீங்கள் சொன்னது போல் நல்லவர்களை கண்டது மகிழ்ச்சிதான்.
உங்கள் வாழ்த்துக்களுக்கும் உங்கள் தொடர் வருகைக்கும் நன்றி.கோமதி அரசு said...

வாங்க சூரிசிவா சார், வாழ்க வளமுடன். நீங்கள் சொன்னது போல் மனிதகுலம் போற்றும் பெண்மணியைப் பற்றி பகிர்ந்து கொண்டது மனதுக்கு இதம் தான் சார்.

ஸாதிகா said...

மகளிர் தினத்தன்று என்ன ஒரு பொருத்தமான அருமையான பகிர்வு.கிருஷ்ணம்மாள் அவர்களைப்பற்றி பல தகவல்கள் அறிந்து வியப்புற்றேன்.

கோமதி அரசு said...

வாங்க ராமலக்ஷ்மி, வாழ்கவளமுடன்.
நீங்கள் சுட்டிகளை சென்று பார்த்தது மகிழ்ச்சி.பிராத்தனையில் இணந்தமைக்கும், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

கோமதி அரசு said...

வாங்க நம்பள்கி, வாழ்கவளமுடன்.
நீங்கள் சொன்னது போல் அவர்கள் வாழ்ந்து காட்டியவர்கள் தான்.

உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஸாதிகா, வாழ்கவளமுடன்.
கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றால் உடனே எனக்கு வயதாகி விட்டது, என்றும் ,நாளுக்கு ஒரு வலி சொல்லும் உடல் மனதுக்கு உற்சாகம் தரவே இவர்கள் பதிவு. வயதான காலத்திலும் சமுதாயத்திற்கு சேவை செய்யும் இவர்களைப் பற்றி படித்தால் நம் சோர்வு நீங்கி விடும் அல்லவா?
நன்றி ஸாதிகா.

கவியாழி கண்ணதாசன் said...

இந்த வயதிலும் இன்னும் மக்களின் கஷ்டம் தீர்க்கப் பாடுபடும் அன்னை கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு வீர வணக்கம்.மனம் தளராமல் தன் பணியைத் தொடர இறைவன் அவர்களுக்கு மனபலத்தையும், உடல் நலத்தையும் அருளவேண்டும்.

rajalakshmi paramasivam said...

திருமதி கிருஷ்ணம்மாள் அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.
நீங்கள் சொல்வது போல் விருது இவர்களால் பெருமை பெற்றது.

இவர்களைப் பற்றி இவ்வளவு விரிவாக அழகாக விளக்கியமைக்கு நன்றி.

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

ராதா ராணி said...

மகளிர் தினத்தில் கிருஷ்ணம்மாள் அவர்களை பற்றிய பல தகவல்கள் பகிர்ந்தது மிக பொருத்தம் அக்கா..முதுமையிலும் அவரின் சமூக சேவை செய்யும் உயர்ந்த எண்ணத்திற்கு எனது வணக்கம். கிருஷ்ணம்மாள் அவர்களை சந்தித்தது கோமதி அக்காவிற்கு பெரும் பாக்கியம்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மன உறுதி நிறைந்த சமூகசேவையை உயிர் மூச்சாகச் செய்த பெண்மணியை சந்தித்தது பற்றி இந்த மகளிர் தினத்தில் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.//

மிகவும் அருமையான தகவல்கள்.

அனைவரும் அறியும்படி எழுதியுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்ள்.

மகளிர் தினத்திற்கு ஏற்ற நல்லதொரு பதிவு. நன்றி.

Indhira Santhanam said...

நல்லாரைக் காண்பதுவும் நன்றே. மிக உயர்ந்த பெண்மணியை சந்தித்தது மகிழ்ச்சி. இறைவன் அவர்களுக்கு உடல் பலத்தையும் மன பலத்தையும் தர பிரார்த்திக்கிறேன் மகளிர்தின வாழ்த்துக்கள் அம்மா.

ஹுஸைனம்மா said...

இவர்களைக் குறித்து வாசித்து, வியந்துள்ளேன். நீங்கள் நேரிலேயே சந்தித்துவிட்டீர்கல். பொருத்தமான நபர், பொருத்தமான பதிவு. இவர்களைப் போன்ற சேவை உள்ளம் நமக்கும் வாய்க்க வேண்டும்.

ஹுஸைனம்மா said...

உங்களின் வலைப்பக்கம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டேயிருக்கிறபடியால், கமெண்ட் போட தாமதமாகிவிட்டது. நண்பர் பாஸித் கொடுத்த அறிவுரையின்படி, http://mathysblog.blogspot.com/ncr என்று டைப் செய்து இந்தப் பக்கம் வந்தேன். ஆனால், பலருக்கும் இந்தப் பிரச்னையேதும் இல்லாமல் வாசித்துப் பின்னூட்டம் எழுதிருக்கார்கள் போல!!

RAMVI said...

திருமதி கிருஷ்ணம்மாள் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். அவரைப்பற்றி விவரமான தகவல்களை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். மிக அருமையான பதிவு.

//சிலருக்கு விருதால் பெருமை
சிலரால் விருதிற்கு பெருமை
கிருஷ்ணம்மாள் சந்தேகமில்லாமல் இரண்டாவது ரகம்.//

சிறப்பு.

கோமதி அரசு said...

வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்கவளமுடன்.
வீர தாய்க்கு வீரவணக்கம் சொல்லியது மகிழ்ச்சி.

உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
விருது இவர்களால் பெருமை பெற்றது உண்மை.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ராதா ராணி, வாழ்க வளமுடன்.

சமூக சேவை செய்யும் அன்னைக்கு வணக்கம் சொல்வது மகிழ்ச்சி.

நான் அவர்களைப் பார்த்தது , பாக்கியம் தான் மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி.

கே. பி. ஜனா... said...

சிறப்பான பகிர்வு!

கோமதி அரசு said...

வாங்க வை. கோபாலகிருஷ்ணன் வாழ்கவளமுடன்.

உங்கள் பாராட்டுக்களுக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.
மகளிர் தினத்தில் சமுதாயத்திற்கு சேவை செய்த அன்னையைப் பற்றி எழுதியது மன மகிழ்ச்சியை தருகிறது.

கோமதி அரசு said...

வாங்க இந்திரா சந்தானம், வாழ்க வள்முடன்.
அருமையாக சொன்னீர்கள் நல்லாரை காண்பது நன்று தான்.
சோர்வு ஏற்படும் போது அவர்களை நினைத்துக் கொண்டால் உடலில் புத்துணர்வு ஏற்பட்டு விடும்.
உங்கள் பிராத்தனைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

s suresh said...

மிகவும் அருமையான பகிர்வு! தினமலரில் இவரை படித்து இருக்கிறேன்! உங்கள் பகிர்வின் மூலம் இன்னும் அறிந்து கொண்டேன்! நன்றி!

கோமதி அரசு said...

வாங்க ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் அவர்களின் சேவை மனபான்மையில் சிறிதளவாவது நமக்கு வந்தால் போதும்.

ஹுஸைனம்மா, உற்சாகத்தில் உங்களை உள்ளே விட மறுத்த என் வலைத்தளத்துக்குள் வர உதவி செய்த நண்பர் பாஸித் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். இதைப்பற்றி விரிவாக பதிவு எழுதுங்கள்.

இருண்டொரொருவர் உங்கள் வலைத்தளத்திற்கு வர முடியவில்லை என்று சொன்னார்கள். அவர்களுக்கும் உள்ளே வந்து படிக்க உங்கள் குறிப்பு வசதியாக இருக்கும்.

மற்றவர்களுக்கும் இந்த நிலை வந்தால் உதவும் கூடிய விரைவில் எழுதுங்கள்.

துள்ளி குதிக்குது போ என்று விடாமல் நண்பர் உதவியால் உள்ளே வந்து படித்து கருத்து சொன்னதற்கு மிக் மிக நன்றி ஹுஸைனம்மா.
சேவை உள்ளம் இருக்கே உங்களுக்கு.

கோமதி அரசு said...

வாங்க ரமா ரவி, வாழ்க வளமுடன்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

கோமதி அரசு said...

வாங்க கே.பி சார், வாழ்க வளமுடன்.

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க சுரேஷ், வாழ்க வளமுடன்.
தினமலரில் படித்து இருப்பீர்கள் என தெரியும், மகளிர் தினத்தில் அவர்களை சந்திந்த விவரம் சொல்லவும் சிறப்பான பெண்மணிக்கு வணக்கம் சொல்லவும் பகிர்ந்து கொண்டேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பானதோர் பெண்மணி பற்றிய தகவல்கள் - இந்நாளில் தந்திருப்பது சிறப்பு!

கோமதி அரசு said...

வாங்க வெங்கட், வாழ்க வளமுடன்.நீங்கள் சொன்னது போல் சிறப்பான பெண்தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க வெங்கட், வாழ்க வளமுடன்.நீங்கள் சொன்னது போல் சிறப்பான பெண்தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

''..விருதிற்கு இவரால் தான் பெருமை''

நானும் இப்படியே கூறுகிறேன். மிக மிகச் சிறப்பு.
அருமையான ஓரு மாது எங்களிற்கு அறிமுகமானார் மிக்க நன்றி.
அடுத்து சகோதரி ஹுஸைனம்மா. விற்கு மிகுந்த நன்றி . இதை உதவி செய்த உங்களிற்கும் நன்றி ..நன்றி.
இதே போல திருவாளர் நடன சபாபதி_ சமீபத்தில் வலைச்சரத்தில் வந்த இளங்கோ ஆகியவர்களிடமும் போக முடியவில்லையே. இதற்கும் ஓர வழி கண்டால் நல்லது.
வேதா. இலங்காதிலகம்.

கோமதி அரசு said...

வாங்க வேதா. இலங்காதிலகம், வாழ்க வளமுடன்.

ஹுஸைனம்மா உதவியால் என் பதிவை படித்து கருத்து சொன்னதற்கு வாழ்த்துக்கள். நடன சபாபதி, இளங்கோ ஆகியவர்கள் வலைதள முகவரி com/ncr போட்டு படித்து பாருங்கள்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

ஹுஸைனம்மா said...

அக்கா,

பாஸித் இதுகுறித்து ஒரு பதிவே எழுதிட்டார். தேவைப்படுறவங்க பாருங்க:

_______________________

ஒரு முக்கிய பதிவு!

நீங்கள் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர்த்து பிற நாடுகளில் இருந்தால், சில ப்ளாக்கர் வலைத்தளங்கள் துள்ளிக் குதிப்பதைப் பார்க்கலாம். அதாவது சில வலைப்பூக்கள் தொடர்ந்து Refresh ஆகிக் கொண்டிருக்கும். இதனால் வாசகர்கள் அந்த தளத்தை சரியாக படிக்க முடியாது, பின்னூட்டம் இட முடியாது. இதற்கு காரணம் என்ன? தீர்வு என்ன?

துள்ளிக் குதிக்கும் ப்ளாக் - தீர்வு என்ன?

கோமதி அரசு said...

வாங்க ஹுஸைனம்மா ,வாழ்கவளமுடன்.

பாஸித் அவர்கள் பதிவை படித்தேன். தேவை படுபவர்களுக்கு உதவும் நிச்சயம்.
உங்கள் உதவிக்கு நன்றி ஹுஸைனம்மா.

மாதேவி said...

அருமையான பகிர்வு.

சிறப்பான ஒருவரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

மகளிர் தினத்திற்கு மகுடம் வைத்த மாதிரியான பதிவு இது! மிகவும் அருமை! நீங்கள் எழுதியிருக்கிற மாதிரி, இவர் போன்ற தன்னலமற்ற நல்லோர்களால் விருதுகள் பெருமை அடைகின்றன!

கோமதி அரசு said...

வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
நீங்கள் சொன்னது போல் சிறப்பானவர்கள் தான் .
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க மனோ சாமிநாதன், வாழ்கவளமுடன்.
தன்னலமற்ற நல்ல அன்னைதான் அவர்கள். விருதுகள் பெருமைஅடைவது உண்மைதான்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவை2தில்லி said...

சிறப்பான பெண்மணியை சந்தித்ததோடு இல்லாமல் அவர்களை பற்றிய தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.

ஆம் ஆதி, சிறந்த பெண்மணியை பகிர்ந்து கொண்டது மனது மகிழ்ச்சி.
உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

Ranjani Narayanan said...

திருமதி கிருஷ்ணம்மாள் பற்றிய தகவல்கள் மனதுக்கு நிறைவைக் கொடுக்கின்றன. ஒரு மிகச்சிறந்த, முன் உதாரணமாக இருப்பவரைப் பற்றி அறிந்ததில் சந்தோஷப்படுகிறேன்.

சமுதாயத் தொண்டு புரிய வேண்டும் என்கிற ஆவல் இருப்பவர்களுக்கு இவரது வாழ்க்கை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த மகளிர் தினத்தில் இவரைப் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு பல கோடி நன்றிகள்!

angelin said...

.தன்னலமற்ற தொண்டாற்றும் கிருஷ்ணம்மாள் அவர்கள் பற்றிய பதிவு மிகவும் அருமை .எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

angelin said...

அக்கா மேலே ஹுசைனம்மா குறிபிட்டுள்ள லிங்கில் சென்று அந்தசகோதரர் சொன்னபடி செய்ததில்தான் உங்க ப்ளாக் வர முடிந்தது ..இனி தொடர்ந்து வருவேன் .துள்ளி குதிக்கும் ப்ராப்ளம் இனியில்லை

கோமதி அரசு said...

வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன்.

சமுதாயத் தொண்டு புரிய வேண்டும் என்கிற ஆவல் இருப்பவர்களுக்கு இவரது வாழ்க்கை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.//

ஆம் ரஞ்சனி, நீங்கள் சொல்வது மிகச்சரி. எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டுபவர்கள். வாழும் காலத்தில் பிறருக்கு உதவி எல்லாம் செய்ய பெரிய மனம் வேண்டும்.
உங்கள் வராவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
ஹுஸைனம்மா நல்ல உதவி செய்தார்கள்.

நீங்கள் வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. தொடர்ந்து வருவேன் என்று சொல்வது மனதுக்கு மகிழ்ச்சி.
நன்றி சகோதரி.

ஸ்ரீராம். said...

பெருமைக்குரிய பெண்மணியின் அறிமுகம் கிடைத்தது உங்கள் பாக்கியம். இவர் பற்றி இன்று உங்கள் மூலம் நானும் அறிந்து கொண்டேன். நன்றி.

கோமதி அரசு said...

வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

பெருமைக்குரிய பெண்மணியின் அறிமுகம் கிடைத்தது எங்கள் பாக்கியம் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

Kanchana Radhakrishnan said...

சிறப்பான பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

அப்பாதுரை said...

இவரைப் பற்றி எதுவுமே தெரியாது என்பதைச் சொல்லிக் கொள்ள வெட்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
பதிவுக்கு நன்றி.

(நீங்க மாயவரத்திலா இருக்கீங்க? தெரியாம போச்சே! ஒரு விசிட் அடிச்சிருப்பேனே?!)

கோமதி அரசு said...

வாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன்.
நீங்கள் இப்படி சொல்ல கூடாது எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்து கொள்வது என்பது முடியாது.
நான் மாயவரத்தில் தான் இருக்கிறேன்.
கோவிந்தபுரம் வந்தால் இங்கு கண்டிப்பாய் வாருங்கள்.
இங்கு வந்து இருக்கும் போது சொன்னால் அற்புதமான பெண்மணி உங்களையும். உங்கள் அம்மாவையும் பார்த்து வணக்கசொல்ல நாங்கள் வருகிறோம்.

ஸாதிகா said...

பொருத்தமான நாளில் பொருத்தமான பகிர்வு.இப்பொழுதுதான் இவர்களைப்பற்றி அறிந்து கொண்டேன்.

கோமதி அரசு said...

வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.
இப்போது அவர்களைப் பற்றி படித்தீர்களா? மறுபடியும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸாதிகா.

வல்லிசிம்ஹன் said...

திருமதி கிருஷ்ணம்மாளைப் பற்றிப் பகிர்ந்து கொண்டதால் என் மனதில் நீங்கள் உயர்ந்துவிட்டீர்கள் கோமதி.
நம் நாட்டில் வீரத்திற்கு என்றும் குறைவில்லை. உழைப்புக்கும் அஞ்சுவதில்லை. இந்தவயதில் திருமதி கிருஷ்ணம்மாளின் சேவை வணக்கத்திற்குரியது. மிகவும் நன்றிமா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

நேற்று 17.03.2013 ஞாயிறு 'தினகரன்' செய்தித்தாளின் இணைப்பான 'வசந்தம்' இதழின் ஆறாம் பக்கத்தை பார்க்க நேர்ந்தது.

அதில் “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்” என்ற தலைப்பில் தங்களின் வலைத்தளம் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.

படித்ததும் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in

இளமதி said...

சகோதரி... நல்ல பதிவு. அருமையான பகிர்வு.
/// சிலருக்கு விருதால் பெருமை
சிலரால் விருதிற்கு பெருமை ///

//நீங்கள் சொன்னது போல் விருதிற்கு இவரால் தான் பெருமை...//
தனபாலன் சாரின் மேற்கோளையே நானும் வழி மொழிகிறேன்.

சென்றமுறை உள்ளே வந்ததுபோல இங்கே இப்பதிவு இட்ட நாளிலிருந்து வரமுயற்சித்து முடியாமல் இப்போ ஏதோ குருட்டாம்போக்கில் சரிவந்துவிட நுளைந்துவிட்டேன்...:)
வந்து பார்க்கையில் ஹுசைனம்மாவின் உதவியும் கிடைக்க அதுபடியே முயன்று வெற்றி பெற்றுவிட்டேன்...:)

இனிய தோழி ஹுசைனம்மாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

இனித்தொடர்ந்து வருவேன்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள் சகோதரி!

கோமதி அரசு said...

வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், முதன்முதலில் நீங்கள் தான் சொல்லி இருக்கிறீர்கள் நான் இன்னும் பார்க்கவில்லை நான் தினகரன் இதழ் வாங்கவில்லை அதனால் தெரியாது.
உங்கள் பாராட்டுக்கும், உங்கள் நல்வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்.
என் வலைத்தள்ம இடம்பெற்றதை மகிழ்ச்சியுடன் வந்து பாராட்டி, வாழ்த்து சொல்லும் உங்கள் நல்ல மனதுக்கு பாராட்டுக்கள், நன்றிகள் சார்.

கோமதி அரசு said...

வாங்க வல்லி அக்கா, வாழ்கவளமுடன்.

நம் நாட்டில் வீரத்திற்கு என்றும் குறைவில்லை. உழைப்புக்கும் அஞ்சுவதில்லை. இந்தவயதில் திருமதி கிருஷ்ணம்மாளின் சேவை வணக்கத்திற்குரியது.//

உண்மைதான் அக்கா நீங்கள் சொல்வது.
அவர்கள் வணங்கப்படவேண்டியவர்கள் தான்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.கோமதி அரசு said...

வாங்க இளமதி, வாழ்கவளமுடன்.
உங்கள் வரவு முகவும் மகிழ்ச்சி.
ஹுஸைனம்மாவுக்கு நன்றி சொல்லவேண்டும் நிச்சயம்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. தொடர்ந்து வருவேன் என்று சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

tamil kattum vazhkkai said...

அன்புச் சகோதரிக்கு வணக்கம்!.தங்கள் வலைதளத்தில் சமூக சேவகி கிருஷ்ணம்மால் பற்றி சில குறிப்புகளை எழுதிஉள்ளீர்கள்.நான் எழுதிக்கொடிருக்கும் ஒரு புத்தகத்தில் கீழவெண்மணி பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.அதில் இவரைப் பற்றி சிலவரிகள் தங்கள் வலைதளத்தில் இருந்து எடுத்தாள வேண்டியுள்ளது. அதற்கு தங்களது அனுமதியை வேண்டுகிறேன். நன்றியுடன் ஆர். தேவராஜ்.

கோமதி அரசு said...

வணக்கம். வாழ்க வளமுடன். தங்களுக்குத் தேவையான தகவல்களை எடுத்துக்கொள்ளுங்கள்.பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் அவர்களைப் பற்றி எழுதுவது குறித்து மகிழ்ச்சி.